Sunday, January 23, 2011

காப்பியடிக்கும் தினகரன்



நீங்கள் தினகரன் மட்டும் வாங்குபவர்களாக இருந்தால் ஓக்கே. ஆனால் உங்கள் வீட்டில் தினகரன் மற்றும் டைம்ஸ் ஆப் இண்டியா ஆகிய இரண்டு பேப்பர்களும் வந்தால் நீங்கள் ஆங்கில பேப்பரான டைம்ஸ் ஆப் இண்டியாவை தைரியமாக நிறுத்தலாம்.

காரணம், தினகரனில் வேலை செய்யும் காப்பி கேட் ஒன்று,  ஆங்கில பேப்பர்களில் வருவதை அப்படியே மொழி பெயர்த்து அடித்து விடுவதற்கே முழு நேரமாக வேலை செய்கிறது.

கடந்தமாதம் உயரமான மாடல் ஒருவரைப்பற்றிய தகவல் மும்பை டைம்ஸில் பார்த்து அடுத்த நாளே தினகரனில் அதை ஒரு வரி கூட மாற்றாமல் ( மாடலின் உயரம், எடை மற்றும் மற்ற புள்ளிவிவரங்கள்) அவரை பற்றிய செய்திகள் ஆகியவற்றை அப்படியே எழுதினார்கள்.

அது முதல் இவர்கள் உண்மையில் காப்பியடிக்கிறார்களா என்று பார்த்துவந்தேன். இன்றைய தினகரனில் உடற்பயிற்சி செய்தால் ஜலதோஷம் வராது என்ற செய்தி வரை, அம்புட்டும் படு காப்பி.

ஒரு செய்தி என்பது எல்லாருக்கும் பொதுவானது. உதாரணம், சமீபத்திய சபரிமலை சம்பவம். அதனை அனைத்து நாளிதழ்களும் வெளியிட்டனவே ? அதனை காப்பி என்று சொல்லப்போவதில்லை.

ஆனால் குறிப்பிட்ட சில செய்திகள், மற்ற நாளிதழ்களில் வருவதை அப்படியே அடுத்த நாள் அடித்து விடுவது காப்பிதான்.

அவர்களும் (ஆங்கில நாளிதழகள்) , இணைய தளங்களில் இருந்தும் மற்ற செய்தி சோர்ஸ்களில் இருந்தும் தான் செய்திகளை சேகரிக்கமுடியும். காரணம், ரஷ்யாவில் எங்கோ ஒரு மூலையில் ஒரு சம்பவம் நடந்தால் அதனை ஒரு நிறுவனத்தின் சொந்த செய்தியாளர் தான் எழுதவேண்டும் என்று இல்லை. ஆனால் இன்னொரு நாளிதழில் வந்ததை அப்பட்டமாக அடிக்கும் காப்பி, அறிவுத்திருட்டு.

ஸ்பெக்டம் ராஜா வீட்டில் சோதனை நடந்ததை பற்றி ஒரு வரி கூட எழுதாமல், காமன்வெல்த் கல்மாடி வீட்டில் நடந்த சோதனையை தலைப்பு செய்தியாக வெளியிடுவது பற்றி கூட ஒன்றும் சொல்லதவில்லை. ஏன் என்றால் உங்கள் சார்பு நிலை பற்றி எல்லாருக்கும் தெரியும். ஆனால் இந்த அறிவுத்திருட்டை பொறுத்துக்கொள்ளமுடியவில்லையே ? சம்பந்தப்பட்ட பைத்தியங்களுக்கு உறைக்குமா ?

..

14 comments:

'பரிவை' சே.குமார் said...

இதை நிறுத்தினால் பத்திரிக்கை நடத்தமுடியாது நண்பரே..!
அவர்கள் அரசியல் குறித்து எழுத முடியாது எனென்றால் குறுநில மன்னரின் வாரிசுகள் அவர்கள். ஆட்சி மாற்றம் வந்தால் காப்பியில் மாற்றம் வரலாம்.

Anonymous said...

மாறாதய்யா மாறாது. மனமும், குணமும் மாறாது..!!.

Chitra said...

ஆனால் இந்த அறிவுத்திருட்டை பொறுத்துக்கொள்ளமுடியவில்லையே ?


....உண்மைதான்.

லெனின் said...

//ஸ்பெக்டம் ராஜா வீட்டில் சோதனை நடந்ததை பற்றி ஒரு வரி கூட எழுதாமல், காமன்வெல்த் கல்மாடி வீட்டில் நடந்த சோதனையை தலைப்பு செய்தியாக வெளியிடுவது பற்றி கூட ஒன்றும் சொல்லதவில்லை. ஏன் என்றால் உங்கள் சார்பு நிலை பற்றி எல்லாருக்கும் தெரியும்.//

SUPER , SUPER....

ரவி said...

வாங்க சே குமார். ஆட்சிமாற்றம் வந்தால் எப்படி காப்பியில் மாற்றம் வரும் ? மனமாற்றம் அல்லவா வரவேண்டும்..

ரவி said...

வாங்க சிவக்குமார். முதல் வருகை ?

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

கடைசி வரி எதுக்குங்க?

வினவு said...

ராய்ட்டர், அசோசியேட் பிரஸ் முதலான பன்னாட்டு செய்தி நிறுவனங்கள் உருவாக்கும் இத்தகைய 'செய்தி'களைத்தான் அல்லாரும் சுட்டு அல்ல காசு கொடுத்து வாங்கி போடுகிறார்கள். இதுல தினகரன்னா திருட்டு, ஆங்கிலம்னா ஒரிஜனல்னு நீங்க நினைக்கிறது உங்க 'காலனிய' நுண்ணரசியல் பார்வையோட பலவீனம்.

ரவி said...

வினவு, அசோசியேட்டும் ராய்ட்டர்ஸும் காசு கொடுத்து வாங்குவதை நோவாம காப்பியடிக்கறதுக்கு பேரு என்னங்க ?

ரவி said...

ஜ்யோவ் காரணமாத்தான்.

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

செந்தழல் ரவி, காரணமாத்தான்னு தெரியுது. அதான் ஏன்னு கேக்கறேன்...

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

அப்புறம், எல்லாச் செய்திகளும் ‘உருவாக்கப்’ படுவதாக வினவு சொல்வதுடன் உடன்பாடில்லை.

ரவி said...

இந்த தமிழ்கூறும் நல்லுலகில் ஒரு காரணத்தை சொல்லாமல் விட உரிமை இருக்கிறதே :))

ரவி said...

வினவு ஒருவேளை நேத்து சன் டிவியில டுமாரோ நெவர் டைஸ் பார்த்திருப்பார். அதுல ஜேம்ஸ்பாண்டு செய்திகளை உருவாக்கும் பத்திரிக்கை முதலாளியோட தானே மோதுறார் ?

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால்

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால் டயபட்டீஸ் / நீரிழிவு / சர்க்கரை நோயை விரட்ட நியான்டர் செல்வனால் ஆரம்பிக்கப்பட்ட இந்த குழுமத்திற்கு ( https://www....