Tuesday, May 11, 2010

குளம் சந்திப்பு !!!




பிரபல இன்னாள் முன்னாள் பதிவர்கள் சந்தித்து, சப்பையாகிப்போன பதிவர் சங்க மேட்டர்கள் பற்றி விவாதித்து, குறை நிறைகளை களைந்து அந்த கருத்தாக்கத்துக்கு புத்துயிர் ஊட்ட முயல்கிறார்கள். சந்திப்பு, நர்சிம் வீட்டுக்கு பின்னாடி உள்ள குளத்தில் நடைபெறுகிறது. இன்ரொடக்சன் உரை நிகழ்த்துகிறார் நர்சிம்.

நர்சிம் : இந்த குளம் சந்திப்பு எந்த கேனிக்கும் போட்டி அல்ல.

கேபிள் : சைதாப்பேட்டை பஸ்டாண்டு எதிரே நைட்டு பத்து மணிக்கு மேல் வரும் சாப்பாட்டு கடையில் போட்டி நல்லா இருக்கும்.

நர்சிம் : கேபிள் அடங்கவே மாட்டீங்களா ? நான் இன்னும் ஆரம்பிக்கவேயில்லை.  இந்த சந்திப்பில் நமது பழைய வேறுபாடுகளை களைந்து, உரையாடலோடு இணைந்து இந்த முயற்சியை தொடர்ந்து செய்யனும். எதாவது செய்யனும் பாஸ். வள்ளுவர் என்ன சொல்றார் தெரியுமா ?

கெட்டார்க்கு நட்டார்இல் என்பதோ நெஞ்சேநீ
பெட்டாங்கு அவர்பின் செலல்.

துன்பத்தால் அழிந்தோர்க்குதான் நன்பர்கள் துணையில்லையாம். வலைப்பதிவர்கள் அனைவரும் நன்பர்களாக எங்களது இந்த முயற்சிக்கு துணையிருக்கவேண்டும்.

மணிஜி : உமாவுக்கு உம்மா கொடுக்கும்போது இச்சி இச்சின்னு கொடுக்காம உச்சு உச்சுன்னு கொடுப்பது தான் சூப்பர். எப்படி இருக்கு ? ஆனா தாடி இருந்தா குத்தும். குத்துறது எல்லாம் கத்தியா ? என்னோட ரசனை அப்படி ஆளை விடுங்களேண்டா...

பைத்தியக்காரன் : மணிஜி, நீங்க இன்னும் ரெண்டு நிமிஷம் பேசுனீங்கன்னா நான் ஜ்யோராம் சுந்தரோடு தற்கொலை செய்துகொள்வேன்.

...ஜ்யோவ் பைத்தியக்காரனை பீதியாக பார்க்கிறார்...

உண்மைத்தமிழன் : செம்மொழி மாநாட்டுல பதிவர் சந்திப்பு நடக்கறாமாதிரி ஒரு கனவு கண்டு, அதை சுருக்கமா பத்தாயிரம் பக்கத்துல ஒரு பதிவு எழுதியிருக்கேன். அதை பற்றி விவாதிக்கலாமா ?

வாத்தியார் சுப்பைய்யா : நான் உண்மையாருக்கு எக்ஸாம் கண்ட்ரோலரா இருந்தா ஒரு அடிஷனல் ஷீட்டு கூட கொடுக்கமாட்டேன்..!!

டி.வி.ஆர் : யாரும் ஆக்கப்பூர்வமாக பேசுவதில்லை. மனிதனுக்கு ஏன் தான் இப்படிப்பட்ட சிந்தனையோ ? அடுத்தவன் எப்படிவேண்டுமானாலும் இருக்கட்டும். அவன் சுகந்திரத்தில் தலையிட நாம் யார் ? காளமேக புலவர் சொன்னமாதிரி

காக்கைக்கா காகூகை கூகைக்கா காகாக்கை
கோக்குக்கூ காக்கைக்குக் கொக்கொக்க - கைக்கைக்குக்
காக்கைக்குக் கைக்கைக்கா கா

நர்சிம் : சார் நிறுத்துங்க. இங்க நாம எதுக்கு கூடியிருக்கோமோ அதை பற்றி விவாதிக்கலாமே ?

டி.வி.ஆர் : கேணி சந்திப்புல பாமா நாடகம் நடந்துதாமே ? ஒரு ராஜா காலத்து நகைச்சுவை நாடகம் எழுதி வெச்சிருக்கேன். அதை முதலில் நடிச்சு பார்க்கலாமா ? ஆதிமூலகிருஷணன் அரசரா நடிக்கட்டும். ஜாக்கிசேகர் பராக் பராக் சொல்லட்டும். எதிரி நாட்டு மன்னன் அனுப்பும் புறாவை ஆதிமூலக்கிருஷ்னன் அடிச்சு சாப்பிட்டு ஏப்பம் விடுறமாதிரி ஒரு புது நகைச்சுவை துணுக்கு வெச்சிருக்கேன். எல்லாரும் குலுங்கி குலுங்கி சிரிச்சு..

கார்க்கி : சகா, என்னை தோழி கூப்பிடறாங்க. எனக்கு ஜொள்றதுக்கு வேற விஷயம் எதுவும் இல்லாததால நான் பப்ளுவோட அப்லு ஆயிக்கறேன்..

பட்டாப்பட்டி : பதிவர்கள் எல்லாரும் சங்கம் அமைக்கறது சரிதான் சார். ஆனா பதிவர் சங் அப்படீன்னு பேர் வைங்களேன். கொஞ்சம் டெரரா இருக்கும்...நான் சிங்கை கிளை தலைவர் பொறுப்பு ஏத்துக்கறேன்..

டோண்டு : எனக்கென்னவோ இந்த தம்பி சிங்கப்பூர்ல இருக்கறதால இவன் போலி டோண்டா இருப்பானோன்னு சந்தேகமா இருக்கு.

முகிலன் : யார் சார் இந்த போலிடோண்டு ?

டோண்டு : (தோளில் கை போட்டு ஓரமாக தள்ளிக்கொண்டு போய் பிரசங்கத்தை ஆரம்பிக்கிறார்) அதாவது தம்பி, நான் உனக்கு எலிக்குட்டி சோதனைன்னா என்னன்னு சொல்றேன்.

டி.ஆர்.அஷோக் : மூட்டு செத்த பார்ப்பனர்களை இந்த கூட்டத்துக்கு அழைக்கவேண்டாம் என்று எத்தனை முறை சொன்னேன் ? முதல் வரிசையில போயி உக்காந்துக்கறாங்க. இதை எதிர்த்து நான் உடனே உள் நடப்பு செய்யறேன்.

அதிஷா : நர்சிம், எந்த பிரபலத்தையும் கூப்பிடாத இந்த குளம் சந்திப்பு எனக்கு குட்டை மாதிரி தெரியுது.

லக்கி : தோழர், நான் நெட்டை. குட்டையில்லையே ? நல்ல பதிவு. நன்றி பத்ரி.

பரிசல் : லக்கி நீங்க ஏன் மந்திரிச்சுவிட்டமாதிரி இருக்கீங்க ?

லக்கி : நான் கடவுளையும் நம்புறதில்லை, சாமியாரையும் நம்புறதில்லை, அப்புறம் எப்படி நான் மந்திரிச்சு உட்டமாதிரி அலையமுடியும் ?

மணிஜி : நான் சாமியாரினிகளை நம்பலாம்னு இருக்கேன். ஜெயசுதா சாமியாரா ?

ஆதிமூலகிருஷ் : இல்லை. மாமியார். இந்த மீட்டிங்குக்கு சம்பந்தமா பேசுய்யா. சிக்ஸ் ஸிக்மாப்படி இந்த கூட்டம் ஊத்திக்கும்னு எனக்கு தோனுது ?

கேபிள் : நான் யூத்து. எனக்கு ஸிக்ஸ் பேக் பாடி இருக்கறத பத்தி தான சொல்ற ? அதை விடு...எப்படி கூட்டம் ஊத்திக்கும் ? முதல்ல எல்லாரையும் அரவணைக்கலாம். ஒரு ஏ ஜோக் சொல்றேன் ஆதி நீ கேளேன்..ஜாக்கி நீ கேளேன்...பாஸ்டன் சிரிராம் நீ கேளேன்..

நர்சிம் : (குரலை உயர்த்தி ) ஷட் அப் !!! உங்களை எல்லாம் சர்க்கஸ் புலி இருக்கற கூண்டுல தூக்கி போட்டுடுவேன்...

வெள்ளிநிலா ஷர்புதீன் : நர்சிம் நர்சிம். அப்படியே ஒவ்வொரு கூண்டுலயும் இந்த வெள்ளிநிலா புத்தகத்தையும் போடுங்களேன். தம் பிரியாணி செய்வது எப்படின்னு மூனாவது பக்கத்துல காயல்பட்டினம் அரிசி மண்டி மொத்த வியாபாரம் விளம்பரத்துக்கு கீழ இருக்கு !!

நர்சிம் : என்னை பாத்தா பாவமாயில்லையா ?

கிழவன் : தமிழின் புதிய திரட்டி கிழவன். ஓட்டளிப்பு பட்டை பெற இங்கே க்ளிக். உங்கள் பதிவுக்கு கன்னாபின்னாவென ஹிட்டு வரவேண்டுமா ? இங்கே க்ளிக்.

நர்சிம் : இப்ப என்னைய என்னதான் பண்ணச்சொல்றீங்க ? இந்த குளத்துலயே விழுந்து நான் முழுகிடுவேன்.

கேபிள் : இப்ப நான் ஒரு விஷயம் சொல்றேன். அதை கேட்டுட்டு மேற்கொண்டு யாரா இருந்தாலும் பேசுங்க...

...
..
..
..

... சிறிது நேரம் கழித்து ....
..
..

வீட்டுக்குள் தலைதெறிக்க ஓடிவரும் டிவிஆர் அய்யாவை வீட்டம்மா ஆறுதலாக பிடிக்கிறார்கள். ஏங்க இந்த ஓட்டம் என்ன ஆச்சு ?

வந்து கேபிள் சங்கர். கேபிள் சங்கர்..

ஏன் என்ன ஆச்சு ? கேபிள் சங்கர் என்ன பண்ணாரு ?

ஓடிவந்த மூச்சு இறைக்க இறைக்க சொல்கிறார் டிவிஆர்...30 ரூபாயில 30 ஆயிரம் பேரை சேர்த்து நர்சிம்மை ஹீரோவா போட்டு முக்கோண காதல் கதை பண்றேன்னார். பாக்கெட்ல கைய உட்டு ஆட்டோவுக்கு வெச்சிருந்த 25 ரூபாயை புடுங்கிட்டார். பாக்கி அஞ்சு ரூபாய்க்கு பேண்ட் பாக்கெட்ல கைய உடுறதுக்கு முன்னாடி ஓடிவந்துட்டேன். அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்....

27 comments:

ரவி said...

மேற்கானும் போட்டோ பாரீஸ்ல எடுத்தது என்று தனியாக சொல்லிக்க விரும்பவில்லை.

ரவி said...

முதல் கமெண்டை பதிவை எழுதுபவரே போடாதமாதிரி கூகிள் நிறுவனம் ப்ளாகரில் திருத்தம் செய்யவேண்டும்.

Athisha said...

நல்ல பதிவு நன்றி நர்சிம்

மாதேவி said...

சிரித்து முடியவில்லை.

Asir said...

நல்ல பதிவு நன்றி அதிஷா

உண்மைத்தமிழன் said...

எனக்கு ஒரே ஒரு வசனம்தானா..? நான் ஒத்துக்க மாட்டேன்.. இது அழுகுணி பதிவு..!

Radhakrishnan said...

இதெல்லாம் எதுக்கு? ;)

யுவகிருஷ்ணா said...

முடியலை பாஸ் :-)

செந்தமிழ் பேக் இன் ஃபார்ம்!

கார்க்கிபவா said...

அடிச்சு துவைச்சாச்சு....


//முதல் கமெண்டை பதிவை எழுதுபவரே போடாதமாதிரி கூகிள் நிறுவனம் ப்ளாகரில் திருத்தம் செய்யவேண்டும்/

இரண்டாவது கமெண்ட்டும் சகா :)

ஜெட்லி... said...

குளம் சந்திப்பு செம....

Unknown said...

பதிவர் சந்திப்பை அதே குளத்துல அடிச்சு துவைச்சிக் காயப் போட்டுட்டீங்க போங்க

Cable சங்கர் said...

aahaa.. அற்புதம்..வயிறு வலிக்கிறது.. வரிக்கு வரி சிரிப்பு.. சமீபத்தில் இவ்வளவு நகைச்சுவையோடு நான் படிக்கவில்லை.. கீப் இட் அப்..

ஆயில்யன் said...

//ஆதிமூலகிருஷ் : இல்லை. மாமியார். இந்த மீட்டிங்குக்கு சம்பந்தமா பேசுய்யா. சிக்ஸ் ஸிக்மாப்படி இந்த கூட்டம் ஊத்திக்கும்னு எனக்கு தோனுது ?//


டாப் :)))))))))))))))

ரவி said...

செந்தமிழ் பேக் இன் ஃபார்ம்/////2

என்னாது செந்தமிழா ? எதாவது காத்து கருப்பு பேஸ்தடிச்சுருச்சா இந்தாள ?

அல்லது பின்னூட்டம் போடறதை எதாவது பிகருக்கு அவுட்சோர்ஸ் பண்ணிட்டானா ?

ஒரு எழவும் விளங்கலை. உண்மையான யுவகிருஷ்ணா எங்கிருந்தாலும் வரவும்.

ரவி said...

நல்ல பின்னூட்டம் நன்றி லக்கி

ரவி said...

நன்னி டிவிஆர்

ரவி said...

நன்றி மாதேவி.

அமுதா கிருஷ்ணா said...

பதிவர் சந்திப்பிற்கே போக முடியாத படி செய்துட்டீங்க சார்....

Asir said...

நல்ல பதிவு நன்றி செந்தழல் ரவி

Asir said...

நல்ல பதிவு நன்றி செந்தழல் ரவி

Thamira said...

சுவாரசியமான கலாய்ப்பு. நன்றி செந்தழல்.

(சில எழுத்துப்பிழைகள் இருக்கின்றன. 5S ரூல்ஸ் படி அதை சரி பண்ணியாகவேண்டுமே)

வெண்பூ said...

க‌ல‌க்க‌ல்... அதில‌யும் அந்த‌ போட்டிக்க‌டை மேட்ட‌ர் சூப்ப‌ர்...

வவ்வால் said...

Ennathu kulama? Tamil nattula yethupa kulam ,ellam veedu katti thungurangle.ange iruntha murunga marathula thalai kila ,1/4 bottle vachutu thongina en pera sollama vittathanal kosu um kundiyil kadikkattum!

ரவி said...

ஆயில்யன் உங்கள பதிவுக்கு கொண்டுவர கஷ்டப்பட்டு நகைச்சுவை எழுதெவேண்டியிருக்கு !!

Bruno said...

//அதிஷா said...

நல்ல பதிவு நன்றி நர்சிம்
//

:) :)

அது சரி(18185106603874041862) said...

உங்க கலாட்டா தனி கலாட்டா பாஸ்...கலக்கிட்டீங்க போங்க...சிரிச்சதுல விஸ்கி கிளாஸ் கீழ விழுந்துடுச்சி...

அபி அப்பா said...

ரவி! உமக்கு இருக்கும் காத்து கொழுப்பு உலகத்துல ஒருத்தனுக்கும் இல்லை:-))

அதிலயும் அந்த 'போட்டி" மேட்டர் சூப்பர். கேபிள் உண்மையிலேயே போட்டி எங்கிட்டு நல்லா இருக்கும்ன்னு எழுதுங்க. நெசமாவே எனக்கு பிடிக்கும்!

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால்

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால் டயபட்டீஸ் / நீரிழிவு / சர்க்கரை நோயை விரட்ட நியான்டர் செல்வனால் ஆரம்பிக்கப்பட்ட இந்த குழுமத்திற்கு ( https://www....