Posts

Showing posts from July, 2009

ஆண்மையிழந்த அடைக்கலங்குருவிகள்....!!!!

Image
முன்பெல்லாம் கிராமத்து வீடுகளெங்கும் காணக்கிடைக்ககூடிய ஒரு விடயம், அடைக்கலங்குருவிக்கூடு...கூரை வீடு,பனைவாரை அடித்த ஓட்டு வீடு,செங்கல் சுவர் மச்சு வீடு என்று எந்த வீடாக இருந்தாலும் மேக்கால ரூம், கிழக்கால ரூம் என்று எல்லாவிடங்களிலும் வாகான இடமாய்ப்பார்த்து கூடுகட்டியிருக்கும்...

அது கூடுகட்டும் அழகே தனி...காய்ந்த புல்,சின்ன வைக்கோல், ஏதோ ஒரு செடியின் காய்ந்த சருகு, கொஞ்சம் இறுக்கமான சின்ன குச்சி என்று எதாவது ஒன்றை அலகில் வைத்துக்கொண்டு ஆள் நடமாட்டம் குறையும் நேரம் பார்த்து முற்றத்தின் இரும்பு கம்பியிலோ, சுவர் ஒட்டி வளர்ந்திருக்கும் வேப்பமரத்து மூன்றாவது கிளையிலோ சுறுசுறுப்பாக தலையை ஆட்டி ஆட்டி சின்னக்கண்களோடு பார்த்துக்கொண்டிருக்கும்...பாட்டி வெற்றிலைப்பாக்கு இடிக்கும் சத்தமோ, மோர் சிலுப்பும் சத்தமோ, வியர்வையோடு தாத்தா வந்தமரும் சத்தமோ, ஜெனரேட்டர் இஞ்சின் ஓடும் சத்தமோ, ட்ராக்டர் ட்ரெய்லர் மாட்டும் சத்தமோ அதை தொந்தரவு செயததாக நினைவில்லை...தான் உண்டு தன் வேலை உண்டு என்று கருமமே கண்ணாக கூண்டு கட்டுவது, தான் என்ன வேலை செய்கிறோம் என்று இந்த மனிதனுக்கு தெரியுமோ தெரியாதோ என்பது பற்றி கவலை இன்ற…

சீமான் 'நாம் தமிழர்'

Image
இலங்கையின் வன்னிப் பகுதியில் முள் வேலிக்குள் முடங்கிப் போன மூன்று லட்சம் தமிழர்கள் தன்மானத்துடன் வாழ, சீமான் தனது அடுத்தகட்ட போராட்டத்தை தொடங்குகிறார்.

வரும் ஜூலை 18 ஆம் தேதி சனிக்கிழமை, மதுரையில் 'நாம் தமிழர்' என்ற பெய‌ரில் ஊர்வலம் மற்றும் பொதுக் கூட்டத்தை நடத்தப் போவதாக அறிவித்துள்ளார் சீமான். அன்று மாலை 4 மணிக்கு மதுரை ஜான்சிராணி பூங்காவிலிருந்து ஊர்வலம் தொடங்குகிறது. 6 மணிக்கு வடக்குமாசி வீதியும் மேலமாசி வீதியும் சந்திக்கும் இடத்தில் பொதுக்கூட்டம் நடக்கிறது.

இயக்குனர் மணிவண்ணன், அருட்தந்தை ஜெகத்கஸ்பர், மருத்துவர் எழிலன், கவிமுழக்கம் சாகுல் ஹமீது இவர்களுடன் சீமானும் பொதுக் கூட்டத்தில் பேசுகிறார்.

திரைப்பட இயக்குனர்கள், உதவி இயக்குனர்கள், கல்வியாளர்கள் மற்றும் தமிழ் உணர்வாளர்கள் அனைவரும் இந்த எழுச்சிமிகு பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்கின்றனர். முள் கம்பிக்குள் அடைக்கப்பட்ட தமிழனின் அடிப்படை உ‌ரிமையை பெற்றுத்தர நடத்தப்படும் பொதுக்கூட்டம் இது. நாம் தமிழர் என்பதை நிரூபிக்கும் வேளை இது.

உலகமெங்கும் தமிழீழத்துக்காகவும் ஈழத் தமிழ் மக்களுக்காகவும் தமிழர்கள் போராட்டங்களை கொ்ண்டிருக்க, த…

கூகிள் க்ரோம் OS. மைக்ரோசாப்ட்டுக்கு ஆப்பு...

Image
மைக்ரோசாப்ட்டின் காதில் ஏற்கனவே புகை, ரத்தம் போன்ற மேட்டர்களை வரவழைத்த கூகிள், இப்போது ஆப்பரேட்டிங் சிஸ்டம் மார்க்கெட்டிலும் களமிளங்குகிறது.

க்ரோம் என்ற பெயரில் ஓ.எஸ்ஸை அறிமுகப்படுத்தவிருக்கிறது. இதுபற்றிய தகவல் கூகிளின் அதிகாரப்பூர்வ வலைப்பக்கத்தில் காணக்கிடைக்கிறது...அதன் சுட்டி

லைனக்ஸ் அடிப்படையில் இயங்கப்போகும் இதில் மின்னஞ்சல்களை ப்ரவுசர்களை திறக்காமலே பார்க்கும் வசதி, அனைத்தும் ஓப்பன் சோர்ஸ், வெப் பேஸுடு ஆர்க்கிடெக்சர் என்று கச்சைகட்டுகிளார்கள் கூகிளார்.

இணையத்தை வெறும் சர்ச் எஞ்சினை வைத்து ஆக்ரமித்த கூகிள், அதன் பிறகு ஜிமெயில், கூகிள் எர்த், ஆர்க்குட், அண்ட்ராய்ட் மொபைல், இப்போது ஓ.எஸ். என்று நம்முடைய கணினி பயன்பாட்டின் மிகப்பெரிய பங்கை கொண்டுள்ளது.

இது ஆபத்து. எதிர்காலத்தில் தனி நபரின் ப்ரைவஸியை கூகிள் விழுங்கக்கூடிய சாத்தியம் 100 சதவீதம் உள்ளது. இதில் இருந்து தப்பிக்க நாம் செய்யவேண்டியது இரண்டு.

ஒன்று > கூகிளை புறக்கணிப்பது !!!!

அல்லது

இரண்டு > கூகிள் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்துவிடுவது...!!!

பொதுவா அதிகமா சிரிச்சா லூசுங்கறாய்ங்க...!!!

ஒளிவட்டம் சுமக்கும் வலைப்பதிவர்கள்

Image
சமீபத்தில் ஒளிவட்டம் சுமக்கும் அரசு ஊழியர்கள் என்ற பதிவை பார்த்தேன்..

நீங்களோ நானோ, அல்லது எல்லோருமோ, ஒரு வகையில் அரசு ஊழியர்களால் பாதிக்கப்பட்டிருப்போம்...

இதற்கு அரசு ஊழியர்களின் பிள்ளைகள் கூட விதிவிலக்கல்ல...இந்தியாவில் வாழ்ந்துகொண்டு, வாழ்க்கையில் ஒரு முறை கூட லஞ்சம் கொடுக்காதவரை சல்லடை போட்டு தேடினாலும் கிடைக்கமாட்டார்.

இந்தியன் தாத்தா ஒரு விதிவிலக்கு. இருந்தாலும், அது ஒரு திரைப்படம் என்பது உங்களுக்கு தெரியும்.

இருந்தாலும் பிச்சைப்பாத்திரம் எழுதும் எதுவும் எனக்கு பிடிக்காது, இதுவும் எரிச்சலைத்தான் கொடுக்கும் என்ற மிகுந்த நம்பிக்கையில் திட்டி ஒரு பின்னூட்டம் போட்டுவிட்டு இடத்தை காலிசெய்துவிட்டேன்.

இருந்தாலும், ஒரு உண்மை உரைத்தது. அதனால் இந்த பதிவு.

சுயதொழில் செய்யும் ஒரு சில வலைப்பதிவர்களை தவிர, ஒரு பத்து சதவீதம் இருக்குமா ?, மீதி தொண்ணூறு சதவீதம் பேர், வலைப்பதிவுகளை அலுவலகத்தில் வைத்து பார்க்கிறீர்கள்.

ஒரு நிறுவனத்தில் கூலிக்கு நின்று, சம்பளம் பெறும் நாம், நிறுவனத்திற்கு உழைப்பதை விட்டுவிட்டு, சொந்த மின்னஞ்சலை திறந்து பார்ப்பது கூட குற்றம். இதுல வலைப்பதிவில் வேறு மொக்கை. என்னையும் சேர்த…

சிந்தாநதி....போய்வா...நதியலையே.....

Image
ஒருமுறை வலைச்சரம் தொடுக்க அழைத்திருந்தார்...நான் தமிழ் பார்க்க வாய்ப்பில்லாத ஒரு கணியில் இருந்து பார்த்ததால் அதனை பார்க்க முடியவில்லை. ஆங்கிலத்தில் எழுதி அனுப்புமாறு கேட்டிருந்தேன், பதில் இல்லை.
நேரில் சந்திக்கும்போது அலைபேசி ஒன்று கொடுடா என்று கட்டளை இட்டிருந்தார். கடந்த டிசம்பரில் சந்திக்கலாம் என்று எண்ணி அது கைகூடாமல் போனது..
ஜிமெயில் சாட்டில் கடந்த ஆறுமாதங்களாக அதிகம் புழங்காததால் அவர் ஆன்லைனில் இருக்கிறாரா இல்லையா என்று தெரியாது, அதனால் அதிகம் தொடர்பில்லை...
அவர் ஒரு போட்டி வைத்து பரிசாக சில புத்தகங்கள் ஸ்பான்ஸர் செய்ய சொல்லியிருந்தார், செய்தேன்...ரொம்ப நாளாக தொடர்பில்லையே, விரைவில் பேசலாம் என்று எண்ணியிருந்தேன்..
வலைப்பதிவில் காலையில் பார்த்ததும் ஒரே ஷாக்...
இணையத்தில் என்னுடைய உடல் நலனை விசாரித்தவரின் உடல் நலனை மீள் அஞ்சல் அனுப்பி கூட விசாரிக்காமல் இருந்திருக்கிறேன். என் பணி நேரம் என் நட்புகளை கூட தின்றிருக்கிறது...வருந்துகிறேன்...ஆழமாக வருந்துகிறேன்...

சிந்தாநதி ☆to me show details10/31/07 அன்பின் ரவி வணக்கம் இருவாரங்களாக உங்களை இணையத்தில் காண முடியவில்லை? உடல்நிலை எப்படி இருக்கிறது? மறுப…

பேச்சை குறைப்போம்...செயலில் இறங்குவோம்..!!!

Image
பெங்களூர்: பெங்களூர் எலஹங்காவில் உள்ள இலங்கைத் தமிழ் அகதிகள் குழந்தைகளுக்கான பள்ளியில் போதிய அளவில் ஆசிரியர்கள் இல்லாததால் படிப்பு பாதிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பள்ளிக்கு உடனடியாக 6 ஆசிரியர்களும், வாரம் முழுவதும் ஒவ்வொரு மாணவ, மாணவிக்கும் 16 கூடுதல் உணவும் தேவைப்படுகிறதாம்.

தற்போது இலங்கையில் போர் முடிந்துள்ள நிலையில் இப்பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளின் நிலையை மேம்படுத்த பள்ளி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இதற்காக பெங்களூரைச் சேர்ந்த பெரும் தொழில் நிறுவனங்களின் பேராதரவைப் பெறவும் யோசித்து வருகிறது.

ஆசிரியர்களுக்கும், சாப்பாட்டுக்கும் ஸ்பான்சர்களைப் பெறவும் அது உத்தேசித்துள்ளது.

தற்போது இங்கு பணியாற்றும் ஆசிரியர்கள் ஒன்றாவது முதல் பத்தாவது வகுப்பு வரை எடுக்க வேண்டியுள்ளது. இங்கு மொத்தம் 210 பேர் படிக்கின்றனர். இது 250 ஆக உயரும நிலை உள்ளது.

இதுகுறித்து பள்ளி நிர்வாக அதிகாரி லட்சுமி கோபிநாத் கூருகையில், பன்னாட்டு நிறுவனங்கள், பெரிய பெரிய நிறுவனங்கள் ஆசிரியர்களுக்கு ஸ்பான்சர் செய்தால் நரமாக இறுக்கும். அது இங்குள்ள ஆசிரியர்களுக்கு ஊக்கம் தருவதாக அமையும்.

எங்களுக்கு தற்போது கணிதம், இயற்பியல், வேத…