Tuesday, March 15, 2011

விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக பிரச்சாரம், கருத்து சொல்லுதல்




சென்னை: விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக கருத்துச் சொல்வதோ, பிரச்சாரம் செய்வதோ சட்டப்படி குற்றமில்லை என்று சென்னை உயர்நீதி மன்றம் தீர்ப்பளித்துள்ளது.


கருத்துரிமை இயக்கம் சார்பில் இயக்குநரும் பத்திரிகையாளருமான புகழேந்தி தங்கராஜ் சென்னை உயர்நீதி மன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார்.

அம்மனுவில், "கடந்த அக்டோபர் மாதம் விடுதலைப்புலிகள் மீதான தடையை எதிர்த்து கையெழுத்து இயக்கம் நடத்த முடிவு செய்து இருந்தனர். பனகல் மாளிகை முன்பு இந்த இயக்கத்தை நடத்த போலீஸ் கமிஷனரிடம் அனுமதி கேட்டோம். ஆனால் அனுமதி மறுக்கப்பட்டது.

தடை செய்யப்பட்ட இயக்கத்துக்கு ஆதரவாக போராட்டம் நடத்த அனுமதி இல்லை என்று அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது. கமிஷனரின் உத்தரவை ரத்து செய்து கையெழுத்து இயக்கம் நடத்த அனுமதிக்க வேண்டும்," என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி சந்துரு முன்பு விசாரணைக்கு வந்தது.

விசாரணை முடிவில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், "தடை செய்யப்பட்ட இயக்கத்துக்கு ஆதரவாக போராட்டம் நடத்துவதோ, பிரச்சாரம் செய்வதோ குற்றமாகாது என்று வைகோ மீதான பொடா வழக்கில் உச்சநீதி மன்றமே தீர்ப்பளித்துள்ளது. எனவே விடுதலைப் புலிகள் மீது இந்தியாவில் விதிக்கப்பட்டுள்ள தடையை எதிர்த்து கையெழுத்து இயக்கம் நடத்துவது தவறு அல்ல.

இதுதொடர்பாக, புலிகளுக்கு ஆதரவுக் கருத்துக்களைச் சொல்லவும் தடை இல்லை. இவை அரசியல் சட்டத்துக்கு எதிரான செயல்கள் அல்ல. இதனால் கமிஷனர் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. மனுதாரர் கையெழுத்து இயக்கம் நடத்த போலீஸ் அனுமதிக்க வேண்டும்," என்று கூறப்பட்டுள்ளது.



நன்றி - தட்ஸ்தமிழ்..

மென்பொருள் நிறுவனம்



சென்னையை சேர்ந்த ஒரு மென்பொருள் நிறுவனம் 500+ கஸ்டமர்களோடு விற்பனைக்கு வருகிறது. PoS (Point of Sale Software Product) - கடைகள், வணிக நிறுவனங்களுக்கு சேவை செய்து வருகிறார்கள். 5 ஊழியர்கள் பணிபுரிகிறார்கள். 30 முதல் 40 லட்ச ரூபாய் எதிர்பார்க்கிறார்கள். விற்பனைக்கான காரணம், நிறுவனரின் உடல்நிலை. மெர்ஜர் / அக்யூஷன் துறையில் இருப்பவர்கள் அல்லது நிறுவனத்தை வாங்கி நடத்த விருப்பம் இருப்பவர்கள் தொடர்புகொள்க. ravi.antone@gmail.com

Friday, March 11, 2011

#tnfisherman ஆலோசனைக் கூட்டம்

நாம், கடந்த 30/01/2011 அன்று சென்னை மெரீனாவில் சந்தித்து, மீனவர்
பாதுகாப்பு தொடர்பான விஷயங்கள் குறித்து ஆலோசித்தோம். அன்றைய சந்திப்பில்
முடிவெடுக்கப்பட்ட விஷயங்களின் அடிப்படையில், பல்வேறு கட்டங்களிலும் நமது
செயல்பாடுகள் நடைபெற்று வருகின்றன. சமீபத்தில் நம் இணைய நண்பர்கள்
குழுவினர் மீனவ கிராமங்களுக்கு நேரில் சென்று கள நிலவரங்களையும் அறிந்து
வந்துள்ளனர். மேலும் சில அமைப்பினரும் நம்முடன் இணைந்து இதனை
முன்னெடுப்பதில் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

இது வரை மேற்கொண்ட செயல்கள் பற்றிய பரிசீலனைகளை (Review) மேற்கொள்வதோடு,
அடுத்ததாக நாம் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் அனைவரும்
கலந்துரையாடி, செயல்படும் முறைகளைத் தீர்மானிக்க வேண்டியுள்ளது. இது
சம்பந்தமாக நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்திற்கு மீனவர் சங்கப்
பிரதிநிதிகளும் வருகை தருகின்றனர்.

அதன்படி நமது அடுத்த ஆலோசனைக் கூட்டம் எதிர்வரும் 20/03/2011 அன்று
நடைபெற உள்ளது. #tnfisherman இணையக் குழும உறுப்பினர்களும், ஆர்வலர்களும்
அவசியம் கலந்து கொள்ள வேண்டுகின்றோம்.

நாள்: 20/03/2011 ஞாயிறு
நேரம்: மாலை 5 மணி
இடம்: டிஸ்கவரி புக் பேலஸ், மேற்கு KK நகர். (பாண்டிச்சேரி கெஸ்ட் ஹவுஸ்
அருகில்)

savetnfishermen.org சார்பாக
கும்மி.

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால்

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால் டயபட்டீஸ் / நீரிழிவு / சர்க்கரை நோயை விரட்ட நியான்டர் செல்வனால் ஆரம்பிக்கப்பட்ட இந்த குழுமத்திற்கு ( https://www....