தேடுங்க !

Tuesday, January 31, 2012

அட முட்டாள் தலிபான்களா ?

நண்பர்களே! ஒரு அவசர உதவி. இஸ்லாமிய நண்பர் ஒருவர் கடையநல்லூர் பகுதியில் இருக்கிறார். அவர் இறையில்லா இஸ்லாம் என்கிற தளத்தில் இருந்து நாத்திகம் பேசும் கட்டுரையொன்றை பேஸ்புக்கில் ஷேர் செய்தார் என்பதற்காக, அவரை ஊர்விலக்கம் செய்திருக்கிறது ஜமாத். இப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஜமாத் கூட்டத்தின் முடிவில் அவருக்கெதிராக ‘பத்வா’ அதாவது அவரை அங்க ஹீனம் செய்யும் முடிவை எடுக்க இருக்கிறது. அவரது மனைவியையும் அவரை விவாகரத்து செய்யும்படிச் சொல்லியிருக்கிறது ஜமாத். தென்காசிக்கு அருகேயுள்ள கடையநல்லூர் பரசுராமபுரம் ஜும்மா பள்ளிவாசலில் நடக்கிறது கூட்டம். இந்த காட்டுமிராண்டித்தனத்துக்கு எதிராக யாராவது அவருக்கு உதவ முடியுமா? என்னால் முடிந்த வரை பத்திரிகையாளர்களுக்குத் தகவல் தந்திருக்கிறேன். பத்திரிகையாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், சமூக அமைப்புகள், இயக்கங்கள் அனைவருக்குமான வேண்டுகோள் இது.


பேஸ்புக்கில் கவின்மலரின் வேண்டுகோள் இது. இதை கேள்விப்பட்டவுடன் எனக்கு தோன்றிது இந்த தலைப்புதான். அது எப்படி எல்லாரையும் அப்படி சொல்லப்போச்சு என்று கிளம்பவேண்டாம். இது பத்வாவை நிகழ்த்திக்கொண்டிருக்கும் காட்டுமிராண்டிகளுக்கு மட்டும்தான் பொருந்தும்.


அடப்பாவிகளா இது என்ன ஆப்கானிஸ்தானா ? அங்க ஹீனம் செய்யறானுங்களாமுல்ல ? 


சர்ச்சைக்குள்ளாக்கப்படும் தளம் இது தான் : http://iraiyillaislam.blogspot.com/இவனுங்கள எல்லாம் கும்பலா ஒரு வண்டியில ஏத்தி ஆப்கானிஸ்தான்ல கொண்டுபோய் விட்டுடுங்கப்பா.