Posts

Showing posts from 2010

தமிழ்நதியின் புத்தக வெளியீடு

Image
அன்பு நண்பர்களுக்கு,
எதிர்வரும் ஜனவரி 2ஆம் திகதியன்று மாலை 6 மணிக்கு, “ஈழம்: தேவதைகளும் கைவிட்ட தேசம்“  என்ற தலைப்பிலான எனது கட்டுரைத் தொகுப்பொன்று காலச்சுவடு பதிப்பகம் மூலம் வெளியிட்டு வைக்கப்படவுள்ளது.  அதனோடு சேர்த்து மேலும் 8 புத்தகங்கள் வெளியிடப்படவிருக்கின்றன. இடம்- அண்ணா சாலையில் உள்ள தேவநேயப் பாவாணர் நுாலக அரங்கம்.
மேலதிக விபரங்களுக்கு அழைப்பிதழை இணைத்துள்ளேன். நண்பர்கள் அனைவரும் கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டுமாய் அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
நட்புடன் தமிழ்நதி

வாழ்த்துக்கள் தமிழ்நதி அவர்களே !!

கோங்கூரா சட்னி !

Image
.
.
கொஞ்சம் ஆந்திர அரசியலை ஸ்னாப்ஷாட் வடிவில் கொடுக்கிறேன்.* தற்போதைய முதல்வர் கிரண்குமார் ரெட்டிக்கு (முன்னாள் ஸ்பீக்கர்) ஒழுங்காக தெலுங்கு பேசவே தெரியாது.

* தெலுங்கானாவுக்கான கிருஷ்ணா கமிஷன் ரிப்போர்ட் டிசம்பர் 31 ஆம் தேதி மத்திய அரசிடம் ஒப்படைக்கப்படவுள்ளது. முடிவு சாதகமாக இருந்தால் 2011 இல் தெலுங்கானா பிறக்கும்.* சிரஞ்சீவிக்கு மக்கள் ஆதரவில்லை. அவர் நமது கேப்டன் விஜயகாந்தை போல ஓட்டை பிரிக்கும் வேலையை மட்டும் செய்துவருகிறார்.* ஜகன்மோகன் ரெட்டி காங்கிரஸை பெரிய அளவில் கூறுபோடவில்லையென்றாலும், சிரஞ்சீவி போல (20 ~ 30) எம்.எல்.ஏக்களை பெறும் அளவுக்கு செல்வாக்கு பெற்றவராக உள்ளார். இது காங்கிரசுக்கு ஆப்பு.

* கடந்த தேர்தலில் சிரஞ்சீவி தெலுங்கு தேசத்தின் ஓட்டுக்களை பிரித்ததில் காங்கிரஸ் வெற்றிபெற்றது ( சுமார் 1 ~ 2 சதம்). நம்மூர் கேப்டன் கதை அங்கேயும்.* தெலுங்கு தேசத்தின் ஓட்டு வங்கி அப்படியே உள்ளது. அதனால் மீண்டும் சந்திரபாபு நாயுடுவுக்கு வாய்ப்பு உண்டு.* தல்லி தெலுங்கானா என்று ஆரம்பித்து கல்லா கட்ட நினைத்த விஜயசாந்தி, விஜய பூந்தியாகிவிட்டார்.* தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி தலைவர் சந்திர…

தண்டவாளம் - குட்டிக்கதை

Image
சிவப்பு கொடியுடன் ஓடிவரும் இரண்டு இளைஞர்களை பார்த்து அதிர்ந்த நெல்லை எக்ஸ்ப்ரஸ் ரயில் ஓட்டுனர், ரயிலை உடனடியாக நிறுத்தினார்.

தண்டவாளம் உடைஞ்சு கெடக்குதுங்க !!!

அடுத்த நாள் நாளிதழ் செய்தி. நெல்லை எக்ஸ்ப்ரஸ் ரெயிலை சாதுர்யமாக நிறுத்தி பயணிகளின் உயிரை காத்த வாலிபர்கள். ரயில்வேயில் வேலை வாய்ப்பு. அமைச்சர் அறிவிப்பு.

அடுத்த நாள் இரவு டீக்கடையில்.

தப்பில்ல. எதுவும் தப்பில்ல என்றான் சுகுமார்.

என்ன தோழா சினிமா டயலாக் பேசுற ?

இது சரவணன். இப்போதைய அரசு ஊழியர். ரயிலை நிறுத்திய இளைஞர்களில் ஒருவன்..

புன்னகைத்தான் தோழன் சுகுமார்.

ஆமாம், நாற்பது ஆண்டுகள் லைன் மேனாக இருந்த உன்னோட அப்பாவை தொழில்நுட்ப காரணங்களுக்காக நடந்த விபத்துக்காக பணியை விட்டு டிஸ்மிஸ் செய்தாங்க இல்லையா ? அதனால் உன்னுடைய வாரிசுரிமை பணியும் கிடைக்காம போச்சு. தண்டவாளத்தை தண்டவாளத்தால தானே அடிக்கனும் ?

இருவரும் சேர்ந்து வெடிச்சிரிப்பு சிரித்தார்கள்...!!

வருத்தம் தெரிவித்தவர்களுக்கு நன்றி !!!

நடந்துவிட்ட ஒரு துக்க நிகழ்வுக்காக தொலைபேசியிலும், மின் அஞ்சலிலும், நேரிலும் வந்து என்னுடன் பங்கெடுத்துக்கொண்ட அனைத்து பதிவுலக நன்பர்கள் / தோழிகள் அனைவருக்கும் நன்றி !

ஆற்றுப்படுத்த இயலாத ஒன்றாயினும், என் பின்னே இத்தனைபேர் இருப்பது தெரிந்து ஆறுதல் !

மிஸ்டர் எக்ஸுடன் ஜிடாக் சிறு விவாதத்தின் தொகுப்பு

Image
செந்தழல் ரவி : தல இருக்கீங்களா ?

எக்ஸ் : ம் சொல்லுப்பா. என்ன மேட்டர் ? ரொம்பநாளா ஆளை காணோம் ?

செந்தழல் ரவி : கொஞ்சம் பிஸி. அதை விடுங்க. அந்த பெரிய எழுத்தாளர் இன்னொரு எழுத்தாளரோட கதையை சுட்டுட்டாராமே ? அந்த‌ மூல‌க்க‌தையை நீங்க‌ ப‌டிச்சிருக்கீங்க‌ன்னு கேள்விப்ப‌ட்டேன் உண்மையா ?

எக்ஸ் : எங்க‌ப்பா பெரிய‌ புத்த‌க‌ சேக‌ரிப்பாள‌ர்னு தெரியும்ல‌ ? அவ‌ர்ட்ட முடவன் வளத்த வெள்ளைப்புறா இருந்த‌து. ஒருமுறை போஸ்ட் கார்டு கூட‌ போட்டார் எழுதின‌ எழுத்தாள‌ருக்கு.

செந்த‌ழ‌ல் ர‌வி : அதை கேள்விப்ப‌ட்டேன். ஆனா பின் தொட‌ரும் நிழ‌லின் குர‌ல் நீங்க‌ எழுத்துகூட்டியிருக்கீங்க‌ன்னு சொன்னாங்க‌. அது உண்மையா. ?

எக்ஸ் : ஆமாம். நான் அவ‌ரோட‌ பெரிய‌ ர‌சிக‌னாச்சே. ப‌டிக்காமே இருப்பேனா ?

செந்த‌ழ‌ல் ர‌வி : யோவ் அப்ப‌ ப‌ட்டுனு மேட்ட‌ரை போட்டு உடை. சுட்டாரா இல்லையா ?

எக்ஸ் : ரவி என்ன‌ காமெடியா ? அது எத்த‌னை ப‌க்க‌ம் ? இது எத்த‌னை ப‌க்க‌ம் ? 26 எங்கே ? 700 எங்கே ? வ‌டிவ‌ம் ஒன்னா இருக்குது அப்ப‌டீங்க‌ற‌துக்காக‌ உருண்டையா இருக்க‌ற‌து எல்லாம் ப‌ந்தா ?

செந்தழ‌ல் ர‌வி : இல்லீங்ணா. துரத்தப்பட்ட தொழிற்ச‌ங்க‌வாதி. குடிகார‌ன். கண்டெடுக…

To Mr.மணிஜி அங்கிள்

Image
மிஸ்டர் மணிஜி, இது என்னோட ரெண்டாவது பர்த்டே ட்ரஸ். துணிக்கடை விளம்பரத்துக்கு கால்ஷீட் தருவேன். ஆனா டிவிஆர் அய்யா மாதிரி அவுட் ஆப் போக்கஸ்ல காட்டமாட்டேன்னு ப்ராமிஸ் பண்ணுங்க !!

ஆராவ‌முத‌ன் நாட்குறிப்பு

நான் ஒரு ஆராய்ச்சி மாணவன். நாங்கள் ஈடுபடும் ஆராய்ச்சி கொஞ்சம் கடினமானது என்றபடியால் அதிக பணிசுமை ஆகிவிடும் நாட்களில் பல்கலைகழக ஆய்வகத்திலேயே உறங்குவதுண்டு. இன்றும் அப்படித்தான். பல முறை தோல்விகளில் முடிந்த எங்களது ஆராய்ச்சி பணியில் ஒரு முறை கூட நான் சலிப்படைந்ததில்லை. அதில் என் சுயநலனும் உண்டு. அல்லும் பகலும் பாடுபட்டு இந்த ஆராய்ச்சியில் வெற்றி பெற்று ஆய்வு கட்டுரையை சமர்ப்பித்தால் மட்டுமே அரசிடம் இருந்து நிதி உதவி மற்றும் பணி வாய்ப்பு கிடைக்கும். அதன் மூலம் தங்கை திருமணம், அம்மாவுக்கு உடல் நலன் சிகிச்சை, காதலியுடன் திருமணம் என்று என் ஆயிரம் கன‌வுகள் நிறைவேறும். ஆய்வகத்தில் எங்கள் இயந்திரத்திலேயே நான் உறங்கும் நாட்களில் சீக்கிரம் எழுந்துவிடுவது வழக்கம். அங்கே குளிக்கும் வசதியில்லை. அருகில் இருக்கும் தேநீர்க்கடையில் ஒரு தேநீரும், முகம் அலம்ப கொஞ்சம் தண்ணீரும் மீண்டும் பணியை துவக்க போதுமானது. சாலையில் இறங்கி நடந்தேன். இன்றைக்கு எல்லாமே புதிய‌தாயிருக்கிற‌து. தேநீர் க‌டையில் பெரிதாக கூட்டமில்லை.வ‌ழ‌க்க‌மான‌ தேநீர் போடும் ஆசாமி மாறியிருந்தார். ச‌ட்டைபையை தொட்டுப்பார்த்தேன். கொஞ்ச‌ம் சில்ல‌றை…

எப்பதான் கேக் வெட்டுவீங்க ?

Image

போண்டா மாதவன் பதில்கள்

புரளி மனோஹர் சொல்கிறான் என்பதால் மட்டுமல்ல. என்னுடைய ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கேட்டுக்கொண்டதாலும் (சரி விடுங்க பத்துக்கணக்கான) இந்த கேள்வி பதில் பகுதியை மீண்டும் ஆரம்பிக்கலாம் என்று என் அப்பன் தகர நெடுங்குழைகாதன் சத்தியமாக முடிவெடுத்ததில். இனி நேரே பதில்கள். (கேள்விகள் ?) அனானி ஆப்ஷன் இல்லாததால் என்னுடைய நன்பர்கள் பல ப்ளாக்கர் ஐடிகளில் வருவார்கள்.

செர்வாண்டிஸ்


கேள்வி : கோவை எண்கவுண்டர் சம்பவத்தை பற்றி நீங்கள் ஏன் இன்னும் பதிவு போடவில்லை ?


போண்டா : நானும் ஒரு பதிவை எழுதி வைத்திருந்தேன். எண்கவுண்டர் தவறு. அதே நேரம் பாலியல் வண்புணர்வும் தவறு. மேலும் சிறுமிகளும் இதற்கு காரணம் என்பது போல. மேலும் இஸ்ரேலில் இதை விட சிறப்பாக எப்படி செயல்படுவார்கள் என்பது பற்றியும். மாற்றுக்கருத்துக்களை எழுதிய உண்மைத்தமிழனுக்கே ஏராளமான மைனஸ் ஓட்டுக்கள் விழும் நிலையில், பார்வதி அம்மாள் விவகாரத்தில் அனைவரும் துப்பிய எச்சில் இன்னும் பாத் டப் அளவுக்கு ரொம்பியிருப்பதால், பதிவை அப்படியே ட்ராப்டில் வைத்துவிட்டேன். கடுமையாக உழைக்கும் கவுண்டர் சாதி என்று ஒரு பதிவு உள்ளது. அதை படித்துக்கொள்ளுங்களேன் ?

நாட்டாமை
கேள்வி :  தமிழ…

தீபாவளியன்று பாத்ரூம் போக சிறந்த நேரம் எது ?

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
உலகம் முழுவதும் வாழும் இந்துக்கள் கொண்டாடும் பண்டிகைகளில் தீபாவளி முக்கிய இடம் பெற்றுள்ளது. வீடு முழுவதும் தீப ஒளி ஏற்றி, பட்டாசுடனும், தித்திக்கும் இனிப்பு வகைகளுடனும் உற்றார், உறவினருடன் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது.
தீபாவளிக்கு மற்றொரு சிறப்பும் உண்டு. இது இந்துக்கள் பண்டிகை என்றாலும், இந்தியா முழுவதும் இந்த விழாவை சாதி, மத வேறுபாடின்றி அனைத்து தரப்பினரும் கொண்டாடுவதை காணலாம். எனவே, இதை தேசிய திருவிழா என்றும் கருதலாம்.

இத்துனை சிறப்புப் பெற்ற தீபாவளி பண்டிகை, நாளை கொண்டாடப்படுகிறது.

தீபாவளியை கொண்டாடுவதற்கான நேரம் எது என்பது குறித்து, சென்னை மைலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் வேதவாத்தியார் பிரம்மஸ்ரீ ஏ.ஜி.ஸ்ரீனிவாச சாஸ்திரிகள் கூறியதாவது:- "நரகாசுரனுடன் கிருஷ்ணர் வதம் செய்தபோது, சோர்வுற்ற நிலையில், நரகாசுரனுடன் ராதை போரிட்டார் என்றும், பெண்ணால் நரகாசுரன் அழிந்தான் என்றும் புராணங்களில் கூறப்பட்டுள்ளது.

நரகாசுரன் வதம் செய்யப்பட்ட நிலையில், "நான் முக்தி அடைந்த தினத்தில், அனைவரும் புண்ணிய லோகத்தை அடைய வேண்டும் என்றும், புண்ணிய நதிகளில் மு…

பதிவுலகை விட்டு போண்டா மாதவன் விலகுவானா ?

பார்வதி அம்மாள் பற்றி ஒரு பதிவொன்றில் தமிழ்மண வரலாற்றிலேயே அதிக நெகட்டிவ் ஓட்டுகளை குவித்து,  தென்பென்ணை, பாலாறு, வைகையாறு போல எல்லோரும் முகத்தில் துப்பிய எச்ச்சில் ஆற்றில் நீந்தி, மூஞ்சியில எதுவும் படல ! என்று எழுந்துவந்த போண்டா மாதவன், தனது பதிவு ஒன்றில் தான் எக்காலத்திலும் தமிழ்மணத்தினை விட்டு விலகப்போவதில்லை என்று அறுதியிட்டு உளறியுள்ளார்.

இதுபற்றி வலையுலக சுனாமி ஒன்று எழுதிய பதிவு உங்கள் பார்வைக்கு !

அதாவது மற்றவர்களின் தனிப்பட்ட தகவல்களை திரட்டுவதே அதை வைத்து எதாவது கல்லா கட்டத்தான் என்ற நிலையில், போண்டா வலைப்பதிவர் சந்திப்புகளில் கையில் நோட்டுடன் குந்தியிருந்த காலம் ஒன்று. போலி டோண்டு பிரச்சினையில், தன் பெயர் உட்பட எதையும் வெளிப்படுத்த விரும்பாத பதிவர்களை பற்றி தெரிந்தும் லஜ்சையில்லாமல் அங்கே நீங்கள் வேலை செய்யும் கம்பெனி எது என்று நோண்டும் போண்டா மாதவனை பார்த்து பேஸ்த் அடித்து தெறித்து ஓடிய கும்பல் அதிகம்.

நண்டு அல்லது நொரண்டு பதிவில், நாத்திகர்கள் என்பவர்கள் கொலைவெறியோடு நாத்திகத்தை கடைபிடிக்கவேண்டும் என்று வலியுறுத்துகிறார். திருக்குறளையும் துணைக்கழைக்கிறர். இன்றைய சமூச்சூழல…

போண்டா மாதவன் கலக்கும் நாராயண ! நாராயண !!

Image
குறிப்பிட்ட படத்தினை இணையத்தில் இருந்து எடுத்து அதில் ஒரு சின்ன போண்டாவை இணைத்துள்ளேன் ! பொருந்தி வருதா என்று பாருங்கள் !!!

இவ்வளவு நாளாக காத்திருந்த வாய்களுக்கு (அரிசி) அவல் போடத்தான் போண்டா சார் இந்த கல்யாணத்துக்கு போனார் என்பது இப்போது புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். தங்கள் தளத்தில் பகுத்தறிவை பேசுகிறார்கள் என்று கையை பிசைந்துகொண்டிருந்த கும்பல் போண்டா சார் பதிவில் புகுந்து விளையாடுகிறது.

குழலி ஒருமுறை போண்டா சாரை மஸோக்கிஸ்ட் என்றார். அதாவது தன்னை வருத்தி, அதிலே சுகம் காணுதல். அடித்து பிடித்தாவது எதாவது ஹிட்ஸ் தேத்துதல். அப்பத்தானே நன்பர்களுக்கு நன்றி என்று பதிவிடலாம் ? மேலும் போண்டா சாரின் பதிவில் வரும் பல அனானீஸ் அவரின் புரளி மனோஹர் கோஸ்டியில் இருந்தே வருகிறார்கள். நாட்டாமை, கிருஸ்னன், செங்கோட்டையன், பனங்காட்டையன் என்று வாய்க்கு வந்தபடி தனித்தனியாக உருவாக்கிய ஐடிகள் எல்லாம் இப்போது உபயோகப்படுவதில்லை. அனானியை திறந்துவிட்டாச்சு !!!

என்னைய அடிச்ச ரவுடிகள் எல்லாம் ஊரை விட்டே ஓடிட்டானுங்க என்ற வடிவேலு பாணியில் சொல்லிக்கொண்டு செய்த நாரதர் வேலையை எல்லோரும் பார்த்துக்கொண்டுதானே இரு…

இந்திய கடல்வாழ் பல்கலைகழகத்தில் பட்டய மற்றும் பட்ட படிப்புகள்

தமிழக அரசின் முயற்சியால் சென்னையில் அமைந்துவிட்ட இந்திய கடல்வாழ் பல்கலைகழகத்தின் பொது நுழைவு தேர்வு பற்றிய அறிவிப்பு அந்த பல்கலையின் இணையதளத்தில் வெளியாகியுள்ளது.

http://www.imu.tn.nic.in/

பட்டப்படிப்பு மற்றும் பட்டய படிப்புகளுக்கான முதல் பேட்ச். இந்த தேர்வில் வெற்றி பெற்றுவிட்டாலே அரசு வேலை வாய்ப்பு உறுதி என்ற நிலை. இந்த அற்புதமான வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள மாணவர்கள் தயங்கவேண்டாம். படிப்புக்கான தேர்வு தகுதிகள், உடல் தகுதி தேர்வுகள், கட்டண விவரம்  அனைத்தும் இணைய தளத்திலேயே உள்ளது.( கொஞ்சம் அதிகமாக உள்ளது, அரசு இதனை தாழ்த்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு வேவியர் செய்துவிட்டால் மிக சிறப்பக இருக்குமே ?)

இரத்த படலம் பற்றிய யுவக்ருஷ்ணா பதிவு

Image
சிங்கத்தின் தீபாவளி ஸ்டார்ட்ஸ்...October 23, 2010 இந்த தீபாவளிக்கு என்ன ஸ்பெஷல்?

3டி மேக்ஸ் புடவை..

மல்டி மசகலி சல்வார்..

குந்தன் ஒர்க் சுரிதார் மெட்டீரியல்..

காட்டன் மஸ்லின் சட்டை..

பொந்தூர் வேட்டி..

பிளாக்பெர்ரி பெர்ல்3ஜி9100..

ஸ்டேண்டர்ட் மார்க் பட்டாசுகள்..

பாசிப்பருப்பு அல்வா, முள்ளு முறுக்கு..

உங்கள் சாய்ஸ் என்னவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.

ஆனால் காமிக்ஸ் ரசிகர்களின் பல்லாண்டுகால வனவாசம் இந்த தீபாவளியோடு முடிவுக்கு வருகிறது.

என்னது காமிக்ஸா? குழந்தைகள்லாம் படிக்குமே.. அதுவா? என்று முகம் சுளிக்கிறீர்களா?

வெயிட் பண்ணுங்க ஜெண்டில்மேன். உங்களுக்காக ஒரு தகவல்..

இன்றைய தேதியில் தமிழில் காமிக்ஸ் படிப்பவர்கள் அனைவரும் இருபது வயதுக்கு மேற்பட்டவர்களாகவே 80 சதவிகிதம் பேர் இருக்கிறார்கள் என்று ஏதோ ஒரு அமைப்பின் ஏதோ ஒரு கணக்கெடுப்பு கூறுகிறது.

இது நிச்சயமாக குழந்தைகள் சமாச்சாரம் அல்ல.

ஏனெனில்..

1960களின் இறுதியில் 'மாலைமதி காமிக்ஸ்' வெளிவந்து கொண்டிருந்தது. ஒரு இதழின் விலை 75 காசு. உங்கள் தாத்தாவோ, அப்பாவோ அந்த காலத்தில் வாங்கி பரண் மேல் போட்டு வைத்திருந்தார்களேயானால் தூசு தட்ட…

சவால் சிறுகதை போட்டிக்கான என் விமர்சனங்கள் ‍‍பார்ட் 2

டைமண்ட் வாசனை : பலாபட்டறை சங்கர்
அல்டிமேட்டான கதை. முடிவை கடைசிவரை ஊகிக்கமுடியாமல் போனதே ஷங்கருக்கு எந்திர வெற்றி. ஆதியும் பரிசலும் கொடுத்த வாசகங்கள் அங்கங்கே பச்சக் என்று பொருந்துகிறது. பயபுள்ள பிச்சு உதறுது. நல்ல ஷேப்பில் வந்திருக்கும் கதை, குமுதம் ஆவி குங்குமம் தர கமர்ஷியல் கதைகளின் க்வாலிட்டியை கூட மிஞ்சுகிறது. பரிசை எப்படியாவது தட்டிடனும்னு எப்படியெல்லாம் ஓட்டல் ரூம் (இல்லை ஓட்டலே) போட்டு யோசிங்கறாங்கபா !!

என் மதிப்பெண் 7.5 / 10 : கலக்கிப்புட்ட ஷங்கர்.

ஆப்பரேஷன் ப்ளூ டைமண்ட் : கார்த்திகைப்பாண்டியன்.தொண்ணூறுகளின் மத்தியில் படித்த ராஜேஷ்குமார், ராஜேந்திரகுமார், சுபா,நாவல்களின் வாசனை மூக்கை துளைக்கிறது. கதையும் மின்னல் வேகத்தில் ஓடுகிறது. பெரிய மீனை சின்ன ஜாடியில் அடைத்ததுபோல ஒரு முழு நீள
நாவலுக்கான ஸ்கோப் உள்ள கதை. பாவம் சிறுகதையாக ருங்கிவிட்டது.
வித்யாசமாக எதுவும் யோசிக்கவில்லை கார்த்திகை பாண்டியன். எக்மோரில் கார் எடுத்து மதுரையில் யு.டர்ண் போடுவது நம்பக்கூடியதா ? அதே போல ஏர்போர்ட் இம்மிக்க்ரேஷன் செக்ஸை கடந்து எப்படி வந்தார், இரு லாஜிக் மீறல் என்று யோசித்தபோது கதையின் முடிவு கிட்ட…

வாழ்த்துக்கள் ராஜன் & Sister.

ஜாக் அண்ட் ஜில் !
கல்யாணத்துக்கு வரமுடியாம போனதுக்கு சாரி.
வாழ்த்தி பின்னூட்டம் போடமுடியாம போனதுக்கு மன்னிச்சுக்க.
போன் போட்டு வாழ்த்தாம போனதுக்கு வருந்தறேன்.அட இமெயில் கூட அனுப்பலைக்கு கோச்சுக்காத.
எங்கிட்டு இருந்தாலும் நல்லா இருங்கடே !!!
ஜாக் அண்ட் ஜில் ! இனி இல்லை போன் பில் !

சவால் சிறுகதைகள் ‍ : என் விமர்சனங்கள்

ஏற்கனவே உரையாடல் போட்டியின்போதே கதைகளுக்கு விமர்சனம் எழுதி அனுபவம் இருக்கு. அதனால் சவாலையும் படித்து எழுதுகிறேன். இது முழுக்க முழுக்க என்னுடைய பார்வையே. ஷங்கர் எடுக்கும் படத்துக்கு ஆனந்தவிகடன் விமர்சனம் எழுதுவதில்லையா ? அது போலத்தான். பப்ளிக் டொமைனில் இருக்கும் உங்கள் கதையை நான் படித்து ரசித்து, நல்லவைகளையும் அல்லவைகளையும் சொல்கிறேன்.யாரும் கோச்சுக்கவேண்டாம் ப்ளீஸ். படிக்க நிறைய கதைகள் இருக்கு. நேரமோ குறைவா இருக்கு. ஸீ யூ.

பலாபட்டறை ஷங்கர்

போட்டிக்கு வந்துள்ள படைப்புகளின் பட்டியலில் முதல் கதையாக
பட்டியலிடப்பட்டிருக்கிறது. சில இடங்களின் புன்முறுவல் பூக்கவைத்தாலும் "கொசுவ அழிக்க மருந்து இல்ல, இதுல கொரங்க வெச்சி பிசைஞ்சிருக்கானுவ." ஓவர் ஆல் ஆக ஒரு குழப்பமே மிஞ்சுகிறது. இன்னும் கொஞ்சம் ஷார்ட் & ஸ்வீட் ஆக இருந்திருக்கலாமோ என்றும் தோன்றுகிறது. ரோபோ எதிர்காலத்தை கணிச்சு சொல்லும் என்று சொல்லப்படுவது அப்பட்டமான லாஜிக் மீறலாக தெரிகிறது.
அல்லது கன்வின்ஸிங் ஆக இல்லை. அதிகமான பஸ் வேர்ட் எல்லாம் ஆங்கிலத்தில் உபயோகப்படுத்தபடுவதால், ஜனரஞ்சக எழுத்தில் இருந்து கொஞ்சம் தள்ளியே நிற்கிறது பல…

tes5t

--
Thanks and Regards,
Ravindran.A
78294 77007

அநீதி ஆக செயல்படுதல்

அநீதி ஆக செயல்படுதல் என்பது இரு பக்கமும் கூர்மையான கத்தியை போன்றது. என்னுடைய முந்தைய பதிவை பார்த்த சம்பந்தப்பட்டவர்கள் அதனை உண்ர்ந்திருப்பார்கள் என்றே நினைக்கிறேன்.

காரணம் வலி என்பது எல்லோருக்கும் பொதுவானது. ஆனால் எது வலி என்று உணராதவர்களுக்கு கொஞ்சமாக குத்தித்தான் உணரவைக்கவேண்டும் என்ற நிலையில் எனக்கு வேறு வழி தெரியவில்லை.

அதன் காரணமாகவே, அவர்கள் குத்திய அதே அறம் இல்லாத, அநீதி ஆக செயல்படுவதான கத்தியை நானும் பயன்படுத்தினேன்.

எப்போதும் எதிரி தான் நாம் எந்த ஆயுதத்தை எடுக்கவேண்டும் என்பதை தீர்மானிக்கிறான் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்.

அண்ணா சொன்னதுபோல வன்முறை என்பது இருபுறமும் கூர்மையான கத்தியாகும். 

நான் வன்முறையை எடுக்கும்போதே, அதே வன்முறை என்னை தாக்கும்போது எப்படி எதிர்கொள்ளவேண்டும் என்று மனதளவில் என்னை தயார்படுத்திக்கொண்டுதான் இருந்தேன்.

ஆனால் சம்பந்தப்பட்டவரிடம் எந்த ரியாக்ஷனும் இல்லை. ஒருவேளை ஆக்சன் ப்ளான் இனிமேல் தான் ரெடியாகும் போல. அதுபற்றி கவலை இல்லை. குறைந்தபட்சம், நான் என் தரப்பில் என்னுடைய முந்தைய பதிவை நீக்கிவிட்டேன்.

தன்னுடைய பதிவு இன்னொருவரை மனதளவில் பாதிக்கும் எ…

வாழ்க்கை வட்டம்டா !!!

ரஜினிபட டயலாக் மாதிரி இருந்தாலும் இது தான் உண்மை. மேல இருக்க வீடியோவ பார்த்தீங்களா ? இந்த பத்துல சிம்பாக்கிட்ட (அதான் குட்டி லயன்) பெரிய சிங்கம் சொல்லும். நாம செத்தா புல்லாவறோம். புல்ல திங்கற மான நாம திங்கறோம். அப்படீங்கும்.பதிவுலகுக்கு கொஞ்சம் ப்ரேக் விட்டாலும் நம்ம கடமைய செய்யறதுக்கு வந்திருக்கேன். ஒவ்வொன்னா பார்ப்போமா ? வால்ஸ். லேட்டான பிறந்தநாள் வாழ்த்துக்கள். ஜோதிஜி. திருப்பூர் சாயப்பட்டறைகள் குறித்த அருமையான பதிவு வினவு தளத்தில். ஹேட்ஸ் ஆப். இணையத்தில் 'புரச்சி' செய்வதாக ட்விட்டரு, பஸ்ஸு, ரயிலு என்று குதித்துக்கொண்டு, காமெடி செய்துகொண்டு இருப்பதை பார்த்தேன். சிப்பு வந்துது சிப்பு. ஒரு பக்கம் பார்ப்பணீயத்தை கடுமையாக எதிப்பது. ஆனால் அதே பார்ப்பணீயத்துடன் நேரம் வரும்போதெல்லாம் கூட்டணி சேர்ந்துகொள்வது. நல்ல ஸ்டேட்டர்ஜி. பிழைப்புவாதம் என்றும் சொல்லலாம்.

ஒரு படத்தில் குட்டி சுவத்தில் உட்கார்ந்திருக்கும் இளைஞர்கள் 'பூமி மாதா சிரிக்கப்போறா, எல்லாரும் உள்ள போவப்போறீங்க' என்று சொல்லும் காமெடி பீஸை தூண்டி விட்டுவிட்டு, விழிப்பார்கள். ஒரு தகரத்தட்டை பார்த்தால் அந்த நியாபகம…

புதிய அச்சிதழுக்கு : பல்வகை பணி வாய்ப்புகள் - ஜி கவுதம்

Image
இதனால் சகலமானவர்களுக்கும் அறிவிப்பது என்னவென்றால்..புதிதாக வெளிவர இருக்கும் தமிழ் அச்சு மற்றும் வீடியோ பத்திரிகைகளில் பணியாற்ற  திறமையும், தகுதியும் உள்ளவர்களை வரவேற்கிறேன்!
வருத்தப்பட்டு பணி சுமக்கும் பழைய பத்திரிகையாளர்களும் சரி,  கற்றுக்கொண்டு சாதிக்க நினைக்கும் புதிய பத்திரிகையாளர்களும் சரி,  பத்திரிகைத்துறையைத் தேர்ந்தெடுக்க நினைக்கும்ஆர்வமுள்ள புதியவர்களும் சரி..  தயங்காமல் உங்கள் பயோடேட்டாவை (புகைப்படத்துடன்) அனுப்பி வையுங்கள்.  நீங்கள் கொடுக்கும் விவரங்கள் ரகசியமாக வைத்துக்கொள்ளபப்டும் என்ற உத்தரவாதம் தருகிறேன்.
புதிய குழுமம்..  புத்தம்புது பத்திரிகைகள்..  புறப்படப்போகும் புதிய கூட்டணிக்கு நம்பிக்’கை’ கொடுங்கள்! 
தேவை: (முழுநேர - பகுதி நேர - ஃப்ரீலான்ஸ் பணிக்கு, உலகின் எந்த மூலையில் இருந்தும் பணியாற்றலாம்) செய்தியாளர்கள் - Reporters, உதவி ஆசிரியர்கள் - Sub Editors, புகைப்படக்காரர்கள் - Photographers, ஒளிப்பதிவாளர்கள் - Videographers, வெப் டிசைனர்ஸ் - Web Designers, வெப் ப்ரோகிராமர்ஸ் - Web Progarammers, கிராபிக்ஸ் டிசைனர்ஸ் - Graphics Designers, வீடியோ எடிட்டர்ஸ் - Video Editors, ஒலிப்பதிவாளர்கள்…

கிறிஸ்தவ மிஷநரிகளின் நில ஆக்ரமிப்புகள்

Image
இதுபற்றி கடந்த சில வாரங்களாகவே சிந்தித்துகொண்டிருந்தேன். இரண்டு செய்திகள் இது சம்பந்தமாக இன்றைக்கு கண்ணில் பட்டது. கோவி கண்ணன் பதிவில் வேளாங்கண்ணி தேவாலயத்தின் நில ஆக்ரமிப்பு பற்றியும், தமிழ் ஹிந்துவில் வெளிவந்த நாகை மாரியம்மன் கோவில் போராட்டம் பற்றியும் அறிந்தேன்.

மேட்டருக்கு போறதுக்கு முன்னால ஒரு சின்ன சம்பவம் பாருங்க.

எங்கக்கா எங்க வீட்ல ரொட்டி சுட்டாங்க. பக்கத்து தெருவில் இருந்து ஒரு சொர்ணாக்கா வந்து, ரொட்டிய புடுங்கிட்டா. எங்கக்கா அவகிட்ட போராடி அடிபட்டு உதைபட்டு அவளை வீட்டை விட்டு வெளியில அனுப்பினாங்க. அதில பாருங்க. அவ வெளியில போகும்போது, அவ கையோட கொண்டுவந்த ஒரு பெருச்சாளிய வீட்டுக்குள்ள விட்டுட்டு போயிட்டா.

எங்கக்கா வீடு வெறும் டபுள் பெட்ரூம், அதில் ஒரு ரூம்ல அந்த பெருச்சாளி உக்காந்திருச்சு.பெருச்சாளிக்கிட்ட போயி ரெண்டு நாளைக்கப்புறம் கெட் அவுட் அப்படீன்னா, நான் காலங்காலமா இந்த ரூம்ல இருக்கேன், இதுல உனக்கென்ன வேலைன்னு எங்கக்காவை கெட் அவுட்டுங்குது.

எங்கக்கா வீட்டுக்காரர் ஒரு சோம்பேறி. எங்கக்கா பல முறை கம்ப்ளைண்டு செய்தும், தடியை எடுத்து பெருச்சாளிய அடிக்கமாட்டேங்குறார். பெருச்…

தமிழ்நாட்டில் ஒரு செஞ்சோலை !!!

Image
பெரியாருடன் - பெரியார் சொல்லிய கொள்கைகளுடன் வாழ்ந்துமுடித்த தோழர்களுக்கு ஒரு முதியோர் இல்லம் திண்டுக்கல்லில் அமைகிறது. அதன் படம் தான் மேலே. இது பற்றிய ஒரு சிறிய கலந்துரையாடல் கூட்டமும் ஆகஸ்டு 14 ஆம் தேதி (இந்த தேதியில் என்ன முக்கியத்துவம் ? யோசியுங்களேன்) நடக்கிறது. முடிந்தவர்கள் கலந்துகொள்ளவும். (மின்னஞ்சல் மூலம் வருகையை தெரியப்படுத்துங்கள்).


கலந்துரையாடல் கூட்டம் 14.08.10 மாலை 5 முதல் 15.08.10 பகல் 1 வரை..
கருந்திணை 1 / 810 முத்தமிழ் நகர் அடியனூத்து-அஞ்சல், திண்டுக்கல் - 624 003 - karunthinai@gmail.com

உமாசங்கர் ஐ.ஏ.எஸ்

Image

நாராயணா இந்த கொசுத்தொல்லை தாங்கமுடியலடா !!

விளம்பரம் : டிஸ்கவரி புக் பேலஸ்

தமிழ் புத்தகங்களின் சங்கமாக விளங்கும் DISCOVERY BOOK PALACE- இப்போது சென்னை கே கே நகரில் விரைவாக வளர்ந்துவருகிறது, இதுவரை 50 க்கும் மேற்பட்ட புத்தக வெளியீட்டு நிகழ்வுகள் மற்றும் விமர்சன கூட்டம் என அவ்வப்போது எழுத்தாளர்களின் மிகப்பெரிய ஒரு சந்திப்பு முனையாகவும் மாறியுள்ளது. தாங்கள் மற்றும் தங்களைப் போன்ற புத்தகவிரும்பிகளின் வரவை மேலும் எதிர்பார்க்கிறோம். அனைத்து புத்தக நிறுவனங்களின் ஒத்துழைப்பையும் இன்னும் கூடுதலாக எதிர்பார்க்கிறோம். உங்களின் வாசிக்கும் வசதிக்காக இப்போது புத்தகங்களை இணையதளத்திலும் வாங்கும் வசதியை அறிமுகம் செய்கிறோம் .


எமது இணைய விற்பனையில் புத்தகங்களை பெற http://www.discoverybookpalace.com/ என்ற தொடுப்பை க்ளிக் செய்யவும்.

முகவரி: டிஸ்கவரி புக் பேலஸ்.
எண்:6 , மஹாவீர் காம்ளக்ஸ்
முனுசாமி சாலை,
கே கே நகர் மேற்கு. சென்னை- 78
செல்- 9940 44 6650

--
தமிழ் புத்தகங்கள் அனைத்தும் இப்போது டிஸ்கவரி புக்பேலஸ்-ல் கிடைக்கிறது, தொடர்பு கொள்ளவும் 9940446650

கார்க்கி - ஜெகநாதன் - ஆதி - லைனக்ஸ் பெங்குவின்

Image
ஜோக்கர் ஏழு (கார்க்கி)  புட்டிக்கதைகள்   அப்போது ஏழுமலை தண்ணியடிப்பதை ஒரு மாத காலம் நிறுத்தியிருந்தான்.பாலாஜியின் நண்பன் ஒருவனின் பிறந்த நாள் ட்ரீட்டில் மட்டும் அடிப்பதற்கு ஆறுவிடம் ...
கிளஸ்டர்-நோவா (மாறுதிசை)  ஜெகநாதன்தொடர்பதிவு | ஸை-பை | விஞ்ஞானச் சிறுகதை 2011 ஜுலை - கென்னடி விண்வெளி மையம், ப்ளோரிடா: ...
ஏலகிரி -புகைப்படங்கள்  ஆதிமூலகிருஷ்ணன் ஏலகிரி உலா மிகவும் எளிமையாக, வித்தியாசமாக இருந்தது. மூவரே சென்றிருந்ததால் கூட்டாக ரசித்த மாதிரியும் இருந்தது, அதே நேரம் கும்மாளமில்லாமல் இருந்ததால் ஒருவர் இன்னொருவரின் தனிமையில் ...

சவுக்கு சங்கர் கைது : அராஜக காவல்துறை

Image
வளைத்து பிடித்து ஒரு பொய் வழக்கின் மூலம் கைது செய்யப்பட்டிருக்கிறார் ஒரு பத்திரிக்கையாளர், வலைப்பதிவர். அவர் சவுக்கு என்னும் வலைப்பதிவை நடத்தும் திரு சங்கர்.நானும் ஒரு பத்திரிக்கையாளன் என்று சொல்லிக்கொள்ளும் தமிழக முதல்வர் கலைஞர் ஆட்சியில் தான் இது நடந்தேறியிருக்கிறது.

இது குறித்து, பிரபல பத்திரிக்கைகளில் குப்பை கொட்டும் சக வலைப்பதிவர்களோ, பத்திரிக்கையாளர்களோ, மூச்சு விடக்காணோம். அதிகாரத்தில் இரு அல்லது அதிகார மையத்துக்கு அல்லக்கையாக இரு என்பது போன்றதொரு ஸ்டேட்டர்ஜியை எடுத்துக்கொண்டிருக்கிறார்கள் இவர்கள்.

பதிவர் சவுக்கு சங்கர் செய்த குற்றம் என்ன ? அவரது சமீபத்திய பதிவில் மிக முக்கியமான இரு காவல் அதிகாரிகளை பற்றி ஆதாரங்களோடு சில குற்றச்சாட்டுகளை வைத்துள்ளார். இதே குற்றச்சாட்டுகளை வைத்து ஒரு பொது நல வழக்காக தொடர்ந்திருப்பாராயின் இது சட்ட ரீதியாக கொண்டு செல்லப்பட்டிருக்கும். இப்போது இந்த குற்றச்சாட்டுகளுக்கு சம்பந்தமே இல்லாத, ஜாமீன் இல்லாத ஒரு பிரிவின் மூலம் கைது செய்யப்பட்டிருப்பதாக அறிகிறேன்.

சம்பந்தப்பட்ட அதிகாரிகள், இந்த குற்றச்சாட்டு பொய் எனில் சவுக்கு சங்கர் மீது மானநஷ்ட வழக்கு தொ…