Thursday, February 25, 2010

தமிழ் ஹிந்து தளத்தில் Taken (2008) விமர்சனம்...


“I don’t know who you are. I don’t know what you want. If you are looking for ransom, I can tell you I don’t have money. But what I do have are a very particular set of skills; skills I have acquired over a very long career. Skills that make me a nightmare for people like you. If you let my daughter go now, that’ll be the end of it. I will not look for you, I will not pursue you. But if you don’t, I will look for you, I will find you, and I will kill you”
taken-posterபடத்தில் கதாநாயகன் (ப்ரையான்) கடத்தல்காரனிடம் சொல்லும் இந்த வசனமே கிட்டத்தட்ட முழுக்கதையயும் சொல்லி விடுகிறது.
விபச்சாரத்துக்கு ஆள்கடத்தி விற்கும் ஒரு ஆர்மீனிய இஸ்லாமியக் கும்பலிடம் பிடிபட்டுள்ள தனது மகளை சர்வதேச நெட்வொர்க்குகளில் உள்நுழைந்து மீட்டுக்கொண்டுவரும் ஒரு தகப்பனின் கதை இது என ஒரு வரியில் சொல்லலாம்.
லாஸ் ஏஞ்சலஸின் வசிக்கும் அப்பா சொல்லச் சொல்லக் கேட்க்காமல் அம்மா கொடுத்த செல்லத்தில் அமெரிக்காவில் இருந்து நண்பியுடன் பாரீசுக்குத் தனியாகச் செல்கிறாள் பெண். விவகாரத்து செய்யப்பட்டு விட்ட மனைவியிடம் இருக்கும் மகளிடம் ஓரளவுக்கு மேல் தன் செல்வாக்கு எடுபடாத அப்பா வேறு வழியின்றி அனுமதிகிறார். பாரீசில் பெண் இறங்கியதுமே கடத்திச் செல்லப்படுகிறாள். உலகச் சந்தையில் ஏலம் போட்டு அவளை விற்று விடுகிறார்கள். அதிர்ந்து போகும் அப்பா பாரீசுக்குப் பறந்து போய் கடத்தியவர்களையும், ஏலம் விட்டவர்களையும், ஏலத்தில் எடுத்து அனுபவிக்க இருந்தவர்களையும் ஒருவர் விடாமல் தேடிப் பிடித்துக் கொன்று மகளை மீட்டு வருகிறார். அமெரிக்காவின் ரகசிய ஏஜெண்ட்டாக, ஒரு ப்ரிவெண்டராக இருக்கவேண்டியவர், தன் மகள் அருகில் இருக்க வேண்டும் என்ற ஆசையில் தன் ரகசிய வேலையைத் துறந்துவிட்டு இதை சாதிக்கிறார். தன் பெண்ணுக்காக தன் தொழில் ரகசியங்களைப் பயன்படுத்தி வேலையில் இறங்க நேர்ந்து விடுகிறது. ஆரம்பம் முதல் இறுதி வரை நம்மை படத்துடன் கட்டிப் போடும் திரைக்கதை, விறுவிறுப்பு, கூர்மையான வசனங்கள் நிறைந்த ஆக்‌ஷன் படம்
டிஸ்கி : விமர்சனத்தின் மற்ற அரசியல்கள் பற்றி அக்கறையில்லை, ஆனால் இந்த சிறந்த படத்தை அனுபவித்து பார்த்தேன்...விமர்சகருக்கு நன்றி...

Monday, February 22, 2010

மானாட மயிலாட குரூப்புக்கு .......

மானாட மயிலாட குரூப்பு பார்த்து காப்பியடிக்கவேண்டிய ஒரு வீடியோ. பியோன்ஸ் சிங்கிள் லேடீஸ் பாட்டு. ட்விட்டரில் சொன்னாங்க இந்த பாட்டு க்ராமி அவார்டு கூட வாங்குச்சாமே ? பார்த்து ரசிங்க. உண்மைத்தமிழன் அண்ணனுக்காக கீழே லிரிக்ஸும் கொடுத்துட்டேன்..!!!











All the single ladies, all the single ladies
All the single ladies, all the single ladies
All the single ladies, all the single ladies
All the single ladies

Now put your hands up
Up in the club, we just broke up
I'm doing my own little thing
Decided to dip and now you wanna trip
Cause another brother noticed me

I'm up on him, he up on me
Don't pay him any attention
Just cried my tears, for three good years
Ya can't be mad at me

Cause if you liked it then you should have put a ring on it
If you liked it then you shoulda put a ring on it
Don't be mad once you see that he want it
If you liked it then you shoulda put a ring on it
Oh, oh, oh

If you liked it then you should have put a ring on it
If you liked it then you shoulda put a ring on it
Don't be mad once you see that he want it
If you liked it then you shoulda put a ring on it

I got gloss on my lips, a man on my hips
Got me tighter in my Dereon jeans
Acting up, drink in my cup
I can care less what you think

I need no permission, did I mention
Don't pay him any attention
Cause you had your turn and now you gonna learn
What it really feels like to miss me

Cause if you liked it then you should have put a ring on it
If you liked it then you shoulda put a ring on it
Don't be mad once you see that he want it
If you liked it then you shoulda put a ring on it
Oh, oh, oh

If you liked it then you should have put a ring on it
If you liked it then you shoulda put a ring on it
Don't be mad once you see that he want it
If you liked it then you shoulda put a ring on it
Oh, oh, oh

Don't treat me to the things of the world
I'm not that kind of girl
Your love is what I prefer, what I deserve

Here's a man that makes me then takes me
And delivers me to a destiny, to infinity and beyond
Pull me into your arms, say I'm the one you own
If you don't, you'll be alone
And like a ghost Ill be gone

All the single ladies, all the single ladies
All the single ladies, all the single ladies
All the single ladies, all the single ladies
All the single ladies
Now put your hands up, oh, oh, oh

Cause if you liked it then you should have put a ring on it
If you liked it then you shoulda put a ring on it
Don't be mad once you see that he want it
If you liked it then you shoulda put a ring on it
Oh, oh, oh

If you liked it then you should have put a ring on it
If you liked it then you shoulda put a ring on it
Don't be mad once you see that he want it
If you liked it then you shoulda put a ring on it
Oh, oh, oh

Thursday, February 18, 2010

கிருபாநந்தினியின் தமிழ்நதி அவதூறு எதிர்வினை



கிருபாநந்தினி என்பவர், தமிழ்நதி அவர்களை பற்றி அவதூறு செய்து எழுதியிருப்பதை பார்த்தேன். அவர் எவ்வளவு முட்டள்தனமாகவும், குழந்தைத்தனமாகவும் எழுதியிருந்தாலும், அதை புறக்கணித்தாலே போதுமானது என்று நினைத்தேன். ஆனால் இதுபோன்ற முட்டாள்தனங்களை வெகுஜன எழுத்துத்தாளர்களுக்கு பதிவுலகில் இருந்து கொடுப்பது தவறு என்று தோன்றுகிறது. என்னால் கிருபாநந்தினியை திருத்தமுடியாது. ஆனால் எதிர்வினையாற்ற முடியும். அதை இந்த இடுகை செய்யும். ஆணாதிக்கம், அது இது என்று யாராவது வந்து வம்பு செய்யுங்கள். அதற்கு முன் கிருபாமந்தினியின் இரண்டு இடுகைகளையும், அதில் அவர் எவ்வளவு முட்டாள்தனமாக எழுதியுள்ளார் என்பதையும் படித்துவிட்டு வாருங்கள்.

முதலில் படுத்தாதீங்க தமிழ்நதி


ஆனால் பாவம் இந்த தமிழ்நதி. வேலை மெனக்கெட்டு இவருக்கு பதில் சொல்லி தன்னுடைய நேரத்தை தான் வீணடித்துள்ளார்கள். எங்கோ ஒரு வேலையாக போயிருக்கும் நேரத்தில் மின்னஞ்சலை திறக்க, அதில் இந்த அவதூறு கண்டு ஆங்கிலத்தில் (அவர் உபயோகப்படுத்தும் எழுத்துரு இல்லாத நிலையில்) பதில் சொல்ல, அதையும் கிருபாமந்தினி கிண்டல் செய்துள்ளார். 

////இந்த வார குமுதத்துல ‘இங்கு ஈழம் விற்கப்படும்’கிற தலைப்புல ஈழக் கவிஞர் தமிழ்நதி எழுதியிருந்ததைப் படிச்சேன். என்ன சொல்றாங்கன்னா... புத்தகக் காட்சிக்குப் போயிருந்தாங்களாம். அங்கே பல பதிப்பகங்கள் ஈழத்தை மையமாக வைத்து எழுதப்பட்ட புத்தகங்களைத்தான் முன்னிலைப்படுத்தி இருந்துச்சாம். இது இனம்புரியாத கசப்பு உணர்வை அவங்களுக்குத் தந்துச்சாம்.

அது என்ன ‘இனம்புரியாத’ன்னு புரியலை. இனம் புரிஞ்ச கசப்பு உணர்வுதான் அது. அவங்களே பின்னாடி ஒரு இடத்துல சொல்றாங்க, ‘காசு பார்ப்பதை மட்டுமே பிரதான நோக்கமாகக் கொண்டு, ஈழத் தமிழர்களின் இழப்பையெல்லாம் பிழைப்பாக மாற்ற எத்தனிக்கும் கயமைத்தனங்கள் எரிச்சலூட்டுகின்றன’ன்னு. ஆள் உயர சைஸ் டம்ளர்ல, ஜூஸோ காபியோ குடிச்சுக்கிட்டே சிரிச்சபடி போஸ் கொடுத்துக்கிட்டே இதை அவங்க சொல்றதுதான் எனக்கு எரிச்சலா இருக்கு////

இனம்புரியாத, இனம்புரிந்த, ஏதோ ஒரு கசப்பு உணர்வு அவர்களுக்கு தோன்ற பல காரணங்கள் உண்டு கிருபாமந்தி. அதே ஈழத்தில் இருந்து தமிழ்நாட்டிலேயே அகதி வாழ்க்கை வாழும் பலர் அவரது சகோதர சகோதரிகளாக இருக்கக்கூடும். முள்வேலியில் அகப்பட்டு அழுக்குநீரை குடிக்கும் ஒரு அக்கா அவருக்கு இருக்கக்கூடும். இந்திய அமைதிப்படையாலோ, சிங்கள குரங்குப்படையாலோ பாலியல் வல்லுறவுக்கு உட்பட்டு அடிவயிறு வலிக்க கதறிய ஒரு தங்கச்சி இருக்கக்கூடும். உங்களுக்கு அப்படி யாருமுண்டா ? டெல்லிக்கு வேலை விஷயமாக போன கிருபா உண்டு. அவர் ஒருவேளை அங்கிருந்து ரசகுல்லா வாங்கி வரக்கூடும். ரசகுல்லா பிடிக்கும்தானே ? இனிப்பாயிருக்கும்.

///ஜூனியர் விகடன் பத்திரிகையைக் கண்டாலே எனக்குப் பிடிக்காதுன்னு நான் ஏற்கெனவே சொல்லியிருக்கேன். அதுக்காக, ஈழத்தைப் பத்தி அது புஸ்தகம் போடுறதை எழுத்து வியாபாரம்னு சொல்றதை எப்படிங்க ஏத்துக்கறது?

போட்டாலும் இப்படி, எழுத்து வியாபாரம், கயமைத்தனம்னு பேசுறது; போடலேன்னாலும், ஈழத்து மக்களின் கண்ணீர் இந்தத் தமிழகப் பத்திரிகைகள் இதயத்தைக் கரைக்கலையான்னு கேட்க வேண்டியது!///

எழுத்து வியாபாரம் இல்லாமல் வேறென்ன மந்தினி ? ஜூனியர் விகடன் என்ன இலவசமாகவா கிடைக்கிறது ? அவர்கள் பத்திரிக்கை நிறுவனம் நடத்துகிறார்கள். சர்க்குலேஷன், இத்யாதி, எழுத்தாளர், நிருபர் சம்பளம், டீ செலவு, காமிரா சார்ஜ் செய்ய கரண்ட் செலவு என்று இருக்கும். அதனால் பத்திரிக்கையை பணத்துக்கு விற்கிறார்கள். விற்கும் எதுவும் வியாபாரம் தானே ? ஏன் உங்களுக்கு ஜூனியர் விகடன் பிடிக்காது, நக்கீரன் பிடிக்கும் என்ற கேள்வியை நாங்கள் கேட்கலாம் தானே ? தமிழ்நதிக்கு ஈழத்தை கூறுகட்டி விற்பது பிடிக்கவில்லை. செத்து மடிந்த சொந்தங்களின் ரத்தம் மண்ணில் காயும் வரையாவது கூட இவர்கள் பொறுக்க மறுக்கிறார்களே என்பதாக பிடிக்கவில்லை. அவரது சொந்த விருப்பு வெறுப்புகளைக்கூடவா அவர்கள் எழுதக்கூடாது ? 

///ந்தக் கட்டுரைக்குத் ‘தமிழ்நதி’யின் படத்தைப் போடலாமேன்னு இணையத்தில் தேடினப்போ, எழுத்தாளர் ஷோபாசக்தியின் இணையப் பக்கத்தில் இந்தக் கட்டுரை கிடைச்சுதுங்க. அதிலிருந்து சில வரிகளை இங்கே கொடுத்திருக்கேன். அதுக்கு மேல நீங்களாச்சு, ஷோபாசக்தியாச்சு! நான் ஒதுங்கிக்கிறேன். ஆள விடுங்க!///

ஷோபா சக்தியின் ஒரு இணைய பக்கத்தில் இருந்து சில வார்த்தைகளையும், ஒரு சுட்டியையும் தந்துள்ளீர்கள். இதற்கு முன் ஷோபா சக்தி ஆணா பெண்ணா என்று கூட தெரியாதவர் நீங்கள். தமிழ்நதி என்று கூகிளில் டைப்பினால் கிடைப்பது அந்த சுட்டி. ஆஹா. தமிழ்நதியை வேறொருத்தன் திட்டியிருக்கான் என்று உங்களுக்கு ஆதரவான சுட்டியாக அதை மாற்று வன்மத்தோடு (இந்த வன்மத்தை பின்னூட்டத்தில் செல்வேந்திரன் சுட்டிக்காட்டிருப்பார்) வெளியிட்டுள்ளீர்கள்...

இந்த முதல் அவதூறு பதிவில் இருக்கும் சில பின்னூட்டங்கள் மிகவும் முட்டாள்தனமானவை. ஒரு சில நானும் போட்டேன்ல, நீயும் போடு என்பது போல மொ(ய்)த்தனமாக இருந்தாலுல் குப்பன் யாஹு பின்னூட்டத்தை மட்டும் சொல்லலாம்.

//என் பார்வையில் நான் பழகிய பல ஈழத் தமிழர்களிடம் , சிங்களர்களிடம் உணர்ந்த ஒன்று, ஈழ தமிழர்களுக்கு மற்றும் சிங்களர்களுக்கும் பரந்த மனப்பான்மை, எண்ணம் இல்லை என்பதே.

சிறிய நாடு என்பதால் மனமும் சிறியதாக இருக்கிறது என்று எண்ணுகிறேன்.//


இவ்வளவு முட்டாள்தனமான பின்னூட்டத்தை இணையத்தில் தேடிதான் எடுக்கவேண்டும். அப்படி பார்த்தால் தைவான் நாடு இலங்கையை விட சிறியது. தைவான் காரர்கள் தலையை பிச்சிக்கொண்டும், மாலத்தீவுக்காரர்கள் மண்டையை ங் ங் ங் ங் என்று சுரண்டிக்கொண்டும், தைமூர்க்காரர்கள் ப்ளாட்பாரத்தில் சட்டையை கிழித்துக்கொண்டும் தான் அலையவேண்டும். நல்லா கெளப்புராங்கப்பா பீதிய. குப்பன் யாஹூ ? யாஹூவே அவுட்டேட்டட். இப்போ எல்லாம் ஜிமெயில். நல்ல டாக்டரை பாருங்க.


அடுத்து மனநல மருத்துவர் ருத்ரன், கீப் ரைட்டின் என்ற பின்னூட்டத்துக்கு கண்களில் நீர் துளிர்த்து உச்சி குளிர்ந்துதது கிருபா மந்தினி.

///ஐயா! மன நல மருத்துவர் டாக்டர் ருத்ரனுங்களா! ஐயோ! என்னால நம்பவே முடியலீங்களே! நீங்க எவ்ளோ பெரியா மனுஷன்.. இந்தச் சாதாரண மனுஷியின் வலைப்பூவுக்கு வந்து படிச்சுப் பார்த்ததோடல்லாம பாராட்டிப் பின்னூட்டமும் போட்டிருக்கீங்க. ரொம்ப நன்றிங்கய்யா! (என் கண்கள்ல துளிர்க்கிற நீரை இங்கே பதிவு பண்ண முடியலை!///


 எனக்கு தெரிந்து அதே மனநல மருத்துவரிடம் சிகிச்சை எடுத்தால் தான் இவருக்குள்ள இம்பீரியாரிட்டி காம்ப்ளக்ஸ், சுப்பீரியாரிட்டி காம்ளக்ஸ், தாழ்வு மனப்பான்மை, அடுத்தவங்க புகழோடு இருப்பது கண்டு பொறாமை, இத்யாதி, இத்யாதி எல்லாம் தீரும்.

//ஹை! வாங்க தமிழ்நதி! ரொம்பக் கடுப்பாயிட்டீங்க போல! நீங்க பெரிய எழுத்தாளர். கவிதாயினி! உங்களுக்கு உங்க கருத்துக்களைச் சொல்ல குமுதம், விகடன் மாதிரியான பெரிய களம் இருக்கு. என் எழுத்துக்களையெல்லாம் எங்கே சீந்துறாங்க? //


இந்த பின்னூட்டத்தில் இருந்தே தெரியவில்லையா ? இவரது உண்மையான நோக்கம், தமிழ்நதியின் மீது ஜீனியர்விகடன் மீது ஏற்பட்டது போன்றதொரு பொறாமை, காம்ப்ளக்ஸ் இத்யாதி என்று.

தமிழ்நதியின் படத்தை இணையத்தில் இருந்து சுட்டு பதிவு எழுதியிருக்கீங்க. யார் அனுமதி கொடுத்தது ? இதுவே மிகப்பெரிய குற்றம். உங்கள் படத்தை போட்டு பதிவு எழுதினால் அனுமதிப்பீர்களா ? பின்னூட்டத்தையே அனுமதிக்க மறுக்கும் நீங்கள் எப்படி பதிவை ?

இந்த அவதூறுகளுக்கும், பின்னூட்டத்தில் செய்யப்பட்ட அவதூறுகள் மற்றும் முட்டள்தனங்களுக்கும் தமிழநதியின் பதில் கீழே:


ஒரே பின்னூட்டத்தில் இவ்வளவையும் வலைப்பூ ஏற்றுக்கொள்ளாத காரணத்தால் இரண்டாகப் பிரித்துப் போடுகிறேன். மீண்டும் சொல்கிறேன்..... வரலாறு சம்பந்தப்பட்டவர்களை மன்னிக்காது. பூமராங் போல ஒருநாள் திருப்பியடிக்கும். அதை நீங்களும் பார்க்கத்தான் போகிறீர்கள். அப்போது இந்த நக்கல், குத்தல், நையாண்டி, ஏளனம் எல்லாம் எங்கு போகுமென்று பொறுத்திருந்து பார்க்கத்தான் போகிறோம்

செந்தழல் ரவி ஈஸ் ஈக்குவல் டு வரலாறு. ஓக்கே க்ரேஸ் கவ். grace cow என்று தன்னை அழைக்குமாறு அவர் எழுதிய அடுத்த முட்டாள்தனத்துக்கு பதில் சொல்ல நாங்க என்ன அவ்ளோ வெட்டியாவா இருக்கோம் ? போய் புள்ளக்குட்டிகள பாருங்க. உங்களைப்போல நாங்களும் புள்ளவளக்கறோம், சோறு ஊட்டறோம். babycenter.uk போனீங்கன்னா எப்படி கம்பூட்டர்ல நேரத்தை வீணடிக்காமல் புள்ளை வளர்ப்பது என்று சொல்வார்கள். அதை செய்யவும். அதை விடுத்து ஈழப்பிரச்சினை நடந்தபிறகு ஏன் தமிழ்நதி காப்பி குடித்துக்கொண்டு போட்டோவுக்கு போஸ் கொடுத்தார் என்று அடுத்தவரின் பர்சனல் வாழ்க்கையில் தலையிடும் வேலை வேண்டாம். 

நமக்கு வந்தா ரத்தம், அடுத்தவருக்கு வந்தா தக்காளி சூஸா ? 

படித்துறை என்ற அழகான பெயரில் பதிவெழுதும் ஷன்முகப்பிரியனை காப்பியடித்து பதிவு வைத்துக்கொண்டு அடுத்தவரை தூற்றிக்கொண்டு ? உங்களது எழுத்து நடை நன்றாக உள்ளது. கலர் கலராக அடித்து நன்றாகத்தான் எழுதுகிறீர்கள். சமையல் குறிப்பு, குழந்தை வளர்ப்பு, கல்லூரி கலாட்டா, சிறுகதை, கவிதை, பதிவர் வட்டம்,  போன்றவற்றை எழுதலாமே ? ஈழம், உலக அரசியல், உள்ளூர் அரசியல் பற்றி ஆழ்ந்து வாசித்துவிட்டு பிறகு எழுதலாமே ? குறைந்தபட்சம் பிரபாகரனாவது யார் என்று தெரிந்துகொண்டு ? வாட் யூ சே ?

டிஸ்கி : பெண்ணியவியாதிகள், பெருவியாதிகள், பெரியாரியவியாதிகள், பின்னூட்ட மொய்வியாதிகள், டாவுவியாதிகள் என்று அனைவருக்கும் சொல்வது. நீங்கள் இங்கே பின்னூட்டம் போடுமுன், ஒரு அவதூறை எதிர்த்து கேள்வி கேட்டுவிட்டு பிறகு வாருங்கள். 

Thursday, February 04, 2010

மதுரையை தலைநகராக கொண்டு தனி தமிழ்நாடு..!!

தனி தெலுங்கானா குறித்த போராட்டங்களும், அதை எதிர்ப்பவர்களும், ஆதரிப்பவர்களும், ஒசமானியா பல்கலைக்கழக மாணவர்களும், சந்திரசேகர ராவும், சிரஞ்சீவியும், தல்லி தெலுங்கானாவும், விஜய சாந்தியும், சிதம்பரமும், ஐதராபாத்தும் ஆங்கில தமிழ், காட்சி ஊடகங்களுக்கும், செய்தித்தாள்களுக்கும் சரியான தீனிபோட்டு வருகின்றன. உஸ்ஸுன்னு ஒத்துக்கறது அப்புறம் அஸ்ஸுன்னு மறுக்கறது என்று மத்திய அரசும் சிதம்பரமும் மறுக்கா மறுக்கா இதை வைத்து அரசியல் செய்ய....அட அதை விடுங்கள்...

தனி தெலுங்கானாவை பற்றி எனக்கு அவ்வளவாக தெரியாது. தெலுங்கனா ஏதோ ஆந்திர மாநிலத்தின் ஏதோ ஒரு மூலையில் இருப்பதாகவும், அவர்கள் அருணாச்சலம், அஸ்ஸாம், நாகாலாந்து மாநிலத்தவரைப்போல கல்வியில், வேலைவாய்ப்பில் ஒதுக்கப்பட்டதால், ஒதுக்கப்படுவதால், புறக்கணிப்பின் வலியில் எழுந்த போராட்டம் தான் தெலுங்கானா என்று நினைத்திருந்தேன்...

அடங்கொன்னியா, தெலுங்கனா என்பது ஆந்திராவின் இதயப்பகுதி. ஐதராபாத்தும் அதை சுற்றிய பகுதிகளும். வளமான பகுதி. போராட்டம் என்று ஆரம்பித்திருந்தால் அதை கோஸ்டல் ஆந்திர மக்களும் ராயலசீமாவினரும் தான் ஆரம்பித்திருக்கவேண்டும். இவ்வளவு நாளாக இதை வைத்து காமெடி செய்பவர்கள், அவர்களது சுயலாபத்துக்காகவே செய்துவந்துள்ளார்கள் என்பது நன்றாக புரிகிறது. ஆமா. அப்படியே புரிஞ்சுட்டாலும் என்கிறீர்களா ? விடுங்க. மேட்டருக்கு வருவோம்.

தலைப்பை பார்த்து கொஞ்சம் ஷாக், கொஞ்சம் எரிச்சல், கொஞ்சம் கடுப்பு எல்லாம் வருகிறதா ? அப்படியென்றால் நேராக பின்னூட்டப்பகுதிக்கு சென்று எதையாவது திட்டிவிட்டு செல்லவும். இல்லையென்றால் மேற்கொண்டு படிக்கவும்.


மதுரையை பொறுத்தவரை அது மிகப்பெரிய ஒரு கிராமம். சென்னையில் இருப்பதுப்போல அண்ணாநகர் ரவுண்டானாவோ, அல்லது மவுண்ட்ரோடு பாலமோ இல்லை. இதிலிருந்தே தெரியவில்லையா ? மதுரை காலம் காலமாக புறக்கணிக்கப்பட்ட ஒரு நகரம்.

சென்னை சரவணா ஸ்டோர்ஸுக்கும் சரவண பவனுக்கும் வருவதற்கு கிட்டத்தட்ட எட்டு முதல் பத்து மணி நேர பயண நேரத்தையும் பணத்தையும் காலம் காலமாக விரயம் செய்துவருபவன் மதுரை தமிழன். எங்களை எல்லாம் பார்த்தால் இளிச்சவாயர்களாக தெரிகிறதா ?

அது மட்டுமா , மெரினா பீச் இருக்கிறதா, அண்ணா சமாதி இருக்கிறதா, அல்லது கன்னிமரா நூலகம்தான் இருக்கிறதா ? ஏன் வரப்போகும் அணு மின் நிலையம் கூட சென்னைக்கருகில் கல்பாக்கத்தில் தானே வரப்போகிறது ? இதிலிருந்து இனிமேலும் சென்னை மதுரையை புறக்கணிக்கத்தான் போகிறது என்பது தெளிவாக தெரிகிறது.

கோடம்பாக்கத்துக்காரர்கள் துட்டுக்காக சுப்ரமணியபுரம், மதுரை டு தேனி வழி ஆண்டிப்பட்டி, மதுரை சம்பவம், மதுரை முண்டியாண்டி விலாஸ் என்று நூற்றுக்கணக்கில் மதுரையை வைத்து படம் எடுத்து அதன் லாபத்தை தங்கள் முதலை வாயில் போட்டுக்கொள்கிறார்கள். பாட்டு ஹூட்டிங் கூட காஷ்மீரிலோ, மலேசியாவிலோ போய் எடுப்பார்கள். இதனால் மதுரைக்கோ, மதுரையில் இட்லிக்கடை நடத்தும் முருகனுக்கோ என்ன பிரயோஜனம் ?

இனியும் ஏமாற மதுரை தயாராக இல்லை. பாண்டிய நாட்டுக்கு என்ன வரலாறு இல்லையா ? குமரிக்கண்டத்தில் கடல்கோளால் (அதாங்க சுனாமி) அழிந்த தென்மதுரை 72 ஊர்களுக்கு தலைநகர். அதுக்கபுறம் கபாடபுரம். அது 300 ஊருக்கு தலைநகர். அதுக்கும் வந்தது சுனாமி. அதுவும் அழிந்தது. அதுக்கப்புறம் இப்ப இருக்குற மதுரை. மதுரை மீனாட்சி இமயமலை வரை படையெடுத்து வெற்றிபெற்றார். அவர் வம்சம்தானே இந்தியாவையே கட்டி ஆண்ட மவுரியர்கள் ?

மதுரைக்காரகள் வரலாற்றிலும் குறைந்தவர்கள் இல்லை. வீரத்திலும் குறைந்தவர்கள் இல்லை

பண்பெணப்படுவது பாடறிந்து ஒழுகல்..

(பைப்புல தண்ணி ஒழுவுதே அது இல்லை. இது கலித்தொகையில வர்ர ஒழுகல். நடத்தல்னு அர்த்தம். ஆங். எங்க விட்டேன். பண்பு. ஆமாம். பண்பிலும் குறைந்தவர்கள் இல்லை. நீதியிலும் குறைந்தவர்கள் இல்லை

ஐ யம் நாட் டெல்லிங் அபவுட் இந்த காலத்து மதுரை சுப்ரீம் கோர்ட்டு கிளை. நான் சொல்ல வர்ரது கண்ணகிக்கு நீதி வழங்க உயிர்விட்ட பாண்டியன் நெடுஞ்செழியனையும், நீதிக்காக கையை வெட்டிக்கிட்ட பொற்கை பாண்டியனையும் சொல்றேன்.

இராமாயணத்தில், மகாபாரதத்தில், அசோகர் கல்வெட்டுக்களில், சிங்கள மகாவம்சத்தில், மவுரியர் பட்டயங்களில், கிரேக்க வரலாற்றில் எங்கெங்கும் பாண்டியர் பற்றிய செய்தி உண்டு. அது மட்டுமா, அகநாநூற்றில், புறநாநூற்றில், கலித்தொகையில், எல்லா சங்க இலக்கியங்களிலும் பாண்டிய நாட்டைப்பற்றிய மேட்டர் இருக்குதுங்க.

இது மூலமா நீ என்ன சொல்ல வர்ரேன்னு தானே கேக்குறீங்க ? மதுரையை தலைநகராக கொண்டு பாண்டிய நாடு அமைக்க காமராஜர் பல்கலை கழகம் மற்றும் அமெரிக்கன் கல்லூரி மாணவர்களை கொண்டு போராட்ட கமிட்டி அமைக்கப்படும். மதுரையில் ஒரு இட்லிக்கடை இயங்க விடமாட்டோம். அமிர்தம் தியேட்டர் அல்லது மேற்கு கோபுர வீதியில் போராட்ட கமிட்டி அலுவலகம் அமைக்கப்படும்.

ரூல்ஸ் அண்டு ரெகுலேஷன்ஸ் பார் த நியூ ஸ்டேட். (உள்துறை செயலாளர் இதை எழுதி ட்ராப்டில் போட்டு வைத்துக்கொள்ளலாம். அதாவது சேமித்து வைத்துக்கொள்ளலாம். நாளை பின்னே சிதம்பரம் சார் வெள்ளை வேட்டி சட்டை துண்டு அணிந்துகொண்டு, கையில் வெள்ளை பேப்பர் வைத்துக்கொண்டு நைட்டு எட்டுமணிக்கு சோனியாஜி வீட்டு வாசலில் பத்திரிக்கை பேட்டி கொடுக்கும்போது அப்படியே பத்திரிக்கைகளுக்கும் டிவி சேனல்களுக்கும் ரிலீஸ் செய்ய வசதியாக இருக்கும்.)

1. கோலிவுட்டைப்போல மதுரையில் தனி திரைப்பட துறை உருவாக்கப்படும். மாட்டிவுட் என்று அது அழைக்கப்படும். மாட்டுத்தாவணி பஸ்டாண்டு அருகில் அது இருக்கும் என்பதை தனியாக சொல்லவேண்டுமா ?

2. வண்டியூர் தெப்பக்குளத்தில் இருந்து கொடைக்கானலுக்கு நேரடி மேம்பாலம் அமைக்கப்படும். அந்த காண்ட்ராக்ட் கழக உறுப்பினர்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும்.



3. கங்கை நதியை வைகை நதியுடன் இணைக்க மத்திய அரசு மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். இதன் மூலம் அமைச்சர் அழகிரி மன்னிக்கவும், அழகர் ஆற்றில் இறங்கும்போது நிறைய தண்ணீர் ஓடுவது போல செய்யப்படும்.



4. பாத்திமா கல்லூரி, மீனாட்சி கல்லூரி, யாதவா கல்லூரி ஆகிய இடங்களுக்கு வெளியே மாணவர்கள் நிம்மதியாக சைட் அடிக்க வசதியாக நிழல் குடைகள் கட்டப்படும்.

5. வன்முறையற்ற சமுதாயத்தை உருவாக்க காந்தி மியூசியத்தில் நடிகர் நாசர் தலைமையில் இளைஞர்களுக்கு வகுப்பு எடுக்கப்படும். இதில் அட்டாக் ஆறுமுகம், வெடிகுண்டு முருகேசன், சைக்கிள் செயின் கோபு, முட்டை பாபு போன்றவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும்.



6. அனைத்து இட்லிக்கடைகளிலும் இட்லிப்பொடி மற்றும் எண்ணை அரசு சார்பில் இலவசமாக வழங்கப்படும். பரோட்டாவுக்கு எக்ஸ்ட்ரா சால்னாவுக்கு அரசு மானியம் தரும்.



7. வெய்யில் அதிகமாக உள்ள காலங்களில் மக்களுக்கு இலவச ஜிகிர்தண்டா பந்தல் அமைக்கப்பட்டு, அரசு சார்பில் ஜிகிர்தண்டா வழங்கப்படும்.



8. மதுரை கேபிள் டிவி அமைக்கப்பட்டு, அனைத்து மக்களுக்கும் சன் டிவி, விஜய் டிவி, கலைஞர் டிவி ஆகியவை இலவசமாக காட்டப்படும். அதில் வாடா...என்று ஒரு ரவுடி ஹீரோவை என்று சண்டைக்கு அழைக்கும் காட்சி மறுபடி மறுபடி காட்டப்பட்டு, மதுரை மக்களுக்கு வீரம் டிவி வழியாக புகட்டப்படும்.



9. அலங்கா நல்லூர் ஜல்லிக்கட்டு டியூசன் செண்டர் என்று அரசு சார்பில் ஆரம்பிக்கப்பட்டு, சின்ன சந்தில் உயிருக்கு பயந்து ஓடிவரும் மாட்டின் வாலை பிடித்து தொங்கி அந்த மாட்டை டார்ச்சர் செய்வது எப்படி என்று பயிற்றுவிக்கப்படும். மேலும் மத்திய அரசு மூலம் ஜல்லிக்கட்டை ஒலிம்பிக்கில் இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.



10. திருமலை நாயக்கர் மஹால் காதலர் அமைதிப்பூங்கா என்று மாற்றி அமைக்கப்பட்டு, காதலர்கள் மற்றும் கள்ளக்காதலர்கள் அமைதியாக சந்திக்க ஏற்பாடு செய்யப்படும்.

11. தேர்தல் அறிவிப்பதற்கு முன்பே அனைவருக்கும் அமவுண்டு செட்டில் செய்யப்பட்டு, வேட்பாளர்கள் அன்னப்போஸ்டில் வெற்றிபெற ஏற்பாடு செய்யப்படும். வறுமை மற்றும் பஞ்சத்தால் அதிக கடன்காரர்கள் உள்ள தொகுதி எம்.எல்.ஏக்கள் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை போட்டுத்தள்ளப்பட்டு மறு தேர்தலுக்கு ஏற்பாடு செய்யப்படும்.



12. பெண்களுக்கு சம உரிமை வழங்கும்பொருட்டு, சிவகங்கை காளையார் கோயில் போல புதுக்கோட்டையில் கண்ணியார் கோயில் என்று புதிய கோயில் நகர் உருவாக்கப்படும்.



13. நடிகர் நாகேஷுக்கு அஞ்சலி செலுத்தும் பொருட்டு சுருளி நீர்வீழ்ச்சி நாகேஷ் நீர்வீழ்ச்சி என்று பெயர் மாற்றம் செய்யப்படும். அதே போல தூத்துக்குடி என்ற பெயர் தலைவர் பேத்தியின் வாயில் நுழையாததால் சாத்துக்குடி என்று பெயர் மாற்றம் செய்யப்படும்.

14. பழமுதிர்சோலை என்ற பெயரில் மதுரையெங்கும் அரசு சார்பில் ஜூஸ் செண்டர்கள் ஆரம்பிக்கப்பட்டு, மக்களுக்கு இலவச லெமன் ஜூஸ் வழங்கப்படும். இதன் மூலம் மக்கள் குற்றாலத்துக்கு செல்லும் பயண செலவும் மிச்சப்படுத்தப்படும்.

15. குழந்தைகள் குஜாலாக இருக்கும்பொருட்டு, பள்ளிகளில் சினிமா பீரியட் என்று ஒரு பீரியட் உருவாக்கப்பட்டு, விஜய், அஜீத், சிம்பு, தனுஷ் நடித்த பல படங்கள் திரையிடப்படும்.



16.தியாகராஜபுரம், சென்னை சம்பவம், சென்னை டு செங்கல்பட்டு வழி மதுராந்தகம் போன்ற படங்கள் எடுக்கப்பட்டு, இது நாள் வரை மதுரையை நக்கல் செய்த சினிமா தயாரிப்பாளர்களை நக்கல் செய்வோம்.



17. மதுரை மல்லி என்ற பெயரில் இண்டர்நேஷனல் லெவலில் பேடண்ட் வாங்கப்பட்டு, இனி மதுரை மல்லி மதுரைக்கே என்ற கோஷத்துடன் எல்லாரும் மல்லிகைப்பூ சூடிக்கொள்ள அரசு உதவும்.

18. மதுரை மத்திய சிறையில் கைதிகள் குஜாலாக இருக்க தனியார் தொலைக்காட்சிகள், மொபைல் தொலைபேசி வசதி, குளுகுளு ஏசி வசதி போன்றவை செய்து தரப்படும். தமிழக அரசு அறுபது வயதில் கைதிகளை விடுவிப்பதற்கு போட்டியாக நாற்பது வயதிலேயே அனைவரையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.


19. மதுரை ஆதீனத்துக்கு அமைதிக்கான நோபல் பரிசுக்கு ஏற்பாடு செய்யப்படும். அப்படி கிடைக்கவில்லை என்றால் பாண்டிய அரசே நோபல் என்ற பரிசை உருவாக்கி அவருக்கு தரும். அவர் சிக்ஸ் பேக் பாடியுடன் இருப்பதால் அட்லீஸ்ட் உடற்பயிற்சிக்கான நோபல் பரிசாவது கிடைக்க வழிசெய்யப்படும்.



20. தமிழ்நாட்டில் இருக்கும் மீன்பாடி வண்டிகளை எதிர்த்து மத்திய சுப்ரீம் கோர்டில் வழக்கு தொடரப்படும். மீன் என்பது மதுரை கொடி. அதை வண்டிக்கு வைத்து மதுரை கொடியின் மாடஸ்டியை குலைப்பதை எப்பாடு பட்டாவது தடுத்து நிறுத்தப்படும்.



21. நடிகர் முரளி கருப்பாக இருப்பதால் அவரை பாண்டிய நாட்டின் ஆஸ்தான நடிகராகவும், வைரமுத்து பாண்டிய அரசின் ஆஸ்தான கவியாகவும் செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும். தெக்கத்தி பொண்ணு என்ற தொடரை எடுத்து மதுரையின் புகழ் பரப்பும் பாரதிராஜாவை பாண்டிய அரசின் ஆஸ்தான டைரக்டராக நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும். ஆயிரத்தில் ஒருவன் படத்தில் பாண்டிய ஆபத்துதவியாக நடித்த ரீமா சென்னுக்கு சிறந்த நடிகை விருது பாண்டிய அரசின் சார்பில் வழங்கப்படும்.



22. மதுரை மைந்தன் கேப்டன் விஜயகாந்த தலைமையில் பாக்கிஸ்தான் தீவிரவாதிகளை ஒழிக்க தனி அமைப்பு ஏற்படுத்தப்பட்டு, அவர்கள் எந்த முட்டிக்கால் அளவு தண்ணீர் இருக்கும் டண்ணலில் ஒளிந்திருந்தாலும் அவர்களை சுழட்டி சுழட்டி அடிக்கவும், மேலும் ஹிந்திக்கார தீவிரவாதிகளை தமிழில் புத்திமதி சொல்லி திருத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
வசனகர்த்தா திரு லியாகத் அலிகான்.



23. வைகை புயல் (வைகையில் தண்ணி வரும், புயல் வருமா ?) நடிகர் வடிவேலு மதுரையில் இருந்து கிளம்பி தமிழ் கூறும் நல்லுலகத்தை காமெடியாக்குவதால்,  பெங்களூரில் அனில் கும்ளே சர்க்கிள் இருப்பது போல எஸ்.எஸ் காலனியை வடிவேலு காலனி என்று மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

24. இதுபோன்ற பல ஐடியாக்கள் கன்னாபின்னாவென செயல்படுத்தப்பட்டு, மக்கள் எப்போதும் மகிழ்ச்சிக்கடலில் திளைக்கவைக்கப்பட்டு, மதுரையில் கடல் இல்லாத குறை தீர்க்கப்படும். தமுக்கம் மைதானம் அருகே மெரினா என்ற பெயரில் நீச்சல் குளமும் கட்டப்பட்டு, அதில் கோவணம் கட்டியவர்கள் அனைவருக்கும் அனுமதி அளிக்கப்படும்..

25. இந்த பிரச்சினைக்காக முதலில் குரல்கொடுத்த டாக்டர் சேதுராமனுக்கு காமராஜர் பல்கலைகழகம் மூலமாக மேலும் ரெண்டு மூனு டாக்டர் பட்டம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்...


இனி இல்லை புறக்கணிப்பின் வலி.


வாழ்க மீன்கொடி... வாழ்க பாண்டிய மணி(money)த்திரு நாடு...!!!

டிஸ்கி அதாவது டிஸ்க்ளைமர் :

படங்கள் நெட்டில் சுட்டவை. பதிவு யாரையும் புண்படுத்த அல்ல. அப்படி யாராவது கோச்சுக்கிட்டால் ஆட்டோ அனுப்ப என்னுடைய முகவரியை தருகிறேன். நன்றி. எல்லோரும் வாக்களிக்கவும். வாக்குக்கு அமவுண்டு எதுவும் தரமுடியாத கையறு நிலையில் நான். மேலும் பதிவையோ அதன் பாகங்களையோ, குமுதம் ஆவி குங்குமம் புதிய தலைமுறை புத்தகங்கள் வெளியிட விரும்பினால் அதனை வெளியிட்டுவிட்டு, தக்க சன்மானத்தை என்னுடைய முகவரிக்கு அனுப்பவும். (ஏற்கனவே ஆனந்தவிகடன் சன்மானம் அனுப்பியுள்ளது)..மீண்டும் நன்றி..பதிவை எழுதியவர் செந்தழல் ரவி அட்டு tvpravi.blogspot.com
..
..
..

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால்

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால் டயபட்டீஸ் / நீரிழிவு / சர்க்கரை நோயை விரட்ட நியான்டர் செல்வனால் ஆரம்பிக்கப்பட்ட இந்த குழுமத்திற்கு ( https://www....