தேடுங்க !

Friday, October 29, 2010

பதிவுலகை விட்டு போண்டா மாதவன் விலகுவானா ?

பார்வதி அம்மாள் பற்றி ஒரு பதிவொன்றில் தமிழ்மண வரலாற்றிலேயே அதிக நெகட்டிவ் ஓட்டுகளை குவித்து,  தென்பென்ணை, பாலாறு, வைகையாறு போல எல்லோரும் முகத்தில் துப்பிய எச்ச்சில் ஆற்றில் நீந்தி, மூஞ்சியில எதுவும் படல ! என்று எழுந்துவந்த போண்டா மாதவன், தனது பதிவு ஒன்றில் தான் எக்காலத்திலும் தமிழ்மணத்தினை விட்டு விலகப்போவதில்லை என்று அறுதியிட்டு உளறியுள்ளார்.

இதுபற்றி வலையுலக சுனாமி ஒன்று எழுதிய பதிவு உங்கள் பார்வைக்கு !

அதாவது மற்றவர்களின் தனிப்பட்ட தகவல்களை திரட்டுவதே அதை வைத்து எதாவது கல்லா கட்டத்தான் என்ற நிலையில், போண்டா வலைப்பதிவர் சந்திப்புகளில் கையில் நோட்டுடன் குந்தியிருந்த காலம் ஒன்று. போலி டோண்டு பிரச்சினையில், தன் பெயர் உட்பட எதையும் வெளிப்படுத்த விரும்பாத பதிவர்களை பற்றி தெரிந்தும் லஜ்சையில்லாமல் அங்கே நீங்கள் வேலை செய்யும் கம்பெனி எது என்று நோண்டும் போண்டா மாதவனை பார்த்து பேஸ்த் அடித்து தெறித்து ஓடிய கும்பல் அதிகம்.

நண்டு அல்லது நொரண்டு பதிவில், நாத்திகர்கள் என்பவர்கள் கொலைவெறியோடு நாத்திகத்தை கடைபிடிக்கவேண்டும் என்று வலியுறுத்துகிறார். திருக்குறளையும் துணைக்கழைக்கிறர். இன்றைய சமூச்சூழல் என்ன, அதில் நாத்திக பிரச்சாரம் செய்வது எப்படிப்பட்ட கடினமான காரியம் என்பதை புரியாதவரா நொரண்டு ?

அருள் வலியுறுத்தும் கருத்து மிகவும் பொருத்தமானது. நாத்திகம், பகுத்தறிவு போன்றவற்றை தவிர்க்க முடியாத சூழலில் ஏற்றுக்கொள்ளும் சூழலில், இனி வரும் காலத்தில், அல்லது தன்னிடம் முழு கண்ட்ரோலும் இருக்கும் நேரத்தில், இது போன்றவற்றை தவிர்த்துவிடலாம் என்ற நம்பிக்கை தான் முக்கியமானது என்கிறார்.

வடிவேலு பாணியில் சொன்னால், ஒன்னு நம்பி வாழனும், இல்லைன்னா நம்பவச்சு வாழனும் என்கிறார். என்னுடைய பார்வையில் அது 100 சதவீதம் சரியே !!!

என்னுடைய சொந்த வாழ்க்கையில் இருந்து உதாரணம் காட்டப்போனால், (நான் சாதி மத மொழி எதிர்ப்பு திருமணம் செய்தவன் என்பது நன்பர்களுக்கு தெரியும்)., யாழினி பிறந்தபோது ஆஸ்பத்திரியில் இருந்தவன் நான் மட்டுமே ! தொலைபேசியில் கூட என் மனைவியால் தன்னுடைய தாயிடம் பேசமுடியாத நிலை. அதன் பின் அவரது தாயாரின் முயற்சியாலும் என் முயற்சியாலும் அனைவரும் இணைந்துவிட்ட சூழலில், மாமனார் (வெகு தீவிர ஆத்திகர்) குழந்தையிடம் சாமி படத்தை காட்டி " உம்மாச்சி நோடு, நமஸ்காரம் மாடு" என்றெல்லாம் சொல்வதை கேட்டு குழந்தையும் அப்படியே செய்ய, அதை எல்லாம் புன்னகையோடு தான் கடந்துசெல்கிறேன்.

காரணம், அந்த நேரத்தில் அதுவே சரியான செயல்பாடு. பிற்பாடு என் மகள் நாம் சொல்வதை புரிந்துகொள்ளும் நேரம் வந்தபிறகு (வெனவு தெரிஞ்சபிறகு என்று எங்க கிராமத்தில் சொல்வார்கள்), அவளுக்கு அனைத்தையும் புரியவைக்கமுடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. நம்பி வாழ்கிறேன்.

அதே நேரம் அடிக்கடி கோவிலுக்கு செல்லும் பழக்கமுடைய என் மனைவிக்கு ப்தாலமியில் இருந்து ஸ்டீவன் ஹாக்கின்ஸ் வரையில் அறிமுகம் செய்கிறேன். இது ஒரு நீண்டகால செயல்பாடு. அறிவின் வீச்சு முழுமை அடைவதில்லை, ஆனால் தேடும் பணியை நிறுத்திவிடக்கூடாது என்பதே என் கொள்கை.

பதிவுலகம் நிறைய புரியவைத்தது. டேம்போரல் லோப்பின் நரம்பு சிலிர்ப்புகள் எப்படி சாமியாட வைக்கிறது என்பதில் இருந்து, நமது வாசிப்பின் நீட்சியை எப்படி அதிகப்படுத்திக்கொள்வது, என்பது வரை. சமீபகாலமாக ஜெயமோகனை ஆழ்ந்து படித்துவருகிறேன். அவருடையை யதியை விட்டுவிட்டு, மற்ற அறிவின் ஆழத்தை பார்த்து வியக்கிறேன்.

அது தான் தேவை !

குழந்தையில் இருந்து சொல்லிக்கொடுக்கப்படும் சாமி, நம் மனதில் ஆழமாக பதிந்துவிடுகிறது. அதை உடனே மாற்ற முடியாது என்றாலும், இந்த மூடநம்பிக்கைகளை எதிர்த்து அறிவு சார் தளத்தில் தொடர்ந்து விவாதிக்கவேண்டியது முக்கியம்.

ப்ரான்ஸ் நாடு பர்தாவை ஒழித்துவிட்டது, அதனால் முஸ்லிம்கள் அந்த நாட்டை விட்டு வெளியேறிவிடப்போகிறார்களா என்ன ? ஹாப்பிங் காம்ப்ளக்ஸில் தலாக் சொன்ன கதையில் இருந்து இஸ்லாமிய மத அடிப்படைவாதிகள் செய்யும் கொடுமைகள் எத்தனை எத்தனை ? பாதிரியார்கள் பாப்பாக்களை பழுதாக்குகிறார்கள் என்பதை சொன்னபோது ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனைபேர் ? இன்றைக்கு குளிர்பானத்தில் மயக்கமருந்து கொடுத்து கற்பழித்தான் பாதிரி என்ற செய்தி என்ன, தாழ்த்தப்பட்டவர்கள் கல்லறையில் கூட தனியாகத்தான் துயில வேண்டும் என்பது என்ன ? கருவறையிலே அபலைப்பெண்களிடமும் பூக்காரியுடனும் கூட அஜால் குஜாலாக இருந்த தேவநாதனில் இருந்து, கோவிலில் குண்டர்களை வைத்து கொலை செய்த காஞ்சி காமகேடி வாழை இலையில் ஆய் போகும் பெரிய மூங்கில் (நன்றி அருள்) என்ன ? பெரியார் காட்டிய பாதையில் குறைந்தபட்சம் செல்ல முயற்சியாவது செய்கிறீர்களா ?

உண்மையிலேயே கடவுளுக்கு சக்தி இருந்தால் தேவநாதனின் லுல்லாவை கடித்து துப்பியிருக்காதா ? அது வெறும் கல் என்பதால் தானே அதன் மேலேயே (நல்லா வாயில் வருது)

பகுத்தறிவு பிரச்சாரம் செய்பவர்கள் கல்யாணம் காட்சி கட்டாமல் நாத்திக சாமியாராக (??) வலம் வரவேண்டும், அப்போது தான் பிரச்சாரம் செய்யண்டுமா ? அட அல்லக்கை முண்டங்களே ? கடவுளுக்கு சக்தியில்லை என்பதையும், மத அடிப்படை வாத பத்வா சொறிநாய்களையும், கன்னியாஸ்திரிகளை கற்பழிக்கும் சாதி வெறி சாமியார்களையும், கேள்வி கேட்டால் கோபம் பொத்துக்கொண்டு வருகிறதா ? அதனால் ஒரு சமயம் கிடைத்தவுடன் வள் என்று பாய்ந்து பிறாண்ட ஆசை வருகிறதா ? நாய் தடுப்பு ஊசி போட்டு பட்டியில் (பட்டா பட்டியில் அல்ல) அடைத்தால் தான் புத்திவரும் !!!

சரி, பதிவின் மையமான போண்டாவை பற்றி :

திருச்சியில் வேலைக்கான நேர்முக தேர்வில் தான் பாப்பான் என்பதால் பெருமிதம் அடைகிறேன் என்று சொன்ன டோண்டு ராகவன் தான் பார்ப்பணீயத்தை கடைப்பிடிப்பதில் முதன்மையாக நிற்கிறார். இதை அந்த போண்டாவிடமே கேட்டு தெரிந்துகொள்ளுங்களேன்.

Thursday, October 28, 2010

போண்டா மாதவன் கலக்கும் நாராயண ! நாராயண !!குறிப்பிட்ட படத்தினை இணையத்தில் இருந்து எடுத்து அதில் ஒரு சின்ன போண்டாவை இணைத்துள்ளேன் ! பொருந்தி வருதா என்று பாருங்கள் !!!

இவ்வளவு நாளாக காத்திருந்த வாய்களுக்கு (அரிசி) அவல் போடத்தான் போண்டா சார் இந்த கல்யாணத்துக்கு போனார் என்பது இப்போது புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். தங்கள் தளத்தில் பகுத்தறிவை பேசுகிறார்கள் என்று கையை பிசைந்துகொண்டிருந்த கும்பல் போண்டா சார் பதிவில் புகுந்து விளையாடுகிறது.

குழலி ஒருமுறை போண்டா சாரை மஸோக்கிஸ்ட் என்றார். அதாவது தன்னை வருத்தி, அதிலே சுகம் காணுதல். அடித்து பிடித்தாவது எதாவது ஹிட்ஸ் தேத்துதல். அப்பத்தானே நன்பர்களுக்கு நன்றி என்று பதிவிடலாம் ? மேலும் போண்டா சாரின் பதிவில் வரும் பல அனானீஸ் அவரின் புரளி மனோஹர் கோஸ்டியில் இருந்தே வருகிறார்கள். நாட்டாமை, கிருஸ்னன், செங்கோட்டையன், பனங்காட்டையன் என்று வாய்க்கு வந்தபடி தனித்தனியாக உருவாக்கிய ஐடிகள் எல்லாம் இப்போது உபயோகப்படுவதில்லை. அனானியை திறந்துவிட்டாச்சு !!!

என்னைய அடிச்ச ரவுடிகள் எல்லாம் ஊரை விட்டே ஓடிட்டானுங்க என்ற வடிவேலு பாணியில் சொல்லிக்கொண்டு செய்த நாரதர் வேலையை எல்லோரும் பார்த்துக்கொண்டுதானே இருக்கிறார்கள் ?

ஒரு சம்பவம் இன்னும் பசுமையாக நினைவில் இருக்கிறது. அது போண்டா சாரை இன்னும் தெளிவாக அறிந்துகொள்ள உதவியது என்றால் மிகையில்லை. போலி பிரச்சினை கடுமையாக நடந்துகொண்டிருந்த நேரம். தினமும் போலி டோண்டுவிடம் இருந்து ஆபாச கமெண்டுகள் மின் அஞ்சல் பெட்டியை நிரப்பும். நான் ஒரு வேலையாக பெங்களுர் பிக் பஸாரின் உள்ளே இருந்தேன். என்னுடைய மனைவி ஜெர்மன் மொழி படிக்க விரும்புவதாகவும் அது சம்பந்தமான தகவல்கள் தேவை என்றும் போண்டா சாரை தொலைபேசியில் அழைத்தேன். சந்தடி சாக்கில் உன் மனைவி என்ன ஜாதி என்று கேட்டு, அவர் பார்ப்பணர் என்பதை அறிந்துகொண்டார் போண்டா. கான்வர்சேஷன் முடிந்தது. அடுத்த நாள் காலையில், என்னுடைய மனைவியின் ஜாதியை சொல்லி திட்டி பின்னூட்டங்கள் வந்தன. இணையத்தில் பல இடங்களிலும் என்னுடைய மனைவியின் சாதியை போஸ்டர் அடித்து ஒட்டினார் திருவாளர் போலி. இதை போண்டா மாதவனால் மறுக்க முடியுமா ?

தன்னுடைய சுகத்துக்காக எந்த கேவலத்தையும் செய்ய துணிபவர் போண்டா சார். இதை வெகு தாமதமாக உணர்ந்துகொண்டேன். இன்னும் ஒரு சம்பவம். இதில் ஒரு முருகனடிமை பதிவரை இழுக்கவேண்டிய தேவை. எனக்கு வேறு வழியில்லை. அப்போதையை பணமுடை காரணமாக திருச்சியில் கையில் இருந்த ரெண்டு ரூபாய்க்கு ஏதோ ஒரு வேலையாக முருகனடிமை போண்டா மாதவனுக்கு போன் செய்ய, வள வளவென்று தொலைபேசியில் கழுத்தறுக்கும் போண்டாவிடம் இருந்து எப்படி தப்பிப்பது என்று முருகனடிமை நொந்து நூடுல்ஸ் ஆகிப்போய் இருந்த நேரத்தில், இப்ப ஒரு பதிவு போட்டிருக்கேன், அதுல ஒரு பின்னூட்டம் கொடுத்திருங்க என்று கோரிக்கை வைத்த போண்டா மாதவனை எண்ணி அந்த வேகாத வெய்யிலில் முருகா !! என்று அலறியவர் முருகனடிமை. அந்த முருகனடிமை நமது அண்ணன் உண்மைத்தமிழன். வேண்டுமானால் இந்த கேவலத்தை அண்ணனிடம் கேட்டு தெரிந்துகொள்ளலாம்.

போண்டாவிடம் சுயமரியாதை என்பது எள் அளவும் இல்லை என்பதை இன்னொரு உதாரணம் மூலமும் சொல்லலாம். சென்னையில் தி நகர் குடிகார மூத்திர சந்தில் நடைபெற்ற ஒரு பார்ட்டியில், வரவனையான், சுகுணா திவாகர், நான் மூவரும் குடித்துக்கொண்டிருந்த நேரத்தில் சம்மன் இல்லாமல் ஆஜர் ஆகி, தனக்கு சிக்கன் ஆர்டர் செய்து கடித்துக்கொண்டிருந்த நேரத்தில், வரவணையான் செந்தில் கொடுத்த 4 ரூபாய் கிங்ஸ் சிகிரெட்டை புகைத்துவிட்டு, அதற்கு காசு கொடுக்காமல் ஏமாற்றியர். மொத்த பில்லில் போண்டவின் பங்கு 114 ரூபாய். ஆனால் 100 ரூபாய் மட்டும் கொடுத்துவிட்டு தன்னுடைய (வாடகை) காரில் ஏறி போய்விட்ட போண்டாவிடம், இதை சும்மா கிண்டலுக்காக வரவணையான் சுட்டிக்காட்ட, அந்த பதினாலு ரூபாயை மணியார்டர் செய்கிறேன் என்று தொலைபேசியில் எகிறியவர், இன்று வரை அந்த பதினாலு ரூபாயை செட்டில் செய்யவில்லை. 1956 ல் வாத்தியார் சுப்ரமணிய அய்யர் வேட்டியில் ஒன்னுக்கு போனது நியாபகம் இருக்கிறது, ஆனால் மூன்று வருடம் முன்னால் நடந்த பதினாலு ரூபாய் அவமான மேட்டர் செலக்டிவ் அம்னீஷியாவில் மறந்துவிட்டதா ?

ஆமை புகுந்தவீடு போல திருமணத்துக்கு வந்ததே தனக்கு அதில் ஏதாவது மேட்டர் கிடைக்குமா என்று பார்ப்பது என்று ஆனபிறகு, வலிய ராஜனிடம் சென்று மண்டப வாடகை எவ்வளவு என்று கேட்டது ஏன் ? உண்மையில் ராஜனுக்கு மண்டப வாடகை தெரியாமலா இருந்திருக்கும் ? இந்த டொங்கனிடம் எதற்கு சொல்லவேண்டும் என்று பெண் வீட்டார் பார்த்துக்கொள்கிறார்கள் என்று தட்டி கழித்திருப்பார். அதை வைத்து போண்டா கும்மியடிக்கும் என்று தெரிந்திருந்தால், வாட்ச்மேனை வைத்து வாசலிலேயே விரட்டியிருக்கலாமே ?

இதில் இஸ்லாமிய அடிப்படைவாத முண்டம் ஒன்றும் திட்டி பதிவெழுதி உள்ளது. விளையாட்டு போக்கில் தலாக் தலாக் தலாக் என்றவன் பொண்டாட்டியை புடுங்கிக்கொள்ளும் அறிவுகெட்ட மூடப்பயல்களின் முட்டாள்தனமான கொள்கைகளை விமர்சித்தால், அதுக்கு பதில் சொல்லாமல் என்றைக்கு சிக்குவான் என்று நாக்கை தரைவரைக்கும் தொங்கவிட்டுக்கொண்டு திரிபவர்களுக்கு குற்றம் சொல்ல பிள்ளையார் படம் தேவையில்லை. கல்யாண மண்டபத்தில் ஒரு கிழவி தும்மியது என்றால் அது கூட ஒரு காரணம் தான்.

உணமையில் போண்டாவின் பதிவில் பின்னூட்டம் எழுதும் எந்த அனானிக்காவது சொந்த பெயர் இருக்கிறதா ? இல்லை தன்னுடைய அப்பன் ஆத்தா வைத்த பெயரை மறந்துவிட்டார்களா ? அருளிடம் கேட்ட கேள்விக்கு செருப்பால் அடித்த மாதிரி பதிலை சொல்லிவிட்டாரே ? அந்த அனானி வாழை மரத்தில் தூக்கு போட்டுக்கொள்ளுமா ?

தனக்கும் போலி டோண்டுவுக்கும் இடையேயான பிரச்சினையில் அனைவரையும் இழுத்துவிட்டு, எனக்கு கமெண்ட் போடுங்க என்று சந்தடி சாக்கில் கேட்டு, அவர்கள் கமெண்ட் போட்டவுடன் கிடைக்கும் ஆபாச அர்ச்சனையால் அவர்களும் தன் பக்கம் சேர்வார்கள் என்று பல அப்பாவிகளுக்கு ஆபாச அர்ச்சனை கிடைக்கவைத்தவர் இந்த மஸோக்கிஸ்டு.

இந்த அல்லக்கை முண்டங்களை லூஸ்ல விட்டுவிட்டு, ராஜனும் சிஸ்டரும் தங்களது விடுமுறையை சந்தோஷமாக அனுபவிக்கவேண்டும் !! என் வாழ்த்துக்கள்...

Wednesday, October 27, 2010

இந்திய கடல்வாழ் பல்கலைகழகத்தில் பட்டய மற்றும் பட்ட படிப்புகள்

தமிழக அரசின் முயற்சியால் சென்னையில் அமைந்துவிட்ட இந்திய கடல்வாழ் பல்கலைகழகத்தின் பொது நுழைவு தேர்வு பற்றிய அறிவிப்பு அந்த பல்கலையின் இணையதளத்தில் வெளியாகியுள்ளது.

http://www.imu.tn.nic.in/

பட்டப்படிப்பு மற்றும் பட்டய படிப்புகளுக்கான முதல் பேட்ச். இந்த தேர்வில் வெற்றி பெற்றுவிட்டாலே அரசு வேலை வாய்ப்பு உறுதி என்ற நிலை. இந்த அற்புதமான வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள மாணவர்கள் தயங்கவேண்டாம். படிப்புக்கான தேர்வு தகுதிகள், உடல் தகுதி தேர்வுகள், கட்டண விவரம்  அனைத்தும் இணைய தளத்திலேயே உள்ளது.( கொஞ்சம் அதிகமாக உள்ளது, அரசு இதனை தாழ்த்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு வேவியர் செய்துவிட்டால் மிக சிறப்பக இருக்குமே ?)

Saturday, October 23, 2010

இரத்த படலம் பற்றிய யுவக்ருஷ்ணா பதிவு

சிங்கத்தின் தீபாவளி ஸ்டார்ட்ஸ்...

October 23, 2010

 
இந்த தீபாவளிக்கு என்ன ஸ்பெஷல்?

3டி மேக்ஸ் புடவை..

மல்டி மசகலி சல்வார்..

குந்தன் ஒர்க் சுரிதார் மெட்டீரியல்..

காட்டன் மஸ்லின் சட்டை..

பொந்தூர் வேட்டி..

பிளாக்பெர்ரி பெர்ல்3ஜி9100..

ஸ்டேண்டர்ட் மார்க் பட்டாசுகள்..

பாசிப்பருப்பு அல்வா, முள்ளு முறுக்கு..

உங்கள் சாய்ஸ் என்னவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.

ஆனால் காமிக்ஸ் ரசிகர்களின் பல்லாண்டுகால வனவாசம் இந்த தீபாவளியோடு முடிவுக்கு வருகிறது.

என்னது காமிக்ஸா? குழந்தைகள்லாம் படிக்குமே.. அதுவா? என்று முகம் சுளிக்கிறீர்களா?

வெயிட் பண்ணுங்க ஜெண்டில்மேன். உங்களுக்காக ஒரு தகவல்..

இன்றைய தேதியில் தமிழில் காமிக்ஸ் படிப்பவர்கள் அனைவரும் இருபது வயதுக்கு மேற்பட்டவர்களாகவே 80 சதவிகிதம் பேர் இருக்கிறார்கள் என்று ஏதோ ஒரு அமைப்பின் ஏதோ ஒரு கணக்கெடுப்பு கூறுகிறது.

இது நிச்சயமாக குழந்தைகள் சமாச்சாரம் அல்ல.

ஏனெனில்..

1960களின் இறுதியில் 'மாலைமதி காமிக்ஸ்' வெளிவந்து கொண்டிருந்தது. ஒரு இதழின் விலை 75 காசு. உங்கள் தாத்தாவோ, அப்பாவோ அந்த காலத்தில் வாங்கி பரண் மேல் போட்டு வைத்திருந்தார்களேயானால் தூசு தட்டி எடுத்து வையுங்கள். ஒரு இதழ் இன்று பிரிமீயம் ரேட்டில் 4000 ரூபாய் வரை விலை போக வாய்ப்புண்டு.

1987ல் வெளிவந்த லயன் காமிக்ஸ் தீபாவளி மலரின் விலை ரூ.10. இன்று அதனுடைய மதிப்பு ஆயிரம் மடங்கு மார்க்கெட்டில் உயர்ந்திருக்கிறது. ஏனெனில் சமீபத்தில் அந்தப் புத்தகத்தை ஒரு நண்பர் ரூ.10,000 கொடுத்து வாங்கியிருக்கிறார்.

நான் கூட சில ஆயிரங்களை கொட்டி, மிஸ்ஸாகிவிட்ட பழைய சில காமிக்ஸ்களை வாங்கி சேகரித்து வைத்திருக்கிறேன். உடனே சேல்ஸுக்கு கிடைக்குமா? படிக்க கிடைக்குமா? என்று பின்னூட்டம் போட்டு டார்ச்சர் செய்து தொலைக்காதீர்கள். காமிக்ஸ் விஷயத்தில் நான் ஒரு தீவிர சைக்கோ.

காமிக்ஸ் என்பது Passion சார்.. Passion.. ஸ்டேம்ப் கலெக்சன், காயின் கலெக்சன் மாதிரி..

70களிலும், 80களிலும் குழந்தைகளாக இருந்து ஒண்ணரை ரூபாய் இல்லாமல் காமிக்ஸ் வாங்க முடியாதவர்கள் இன்று லட்சம் லட்சமாக சம்பாதிக்கிறார்கள். தாங்கள் இழந்துவிட்ட பால்யகால ஒண்ணரை ரூபாய் பரவசத்தை இன்று ஆயிரங்களில், லட்சங்களில் வாங்க முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள் இந்த நேற்றைய குழந்தைகள்.

கஷ்டப்பட்டு ஏதோ ஸ்டேட்டிஸ்டிக்ஸ் எல்லாம் அள்ளிவிட்டிருக்கோம். இப்போதாவது இது சீரியஸ் மேட்டர் என்று நம்புங்க ப்ளீஸ். ஏதோ பார்த்து போட்டு கொடுங்க சாமி.

ஓக்கே, கமிங் டூ த பாயிண்ட்..

மேலே நாம் குறிப்பிட்ட காமிக்ஸ் வெறியர்கள் சாதாரணமாகவே இரும்புக்கை மாயாவி, ஸ்பைடர் என்று வெறியாட்டம் ஆடக்கூடியவர்கள். நான்கைந்து தீபாவளிகளாக பெரியதாக 'ஸ்பெஷல்' எதுவும் இல்லாமல் முடங்கிக் கிடந்தவர்கள். இந்த தீபாவளிக்கு 854 பக்கங்களில், 200 ரூபாய் விலையில் இந்திய காமிக்ஸ் வரலாற்றிலேயே முதன் முறையாக 'லயன் ஜம்போ ஸ்பெஷல்' வெளிவருகிறது. கிட்டத்தட்ட 'எந்திரன்' ரிலீஸுக்கு இருந்த எதிர்ப்பார்ப்பு இந்த புக்குக்கும் இருக்கிறது என்றால் நம்புங்கள். 'தலைவா வா. தலைமையேற்க வா'வென்று காமிக்ஸ் ரசிகர்கள், லயன் காமிக்ஸ் ஆசிரியர் விஜயனுக்கு போஸ்டர் ஒட்டாததும், ஜம்போ ஸ்பெஷலுக்கு கட்டவுட் வைக்காததும்தான் பாக்கி.

854 பக்கமும் ஒரே கதைதான் என்பது இந்த ஸ்பெஷலின் ஸ்பெஷல். விஷ்ணுபுரத்தை மிஞ்சும் இந்த ஸ்பெஷலை கண்டால் ஜெயமோகன் நொந்துப் போவார். தீவிர காமிக்ஸ் ரசிகரான எஸ்.ராமகிருஷ்ணன் தலையில் தூக்கி வைத்துக் கொண்டு ஆடுவார். எஸ்.ரா மட்டுமல்ல.. இயக்குனர் மிஸ்கின், நடிகர் பொன்வண்ணன் மாதிரி நிறைய வி.ஐ.பி. காமிக்ஸ் ரசிகர்கள் உண்டு.

ஆங்கிலத்தில் 'எக்ஸ்19' சீரியஸ் காமிக்ஸ் மிகப்பிரபலம். கிட்டத்தட்ட 20 ஆண்டுகாலம் தொடர்ச்சியாக தனித்தனி புத்தகங்களாக வந்து பெரும் வரவேற்பை பெற்றது. இந்த கதையிலிருந்துதான் 'வெற்றி விழா' திரைப்படத்தை பிரதாப் போத்தன் சுட்டார் என்று கூட கிசுகிசு உண்டு. கதையைப் படித்துப் பார்த்தால் அந்த கிசுகிசு உண்மைதான் என்றுகூட தோன்றும்.

கடற்கரையில் மயங்கிய நிலையில் விழுந்து கிடக்கிறான் ஹீரோ. முழித்ததும் தன் பெயர்கூட அவனுக்கு நினைவில்லை. தன் அடையாளத்தை தேடிப் புறப்பட்டவனுக்கு அடுத்தடுத்து பல அதிர்ச்சிகள். அவன் நல்லவனா கெட்டவனா கொலைகாரனா தேசத்துரோகியா கல்யாணமானவனா பொண்டாட்டி இருக்கிறாளா என்று குழம்பித் திரிய வேண்டிய சூழல். சில பேர் அவனை வரவேற்கிறார்கள். பலர் அவனை கொல்லத் துடிக்கிறார்கள். நினைவிழப்பதற்கு முன்பான வாழ்க்கையை தேடிச் செல்லும் நாயகனின் கதையில் சோகம், மகிழ்ச்சி, ஆக்‌ஷன் என்று எல்லா மசாலா செண்டிமெண்டுகளும் உண்டு. கட்டத்துக்கு கட்டம் ஒருவகையான இலக்கிய சோகம் இந்த கதை முழுக்க ஊடே வந்துகொண்டிருக்கும். ஒரு கட்டத்தில் 'சேது' படம் பார்க்கும் மனநிலை கூட தோன்றக்கூடும்.

ஓவியங்கள் ஒவ்வொன்றும் கல்வெட்டில் பொறிக்கப்பட வேண்டிய முத்துகள். இவ்வளவு சிறப்பான ஓவியங்களோடு உலகளவில் எந்த காமிக்ஸும் வந்ததில்லை என்று தாராளமாக பெட் கட்ட முடியும். ஒவ்வொரு கட்டத்திலும் ஓவியரின் துல்லியம், டீடெய்லிங் அபாரமாக அமைந்திருக்கும்.

ஆங்கிலத்தில் மொத்தம் 19 புத்தகங்களாக வெளிவந்தது.

தமிழில் 'இரத்தப் படலம்' என்று பெயரிட்டு மொழிமாற்றி லயன் காமிக்ஸ் வெளியிட்டு வந்தது. இப்போது ஒட்டுமொத்த 19 புத்தகங்களையும் ஒரே புத்தகமாக லயன் கொண்டு வருகிறது. இதுதான் லயன் ஜம்போ ஸ்பெஷல். 854 பக்கங்களில் காமிக்ஸ் என்று உலகளவில் இப்படியான ஒரு முயற்சி அனேகமாக இதுதான் முதல் தடவையாக இருக்கக்கூடும். ஆங்கிலத்திலேயே கூட ஒரே புத்தகமாக வந்ததில்லை. 19 புத்தகங்களையும் வாங்க ரூ.4000 வரை செலவு செய்ய வேண்டியிருக்கும்.

ஒரு சேல்ஸ்மேனின் லாவகத்தோடு இந்தப் பதிவினை எழுதி வருகிறேன். அனேகமாக இன்னேரம் இப்புத்தகத்தை வாங்கும் எண்ணம் உங்களுக்கு தோன்றியிருக்கலாம். சாரி ஜெண்டில்மேன். காமிக்ஸ் கலெக்டர்ஸ் ஸ்பெஷலான இந்தப் புத்தகம் கடைகளில் கிடைக்கவே கிடைக்காது.

வேறெப்படி வாங்குவது?

உடனடியாக ரூபாய் 230க்கு (புத்தகத்தின் விலை ரூ.200 + கூரியர் செலவு ரூ.30) மணி ஆர்டர் அல்லது "Prakash Publishers" என்ற பெயரில் காசோலை எடுத்து, Prakash Publishers, No 8/D-5, Chairman P.K.S.S.A Road, Amman Kovil Patti, Sivakasi, 626189 என்ற முகவரிக்கு அனுப்பலாம்.  04562 272649, 04562 320993 ஆகிய எண்களுக்கு (காலை 10.30 டூ மாலை 5.30) தொலைபேசியும் மேலதிக விவரங்களைப் பெறலாம்.

ஏற்கனவே 800 பிரதிகள் அட்வான்ஸ் புக்கிங் ஆகிவிட்டது. நிறைய பக்கங்கள் என்பதால் 'பைண்டிங்' செய்வது கொஞ்சம் சிரமம். எனவே 50, 50 புத்தகங்களாக தயார் செய்து முன்பதிவு செய்தவர்களுக்கு அனுப்பி வருகிறார்கள். முந்துவோருக்கு பிரதிகள் நிச்சயம் கிடைக்கும்.

ஜம்போ ஸ்பெஷலோடு லயன் காமிக்ஸாரின் தீபாவளி கொண்டாட்டம் முடிந்துவிடவில்லை. அடுத்தடுத்து அதிரடியாக சரக்குகளை இறக்க திட்டமிட்டிருக்கிறார்கள். அடுத்த மூன்று மாதங்களில் வெளிவர இருக்கும் புத்தகங்கள் : வெள்ளையாய் ஒரு வேதாளம் (சிக் பில்), சாத்தானின் தூதன் டாக்டர் செவன் (காரிகன்), காவல் கழுகு (டெக்ஸ் வில்லர்) ஆகியவை லயன் காமிக்ஸிலும், களிமண் மனிதர்கள் (இரும்புக் கை மாயாவி), கொலைகார கோமாளி (ஜானி நீரோ) ஆகியவை காமிக்ஸ் கிளாசிக்ஸ் பிராண்டிலும், விண்ணில் ஒரு குள்ளநரி (விங் கமாண்டர் ஜார்ஜ்), மரணத்தின் நிசப்தம் (ரிபோர்டர் ஜானி)  ஆகியவை முத்து காமிக்ஸ் பிராண்டிலும் வெளிவர இருக்கிறது. 75 ரூபாய் செலுத்தி மொத்தமாக இந்த 7 புத்தகங்களையும் கூட வாங்கிக் கொள்ளலாம்.

இந்த ஏழு புத்தகங்களுக்கு பிறகு தமிழ் காமிக்ஸுக்கு புத்துயிர் பாய்ச்சும் மிகப்பெரிய முயற்சி ஒன்று நடைபெறவிருக்கிறது. அது என்னவென்று ஜம்போ ஸ்பெஷலின் ஹாட்லைனில் ஆசிரியர் எஸ்.விஜயன் சொல்லியிருக்கிறார்.

ஹேப்பி தீபாவளி ஃபோக்ஸ்!

 காமிக்ஸ் குறித்த விரிவான, தொடர்ச்சியான தகவல்களுக்கு நண்பர் கிங்விஸ்வாவின் தமிழ் காமிக்ஸ் உலகம் வலைப்பூவை வாசிக்கலாம்!

 

Friday, October 22, 2010

சவால் சிறுகதை போட்டிக்கான என் விமர்சனங்கள் ‍‍பார்ட் 2

டைமண்ட் வாசனை : பலாபட்டறை சங்கர்
அல்டிமேட்டான கதை. முடிவை கடைசிவரை ஊகிக்கமுடியாமல் போனதே ஷங்கருக்கு எந்திர வெற்றி. ஆதியும் பரிசலும் கொடுத்த வாசகங்கள் அங்கங்கே பச்சக் என்று பொருந்துகிறது. பயபுள்ள பிச்சு உதறுது. நல்ல ஷேப்பில் வந்திருக்கும் கதை, குமுதம் ஆவி குங்குமம் தர கமர்ஷியல் கதைகளின் க்வாலிட்டியை கூட மிஞ்சுகிறது. பரிசை எப்படியாவது தட்டிடனும்னு எப்படியெல்லாம் ஓட்டல் ரூம் (இல்லை ஓட்டலே) போட்டு யோசிங்கறாங்கபா !!

என் மதிப்பெண் 7.5 / 10 : கலக்கிப்புட்ட ஷங்கர்.

ஆப்பரேஷன் ப்ளூ டைமண்ட் : கார்த்திகைப்பாண்டியன்.தொண்ணூறுகளின் மத்தியில் படித்த ராஜேஷ்குமார், ராஜேந்திரகுமார், சுபா,நாவல்களின் வாசனை மூக்கை துளைக்கிறது. கதையும் மின்னல் வேகத்தில் ஓடுகிறது. பெரிய மீனை சின்ன ஜாடியில் அடைத்ததுபோல ஒரு முழு நீள
நாவலுக்கான ஸ்கோப் உள்ள கதை. பாவம் சிறுகதையாக ருங்கிவிட்டது.
வித்யாசமாக எதுவும் யோசிக்கவில்லை கார்த்திகை பாண்டியன். எக்மோரில் கார் எடுத்து மதுரையில் யு.டர்ண் போடுவது நம்பக்கூடியதா ? அதே போல ஏர்போர்ட் இம்மிக்க்ரேஷன் செக்ஸை கடந்து எப்படி வந்தார், இரு லாஜிக் மீறல் என்று யோசித்தபோது கதையின் முடிவு கிட்டத்தட்ட கொஞ்சம் யோசித்தால்
ஊகிக்கமுடிவதாக இருப்பது மைனஸ். நீல வைர கடத்தலில் ஆரம்பித்து காமினியின் சிவந்த முக லவ்ஸில் முடியும் கதை. வொர்த் ரீடிங்.

என் மதிப்பெண் 6/10. வாழ்த்துக்கள் கார்த்திகைப்பாண்டியன்.

காமினியின் கண்கள் ! (சவால் சிறுகதை) : கவிதா கெஜானனன்

கொஞ்சம் இலக்கில்லாமல் பயணிக்கிறது. வர்ணனைகளுக்கு அதிக வார்த்தைகள் செலவிட்டமாதிரி தெரிகிறது. மும்பை, கோவா ரோடு, என்று புதிய இடங்கள். ஏசிபியை ஜொள்ளு பார்ட்டியாக காட்டியது போல தெரிகிறது. ஆனாலும் ஒருசில இடங்களில் டீட்டெயிலிங் மிஸ் ஆகிறது. சிறந்த ப்ரொபஷனில் இருக்கும் காமினி குற்றம் செய்வதற்கான மோட்டிவ் என்ன ? கதையின் முடிவு என்று எதுவும்
இல்லாமல் போகிறதே ? ஏசிபியின் துப்பாக்கியை தட்டிவிட்டு காமினி ஓட்டம் எடுப்பது ஓக்கே. அப்புறம் ஏசிபி வியாழன் கிரகத்துக்கா போயிருவார் என்று திடீர் என்று தோன்றியது. சில கதைகளை போல, கொடுக்கப்பட்ட வார்த்தைகள் வலிந்து திணித்துவிட்டதை போலிருக்கிறது. உரையாடல் கதைப்போற்றியில் வென்ற எழுத்தாளர் என்பதால் இன்னும் எதிர்ப்பார்ப்பு அதிகம் இருக்குங்க. ப்பீ கேர்புல்.

என்னுடைய மதிப்பெண் : 5/10. கீப் டூயிங் இட் !

மணிகண்டன் விஸ்வநாதன்

மூன்று டேக்லைனையும் கோர்த்து இது தான் கதை என்று காமெடி செய்துள்ளார் மணி. ட்விட்டரில் திவிரவாதியாக இருப்பதால் நறுக் சுருக் என்று வேண்டும் போலிருக்கிறது. போடா மடையா. உக்காரடா சோம்பேறி. என்று சர்தார்ஜி சொல்வது நியாபகம் வருகிறது. இந்த பரிசல் பயபுள்ள இதையும் சீரியஸா டுத்துக்கிட்டு இந்த கதையையும் போட்டியில சேர்த்துருக்கு பாருங்க.

என் மதிப்பெண் : <<ப்ளாங்க் வேல்யூ>>

காமினி என் காதலி - ஆசியா உமர்

அழகான ஓவியத்தின் ஓவியம் ஒன்று நம்மை கதைக்குள் வரவேற்கிறது. கதையின் தீம் நன்றாக இருக்கிறது. ஆனால் வர்ணணைகளிலோ, விளக்கங்களிலோ பெரிதாக அக்கறை எடுக்காமல் இருந்துவிட்டார். சவால் போட்டிக்கு கொடுக்கப்பட்ட தீம் வசனங்கள் கதையில் ஒட்டாமல் துருத்துகின்றது. பிட்டு பிட்டாக படத்தை
பார்த்தது போல (அதாவது இடைவெளி விட்டுங்க), கதை ஜெர்க் அடிக்கிறது. இருந்தாலும் நல்ல முயற்சி. ப்ரசண்ட்டேஷனில் கவனம் செலுத்தினால் இன்னும் சூப்பரான படைப்புகளை எதிர்பார்க்கலாம் ஆசியா உமரிடம் இருந்து
.
என்னுடைய மதிப்பெண் : 5/10 வாழ்த்துக்கள் ஆசியா உமர்.

கதைகளின் சுட்டிகளை பார்க்க‌ http://www.parisalkaaran.com/2010/10/1.html

Thursday, October 21, 2010

வாழ்த்துக்கள் ராஜன் & Sister.

ஜாக் அண்ட் ஜில் !


கல்யாணத்துக்கு வரமுடியாம போனதுக்கு சாரி.


வாழ்த்தி பின்னூட்டம் போடமுடியாம போனதுக்கு மன்னிச்சுக்க.


போன் போட்டு வாழ்த்தாம போனதுக்கு வருந்தறேன்.

அட இமெயில் கூட அனுப்பலைக்கு கோச்சுக்காத.


எங்கிட்டு இருந்தாலும் நல்லா இருங்கடே !!!


ஜாக் அண்ட் ஜில் ! இனி இல்லை போன் பில் !

Wednesday, October 20, 2010

சவால் சிறுகதைகள் ‍ : என் விமர்சனங்கள்

ஏற்கனவே உரையாடல் போட்டியின்போதே கதைகளுக்கு விமர்சனம் எழுதி அனுபவம் இருக்கு. அதனால் சவாலையும் படித்து எழுதுகிறேன். இது முழுக்க முழுக்க என்னுடைய பார்வையே. ஷங்கர் எடுக்கும் படத்துக்கு ஆனந்தவிகடன் விமர்சனம் எழுதுவதில்லையா ? அது போலத்தான். பப்ளிக் டொமைனில் இருக்கும் உங்கள் கதையை நான் படித்து ரசித்து, நல்லவைகளையும் அல்லவைகளையும் சொல்கிறேன்.யாரும் கோச்சுக்கவேண்டாம் ப்ளீஸ். படிக்க நிறைய கதைகள் இருக்கு. நேரமோ
குறைவா இருக்கு. ஸீ யூ.

பலாபட்டறை ஷங்கர்

போட்டிக்கு வந்துள்ள படைப்புகளின் பட்டியலில் முதல் கதையாக
பட்டியலிடப்பட்டிருக்கிறது. சில இடங்களின் புன்முறுவல் பூக்கவைத்தாலும் "கொசுவ அழிக்க மருந்து இல்ல, இதுல கொரங்க வெச்சி பிசைஞ்சிருக்கானுவ." ஓவர் ஆல் ஆக ஒரு குழப்பமே மிஞ்சுகிறது. இன்னும் கொஞ்சம் ஷார்ட் & ஸ்வீட் ஆக இருந்திருக்கலாமோ என்றும் தோன்றுகிறது. ரோபோ எதிர்காலத்தை கணிச்சு சொல்லும் என்று சொல்லப்படுவது அப்பட்டமான லாஜிக் மீறலாக தெரிகிறது.
அல்லது கன்வின்ஸிங் ஆக இல்லை. அதிகமான பஸ் வேர்ட் எல்லாம் ஆங்கிலத்தில் உபயோகப்படுத்தபடுவதால், ஜனரஞ்சக எழுத்தில் இருந்து கொஞ்சம் தள்ளியே நிற்கிறது பலாபட்டறையாரின் படைப்பு. கடைசியில் குழப்பமே மிஞ்சுகிறது. இன்னும் கொஞ்சம் சுருக்கமாக, எளிமையாக முயற்சி செய்திருக்கலாம்.

என்னுடைய ஸ்கோர் 5/10 ! நல்ல முயற்சி, வாழ்த்துக்கள் ஷங்கர்.

2. உனக்காக எல்லாம் உனக்காக........துவாரகன்.

எளிமையாக ஆரம்பிக்கும் கதையில், பேஸ்புக், ப்ரொபைல் என்று ஆங்கில
வார்த்தைகளை அப்படியே பயன்படுத்துவதை தவிர்த்திருக்கலாம்.. ஹைவே என்பதை பெருந்தெரு என்று அழகாக எழுதியிருப்பவருக்கு இது ஒன்றும் பெரிதல்ல. கதையை மூன்றாமவரிடம் இருந்து ஆரம்பிப்பதாக இருக்கிறது. பிறகு பேசினோம், பேசினேன் என்று சுயமாக சொல்வது போல இருக்கிறது. ஏதாவது ஒன்றை மட்டும் தேர்ந்தெடுத்திருக்கலாம். நைட்டு 12 மணிக்கு நீ ஏண்டா சுடுகாட்டுக்கு போனே என்ற கதையாக டேட்டிங் செய்யப்போகும் பெண்ணின் மேல் எப்படி ஆசிட் விழுந்தது ? இது ஒரு லாஜிக் மீறல். போட்டியில் கொடுக்கப்பட்டிருந்த வரிகளை கதையில் திணிக்க முயன்று, அது தோல்வியில் முடிந்திருக்கிறது. அறிவியல் கதையும் இல்லாமல், காதல் கதையும் இல்லாமல் மொக்கையாக
முடிந்துபோனது.

என்னுடைய ஸ்கோர் 2/10. மீண்டும் முயலுங்கள், நிறைய வாசியுங்கள்.
வாழ்த்துக்கள் துவாரகன்.

3. விபூதி வாசனை - சவால் சிறுகதை ‍ ‍விதூஷ்.

மர்மதேசம் டைப்பில் விர்ரடிக்கும் கதை. லைட்டாக ஆரம்பித்து ராக்கெட்
வேகத்தில் பயணிக்கிறது. இடையிடையில் வரும் முருகன் பாடல்ஸ், வேல், வசனம்ஸ் எல்லாம் ஜில்லிட வைக்கிறது. கடைசியில் முடிவு புரியாமல் இரண்டாவது முறை படித்தேன். ஓரளவு புரிந்தது. எனக்கென்னவோ இந்த ஆதியும் பரிசலும், வெறும் தலைப்பை அல்லது தீமை மட்டும் கொடுத்துவிட்டு வார்த்தைகள், வசனங்களை முடிவு செய்யும் வேலையை எழுத்தாளர்களிடமே விட்டுவிட்டிருக்கலாமோ என்று தோன்றுகிறது. காரணம், விதூஷ் கதையில் ஆட் மேன் அவுட் ஆக தெரிவது அந்த வசனங்களே. அவை இல்லாமலேயே விதூஷே சிறப்பான
வார்த்தைகளை கோர்க்கும் சுகந்திரத்தை இழந்துவிட்டாரோ என்று
எண்ணத்தோன்றுகிறது.

என்னுடைய ஸ்கோர் 6.5 / 10. வெல் டன் விதூஷ்.

டைமண்ட் - முகிலன்

மொத்தத்தில் தெளிவான சரளமான நடை. இதுவரை படித்த கதைகளில் கொடுக்கப்பட்ட டேக் லைன்ஸ் கிட்டத்தட்ட பொருந்தி வருவது இந்த கதையில்தான். எஸ்பியை கொஞ்சம் மரியாதையாக விளித்திருந்தால் அந்த கேரக்டரின் அழுத்தம் கூடியிருக்கும். குலோப்ஜாமூன் டெக்னிக் புதுசாயிருக்கு. கொஞ்சம் கொஞ்சம் லாஜிக் மீறல், கதையின் முடிவில் பெரிய லாஜிக் மீறல். அதாவது போலீஸ் கடத்தல்காரர்களின் அதே என்க்ரிப்ஷன் டெக்னிக்கை உபயோகப்படுத்தி டாக்டரின் இமெயில் ஐடியை பிடித்து சிலமணி நேரத்தில் கண்டுபிடிப்பது கன்வின்ஸிங் ஆக
இல்லை. பரபர நடைக்காக மதிப்பெண்களை அள்ளுகிறது. போட்டிக்கான கதையில் தேவையற்ற டிஸ்கிகளை தவிர்த்திருக்கலாம்.

என்னுடைய மதிப்பெண் 6/10. வாழ்த்துக்கள்.

தெய்வம் ‍ ‍: பலாபட்டறை ஷங்கர்

என்ன ஏது என்று புரியாமல் கடைசிவரை தவிக்கவிட்டதில் பலாபட்டறையாருக்கு வெற்றி. கடைசி ட்விஸ்ட் அருமை. மரம் வெட்டி போடுவது போன்ற சில விஷயங்கள் ஏதோ ஜாதிக்கலவரத்துக்காகத்தான் என்பது போலவும், ஒரு குறிப்பிட்ட ஜாதியார் செய்த போராட்டத்தினை ரீவைண்ட் செய்வது போலவும் இருப்பதை தவிர்த்திருக்கலாம். அருமையாக கதையில் அது ஒரு கரும்புள்ளியாக இரண்டு
இடத்தில் இருக்கிறது. முதல்வர் திரைப்படம் பார்த்துக்கொண்டிருப்பதை
இன்னும் கொஞ்சம் எளிமையாக புரியும்படி சொல்லியிருக்கலாம். கடைசி
ட்விஸ்டுக்காக அல்லது ரூம் போட்டு யோசித்தமைக்காக மதிப்பெண்களை
அள்ளுகிறது.

என்னுடைய மதிப்பெண் 6/10 , வாழ்த்துக்கள் ஷங்கர்.

tes5t

--
Thanks and Regards,
Ravindran.A
78294 77007