தேடுங்க !

Wednesday, September 30, 2009

முடியல .. பார்ட் 1இடம் : இயக்குனர் பங்கர் அலுவலகம்.
நேரம் : காலை 9 மணி 10 நிமிடம்

பங்கர் சேரில் கொஞ்சம் ரிலாக்ஸ்டாக அமர்ந்திருக்க, உதவியாளர்.

உ.ஆ : சார், டைரக்டர் பசி மகேசன் வந்திருக்கார்.

பங்கர் : பசியா ? இருட்டு பயலே நல்லாத்தானே போச்சு ? என்ன மேட்டர்னு தெரியலையே ? சரி வரச்சொல்லு.

பசி : ஹல்லோ பங்கர் சார் .....

பங்கர் : வாங்க வாங்க வாங்க பசி. எப்படி இருக்கீங்க ? ஹேட்ரிக் ஹிட் போல. வாழ்த்துக்கள். எப்படி இருக்கு லைப் ? என்ன விஷயம் ?

பசி : தேங்ஸ் சார். நல்லா போகுது. உங்களோட பிவாஜி கூட நல்லா வந்திருக்கு சார். அடுத்தது உங்க ஸ்டைல்ல பெரிய பட்ஜெட் ஒன்னு யோசிச்சிருக்கேன் சார், அதுதான் ப்ரொட்டியூசர்ஸ் பார்த்துக்கிட்டிருக்கேன்..மடிப்பாக்கம் கோயிலுக்கு இந்த வழியா வந்தேன் சார், அப்படியே உங்க காதுலயும் போட்டுட்டு போலாமேன்னு வந்தேன் சார். எதாவது ப்ரொட்டீயூசர்ஸ் பெரிய பட்ஜெட்ல செய்யறமாதிரி இருந்தா சொல்லுங்க சார்..சுக்ரம் கிட்ட கூட ஓரளவு பேசிட்டேன். அவர் கூட ஓக்கே சொல்லிட்டார் சார்...

பங்கர் : ஓ அப்படியா ? சுக்ரம் ஓக்கே சொல்லிட்டாரா ? அப்படீன்னா கண்டிப்பா ப்ரொட்டீயூசர் கிடைப்பாங்களே பசி. ஸ்க்ரீன்ப்ளேயும் ரெடி பண்ணிட்டீங்களா ?

பசி : ஓ எஸ். எல்லாமே ரெடி சார். ப்ரொட்டீயூசர் கிடைக்கறது தான் பாக்கி. கொஞ்சம் பெரிய பட்ஜெட்ங்கறதால குத்புதீன் ஐபக் தயங்கறார்.

பங்கர் : அப்படி என்ன ஸ்டோரி பசி ? ஏன் ஸ்மால் பட்ஜெட்ல பண்ணமுடியாதா ? நான் கூட சொந்த படங்களை ஸ்மால் பட்ஜெட்ல தான் எடுக்கறேன். அதுவும் நான் டைரக்ட் செய்யமாட்டேன். தெரியும் இல்லையா ? அந்தமாதிரி செய்யமுடியாதா ?

பசி : இல்லை சார். இந்த ஸ்டோரி யோசிக்கும்போதே கொஞ்சம் ப்ரம்மாண்டமா யோசிச்சுட்டேன் சார். கண்டிப்பா ஸ்மால் பட்ஜெட் ஒர்க்கவுட் ஆகாது சார்.

பங்கர் : அப்படி என்ன ஸ்டோரி ?

பசி : ஹீரோ ஒரு நெட்வொர்க் வெச்சுக்கிட்டு, எல்லாமே அவர் கூட படிச்ச ஸ்டூடன்ஸ் சார், அவங்களை போலீஸ் டிப்பார்ட்மெண்ட், ரெவினியூ டிப்பார்ட்மெண்ட்னு வேலைக்கு சேரவெச்சு, அவங்க மூலமா தகவல் திரட்டி, லஞ்சத்தை ஒழிக்கறமாதிரி..

பங்கர் : இதை குமணாவில செய்துட்டாங்களே ?

பசி : இல்லை சார், ஹீரோ ஒரு சிபிஐ ஆபீசர், மிடுக்கா மப்டி யூனிபார்ம் எல்லாம் போட்டு..

பங்கர் : இதை கஜயகாந்த் நூறு படத்துக்கு செய்துட்டாரே ?

பசி : இல்லை சார், நான் டிப்பரண்ட் காட்றேன். பகல்ல சிபிஐ ஆபீசராவும், ராவுல கொள்ளை அடிக்கறமாதிரியும், அதாவது ஒரே ஆள், டியூயலா ஆக்ட் பண்றமாதிரி..

பங்கர் : பசி, இதைத்தானே வெண்ணியன்ல செய்தோம்..

பசி : இல்லை சார். இங்கே ட்விஸ்ட் என்னன்னா, ஆயிரம் கோடி ரூபாய் பொருளாதார குற்றத்தை செய்யற ஒரு வில்லனை மடக்கி அந்த ஆயிரம் கோடி ரூபாய பறிச்சு, மக்களுக்கு கொடுக்குற மாதிரி..

பங்கர் : பசி, என்னைய வெச்சு காமெடி கீமடி பண்ணலியே நீங்க. இதைத்தானே பிவாஜியில மடக்கி மடக்கி எடுத்தேன் ?

பசி : இல்லை சார். அதுல சுஜுனிகோந்த் பாரின் ரிட்டன். இதில சுக்ரம் லோக்கல் ஆப்பிசர். அதுவும் இல்லாம ப்ரேயா இதுல வள்ளு வள்ளு நாயீ..ன்னு பாடுறமாதிரி ஒரு பாட்டு கூட ரெடி பண்ணிட்டேன் சார். ரொம்பவே வித்யாசமா வரும்.

பங்கர் : ஓ ? இதுலயும் ப்ரேயா வர்ராங்களா ? அவங்களோட பேசிட்டீங்களா ?

பசி : ஆமாம் சார். ரொம்ப வித்யாசமான கேரக்டர் சார். அவங்களை விட அவங்க கேரக்டர் பேசும்னு சொல்லியிருக்கேன் சார். இன்னொரு இண்ட்ரஸ்டிங் மேட்டர் சார். ரொம்ப புதுமையா லஞ்சம் வாங்குறவங்களை சுக்ரம் மேக்கப் போட்டுக்கிட்டு போய் கொல்றமாதிரி வெச்சிருக்கேன் சார்.

பங்கர் : என்ன பசி, மறுபடியுமா ? என்னோட மந்தியன் படத்துல மந்தியன் தாத்தா கெட்டப்ல போய் இதையே தான் செய்தாரில்லையா ?

பசி : இல்லை சார். அதுல பமலுக்கு வயசான மேக்கப். இதுல சுக்ரமுக்கு கோழி மேக்கப் சார். கோழி ரெக்கை எல்லாம் பறக்கவிட்டு சூப்பர் மேன் மாதிரி வருவார் சார்.

பங்கர் : என்னது கோழி சூப்பா ?

பசி : இல்லை இல்லை. கோழி சூப்பர் மேன். செக்கண்ட் வீக்ல பிக்கப் ஆகலைன்னா கோழி மாதிரி மாஸ்க் கொடுக்கலாம்னு கூட ஐடியா இருக்கு சார் ?

பங்கர் : என்னது மைடியர் குட்டிச்சாத்தான் படத்துக்கு க்ளாஸ் கொடுத்த மாதிரியா ? அதுக்கு ஒரு சேவலே கொடுத்துடலாமே ? டிக்கெட் காசுக்கு எல்லாரும் கறியும் கஞ்சியும் குடிச்சுட்டு போறாங்க ?

பசி : நோ நோ சார். சேவல் அப்படீங்கறது ஹரி சார் எடுத்த படம். அவர் படத்து பேர் வந்துட்டா அதை காப்பி அடிச்சேன் டீ அடிச்சேன்னு சொல்லிடுவாங்க சார். கோழி தான் சார் பெஸ்ட். அதுவும் இல்லாம மெக்ஸிக்கோவுல எங்க பெரியப்பா ஹெலிகாப்டர் வாடகைக்கு விடுறார் சார். அங்கே கூட ஷூட்டிங் வெச்சுடலாம்னு ஐடியா சார். ஹெலிகாப்டர்னாலே ப்ரம்மாண்டம் தானே சார் ?

பங்கர் : அது வேறயா ? வெளங்குனாப்லதான். ஓக்கே ஐ கேன் ஹெல்ப் யூ. போன வாரம் மலைப்புலி பானுவை பார்க் ஷெரட்டன்ல பார்த்தேன். எதாவது ப்ரம்மாண்டமா பண்ணனும் பங்கர்னு சொல்லிக்கிட்டிருந்தார். நீங்க வேணா போய் பாருங்களேன்...

பசி : ஷூயூர். கண்டிப்பா போறேன் சார். தேங்ஸ் பார் த லீட். ப்ரீயா இருந்தா கூப்பிடுங்க சார்.

பங்கர் : கண்டிப்பா பசி. ஏய் கந்தசாமி. பசி மகேசன் சார் கிளம்பிட்டார் பாரு. டீ காபி எதுவும் கொண்டுவாடா...

பசி மகேசன் : தேங்க்யூ சார். நான் வெளிய ரிசப்சன்ஷல் போய் குடிச்சுட்டு கிளம்பறேன். டேக் கேர் சார்.

பங்கர் : பை பை பசி மகேசன்.

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
இடம் : இயக்குனர் பங்கர் அலுவலகம்.
நேரம் : மாலை 6 மணி 10 நிமிடம்


உதவியாளர் டைரக்டர் அறைக்கு செல்பேசியுடன் வருகிறார்.

பங்கர் : என்ன கந்தசாமி ?

உ.ஆ : சார். டைரக்டர் பரேஷ் ம்ருஷ்ணா பேசறார்.

பங்கர் : கொடு கொடு கொடு. எவ்ளோ பெரிய டைரக்டர். மாட்ஷா, பண்ணாமலைன்னு கலக்கனவராச்சே. (போனை வாங்கி) ஹலோ சார். நல்லாருக்கீங்களா ?

பரேஷ் : நல்லாருக்கேன் பங்கர். புது ப்ராஜக்ட் ஒன்னு குட்டி தளபதியை வெச்சு ரெடி பண்ணியிருக்கேன்.

பங்கர் : ஒ க்ரேட் சார். சார் நீங்க கோச்சுக்கலைன்னா ஒரு கேள்வி.

பரேஷ் : எஸ் கேளுங்க பங்கர்.

பங்கர் : யார் சார் இந்த குட்டி தளபதி ?

பரேஷ் : பங்கர், என்ன விளையாடறீங்களா ? குட்டி தளபதியை தெரியாதா ? நீங்க வெந்திரன்ல பிஸியா இருக்கீங்க போல. அதனால அப்டேட் ஆகிக்கலைன்னு நினைக்கறேன். நம்ம சுரத் தான் குட்டி தளபதி.

பங்கர் : சாரி சார். எனிவே இப்ப தெரிஞ்சுக்கிட்டேனே. புது ப்ராஜக்ட் என்ன ஸ்டோரி சார் ?

பரேஷ் : ரெண்டு ப்ரண்ஸ். ஒருத்தன் பணக்காரன். ஹீரொக்கிட்ட ஸ்டேட்டஸ் பார்க்காம பழகறான். அவனோட அக்கா அவங்க நட்பை பிரிக்கறாங்க. ஹீரோவோட தொழிலை, அம்மா சமாதியை அழிக்கறன் பணக்காரன். ஏழை ப்ரண்ட் அவன் கிட்ட சவால் விட்டு..

பங்கர் : சார். மறதியா, நீங்க டைரக்ட் பண்ண பண்ணாமலை படத்து கதையை சொல்லிக்கிட்டிருக்கீங்க சார். புது படத்து கதை...

..க்ராக்..ப்ராக்..ம்ராக்...(இணைப்பில் கோளாறு)

பரேஷ் : ஒன்னும் கேட்கலை பங்கர். ஏதோ டிஸ்டர்பன்ஸ் இருக்குன்னு நினைக்கிறேன். நான் அப்புறம் கூப்பிடுறேன். உங்க ஆபீஸ்ல எடுபிடி பாறுமுகம் போடுற டீக்கு நான் ரசிகன். அவனுக்கு ஒரு ஹாய் சொல்லிடுங்க...

...பீப் பீப் பீப்...(கட்டாகிறது இணைப்பு)

பங்கர் : படத்தோட பேரை கேட்க மறந்துட்டமே ? தம்பி, அங்க பாறுமுகம் இருந்தா ஒரு டீயோட வரச்சொல்லு. ஒரே தலைவலி...

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

Wednesday, September 23, 2009

இலவச ஜெய்ப்பூர் செயற்கை கால்கள்


இலவச ஜெய்ப்பூர் செயற்கை கால்கள்

செயற்கை கால்களை தயாரித்து வழங்குவதில் சிறப்பாக செயல்படும் ஜெய்ப்பூர் செய்ற்கை கால்கள் நிறுவனத்தின் செயற்கை உபகரணங்களை, சென்னையில் இலவசமாக வழங்க இருக்கிறது பகவான் மகாவீர் விக்ராங் சகாயதா சமிதி மற்றும் டவ் இண்டியா.

செயற்கை கால்கள், கேலிபர்கள், மற்றும் க்ரச்சுகளையும் வழங்குகிறார்கள்.

பயனடைய விரும்புபவர்கள் தொடர்புகொள்ளவேண்டிய நாள், இடம், முகவரி மற்றும் தொலைபேசி எண்கள் கீழே

பயனாளிகள், காலை பதினோரு மணிக்குள் கீழே குறிப்பிட்டுள்ள இடத்தை வந்தடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

நாள் அக்டோபர் 6 மற்றும் 7
நேரம் காலை ஒன்பதில் இருந்து மாலை ஆறு வரை
இடம்
முருகன் திருமண மண்டம்
இலக்கம் 25 / 1, செவாலியர் சிவாஜி கனேசன் சாலை (சவுத் போக் ரோடு)
தி.நகர், சென்னை 17

தொடர்புகொள்ளவேண்டிய தொலைபேசி எண்கள்

044 26691616
044 25322223

இணையதளம்

http://share.zoho.com/preview/presentation/33825000000168489/Jaipur+Foot+Camp+in+Chennai+(Oct+6+&+7)

http://www.jaipurfoot.org/05_icamps.asp

Sunday, September 13, 2009

மலேசியா மூர்த்திக்கு மறுபடி எச்சரிக்கை !!!பல ஆபாச தளங்களை நடத்திய மலேசியா மூர்த்தி என்பவர் இவர்தான்

மார்ச் இரண்டாயித்தி எட்டு என்று நான் எழுதிய இடுகை சாரு நிவேதிதாவின் பணத்தை ஆட்டைய போட்டது மலேசியா மூர்த்தி என்பது.

சமீபத்திய யுவக்ருஷ்ணாவின் குமுதம் சைபர்க்ரைம் கட்டுரையில் அதனை வெளிப்படையாக எழுதியிருக்கலாம் என்பது உண்மைத்தமிழனை போலவே என்னுடைய கருத்துமாகும்.

குடும்பம், இரண்டு குழந்தைகள் என்று இருப்பதாலும், ஏற்கனவே சென்னை சைபர் க்ரைம் பிரிவில் ஆஜராகி, இவ்வாறு ஆபாசமாக எழுதி எல்லோருக்கும் மன உளைச்சலை கொடுத்தது தான் தான் என்றும் ஒப்புக்கொண்டதாலும், மேலும் சில வெளியில் சொல்லமுடியாத 'லும்', இனி இவ்வாறு செய்ய கனவிலும் நினைக்கமாட்டான் என்றே எண்ணியிருந்தேன். (ஆனாலும் உண்மைத்தமிழன் அண்ணனின் புகார், தொடர்ந்து காவல்துறையில் இருக்கிறது)

ஆனால் என்னுடைய பதிவிலும், உண்மைத்தமிழனின் பதிவிலும் மீண்டும் தன்னுடைய கைவரிசையை காட்டியுள்ளான். அந்த பின்னூட்டங்களை பார்க்கும்போது, இவன் இன்னும் முழுமையான அளவில் திருந்தவில்லை என்று தெரிகிறது.

இந்த மூர்த்திக்கும், மூர்த்திக்கு இன்னும் தொடர்பில் இருந்து உதவுபவர்களுக்கும் இந்த பதிவின் மூலம் கடுமையாக எச்சரிக்கிறேன். !!!! குடும்பம் இருக்கிறது, குழந்தைகள் இருக்கிறது என்று எல்லா குற்றவாளிகளுக்கும் பாவம் பரிதாபம் பார்த்தால் அவர்கள் திருந்துவதற்கும், அவர்களால் மற்றவர்கள் திருந்துவதற்கும் வாய்ப்பே இல்லாமல் போய்விடும் என்ற உண்மையை உண்மைத்தமிழன் அண்ணன் உணர்த்தியுள்ளார். அவருக்கு என் நன்றி.

Thursday, September 10, 2009

நான் ஒரு குழதையை தத்தெடுக்க முடியுமா ?

என்னுடைய உள்ளத்தில் எப்போதிலிருந்து இந்த எண்ணம் என்று தெரியவில்லை. என்னுடைய இளம் வயதில் நடைபெற்ற ஒரு சில சம்பவங்கள் காரணமாக இருக்கலாம். இதுகுறித்து, திருமணத்துக்கு முன்பே என்னவளிடம் விவாதித்துள்ளேன்.

ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்க்கவேண்டும்.

அதற்கு முன் ஒரு சம்பவம்.

நார்வே வந்த புதிதில், இங்கே மெக்டொனால்ட்ஸில் சந்தித்த ஒரு 65 வயது நார்வேஜியன் பெண்மணி, ஜூலி, இந்தியாவில் இருந்து வந்திருக்கிறீர்களா ? எனக்கு முப்பது வயதில் இந்திய மகள் இருக்கிறார் என்று என்னை ஆச்சர்யத்தில் மூழ்கடித்தார்.திருமதி ஜூலி

அவர் கடந்த முப்பது ஆண்டுகளுக்கு முன் பூனே சென்றபோது, அங்கிருந்த சூழ்நிலையில், ஒரு பெண் பிள்ளையை தத்தெடுத்துவந்துள்ளார்.

அவருக்கு இருந்த முன்று ஆண் பிள்ளைகளுடன் இந்த குழந்தையும் சேர்ந்து வளர்ந்து, இன்றைக்கு நார்வே ஓஸ்லோவில் வாழ்கிறார் இவர். நார்வே அரசியலில் குறிப்பிடத்தகுந்த இடத்திலும் இருக்கிறார்.

அவரிடம் கேட்டேன். உங்கள் மற்ற மூன்று பிள்ளைகள் திடீரென வந்து சேர்ந்த இந்த குழந்தையை எப்படி ஏற்றுக்கொண்டார்கள் என்று.

ஆரம்பத்தில் இந்த குழந்தை தத்தி நடப்பதை, தங்கள் அறைக்குள் வருவதை, தங்கள் பொருட்களை தொடுவதை மற்ற பிள்ளைகள் விரும்பவில்லையாம். அதன் பிறகு படிப்படியாக தங்களது குடும்பத்தில் ஒருவராக ஏற்றுக்கொண்டார்களாம்.

இன்றைக்கும் தன்னுடைய தாயை, மற்ற பிள்ளைகளை விட நுணுக்கமாக, அழகாக, வாரம் ஒருமுறை வந்து சந்திப்பதும், வேண்டிய அனைத்தையும் செய்வதும், அற்புதமானதாக இருக்கிறது. அவர்கள் வீட்டில் உள்ள ஒரு படத்தில் முழுகுடும்பமும் மகிழ்ச்சியோடு நிற்கும் ஒரு படம். ஆஹா. அற்புதம்.

கம்மிங் பேக் டு த பாய்ண்ட்.

கவிதா ஒரு பதிவு எழுதியிருந்தார். ஒரு குழந்தையை தத்தெடுப்பதை பற்றி எழுதியிருந்தார். தத்தெடுக்கப்பட்ட குழந்தை, மன ரீதியில் பின்னடைவை சந்தித்த கதை ஒன்றையும், பொருளாதார ரீதியில் குழந்தையை தத்தெடுத்த குடும்பம் கஷ்டப்படுவதையும் பற்றி. சுட்டி தாருங்களேன்.

அவர் அதில் தீர்வாக சொல்லியிருந்தது, ஒரு குழந்தையை தத்தெடுப்பதை விட்டுவிட்டு, ஆதரவற்ற 4 குழந்தைகளுக்கு சப்போர்ட் செய்யுங்காள் என்பது. அதில் எனக்கு உடன்பாடில்லை. ஏன் இல்லை ? தத்தெடுத்தல் என்பது, குடும்பம் இல்லாத ஒரு குழந்தைக்கு ஒரு குடும்பத்தை தருவதேயாகும். அதற்காகத்தான் அந்த பிள்ளைகள் ஏங்கும். பள்ளியில் படிக்க அல்ல. ஒரு தாயையும் தந்தையையும், ஒரு இல்லம் தந்துவிடமுடியாது.

இப்போது ஈழத்திலே ஏராளமான குழந்தைகள் தாய், தகப்பன் இரண்டு பேரையும் இழந்து நிற்கின்றனர். சுனாமி சமயத்தில் தத்தெடுப்பது குறித்து படித்த பெயரிலியின் இந்த பதிவை இந்த சூழ்நிலையோடு கண்டிப்பாக பொறுத்தி பார்க்கலாம்.

வேறு ஒரு பதிவில், தத்து எடுக்க விரும்பும் தம்பதியினர், திருமணம் ஆகி குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் கழிந்திருக்கவேண்டும், மேலும் தாசில்தார், மணியகாரர், முக்கு தெரு டீக்கடைக்காரர் என்று எல்லோரிடமும் சர்ட்டிபிக்கேட் வாங்கிவரவேண்டும் என்று ஆயிரத்தெட்டு விதிமுறைகளை சொல்லியிருந்தார்கள். இந்த சான்றிதழ்களை எல்லாம் வாங்கிவருவதற்குள், நான் தத்தெடுக்க நினைக்கும் குழந்தை வளர்ந்து பெரியவளா(னா)கி, தானே இன்னும் ரெண்டு குழந்தைகளை தத்தெடுக்க விண்ணப்பித்திருக்கும்.

ஹிந்து தத்தெடுப்பு சட்டம் பற்றிய ஓட்டு எடுப்பும் மென் புத்தகமும் பற்றிய தரவுகளும் இணையத்தில் பார்த்தேன்.

இது இந்தியாவில் பிறந்த ஹிந்துக்களுக்கு மட்டுமா, அல்லது என்னைப்போன்ற கிறிஸ்தவ மதத்தில் பிறந்தவர்களுக்கும் பொருந்துமா ? அப்படி ஹிந்துக்களுக்கு பொருந்தும் எனில் என்னைப்போல மத கலப்பு மணம் செய்தவர்களுக்கு பொருந்துமா ? என்னுடைய மனைவி பெயரில் எடுக்கமுடியுமா ?

என்னை பொறுத்தவரை, சட்டரீதியான உரிமைகளுடன் தத்தெடுக்கவே விரும்புகிறேன். அதாவது என்னுடைய தத்து பிள்ளைகளுக்கும், என்னுடைய அசையும் மற்றும் அசையா சொத்துக்களுக்கும் முழு உரிமையை தர விரும்புகிறேன். (என்னுடைய மகள் இதற்கு எந்த ஆட்சேபமும் தெரிவிக்கமாட்டாள் என்று நம்புகிறேன், அவளுக்கு ஆரஞ்சு பழம்தான் பிடிக்கும்)

என்னுடைய மனைவி இதற்கு சம்மதம் தெரிவித்தாலும், அது முழுமையான சம்மதமாக இருக்குமா, அல்லது ஒரு பெண்ணாக அவள் சந்திக்கப்போகும் உளவியல் பிரச்சினைகள் என்ன என்று எதுவும் புரியவில்லை.

விவாதிக்கலாமா ?