Posts

Showing posts from May, 2010

புனைவாக எழுதுதல் !

Image
ஒரு செமி.சீரியஸ் பதிவு ஒன்றுக்கு எழுதப்பட்ட படு காமெடி பதிவு, ஆணாதிக்க வெறியும், வன்மமும் அழுக்கும் ஆக நிறைந்த ஒரு கீழ்த்தரமான ஆபாச புனைவு பதிவும், அதில் குழந்தையை கொல்வேன் என்பது போன்ற மிரட்டல் உருட்டல்களாகவும், அந்த ஆபாசத்தை சமப்படுத்தும், நியாயப்படுத்தும் பின்னூட்டங்களாகவும், இதனை வைத்து காமெடி செய்து கல்லா கட்டும் பதிவுகளாகவும்...
இது இரண்டு தனி நபர்களின் பிரச்சினை என்ற அளவில் சுருக்கக்கூடிய ஒன்றா ? அல்லது ஒட்டுமொத்தமாக படிப்பவர்களின் மனதை உலுக்கக்கூடியதா ? ஒருவேளை முல்லை என்ற பெண் என்னைப்போல சஞ்ஜெய் காந்திக்கோ, வடகரையாருக்கோ, அல்லது விக்னேஷ்வரிகோ, சின்ன அம்மணிக்கோ சகோதரி இல்லை என்றால், நீங்களும் சொம்பை தூக்கிகொண்டு போய் பின்னூட்டத்தில் பஞ்சாயத்து செய்யலாம்..!!
எனக்கு கோபம் மட்டுமே வருகிறது...!
அவள் என் மீது கல் எறிந்தாள். நான் அவள் நெஞ்சைப்பிளந்து இதயத்தை எடுத்தேன் என்பது போல, என் மீது எதிர்பதிவும் பின்னூட்டமும் போட்டமைக்காய், நாள் அவளை அவுசாரி என்றேன். எவனோடோ படுப்பவள் என்றேன். குழந்தையையும் அதில் கொண்டுவந்தேன். என்று சொன்னால். உங்களால் ஒருவேளை, ஓ கொஞ்சம் ஓவராய்த்தான் டென்ஷன் ஆகி ப…

குணங்குடி ஹனீபா விடுதலை. தூங்கிய நீதி !!

Image
தமுமுக குணங்குடி ஹனீபா, குண்டுவெடிப்பு பொய் வழக்கு ஒன்றில் இருந்து விடுதலை பெற்றுள்ளார். ஒன்றா இரண்டா பதிமூன்று ஆண்டுகள். தாமதித்துத்தான் இந்த நீதி கிடைத்துள்ளது.

இப்படி பதிமூன்று ஆண்டுகள் அவர் சிறையில் வாடிய காலம் திரும்ப கிடைக்குமா ? தனது தந்தையார் இறந்த நிகழ்வுக்கு கூட இவரை பரோலில் விடாமல் செய்தது எப்பேர்ப்பட்ட அநீதி ?

சமீப காலத்தில் ஜூவி இவரை பேட்டி கண்டு வெளியிட்டபோது, தமிழக முதல்வர் கலைஞருக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார். மேலும் வரும் தேர்தலில் இஸ்லாமியர்களின் ஆதரவு தேவை என்பதாலும், மமக ஒரு ஒருங்கமைந்த சக்தியாக உருவெடுத்து வருவதாலும், இவர் விடுதலை செய்யப்பட்டிருக்கக்கூடும்...

முதலில் இதுபோன்ற பொய் வழக்குகளை அரசியல் காரணத்துக்காக சோடிக்கும் அதிகாரிகளை கடுமையாக தண்டிக்கவேண்டும். அப்போது தான் இப்படிப்பட்ட அநீதிகளை வரும் காலத்தில் நடாத்த அதிகார வட்டம் கொஞ்சமாவது தயங்கும்..!!

தாமதிக்கப்பட்ட நீதி என்பது அநீதியாகும். ஆகவே அதனை இழைத்தவர்கள் குற்றவாளிகள். ஆகவே அந்த அநீதியை இழைத்தவர்கள் தண்டிக்கப்பட்டே தீரவேண்டும் !!! தந்தையின் முகத்தை இறுதியாக காண விடாத இந்த பாவிகள் உப்பை தின்றவர்கள். த…

தோழி அல்லது தோழருக்கு !!

Image
ஆனந்த விகடனில் வலைப்பதிவுகளை அறிமுகப்படுத்தும் இன்பாக்ஸ் பகுதி இருக்கிறது. பல வலைத்தளங்களை வெளியிட்டுவருகிறார்கள்.அந்த வகையில் கடந்த 24 ஆம் தேதியிட்ட மார்ச் மாத இதழில் தோழி என்பவரின் வலைத்தளத்தை அறிமுகம் செய்தார்கள்.

சித்தர்கள் பற்றிய வலைப்பூ அது. http://siththarkal.blogspot.com

அந்த வலைப்பூவில் வரும் உடான்ஸுகளை தாங்க முடியாமல் பார்த்துக்கொண்டிருந்தேன்...!! வீர ரசம் காந்த ரசம் என்று காதில் பூ சுற்றும் சமாச்சாரங்களாக இருக்கிறது.

சித்தர்கள் என்பவர்கள் மருத்துவ முறைகள், வாழ்வியல் முறைகள் ஆகியவற்றை அனுபவத்தால் கற்று தேர்ந்து, அதனை வைத்து பல வாழ்வை ஒளியேற்றியது உண்மைதான். அவர்களை நான் மதிக்கிறேன், வணங்குகிறேன்...


ஆனால் அந்த காலத்திய வாழ்க்கை முறைக்கும் சமூக நிலைக்கும் மட்டுமே அவை பொருத்தமானவையாக இருந்தன.
ஆனால் இப்போது சைக்யாட்ரிஸ்டும் ஆங்கில மருத்துவமும் தான் பொருத்தமான ஒன்று. காரணம் நமது வாழ்வியல் முறையும், சமூக அமைப்பும் மாறிவிட்டது. நாம் உண்ணும் உணவில் இருந்து, பேசும் பேச்சில் இருந்து, பயன்படுத்தும் பொருட்களில் இருந்து, அனைத்தும் மாறிவிட்டது.
ஆகவே பழைய மருத்துவம் ஒருவேளை ஒருசில நோய்களில் பயன…

கிக் ஆஸ் (kick ass) - 2010

Image
படம் கலக்கல் !!! மிஸ் பண்ணாதீங்க !!!

9தாரா - தென்னாட்டு மைக்கேல் ஜாக்சன் காவியக்காதல் !!!

Image
+18 பதிவு..!!! மற்றவர்கள் ப்ளீஸ் டோண்ட் ரீட்!!!
மேலே ஒரு போட்டோ இருக்கு பாருங்க. அதில் முகத்தில் ரோஸ் பவுடர் கொஞ்சம் தூக்கலாக பூசி இருக்காங்களே ? அது தான் 9 தாரா. பக்கத்துல குரங்கில் இருந்து பிறந்தவன் மனிதன் என்பதை நிரூபிக்கும் வகையில் தாடியோடு உராசுகிறது பெயர் பிரபு தேவா.

இவர்கள் இருவரையும் பற்றி இன்னொரு சுவாரஸ்ய செய்தி, இந்த பிகர் கேரளத்து அழகி. இந்த பயல் கோங்கூரா சட்னி. அதான் கொலுட்டீன்னு சொல்லவரேன். இவங்க ரெண்டு பேரும் குப்பை கொட்டுவதோ தமிழ் கூறும் நல்லுலக பிலிம் இண்டஸ்ட்ரி கோடம்பாக்கம்...!!!

இதில் இந்த பிகரை பற்றி இன்னொரு விஷயம். ஏற்கனவே ஒரு தாடிக்கார கேரள இயக்குனர் இந்த பிகரை பிரிச்சு மேய்ந்ததாக ஒரு கிசு கிசு படித்த வேளை கூட நடித்த கரடி நடிகரின் மகன் விரல் வித்தையாருடன் உதட்டு முத்தம் கொடுத்தபடி இருந்த ப்ரைவேட் படம் இணையத்தில் உலாவ விடப்பட்டது.கரடியின் மகனுக்கு நயன் சரியாக ஒத்துழைப்பு கொடுக்காததால் காதல் முறிந்தது. காதல் முறிந்ததால் கரடி நடிகரின் மகன் விரல்வித்தையாரே அந்த கிளுகிளு படங்களை ரிலீஸ் செய்துவிட்டதாக ஒரு பேச்சு அடிபட்டது. நான் அதை நம்பவில்லை. இவர்களின் இருவரையும் படம்…

கூகிள் விளம்பரமும் பள்ளிக்கல்வித்துறையும்

Image
தமிழக அரசு, தனியார் பள்ளிகளுக்கு பெரிய ஆப்பை அடித்து சொருகிவிட்டது. அவர்களும் உச்சநீதிமன்றம் வரை சென்று முட்டிப்பார்த்துவிட்டு, ஸ்ட்ரைக் அது இது என்று பூச்சாண்டி காட்டிவிட்டு, இன்றைக்கு ஓஞ்ச வாழைப்பழமாகிவிட்டார்கள்.

2 ஆம் தேதி பள்ளிக்கூடம் திறப்பாங்களாம். பீஸை அஞ்சு மடங்கு அதிகரிக்கச்சொல்லி நீதிபதி கோவிந்தராசன் அய்யாவிடம் கோரிக்கை விடுப்பார்களாம். கோவிந்தராசன் அய்யா தலையாட்டினால், ஜூலை மாதம் கட்டணத்தை உயர்த்திவிடுவார்களாம்.

பொட்டியை நீட்டி சரி செய்துவிடலாம் என்று இவர்கள் நினைப்பது வெள்ளிடை மலை. இதை தமிழக அரசு உறுதியாக கவனிக்கவேண்டும்..

பொட்டி தர ஏற்கனவே ரொம்ப முயற்சி செய்திருப்பார்கள் போலிருக்கிறது. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஒரு உறுமலும் விட்டுவிட்டார்...

இன்னும் மூன்று ஆண்டுகளுக்கு இந்த கட்டண விகிதம் தான் என்றும் உறுதியாக தெரிந்துவிட்டது. இந்த அற்புதமான நடவடிக்கைக்கு எனது பாராட்டுக்கள்.

இது குறித்து மேல் விவரம் பார்க்க தமிழக அரசின் பள்ளி கல்வித்துறையின் இணைய தளத்துக்கு போனால், அங்கே தாய்லாந்து நாட்டில் பேசப்படும் தாய் மொழியை கற்கவோ அல்லது தாய் ச்சி என்ற உடற்பயிற்சிய…

குசும்பனுக்கு இல்லை !!

நார்வே தேசிய நாள் அணிவகுப்பின்போது எடுத்த படம் !!

ஏன் குசும்பனுக்கு இல்லையா ? இங்கிட்டு வந்து ஆஹா சூப்பர் பிகரெல்லாம் போவுது நான் அங்கே வரேன் அந்தமாதிரி ஏதாவது கமெண்டு வைப்பான். அப்புறம் என் தங்கச்சி பூரிக்கட்டையால சில்லி மூக்கை உடைப்பாள். தக்காளி சாஸ் வரும்..ஏன் அந்த வம்பு ?

நியோவுக்காக

நியோ பாப்பாவின் வீடியோவை போடுமாறு கேட்டார்..here you go !

குளம் சந்திப்பு !!!

Image
பிரபல இன்னாள் முன்னாள் பதிவர்கள் சந்தித்து, சப்பையாகிப்போன பதிவர் சங்க மேட்டர்கள் பற்றி விவாதித்து, குறை நிறைகளை களைந்து அந்த கருத்தாக்கத்துக்கு புத்துயிர் ஊட்ட முயல்கிறார்கள். சந்திப்பு, நர்சிம் வீட்டுக்கு பின்னாடி உள்ள குளத்தில் நடைபெறுகிறது. இன்ரொடக்சன் உரை நிகழ்த்துகிறார் நர்சிம்.

நர்சிம் : இந்த குளம் சந்திப்பு எந்த கேனிக்கும் போட்டி அல்ல.

கேபிள் : சைதாப்பேட்டை பஸ்டாண்டு எதிரே நைட்டு பத்து மணிக்கு மேல் வரும் சாப்பாட்டு கடையில் போட்டி நல்லா இருக்கும்.

நர்சிம் : கேபிள் அடங்கவே மாட்டீங்களா ? நான் இன்னும் ஆரம்பிக்கவேயில்லை.  இந்த சந்திப்பில் நமது பழைய வேறுபாடுகளை களைந்து, உரையாடலோடு இணைந்து இந்த முயற்சியை தொடர்ந்து செய்யனும். எதாவது செய்யனும் பாஸ். வள்ளுவர் என்ன சொல்றார் தெரியுமா ?

கெட்டார்க்கு நட்டார்இல் என்பதோ நெஞ்சேநீ
பெட்டாங்கு அவர்பின் செலல்.

துன்பத்தால் அழிந்தோர்க்குதான் நன்பர்கள் துணையில்லையாம். வலைப்பதிவர்கள் அனைவரும் நன்பர்களாக எங்களது இந்த முயற்சிக்கு துணையிருக்கவேண்டும்.

மணிஜி : உமாவுக்கு உம்மா கொடுக்கும்போது இச்சி இச்சின்னு கொடுக்காம உச்சு உச்சுன்னு கொடுப்பது தான் சூப்பர். …

நித்யானந்தா - விலைபோன காவல்துறை

Image
நித்யானந்தா விவகாரத்தில் யார் கச்சை கட்டுகிறார்களோ இல்லையோ ? ஊடகத்துறை நன்றாக கல்லா கட்டுகிறது. ஒரு ஊடகம் ஒரு படி மேலே போய், காசை கட்டு வீடியோ பார் என்று ப்ளூ ப்லிம் விற்கும் அளவில் சென்றது.

அதுவும் நித்யானந்தா படத்தை போட்டு, அந்த நடிகை இந்த நடிகை என்று யாரையாவது லே அவுட்டில் போட்டு பணம் சம்பாதித்தன புத்தகங்கள். வழக்கமாக நடிகை படத்தை போட காரணம் கிடைக்கவில்லை என்றால் நடிகை கோலம் போடுவது, பொங்கல் வைப்பது, உடற்பயிற்சி செய்வது என்று பக்கத்தை நிரப்புவார்கள். இவர்கள் வெறும் வாயில் அவல் போல நித்தி மாட்டிக்கொண்டார் இப்போது..

லெட்ஸ் பாஸ் ஆன்..!!

இன்றைக்கு நித்யானந்தாவை சிஅய்டி அதிகாரிகள் விசாரணை செய்யும் காட்சியும், அவரை லாக்கப்பில் அடைத்து பூட்டும் காட்சியும், அவர் அங்கே அமருவதும், படுத்து உறங்கிக்கொண்டிருப்பதும் ஆகிய காட்சிகளை காவல் நிலையத்தின் அல்லது காவல் தலைமையகத்தின் சி.சி.டி.வி பூட்டேஜுகளாக செய்தி காட்சி ஊடகங்கள் வெளியிடுகின்றன.

என்ன அய்யா நடக்கிறது இந்த நாட்டில் ? அதி முக்கியமான காவல் நிலைய இண்ட்ராகேஷன் காட்சிகள் ஊடகங்களுக்கு எப்படி விற்கப்பட்டன ? இவை விற்கப்பட்டன என்பதில் எந்த சந்தேகமு…