Posts

Showing posts from November, 2010

மிஸ்டர் எக்ஸுடன் ஜிடாக் சிறு விவாதத்தின் தொகுப்பு

Image
செந்தழல் ரவி : தல இருக்கீங்களா ?

எக்ஸ் : ம் சொல்லுப்பா. என்ன மேட்டர் ? ரொம்பநாளா ஆளை காணோம் ?

செந்தழல் ரவி : கொஞ்சம் பிஸி. அதை விடுங்க. அந்த பெரிய எழுத்தாளர் இன்னொரு எழுத்தாளரோட கதையை சுட்டுட்டாராமே ? அந்த‌ மூல‌க்க‌தையை நீங்க‌ ப‌டிச்சிருக்கீங்க‌ன்னு கேள்விப்ப‌ட்டேன் உண்மையா ?

எக்ஸ் : எங்க‌ப்பா பெரிய‌ புத்த‌க‌ சேக‌ரிப்பாள‌ர்னு தெரியும்ல‌ ? அவ‌ர்ட்ட முடவன் வளத்த வெள்ளைப்புறா இருந்த‌து. ஒருமுறை போஸ்ட் கார்டு கூட‌ போட்டார் எழுதின‌ எழுத்தாள‌ருக்கு.

செந்த‌ழ‌ல் ர‌வி : அதை கேள்விப்ப‌ட்டேன். ஆனா பின் தொட‌ரும் நிழ‌லின் குர‌ல் நீங்க‌ எழுத்துகூட்டியிருக்கீங்க‌ன்னு சொன்னாங்க‌. அது உண்மையா. ?

எக்ஸ் : ஆமாம். நான் அவ‌ரோட‌ பெரிய‌ ர‌சிக‌னாச்சே. ப‌டிக்காமே இருப்பேனா ?

செந்த‌ழ‌ல் ர‌வி : யோவ் அப்ப‌ ப‌ட்டுனு மேட்ட‌ரை போட்டு உடை. சுட்டாரா இல்லையா ?

எக்ஸ் : ரவி என்ன‌ காமெடியா ? அது எத்த‌னை ப‌க்க‌ம் ? இது எத்த‌னை ப‌க்க‌ம் ? 26 எங்கே ? 700 எங்கே ? வ‌டிவ‌ம் ஒன்னா இருக்குது அப்ப‌டீங்க‌ற‌துக்காக‌ உருண்டையா இருக்க‌ற‌து எல்லாம் ப‌ந்தா ?

செந்தழ‌ல் ர‌வி : இல்லீங்ணா. துரத்தப்பட்ட தொழிற்ச‌ங்க‌வாதி. குடிகார‌ன். கண்டெடுக…

To Mr.மணிஜி அங்கிள்

Image
மிஸ்டர் மணிஜி, இது என்னோட ரெண்டாவது பர்த்டே ட்ரஸ். துணிக்கடை விளம்பரத்துக்கு கால்ஷீட் தருவேன். ஆனா டிவிஆர் அய்யா மாதிரி அவுட் ஆப் போக்கஸ்ல காட்டமாட்டேன்னு ப்ராமிஸ் பண்ணுங்க !!

ஆராவ‌முத‌ன் நாட்குறிப்பு

நான் ஒரு ஆராய்ச்சி மாணவன். நாங்கள் ஈடுபடும் ஆராய்ச்சி கொஞ்சம் கடினமானது என்றபடியால் அதிக பணிசுமை ஆகிவிடும் நாட்களில் பல்கலைகழக ஆய்வகத்திலேயே உறங்குவதுண்டு. இன்றும் அப்படித்தான். பல முறை தோல்விகளில் முடிந்த எங்களது ஆராய்ச்சி பணியில் ஒரு முறை கூட நான் சலிப்படைந்ததில்லை. அதில் என் சுயநலனும் உண்டு. அல்லும் பகலும் பாடுபட்டு இந்த ஆராய்ச்சியில் வெற்றி பெற்று ஆய்வு கட்டுரையை சமர்ப்பித்தால் மட்டுமே அரசிடம் இருந்து நிதி உதவி மற்றும் பணி வாய்ப்பு கிடைக்கும். அதன் மூலம் தங்கை திருமணம், அம்மாவுக்கு உடல் நலன் சிகிச்சை, காதலியுடன் திருமணம் என்று என் ஆயிரம் கன‌வுகள் நிறைவேறும். ஆய்வகத்தில் எங்கள் இயந்திரத்திலேயே நான் உறங்கும் நாட்களில் சீக்கிரம் எழுந்துவிடுவது வழக்கம். அங்கே குளிக்கும் வசதியில்லை. அருகில் இருக்கும் தேநீர்க்கடையில் ஒரு தேநீரும், முகம் அலம்ப கொஞ்சம் தண்ணீரும் மீண்டும் பணியை துவக்க போதுமானது. சாலையில் இறங்கி நடந்தேன். இன்றைக்கு எல்லாமே புதிய‌தாயிருக்கிற‌து. தேநீர் க‌டையில் பெரிதாக கூட்டமில்லை.வ‌ழ‌க்க‌மான‌ தேநீர் போடும் ஆசாமி மாறியிருந்தார். ச‌ட்டைபையை தொட்டுப்பார்த்தேன். கொஞ்ச‌ம் சில்ல‌றை…

எப்பதான் கேக் வெட்டுவீங்க ?

Image

போண்டா மாதவன் பதில்கள்

புரளி மனோஹர் சொல்கிறான் என்பதால் மட்டுமல்ல. என்னுடைய ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கேட்டுக்கொண்டதாலும் (சரி விடுங்க பத்துக்கணக்கான) இந்த கேள்வி பதில் பகுதியை மீண்டும் ஆரம்பிக்கலாம் என்று என் அப்பன் தகர நெடுங்குழைகாதன் சத்தியமாக முடிவெடுத்ததில். இனி நேரே பதில்கள். (கேள்விகள் ?) அனானி ஆப்ஷன் இல்லாததால் என்னுடைய நன்பர்கள் பல ப்ளாக்கர் ஐடிகளில் வருவார்கள்.

செர்வாண்டிஸ்


கேள்வி : கோவை எண்கவுண்டர் சம்பவத்தை பற்றி நீங்கள் ஏன் இன்னும் பதிவு போடவில்லை ?


போண்டா : நானும் ஒரு பதிவை எழுதி வைத்திருந்தேன். எண்கவுண்டர் தவறு. அதே நேரம் பாலியல் வண்புணர்வும் தவறு. மேலும் சிறுமிகளும் இதற்கு காரணம் என்பது போல. மேலும் இஸ்ரேலில் இதை விட சிறப்பாக எப்படி செயல்படுவார்கள் என்பது பற்றியும். மாற்றுக்கருத்துக்களை எழுதிய உண்மைத்தமிழனுக்கே ஏராளமான மைனஸ் ஓட்டுக்கள் விழும் நிலையில், பார்வதி அம்மாள் விவகாரத்தில் அனைவரும் துப்பிய எச்சில் இன்னும் பாத் டப் அளவுக்கு ரொம்பியிருப்பதால், பதிவை அப்படியே ட்ராப்டில் வைத்துவிட்டேன். கடுமையாக உழைக்கும் கவுண்டர் சாதி என்று ஒரு பதிவு உள்ளது. அதை படித்துக்கொள்ளுங்களேன் ?

நாட்டாமை
கேள்வி :  தமிழ…

தீபாவளியன்று பாத்ரூம் போக சிறந்த நேரம் எது ?

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
உலகம் முழுவதும் வாழும் இந்துக்கள் கொண்டாடும் பண்டிகைகளில் தீபாவளி முக்கிய இடம் பெற்றுள்ளது. வீடு முழுவதும் தீப ஒளி ஏற்றி, பட்டாசுடனும், தித்திக்கும் இனிப்பு வகைகளுடனும் உற்றார், உறவினருடன் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது.
தீபாவளிக்கு மற்றொரு சிறப்பும் உண்டு. இது இந்துக்கள் பண்டிகை என்றாலும், இந்தியா முழுவதும் இந்த விழாவை சாதி, மத வேறுபாடின்றி அனைத்து தரப்பினரும் கொண்டாடுவதை காணலாம். எனவே, இதை தேசிய திருவிழா என்றும் கருதலாம்.

இத்துனை சிறப்புப் பெற்ற தீபாவளி பண்டிகை, நாளை கொண்டாடப்படுகிறது.

தீபாவளியை கொண்டாடுவதற்கான நேரம் எது என்பது குறித்து, சென்னை மைலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் வேதவாத்தியார் பிரம்மஸ்ரீ ஏ.ஜி.ஸ்ரீனிவாச சாஸ்திரிகள் கூறியதாவது:- "நரகாசுரனுடன் கிருஷ்ணர் வதம் செய்தபோது, சோர்வுற்ற நிலையில், நரகாசுரனுடன் ராதை போரிட்டார் என்றும், பெண்ணால் நரகாசுரன் அழிந்தான் என்றும் புராணங்களில் கூறப்பட்டுள்ளது.

நரகாசுரன் வதம் செய்யப்பட்ட நிலையில், "நான் முக்தி அடைந்த தினத்தில், அனைவரும் புண்ணிய லோகத்தை அடைய வேண்டும் என்றும், புண்ணிய நதிகளில் மு…