Posts

Showing posts from March, 2010

சென்னை வலைப்பதிவர் கம்பெனி

தமிழ் வலைப்பதிவர்கள் குழுமத்துக்கு வாழ்த்துக்கள்...!!! நான் உங்கள் பக்கம்...!! என்னையும் ஆட்டத்துல சேர்த்துப்பீங்கதானே ? பத்தி எழுத்து பத்தி பத்தியா (பத்தி எழுத்துன்னா ஒரு பத்திதானே இருக்கனும் ? )எழுத நேரம் இல்லாதததால் ஒரு வீடியோ வலைப்பதிவாக போட்டுட்டேன்..!!! என்னுடைய கருத்தாக சென்னை வலைப்பதிவர் கம்பேனி அல்லது தமிழ் வலைப்பதிவர் கொம்பேனி என்ற பெயரையும் முன்மொழியுமாறு கேட்டுக்கொள்கிறேன்..!!உண்மைத்தமிழன் புனிதப்போர் குறும்பட டெக்னிக்கை வீடியோவில் உபயோகித்துள்ளேன்..உங்கள் கருத்துக்களையும் ஓட்டுக்களையும் அள்ளி தெளிங்க. நீங்களும் நேரத்தை மிச்சப்படுத்த வீடியோ பதிவுகள் போடுங்க. கதை, கவிதை, கட்டுரை போன்ற ஊடக வடிவங்கள் செத்துக்கொண்டுவருவதை உறுதிபடுத்துங்க...!!!

டைம் மெஷினும் தமிழ் எழுத்து சீர்திருத்தமும்

Image
ஹெச்.ஜி.வெல்ஸ் எழுதிய டைம் மெஷின் புத்தகத்தை படிச்சிருக்கீங்களா ? அட ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் சொன்ன ஒளியின் வேகத்தை விட அதிக வேகத்தில் பயணம் செய்தால் டைம் மெஷினை உருவாக்கலாம் அப்படீன்ங்கற தியரியப்பத்தி கொஞ்சமாவது தெரியுமா ? கவலைப்படாதீங்க. எனக்கும் மேல் சொன்ன ரெண்டு விஷயமும் ஒன்னும் தெரியாது. ஆனா இந்த பதிவில் கொஞ்ச நேரம் டைம் மெஷின்ல ஒரு முன்னூறு ஆண்டுக்கு முன்னால் போய் பின்னால் நடந்த விஷயங்களை ஆற அமர பார்க்கலாமாம்.

நேத்து பாயும் புலியும் பதுங்கும் நாகமும் அப்படீன்னு ஒரு படம் பார்த்துக்கிட்டிருந்தேன். அதாங்க க்ரச்சிங் டைகர் ஹிட்டன் ட்ராகன். அதுல ஜெட்லி ஒரு எடத்துல நிக்காம அப்படியே அந்தரத்துல தாவி தாவி. அதுக்கு பேரு உடான் கலையாம். மரத்து எலையில. மூங்கில் குச்சில..நின்னு வாளை சுழட்டி சுழட்டி அடிச்சு. அப்படியே தூங்கிப்போனதுல டைம் மெஷின்ல போறமாதிரி ஒரு கனவு. திடீர்னு மேட்ரிக்ஸ் படத்துல வர்ர மொட்டை கையில ரெண்டு மாத்திரையை நீட்டி, ஒன்ன இப்பவே போடு, உன்ன எப்பவாவது போடறேன் அப்படீன்னு மண்டையிலேயே ரெண்டு போட்டா...

விழிப்பு வந்திருச்சு...எந்திரிச்சு பார்த்தேன்...சுவரில் இருந்த கடிகாரம். அட சுவரில் கடி…

பகுத்தறிவும் இந்து ஞான மரபும் !!

Image
எல்லாருக்கும் ஏற்ற இடுகை அல்ல..Non G. உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள், குழந்தைகள், மெல்லிய இதயம் கொண்ட ஆண்கள் மற்றும் பெண்கள், இந்த பதிவை படிக்காமல் தவிர்க்கவும்...இடுகையை வலது மூலையில் X இருக்கும் பொத்தானை அழுத்து மூடிவிடவும்..!!கடந்த பதிவில் என்னுடன் விவாதம் செய்ய முயன்ற நன்பர்களுக்கும், திட்டிய பெயர் உள்ளவர்கள், வெறும் ப்ரொபைல் மட்டும் உள்ளவர்கள் மற்றும் அனானிகளுக்கும் சரியான பதில் சொல்லமுடியாத நிலை. வேலை. வேறு காரணமில்லை, மன்னித்துக்கொள்ளுங்கள். பதிவை எழுத முயன்றபோது அதற்குள் இணையத்தில் நடந்த பல்வேறு விஷயங்கள் என்னை பாதித்தன. என்னுடைய கேள்விகள் சந்தேகங்கள் இந்த பதிவில். No Judgment. எந்த முன்முடிவும் இல்லை என்னிடம்..

இந்து ஞான மரபு.இதுபோன்ற பஸ் வேர்ட்களை (Buzz Words) இப்போது தான் பார்க்கிறேன். இந்து ஞான மரபு வாளின் மீது மதம் நடத்திய இஸ்லாமிய, அதிகாரத்தின் மீது மதம் பரப்பிய கிறித்தவ மதங்களின் அழுத்தத்தில் இருந்தெல்லாம் தாக்குபிடித்தததாக ஜெயமோகன் நிறுவுகிறார்..மேலும் ஆதிவாசிகளின், பழங்குடிகளின் தெய்வங்களையும் (வேலன் முருகன், சபரிமலை மணிகண்டன்) தன்னுள் இழுத்துக்கொண்டதாம் இந்து ஞான மரப…

ருத்ரன், ஹுஸைன் மற்றும் ஹிந்துத்துவாவும்..

Image
வழக்கம்போல அக்கப்போரை ஆரம்பித்துவிட்டாயா ரவி என்று டென்ஷன் ஆகவேண்டாம். அநீதியான ஒன்றை கடந்துசெல்லும்போது இயல்பாகவே கோபம்வருகிறது. அதை உருவாக்குபவர்கள் மேலும் அனுமதிப்பவர்கள் மேலும் அதைவிட அதிகமாக அமைதியாக கடந்துசெல்பவர்கள் மேலும்.


முட்டாள்தனமான இந்த பதிவை பற்றி நான் எதையும் சொல்லப்போவதில்லை. சட்டியில் இருப்பதே அகப்பையில் வரும் என்ற ச = அகப்பை ஸ்கொயர் முப்பாத்தா தியரியில் எனக்கு நம்பிக்கை. ஆனால் அந்த பதிவை பயன்படுத்தி அங்கே பின்னூட்டத்தில் பெரிய மனிதர்கள் நடத்தும் லீலைகள் ஒரே நித்யானந்தமயம்.அந்த பதிவின் பின்னூட்டம் ஒவ்வொன்றும் அனுமதிக்கப்பட்டே வருகிறது. ஏற்றுக்கொள்ளாத கருத்தை ஒருவர் பின்னூட்டத்தில் தெரிவித்தால் அதனை மறுக்கவோ, வெளியிட மறுக்கவோ செய்யலாம். டாக்டர் ருத்ரனுக்கு மனநல மருத்துவர் தேவை என்றும் அவர் கீழ்ப்பாக்கம் போகவேண்டும் என்று சொல்வதை ஏற்றுக்கொண்டு நன்றியும் கூட சொல்லப்படுகிறது.இந்த பதிவும் பின்னூட்டங்களும் மருத்துவருக்கு மன உளைச்சல் ஏற்படுத்தும் என்று நான் நம்பவில்லை. நீங்கள் மெக்ஸிக்கோவும் போங்கள், ஆஸ்திரேலியாவும் போங்கள் என்று எடுத்தெறிந்து பேசுவதை அவர் எளிமையாக கடந்து…

பனங்காய் பனியாரமே !!!!!!!!

நார்வே வீ,என் மியூஸிக் ட்ரீம்ஸ் செய்த பனங்காய் பனியாரம். நீங்களும் சுவைத்து மகிழுங்கள்..!!

எனக்கென்னமோ இந்தாளை ரொம்ப பிடிச்சிருக்கு...

http://www.youtube.com/watch?v=tgiFa5uQt7k

நீங்க என்ன வேணா சொல்லுங்க...எனக்கு இந்தாளை ரொம்ப பிடிச்சிருக்கு...நான் வாய்ப்பு கிடைச்சா ஆசிரமம் போறேன், சந்திக்கறேன், பேசறேன்.....நீங்க ?

கணிப்பொறி தேவை !!!

Image
உபயோகப்படுத்தாத கணினி அல்லது மடிக்கணினி உங்களிடம் இருக்கா ? ஒரு மாணவர் ஒரு ப்ராஜக்ட் செய்வதற்காய் சென்னையில் ஒரு கணினி தேவைப்படுகிறது. இரண்டு மூன்று மாதங்கள் தேவைப்படலாம். வாடகைக்கோ அல்லது விலைக்கோ பெற்றுக்கொள்ளத்தயார். கணிப்பொறிக்கு தகுந்த வாடகையோ அல்லது நீங்கள் சொல்லும் விலையோ, ஏற்புடையதாக இருந்தால் உடனே கொடுத்து கணிப்பொறியை பெற்றுக்கொள்கிறேன்..நன்றி...

தொடர்புகொள்ளவேண்டிய முகவரி : ravi.antone@gmail.com

நட்புடன்..!!

ஏலியனை (வெளிகிரக உயிரினம்) பார்த்தேன்...

Image
சென்னையில் சந்தித்தபோது, நம்மை காரில் பிக்கப் செய்யவந்த நன்பர், லக்கியாரிடம் கூறிய விஷயங்களை அரண்டு போய் பதிவிட்டிருந்தார்..

இந்த வாரம் அதிபயங்கர அதிரடியான இன்னொரு விஷயம் கொடுத்தார் நமது நன்பர்..மங்களூருக்கு அருகில் சக்லேஷ்புரா என்ற கிராமம், நம்மூரு ஊட்டி மாதிரி..அங்கே கைவிடப்பட்ட ஒரு ரயில்வே பாதை உள்ளது...(இப்போது பணிகள் நடந்துகொண்டுள்ளன)...அங்கே வார இறுதியில் ட்ரெக்கிங் செல்வது என்னு முடிவானது..சக்லேஷ்புராவில் சிற்றுந்துகளை நிறுத்திவிட்டு ரயில் பாதையில் நடந்துசென்று, 16 கிலோமீட்டரில் உள்ள 'எருக்கமேரி' இரயில் நிலையத்தை அடைந்து டெண்ட் அடித்து தங்குவது. பிறகு மேலும் 8 கிலோமீட்டர் நடந்துசென்று, அக்கிப்பள்ளி என்ற இடத்தில் மலையில் உள்ள பாதை வழியாக இறங்கி, 3 கிலோமீட்டர் கடந்து, அதிவேகமாக ஓடும் ஆற்றை கடந்து மேலேறி தேசிய நெடுஞ்சாலை நாற்பத்தி எட்டை அடைவது..பின்னர் ஏதாவது லாரியை பிடித்து நாற்பது கி.மீ பயணம் செய்தால் மீண்டும் சக்லேஷ்புரா...பிறகு பெங்களூர்...இதுதான் திட்டம்...வழியில் உணவுக்கு ஆங்காங்கே நெருப்பை மூட்டி MTR பாக்கட்டுகளை உபயோகப்படுத்துவது....

ஒரு சிறப்பு அம்சம் என்னவென்றால…

ச்செக்கப்பானிட் !!!!

சொல்றதுக்கு எதுவுமில்லை. இந்த பாட்டு பிடிச்சிருந்தா நீங்களே இதைப்பற்றி தேடி தெரிஞ்சுக்குவீங்க...யூடூப் சுட்டி

[Slim Thug]
You need to stop playing round with all them clowns and the wangstas
Good girls gotta get down with them gangstas
Go head girl put some back and some neck up on it
While I stand up in the background and check up on it

[Chorus]
Ohh Boy you looking like you like what you see
Won't you come over and check up on it, I'm gone let you work up on it
Ladies let em check up on it, watch it while he check up on it
Dip it, pop it, twork it, stop it, check on me tonight

If you got flaunt it, boy I know you want it
While I turn around you watch me check up on it
Oohhh you watchin me shake it, I see it in ya face
Ya can't take it, it's blazin, you watch me in amazement
You can look at it, as long as you don't grab it
If you don't go braggin, I'ma let you have it
You think that I'm teasin, but I ain't got no reason
I'm sure that I can please…

ரஞ்சிதா மேட்டருக்கு பின் ஆசாமி நித்யானந்தா முதல் பேட்டி

http://www.youtube.com/watch?v=PUdfYxUyFB0

செய்திகளை முந்தித்தருவது உங்கள் ரெட்ப்ளேம். இந்த பேட்டியில் அவருக்கு ஆதரவாக இருப்பவர்களுக்கு நன்றி என்றும், தான் சட்டத்துக்கு புறம்பாக எதுவும் செய்யவில்லை என்றும் அனைவரும் கொஞ்ச நாள் காத்திருக்கவேண்டுமாறும், ஆதாரங்களை கொடுப்பதாகவும் சொல்கிறார். நான் நம்பிட்டேன். நீங்க ?

மற்றபடி, அமெரிக்காவில் அறிமுகமான ஒரு மலையாள குட்டியின் கேரளா கெஸ்ட் ஹவுஸில் நித்யானந்தா இருப்பதாக (ரஞ்சிதாவும் அவருடன் இருக்கிறாரா என்பது எனக்கு தெரியாது) ஒரு தகவல் உலவுகிறது. மொபைல் கேமாராவில் எடுத்த வீடியோவை ரிலீஸ் செய்யும் அளவுக்கு ஆகிவிட்டார் (ஆ)சாமிஜி. எப்படி இருந்த நான் இப்படி ஆய்ட்டேன் ???

இதற்கு முன் யூடுபில் என்னுடைய இடத்தில் அப்லோட் செய்த நித்யானந்தா வீடியோ, நான்கு நாட்களில் ஒரு லட்சத்தி எட்டாயிரம் முறை பார்வையிடப்பட்டுள்ளது. (ரெண்டு மணி நேரத்துக்கு முந்தைய கணக்கு, டைப் செய்துவிட்டு ஒரு முறை வெரிபை செய்ய முயன்றபோது இன்னும் ஒரு அய்ந்தாயிரம் பேர் பார்வையிட்டுள்ளனர்) இது எத்தனை லட்சம் போவுமோ தெரியாது ?

நித்யானந்த ரஞ்சிதோற்சவம் : மனித உரிமை மீறல்

Image
நித்யானந்தர் எனக்கு அறிமுகம் குமுதம் இதழின் வழியேதான். ஒல்லியாக காவியுடுத்தி, ஏதோ ஒன்றிரண்டு பக்கங்களை நிரப்பியிருப்பார்கள். ஆன்மீகம் என்ற தலைப்பில்..
என்னுடைய ஏரியா நடுப்பக்கத்தில் தொடங்கி நடுப்பக்கத்திலேயே முடிந்த காலம் அது, அதிகமாக கண்டுகொண்டதில்லை.
சாரு நிவேதிதாவின் பக்கத்த்தில் நித்யானந்தர் குறித்து கேள்விப்பட்ட உடான்ஸ் செய்தியொன்றின் அடிப்படையில் (நித்யானந்தர் பாடி விட்டு பாடி பாய்ந்து அரைமணி நேரத்தில் கேன்ஸரை சரிப்படுத்தினாராம், சாரு நிவேதிதா மூளையை கழட்டி டாய்லெட்டில் போட்டுவிட்டார் என்று நினைத்துக்கொண்டேன்) இணையத்தில் தேட கிடைத்த சுட்டி படு காமெடி. 
ஜனவரி 1 1978 இல் திருவண்ணாமலையில் ஜோதிட பித்து பிடித்த பெற்றோருக்கு பிறந்த ராஜசேகரன், பத்து வயதில் துறவறம் பூண்டவர். அவர் இஞ்சினீயரிங் படித்த்தாக நித்யானந்தரின் தயானந்த பீடம் கூறிவரும் பொய்மூட்டையை நிரூபிக்க, நித்யானந்தர் படித்த பாலிடெக்னிக் கல்லூரிக்கு ஒரு லட்சம் நன்கொடையாக கொடுத்த உடான்ஸை, அந்த வருடத்தில் பன்னிரண்டு வயது நித்யானந்தர் எப்படி பாலிடெக்னிக் படித்தார் என்று கேள்வி எழுப்பியிருந்தார்கள் அந்த தளத்தில்..
இதனை என்னுடைய ட்விட்…