தேடுங்க !

Monday, June 28, 2010

டிவிஆர் அவர்களுக்கு !!

Monday, June 21, 2010

FETNA வும் முட்டுச்சந்து முருகேசனும் !!

முருகேசன் மப்படித்துவிட்டு, அவனது வழக்கமான இடமான முட்டுச்சந்து (தண்ணி பைப் பக்கத்துலங்க) அருகில் நின்று இப்படி கவிதையாக கூவிக்கொண்டிருந்தான்.

ஏ அமெரிக்க ஒபாமாவே
உனக்கு தில் இருந்தால்
நெஞ்சில் மஞ்சா சோறு இருந்தால்
ஆப்கானிஸ்தானில் மோதாமல்
இங்கே அமிஞ்சிக்கரைக்கு வந்து பார் !
ங்கொய்யா தட்னா தாராந்துடுவ.
யார்க்கிட்ட மோதுற ?
பின்லேடனையே பீஸ் பீஸாக்கிடுவேன்.
வாடா வாடா வடா டேய் !!!

ரொம்ப எதுகை மோனையோடு இருந்ததால அப்படியே கொஞ்ச நேரம் அதையும் ரசிக்கவேண்டியதா போச்சு. இருந்தாலும் முருகேசன் இதை அவுந்து விழுந்த வேட்டியை கட்டிக்கொண்டு சொல்லியிருந்திருக்கலாம். இட்ஸ் ஓக்கே.

சரி நாம் வேற ஒரு விஷயம் பார்ப்போம். ஏதோ பெட்னாவாம் வட அமெரிக்க தமிழ் சங்கமாம். அவங்க அங்கிட்டு இருக்க தமிழர்களை அழைச்சு விழா எடுக்கறாங்களாம். இதை ஒவ்வொரு வருசமும் நடத்தறாங்களாம். தமிழ்நாட்டில் இருந்து கவிஞர்கள், கலைஞர்கள், இலக்கியவாதிகள், இசைமேதைகள் அப்படீன்னு அழைச்சு, அவங்களை கவுரவிக்கறாங்களாம்.

இது ஒரு தமிழ்விழாவா மட்டும் செய்யாம, வட அமரிக்காவில் பரந்து வாழும் தமிழர்கள் எல்லோரும் குடும்பமா சந்தித்தல், பழகுதல், தேவை இருக்கறவங்களுக்கு உதவுதல் என்று செய்யறாங்களாம்.

அமெரிக்க மேடைகளில் தமிழும், இலக்கியமும், நாடகமும், இசையும், கவிதையும், அங்கேயே வளர்ர குழந்தைகளுக்கு தமிழ், தமிழகம், தமிழ் கலை, இலக்கியம் ஆகியவற்றில் அறிமுகம் தருவதோட, பெரியவங்களும் அவர்களின் இயந்திர வாழ்க்கையில் கொஞ்சம் ரெஸ்ட், வெளியில் நன்பர்களை பார்ப்பது போன்றவைக்கு இதனை உபயோகப்படுத்துதல், தமிழ் சம்பந்தமான இனிஷியேட்டிவ்ஸ் ஆகியவை எடுக்கிறாங்களாம்.

சரி இதுல உனக்கு என்ன பிரச்சினை என்று கேட்கிறீங்களா ? இதில் ஈடுபாட்டோடு செயல்படும் தோழர் பழமைபேசி மிகுந்த மன வருத்தத்தில் இருக்காராம். ஈழத்தில் இவ்வளவு அனர்த்தங்கள் நடந்தபிறகு தமிழகத்தில் செம்மொழி மாநாடு தேவை இல்லை என்று கூவும் அமெரிக்க தமிழர்களுக்கு பெட்னாவின் தமிழ்விழா தேவையா, அதில் தமிழ்நாட்டில் கலை துறையில் இருக்கும் லச்சுமிராய்க்கும் பிரியாமணிக்கும் என்ன வேலை ? ஏன் வடிவுக்கரசியை கூப்பிடாமல் பிரியாமணியை கூப்பிடுகிறீர்கள் ?இப்படியாக இந்த விழாவையும், அதன் நோக்கங்களையும், அதில் கலந்துகொள்பவர்களை பற்றியும் கேள்விகளை அவரது வலைப்பதிவில் சந்திக்கிறார். அவரும் எவ்வளவு பொறுமையாக அமைதியாக விளக்கங்கள் முன் வைத்தாலும் (அது தேவையே இல்லை என்ற நிலையிலுங்கூட) அதனை ஏற்பாரில்லை, மேலும் அனானிமஸாகவும், ஐடியுடனும் மேலும் தேவையற்ற, பயன் அற்ற, கேள்விகளையே வைக்கிறார்கள் என்று சொன்னார் பழமைபேசி.

என்னுடைய புரிதல் படி சில விளக்கங்களை நானும் தருகிறேன்.

1. தமிழ் செம்மொழி மாநாடு கூடாது என்று சொன்னவர்கள் பெட்னா விழா நடத்துகிறார்கள்.

இவ்வாறு டார்கெட் செய்யப்படுபவர்கள் ஒரு சில அமெரிகக பதிவர்கள். அவர்களுக்கும் இந்த பெட்னாவுக்கும் என்ன சம்பந்தம் என்று இதனை கேட்பவர்கள் விளக்கலாம். நான் புரிந்துகொள்வதுக்கு.

2. லட்சுமிராயிக்கும் பிரியாமணிக்கும் பெட்னாவில் என்ன வேலை ? ஏன் கஸ்தூரியையும் வடிவுக்கரசியையும் அழைக்கவில்லை.

தமிழகத்தில் கலைத்துறையில் இருந்து அவர்கள் அழைப்பின்பேரில் செல்கிறார்கள். அவர்கள் வீட்டு விழாவில், அவர்கள் ஊர்மிளா மடோந்கரையோ, இல்லை அமீஷா பட்டேலையோ அழைத்தாலும் நான் கேள்விகேட்கமாட்டேன். இப்படி அழைக்கப்படுபவர்கள் தமிழ்நாட்டில் தானே
கலைத்துறையில் இருக்கிறார்கள் ? மிக முட்டாள்தனமான கேள்வி இது.

கஸ்தூரி பீல்ட் அவுட் ஆகி ஒரு மாமாங்கம் ஆன நிலையில் இன்னும் இவர்கள் கஸ்தூரியிலேயே குந்தியிருப்பவர்கள். ஜிமெயில் சக்க போடு போடும் நிலையில் யாஹூவில் குந்தியிருப்பவர்கள்.

விட்டுத்தள்ளுங்க !!

பழமைபேசிக்கு.

இது போன்ற கேள்விகளை புறந்தள்ளுங்கள். இது உங்கள் நேரத்தை வீணடிக்கும் ஒன்று. ஆக்கப்பூர்வமான பணிகளில் தொடர்ந்து ஈடுபடுங்கள்.

சில பேர், என்ன நடந்தாலும் ஒரு சலிப்போடு அணுகுவார்கள். தேவை இல்லாமல் பேசி கெடுப்பார்கள்.

என்னத்த கண்ணைய்யாவுக்கு ஏன் அந்த பெயர் தெரியும்தானே ? அதே போல வாய்ஸில் கீழே உள்ளதை படியுங்கள்.

என்னத்த மாநாடு போட்டு என்னத்த பேசி
என்னத்த லஷ்மிராய கூட்டு என்னத்த பிரியாமணிய கூட்டு
என்னத்த நடகம்போட்டு என்னத்த நடிச்சு

Monday, June 14, 2010

பேயோன் 1000 !!! எழுதுவது அமரர் சுஜாதாவா ?ட்விட்டரில் அனைவரும் மண்டையை பிய்த்துக்கொள்வது ஒரு கேள்விக்கு. அது பேயோன் என்பவர் யார் என்பதே !! அவரது 1000 ட்விட் செய்திகள் புத்தகமாக வந்துவிட்டது. இன்னும் ஆள் யார் என்று தெரியக்காணோம்.

பத்தி எழுத்து வாட்ச்மேனுக்கு புரியாவிட்டால் தான் பத்திரிக்கைக்கு அனுப்புவேன் என்பதில் இருந்து பல இடங்களில் என்னைப்பொறுத்தவரை சுஜாதா டச். டெக்னாலஜியை முதலில் அறிமுகப்படுத்தும் சுஜாதா ஒருவேளை தேசிகன் (இப்போது சுஜாதா தேசிகன்) உதவியோடு நரகத்தில் இருந்து ட்வீட்டுகிறாரோ என்று சந்தேகிக்கவைக்கிறது ?

ட்விட்களை மொத்தமாக எழுதி இந்தாப்பா, நான் போனபிறகு ஒவ்வொன்னா போடு, ஆயிரம் வந்தா புத்தகமா போடு என்று கொடுத்துவிட்டாரா ? விளக்கம் ப்ளீஸ்..

பேயோன் பற்றி பரிசல்காரன் எழுதிய பதிவை வரிக்கு வரி விடாமல் காப்பி அடிக்கிறேன். இதன் மூலம் நான் எழுதவேண்டிய தேவை இல்லை. பரிசல்காரன் தானே ? காப்பி ரைட் செலவும் இல்லை. (ஊருக்கு போனால் ஒரு காப்பி வாங்கிக்கொடுத்தால் போச்சு).

என்னை ட்விட்டரில் senthazalravi என்ற பெயரில் தொடர்ந்துகொள்ளுங்கள். இனிம் பதிவு.


பேயோன் 1000

ல வருடங்களுக்கு முன் எல்லாரும் திருட்டு விசிடியை எதிர்த்தபோது கமலஹாசன் ஒன்று சொன்னார். ‘அறிவியலின் வளர்ச்சிக்கு ஈடு கொடுத்து உங்கள் கலைகளை கொண்டு செல்லாவிட்டால் உங்களுக்குத்தான் கஷ்டம்’ என்று. இன்று வரை திருட்டு விசிடியை ஒழிக்க முடியவில்லை. அது திருட்டு டிவிடியாக வளர்ந்துதான் இருக்கிறது.

எழுத்திலக்கியம் கணினிக்குள் வந்து வலையுலகம் வாயிலாக பரந்து விரிந்து கொண்டிருக்க வந்தது ட்விட்டர். எனக்கு ட்விட்டர் என்றால் என்னவென்றே தெரியாவிட்டாலும் ஓசியில் கிடைக்கும் எதையும் விடாத நான் அதையும் விடாமல் ஒரு கணக்கைத் தொடங்கினேன். கொஞ்ச நாளைக்கு ஒன்றுமே புரியவில்லை. (இப்போது ஒன்றாவது புரிந்திருக்கிறது) தினமும் என்னை ஃபாலோ செய்வதாக பலரும் வர கொஞ்சம் கொஞ்சமாய் எழுத ஆரம்பித்தேன்.

ஒரு விஷயம் - அதில் கொஞ்சம் கொஞ்சமாய் அல்ல, கொஞ்சமேதான் எழுத முடியும். 140 எழுத்துகளுக்குத்தான் அனுமதி. இப்படியாகப்பட்ட கால கட்டத்தில் தமிழ் ட்வீப்பிள்ஸையெல்லாம் கவர்ந்தார் ஒருவர்.

ரைட்டர் பேயோன்.

தன்னை எழுத்தாளர் என்று தானே விளித்துக் கொள்கிறார். வசனகர்த்தா, முன்னணி எழுத்தாளர் என்று சொல்கிறார். யாரென்று யாருக்குமே தெரியவில்லை. இன்று வரை. ஆனால் அவர் நிச்சயமாக எழுத்தாளுமை கொண்ட எழுத்தாளர்தான் என்பது அவரது ட்வீட்களிலிருந்து புலனாகிறது.

‘வித்தியாசமாக பண்ண வேண்டும் என லிங்குசாமி சொல்கிறார். ஹிட்ச்சாக் டிவிடி தொகுப்பை வாங்கிச் சென்ற நண்பரோ இன்னமும் திரும்பத் தரவில்லை. தவிக்கிறேன்’ - இதுதான் இவரை நான் கண்ட முதல் ட்விட் என்று நினைக்கிறேன். தன்னைத் தானே புகழ்ந்து கொள்வதும், சமயத்தில் எள்ளலாய் எழுதிக் கொள்வதும், உலக சினிமாவை 140 வார்த்தைகளில் விமர்சிப்பதும், ஜப்பானிய மொழிபெயர்ப்புக் கவிதை எழுதுவதும் என்று புகுந்து விளையாடிக் கொண்டிருக்கிறார் ரைட்டர் பேயோன்.

இவரது ட்விட்கள் ஆயிரம் சேர்ந்ததும் புத்தகமாக வரவிருக்கிறது என்று செய்தி பரவத் தொடங்கியதுமே எனக்கு ஆர்வம் அதிகமானது. இரண்டு நாட்கள் முன் சென்னை சென்றிருந்த போது கடை கடையாய் விசாரித்து, ஒரு வழியாய் வாங்கிவிட்டேன்.

புத்தகத்தின் வடிவம், உள்ளே உள்ள எழுத்துரு, அட்டைப்படம் எல்லாமே கவர்கிறது. இதிலும் பேயோன் யாரென்று சொல்லாமல் பின்னட்டையில் அவருக்கு அறிமுகம் தேவையில்லை என்றே குறிப்பிடப்பட்டிருக்கிறது. (ஆனால் ‘இரண்டாயிரம் ஆண்டு கால தமிழிலக்கிய வரலாற்றில் ட்விட்டர் பதிவுகள் நூல் வடிவம் பெறுவது இதுவே முதல் முறை’ என்பதெல்லாம் ஓவர். ட்விட்டர் வந்து இரண்டாயிரம் ஆண்டா ஆகிறது? ஒருவேளை இதையும் பகடியாக பேயோனே எழுதிக் கொடுத்திருக்கலாம்)

புத்தகத்துக் கொடுத்த காசு அந்த முன்னுரைக்கே சரியாகப் போய்விட்டது. வாய்ப்பே இல்லை. முன்னுரைக்குப் பதிலாக, முன்னுரையில் ‘முன்னுரைக்குப் பதிலாக’ என்று ‘என்னைப் போல் பத்தி எழுதுவது எப்படி? என்ற தலைப்பில் புகுந்து விளையாடியிருக்கிறார் மனுஷன்.

‘முதலில் ஏதோ ஆழமாக சொல்ல முயல்வது போன்ற வரிகளுடன் தொடங்க வேண்டும். ஆனால் ஆழமாக இருந்துவிடக் கூடாது. அது பத்தி எழுத்துக்கு எதிரானது. அந்த வரிகளில் இல்லாத கருத்தை விளக்கிச் சொல்ல சொந்த அனுபவத்திலிருந்து சப்பையான ஒரு சம்பவத்தை நினைவு கூற வேண்டும். அது சமீபத்தில் நடந்ததாக இருப்பது நல்லது. சம்பவத்தை கூறி முடித்தபின் மீண்டும் ஏதோ ஆழமாக சொல்ல முயல்வது போன்ற வரிகளில் முடிக்க வேண்டும். உதாரணமாக..’ என்று ஆரம்பித்து சிக்ஸராக அடித்துத் தள்ளியிருக்கிறார்.

ட்வீட்கள்?

பல ஆகா அபாரம்களும், சில ஏமாற்றங்களும்.

49 ட்வீட்கள் முடிந்ததும் ஐம்பதாவதாக ஒரு ட்வீட். ‘எனது ட்விட்டரை தொடங்கியபின் 49 ட்வீட்களை எழுதிவிட்டேன். இன்றிரவுக்குள் 50 ட்வீட்களை எட்டிவிடத் திட்டமிட்டிருக்கிறேன்’ என்பதையே 50வது ட்வீட்டாய் தருகிறார். உத்தி ரசிக்க வைக்கிறது. ஆனால் அதையே நூறாவதுக்கும், இன்னோரிரு இடங்களிலும் தருவது அயர்ச்சியளிப்பதாய் இருக்கிறது. போலவே சுவாரஸ்யமற்ற காலை வணக்கங்களை தவிர்த்திருக்கலாம். இரவு வணக்கங்களை கவிதை கலந்து தருவதால் ரசிக்க வைக்கிறது.

இரண்டொரு ட்வீட்கள் மறுபடி அச்சாகியிருக்கிறது. அவரே ஒரு ட்வீட்டில் ‘வெளியிடுவதற்கு முன் முகமன்கள், context இல்லா மறுமொழிகள், நன்றிகளை நீக்கினால் மின்னூல் முழுமையாக இருக்கும்’ என்றிருக்கிறார். ஆனால் பதிப்பாகும்போது அதைச் செய்யாமல் விட்டு விட்டார்கள்.

இதையெல்லாம் தாண்டியும் சில ட்வீட்கள் குபீர் சிரிப்பையும் சில ட்வீட்கள் !ஐயும் வரவைக்கிறது.

‘பொதுவாக என் பத்திகளை என் வீட்டு வாட்ச்மேனிடம் கொடுத்து படிக்கச் சொல்வேன். அவருக்குப் புரியவில்லை என்றால்தான் பிரசுரத்திற்கு அனுப்புவேன்’

‘ஜப்பானியப் பெண்கள் எல்லோரும் ஒரே மாதிரி இருக்கிறார்கள். நாயகன் நாயகியுடன் உடலுறவு கொள்கிறானா அவளது அம்மாவுடனா எனத் தெரியாமல் எழுதுவது சிரமம்’

‘இயக்குனர் பியரி பலர்டியு இறந்துவிட்டார். பாவம் யார் பெற்ற பிள்ளையோ. அவரைப் பற்றி அறிந்தபின் 2002லேயே அவர் படங்களை பார்த்ததுபோல் எழுதவேண்டும்’

‘சென்னையில் அன்னா அக்மதோவா, அன்னா கரீனனா, அன்னா கிரிகோரிவ்னா (கிரிகோர்வினா) எல்லோருக்குமாக சேர்த்து ஒரு அன்னா அறிவாலயம் எழுப்பப்பட வேண்டும்

‘நேற்றிரவு தூங்கப் போனபோது நல்ல இருட்டு. காலை எழுந்து பார்த்தால் நல்ல வெளிச்சம். இடைப்பட்ட நேரத்தில் ஏதோ மாற்றம் ஏற்பட்டிருக்கிறது’

‘1. ஆஸ்கார் ரவிச்சந்திரன் கதை சொல்ல அழைத்திருந்தார். நான் கதை சொல்ல துவங்கியதும் தூங்கிவிட்டார். 2. அவரது மேஜையில் கிடந்த ப்ரிஸ்கிரிப்ஷனில் என் பெயரைப் பார்த்ததும்தான் எனக்கு விஷயமே புரிந்தது’

‘படிப்பது என்றால் மற்றவர்கள் எழுதியதை படித்தல். வாசிப்பது என்றால் எனது படைப்புகளை படித்தல்’

‘ஜெயமோகனுடன் பேசிக் கொண்டிருந்தபோது ஒன்று புரிந்தது. தஸ் புஸ் என்று பேசினால் ஆங்கிலம். தஸ்ய புஸ்ய என்று பேசினால் சமஸ்கிருதம்’

‘தன்னடக்கத்தில் எனக்கு நிகர் நானேதான்’

‘எனது புத்தகம் ஒன்றை ஒரு இந்தி பேராசிரியரிடம் மொழிபெயர்க்கக் கொடுத்தேன். ‘பஹூத் போர் ஹே’ என்றார். போர்ஹேயுடன் ஒப்பிடுகிறார்’


‘போலான்ஸ்கியை சிறையில் தள்ளிவிட்டார்கள். எப்பேர்ப்பட்ட கலைஞன் அவர். ஒரு கலைஞன் குற்றம் செய்தால் குற்றமாகுமா? குற்றவுணர்வு தரும் தண்டனை போதாதா?’

இவை ஒரு சில.

யார் இந்த பேயோன் என்று தெரியாவிட்டாலும் எஸ்.ராவாக இருக்கும் என்பது என் அனுமானம். அதை உறுதிப்படுத்துவதாக பல தகவல்கள். பெண்களைக் குறிப்பிடும்போதெல்லாம் துப்பட்டா பற்றி எழுதுகிறார். விகடனில் எழுதுகிறேன் என்கிறார். என் தொடர் ‘இன்னும் பரவும்’ என முடிக்கிறேன் என்கிறார். (விகடனில் வரும் எஸ்.ரா-வின் சிறிது வெளிச்சம் அப்படித்தான் வாரா வாரம் முடிகிறது) அலைதலே தேசாந்திரிக்கு வித்திட்டது என்கிறார்.

யுவகிருஷ்ணாவோ, எஸ் ரா என்று தன்னை எல்லாரும் நினைக்க வேண்டும் என்பதற்காகவே அப்படி எழுதுகிறார் என்கிறார். நமக்கு உள்ள ஹீரோவைக் கொண்டாடும் மனப்பான்மை, அவராக நான்தான் அது என்றாலும் ஒத்துக் கொள்ள முடியாமல் பேயோன் யாரென்று தெரியாமல் இருப்பதன் ரசிப்பில் மூழ்கி அதிலிருந்து வெளிவர விரும்பாமல் தடுக்கிறது. அதை அவர் புரிந்து கொண்டு புகுந்து விளையாடுகிறார் என்கிறேன் நான்.

பேயோன் எஸ்.ரா. இல்லையென்றால் நிச்சயமாக அது பா.ரா-தான் என்பது என் அனுமானம். ஏனென்றால் பேயோன் பா.ரா இல்லை என்று இரண்டு பேர்தான் சொல்கிறார்கள். 1) பா.ரா. 2) யுவகிருஷ்ணா.

தமிழிலக்கிய வரலாற்றில் முதல் ட்விட் தொகுப்பு என்ற பெருமை பெற்ற இந்தப் புத்தகத்தில் என் பெயரும் மூன்று இடங்களில் இடம் பெற்றிருப்பதால் இந்த விமர்சனம் அவசியமாகிறது. போலவே நீங்கள் வாங்க வேண்டும் என்பதும்.

பேயோனைட்விட்டரில் பின் தொடர:- இங்கே க்ளிக்கவும்.

என்னை ட்விட்டரில் பின் தொடர இங்கே க்ளிக்கவும். (நெல்லுக்கிழைத்த நீர்....)

பேயோன் 1000
ட்விட்டர் நுண்பதிவுகளின் தொகுப்பு
விலை: ரூ.60
ஆழி பதிப்பகம்
12, முதல் பிரதான சாலை,
யுனைடட் இந்தியா காலனி
கோடம்பாக்கம், சென்னை - 24
044-237202939

.

ஆன்லைனில் வாங்க:- இங்கே க்ளிக்கவும்.

Friday, June 04, 2010

என் பெயரை தாங்கி வரும் ஆபாச பின்னூட்டங்கள் குறித்து
இன்று காலையில் துவங்கி பல பதிவுகளிலும் அனானிமஸ் பின்னூட்டமாக ஒரு ஆபாத தளத்தின் சுட்டியுடன் ஒரு பின்னூட்டம் பேஸ்ட் செய்யப்படுகிறது.

மஜா மல்லிகாத்தனமான சுட்டி ஒன்றுடன், என்னுடைய பெயரை எழுதி..

நான் பல ஆண்டுகளால இணையத்தில் செந்தழல் ரவி என்ற பெயரில் மொக்கை போட்டுவருவதை தவிர நான் ஒன்றும் அவ்வளவு பெரிய ஆள் கிடையாது.

ஒரு கருத்து சொல்வேன். ஆறுமாதத்தில் அது தவறு என்று உணர்ந்தால் மாற்றிக்கொள்வேன். அவ்வளவு ப்ளக்ஸிபிள் ஆன ஆள் நான்.

எனக்கும் உங்களுக்கும் வாய்க்கா வரப்பு தகறாறு என்று எதுவும் இருந்துவிடப்போவதில்லை. என்னுடைய கருத்துக்கள் தான் உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் நீங்கள் அது எது எது என்று பின்னூட்டத்தில் சுட்டினால் அதனை உடனே திருத்திக்கொள்ள முடியாவிட்டாலும் முயற்சியாவது செய்கிறேன்.

ஸ்மார்ட் என்பவரும் இதனை தன் பெயரிலேயே செய்துவருகிறார். திருவாளர் நோ என்பவருக்கும் என்னுடைய பெயரினை எழுதவில்லை என்றால் உறக்கம் வராத நிலை.

அப்படி இல்லை என்றால். !!!

முதலில் கீழே உள்ள சுட்டியை படிக்கவும்.

http://dondu.blogspot.com/2009/12/20122009.html

போலி டோண்டு என்பவர் இணையத்தில் இது போல ஆபாசமாக பின்னூட்டம் ஆரம்பித்து, பதிவு ஆரம்பித்து, பிறகு காவல் நிலையத்துக்கு செல்லவேண்டியதாக ஆயிற்று. தொழில் நுட்பத்தில் கில்லாடியான அவர் டவுசரே கிழிந்தபிறகு, முந்தா நாள் பதிவுலகை பார்க்க ஆரம்பித்த நீங்கள் எம்மாத்திரம் ?

ஸ்கைப், கூகிள், வேர்ட் ப்ரஸ், யாஹூ என்று அனைத்து இணைய தளங்களும் சென்னை சைபர் க்ரைம் பிரிவினர் அனுப்பும் மின்னஞ்சல்களுக்கு 48 மணி நேரத்தில் பதில் அனுப்பிவிடுகிறார்கள். ஏர்டெல், வோடாபோன், மற்றும் இணைய இணைப்பை தரும் லோக்கல் நிறுவனங்களை சொல்லவே வேண்டாம்.

அதில் உங்கள் ஜாதகமே கிடைத்துவிடுகிறது காவல்துறையினருக்கு.

உங்கள் கெட்டநேரம் அதிகமாக இருந்தால், நான் புகார் கொடுக்கும் நேரத்தில் வரும் தாம்பரத்தில் தாலியறுத்த கேஸும் உங்கள் தலையில் விடிய வாய்ப்பு உண்டு. ஆகவே ஜாக்கிரதை. நோ நோ என்கிறேன். ஸ்மார்ட்டாக முடிவெடுத்துக்கொள்ளுங்கள்.

Thursday, June 03, 2010

முகில் எழுதுகிறார்...


நேற்று காலைவரை எனக்கு எதுவும் தெரியாது! நான் வலையுலகிற்கு வாடிக்கையாளனுமில்லை! எப்பொழுதாவது வந்துபோவேன்!! எதேச்சையாய் நேற்று நுழைந்ததில்,எல்லாம் படிக்க நேர்ந்தது....

நர்சிம் அவர்களின் பூக்காரி தவிர. என்னிடம் சொல்லி என்னை கோபப்படுத்தவேண்டாம் என்றோ, காயப்படுத்த வேண்டாம் என்றோ, முல்லையும் என்னிடம் அதுவரை பகிர்ந்துகொள்ளவில்லை.ரவியும் இது குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை.

விஷயத்தை முழுவதும் படித்தபின் என் மனைவியிடம் பேச ஆரம்பித்து பிணக்கில் முடித்துக்கொண்டோம்....

ஆனாலும் நர்சிம் என்ன எழுதினாரென்று அப்பவும் எனக்குத் தெரியாது. என்னுடன் படித்து, தங்கி வளர்ந்த 10 வருட நன்பனிடம், இமெயில் மூலம் ஏதும் பெறமுடியுமாவென்று தகவலனுப்பிவிட்டு மீண்டும் வலைப்பதிவில் துழாவினேன். நான் பூக்காரியை கண்டெடுத்த நேரத்தில் நண்பனிடமிருந்து பதில், இதோ.

please ignore it da _ its fixable and he feels sorry about that

do not read all those

பூக்காரியை படிக்கும்போதே என் அர்த்த நாளங்களும் ஆடிப்போயிருந்தன! எத்தனை வசைமொழிகள்? எந்த கணவனுக்கும் என் நிலைமை வரக்கூடாது!! நர்சிம் மணமானவரா எனக்கு தெரியாது,இருந்தாலும் அவரது குடும்பப் பெண்ணை யாரேனும் இப்படி எழுதி அவர் படிக்கும் நிலைமை வேண்டாமென்பதே என் பிராத்தனை.

காரணகாரியங்களை மீறியும் நர்சிம் எழுதிய வார்த்தைகள் என்னை இன்னமும் சுற்றியே வருகின்றன. அவரால் எப்படி ஒரு பெண்ணைப்பற்றி இப்படி எழுதமுடிந்தது? எழுதி இத்தனை பின்னூட்டம் வரும்வரை எப்படி அவரால் ரசிக்கமுடிந்தது? அவரை ஆதரித்து பின்னூட்டமிட்டவர்கள் எப்படிப்பட்டவர்கள்? அவ்வளவு நேரம் அவரால் ஏன் அந்தப் பெண்ணுக்கும் ஓர் குடும்பமிருக்குமே என யோசிக்கமுடியவில்லை? நாம் மட்டும்தானா ஆம்பிளை என ஏன் யோசிக்க தவறினார்? இப்படி எத்தனையோ கேள்விகள் என்னிடம்.

சரி என்ன செய்யலாம்? அப்போது எனக்கு தோன்றியது இரண்டேவழிகள்.........

1) நேரடியாய் அவரை சென்று வீட்டிலோ / அலுவலிலோ சந்திப்பது
2) சட்டப்படி நடவடிக்கை எடுப்பது
3) என் மனதின் நியாயப்படி நடவடிக்கை எடுப்பது

இதைச்சொல்ல,என் மனைவியோ அவரை வலையுலகிலிருந்து வெளியேறுகிறாராம்... நீங்கள் யாருக்கும் மறுமொழியிடவோ, பதில் பதிவு போடவோ வேண்டாமென்று சொல்லி ஆற்றாமையில் பொங்கிக்கிடந்த என்னை ஆற்றுப்படுத்திவிட்டு அலுவல் கிளம்பியாயிற்று....

நானும் பொறுத்திருந்தேன்....அதுவரை வினவில் வந்ததை நான் படிக்கவேயில்லை!

ஆனாலும் விட்டபாடில்லை, மேன்மேலும் இதுபற்றி பதிவுகள், விமர்சனங்கள், போதாக்குறைக்கு வினவு இவ்விசயத்தில் RAPE என்று கொச்சைப்படுத்தி எழுதியிருப்பது, நிறவேற்றுமை, சாதிய உள்ளிழுப்புகள், அவர் பணக்காரர்-இவர் ஏழை, இன்னும் பல.

நர்சிம் ஏனோதானோ என்று எழுதிய மன்னிப்பு பதிவையும் பார்த்தேன், பாய்ந்துவிட்டு பதுங்குகிறாரோ எனவும் யோசித்தேன். அதற்குள் என் நண்பர்கள் சிலரிடமிருந்தும் இதைப்பற்றி விசாரிப்புகள். முல்லையிடமிருந்தும் பல போன் கால்கள், மறுமொழியிடவோ, பதில் பதிவு போடவோ வேண்டாமென்றும், தன்னிடம் சொல்லாமல் எதுவும் செயலில் இறங்கிவிடவேண்டாம் என்ற வேண்டுகோளுடன்.

எனக்கு தெரிந்த சட்டநிபுனர்களிடம் விசாரித்துவிட்டு நேற்று மாலையே அவரை சந்திக்கவும் ஏற்பாடு செய்தேன். முல்லையோ, வலையுலகில் எனக்கு தெரிந்த மற்றும் என்னை தெரிந்த நல்லவர்கள் இருக்கிறார்கள், அவர்கள் என்ன முடிவெடுக்கிறார்கள் என பார்த்துவிட்டு பிறகு செல்லலாம் என மறுத்துவிட்டாள்.

எல்லாரையும்விட முல்லையும், நானும் என் குடும்பத்தாரும்தான் பாதிக்கப்பட்டுள்ளோம். குறிப்பாக ஒன்றுமறியா நாலரை வயது குழந்தையை கொலைசெய்ய அறிவுறுத்தும் அவர் நண்பர்களை என்ன சொல்ல!

இப்பிரச்சனையை சாதியாக்கியவர்களுக்கு:

என் மனைவியின் கொள்ளுப்பாட்டி சுதந்திரப் போராட்ட தியாகி! நர்சிம் வழியில்?
பதிவிட்ட நாலாம் நாளிரவு மன்னிப்பு கோரியுள்ளார், இதுவரை நாங்கள்?
சொல்லுங்கள் யார் உயர்சாதியென்று?
எத்தனையோ பேர் சொல்லியும் நம்மால் சாதியை ஒழிக்கத்தான் முடியவில்லை, அதன் வரையறைகளையும் கோட்பாடுகளையுமாவது மாற்றிக்கொள்வோமே? உயர் சாதி பற்றுடன் இதில் போராட்டம் நடத்துபவர்களுக்கு சொல்கிறேன், இப்போது நாங்கள்தான் உயர்சாதி, எங்களுக்காக போராடுங்களேன் !!!

அடுத்து பணத்தைப் பற்றியும், நிறத்தைப் பற்றியும் கூட சிலர் எழுதியும் பின்னூட்டமிருந்தும் படித்தேன். குறிப்பாய் குழந்தையை கொல்லவேண்டாமென்ற கார்க்கி (அதாவது கொல்லவேண்டும்), தங்கம் கருப்பு நிறமாவென்று கேட்டிருந்தார். ஆமாம் கார்க்கி சார், என் மனைவி கருப்புந்தான், தங்கமும்தான், அதற்குமேலுந்தான்!

என் மனைவியைப் பற்றி எனக்குத்தெரியும், நர்சிம் பதிவிலும் அவர் நண்பர்கள் பின்னூட்டத்திலும் ஒரு ஆணாய் ஆத்திரப்பட்டேன், கணவனாய் கொதித்தேன், தந்தையாய் அழுதேன்.....

போதும் பதிவர்களே, உங்கள் இருதரப்பு நியாங்களுக்கும் மேலாய் இறைவன் இருக்கிறான், இருப்பான். இனியாரும் இதைப்பற்றி எழுதாதீர்கள். எங்களுக்கு நியாயம் வாங்கித்தாருங்கள் ப்ளீஸ். அதுபோதும்!!!

என் மனைவி இன்னும் எழுதுவாள், பின்னூட்டமிடுவாள். இனி சற்று எச்சரிக்கையாய், மனிதர்களைப் பற்றி மட்டும்.

ஏனென்றால் நான் அவளைமட்டும் காதலிக்கவில்லை, அவள் எழுத்தையும்தான்.

-முகில்