Posts

Showing posts from 2011

ஆனந்த தொல்லை

Image
பால்வீதி நாயகன், பச்சைக்குழந்தை முக அழகன், சுட்டும் விழியில் சூரியன், பவர் ஸ்டார் டாக்டர் சீனிவாசனின் ஆனந்த தொல்லை ட்ரைலர் அல்லது முன்னோட்டம் இங்கே காட்டப்படும்.முழுப்படத்தையும் பார்த்து செத்து தொலைபவர்களுக்கு கம்பெனி பொறுப்பல்ல.

SMS செத்துபோச்சுங்க (Nimbuzz)

Image
எஸ்.எம்.எஸ் பரபரவென அனுப்புற ஆளா நீங்க ? எஸ்.எம்.எஸ் காஸ்ட் 1 பைசாவா இருந்தா பரவால்ல. ஆனா நேஷனல் எஸ்.எம்.எஸ், இண்டர் நேஷனல் எஸ்.எம்.எஸ் (5 ரூபா வரைக்கும் இதுக்கு நான் செலவு பண்ணியிருக்கேன்.). ஆகியவற்றை அனுப்பனும்னா கொஞ்சம் செலவு பிடிக்குமில்லையா ?ஓக்கே இன்னொரு கொஸ்டின். ஒரு மாசம் முழுமையும் உங்களோட எஸ்.எம்.எஸ் செலவு என்ன ? 100 ரூபாய் இருக்குமா ? அப்படி இருந்தா மேல படிங்க.

யாருக்கு வேண்டும்னாலும் இலவசமா ஆயிரக்கணக்கா அனுப்பிக்கலாம் என்று நாங்க கெளம்பி வந்திருக்கோம்ல ? (இந்தியாவில் ஒரு நாளைக்கு 100 எஸ்.எம்.எஸ்ஸுக்கு மேல அனுப்ப முடியாதுன்னு ஒரு தடை இருக்குங்க, அது கம்பெனிகள் அன்லிமிட்டெட் எஸ்.எம்.எஸ் ஸை மிஸ் யூஸ் பண்ணதால வந்தது).

எப்படி ?

உங்க மொபைல்ல (ப்ரி பெய்ட் அல்லது போஸ்ட் பெய்ட்), மாத இண்டர்நெட் பேக்கேஜ் போட்டுக்கோங்க. 99 ரூபாய் மேக்ஸிமம் ஆகும்னு நினைக்கிறேன்.

அப்புறம் நிம்பஸ் அப்ளிக்கேஷன டவுன்லோட் பண்ணி போடுக்கோங்க.

நிம்பஸ் எங்க கிடைக்கும் ?

http:// get.nimbuzz.com என்ற முகவரிக்கு உங்க மொபைல்ல இருந்து போகலாம். (மொபைல்ல இண்டர்நெட் ஆக்டிவேட் செஞ்ச பிறகு)

http://market.android.com (…

பூந்தியும் புளியோதரையும் உங்கள் மீது நிலவுவதாக...

Image
அன்புள்ள தமிழ்மணம் நிர்வாகிக்கு, எல்லாரும் உங்களை திட்டுகிறார்கள். நான் இந்த கூகிள் பஸ் பக்கம் வந்து கொஞ்ச நாள் ஆவதால் தமிழ்மணத்தில் என்ன நடக்குது என்று தெரியவில்லை. இருந்தாலும் நீங்கள் என்ன செய்தாலும் அதில் ஒரு நியாயம் இருக்கும் என்று நினைப்பதால் உங்கள் மேல் பூந்தியும் புளியோதரையும் உண்டாவதாக என்று வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்.

லிவிங் ஸ்மைல் வித்யாவின் ஓவியக் கண்காட்சி

எழுத்தாளர் பாமாவின் சிறுகதை நாடக வடிவில்..

நெறியாள்கை :ஸ்ரீஜித் சுந்தரம்

சாதியின் பேராலும் வர்க்கத்தின் பேராலும் ஒடுக்கப்பட்ட மக்களின் எதிர்ப்புக்குரலாய்..வருகிறோம்.
அனைவரும் வருக!

இடம் :
ஸ்பெசஸ், 1 , எலியட்ஸ் கடற்கரை சாலை பெசன்ட் நகர், சென்னை

நாள் : 25, 26 ஜூன் இரண்டு நாட்களும் மாலை 6 மணி...

அரங்கில்:

அ. அமுதா
ஏஞ்சல் கிளாடி
பிரம்மா
ஜீவா ரகுநாத்
கவின் மலர்
லிவிங் ஸ்மைல் வித்யா
நளினி ஜமீலா
பூங்குழலி
சக்தி சரவணன்
செந்தில் குமார்
சாரதி கிருஷ்ணன்
செந்தில் குமார்
சௌமியா
சுரேந்தர்
தமிழ் அரசன்
தாயம்மா ரம்யா
எஸ்.உஷா

பாடல்கள் : இன்குலாப்

பின்னணி இசை : சித்திரை சேனன்

இசை அமைப்பு : சாரதி கிருஷ்ணன், கவின் மலர்

மேடை பொருட்கள்:
பரணிதரன்
கமலஹாசன்
சோலைராஜ்
ஆனந்த குமார்
ராம்குமார்

ஒளியமைப்பு : விக்டர், அஸ்வினி காசி
உடைகள் : அ.மங்கை, உதவி : செந்தில் குமார்

தயாரிப்பு மேலாண்மை & விளம்பரங்கள் வடிவமைப்பு : சுரேந்தர்

தயாரிப்பில் உதவி : செந்தில் குமார், சோமசுந்தரம்

நெறியாள்கை : ஸ்ரீஜித் சுந்தரம்

உதவி நெறியாள்கை : அற்புதன் விஜய்

பின் அரங்கில் :
அமலா மோகன்
பானு
தர்ஷினி
தினேஷ் குமார்
ஜெனிஃபர் மார்ஷல்
பி…

UAE தமிழ் சங்கத்தின் குறும்பட போட்டி

Image
UAE Tamil Sangam's Short Film Competition

Please don't miss the great opportunity of participation in this competition.
Last Date for Registration 1st June 2011, 9PM.

Thank you very much for all those who have already registered for this.

1st week of June registered participants will be called for discussion. Time & Venue will be SMSed only to those who register.
Registration is compulsory. Online Registration: http://www.uaetamilsangam.com/utsshortmovies.asp

Dear Directors you have to choose your Teams Talented members for Acting, Dancing, Singing, Editing, Music, Script writing... from UAE Tamil Sangam only.
Any one can participate but the Participants should be a Member of UAE Tamil Sangam
Become Member : http://www.uaetamilsangam.com/becomemember.asp

The Best Movie, Director, Actor, Actress, Editor, Musician, Singer will be selected by Famous Tamil Movie Directors.
Your Movie will be telecasted during one of UTS Mega Event.
If your Movie gets selected as best movie i…

மாலைமலரில் இருந்து காப்பியடிக்கும் தட்ஸ்தமிழ்

Image
ஒசாமா செத்துட்டான். இது க்ளோபல் நியூசு. இந்த மேட்டரை டிவியில பாத்து அப்படியே வேற மாதிரி (இவுங்களே சண்டை நடக்கும்போது பைனாக்குலர்ல வாச்சுனமாதிரி) எழுதுவாய்ங்க. அதை கேட்டா ஏ.என்.ஐ, ராய்ட்டர்ஸு எல்லாம் ஒரே மேட்டரைத்தான் தரான் அப்படீம்பாங்க. ஆனா பாருங்க, ஒரு அட்டு நியூஸ். அதை மாலை மலரில் சனிக்கிழமை போட்டதை வரிக்கு வரி மாறாம அடிச்சிருக்கான் தட்ஸ் தமிழ். இத்தனைக்கும் தட்ஸ்தமிழ் என்பது ஒன் இண்டியா குழுமம், நல்ல வருமானம் உள்ள கொம்பேனி, இவனுக்கு எதுக்கு இந்த வேண்டாத வேலை ?

சரக்கு இல்லையா இல்லை ஆளுவளுக்கு சம்பளம் கொடுக்க மனசு இல்லையா ? தக்காளி இந்த லொட்டை நியூசை மாலைமலர்ல வேற காப்பியடிச்சு போடனுமாக்கு ?

சனிக்கிழமை மாலை மலர்ல வந்த நியூசு : படத்தை பெரிசாக்க அதுமேல க்ளிக்கவும்


ஞாயித்து கிழமை தட்ஸ்தமிழ்ல வந்த நியூசு
இனி மாலை மலர் எப்படி நடவடிக்கை எடுக்கலாம் ?

பாரீஸ் கார்னர்ல இருந்து ஒரு வக்கீல் நோட்டீஸை ஒன் இண்டியா குழுமத்தின் அட்ரசுக்கு அனுப்பலாம்.

கோர்ட்டுக்கு வெளிய சமரசம் செய்ய வந்தா ஒரு அமவுண்டை பைன் போட்டு பிரச்சனைய முடிக்கலாம்.

ஏதோ நாம கூவுறத கூவிடுவோம்.

விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக பிரச்சாரம், கருத்து சொல்லுதல்

Image
சென்னை: விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக கருத்துச் சொல்வதோ, பிரச்சாரம் செய்வதோ சட்டப்படி குற்றமில்லை என்று சென்னை உயர்நீதி மன்றம் தீர்ப்பளித்துள்ளது.


கருத்துரிமை இயக்கம் சார்பில் இயக்குநரும் பத்திரிகையாளருமான புகழேந்தி தங்கராஜ் சென்னை உயர்நீதி மன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார்.

அம்மனுவில், "கடந்த அக்டோபர் மாதம் விடுதலைப்புலிகள் மீதான தடையை எதிர்த்து கையெழுத்து இயக்கம் நடத்த முடிவு செய்து இருந்தனர். பனகல் மாளிகை முன்பு இந்த இயக்கத்தை நடத்த போலீஸ் கமிஷனரிடம் அனுமதி கேட்டோம். ஆனால் அனுமதி மறுக்கப்பட்டது.

தடை செய்யப்பட்ட இயக்கத்துக்கு ஆதரவாக போராட்டம் நடத்த அனுமதி இல்லை என்று அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது. கமிஷனரின் உத்தரவை ரத்து செய்து கையெழுத்து இயக்கம் நடத்த அனுமதிக்க வேண்டும்," என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி சந்துரு முன்பு விசாரணைக்கு வந்தது.

விசாரணை முடிவில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், "தடை செய்யப்பட்ட இயக்கத்துக்கு ஆதரவாக போராட்டம் நடத்துவதோ, பிரச்சாரம் செய்வதோ குற்றமாகாது என்று வைகோ மீதான பொடா வழக்கில் உச்சநீதி மன்றமே தீர்ப்பளித்துள்ளது. எனவ…

மென்பொருள் நிறுவனம்

Image
சென்னையை சேர்ந்த ஒரு மென்பொருள் நிறுவனம் 500+ கஸ்டமர்களோடு விற்பனைக்கு வருகிறது. PoS (Point of Sale Software Product) - கடைகள், வணிக நிறுவனங்களுக்கு சேவை செய்து வருகிறார்கள். 5 ஊழியர்கள் பணிபுரிகிறார்கள். 30 முதல் 40 லட்ச ரூபாய் எதிர்பார்க்கிறார்கள். விற்பனைக்கான காரணம், நிறுவனரின் உடல்நிலை. மெர்ஜர் / அக்யூஷன் துறையில் இருப்பவர்கள் அல்லது நிறுவனத்தை வாங்கி நடத்த விருப்பம் இருப்பவர்கள் தொடர்புகொள்க. ravi.antone@gmail.com

#tnfisherman ஆலோசனைக் கூட்டம்

நாம், கடந்த 30/01/2011 அன்று சென்னை மெரீனாவில் சந்தித்து, மீனவர்
பாதுகாப்பு தொடர்பான விஷயங்கள் குறித்து ஆலோசித்தோம். அன்றைய சந்திப்பில்
முடிவெடுக்கப்பட்ட விஷயங்களின் அடிப்படையில், பல்வேறு கட்டங்களிலும் நமது
செயல்பாடுகள் நடைபெற்று வருகின்றன. சமீபத்தில் நம் இணைய நண்பர்கள்
குழுவினர் மீனவ கிராமங்களுக்கு நேரில் சென்று கள நிலவரங்களையும் அறிந்து
வந்துள்ளனர். மேலும் சில அமைப்பினரும் நம்முடன் இணைந்து இதனை
முன்னெடுப்பதில் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

இது வரை மேற்கொண்ட செயல்கள் பற்றிய பரிசீலனைகளை (Review) மேற்கொள்வதோடு,
அடுத்ததாக நாம் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் அனைவரும்
கலந்துரையாடி, செயல்படும் முறைகளைத் தீர்மானிக்க வேண்டியுள்ளது. இது
சம்பந்தமாக நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்திற்கு மீனவர் சங்கப்
பிரதிநிதிகளும் வருகை தருகின்றனர்.

அதன்படி நமது அடுத்த ஆலோசனைக் கூட்டம் எதிர்வரும் 20/03/2011 அன்று
நடைபெற உள்ளது. #tnfisherman இணையக் குழும உறுப்பினர்களும், ஆர்வலர்களும்
அவசியம் கலந்து கொள்ள வேண்டுகின்றோம்.

நாள்: 20/03/2011 ஞாயிறு
நேரம்: மாலை 5 மணி
இடம்: டிஸ்கவரி புக் பேலஸ், மேற்கு KK நகர். (பாண்டிச்…

டோபா டக்திதான் புள்ளிராஜா...

கீற்று தளத்தில் தமிழச்சியின் கட்டுரை..ஒரே ஒரு சின்ன தகவல் பிழை. சோபா சக்திக்கு பயங்கர ராணுவ வைரஸ் எல்லாம் பரப்ப தெரியாது. காக்காய் உட்கார பனம்பழம் விழுந்த கதை. ஆகவே கணினியில் நல்லதொரு வைரஸ் ரிமூவர் சாப்ட்வேர் பயன்படுத்தவும்..

கிட்டத்தட்ட 3 ஆண்டுகளாக இணையத்தில் என்மீது சோபா சக்தி தொடுத்த பாலியல் தாக்குதல் குறித்து பேசியிருக்கிறேன். பேச்சு என்பதை விட சற்று ஆவேசமாகவே நியாயம் கோரினேன். பாதிக்கப்பட்டவள் என்ற முறையில் கடுமையான வார்த்தைகளை உபயோகித்து திட்டியிருந்தேன்.

ஆணாதிக்கத் திமிரோடு சோபா சக்தி எம் மீது நிகழ்த்த முயன்ற அத்துமீறிய செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்து பல கட்டுரைகள் எழுதினேன். அதற்கு மறுவினையாக சோபாவிடம் சிறு விளக்கமும் இல்லை.

சில நாட்களுக்கு முன் ப்ரியா தம்பி தன்னுடைய முகநூல் பக்கத்தில் எழுதிய விவாதம் கீற்று தளத்தில் 'ஷோபா சக்திக்கும் ஜெயேந்திரனுக்கும் என்ன வித்தியாசம்?' என்ற தலைப்பில் பிரசுரமானது. கடந்த 3 வருடங்களாக ஒரு பெண், பாலியல் தாக்குதல் குறித்து எழுதியபோது பாராமுகமாய் இருந்த இந்த சோபா சக்தி, பிரச்சினை கீற்று மூலமாக அதிகமான பேரைச் சென்றடைந்தபோது மிரண்டு போய் வ…

கார்ட்டூன்ஸ் !!

Image

தகவல் தொழில்நுட்பத்துறையினர் உண்ணாவிரதம் #tnfsherman

Image

உலக கோப்பையை புறக்கணிப்போம்.

Image
எம் இனம் கடலில் ரத்தம் சிந்தும்போது , களிப்புடன் பார்ப்பேனா கிரிக்கெட் ? கிரிக்கெட் உலக கோப்பையை புறக்கணிக்கிறேன். சேப்பாக்கத்தில் போட்டி நடந்தால் தெரு நாய் மட்டுமே பார்வையாளராக இருக்கட்டும்.

லிப்ட் - குட்டிக்கதை

Image
மீனவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசே நடத்தும் பந்த். செண்ட்ரல் ரயில் நிலையத்தில் வந்திரங்கிய பாவனா கேரளாவில் இருந்து தமிழகத்துக்கு வந்து பொறியியல் படிக்கும் மாணவி.

சாலைகளில் சிற்சில தனியார் வாகனங்களை தவிர வேறு ஒன்றும் இல்லை. ஆட்டோ, டாக்ஸி எல்லாம் முடங்கி, துடைத்துவிட்டது போல சாலைகள்.ஸ்கூட்டி வைத்திருக்கும் தோழியின் மொபைலோ நாட் ரீச்சபுள். செய்வதறியாது தவித்தாள்..

செந்நிற சாண்ட்ரோவில் வந்த இளைஞன் சுகுமார், அழகிய இளம்பெண் லிப்ட் கேட்கும்போது நிறுத்தாமலா போய்விடுவான் ?

ப்ளீஸ். உட்காருங்க. எங்கே போகனும் சொல்லுங்க. நான் ட்ராப் பண்ணிடுறேன். என்றான்.

தேங்ஸ். எப்படி வீட்டுக்குக்கு போறதுன்னு தெரியாம ரொம்ப பயமாயிருச்சு..

ஐந்தே நிமிடங்கள் தான்.

நான் இந்த ஜங்ஷன்ல இறங்கிக்கறேன் சார். நிறுத்துங்க. என்றாள் பாவனா.

அண்ணா நகர் போகனும்னு சொன்னீங்களே மேடம். நான் அங்கயே ட்ராப் பண்றேன்.

நோ தேங்ஸ்.

குழப்பத்துடன் புறப்பட்டது சாண்ட்ரோ !

வேறு ஒரு தோழிக்கு அலைபேசியில் அழைத்து, அவளுடைய வண்டியில் ஹாஸ்டலுக்கு வந்து சேர்ந்தவுடன், கொஞ்சம் ரிலாக்ஸ்டாக இருக்கும்போது டைரியில் இப்படி …

ப்ரீலான்ஸ் வெப் டெவலப்பர்கள் தேவை

இணைய தள வடிவமைப்பில் ஆர்வம் / அனுபவம் கொண்டவர் தேவை. வீட்டில் இருந்தே அல்லது ஓய்வு நேரத்திலும் கூட பணியாற்றலாம்.

இணைய தளத்துக்கான டேட்டாபேஸ் உருவாக்கம், ஸ்க்ரிப்டிங், வெப் சர்வர் மெயிண்டனன்ஸ் போன்றவற்றில் அனுபவம் இருந்தால் முன்னுரிமை தரப்படும்.

தகுந்த சம்பளம் வழங்கப்படும்.

தொடர்புகொள்ளவேண்டிய மின்னஞ்சல் : ravi.antone@gmail.com

தமிழ் ஓவியாவின் காமெடி

Image
சமீபத்தில் வலைப்பதிவர் தமிழ் ஓவியா வெளியிட்ட " கலைஞர் தந்த அற்புத கருத்தோவியக் காவியம் இளைஞன்" என்ற அற்புதமான விமர்சனத்தை கண்டேன்.

உண்மையிலேயே கிலி ஏற்பட்டு, அலறி துடித்தேன். இந்த கொடூரத்தை செய்ய மிஸ்டர் தமிழ் ஓவியாவுக்கு எப்படி மனசு வந்தது என்று தெரியவில்லை.

ஏழு ஓட்டுக்கள் தனக்குத்தானே போட்டுக்கொள்வது கூட பரவாயில்லை. ஆனால் இது போன்ற கொடுமைகளை செய்யவேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.

திரு வீரமணி அவர்கள் தமிழர்களே ப்ரட்டு சாப்பிடுங்கள் என்று சொல்லியதை கூட ஜீரணிக்கமுடியும். ஆனால் இளைஞன் திரைக்காவியத்தை எல்லாரும் பாருங்கள் என்று சொல்வது கொடுத்த காசுக்குமேல் கூவுவதை போல இல்லையா ?

பெரியார் இருந்தால் இதை கண்டிப்பாக தாங்கிகொள்ளமாட்டார். பகுத்தறிவு பிரச்சாரம் செய்ய நேர்மை முக்கியம் :))

காப்பியடிக்கும் தினகரன்

Image
நீங்கள் தினகரன் மட்டும் வாங்குபவர்களாக இருந்தால் ஓக்கே. ஆனால் உங்கள் வீட்டில் தினகரன் மற்றும் டைம்ஸ் ஆப் இண்டியா ஆகிய இரண்டு பேப்பர்களும் வந்தால் நீங்கள் ஆங்கில பேப்பரான டைம்ஸ் ஆப் இண்டியாவை தைரியமாக நிறுத்தலாம்.

காரணம், தினகரனில் வேலை செய்யும் காப்பி கேட் ஒன்று,  ஆங்கில பேப்பர்களில் வருவதை அப்படியே மொழி பெயர்த்து அடித்து விடுவதற்கே முழு நேரமாக வேலை செய்கிறது.

கடந்தமாதம் உயரமான மாடல் ஒருவரைப்பற்றிய தகவல் மும்பை டைம்ஸில் பார்த்து அடுத்த நாளே தினகரனில் அதை ஒரு வரி கூட மாற்றாமல் ( மாடலின் உயரம், எடை மற்றும் மற்ற புள்ளிவிவரங்கள்) அவரை பற்றிய செய்திகள் ஆகியவற்றை அப்படியே எழுதினார்கள்.

அது முதல் இவர்கள் உண்மையில் காப்பியடிக்கிறார்களா என்று பார்த்துவந்தேன். இன்றைய தினகரனில் உடற்பயிற்சி செய்தால் ஜலதோஷம் வராது என்ற செய்தி வரை, அம்புட்டும் படு காப்பி.

ஒரு செய்தி என்பது எல்லாருக்கும் பொதுவானது. உதாரணம், சமீபத்திய சபரிமலை சம்பவம். அதனை அனைத்து நாளிதழ்களும் வெளியிட்டனவே ? அதனை காப்பி என்று சொல்லப்போவதில்லை.

ஆனால் குறிப்பிட்ட சில செய்திகள், மற்ற நாளிதழ்களில் வருவதை அப்படியே அடுத்த நாள் அடித்து விட…

பின்னூட்ட வெளாட்டு ! வாரீகளா ?

Image
ஒரு மொக்கை பதிவை போடுவதற்கு பதில் நாலு நல்ல பதிவுக்கு பின்னூட்டம் போடலாம் - இப்படிக்கு அனானிமஸாக கடந்த ஆண்டு பின்னூட்டம் போட்ட கணேஷ் என்பவரின் புதிய தத்துவ திரட்டு பக்கம் 232.உண்மையில் நீங்க படித்துக்கொண்டிருக்கும் பதிவு ஒரு புதிய பின்னூட்ட புரட்சி. இது உங்களை பிரட்டி எடுக்கப்போவுது.

இந்த வெளாட்டின் ரூல்ஸ் கீழே.

1. பத்து நல்ல பதிவுக்கு (இடுகைகளுக்கு) பின்னூட்டம் போடனும். (கொஞ்சம் குஷ்டந்தான், இருந்தாலும் தேடுங்க)
2. ஐஞ்சு பேர இந்த ஆட்டத்துக்கு அழைக்கனும்.
3. எந்த எந்த நல்ல பதிவுக்கு பின்னூட்டம் போட்டீங்க, ஏன் போட்டீங்க அப்படீங்கறத எழுதி, 'என்னோட பின்னூட்ட வெளாட்டு' ' நானும் ஆடிட்டேன்' 'பிச்சுப்புட்டேன் பிச்சு' அந்த மாதிரி எதாவது தலைப்பு வெச்சு ஒரு பதிவா போடனும்.

வெளாட்ட நான் ஆரம்பிக்கறதால நான் அஞ்சு பயபுள்ளைகள கூட்டுட்டு, கெளம்பறேன். என்னோட பின்னூட்ட வெளாட்டு ரிசல்ட் அடுத்த பதிவா வரும்.

1. பட்டாப்பட்டி
2. சித்ரா
3. எம் அப்துல் காதர்
4. படைப்பாளி
5. சசிகுமார்

ஹேப்பி வெளாண்டிங். ஹேப்பி பின்னூட்டம் போட்டிங்.

கோவில்பட்டி கல்லூரிக்கெதிராக ஆர்ப்பாட்டம் - ஜெ அறிவிப்பு

Image
. . .முதலில் இது பற்றி அண்ணன் உண்மைத்தமிழனின் பதிவை வாசித்துவிடுங்கள்.
வணக்கம் உண்மைத்தமிழன்  அவர்களே,

தங்கள் வாசகனான எனக்கு தங்களிடம் ஒரு முக்கியமான விஷயத்தை பகிர்ந்து கொள்ளும் அவசியம் இன்று வந்துள்ளது. குறிப்பாகச் சொன்னால் தங்கள் உதவி எனக்கு தேவைப்படுகிறது. ஆயிரக்கணக்கான மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் சார்பாக ஒரு உதவியை உங்களிடம் நாடுகிறேன்.

தமிழக அரசு இந்தக் கல்வியாண்டில் குடும்பத்தில் முதல் பட்டதாரிகளுக்கு பொறியியல் கல்லூரிகளில் கல்விக் கட்டணம் செலுத்தத் தேவையில்லை என்று அறிவித்து இருந்தது. இந்த ஆண்டில் அட்மிஷன் போடப்பட்ட மாணவ மாணவிகளில் பெரும்பான்மையானோர் இந்த சலுகையை நம்பி சேர்ந்தவர்கள்தான். பலரும் வறுமையில் வாடும் குடும்பத்தை சேர்ந்தவர்கள்.

கோவில்பட்டியை சேர்ந்த பிரபல "நேஷனல் இன்ஜினியரிங் கல்லூரி" ஆரம்பத்தில் முதல் பட்டதாரி மாணவ மாணவியரிடம் அட்மிசனின்போதே அரசாங்கத்தின் அறிவிப்புக்கு மாறாக பதினைந்தாயிரம் பணத்தை வாங்கிக் கொண்டார்கள். 

எங்கள் பிள்ளைகள் எப்படியாவது இன்ஜினியரிங் படித்தால் போதும் என்ற வேகத்தில் நாங்களும் எப்படியோ பணத்தை கட்டிவிட்டோம்.  இப்போது மிகவும் சூட்சுமமாக கல…

திமுகவுக்கே ஓட்டு போடலாம்னு இருக்கேன் !!!

Image
.

இணையத்தில் மட்டும் வீசும் திமுக எதிர்ப்பலை, இப்ப இன்னும் கொஞ்சம் அதிகமாயிட்டதோ என்று தோன்றும் அளவுக்கு, கொஞ்சம் கொலைவெறியோடு அலைகிறார்கள். அதற்கு பல காரணங்கள். பல நியாயங்கள். பல கற்பிதங்கள்.

ரசினிகோந்து வாய்ஸ் கொடுத்ததால் ஏமாந்து திமுக-தமாக கூட்டணிக்கு 96 அடியேன் ஓட்டு போட்டது வரலாற்று நிகழ்வு, அதை பற்றி அதிகம் வேண்டாம், ஆனால் இந்த முறை, திமுகவுக்கு ஓட்டு போடுவது என்று முடிவெடுத்துவிட்டேன்.

காரணங்களை கீழே அடுக்குறேன் !!!

சூப்பரா இருக்கு இதெல்லாம்.

1. கடந்த அதிமுக ஆட்சியின் ஹிட் திட்டங்களை (மகளிர் சுய உதவிக்குழு, மாணவ மாணவிகளுக்கு இலவச சைக்கிள் போன்ற பல) ஒழிக்காமல் அப்படியே செயல்படுத்தியது. அம்மா ஆட்சியில் உழவர் சந்தை, சமத்துவபுரம் திட்டங்கள் பொலிவிழந்துபோனது போல் இல்லாமல்.

2. மத்திய அரசின் நூறு நாள் வேலைத்திட்டத்தை சுணங்கடிக்காமல் செயல்படுத்தி, கிராம அளவில் நல்ல பணப்புழக்கம் ஏற்பட வகைசெய்தது.

3. ஒரு ரூபாய் அரிசி ! இலவச வண்ணத்தொலைக்காட்சி பெட்டி. வயிறும் மனசும் நிறையும் திட்டங்கள்.

4. கிராம குளங்கள் / ஏரிகள் தூர்வாறப்பட்டு, புதிய நீர் ஆதாரங்கள் தமிழகமெங்கும் உருவாக்கப்பட்டுள்ளது.

5. அ…

ஒப்பீடு வலைப்பூவில் இணைய விருப்பமா ?

வணக்கம் வலைத்தமிழர்களே. முந்தைய பதிவின்சுட்டியை படித்துவிட்டீர்கள் என்றால் இந்த வலைப்பூவின் நோக்கம் முழுமையாக தெரிந்துபோகும்.

ஒப்பீடு வலைப்பூ என்பது பல்வேறு பொருட்களை / சேவைகளை ஒப்பிடப்போகிறது. ஆனால், ஒரு சேவையை அல்லது பொருளை, கண்ணால் கூட பார்க்காமல் / பயன்படுத்தி பார்க்காமல் அதனை மற்றொன்றோடு ஒப்பிட முடியாது.

அப்படி செய்தால் அது அந்த சேவைக்கு / பொருளை தயாரிக்கும் நிறுவனத்துக்கு பெரும் இழப்பாகும். அவ்வாறான தவறும் இவ்வலைப்பூவில் நிகழ அனுமதியோம்.

ஒப்பீடு வலைப்பூவில் இணைவது குறித்தான பதிவு இங்கே 

ஒப்பீடு வலைப்பூ பற்றி !!

ஒப்பீடு வலைப்பூ ஏன் ? நேரடியாக விஷயத்துக்கு வருகிறேன். ஒரு பொருளை வாங்குதற்கு முன் பல முறை யோசிக்கிறோம். அந்த பொருளின் விலை, நம்முடைய பட்ஜெட், நமக்கு அந்த பொருள் அல்லது சேவை உண்மையிலேயே அவசியமான ஒன்றா ? போன்றவை அவற்றில் சில.

அப்படி பல விஷயங்களை யோசித்தாலும், அந்த பொருளை வாங்கி உபயோகப்படுத்தினால் தான் அதன் உண்மையான தரம் தெரியவரும். சிலர் புத்திசாலித்தனமாக செயல்பட்டு அந்த பொருளை பற்றி பலரிடம் விசாரிப்பார்கள். அந்த பொருளை தயாரிக்கும் நிறுவனம் பற்றி, அந்த குறிப்பிட்ட பொருளைப்பற்றி இணையத்தில் கிடைக்கும் ரிவ்யூக்களை வாசிப்பார்கள். (பெரும்பாலும் ஆங்கிலத்தில் இருக்கும்).

இந்த ரிவ்யூக்களை தமிழில் வழங்குவதுதான் திட்டம். அதே நேரம் இதுபோன்ற நேரடியான ரிவ்யூக்களை ( எல்ஜி / சாம்சங் / வீடியோகான், எந்த வாஷிங் மெஷின் சிறந்தது ) வெகுஜன ஊடகங்களால் நேரடியாக வெளியிடுவது கொஞ்சம் கடினமே. காரணம் இது அந்த பொருளின் மார்க்கெட்டை நேரடியாக பாதிக்கும் விஷயம். வெகுஜன ஊடகத்தில் இது பற்றிய ரிவ்யூ வேண்டுமானால் வெளியிடலாம், ஆனால் அதில் எது சிறந்தது என்று எழுதினால் எழுதியவரை நோக்கி ஆட்டோ அனுப்பபடலாம். ஆனால் ஒரு வாடிக்கையா…

போண்டா மாதவன் லெட்டர் டு மன்னார்

Image
மன்னார் மெரினாவில் சுண்ட கஞ்சி காய்ச்சி விற்கும் குடிசைத்தொழிலை செய்யும் எளிய விவசாயி(?) அல்லது பிஸினஸ் மேக்னட். அவரிடம் சுண்டக்கஞ்சி ஆர்டர் செய்த போண்டா மாதவனுக்கு சரக்கு ரெடியாகிவிட்ட தகவலை தெரிவித்து மின்னஞ்சல் அனுப்பவேண்டும். இதனை சரியாக அனுப்புவது எப்படி ?

ஒரு வாடிக்கையாளர் அல்லது க்ளையண்ட் அல்லது மேலாளர் எரிச்சலடையாமல் மின்னஞ்சலை அனுப்பித்தொலைவது எப்படி என்ற தகவலை இந்த பதிவின் மூலம் தெரியப்படுத்துவது நோக்கம். இமெயில் எத்திக்ஸ் பார் டம்மீஸ் அப்படீன்னு வெச்சுங்க. வேற மேட்டர் (?) எதிர்பார்த்து பதிவில் குந்தியிருந்தா கெடக்காது ஆமாம் சொல்லிப்பிட்டேன். அப்பாலிக்கா என்ன வைய கூடாது.

இந்த படத்தின் மேல் க்ளிக் செய்து பார்த்தால் பெரிதாக தெரியும். பட்டென உங்கள் கண்ணில் படுவது சப்ஜெக்ட் இல்லை.  அலைன்மெண்ட் சரியில்லை. அவ்வளவு தானே ?

இப்போது அடுத்த படம்.

இந்த ரெண்டாவது படத்தை க்ளிக் பண்ணி பெரிசா பார்தீங்களா ? சப்ஜெக்ட் லைன் இருக்கு.  டியர் மிஸ்டர் என்று ஆரம்பிக்கிறது. சல்யூட்டேஷன் என்பது ஒரு நல்ல முறை. மிஸ்டர், மிஸ், மிஸஸ் என்று ஆரம்பிப்பது. டியர் என்று ஆரம்பித்தால் பெண்ணாக இருந்தால் கோச்சுக்குவ…