Tuesday, August 31, 2010

வாழ்க்கை வட்டம்டா !!!



ரஜினிபட டயலாக் மாதிரி இருந்தாலும் இது தான் உண்மை. மேல இருக்க வீடியோவ பார்த்தீங்களா ? இந்த பத்துல சிம்பாக்கிட்ட (அதான் குட்டி லயன்) பெரிய சிங்கம் சொல்லும். நாம செத்தா புல்லாவறோம். புல்ல திங்கற மான நாம திங்கறோம். அப்படீங்கும்.பதிவுலகுக்கு கொஞ்சம் ப்ரேக் விட்டாலும் நம்ம கடமைய செய்யறதுக்கு வந்திருக்கேன். ஒவ்வொன்னா பார்ப்போமா ? வால்ஸ். லேட்டான பிறந்தநாள் வாழ்த்துக்கள். ஜோதிஜி. திருப்பூர் சாயப்பட்டறைகள் குறித்த அருமையான பதிவு வினவு தளத்தில். ஹேட்ஸ் ஆப். இணையத்தில் 'புரச்சி' செய்வதாக ட்விட்டரு, பஸ்ஸு, ரயிலு என்று குதித்துக்கொண்டு, காமெடி செய்துகொண்டு இருப்பதை பார்த்தேன். சிப்பு வந்துது சிப்பு. ஒரு பக்கம் பார்ப்பணீயத்தை கடுமையாக எதிப்பது. ஆனால் அதே பார்ப்பணீயத்துடன் நேரம் வரும்போதெல்லாம் கூட்டணி சேர்ந்துகொள்வது. நல்ல ஸ்டேட்டர்ஜி. பிழைப்புவாதம் என்றும் சொல்லலாம்.

ஒரு படத்தில் குட்டி சுவத்தில் உட்கார்ந்திருக்கும் இளைஞர்கள் 'பூமி மாதா சிரிக்கப்போறா, எல்லாரும் உள்ள போவப்போறீங்க' என்று சொல்லும் காமெடி பீஸை தூண்டி விட்டுவிட்டு, விழிப்பார்கள். ஒரு தகரத்தட்டை பார்த்தால் அந்த நியாபகம் தான் வருகிறது. உண்மையில் ஒரு விஷயத்துக்கு ஆதரவு தெரிவிப்பது, அல்லது எதிர்ப்பு தெரிவிப்பது, எல்லாவற்றுக்கும் ஒரு சார்பு நிலை நியாயம் இருக்கும். நாம் ஒரு சார்பு. அவன் ஒரு சார்பு. இவர்கள் க்ராஸ் ஆகாமல் இருப்பது நல்லது. இந்த சார்பு நிலை தாண்டி நட்பு பாராட்டலாமா, தேவையற்றதை ஒதுக்கி நல்லதை கொடுக்கலாமா என்று ஒரு மனக்குழப்பம். ஆனால் இந்த கூடா நட்பு தேவை இல்லை என்று தான் தோன்றுகிறது. இவர்களுடன் வைக்கும் தொடர்பு நாளை மன உளைச்சலைத்தான் கொடுக்கும்போல இருக்கிறது. இத்தனை கள்ளத்தனத்துடன் இருக்கும் இவர்கள் நாளை பாருக்கு அழைத்து சென்று மூக்கில் / முதுகில் குத்தமாட்டார்கள் என்பது என்ன உறுதி ?

ஹமாம் விளம்பரத்தில் சுட்டிக்காட்டிய ஒரு விஷயம், இப்போது வருவதில்லை. சோப்பு யாரு மாத்தினா என்பதை போல அந்த விளம்பரத்தை யாரு மாத்தியிருந்தாலும் அவர்களுக்கு நன்றீஸ்.

நேத்து ஒரு உயர்தர கடையில் கிறிஸ்டீன் சிஸ்டர்ஸு இருவர் ஷாப்பிங் வந்தார்கள். நான் பாட்டுக்கு என் வேலையை பார்த்துகொண்டு போயிருக்கலாம் தான். இருந்தாலும் அன்னை தெரசா கத்த்துக்கொடுத்த ஏழ்மை, எளிமை ஆகியவற்றை பின்பற்றுகிறார்களா என்று பார்க்க அவர்களை நான் பின்பற்றினேன் (கடையில்தான்). அவர்கள் பில்:

- பியாமா சோப்
- மற்ற உயர்தர பேர்னஸ் க்ரீம்ஸு
- லேய்ஸ் சிப்ஸு
- ஆப்பிள் ட்ரிக்ஸ், இம்போர்ட்டட் ஐஸ் க்ரீம்ஸ்

எவன் அப்பன் ஊட்டு காசு ? மேலும் இங்கே பெங்களூரில் ஒரு கிறிஸ்தவ சிஸ்டர் குழுமத்தின் நிலத்தை 25 கோடிக்கு ஐடி கம்பேனிக்கு விற்பனை செய்து நிதி திரட்டி. என்னத்தை சொல்ல. இவங்களை கேட்டா நாங்க சிறுபான்மை அது இது என்று அடித்து விடுவார்கள். லெட்ஸ் ஸீ.

ரொம்பநாளாக ஆல் இன் ஆல் அழகு ராஜா கடைக்காக ஒரு இடுகையை தயார் செய்ய முயன்றுவருகிறேன். நேரம் தான் சிக்கமாட்டேங்குது.

அடுத்த எரிச்சல், ஜோடி நம்பர் ஒன் ஜூனியர் என்று ஒரு ப்ரொக்ராம். அதில் சின்ன குழந்தைகளை நேத்து ராத்திரி யம்மா ரேஞ்சுக்கு ஆடுவதை என்னால் சகித்துக்கொள்ளவே முடியவில்லை. செக்ஸ் கல்விக்கு ஆதரவு கொடுக்கும் என்னால் குறைந்த வயதுள்ள குழந்தைகள் ஜோடி பாட்டுக்கு டேன்ஸ் ஆடுவதும் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட்டு ஆவது அதை பெற்றவர்களே கை தட்டி ரசிப்பதும் ! யாராவது இந்த நிகழ்ச்சி தயாரிப்பாளரின் போன் நம்பர் கொடுக்கமுடியுமா ? நித்தி மேட்டரிலேயே டிவிக்கு தணிக்கை தேவை என்ற கருத்தையும் விவாதிக்கவேண்டிய நிலை இருந்தது. ஆனால் மன்னரின் (கலைஞர்) உறவினர்களின் தொலைக்காட்சி பெட்டியிலேயே இவ்வாறான நிகழ்வுகளின் ஒளிப்படத்தை காட்டியதால் நம்மால் எதுவும் செய்ய இயலவில்லை. பட்டத்து இளவளின் (ஸ்டாலின்) ஆட்சியிலாவது நாம் இந்த கோரிக்கையை எழுப்பி பார்ப்போம்.

திருச்சியில் அம்மாவுக்கு கூடிய கூட்டம் அவரை வேடிக்கை பார்க்க வந்தவர்கள் என்று குஸ்பு சொல்லியிருக்கிறார். கழகத்தில் இணைந்தவுடன் குஸ்புவின் கன்னி (?) ஸ்டேட்மெண்ட் இது. வரும் காலத்தில் குஸ்பு மத்திய கல்வி மந்திரியாகி, தமிழகத்தின், இந்தியாவின் தலையெழுத்தை மாற்றி
அமைப்பார். மச்சான் புகழ் நமீதா, ஐநா சபையில் பேசுவார் என்று ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் சாதாரண தமிழன் நான். நீங்க சொல்லுங்கம்மா கேட்டுக்கலாம்.

அமெரிக்க பதிவர்களுக்கு ஒரு வருத்தமான செய்தி. விரைவில் இந்த ரெட்ப்ளேம் உங்கள் ஏரியாவில் லந்தை கூட்ட வருகிறது. ! அப்புறம் என்ன ? அமெரிக்காவில் இருந்து தமிழகத்தின் தலையெழுத்தை மாற்றும் நடவடிக்கை விரைவில் ஆரம்பமாகும். (சும்மா ஜோக்குபா. குஜமுகவில் தான் இணைவேன் முதல்ல).

Wednesday, August 18, 2010

புதிய அச்சிதழுக்கு : பல்வகை பணி வாய்ப்புகள் - ஜி கவுதம்



இதனால் சகலமானவர்களுக்கும் அறிவிப்பது என்னவென்றால்..
புதிதாக வெளிவர இருக்கும் தமிழ் அச்சு மற்றும் வீடியோ பத்திரிகைகளில் பணியாற்ற 
திறமையும், தகுதியும் உள்ளவர்களை வரவேற்கிறேன்!

வருத்தப்பட்டு பணி சுமக்கும் பழைய பத்திரிகையாளர்களும் சரி, 
கற்றுக்கொண்டு சாதிக்க நினைக்கும் புதிய பத்திரிகையாளர்களும் சரி, 
பத்திரிகைத்துறையைத் தேர்ந்தெடுக்க நினைக்கும்ஆர்வமுள்ள புதியவர்களும் சரி.. 
தயங்காமல் உங்கள் பயோடேட்டாவை (புகைப்படத்துடன்) அனுப்பி வையுங்கள். 
நீங்கள் கொடுக்கும் விவரங்கள் ரகசியமாக வைத்துக்கொள்ளபப்டும் என்ற உத்தரவாதம் தருகிறேன்.

புதிய குழுமம்.. 
புத்தம்புது பத்திரிகைகள்.. 
புறப்படப்போகும் புதிய கூட்டணிக்கு நம்பிக்’கை’ கொடுங்கள்! 

தேவை:
(முழுநேர - பகுதி நேர - ஃப்ரீலான்ஸ் பணிக்கு, உலகின் எந்த மூலையில் இருந்தும் பணியாற்றலாம்)
செய்தியாளர்கள் - Reporters,
உதவி ஆசிரியர்கள் - Sub Editors,
புகைப்படக்காரர்கள் - Photographers,
ஒளிப்பதிவாளர்கள் - Videographers,
வெப் டிசைனர்ஸ் - Web Designers,
வெப் ப்ரோகிராமர்ஸ் - Web Progarammers,
கிராபிக்ஸ் டிசைனர்ஸ் - Graphics Designers,
வீடியோ எடிட்டர்ஸ் - Video Editors,
ஒலிப்பதிவாளர்கள் - Sound Engineers,
காப்பி ரைட்டர்ஸ் - Copy Writers (Tamil-English-Tamil),
டி.டி.பி. ஆபரேட்டர்ஸ் - DTP Operators,
விளம்பர பிரதிநிதிகள் - Advt Representatives,
நூலகர் - Librarian, 
நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள் - Anchors,
நிகழ்ச்சித் தயாரிப்பாளர்கள் - Programme Producers,
தயாரிப்பு ஒருங்கிணைப்பாளர் - Production Co Ordinator,
அலுவலக உதவியாளர்கள் - Office Assistants,

பயோடேட்டா அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி:
editorgowtham@gmail.com

Wednesday, August 11, 2010

கிறிஸ்தவ மிஷநரிகளின் நில ஆக்ரமிப்புகள்




இதுபற்றி கடந்த சில வாரங்களாகவே சிந்தித்துகொண்டிருந்தேன். இரண்டு செய்திகள் இது சம்பந்தமாக இன்றைக்கு கண்ணில் பட்டது. கோவி கண்ணன் பதிவில் வேளாங்கண்ணி தேவாலயத்தின் நில ஆக்ரமிப்பு பற்றியும், தமிழ் ஹிந்துவில் வெளிவந்த நாகை மாரியம்மன் கோவில் போராட்டம் பற்றியும் அறிந்தேன்.

மேட்டருக்கு போறதுக்கு முன்னால ஒரு சின்ன சம்பவம் பாருங்க.

எங்கக்கா எங்க வீட்ல ரொட்டி சுட்டாங்க. பக்கத்து தெருவில் இருந்து ஒரு சொர்ணாக்கா வந்து, ரொட்டிய புடுங்கிட்டா. எங்கக்கா அவகிட்ட போராடி அடிபட்டு உதைபட்டு அவளை வீட்டை விட்டு வெளியில அனுப்பினாங்க. அதில பாருங்க. அவ வெளியில போகும்போது, அவ கையோட கொண்டுவந்த ஒரு பெருச்சாளிய வீட்டுக்குள்ள விட்டுட்டு போயிட்டா.

எங்கக்கா வீடு வெறும் டபுள் பெட்ரூம், அதில் ஒரு ரூம்ல அந்த பெருச்சாளி உக்காந்திருச்சு.பெருச்சாளிக்கிட்ட போயி ரெண்டு நாளைக்கப்புறம் கெட் அவுட் அப்படீன்னா, நான் காலங்காலமா இந்த ரூம்ல இருக்கேன், இதுல உனக்கென்ன வேலைன்னு எங்கக்காவை கெட் அவுட்டுங்குது.

எங்கக்கா வீட்டுக்காரர் ஒரு சோம்பேறி. எங்கக்கா பல முறை கம்ப்ளைண்டு செய்தும், தடியை எடுத்து பெருச்சாளிய அடிக்கமாட்டேங்குறார். பெருச்சாளியால எதாவது உபயோகம் இருக்கும்டி, சும்மா இரு அப்படீங்குறாராம். பெருச்சாளிக்கு வந்த வாழ்க்கையை பார்த்தீங்களா ? நல்லா பெட்ல வாலை நீட்டி படுத்துக்கிட்டு, மோட்டு(?)வளையை பாக்குது.

சரி நான் இனி மேட்டருக்கு வரேன். சமீபமா அரசு துறையில் இருந்து கிடைத்த சில தகவல்கள் கொஞ்சம் ஷாக்கிங் ரகம்.

தமிழகம் முழுவதும் கத்தோலிக்க கிறித்தவ, சி.எஸ்.ஐ, பெந்தகோஸ்து கூட்டத்தின் மொத்த அசையா சொத்து (நிலம்) ஒரு லட்சம் ஏக்கர். இவை மூன்று வகைகளில் அவர்களால் அனுபவிக்கப்படுகிறது.

- வெள்ளைக்காரன் நாட்டை விட்டு போகும்போது இந்திய அரசுடன் போட்ட ஒப்பந்தம் வகையில்.
- பாரினில் இருந்து வந்த நிதி ஆதாரங்கள், மற்றும் இங்கே உண்டியல் குலுக்கியது, பணக்காரர்களிடம் தானப்பத்திரமாக பெற்றது எக்ஸட்ரா
- வேறு சில சொல்லமுடியாத ரீசன் பேரில் மிஷிநரிக்கு வந்த அசையா சொத்துக்கள் வகை.

முதலில் சொன்ன பெருச்சாளி கதை இப்போ புரிந்ததா ? நமது நாட்டு நிலங்களை, எவனோ ஒருவன் எவன் எவனுக்கோ அனுபவ பாத்யதையாக எழுதி வைத்துவிட்டு போக எப்படி அய்யா முடிந்திருக்கிறது ?

அய்ந்து ஆண்டுக்கு ஒரு முறை சிறுபான்மை ஓட்டுக்கு குறிவைக்கும் ஆட்சியாளர்களும் இதனை கண்டும் காணாமல் இருப்பது, அவ்வப்போது பெறும் தேர்தல் நிதிக்காகவா ?

இவர்களின் ஹை க்ளாஸ் லைப் ஸ்டை பற்றி சொல்லவேண்டும். 2000 ஆம் ஆண்டு ஒருமுறை புதுவையின் பேமஸ் கண்ணியாஸ்திரி ஒருவரின் ட்ரைவர் சொன்னான், க்வாலிஸ் வண்டி பூட்ட 12 லட்சம் ஆனது என்று. ஏம்பா எத்தனை அட்டு அட்டாச்மெண்ட் போட்டாலும் 8 லட்சத்தை தாண்டாதே அப்படி என்னப்பா வண்டியில் வேலை செய்தீர்கள் என்றால், வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பம்பர் 4 லட்சமாம்.

பார்த்தீர்களா கண்ணிகாஸ்திரிகளின் ஏழை வாழ்க்கை லட்சனத்தை ? கேரள கன்னிகாஸ்திரி புத்தகம் எழுதும் முன்பே பல மேட்டர்களை நான் கேள்விப்பட்டிருக்கிறேன். நாட்டின் மிகச்சிறந்த ஆண்மைக்குறைவு டாக்டர், கம்பூட்டர் வேண்டும் என்று அப்போது நான் ஹார்ட்வேர் எஞ்சினீயராக வேலை செய்த கம்பேனியை அழைத்தார். நான் அந்த காலை அட்டண்ட் செய்து, அவருக்கு கம்பூட்டர் பூட்டி கொடுத்தேன். அப்போது அவர் சொன்ன ஒரு விஷயம், அவரிடம் சிகிச்சைக்காக பாதிரிகளும் கன்னிகாஸ்திரிகளும் தான் கும்பல் கும்பலாக வருகிறார்களாம் !! இது எப்படி இருக்கு ?

பதிவில் மையமாக பேசும் விஷயத்தை விட்டு விலகிப்போகிறோம் என்று நினைக்கிறேன். நான் சொல்லவருவது என்னவென்றால், இது போன்ற மிஷநரிகள் தங்கள் சுய சம்பாத்தியத்தில் வாங்கிய நிலங்கள், ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு, கொல்லிமலை உட்பட மலை வாசஸ்தலங்களில் பழங்குடியினரை மிரட்டி கொள்ளையடித்த, எழுதி வாங்கிய நிலங்கள், பஞ்சமி நிலங்கள், அனைத்தும் ஆய்வு செய்யப்பட்டு, மார்க்கெட் ரேட் என்னவோ அதை கட்டும்படி சொல்லவேண்டும். இல்லை என்றால் அந்த நிலங்களை அரசுடைமை ஆக்கவேண்டும்.

பஞ்சமி நிலம் என்றால் என்ன தெரியுமா ? அதாவது, ஆதி திராவிடம் மற்றும் பழங்குடியினருக்காக அரசால் ஒதுக்கப்பட்ட நிலங்கள் என்று பொருள். அந்த பஞ்சமி நிலங்களை மற்றைய சாதியாருக்கு விற்பது சட்டப்படி கூடாது. அப்படியான நிலங்களை கூட சர்ச், பங்கு கோவில் ஆகியவற்றின் பெயரில் பல இடங்களில் ஆட்டையை போட்டுவிட்டதாக அறிகிறேன். அதையும் சரியாக கணக்கீடு செய்தல் வேண்டும்.

என்னப்பா, எவ்வித சாதி / மத / அரசியல் சார்பில்லாமல் சிவனே (?) என்று இருக்கும் கிறித்தவ பிரம்பச்சரிய பாதிரியார்களை அவர்களின் நிலங்களை போய் டார்கெட் செய்கிறாயே என்கிறீர்களா ? அடப்போங்க சார்.

- ஒவ்வொரு தேர்தலிலும் சர்ச்சுகளில் / பங்கு கோவில்களில் அங்கே திரட்சியாக திரண்டிருக்கும் ஜீசஸ் பாலோயிங் மந்தைகளிடம் (?) தி.மு.கவுக்கு போடு, அ.தி.மு.கவுக்கு போடு என்று ப்ரீச்சப்படுகிறது. வன்னியர் மாவட்டத்து சர்ச்சு ஓட்டுகள் அன்னியருக்கில்லை. பாட்டாளிகளுக்குத்தான்.

- பாரின் மது, க்யூப (கூப ?) சுருட்டுகள், செட்டப்புகள், ஜில்பான்ஸுகள், என்று ஜலபுல ஜங்காக பாதிரியார்கள் இருக்கிறார்கள். சினிமாவில் காட்டும் முழு வெள்ளை உடை அவர்கள் எப்போதாவது தான் அணிவது. ஜீன்ஸ் ட்ஷ்ர்ட்டும் அணிகிறார்கள்.

- வன்னியர், தேவர், முதலியார், நாடார் என சாதி பாகுபாடு பாதிரியார்களிடம், பங்கு கோவில்களில், அரசு உதவி பெறும் சிறுபான்மை பள்ளிகளின் ஆசிரியர் நியமனம் வரை தலை விரித்தாடுகிறது.

மறுபடி சொல்கிறேன். வெள்ளைக்காரன் பார்த்து பார்த்து சிட்டிக்கு நடுவில் கொடுத்த நிலங்களில் அப்பார்ட்மெண்டு, கம்ர்சியல் பில்டிங், கல்யாண மண்டபம், நிறைய பீஸ் வாங்கும் பள்ளிக்கூடம் என்று கட்டிக்கொண்டு, சுகவாசிகளாக இருக்கும் கும்பலிடம் இருக்கும் ஒரு லட்சம் ஏக்கரை பிடுங்கவேண்டும்.


ஓட்டு அரசியலுக்கு அப்பாற்பட்டு இந்த செயலை, தேர்தலுக்கு பின்னாலாவது (அரசாணை எண் உ.ஆ 392 படி இதை தேர்தலுக்கு அப்பாலிக்கா தான் செய்யமுடியும் என்று அறிகிறேன்) செய்வதன் மூலம், தமிழகம் புதுவையில் இருக்கும் லட்சக்கணக்கான பள்ளிக்கு செல்லும் மாணவ மாணவிகளுக்கு டாலர் 35 அளவில் விற்கப்படும் ஆண்ட்ராய்ட் லைனக்ஸ் ஐ (ஐ பார் இண்டியா) பேடை கொடுக்கமுடியும். வாக்களிப்பதன் மூலமும் இந்த பதிவை பேஸ் புக், டுட்டர் போன்ற சமூக வலைப்பின்னல்களில் பகிர்வதன் மூலமும் துணை முதல் மு.க ஸ்டாலினுக்கு அனுப்புங்கள் ஓக்கே ?

தமிழ்நாட்டில் ஒரு செஞ்சோலை !!!

mail (2592×1944)



பெரியாருடன் - பெரியார் சொல்லிய கொள்கைகளுடன் வாழ்ந்துமுடித்த தோழர்களுக்கு ஒரு முதியோர் இல்லம் திண்டுக்கல்லில் அமைகிறது. அதன் படம் தான் மேலே. இது பற்றிய ஒரு சிறிய கலந்துரையாடல் கூட்டமும் ஆகஸ்டு 14 ஆம் தேதி (இந்த தேதியில் என்ன முக்கியத்துவம் ? யோசியுங்களேன்) நடக்கிறது. முடிந்தவர்கள் கலந்துகொள்ளவும். (மின்னஞ்சல் மூலம் வருகையை தெரியப்படுத்துங்கள்).


கலந்துரையாடல் கூட்டம் 14.08.10 மாலை 5 முதல் 15.08.10 பகல் 1 வரை..

கருந்திணை
1 / 810 முத்தமிழ் நகர்
அடியனூத்து-அஞ்சல், திண்டுக்கல் - 624 003 - karunthinai@gmail.com

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால்

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால் டயபட்டீஸ் / நீரிழிவு / சர்க்கரை நோயை விரட்ட நியான்டர் செல்வனால் ஆரம்பிக்கப்பட்ட இந்த குழுமத்திற்கு ( https://www....