Posts

Showing posts from August, 2010

வாழ்க்கை வட்டம்டா !!!

ரஜினிபட டயலாக் மாதிரி இருந்தாலும் இது தான் உண்மை. மேல இருக்க வீடியோவ பார்த்தீங்களா ? இந்த பத்துல சிம்பாக்கிட்ட (அதான் குட்டி லயன்) பெரிய சிங்கம் சொல்லும். நாம செத்தா புல்லாவறோம். புல்ல திங்கற மான நாம திங்கறோம். அப்படீங்கும்.பதிவுலகுக்கு கொஞ்சம் ப்ரேக் விட்டாலும் நம்ம கடமைய செய்யறதுக்கு வந்திருக்கேன். ஒவ்வொன்னா பார்ப்போமா ? வால்ஸ். லேட்டான பிறந்தநாள் வாழ்த்துக்கள். ஜோதிஜி. திருப்பூர் சாயப்பட்டறைகள் குறித்த அருமையான பதிவு வினவு தளத்தில். ஹேட்ஸ் ஆப். இணையத்தில் 'புரச்சி' செய்வதாக ட்விட்டரு, பஸ்ஸு, ரயிலு என்று குதித்துக்கொண்டு, காமெடி செய்துகொண்டு இருப்பதை பார்த்தேன். சிப்பு வந்துது சிப்பு. ஒரு பக்கம் பார்ப்பணீயத்தை கடுமையாக எதிப்பது. ஆனால் அதே பார்ப்பணீயத்துடன் நேரம் வரும்போதெல்லாம் கூட்டணி சேர்ந்துகொள்வது. நல்ல ஸ்டேட்டர்ஜி. பிழைப்புவாதம் என்றும் சொல்லலாம்.

ஒரு படத்தில் குட்டி சுவத்தில் உட்கார்ந்திருக்கும் இளைஞர்கள் 'பூமி மாதா சிரிக்கப்போறா, எல்லாரும் உள்ள போவப்போறீங்க' என்று சொல்லும் காமெடி பீஸை தூண்டி விட்டுவிட்டு, விழிப்பார்கள். ஒரு தகரத்தட்டை பார்த்தால் அந்த நியாபகம…

புதிய அச்சிதழுக்கு : பல்வகை பணி வாய்ப்புகள் - ஜி கவுதம்

Image
இதனால் சகலமானவர்களுக்கும் அறிவிப்பது என்னவென்றால்..புதிதாக வெளிவர இருக்கும் தமிழ் அச்சு மற்றும் வீடியோ பத்திரிகைகளில் பணியாற்ற  திறமையும், தகுதியும் உள்ளவர்களை வரவேற்கிறேன்!
வருத்தப்பட்டு பணி சுமக்கும் பழைய பத்திரிகையாளர்களும் சரி,  கற்றுக்கொண்டு சாதிக்க நினைக்கும் புதிய பத்திரிகையாளர்களும் சரி,  பத்திரிகைத்துறையைத் தேர்ந்தெடுக்க நினைக்கும்ஆர்வமுள்ள புதியவர்களும் சரி..  தயங்காமல் உங்கள் பயோடேட்டாவை (புகைப்படத்துடன்) அனுப்பி வையுங்கள்.  நீங்கள் கொடுக்கும் விவரங்கள் ரகசியமாக வைத்துக்கொள்ளபப்டும் என்ற உத்தரவாதம் தருகிறேன்.
புதிய குழுமம்..  புத்தம்புது பத்திரிகைகள்..  புறப்படப்போகும் புதிய கூட்டணிக்கு நம்பிக்’கை’ கொடுங்கள்! 
தேவை: (முழுநேர - பகுதி நேர - ஃப்ரீலான்ஸ் பணிக்கு, உலகின் எந்த மூலையில் இருந்தும் பணியாற்றலாம்) செய்தியாளர்கள் - Reporters, உதவி ஆசிரியர்கள் - Sub Editors, புகைப்படக்காரர்கள் - Photographers, ஒளிப்பதிவாளர்கள் - Videographers, வெப் டிசைனர்ஸ் - Web Designers, வெப் ப்ரோகிராமர்ஸ் - Web Progarammers, கிராபிக்ஸ் டிசைனர்ஸ் - Graphics Designers, வீடியோ எடிட்டர்ஸ் - Video Editors, ஒலிப்பதிவாளர்கள்…

கிறிஸ்தவ மிஷநரிகளின் நில ஆக்ரமிப்புகள்

Image
இதுபற்றி கடந்த சில வாரங்களாகவே சிந்தித்துகொண்டிருந்தேன். இரண்டு செய்திகள் இது சம்பந்தமாக இன்றைக்கு கண்ணில் பட்டது. கோவி கண்ணன் பதிவில் வேளாங்கண்ணி தேவாலயத்தின் நில ஆக்ரமிப்பு பற்றியும், தமிழ் ஹிந்துவில் வெளிவந்த நாகை மாரியம்மன் கோவில் போராட்டம் பற்றியும் அறிந்தேன்.

மேட்டருக்கு போறதுக்கு முன்னால ஒரு சின்ன சம்பவம் பாருங்க.

எங்கக்கா எங்க வீட்ல ரொட்டி சுட்டாங்க. பக்கத்து தெருவில் இருந்து ஒரு சொர்ணாக்கா வந்து, ரொட்டிய புடுங்கிட்டா. எங்கக்கா அவகிட்ட போராடி அடிபட்டு உதைபட்டு அவளை வீட்டை விட்டு வெளியில அனுப்பினாங்க. அதில பாருங்க. அவ வெளியில போகும்போது, அவ கையோட கொண்டுவந்த ஒரு பெருச்சாளிய வீட்டுக்குள்ள விட்டுட்டு போயிட்டா.

எங்கக்கா வீடு வெறும் டபுள் பெட்ரூம், அதில் ஒரு ரூம்ல அந்த பெருச்சாளி உக்காந்திருச்சு.பெருச்சாளிக்கிட்ட போயி ரெண்டு நாளைக்கப்புறம் கெட் அவுட் அப்படீன்னா, நான் காலங்காலமா இந்த ரூம்ல இருக்கேன், இதுல உனக்கென்ன வேலைன்னு எங்கக்காவை கெட் அவுட்டுங்குது.

எங்கக்கா வீட்டுக்காரர் ஒரு சோம்பேறி. எங்கக்கா பல முறை கம்ப்ளைண்டு செய்தும், தடியை எடுத்து பெருச்சாளிய அடிக்கமாட்டேங்குறார். பெருச்…

தமிழ்நாட்டில் ஒரு செஞ்சோலை !!!

Image
பெரியாருடன் - பெரியார் சொல்லிய கொள்கைகளுடன் வாழ்ந்துமுடித்த தோழர்களுக்கு ஒரு முதியோர் இல்லம் திண்டுக்கல்லில் அமைகிறது. அதன் படம் தான் மேலே. இது பற்றிய ஒரு சிறிய கலந்துரையாடல் கூட்டமும் ஆகஸ்டு 14 ஆம் தேதி (இந்த தேதியில் என்ன முக்கியத்துவம் ? யோசியுங்களேன்) நடக்கிறது. முடிந்தவர்கள் கலந்துகொள்ளவும். (மின்னஞ்சல் மூலம் வருகையை தெரியப்படுத்துங்கள்).


கலந்துரையாடல் கூட்டம் 14.08.10 மாலை 5 முதல் 15.08.10 பகல் 1 வரை..
கருந்திணை 1 / 810 முத்தமிழ் நகர் அடியனூத்து-அஞ்சல், திண்டுக்கல் - 624 003 - karunthinai@gmail.com

உமாசங்கர் ஐ.ஏ.எஸ்

Image