Posts

Showing posts from October, 2009

அன்னா மரியா குமாரசாமி.....

Image
காலையில் அலுவலகம் வந்து மின்னஞ்சலை திறந்தவுடன், 'உடனே என்னுடய இடத்துக்கு வரமுடியுமா' என்று மின்னஞ்சல் அனுப்பியிருந்தான் க்ரிஷ்.

என்னடா அவசரம். அப்புறமா வரேன். மீட்டிங் இருக்கு. என்று பதில் அனுப்பினேன்.

ம்ஹும். அர்ஜெண்ட். உடனே வா.

அப்படி என்னடா அர்ஜெண்ட், என்றேன் அவன் இருக்கைக்கு அருகில் நின்றுகொண்டு.

அவன் கையில் இன்றைய செய்தித்தாள். அதில் தோராயமாக நடுப்பக்கம். பார். படி. என்றான்.

புதிய வரிவிதிப்பு முறைகள் பொதுமக்களை எவ்வாறு பாதிக்கின்றன என்பது போல ஒரு த்ராபையான தலைப்பு, ரெண்டு முழு பக்கங்களை விழுங்கியிருந்தார் எழுத்தாளர். அதில் நாலைந்து பொதுமக்களை பேட்டி கண்டு அவர்கள் கருத்தை பதிந்திருந்தார். அவர்களது படங்களும் வெளியாகியிருந்தன.

குழந்தையோடு நிற்கும் ஒரு பெண், பள்ளி செல்லும் ஒரு மாணவி, ரெண்டு முதியவர்கள் என்று வேறுபட்ட ஏஜ் க்ரூப்பில் அவர்கள் கருத்துக்களை தெரிவித்திருந்தார்கள்.

அதில அந்த பொண்ணு சொல்றத படி.

படத்தில் இருந்த இளம்பெண் அழகு. ஒல்லியான தேகம், நல்ல உயரம். வெண்ணிற ஆடை, தோளில் ஸ்டைலிஷான ஒரு கரிய நிற பேக். ஒற்றை வார்த்தையில் அழகு என்று சொல்லிவிட முடியாதபடிக்கு.

சூப்பரா இருக்கா இல்…

அவசர கல்வி உதவி கோரல்

இலங்கையில் நடைபெற்ற கோரமான உள்நாட்டு யுத்தம் காரணமாக மிக கடுமையாக பாதிக்கப்பட்டு தம் உறவுகளையும் , உடமைகளையும் இழந்து வாழ்வதற்கு எதுவுமற்ற நிலையில் இடம்பெயர்ந்தோருக்கான நலன்புரி நிலையங்களில் இருந்துவந்த வன்னி , முல்லைத்தீவு , கிளிநொச்சி மாவட்டடங்களை சேர்ந்த மாணவர்கள் மீண்டும் கல்வியை தொடர்வதற்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது .

எனினும் தற்போதைய நிலையில் மேற்படி மாணவர்கள் தமது கல்வியை தொடர்வதற்கான எந்த ஒரு அடிப்படை வசதிகளுமற்ற நிலையில் உள்ளனர் . மேற்படி மாணவர்களின் குடும்பங்கள் நீண்ட காலமாக நலன்புரி நிலையங்களிலேயே தொடர்ந்தும் இருந்து வருவதினால் இம்மாணவர்கள் தமது அன்றாட வாழ்வுக்கே ஏனையோரிடம் கையேந்தி வாழ்கின்றனர் . மாணவர்கள் தமது கல்வியை தொடர்வதற்கான ஊக்கம் இருந்தும் போதிய வசதி இல்லாத காரணத்தினால் மன அழுத்ததிற்கு உள்ளான நிலையில் உள்ளனர் .

மேலும் மேற்படி மாவட்டங்களில் இருந்து தென்பகுதிகளில் உள்ள பல்கலை கழகங்களுக்கு
தெரிவான மாணவர்களின் நிலை இன்னும் மோசமாக உள்ளது . இந்த மாணவர்கள் தமது கல்வியை தொடர மாதாந்தம் குறைந்த பட்சம் 10,000 ரூபா செலவாகிறது . எனினும் அவர்களின் பெற்றோர்கள் நலன்புரி நிலையங்களி…

செந்தழல் ரவிக்கு பன்றிக்காய்ச்சல்

Image
கவுஜை

எதிரித்தோழர் ஒருவர் ஒரு வரிக்கு ஒரு வார்த்தை என இயற்றிய கவிதை.

ஆஹா..
ஒரு
பன்றிக்கே
பன்றிக்காய்ச்சல். !!!!
ஆச்சர்யக்குறிஈஈ..

டயலாக்

இம்சை அரசன் படத்தில் புலிகேசி :

பன்றிக்கு நன்றி சொல்லி
குன்றின் மீது ஏறி நின்றால்
வென்றுவிடலாம் குலசேகரனை..!!

தற்காப்புநக்கல்H1N1 வைரஸ்மற்றபடி பதிவுக்கு வருவோம். தலைப்பில் கடைசி வார்த்தை விடுபட்டுள்ளது. "செந்தழல் ரவிக்கு பன்றிக்காய்ச்சல் வாக்ஸீன்". என்று இருக்கவேண்டும். வியாழக்கிழமை பண்ணிரண்டு மணியில் இருந்து இரண்டு மணிக்குள் மருத்துவமனைக்கு வந்து வாக்ஸினேஷன் பெற்றுக்கொள்ளும்படி என்னுடைய அரசு மருத்துவர் இன்று கடிதம் அனுப்பியுள்ளார்.

மொக்கையான நன்பர்கள், ஏமாந்த எதிரிகள் (ஒரு 30 செகண்டாவது ஜாலியா இருந்ததா இல்லையா), எல்லாரும் ஆதரவோ எதிர்ப்போ, ஒரு வாக்கை செலுத்தவும். ஜெயபாரதன் அவர்களின் பதிவுக்கான சுட்டி இடப்புறம் உண்டு. வாசிக்கவும். நன்றி.

வீக் எண்ட் ஆங்கில பாடல்கள்

ரசிக்கும் & ரசிக்கவைக்கும் சில பாடல்கள்..

லம்பாடா கவோமாமிஸ்டர் ப்ரெசிடெண்ட்சாட்டர்டே நைட்மெக்கரீனாலெஸ் கேச்சப் அசரஜேஹிப்ஸ் டோண்ட் லை (வீடியோவை எம்பிட் செய்ய முடியவில்லை)

http://www.youtube.com/watch?v=FLQgjEhH400

பாப் மார்லி

http://www.youtube.com/watch?v=tbPEFyAbwqE (வீடியோவை எம்பிட் செய்ய முடியவில்லை)

ஹேப்பி பீட் டேன்ஸ் மட்டும்
இன்னைய கணக்கு முடிஞ்சது. முடிஞ்சா ஓட்டு போடுங்க. இல்லைன்னா வேற எதாவது நல்ல பதிவுக்கு போடுங்க. ஜெயபாரதன் பதிவுக்கு லிங்க் இருக்கு பக்கத்தில, அதில் போய் நல்ல கண்டண்ட் படிச்சுக்கோங்க.)

கார்த்திக் அம்மா....

Image
2005 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தின் இறுதி பகுதி என்று நினைக்கிறேன். சரியாக நினைவில்லை. மறக்க முயன்று தோற்ற நிகழ்வு. சரியாக நினைவில்லை என்றால் சந்தோஷமே.

அப்போது ஒரு நாளைக்கு அரைபாக்கெட் கிங்ஸ் வாங்குவேன். ஆங். இப்போது விட்டாச்சு சிகரெட். ஒருவருடமாகிறது புகைத்து. மீண்டும் புகைக்க விருப்பமில்லை. மனைவிக்கு கொடுத்த உறுதிமொழி மூலம் இது சாத்தியமாயிற்று. ஏற்கனவே புகைப்பதை விட்டுவிட பல முறை எடுத்த முயற்சிகள் தோல்விகளில் முடிந்ததை தனியாக எழுதவேண்டும்.

எங்கே விட்டேன் ? புகை. ஆம். அலுவலகம் வந்து பார்த்தால் சிகரெட் தீர்ந்துவிட்டிருந்தது. நான் தங்கியிருந்த பேச்சுலர் வீட்டில் ஒரே புகைவண்டிகள். காலையில் காபிக்கு பிறகு ஒரு சிகரெட் தேடினால் பாக்கெட் காலி.

டெவலப்மெண்டில் இருக்கும் விஜய ஷங்கர் சிங் வில்ஸ். இருந்தாலும் பரவாயில்லையே என்று அவனை தேடினால் அவன் ஒரு மீட்டிங்கில். மஹிபால் புகைக்கமாட்டான். இருந்தாலும் எப்போது கூப்பிட்டாலும் கம்பெனி தருவான். அவன் சீட்டில் அவனை ஆளை காணவில்லை.

இந்த பதிவு கொஞ்சம் குழப்பமாயிருக்கலாம் உங்களுக்கு. அப்படியிருந்தால் நேரத்தை வீணடிக்காமல் வேறு உபயோகமானதை தேடி படிக்கவும். பெங்களூர்…

மு.இளங்கோவனுக்கு குடியரசு தலைவர் விருது

Image
இந்திய அரசின் செம்மொழி நிறுவனம் சங்க இலக்கியங்களில் நல்ல புலமையும் ஆராய்ச்சித் திறனும் கொண்ட இளைஞர்களுக்கு "இளம் அறிஞர் விருது" அறிவித்துள்ளது.

இவ்விருது க்கு உரியவராகப் புதுச்சேரி பாரதிதாசன் அரசினர் மகளிர் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணிபுரியும் முனைவர் மு.இளங்கோவன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இவர் சங்க இலக்கியம்,இலக்கணம் குறித்து எழுதியுள்ள நூல்கள்,ஆய்வுக்கட்டுரைகள் குறிப்பிடத் தகுந்தன. சிலப்பதிகாரத்தில் இடம்பெறும் இசைக்குறிப்புகளை விரித்துரைக்கும் ஆய்வுகளைச் செய்துள்ளார்.

முனைவர் மு.இளங்கோவன் சங்க இலக்கியத்தில் நல்ல பயிற்சியுடையவர் என்பதுடன் சங்க இலக்கிய நடையில் மாணவப் பருவத்திலேயே பாடல் எழுதும் ஆற்றல் பெற்றிருந்தார்.

மாணவராற்றுப்படை(1990) அச்சக ஆற்றுப்படை(1992) என்னும் நூலும், அரங்கேறும் சிலம்புகள் (2004) என்ற மரபுக்கவிதை நூலும் இதற்குச் சான்றுகளாகும்.இவர் எழுதியுள்ள பல ஆராய்ச்சிக் கட்டுரைகள் உலக அளவில் புகழ் பெற்றனவாகும்.

சங்க இலக்கியத்தில் ஒன்றான மலைபடுகடாம் நூலில் இடம்பெறும் நன்னனின் கோட்டையை, நவிரமலையைக் கண்டுபிடித்துப் படத்துடன் இதழ்களிலிலும் இணையத்திலும் வெளியிட்…

மியாவ்...மியாவ்.. பூன... மீசை உள்ள பூன...

Image
click to Enlarge the Image

இடுகை தலைப்பு, படம் உபயம் நன்பர் பாலா.
.
.
.

ரிலாக்ஸ் ஆக கேளுங்க இதனை

அடிக்கடி கேட்கும், ரொம்ப ரசிக்கும் பாடல்...

கார்ட்டூன்ஸ். குசும்பன் மன்னிக்க.

Image
High Quality Image, Please Click on this to Enlarge. (If you really want to do so)

திருமாவை என்னுடைய ஆதர்ச நாயகனாக இந்த ஆண்டின் ஆரம்பம்வரை நம்பியிருந்தேன். இன்றைக்கு திரும்பிப்பார்க்கையில் நான் ஏமாளி மட்டுமல்ல, ஒரு கோமாளியும் கூட என்று உணர்கிறேன். சிறுத்தைகள் திருமாவின் பல்டிகளை எப்படி தாங்கிக்கொள்கிறார்கள், ஏற்றுக்கொள்கிறார்கள் என்று வியப்பாக உள்ளது. 17ஆம் தேதி பிறந்தநாள் காணும் திருமாவுக்கு வாழ்த்துக்கள்.
..
..
..

எடுத்துக்காட்டு...!!

Image
பாண்டிச்சேரியில் ஹார்ட்வேர் எஞ்சினீயராக வேலைபார்த்த காலம் தொண்ணூறுகளின் இறுதியில். பக்கத்துவீட்டுக்காரன் கம்பூட்டர் வாங்கிட்டானே என்று தானும் வாங்க ஆரம்பித்த மக்களால் எங்களுக்கும் ஓயாத வேலை. சிடியை கம்ப்யூட்டரி எப்படி போடுவதில் இருந்து, கம்பியூட்டரில் ஸ்டார்ட் பட்டன் தெரியமாட்டேங்குது வரை இரவு பதினோரு மணி வரை பம்பரமாக சுற்றவேண்டிய வேலை.

சம்பளம் என்னவோ பெரிதாக இல்லை என்றாலும், நெல்லித்தோப்பு ஆபீஸுடன் இணைந்த ஓனர் வீட்டு நான் வெஜ் சாப்பாடும், பீச் காற்று முகத்தில் அறையுமாறு அரியாங்குப்பத்தில் இருந்த கம்பெனி ஓனரின் உபயோகப்படுத்தாத பீச் கெஸ்ட் ஹவுசும், அவ்வப்போது ரத்னா தியேட்டர் எதிர் சந்தில் கிடைக்கும் பீரும் இட்லியும் புரோட்டாவுமாக காலம் ஓடிய ஓட்டம் புல்லட் ரயில்வேகம்..

காலையில் எட்டுமணிக்கு ஆரம்பிக்கும் பரபரப்பான பணிச்சுமையில் இரவு வந்து படுக்கையில் விழுவது எப்போது மீண்டும் எழும்புவது எப்போது என்றே தெரியாத வகையில் இருந்ததொரு காலம். ஆங்காங்கே சிகரெட் பட்ஸும், மூலைகளில் நிறுத்திவைக்கப்பட்ட கடைசி ரெண்டு ஸிப் குடிக்கப்படாத பீர் பாட்டில்களும், வாசலில் நிற்கும் அரச மரத்தில் இருந்து எப்போதாவது உ…

UAE தமிழ் சங்கம் / முதல் பிறந்தநாள்

UAE தமிழ் சங்கம் அதன் முதல் பிறந்தாளை பதிமூன்றாம் தேதி நவம்பர் மாதம் கொண்டாடுகிறது. வாழ்த்துக்கள் UAE தமிழ் சங்கத்தினரே...(13-November-2009)

இது தொடர்பில் பட்டிமன்றம், கிரிக்கெட் போட்டி, மற்றும் பேமிலி கெட் டு கெதர் 23 ஆம் தேதி எல்லாம் வைத்துள்ளார்கள்.

பட்டிமன்றம் செலக்ஷன்:

Date : 16-October-2009, Time : 3pm, Day - Friday
Venue : Al Masjid Building, Next to King Faisal Saravana Bhavan/HSBC Sharjah
Please call our Committee Member to know the Topic & Exact Location. CONTACT US

தொடர்புகொள்ளவேண்டிய சுட்டி:

http://www.uaetamilsangam.com/contactus.asp

முடி திருத்தும் நிலையம்..

Image
எங்கள் ஊர் பக்கம் உள்ள சலூன் கடை பெரியவர், திருவிழாக்களில் நாயனம் வாசிப்பார். அதிகம் வேலை இல்லாத மதிய நேரங்களில் "சானை பிடிக்கறது.." என்று டயர் இல்லாத சைக்கிள் ரிம்மும் பெடலுமுடன் கூடிய சானை பிடிக்கும் மிஷினை தூக்கிக்கொண்டும் சுற்றுவார். சில சமயங்களில் வீட்டுக்கே அவரது கத்தரியும் சில்வர் கிண்ணமும் உள்ள அழுக்கு கைப்பையை தூக்கிக்கொண்டு வந்துவிடுவதுண்டு. அதிகபட்சம் ஐந்து ரூபாய்.

கல்லூரி காலத்தில் எல்லாம், முடியை கொஞ்சம் ஸ்டைலாக வைத்துக்கொள்ளவேண்டும் என்பதை தவிர்த்து, சலூன் கடை விசிட்டுக்கு பல காரணங்கள் உண்டு. அங்கே கண்டிப்பாக தீப்பெட்டி இருக்கும். தம் போடலாம். அன்றைய பேப்பர் எல்லாம் படிக்கலாம். தினத்தந்திக்கு, தினமலருக்கு வரும் ஞாயிறு சப்ளிமெண்ட்கள், வாரம் முழுவதும் அங்கே உலாவரும்...

அங்கே கீழே விழும் முடிகளை கூட்டி வாரும் பையனிடம் ஒரு டீ வாங்கி வர சொல்லிவிட்டு, அப்படியே ட்ராயரை திறந்து சீப்பை எடுத்து தலையை வாறு வாறு என்று வாறும் நாட்கள் வந்தபோது, சலூனில் பெரியவர் போய், அவர் பையன் தொழில் செய்ய ஆரம்பித்திருந்தார்..

வீட்டில் முப்பது ரூபாயை கேட்டு வாங்கிவருவதற்குள் போதும் போதுமென்றாக…

கூகிளில் தேடிய அல்போன்ஸு

Image
அல்போன்ஸு உண்மையில் ஆச்சர்யமாக பார்த்து மற்றும் கேட்டு கொண்டிருந்தான். அவன் இவ்வளவு ஆர்வமாக வாயை பிளந்து விசாரித்துக்கொண்டிருக்கிறான் என்றால் அது படு முக்கியமாகத்தான் இருக்கும் என்று நானும் எட்டிப்பார்த்தேன்..

தொலைக்காட்சியில் கூகிள் பற்றியதொரு நிகழ்ச்சி. கூகிள் என்று மெல்லிய பனியன் அணிந்த அழகி, கூகிள் நிறுவனம் தோன்றிய விதம், கூகிள் மூலம் என்ன என்ன தேடலாம் என்பதை விளக்கிக்கொண்டிருந்தாள்...அவனுக்கு அவ்வளவாக இங்கிலீஷ் புரியாது என்பதால் என்னை பார்த்து இந்த கேள்வியை கேட்டான்.

அதென்ன கூகிள் சர்ச் , பாதிரியார் இருப்பாரா ? இது அல்போன்ஸ்.

முண்டம். கூகிள்னு இண்டர்நெட்ல வெப்சைட் இருக்குல்லா ? அதுடா. அதுல முகப்பு பக்கத்தில் உள்ள பெரிய பெட்டியில் எதையும் டைப் செய்து தேடலாம்.

எல்லாத்தையும் தேடலாமா ?

ஆமாம் அல்போன்ஸு. இலக்கியம், பொருளாதாரம், அறிவியல் அப்படீன்னு என்ன தேடினாலும் வரும். எந்த இடம் எங்க இருக்குன்னு தேட கூகிள் மேப். தெருத்தெருவா காட்டும். எந்த புது செய்தியாக இருந்தாலும் கூகிள் நியூஸ். ஆர்க்குட்னு ஒரு சோஷியல் நெட்வோர்க்கிங். அதுவும் கூகிள்தாண்டா. ஆனால் முக்கியமா நீ கத்துக்கவேண்டியது கூகிள் ச…

XP செக்யூரிட்டி டூல் வைரஸ் ?? !!!

Image
மைக்ரோசாப்ட் எக்ஸ்பி இயங்குதளத்தில் திடீரென வைரஸ் தாக்கிவிட்டதாகவும், உம்மாச்சி கண்ணைக்குத்தாமல் இருக்கவேண்டும் என்றால் க்ரெடிட் கார்டு எண்ணை கொடுத்து வைரஸ் ப்ரொடக்ஷனை பெற்றுக்கொள்ளுமாறும் செய்தி.

என்னுடைய திரை முழுவதும் ஒன்றும் இல்லை. இந்த செய்தி மட்டுமே இருக்கிறது. மற்ற ஐக்கான்கள் எல்லாம் எங்கே போனது என்று தெரியவில்லை.

என்னவோ மைக்ரோசாப்ட்டில் இருந்து சொல்வது போலவே சொல்கின்றது இது. டாஸ்க் பார் மூலம் இதனை க்ளோஸ் செய்துவிட்டு, டெஸ்க்டாப் ஐக்கானை அழுத்தி மீண்டும் என்னுடைய திரையை பெற்றேன்.

இது உண்மையா, உண்மையிலேயே உம்மாச்சி கண்ணை குத்தியதா, இல்லை, ஏற்கனவே லைனக்ஸு இலவச திறந்தமூல இயங்குதளங்களிடம் பெரிய ஆப்புகளாக வாங்கி RIP (Rest in அமைதி) க்கு போக இருக்கும் மைக்ரோசாப்டுக்கு வைக்கப்பட்ட சூனியமா செய்வினையா மஞ்சள் குங்குமம் தடவிய எலுமிச்சம்பழமா என்று தெரியவில்லை.

தெரிந்தவர்கள் பின்னூட்டத்தில் கும்மவும்.

சமையல் !! (ஒரு பக்க கதை)

Image
அடுப்புல ஒரு டீஸ்பூன் நல்லெண்ணை விடுங்க ஸ்வேதா. சரியாய் ஒரு ஸ்பூன் போதும்.

ஸ்வேதா ஏப்ரன் அணிந்திருந்தாள். பக்கத்தில் அற்புதா. அவர்களைப்போலவே அவர்கள் முன் இருந்த மாட்யூலர் கிச்சன் சமயலறையும் நீட்டாக அழகாக இருந்தது. அற்புதா அவளுடைய அழகிய கன்னத்தைவிட கொஞ்சம் சிவப்பாயிருந்த பெரிய மிளகாய் துண்டுகளை கையில் வைத்திருந்தாள்.

கொஞ்சம் எண்ணை காய்ந்தபின்...இப்போ கொஞ்சம் கடுகு, அதன்பின் இந்த மிளகாய் துண்டுகளை போட்டு, அப்புறம் கொஞ்சம் வெங்காயம் தாளிக்கலாம். ஓக்கே ? இந்த நேரத்தில் கொஞ்சம் போல உப்பு சேர்த்துக்கிட்டா வெங்காயம் சீக்கிரம் டீ ஹைட்ரேட் ஆகி டேஸ்ட் கூடும்..

சரி..இது ஸ்வேதா..

அற்புதா தொடர்ந்தாள். இப்போ நாம செய்யப்போற சிக்கன் நாட்டுக்கோட்டை செட்டிநாடு அப்படீங்கற வெரைட்டி. இதுக்கு நாம ஏற்கனவே எடுத்து மஞ்சள் தூளில் ஊற வெச்சிருக்கிற போன்லஸ் சிக்கனை இப்ப எடுப்போம்.

அற்புதா, இந்த வெரைட்டிக்கு நாட்டுக்கோழி இருந்தாத்தால் நல்லா இருக்கும்னு முன்பு சொல்லியிருந்தீங்க இல்லையா ?

ஆமாம் ஸ்வேதா. ஆனா இங்க சிட்டியில நாட்டுக்கோழி கிடைக்கறதில்லை. ஆனால் அதே செட்டிநாடு மசாலா கிடைக்கறதால நாம அதே டேஸ்ட் கொடுக்கமுடியும்..

2009 புக்கர் பரிசு / ஹிலாரியின் வூல்ப் ஹாலுக்கு !!!

Image
நேற்றே இது பற்றி எழுதலாம்னு நினைத்தேன். தமிழ்ச்சூழலில் புக்கர் விருது போன்ற ஒரு மாபெரும் பரித்தொகையான விருது ஒன்று இருந்தால் அந்த பரிசுத்தொகையை நோக்கிய இன்னும் சிறப்பான புத்தகங்கள் வெளிவரும் என்பது என்னுடைய தனிப்பட்ட எண்ணம். அல்லது தமிழ் எழுத்தாளர்களை வெறும் தேங்காய் மூடியை கொடுத்து உபசரிப்பது நிறுத்தப்படவேண்டும், ஒரு ட்ரிப்புள் பெட்ரூம் ப்ளாட் வாங்கும் அளவுக்காவது பரிசு கொடுக்கப்படவேண்டும் என்பதும் நீண்ட நாட்களாக என் மனதில் இருக்கும் ஒரு ஆசை...

இந்த முறை 50 ஆயிரம் பவுண்டு மதிப்புள்ள இந்த மாபெரும் பரிசு இங்கிலாந்தில் 1952 ஆண்டு பிறந்த சட்டம் படித்த சமூக சேவகி ஹிலாரி மெண்டல்லுக்கு. போஸ்ட்வானாவில் அஞ்சு வருஷம், பிறகு சவூதி அரேபியாவில் நாலு வருஷம் இருந்துட்டு, என்பதுகளின் மத்தியில் இங்கிலாந்து திரும்பினாங்க ஹிலாரி.

ஏற்கனவே பல நாவல்கள் பல விருதுகள். Eight Months on Ghazzah Street, A Place of Greater Safety, The Giant, O’Brien, Giving Up the Ghost: A Memoir (கொஞ்சம் சுய சரிதை மாதிரி இருக்கும்). Winifred Holtby Memorial Prize, Cheltenham Prize, Southern Arts Literature Prize, Hawthornden Pri…

லஞ்சத்தின் த்ரீ டைமன்ஷன் ???

Image
லஞ்சத்தை காலம் காலமாக சகித்துக்கொள்ளும் பொதுமக்கள்:

க்யூவில் நிற்க என்னுடைய ஸ்டேட்டஸ் இடம் கொடாது..

என்னுடைய வேலை சீக்கிரமா முடியனும், நான் வெளிநாடு போவனும், எவன் எக்கேடு கெட்டாலும் எனக்கு கவலை இல்லை.

நான் நேர்மையானவனில்லை. என்னிடம் இருக்கிற டாக்குமெண்ட்ஸ் சட்டப்படி செல்லாது. அதனால் சட்டத்துக்கு புறம்பாகத்தான் என்னுடைய காரியத்தை முடிக்கவேண்டும்.

அய்யோ. லஞ்சம் கொடுக்கவில்லை என்றால் என்னுடைய காரியம் நடக்கவில்லை என்றால் ? பயமாருக்கு. என்னுடைய வேலை எனக்கு முக்கியம்.

என்னது, லஞ்சம் கொடுக்கவேண்டாமா ? அவன் மிரட்டி வாங்குறான் சார். என்ன செய்யறது ?

எல்லாரும் கொடுக்கறாங்க. நானும் கொடுக்கறேன். நான் மட்டும் என்ன விதிவிலக்கா சார் ?

அவங்கள எதிர்த்துக்கிட்டு என்ன சார் செய்யமுடியும் ? பேசாம கொடுத்துட்டு போகவேண்டியது தான்.

இது என்ன சினிமாவா ? ரியல் லைப் சார் ரியல் லைப். இந்தியன் தாத்தா படம் எப்பவோ தியேட்டரை விட்டு ஓடிருச்சு..

நாணல் மாதிரி வளைஞ்சு கொடுத்துட்டு போய்ட்டே இருக்கனும்பா. லஞ்சம் கொடுக்க மாட்டேன், முடிச்சு அவுக்கமாட்டேன் அப்படீன்னா கடைசியில படறது நாமதானே ?

போலீஸ்ல சொல்றதா ? ஹி ஹி. அவங்களே வாங்குறாங்களே…

விழித்துக்கொள்ளவேண்டிய தமிழக சுற்றுலாத்துறை..

சில பல நாடுகளுக்கு பணி நிமித்தமாக கடந்த ஆண்டுகளில் பயணம் செய்துவருகிறேன். அங்கே தொலைக்காட்சிப்பெட்டியை உசுப்பினால், அடிக்கொரு தரம் சில விளம்பரங்களை பார்க்கலாம்.

அது பல்வேறு நாடுகளின் சுற்றுலாத்துறை, வெளியுறவுத்துறை சார்பான விளம்பரங்கள். ஆசிய நாடுகளில் மலேசியா கொலைவெறியுடன் பல்வேறு நாடுகளில் விளம்பரம் செய்துவருகிறது. ஐரொப்பிய நாடுகளில், ஆஸ்திரேலியாவில், மற்ற நாடுகளில் எல்லாம் மலேசியா ட்ரூலீ ஏசியா என்ற விளம்பரம் பார்க்கலாம். (மற்ற ஏசியா நாடுகள் எல்லாம் போலி ஏசியாவா என்று தெரியாது எனக்கு)

அபூர்வமாக இண்க்ரிடிபுள் இண்டியா என்ற விளம்பரத்தையும் பார்க்கலாம். இந்திய சுற்றுலா பற்றி யோசித்துக்கொண்டிருக்கும் வெளிநாட்டவர், இதுபோன்ற விளம்பரங்களை பார்த்தால் பட்டென்று விழுந்துவிடுவார்கள்.நமது நாட்டின் கலை, சுற்றுலாதலங்கள், வசதிகள் ஆகியவற்றை சுருக்கமாக காட்டும் விதமாக இந்த விளம்பரங்கள் இருக்கும்.

பொதுவாக இவை நார்த் இண்டியாவையே மையமாக கொண்டிருக்கும். தாஜ்மகாலை காட்டுவார்கள். டெல்லியை காட்டுவார்கள். அதிகபட்சமாக தென்னிந்தியா என்றால் கேரளாவையும் படகு சவாரியையும், வெள்ளை சாரி சேச்சிகளையும் காட்டுவார்கள்.

இந்த …

அகண்ட பாரதம் ?

Image
அருணாச்சல பிரதேசம் சீனாவின் ஒரு பகுதி என்று சீன இணைய தளங்கள், போரம்கள், செமி அபிஷியன் சீன டாக்குமெண்டுகளின் இடம்பெற ஆரம்பித்துவிட்டது

நேபாளத்தில் சீன ராணுவ உதவியுடன் மாவோயிஸ்டு கொம்யுனிஸ்டுகள் ஆட்சியை பிடித்ததோடு, சீனத்துக்கான எல்லா கதவுகளையும் திறந்துவிட்டுள்ளார்கள். நேபாளத்தில் இந்திய மேலாதிக்கம் கிட்டத்தட்ட தன்னுடைய இறுதி நிமிடங்களை எண்ணிக்கொண்டிருக்கிறது.

நேபாளத்தின் எல்லைப்புறங்களில் புதிது புதிதாக முளைக்கும் சீன கேம்புகள் புற்றீசல் போல அதிகரித்துள்ளன. கடந்தமாதம் மட்டும் ஆரம்பிக்கப்பட்ட கேம்புகளின் எண்ணிக்கை 26 ஆம். அதன் தலைவர்களாக ஓய்வு பெற்ற சீன ராணுவ அதிகாரிகள் நியமிக்கப்படுகிறார்கள். அவர்களின் முக்கிய பணி வேறு என்னவாக இருக்கும் ? லாபி, ஊடுருவல், இந்திய கள்ள பணத்தை புழக்கத்தில் விடுதல், மாவோயிஸ்டுகளுக்கு ராணுவ ரீதியாக உதவுதல் போன்றவையே..

வங்காளதேசத்தின் ராணுவம், சில வருடம் முன் உயிரோடு பிடித்த இந்திய ராணுவ வீரர்களின் கண்களை தோண்டி, பிணங்களை இந்தியாவுக்கு அனுப்பியது. வங்காளதேசம் மூலமாக பெருமளவு ஆயுதங்களும், கள்ள பணமும் வங்கதேசம் வழியாகவும் இந்தியாவுக்குள் ஊடுருவுகிறது. வங்க தேசம் …

ஓசூர் விமான நிலையத்தின் தேவையும், சாத்தியங்களும், வாய்ப்புகளும்

Image
உங்களிடம் அட்ச ரேகை மற்றும் தீர்க்க ரேகையை வைத்து, இடத்தை பார்க்கும் வசதியுள்ள மென்பொருள் ஏதும் இருக்கிறதா ?

அட்சரேகை > 12-39-40 *வடக்கு
தீர்க்கரேகை > 77-46-01 *கிழக்கு

இந்த இடத்தில் நான் சுட்டிக்காட்டுவது என்ன என்று ஒருமுறை பார்த்துவிடுங்கள். கந்தல் துணி போல ஒரு ஏர்ப்போர்ட் தெரிகிறதா ?

அது ஓசூர் ஏர்ப்போட்.

உலக அளவில் இந்தியாவின் சிலிக்கான் வேலி என்று புகழப்படும் பெங்களூருக்கு அருகாமையில் உள்ள, தினமும் ஆயிரக்கணக்கான வெளிநாட்டவர் தொழில் நிமித்தமும், சுற்றுலா நிமித்தமும் வரக்கூடிய எலக்ட்ரானிக் சிட்டி, எம்ஜிரோடு, மற்ற சுற்றுலா தலங்களுக்கு கூப்பிடு தூரத்தில் உள்ள ஓசூர்.

ஆயிரக்கணக்கான பன்னாட்டு நிறுவனங்களுடன், அற்புதமான க்ளைமேட்டுடன், பல தொழில்வாய்ப்புகளையும், இந்திய அளவில் பல அறிவுசார் துறை தொழிலாளாளர்கள் வசிக்கும் பெங்களூருடன் 20 நிமிடங்களில் அடையக்கூடிய மிக எளிதான சாலை வசதியை கொண்ட ஓசூர்.

திடீரென்று ஏன் ஓசூர் விமானநிலையம்:

இந்திய விமான துறையின் டைரக்டிவ் படி, 150 கிலோ மீட்டருக்கு உள்ளே வேறு வேறு விமானநிலையங்கள் இருப்பது ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்லவாம். அதனால் பெங்களூரின் மையப்பகுதில் இயங்…

ஜப்பானில் போர்ஸ் இண்டியா F1..

Image
இந்திய பெருமை Force India F1 டீம் ஜாப்பனீஸ் பார்முலா ஒன்னில் க்வாலிபையரில் நான்காவதாவ வந்தது. ஆனால் ரேஸில் அவ்வளவாக சோபிக்கவில்லை.

போர்ஸ் இண்டியாவின் இரண்டு ட்ரைவர்களான Adrian Sutil மற்றும் Tonio Liuzzi முறையே பதிமூன்று மற்றும் பதினான்கு ஆகிய இடங்களை பிடித்ததோடு நின்றார்கள்.

ஏற்கனவே பெல்ஜியம் க்ரான்ப்ரியில் போல் பொஸிஷனில் நின்று வெற்றி கோப்பையை தட்டியதை எண்ணி, இந்த முறை காத்திருந்தேன். இஸ்...இல்லை.

அது பற்றி செய்தியை வெளியிடலாம் என்று கூகிளிடம் படங்களை தேடினால். கிடைத்தது என்னவோ இந்த படங்கள் தான்.மல்லைய்யா பீர் டின்களுடன் நிற்பதை மேலும் கீழும் (இடுகையில்) காண. !!அடுத்த ரேஸ் டே ப்ரேஸில்ல. சரி அங்கிட்டாவது பய புள்ளைக சிறப்பாக பர்பார்ம் செய்கிறதா என்று பார்ப்போம்..!!!

வேளச்சேரி வாழ் பொதுமக்களுக்கு அறிவிப்பு.

இதனால சகலமானவர்களுக்கு அறிவிக்கறது என்னான்னா...

வலையுலகத்தில் அனைவரும் அறிந்த கவிதா அவர்கள், குழைந்தைகளுக்கான டே. கேர் ஒன்றை வழிநடத்த இருக்கிறார்கள்.

அதன் சுட்டி : http://kreativekrayonz.blogspot.com/

இங்கே யாழினி பாப்பாவின் க்ரச்சில், பிள்ளைகளை வழிநடத்தும் விதம் எனக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கும் ஒன்று.

சாப்பிடும் இடத்தில்:

யாருக்கும் சாப்பாடு ஊட்டுவதில்லை. டேபிளின் மேல் உட்கார வைத்து ஸ்பூன் போட்டு கொடுத்துவிடுகிறார்கள்.

ப்ரட், அதன் பிறகு பழங்கள் என்று தட்டில் வைத்து நீட்டுகிறார்கள், குழந்தைகள் அவர்களாக எடுத்து சாப்பிடுகிறார்கள்.

இசை பயிலும் இடத்தில்:

பல்வேறு இசைக்கருவிகளை வைத்து சொல்லிக்கொடுக்கிறார்கள். கரோகே முறையில் பாடல்கள். குழு பாடல்கள்.

ப்ளே ஏரியாவில் :

சைக்கிள்கள், ஸ்டேக் போர்டுகள் என்று எல்லா உபகரணங்களையும் போட்டுவிடுகிறார்கள். அவர்களே எடுத்து விளையாடுகிறார்கள்.

குழந்தைகளுக்கான ப்ளே ஏரியாவில்:

பல்வேறு வகையான மூளைக்கு வேலை தரும் விளையாட்டு சமாச்சாரங்களை போட்டு விளையாடவைக்கிறார்கள்.

உறங்கும் இடத்தில்:

அமைதியான உறங்கும் இடத்தில் ஸ்ட்ரோலர்களில் போட்டு உறங்கவைக்கிறார்கள். கதவை மூடிவிட்டு வந்து…

சுகுணா திவாகருக்கு வாழ்த்துக்கள் !!!

Image
அப்பா அம்மா என்கிற உணர்வு அற்புதமானது. உட்கார்ந்து அனுபவிங்க ரெண்டு பேரும். வாழ்த்துக்கள்.
சுயமரியாதை உறுதிமொழியை அ.மார்க்ஸ் முன்மொழிய, சுகுணா திவாகர் வழிமொழிய.
திருமணத்தை வாழ்த்த வந்த பாலபாரதி எம்.எல்.ஏ, கொளத்தூர் மணி அண்ணன், அ.மார்க்ஸ்.

காலம் தான் எவ்வளவு வேகமா ஓடுது இல்லையா ?? குழந்தை படம் அனுப்பவும்...!!!

வெண்ணை போல் ஒருவன் (அ) முடியல பார்ட் 2

Image
நேரம் : காலை 9 மணி
இடம் : போலீஸ் கமிஷனர் அலுவலகம்.

கமிஷனர் ஏ.பீ.சீ.போறார் மொபைல் ஒலிக்கிறது.

போறார் : ஹலோ. கமிஷனர் போறார் ஹியர். ஹூ ஈஸ் திஸ் ?

மிடில் மேன் : ஹெல்லோ. நான் மிடில் மேன் பேசறேன். சி.எம் கிட்ட பேசனும். என்னோட நெகோஷியேட் பண்ணப்போறது யாரு ?

போறார் : முண்டம். சி.எம் கிட்ட பேசனும்னா சி.எம் வீட்டுக்கு போன் போடவேண்டியது தானே ? ஏண்டா எனக்கு போன் பண்றே ?

மிடில் மேன் : சென்னையில இன்னும் ஒரு மணி நேரத்துல வெடிக்கறமாதிரி குண்டு இருக்கு. அதே மாதிரி சிட்டி முழுக்க நாலு குண்டு வெச்சிருக்கேன்.அதனால தான் உங்களை கூப்பிட்டேன்.

போறார் : யோவ்...ரியல்லி ? நீ குண்டு வெச்சது உண்மையா ? ஆர் யூ சீரியஸ் ?

மிடில் மேன் : ஆமா இவர் மிர்ச்சி சுச்சி பாரு. போன் போட்டு காமெடி பண்ண ? யோவ் உண்மையிலேயே குண்டு வெச்சிருக்கேன். உடனே பாம் ஸ்க்வாடை அனுப்பி தேடு. மஞ்ச ஒயர விட்டுட்டு பச்ச ஒயர வெட்டு.

போறார் : எந்த ஒயரை வெட்டனும்னு பாம் ஸ்க்வாடுக்கு தெரியும். நீ குண்டு வெச்ச இடத்தை பத்தி சொல்லு.

மிடில் மேன் : ஐ ஐ. கஷ்டப்பட்டு குண்டு வெச்சது நானு, இடத்தை சொன்னா நீ நோவாம நோம்பி திங்கலாம்னு பாக்குறியா ? தேடி எடுய்யா நீயே ?

போறார் : …

வெண்ணை போல் ஒருவன் (அ) முடியல பார்ட் 2

Image
நேரம் : காலை 9 மணி
இடம் : போலீஸ் கமிஷனர் அலுவலகம்.

கமிஷனர் ஏ.பீ.சீ.போறார் மொபைல் ஒலிக்கிறது.

போறார் : ஹலோ. கமிஷனர் போறார் ஹியர். ஹூ ஈஸ் திஸ் ?

மிடில் மேன் : ஹெல்லோ. நான் மிடில் மேன் பேசறேன். சி.எம் கிட்ட பேசனும். என்னோட நெகோஷியேட் பண்ணப்போறது யாரு ?

போறார் : முண்டம். சி.எம் கிட்ட பேசனும்னா சி.எம் வீட்டுக்கு போன் போடவேண்டியது தானே ? ஏண்டா எனக்கு போன் பண்றே ?

மிடில் மேன் : சென்னையில இன்னும் ஒரு மணி நேரத்துல வெடிக்கறமாதிரி குண்டு இருக்கு. அதே மாதிரி சிட்டி முழுக்க நாலு குண்டு வெச்சிருக்கேன்.அதனால தான் உங்களை கூப்பிட்டேன்.

போறார் : யோவ்...ரியல்லி ? நீ குண்டு வெச்சது உண்மையா ? ஆர் யூ சீரியஸ் ?

மிடில் மேன் : ஆமா இவர் மிர்ச்சி சுச்சி பாரு. போன் போட்டு காமெடி பண்ண ? யோவ் உண்மையிலேயே குண்டு வெச்சிருக்கேன். உடனே பாம் ஸ்க்வாடை அனுப்பி தேடு. மஞ்ச ஒயர விட்டுட்டு பச்ச ஒயர வெட்டு.

போறார் : எந்த ஒயரை வெட்டனும்னு பாம் ஸ்க்வாடுக்கு தெரியும். நீ குண்டு வெச்ச இடத்தை பத்தி சொல்லு.

மிடில் மேன் : ஐ ஐ. கஷ்டப்பட்டு குண்டு வெச்சது நானு, இடத்தை சொன்னா நீ நோவாம நோம்பி திங்கலாம்னு பாக்குறியா ? தேடி எடுய்யா நீயே ?

போறார் : …