Posts

Showing posts from 2012

மனிதன் பாதி! மிருகம் பாதி!

From : http://www.facebook.com/siva.sinna

அரை மணித்தியாலத்துக்குள் 63
தமிழ் இளைஞர்கள் சுட்டுக்கொலை –
யாழ்ப்பாணத்தில் கொடூரம்!
சிங்களவர்களுக்கு மட்டுமல்ல,
தமிழர்களுக்கும் உண்டு
படுகொலை வரலாறு -
இளைஞர்களே மன்னித்துவிடுங்கள்!
மனிதன் பாதி! மிருகம் பாதி!
நீங்கள் பாதி மிருகத்தை அடக்கிவைத்த மனிதர்கள்-
அவர்கள் பாதி மனிதனை
தங்கள் பாதியிடம் பலிகொடுத்தவர்கள்’

இலங்கையில் மூன்று தசாப்தகாலம் ஈழப்போர் நடைபெற்றதாக அரசியல்-இராணுவ ஆய்வாளர்கள் பெரும்போக்காக வர்ணிப்பதுண்டு. நான்கு ஈழப்போர்கள் இடம்பெற்றன என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது. 1983இல் யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் இராணுவ வாகனத் தொடரணி மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 13 இராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.

பிரபாகரன், செல்லக்கிளி உட்பட பதுங்கியிருந்து ஆயுததாரிகள் சிலர் நடத்திய இந்தத் தாக்குதலையடுத்து நாடு பற்றியெரிந்தது. அன்று இலங்கையில் அதிகாரத்திலிருந்த யு.என்.பி.யின் ஆட்சி, செயலாற்று அதிகாரமிக்க ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் கைகளில் ஆட்சிக் கடிவாளம் இருந்தது.

அன்றைய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் ஆசீர்வாதத்துடனும் உசுப்புதலுடனும் தமிழ் மக்களுக்கு எதிரான இ…

இப்பல்லாம் யார் சார் சாதி பாக்குறா ?

Image
கலைஞர் கேள்வி பதிலில் இருந்து

கேள்வி: "தீண்டாமை'' அறவே ஒழிக்கப்பட்டு விட்டது என்று பெருமை பேசிக்கொண்டிருக்கும் இந்த காலத்தில் சத்துணவு அமைப்பாளர் பணியிலே "தலித்''களையே அனுமதிக்காத போக்கு இன்னமும் உள்ளதாக சொல்லப்படுகிறதே?.

பதில்: அண்மையில் ஒரு செய்தி படித்தேன். ஸ்ரீவில்லிப்புத்தூர், கம்மாபட்டி ஊராட்சி ஒன்றியப்பள்ளி ஒன்றில் தலித் பெண்கள் சத்துணவு சமைத்த காரணத்தால், வேறு ஒரு சாதியைச் சேர்ந்தவர்கள் தங்கள் வீட்டு மாணவர்களை பள்ளிக்கே அனுப்ப மாட்டோம் என்று தடுத்து விட்டார்களாம். அதைவிட கொடுமை, வேற்று சாதியினரின் எதிர்ப்புக்கு அரசு பணிந்து, சத்துணவு கூடத்தில் பணிபுரிந்து வந்த தலித் ஊழியர்களான மரகதவல்லி, வீரலட்சுமி ஆகியோரை அங்கிருந்து பணி மாற்றம் செய்ய ஒப்புக் கொண்டிருக்கிறார்களாம். தீண்டாமைக்கு ஆதரவான அரசின் நடவடிக்கை கடும் கண்டனத்திற்குரியது. இந்த அலுவலர்களை மாற்றம் செய்திருக்கின்ற இடத்திலும் இது போலவே வேறு சாதியினர் தங்கள் பிள்ளைகளை சாப்பிட விட மறுத்தால் அப்போது அரசு என்ன செய்யும்?.

இந்த சாதி வெறி பிடித்த நாய்களுக்கு என்ன தண்டனை தரலாம் ? ரேஷன் கார்டுகளை பிடுங்கலாம்…

LG ஸ்ப்லிட் ஏசி விற்பனைக்கு

உபயோகப்படுத்தாத LG ஸ்ப்லிட் ஏசி (பெங்களூரில் கடந்த 2 வருடம் முன்பு வாங்கியது) தமிழ்நாட்டில் இருக்கிறது. நார்வே போகும் முன் (ஒரு மாதம் முன்) வாங்கி உபயோகப்படுத்தினேன், நார்வே போகும்போது மாமனார் வீட்டுக்கு அனுப்பினேன். அவங்க வீட்டில் 3 பேஸ் வராததால் அவராலும் அதை உபயோகப்படுத்த முடியல. சில நாளுக்கு முன் ஒரு பஸ்/ப்ளஸ் விட்டேன், சில பேர் தொடர்புகொண்டார்கள், அதில் ஒருவருக்கு தருவதாக சொன்னேன், ஆனால் அவரால் அதை எடுத்துக்கொள்ள முடியல. வாங்கிய போது விலை 25K. இப்ப அந்த மாடலுக்கு டேக்ஸ் எல்லாம் போட்டு 30 ஆயிரம் வரை (ஹரியானா / டெல்லியில்) விக்கிறாங்க. சல்லீசா எதாவது அமவுண்டை எனக்கு கொடுத்துட்டு தூக்கினு போங்கப்பா...(பிக்கப் நீங்க தான் அரேஞ்ச் செய்துக்கனும்). விருப்பம் இருப்பவர்கள் தனிமடல் அனுப்பவும்.

http://www.lg.com/in/air-conditioning/split-ac/LG-LSA3AR2T.jsp

ஸ்க்ரீன் ஷாட்கள்

Image

ரியல் எஸ்டேட் / கன்ஸ்ட்ரக்சன் துறையினர் கவனத்துக்கு

Image
செந்தில், யுவகிருஷ்ணா, ரவி
கன்ஸ்ட்ரக்சன் மற்றும் ரியல் எஸ்டேட் துறையில் இருப்பவர்கள் கவனத்துக்கு. எனது தோழர் செந்தில் அவர்கள் நீண்டகாலம் தூத்துக்குடி துறைமுகத்தில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர்.

அவர் ரியல் எஸ்டேட் மற்றும் கன்ஸ்ட்ரக்சன் துறைக்கான தேவைப்பாடு மிகுந்த சிமெண்ட் மூட்டைகளை இறக்கும்மதி செய்யும் பணியில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.

அவர் கராச்சியில் இருந்து இறக்குமதி செய்யும் சிமெண்ட் ஆனது, உலகத்திலேயே இரண்டாவது - மிகுந்த தரம் மிகுந்த சிமெண்ட் ஆகும். ஜெர்மனியின் மாபெறும் சிமெண்ட் தயாரிப்பு நிறுவனமான ஹெடல்பெர்க் (உலகின் நம்பர் ஒன் குவாலிட்டி சிமெண்டுக்கு பெயர் பெற்றது) சிமெண்டின் மூலப்பொருளான மண்ணை கராச்சியில் இருந்து இறக்குமதி செய்கிறது. கராச்சியின் மண் அவ்வளவு தரம் வாய்ந்தது என்று சொல்கிறார்கள்.

30 மெட்ரிக் டன் ஆண்டுக்கு உற்பத்தியாகும் சிமெண்டை விட, வெறும் மண்ணாக கராச்சி ஏற்றுமதி செய்வது அதிகம் என்றும் இணையத்தில் படித்தேன்.

அந்த கராச்சியில் இருந்து நேரடியாக சிமெண்டை இறக்குமதி செய்யும் தோழர் செந்தில், அதனை தமிழகத்தில் மொத்தமாகவும் மற்றும் சில்லறை விற்பனைக்கும் வெற்றிகரமாக கடந்த…

பயோ டிஸ்க் - அடுத்த MLM காந்தபடுக்கை மோசடி

Image
Amezcua Bio Disc - தயாரிப்பது க்வெஸ்ட் நெட் என்ற நிறுவனம், இந்த பயோ டிஸ்க் உபயோகப்படுத்தி வாட்டரை (குடிநீர்) எனர்ஜைஸ் செய்வதை டெமோ காட்டுகிறோம் என்று அப்பார்ட்மெண்ட்டில் இருக்கும் இன்னொரு தமிழ் பேமிலி அழைத்து நாங்கக் போனோம்.


வாட்டர் ரீசைக்கிளிங் ப்ளாண்ட் என்பது ஏதோ பெரிசாக இருக்கும் (35 ஆயிரம் விலையாம்) என்று நினைத்தபோது, ஏமாற்றமே மிஞ்சியது. ஒரு பெரிய ப்ளாஸ்டிக் டப்பா, அதில் ஒரு சிறிய மோட்டர். வட்ட வடிவத்தில் ஒரு கண்ணாடி. கைப்பிடியை கழட்டிய பெரிதாக்கும் ஆடி (ஜூமிங் லென்ஸு) மாதிரி இருந்தது. சுவிட்சை போட்டால் மோட்டர் இயங்கி, தண்ணீரை லென்ஸு மேல் ஊற்றுகிறது. (அதுக்கு தனியாக ஒரு ஸ்டேண்ட்). லென்ஸில் பட்டு தண்ணீர் மீண்டும் ப்ளாஸ்டிக் பட்டாவிலேயே ஊற்றிவிடுகிறது. இது போல ஆறு முறை தண்ணீரை எனர்ஜைஸ் செய்தால் அந்த தண்ணீர் மிகச்சிறந்த தண்ணீரா மாறிவிடும் என்றார்கள்.
நான் பார்த்த ப்ளாண்டை பெயிண்ட் ப்ரஷ் உதவியுடன் வரைந்திருக்கிறேன். (படம் சிறப்பாக வர நான் ஒன்றும் கார்ட்டூனிஸ்ட் பாலா அல்ல, ஏதோ என்னால் முடிந்தவரை கோடுகளை இழுத்து விட்டிருக்கிறேன்)
இந்த தண்ணீரை குடிப்பதால் கிடைக்கும் பயன்களாக அவர்கள் சொல்லிய…

அட முட்டாள் தலிபான்களா ?

Image
நண்பர்களே! ஒரு அவசர உதவி. இஸ்லாமிய நண்பர் ஒருவர் கடையநல்லூர் பகுதியில் இருக்கிறார். அவர் இறையில்லா இஸ்லாம் என்கிற தளத்தில் இருந்து நாத்திகம் பேசும் கட்டுரையொன்றை பேஸ்புக்கில் ஷேர் செய்தார் என்பதற்காக, அவரை ஊர்விலக்கம் செய்திருக்கிறது ஜமாத். இப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஜமாத் கூட்டத்தின் முடிவில் அவருக்கெதிராக ‘பத்வா’ அதாவது அவரை அங்க ஹீனம் செய்யும் முடிவை எடுக்க இருக்கிறது. அவரது மனைவியையும் அவரை விவாகரத்து செய்யும்படிச் சொல்லியிருக்கிறது ஜமாத். தென்காசிக்கு அருகேயுள்ள கடையநல்லூர் பரசுராமபுரம் ஜும்மா பள்ளிவாசலில் நடக்கிறது கூட்டம். இந்த காட்டுமிராண்டித்தனத்துக்கு எதிராக யாராவது அவருக்கு உதவ முடியுமா? என்னால் முடிந்த வரை பத்திரிகையாளர்களுக்குத் தகவல் தந்திருக்கிறேன். பத்திரிகையாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், சமூக அமைப்புகள், இயக்கங்கள் அனைவருக்குமான வேண்டுகோள் இது.


பேஸ்புக்கில் கவின்மலரின் வேண்டுகோள் இது. இதை கேள்விப்பட்டவுடன் எனக்கு தோன்றிது இந்த தலைப்புதான். அது எப்படி எல்லாரையும் அப்படி சொல்லப்போச்சு என்று கிளம்பவேண்டாம். இது பத்வாவை நிகழ்த்திக்கொண்டிருக்கும் காட்டுமிராண்டிகளுக…