Posts

Showing posts from 2014

எங்க தாத்தா ஒரு இன்னவேட்டர் !!

திருக்கோவிலூர் பக்கம் திருவண்ணாமலை போற வழியில பத்து கிலோமீட்டர்ல வரும் எங்க கிராமம்..மேல்கரையார்னு சொல்வாங்க அவரை..தஞ்சை பத்தூர் மேல்கரையில் இருந்து திருவண்ணாமலைக்கு குடிவந்தவர். அந்த காலத்திலேயே அப்பா (தஞ்சையில் ஹெட்மாஸ்டர்) எதிர்ப்பை மீறி காதலித்து (2 வயது மூத்த அத்தை மகளை) திருமணம் செய்தவர்..

சுகந்திர போராட்ட காலத்தில் தஞ்சை தபால் ஆபீஸ் தபால் பெட்டியில் நெருப்பை கொளுத்தி போட்டு, அதனால் தேடப்பட்ட குற்றவாளியாகி, ஜெயராஜ் <<சாதி பெயர்>> உடனே ஒப்படைக்கப்பட வேண்டும் என்று ஆங்கிலேய அரசிடம் இருந்து நோட்டீஸ் வர, இவரது தந்தையார் இவருக்கு பதில் வேறொரு ஜெயராஜை ஆஜர் படுத்தி, சிறைக்கு அனுப்ப, அவர் கடைசி காலம் வரை தியாகி பென்ஷன் வாங்கியதாக கேள்வி...

அதனால் உனக்கு சொத்து எதுவும் கிடையாது போ என்று சொன்ன அப்பாவிடம் கோபித்துக்கொண்டு திருக்கோவிலூர் வந்து, நிலம் வாங்கி செட்டில் ஆனவர்...

விவசாயம் செய்தாலும், பல தொழில்களை செய்தவர். அனைத்திலும் பெரிய வெற்றி எதுவும் அடைந்ததில்லை...

ஒரு டீமை அமைத்துக்கொண்டு சாத்தனூர் அணையில் மீன் பிடிக்க போவார். சாத்தனூர் அணையில் வலை விடும்போது அது என்னடா தூரத்…
Image
பிஷ்ஷிங்

சமீபமாக மிக அதிகமாக பிஷ்ஷிங் மின்னஞ்சல்கள் மின்னஞ்சல் பெட்டியை ரொப்புகின்றன. மீன் பிடிப்பவன் பல்வேறு தூண்டில்களை போட்டு காத்திருப்பது போல, இவர்கள் தினமும் நூற்றுக்கணக்கில் / ஆயிரக்கணக்கில் மின்னஞ்சல்களை அனுப்பி காத்திருக்கிறார்கள்...என்ன என்ன வருகின்றன என்று பார்த்தால் - துபாயில் ஹோட்டல் வேலை என்று ஆரம்பித்து TCS / CTS இல் தகவல் தொழில்நுட்ப பணிவாய்ப்பில் பயணித்து, க்வால்காம் / ஆப்பிள் ஷேர்களை குறைந்த விலைக்கு வாங்கலாம் என்ற அளவில்.தாய்லாந்து / இந்தோனேஷியா / பங்களாதேஷ் போன்ற நாடுகளில் முறையான கால் செண்டர்கள் கூட உண்டாம். தனி மேனேஜர் போட்டு, இளிச்சவாயர்களிடம் பணம் பிடுங்க ஜொள்ளோடு மின்னஞ்சல்கள் / பேஸ்புக் தகவல்கள் அனுப்பிவைக்கிறார்கள்..ஆகவே மக்கழே, இதுபோன்ற பிஷ்ஷிஙில் மாட்டி பணம் செலுத்தவேண்டாம். உங்கள் நிறுவனத்தின் பொருட்களை வாங்குகிறேன் என்று டுபாக்கூர் விடுபவர்களை நம்பவேண்டாம்...அந்த ஹோட்டலில் ரூம் போட்டு காத்திருக்கிறேன், வருக வருக என்று அழைப்பவர்களை நம்பி போகவேண்டாம்...படிக்காதவர்களை விட, மெத்த படித்தவர்கள் கஷ்டப்பட்டு உழைத்த பணத்தை இழந்து நிற்பதை பார்க்கையில் வேதனை தா…

உயிர்ப்பிக்கிறேன் உன்னை !!

Image
ரொம்ப நாள் கழிச்சு வலைப்பதிவில் மறுபடி நுழைகிறேன்..அவ்வப்போது ஏதாவது பத்தி எழுதும் திட்டம். பெரிதாக ஒன்றுமில்லை...

பல்ப் நெம்பர் 1:

சமீபத்தில் புதிய தோழர் ஒருவரை சந்தித்தேன்...ஈரோட்டுக்காரர்..ஸ்வீடனில் மூன்று வருடமாக இருக்கிறார்..மகளுடன் வந்திருந்தார்..யாழினி அங்கே விளையாடிக்கொண்டிருந்தபோது, மகள் பெயர் யாழினி என்று அறிந்தார். நல்ல தமிழ் பெயர் என்று பாராட்டினார்...

ஆமாங்க, இப்பல்லாம் யார் நல்ல தமிழ் பெயர் வைக்கிறார்கள் ? ஆட்டையாம்பட்டியில இருக்கவன் நித்தின், சுஜித்னு வெக்கிறானுங்க..வட இந்திய மோகம்..என்றேன்..

அவர் மகள் அப்போது அருகில் வந்தாள்..

உங்க பொண்ணு பெயரை கேக்கவே இல்லையே..என்னங்க பெயர் என்றேன்..

கொஞ்சம் சங்கடத்தோடு ஒரு வட இந்திய பெயரை சொன்னார்..

அவ்வ்வ்..

அப்படி இப்படி பேசி சமாளித்தேன்...
பெண்ணியம் !!

ஸ்வீடனில் பெரும்பாலான அரசு அலுவலகங்கள்,  மருத்துவமனைகள், கடைகள் ஆகியவற்றில் பெண்கள். பெண்கள். பெண்களைத்தவிர வேறு யாரும் இருப்பதில்லை..அது பற்றி தனியாக ஆராய்ச்சி செய்யலாம்...

விஷயம் அதுவல்ல..

இப்படி ஒரு ட்வீட் போட்டிருந்தேன் என்னுடைய ட்விட்டர் அக்கவுண்ட்டில் (https://twitter.com/senth…