தேடுங்க !

Thursday, April 30, 2009

இந்திய ராணுவத்தை அனுப்பி தனி ஈழம் அமைப்பேன்-ஜெ

நாமக்கல்: இந்திரா காந்தி எந்த சர்வதேச சட்டத்தைப் பின்பற்றி வங்கதேசத்திற்கு விடுதலை வாங்கிக் கொடுத்தாரோ, அதே சட்டத்தை பின்பற்றி, அதே தர்ம நியாயங்களை பின்பற்றி, நான் சொல்வதை கேட்கும் மத்திய அரசு அமைந்தால், இலங்கைக்கு இந்தியப் படையை அனுப்பி அங்கே 'தனி ஈழம்' அமைக்க நடவடிக்கை எடுப்பேன் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

நாமக்கல்லில் நேற்று தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசினார் ஜெயலலிதா. அங்கு அவர் பேசுகையில்,

இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட, உண்ணாவிரத நாடகம் நடத்தி; தான் உண்ணாவிரதம் இருந்ததால், உடனே இலங்கை அரசு, போர் நிறுத்தம் என்று அறிவித்துவிட்டது; எனவே தனது உண்ணாவிரதத்திற்கு வெற்றி கிடைத்துவிட்டது என்று அறிவித்துவிட்டு, வந்த வேகத்தில் உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டு, வீடு திரும்பிவிட்டார் கருணாநிதி.

ஆனால் உண்மையில் போர் நிறுத்தம் ஏற்பட்டதா? அப்படி அறிவிக்கவே இல்லை, என்று இலங்கை அரசு மறுப்பு வெளியிட்டுள்ளது. "போர் நிறுத்தம் ஏற்பட்டுவிட்டது" என்று கருணாநிதி அறிவித்துவிட்டு, வீடு போய் சேருவதற்குள்ளாகவே, "போர் நிறுத்தம் செய்வதாக எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை" என்று இலங்கை அரசு திட்டவட்டமாக அறிக்கை வெளியிட்டது.

தாக்குதல் தொடர்கிறது...

இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதிகளில் ராணுவம் மேற்கொண்டிருக்கும் தாக்குதல் இடைவிடாது நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. ராணுவத்தின் தொடர் தாக்குதலில் எண்ணற்ற தமிழர்கள் உயிரிழந்து கொண்டிருக்கிறார்கள் என்று அங்கிருந்து வருகின்ற செய்திகள் கூறுகின்றன.

முள்ளிவாய்க்கால் என்ற தமிழர் கிராமத்தில், நேற்று மட்டும், இலங்கை விமானப் படை 23 முறை வானத்தில் இருந்து குண்டு வீசியதாக இணையத்தள செய்திகள் தெரிவிக்கின்றன.

முள்ளிவாய்க்காலை சுற்றியுள்ள தமிழர் பகுதிகள் மீது இலங்கை இராணுவத்தின் கடற்படை, பீரங்கிகள் பொருத்தப்பட்ட படகுகளைக் கொண்டு தாக்குதல் நடத்தி இருக்கிறது.

Multi Barrel Rocket Launcher என்ற பல ராக்கெட்களை ஒரே நேரத்தில் வீசித் தாக்கும் கருவியைக் கொண்டு ராணுவத்தின் தரைப்படை, முள்ளிவாய்க்காலின் வடக்குப் பகுதியில் இருந்து தமிழர்களைத் தாக்கி இருக்கிறது.

இந்தத் தாக்குதல்கள் எல்லாம் எந்த நேரத்தில் நடைபெற்றது தெரியுமா?

மெரீனா கடற்கரை நாடகம்...

கருணாநிதி மெரீனா கடற்கரையில் நேரடி ஒளிபரப்பு வசதியோடு உண்ணாவிரத நாடகத்தை அரங்கேற்றி முடித்த அந்த நேரத்தில்.

கருணாநிதி காலை உணவை முடித்துவிட்டு, மதிய உணவை உட்கொள்வதற்கு முன்பாக, இடைப்பட்ட மூன்று மணி நேரம், உண்ணாவிரதம் இருந்ததற்காக, கருணாநிதியின் தொண்டர்கள், ஊர் முழுவதும் பேருந்துகளை அடித்து, நொறுக்கி, கடைகளை சூறையாடி, பொதுமக்களை அச்சுறுத்தி, அராஜக ஆட்டம் போட்ட அந்த நேரத்தில் தான், இலங்கையில் தமிழர்கள் இத்தகைய கொடூரத் தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.

கெட்டிக்காரனின் பொய்...

என்றைக்கு ஓயும் எங்கள் தமிழர் துயரம் என்று நாம் நினைக்காத நாளில்லை. வேண்டாத தெய்வமில்லை. இத்தகைய துயரமான சூழ்நிலையில், இந்தியாவில் இருக்கக்கூடிய அரசியல்வாதிகள் சிலர், தேர்தல் தோல்வி உறுதி என்று ஆகிவிட்ட நிலையில், இலங்கைத் தமிழர்களை பகடைக் காய்களாகப் பயன்படுத்தி, அரசியல் சூதாட்டத்தில் காய்கள் நகர்த்துகின்றனர்.

இந்தக் கயமையை நாம் அனைவரும் ஒட்டுமொத்தமாகக் கண்டிக்க வேண்டும்.

மைனாரிட்டி திமுக அரசின் முதலமைச்சர் கருணாநிதி, நாடாளுமன்றத் தேர்தலில் தனது கூட்டணி பெறப் போகின்ற அவமானகரமான தோல்வியை எண்ணி அஞ்சுகிறார். அதன் எதிரொலி தான் அண்ணா சமாதியில் உண்ணாவிரத நாடகம்.

தனது நாடகம் வெற்றி பெற்றுவிட்டதாக உலகுக்கு அறிவிக்க முயற்சித்து அதில் மீண்டும் தோல்வியுற்றிருக்கிறார் கருணாநிதி. உண்மை தோற்றதில்லை; பொய் ஒருபோதும் வென்றதில்லை என்பதற்கு இந்த ஒரு எடுத்துக்காட்டு போதும்.

"கெட்டிக்காரனின் பொய்யும், புரட்டும் எட்டு நாளில் தெரிந்துவிடும்" என்பது தமிழ்நாடே அறிந்த பழமொழி.

தன்னை கெட்டிக்காரன் என்று நினைத்துக் கொண்டிருக்கும் கருணாநிதி, அரங்கேற்றிய பொய் நாடகம், புரட்டு வசனம் எட்டு மணி நேரம் கூட தாங்கவில்லை. வேடம் கலைந்தது. தமிழர்களின் வேதனை தொடர்கிறது.
இலங்கைத் தமிழர்களின் துயரத்தைப் போக்க, சென்னையில் 13 நாட்களாக உண்ணாவிரதம் இருந்தார்கள் பெண்கள். தென் ஆப்பிரிக்காவில், மருத்துவமனையில் சேர்க்கப்படும் நிலை வரும் வரை உண்ணாவிரதம் இருக்கிறார் ஒரு தமிழர்.


இங்கிலாந்தில் உண்ணாவிரதம் இருந்தவரின் உயிர் ஊசலாடுகிறது. உலகெங்கும் தமிழர்கள் அறிவிக்கப்படாத உண்ணாவிரதங்களை தங்கள் வீடுகளில் மேற்கொண்டுள்ளனர்.

ஊட்டச் சத்து உண்ணாவிரதம்...

ஆனால், உலகத்திலேயே மிகக்குறுகிய நேரம், அதாவது 3 மணி நேரம் உண்ணாவிரதம் இருந்த ஒரே நபர் இந்தக் கருணாநிதி தான். தேவையான ஊட்டச் சத்துக்களைப் பெற்றுக்கொண்டு, ஊரை ஏமாற்ற உண்ணாவிரதம் உட்கார்ந்தார் கருணாநிதி.

தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு ஆரம்பித்ததும் படுத்துக் கொண்டார். அவரது குடும்ப உறுப்பினர்கள் எல்லாம், தங்கள் தொழில்களை ஒத்திவைத்தனர்.

முகத்தில் சோகம் வழிய வழிய கருணாநிதியை சுற்றி சுற்றி வந்து நாடகத்தை சுவாரஸ்யமாக்க முயற்சித்தனர். ஊட்டச்சத்துக்கான அடுத்தவேளை வந்தவுடன், உள்துறை அமைச்சர் சிதம்பரத்தின் அலுவலகத்தில் இருந்து ஒரு தகவல் வந்ததாக நாடகத்தை அடுத்த காட்சிக்கு நகர்த்தினார்கள்.

இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட்டுவிட்டது என்று கருணாநிதி அறிவித்தார். மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் நாடகத்தில் தனது கதா பாத்திரத்திற்கு ஒதுக்கப்பட்ட வசனங்களை ஒப்பித்தார்.

நேரடி ஒளிபரப்பு முடிவடைந்தது. அடுத்த வேளை உணவுக்கு எல்லோரும் புறப்பட்டுச் சென்றார்கள். இலங்கைத் தமிழர்களின் துயரம் தீர்ந்தது.

இனிமேல் இலங்கை ராணுவம் தமிழர்களை வாழ வைக்கும் பணிகளில் ஈடுபடும் என்று இலங்கை இராணுவத்தின் அறிவிக்கப்படாத செய்தித் தொடர்பாளராக மாறினார் கருணாநிதி.

ஓடாத ரயில் முன் தலை...

வானொலி, தொலைக்காட்சி, பத்திரிகைகள், இன்டர்நெட், எஸ்.எம்.எஸ். இவையெல்லாம் நொடிக்கு நொடி உலகெங்கும் இருந்து செய்திகளை பரப்புகின்ற இந்த 21ம் நூற்றாண்டில், ஓடாத ரயில் முன் தலை வைத்துப் படுத்தவரின் அந்தக் கால நாடகம் எடுபடவில்லை.

போர் நிறுத்தம் இல்லை என்று இலங்கை அரசு திட்டவட்டமாகக் கூறுகிறது. இலங்கை அதிபர் செயலகத்தில் இருந்து போர் நிறுத்தம் என்ற ஒரு அறிவிப்பு வந்ததாக பத்திரிகைகளிலும், தொலைக்காட்சிகளிலும் கூறப்படுவது தவறான செய்தி என்று இலங்கை பாதுகாப்பு அமைச்சகம் கூறி இருக்கிறது.

இலங்கையில் தமிழர் பகுதிகளில் தாக்குதல் தொடர்கிறது. ப.சிதம்பரம் இயக்கத்தில் கருணாநிதி நடிப்பில் அரங்கேற்றப்பட்ட உண்ணாவிரத நாடகம் நடைபெற்ற சில மணி நேரத்திலேயே, இலங்கை ராணுவத்தின் முப்படைகளும் தமிழர்கள் மீது தாக்குதலைத் தொடர்ந்தன.

இரட்டைவாய்க்கால், வலைஞர்மடம், முள்ளிவாய்க்கால் போன்ற இடங்களில், 272 தமிழ் உயிர்கள் பலியாயின. நூற்றுக்கணக்கானவர்கள் படுகாயமுற்றனர்.

இது எல்லா பத்திரிகைகளிலும் ஏப்ரல் 28 ஆம் தேதி காலையில், முதல் பக்க செய்தியாக வெளிவந்துள்ளது.

உண்மை இப்படி இருக்க, கருணாநிதி, சிதம்பரம் போன்றவர்கள் தங்கள் முயற்சியால் போர் நிறுத்தமே ஏற்பட்டுவிட்டதாக நாடகம் ஆடுகிறார்களே! அதை நாம் நம்ப வேண்டும் என்றும் சொல்லுகிறார்களே! அதற்கு பொய் சாட்சி கூற டெல்லியில் இருந்து தொலைபேசியில் செய்தி வந்தது என்று சொல்லுகிறார்களே!

மனசாட்சியே இல்லையா...

இவர்களுக்கெல்லாம் மனசாட்சியே இல்லையா? தமிழ்நாடு என்றால் அவ்வளவு இளக்காரமாக நினைத்துவிட்டார்களா?

தமிழக மக்கள் இவர்களுக்கு, அவ்வளவு கேவலமாகப் போய்விட்டார்களா?

நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என்பதற்காக, பொய்யிலும், புரட்டிலும் ஈடுபட்டிருக்கும், தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணியினரின் இத்தகைய மோசடி நடவடிக்கைகள், தேர்தல் களத்தில் அவர்களுக்கு எந்தப் பயனையும் தராது.

ஆனால், இவர்களது இத்தகைய மனிதாபிமானமற்ற, நகைப்புக்குரிய ஏமாற்று வேலைகளால், அண்டை நாடு என்ற பொறுப்பிலும், சொந்த சகோதரர்கள் என்ற கடமையிலும், இலங்கைத் தமிழர்களுக்கு செய்திருக்க வேண்டிய அடிப்படை உதவிகளை இந்தியா செய்யவில்லை.
அதற்குக் காரணம், நாடகம் ஆடுவதிலும், அரசியல் ஆதாயம் தேடுவதிலும் காட்டுகின்ற அக்கறையை, தமிழர்களின் துயரத்தைப் போக்குவதில் காட்டவில்லை என்பது தான்.

திமுக-காங்கிரசின் கவனம் எல்லாம், தங்கள் சுய லாபத்திற்காக, இலங்கைத் தமிழர் பிரச்சினையை பயன்படுத்துவதில் தான் இருக்கிறது.

ஆட்சியில், அதிகாரத்தில், செயல்பட வேண்டிய இடத்தில் இருக்கின்றவர்கள் செய்யக்கூடிய பணிகளை நிறைவேற்றுவதில், அவர்களுக்கு சிறிதளவும் அக்கறை இல்லை. திமுகவிற்கும், காங்கிரசுக்கும், எல்லாமே அரசியல் தான்.

பதவி, பணம், அந்தஸ்து என்பதை நோக்கித் தான், அவர்களுடைய நாடகங்கள் எல்லாம் என்று, தமிழக மக்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.

இந்தக் குற்றச்சாட்டின் விளைவாக வரப் போவது தான், அவர்களுடைய தேர்தல் தோல்வி; மக்களின் தேர்தல் வெற்றி. இலங்கைத் தமிழர் மீது உண்மையான அக்கறை கொண்ட புதிய ஆட்சி அடுத்து மலரப் போகிறது. அதற்கான முன் அறிவிப்பு தான் இங்கே அலைகடலெனக் கூடியிருக்கும் மக்கள் கூட்டம்.

ஈழத் தமிழர் நலன் காக்க, மோசடி அரசியல்வாதிகளின் முகத்திரைகளைக் கிழிக்க, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணிக்கே வாக்களியுங்கள். எனது கரத்தை வலுப்படுத்துங்கள்.

நாம் அமைக்கப் போகும் புதிய மத்திய அரசு, தமிழர் உரிமைகளை காப்பாற்றும் அரசாக அமைவது உறுதி, உறுதி, உறுதி.

காங்கிரஸ் தேய்ந்து கொண்டே வருகிறது என்பதற்கு அடையாளமாகத் தான் அந்தக் கட்சியின் செய்தித் தொடர்பாளர்கள் பேசுகின்ற பேச்சுக்கள் எல்லாம் அமைந்து இருக்கின்றன.

அந்த அளவிற்கு வரலாறு தெரியாதவர்களும், விவரம் புரியாதவர்களும் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர்களாக இருக்கின்றார்கள். எங்களுடைய சொல்லைக் கேட்கும் புதிய மத்திய அரசு அமைந்தால், தனி ஈழம் அமைக்க நடவடிக்கை எடுப்பேன் என்று அண்மையில் சொல்லி இருந்தேன்.

இதற்கு ஒரு காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர், "இந்த அம்மாவுக்கு சர்வதேச சட்டம் தெரியவில்லை. எப்படி இலங்கையில் தனி ஈழம் அமைக்க முடியும்? இலங்கை என்ன இந்தியாவின் மாவட்டமா? காலனியா?" என்று வினவியிருக்கிறார். இதிலிருந்து இவர் தான், விவரம் புரியாத ஒரு மனிதர் என்பது தெரிகிறது.

இந்திரா காந்தி அவர்கள் பிரதமராக இருந்த போது, கிழக்கு பாகிஸ்தான் மீது படையெடுத்து வங்கதேசத்திற்கு விடுதலை வாங்கித் தரவில்லையா! இந்திரா காந்திக்கு சர்வதேச சட்டம் புரியவில்லை என்று சொல்கிறாரா காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர்? 1971 ஆம் ஆண்டு இந்திய - பாகிஸ்தான் போரை காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் மறந்துவிட்டார் போலும்! இனவெறியை தடுப்பதற்காகத் தான் இந்தப் போரை இந்திரா காந்தி நடத்தினார் என்பதை இந்தத் தருணத்தில் நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

பிறகு, இந்திரா காந்தியின் மகன் ராஜிவ் காந்தி இந்திய நாட்டின் பிரதமாக இருந்த போது, இலங்கைக்கு இந்திய ராணுவத்தை அனுப்பவில்லையா? அவருக்கும் சர்வதேச சட்டம் புரியவில்லை என்று சொல்கிறாரா காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர்?

இந்திரா காந்தி எந்த சர்வதேச சட்டத்தை பின்பற்றி, பங்களாதேசிற்கு விடுதலை வாங்கிக் கொடுத்தாரோ, ராஜீவ் காந்தி எந்த சர்வதேச சட்டத்தை பின்பற்றி இலங்கைக்கு இந்திய ராணுவத்தை அனுப்பினாரோ; அதே சர்வதேச சட்டத்தை பின்பற்றித் தான், அதே தர்ம நியாயங்களை பின்பற்றித் தான், நான் சொல்வதை கேட்கும் மத்திய அரசு அமைந்தால், இலங்கைக்கு இந்திய இராணுவத்தை அனுப்பி அங்கே தனி ஈழம் அமைக்க நடவடிக்கை எடுப்பேன் என்று நான் சொல்கிறேன்.

இலங்கையில் தனி ஈழம் அமைக்க நடவடிக்கை எடுப்பேன் என்று நான் சொன்னது தேசத் துரோகச் செயல் என்று மற்றொரு காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அண்மையில் கருத்து தெரிவித்து இருந்தார்.

இந்தியாவை துண்டாட நினைப்பது தான் தேசத் துரோகச் செயலே தவிர, இலங்கையில் தனி ஈழம் அமைப்பேன் என்று சொல்வது தேசத் துரோகச் செயல் அல்ல என்றார் ஜெயலலிதா.

Thanks : thatstamil

Tuesday, April 28, 2009

கூகிள் விளம்பரங்களை க்ளிக் செய்யவேண்டியது ஏன் ?தமிழ் செய்திகள், அக்ரிகேட்டர்கள், தமிழ் வலைப்பதிவுகள், தமிழ் இணைய தளங்களில் சில விளம்பரங்கள் அவ்வப்போது எட்டிப்பார்க்கின்றன...

அவற்றை க்ளிக் செய்து என்னாது என்று பாருங்கள். உங்களுக்கு நேரமும்,வேகமான இணைய இணைப்பும் இருந்தால்.

இதன் மூலம்,அந்த விளம்பரங்களை கொடுத்தவர்களில் இருந்து, அவற்றை வெளியிடுபவர்கள் அனைவரும் பயனடைவார்கள்..

திருப்பூர்: இலங்கை மண்ணிலேயே ஈழத் தமிழர்கள் ஈழம் காண்பார்கள்; அது அவர்களின் அன்னை பூமி; அது அவர்களின் உரிமை பூமியும் கூட. இந்திய அரசின் அனைத்து செல்வா

திருப்பூர்: இலங்கை மண்ணிலேயே ஈழத் தமிழர்கள் ஈழம் காண்பார்கள்; அது அவர்களின் அன்னை பூமி; அது அவர்களின் உரிமை பூமியும் கூட. இந்திய அரசின் அனைத்து செல்வாக்கையும் பயன்படுத்தி நான் ஈழம் அமைப்பேன். இலங்கையில் தனி ஈழம் அமைப்பேன் என்று நான் சொன்னது இந்தியாவின் இறையாண்மைக்கு விரோதமானதல்ல என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

திருப்பூர் மற்றும் பொள்ளாச்சியில் நேற்று ஜெயலலிதா பிரசாரம் செய்தார். பிரமாண்டமாக திரண்டிருந்த கூட்டங்களில் அவர் பேசினார்.

திருப்பூரில் அவர் பேசியதாவது..

இலங்கைத் தமிழர் பிரச்சினையில், எண்ணற்ற நாடகங்களை அரங்கேற்றி வந்த கருணாநிதி, இன்று ஒரு உண்ணாவிரத காட்சியையும் அரங்கேற்றி முடித்திருக்கிறார்.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக, இலங்கையில் நடைபெற்று வரும் சண்டையை நடத்துவதே இந்திய ராணுவம் தான் என்ற குற்றச்சாட்டை உலகெங்கும் இருக்கும் தமிழர்களும், பல்வேறு அமைப்புகளும் தெரிவித்து வரும் நிலையில், கருணாநிதி இன்று நடத்திய உண்ணாவிரத நாடகம் யாருடைய கவனத்தை ஈர்க்க? அல்லது யாரை ஏமாற்ற? உறுதியான நடவடிக்கை எடுக்கிறோம் என்று மத்திய அரசு தனக்கு வாக்குறுதி அளித்ததால், உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டதாக கருணாநிதி கூறி இருக்கிறார்.

என்ன உறுதியான நடவடிக்கை? எப்போது அந்த நடவடிக்கை? இத்தனை நாளாக ஏன் இல்லை அந்த நடவடிக்கை?.

எல்லாவற்றையும் செய்தது இந்தியாதான்...

இரண்டு நாட்களுக்கு முன்னர், இந்திய தொலைக்காட்சிக்குப் பேட்டி அளித்த இலங்கை பாதுகாப்புத் துறைச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சே, இந்திய ராணுவம் தங்களுக்கு இந்தப் போரில் என்னென்ன உதவிகளைச் செய்தது என்பதை பகிரங்கமாக தெரிவித்திருக்கிறார்.

இலங்கையின் வடபகுதியில் போர் நடைபெறும் இடங்களில் உள்ள விமானத் தளங்களை இந்திய ராணுவம் தான் செப்பனிட்டுத் தந்தது. தற்காப்பு ஆயுதங்கள் அனைத்தும் இந்திய ராணுவத்தால் தரப்பட்டன. போர் பகுதியில் உளவு வேலைகளை செய்யத் தேவையான நவீன கருவிகள் எல்லாம் இந்திய ராணுவம் இலங்கை ராணுவத்திற்கு கொடுத்தது.

பூகோளத் தகவல்களே தெரியாத இலங்கை...

வடக்கு இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதிகளைப் பற்றிய அடிப்படை பூகோள தகவல்கள், அதாவது Geographical விவரங்கள் இலங்கை ராணுவத்திடம் இவ்வளவு காலமும் இல்லாமலேயே இருந்தது. அதனால் தான் தமிழர் பகுதிகளில், அதாவது வவுனியா, முல்லைத்தீவு, வன்னிக் காடுகள் போன்ற பகுதிகளில் இலங்கை ராணுவத்தால் இவ்வளவு காலமும் முன்னேறிச் செல்ல முடியவில்லை.

இப்பொழுது, இந்தப் போரில் தான் இலங்கை ராணுவம் இந்திய ராணுவம் அளித்த புலனாய்வு உதவியோடு தமிழர் பகுதிகளைப் பற்றிய பூகோள விவரங்களைப் பெற்று முன்னேறிச் சென்றிருக்கிறது. இலங்கை ராணுவத்தின் எல்லா முன்னேற்றத்திற்கும் இந்திய ராணுவத்தின் உதவி தான் அடிப்படை என்பது உலகறிந்த உண்மை.

இந்தியாவில் இலங்கை ராணுவ வீரர்கள் படை பயிற்சி பெற்றார்கள் என்று இந்திய ராணுவம் இலங்கை ராணுவத்திற்கு இந்தப் போரை நடத்த அளித்த ஒவ்வொரு உதவியையும் பட்டியலிட்டு தெரிவித்தார் கோத்தபாய ராஜபக்சே.

இலங்கை ராணுவத்திற்கு இந்தியா ராணுவ உதவிகளையும் செய்யக்கூடாது. ஆயுதங்களையும் அளிக்கக் கூடாது என்று நான் கடந்த இரண்டு ஆண்டுகளில் எத்தனையோ முறை மீண்டும் மீண்டும் வலியுறுத்திக் கூறி வந்திருக்கிறேன். பல பத்திரிகைகளில், என்னுடைய வேண்டுகோள் வெளியானது.

கருணாநிதியால் ஈழத் தமிழர்களுக்கு என்ன கிடைத்தது...

பல பத்திரிகைகள் இலங்கை அரசுக்கு இந்திய அரசு செய்யும் ராணுவ உதவிகளை புலனாய்வு செய்து கண்டுபிடித்து செய்தி வெளியிட்டன. அப்போதெல்லாம், மத்திய அரசிடம் ராணுவ உதவிகளை இலங்கைக்கு செய்யாதீர்கள் என்று வலியுறுத்தாத கருணாநிதி, இன்றைக்கு லட்சக்கணக்கான தமிழர்கள் இலங்கையில் அரசு முகாம்களில் சொல்லொணாத் துயரங்களுக்கு உள்ளாகி இருக்கும் நேரத்தில், இந்த உண்ணாவிரதம் இருந்ததால் அவர்களுக்கு என்ன உதவி கிடைத்தது?.

இலங்கைப் போரில் மத்திய அரசின் ஈடுபாடு இன்று எல்லோருக்கும் தெரிந்துவிட்ட நிலையில், தேர்தல் களத்தில் காங்கிரசோடு கைகோர்த்து நின்றால், தனக்கு ஏற்படப்போகும் அவமானகரமான தோல்வியை நினைத்து, மக்களின் கவனத்தை திசை திருப்ப கருணாநிதி இன்றைக்கு ஒரு உண்ணாவிரத நாடகத்தை அரங்கேற்றினார் என்று நான் பகிரங்கமாக குற்றம் சாட்டுகிறேன்.

இலங்கைத் தமிழர்களை காக்க தனி ஈழம் தான் ஒரே தீர்வு. தனி ஈழம் அமைத்தே தருவேன் என்று நான் பேசியதற்கு, கடும் கண்டனம் தெரிவித்துள்ள கோத்தபாய இந்திய அரசு தங்களுக்குச் செய்த உதவிகளையெல்லாம் பட்டியலிட்ட போது, கருணாநிதி அதைக் கண்டுகொள்ளவில்லையே! ஏன்?.

போரை நடத்துவதே இவர்கள்தானே...

வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தி, இந்தியாவில் இருந்து தூதுவர்களை ராஜபக்சவுடன் பேச்சு நடத்த கடந்த வாரம் அனுப்பினார்களே, அவர்கள் ஏன் போர் நிறுத்தத்திற்கு வழி செய்யவில்லை? போரை நடத்துவதே இவர்கள் தானே!

எனவே தான் சொல்லுகிறேன், போரை நடத்தும் அரசாங்கம் கருணாநிதி பங்கேற்றிருக்கும் இந்திய மத்திய அரசாங்கம். இன்றைக்கு திடீரென்று கருணாநிதி உண்ணாவிரதம் இருந்தது தமிழக மக்களை ஏமாற்றத் தான்.

கோபத்திலிருந்து தப்பிக்க கருணாநிதி போட்ட திட்டம்...

தேர்தல் களத்தில் ஈழப் பிரச்சினை பெரும் பிரச்சினையாக உருவாகி இருப்பதால், மக்களின் கோபத்தில் இருந்து தப்பிக்க கருணாநிதி நடத்திய மோசடி செயல் திட்டம் தான் இந்த உண்ணாவிரதம்.

இன்று (நேற்று) அதிகாலை 4 மணியில் இருந்து தமிழர்கள் வாழும் பகுதிகள் மீது இலங்கை ராணுவம் கடுமையான தாக்குதலை நடத்தியதாக கொழும்பில் இருந்து வரும் செய்திகள் கூறுகின்றன. 6 மணி நேரம் நடைபெற்ற அந்தக் கொடூரத் தாக்குதலை இந்த உண்ணாவிரத நாடகம் உலகின் பார்வையில் இருந்து மறைத்து விட முடியாது.

மனிதாபிமான அடிப்படையில் செய்ய வேண்டிய உதவிகளை இந்த நேரத்தில் கூட இந்திய அரசு இலங்கைத் தமிழர்களுக்காக அறிவிக்கவில்லை. சார்க் அமைப்பின் சக உறுப்பு நாடான இலங்கையை தனது செல்வாக்கைக் கொண்டு நிர்பந்தித்திருக்க வேண்டிய இந்தியா, தமிழர் நலனில் பாரா முகமாக இவ்வளவு காலமும் இருந்துவிட்டது. அந்தக் களங்கத்தைப் போக்க கருணாநிதி நடத்தும் இந்த நாடகம் ஈழத் தமிழர்களுக்கு எந்தப் பயனையும் தராது.

மாறாக, கருணாநிதி மத்திய அரசை நிர்ப்பந்தித்து உடனடியாக இலங்கைத் தமிழர்களைக் காக்க போர் நிறுத்தம் செய்யட்டும். இந்தியாவில் இருந்து யாரையெல்லாம் அனுப்பி இலங்கையில் மக்களுக்கு உதவ முடியுமோ அவர்களையெல்லாம் அனுப்பட்டும். இலங்கைத் தமிழர்களுக்கு தனி ஈழம் அமைத்துத் தருவேன் என்று பிரகடனம் செய்ததற்காக என் மீது கோத்தபாய கடும் கோபம் கொண்டு பதில் அளித்திருக்கிறார்.

ஈழம் தமிழர்களின் உரிமை பூமி - அன்னை பூமி...

இலங்கையில் இல்லாமல் வேறு எங்காவது ஜெயலலிதா ஈழம் அமைக்கட்டும் என்று கூறி இருக்கிறார். ஈழத் தமிழர்கள் அவர்கள் மண்ணிலேயே ஈழம் காண்பார்கள். அவர்கள் அன்னை பூமி அது. அவர்களது உரிமை பூமி அது.

இந்திய அரசின் அனைத்து செல்வாக்கையும் பயன்படுத்தி ஈழம் அமைப்பேன். அங்கு இப்போது அல்லற்பட்டுக் கொண்டிருக்கும் தமிழர்களுக்காக எல்லா உதவிகளையும் செய்வது நாங்கள் அமைக்க இருக்கும் மத்திய அரசின் தலையாய கடமையாக இருக்கும் என்று உறுதி கூறுகிறேன்.

தனி ஈழம் அமைப்பேன் என்று நான் சொன்னது குறித்து கருத்து தெரிவித்த மத்திய அமைச்சரும், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளருமான கபில் சிபல், இது தேச விரோத கருத்து, தேசவிரோத செயல், பொறுப்பற்ற செயல் என்று கூறி இருக்கிறார்.

நான் சொன்னது எப்படி தேச விரோத கருத்து..

கபில்சிபிலுக்கு நான் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். தனி ஈழம் அமைப்போம், தனி ஈழம் அமைக்க நடவடிக்கை எடுப்பேன் என்று நான் சொன்னது எந்த இந்திய சட்டத்திற்கு எதிரானது? இந்தியாவை துண்டாடி தனி ஈழம் அமைப்போம் என்று நான் சொல்லவில்லையே!

இலங்கையில் தனி ஈழம் அமைத்துக் கொடுப்போம் என்று தானே நான் சொன்னேன். அது எப்படி தேச விரோதச் செயலாகும். எந்த சட்டத்தில் அப்படி சொல்லக்கூடாது என்று இருக்கிறது.

கபில்சிபிலுக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் நான் சொல்லிக் கொள்வேன். தேசபக்தியில் எனக்கு நீங்கள் யாரும் பாடம் சொல்லித் தர தேவையில்லை. நான் அன்றைக்கும், இன்றைக்கும், என்றைக்கும் தேசியவாதி தான். எனது தேசப்பற்றில் குறை கண்டுபிடிக்க முடியாது. களங்கம் கற்பிக்க முடியாது.

கருணாநிதியின் உண்ணாவிரத நாடகம் முடிந்த பிறகு, இலங்கை அரசு ஓர் அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது. இலங்கை தமிழர்கள் வாழும் பகுதிகளில் போர்நிறுத்தம் போர் விமானங்களை இனிமேல் பயன்படுத்த மாட்டார்களாம். பெரிய பீரங்கிகளை பயன்படுத்த மாட்டார்களாம். பெரிய துப்பாக்கிகளை பயன்படுத்த மாட்டார்களாம்.

இலங்கைத் தமிழர்கள் செத்துமடிவார்கள் என்பதற்காக அதை எல்லாம் நிறுத்தி வைத்து விட்டார்களாம். ஆனால், அங்கே விடுதலைப் புலிகள் இலங்கைத் தமிழர்களை பிடித்து வைத்து இருக்கிறார்களாம். ஆகவே, விடுதலைப் புலிகளிடமிருந்து இலங்கைத் தமிழர்களை காப்பாற்றுவதற்காக சிறிய ரக துப்பாக்கிகளை மட்டும் பயன்படுத்த போகிறார்களாம். இது என்ன நாடகம்? இது என்ன கேலிக்கூத்து? இதை எப்படி போர் நிறுத்தம் என்று சொல்ல முடியும்?

கருணாநிதியை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்..

இந்த அறிவிப்பை பார்த்து கருணாநிதி அவசர அவசரமாக உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார். இந்தக் கபட நாடகத்தை மக்கள் புரிந்து கொள்ளவேண்டும்.

தன்னலம் மிகுந்த குடும்ப ஆட்சி, தமிழகத்தில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதன் காரணமாக, ஏற்பட்டுள்ள தீமைகளையும், அவலங்களையும், நீங்கள் எல்லாம் வேறு வழியின்றி, வேதனையோடு தாங்கிக் கொண்டு இருக்கிறீர்கள் என்றார் ஜெயலலிதா.

நன்றி > தட்ஸ்தமிழ்...!!!!

Monday, April 27, 2009

கடைசி பக்கம் 27 ஏப்ரல் 2009


கடைசி பக்கம் 27 ஏப்ரல் 2009

முதல்வர் கலைஞர் உண்ணாவிரதம், சிதம்பரம் டெலிபோன் பேச்சு, இலங்கையின் திடீர் போர் நிறுத்த அறிவிப்பு, அப்புறம் மறுப்பு என்று பதிவுலகமே அல்லோலகல்லோல படுது. தி.மு.க ஆதரவு பதிவர்கள் ஒரு பக்கம், அ.தி.மு.க ஆதரவு பதிவர்கள் ஒரு பக்கம், ஈழத்தமிழர்கள் ஒரு பக்கம், நடுநிலைத்தமிழர்கள் ஒரு பக்கம், எவன் எப்படி போனா என்று நகைச்சுவை பதிவு, சமையல் குறிப்பு பதிவு, சுயேச்சை வேட்பாளர் பேட்டி என்று இன்னும் சிலர் இன்னொரு பக்கம்...

எதுவும் விடுபட்டுப்போகாமல் இருக்க செய்திகளை தொகுத்து தர இந்த கடைசி பக்கம்...!!!

**********************

முதலில் போர் நிறுத்தம் என்றார்கள், அப்புறம் கனரக ஆயுதங்களை பயன்படுத்த தடை விதித்துள்ளோம் என்றார்கள், இப்போது அப்படி எல்லாம் எதுவுமே இல்லை என்கிறார்கள். இதுவரையில் / நான் கேள்விப்பட்ட வரையில் காலையில் ஆரம்பித்து லஞ்சுக்கு முன் உண்ணாவிரதம் முடித்தவர்கள் எவருமில்லை. முதல்வர் அந்தவகையில் பெரிய சாதனையாளர்தான். ஏய் நானும் ரவுடிதான் என்று ஜீப்பில் ஏறிவிட்டார்...என்னுடைய வயதும் அனுபவமும் இதற்கு மேல கிண்டல் செய்ய அனுமதிக்கவில்லை.

நாடகம் விடும் வேளைதான் உச்ச காட்சி நடக்குதம்மா !!!!!!!!


**********************

தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைதுசெய்யப்பட்ட திரு.கொளத்தூர் மணி விடுதலையாகியுள்ளார். கலைஞர் அரசுக்கு தர்க்க ரீதியாக கிடைத்த இன்னொரு தோல்வி இது. மணியண்ணனுக்கு வாழ்த்துக்கள்...தொடருங்கள் உங்கள் பணியை..

**********************

புலித்தலைவர் பிரபாகரன் மகன் சார்லஸ் அந்தோனி கடல் மார்க்கமாக தப்பியதாக செய்திகள் வெளியாகின்றன. இது உண்மையா அல்லது வட இந்திய / இலங்கை மீடியாக்களின் வழக்கமான பரப்புரையா தெரியவில்லை

**********************

பிரமிட் சாய்மீராவை பங்கு வர்த்தகத்தில் இருந்து விலக்க செபி நடவடிக்கை எடுத்துள்ளது. பங்குகளை போலியாக விலையேற்ற நடவடிக்கை எடுத்தமை போன்ற மோசடி குற்றச்சாட்டுகள் அதன் மீது..ஒரே நாளில் பத்து படங்களுக்கு பூஜை போட்ட / சினிமாவை கார்ப்பரேட் தளத்துக்கு எடுத்துச்சென்ற பிரமிட் சாய்மீராவை பற்றி என்னை விட சில பதிவர்களுக்கு / அங்கேயே பணிபுரியும் பதிவர்களுக்கு தெரியும். அவர்கள் எழுதினார் தேவலை.

**********************

அட்சய திருதியையாம். நகை வாங்குங்கடா என்கிறார்கள். பத்து சவரன் துபாயில் வாங்கினால், அதே காசுக்கு இந்தியாவில் அதைவிட மட்டமான கலப்பட தங்கத்தை ஒன்பது சரவன் தான் வாங்க முடியுமாம்..எந்த அளவுக்கு உண்மை என்று தெரியல.

**********************

லக்கியின் பதிவு டார்கெட் செய்வது குழலி மற்றும் தமிழ் சசி என்பது போல ஒரு தோற்றப்பாடு உள்ளது. லக்கி தான் விளக்கவேண்டும்..

**********************

இலங்கை சம்பந்தமாக அமெரிக்காவின் கொள்கைகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளது போல தெரிகிறது. புலம்பெயர் தமிழர்களின் தொடர் போராட்டமும் ஒரு காரணம். இப்படித்தான் யூதர்கள் இஸ்ரேலை பெற்றார்கள். தொடர்ந்து போராடவேண்டும். இதனை நீர்க்கச்செய்ய எடுக்கப்படும் முயற்சிகளில் பலியாகிவிடவேண்டாம்.

**********************

திமுகவை, கலைஞரை ஆதரிப்பவர்கள், மூன்று ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் கலைஞர், இப்போது முகாம்களில் இருப்பவர்களுக்கு என்ன செய்தார் என்று சொல்லுங்களேன் பார்ப்போம்...!!

**********************

**********************

**********************

ஈழ அகதிகளும் திபெத் அகதிகளும்

முதலில் அகதி என்ற சொல்லே அருவருப்பை தருகிறது எனக்கு...!!!! இன்றைக்கு உண்ணாவிரதம் இருந்து போரை நிறுத்திய ????? கலைஞர் ஆட்சி கடந்த மூன்று வருடங்களாக தமிழகத்தில் நடந்துவரும் சூழலில், இதை பற்றி சிந்தையே எவருக்கும் எழாதது ஏனோ ? தமிழர் தலைவர் வீரமணி எங்கே ? பாட்டாளி தலைவர் இராமதாசு எங்கே ? ஆட்சி அதிகாரங்களில் சுகமாக அமர்ந்துகொண்டு மானாட மயிலாட ரசித்துக்கொண்டிருகும் இவர்களின் இந்த பொறுப்பற்ற தன்மை இவர்கள் மேல் கடும் கோபத்தை உருவாக்குகிறது...!!!!முகம் இருந்தும் முகவரி அற்றவர்கள்

ஆய்வுக்குழு, கோவை அரசு சட்டக் கல்லூரி மாணவர்கள்

மூலம் > http://www.keetru.com/vizhippunarvu/sep06/students

சில வாரங்களாக பரவலாக பேசப்பட்டு வரும் ஈழ அகதிகள் பற்றி, அவர்களுக்கு கொடுக்கப்படும் அரசின் சலுகைகள் பற்றி ஆராய்வதற்காக தமிழகத்திலுள்ள அகதிகள் முகாம்களைப் பார்வையிட்டோம். மேலும், கர்நாடகாவில் உள்ள திபெத்திய அகதிகள் முகாமையும் பார்வையிட்டோம். (முறையே 27-07-06 அன்று மண்டபம் முகாம், 3-8-06 அன்று கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் மாவட்டத்திலுள்ள திபெத்திய அகதிகள் முகாமையும், 4.8.06 அன்று கோவை மற்றும் ஈரோடு மாவட்டங்களில் உள்ள ஈழ அகதிகள் முகாமையும் பார்வையிட்டோம்)

அதன்படி ஈழத்தமிழ் அகதிகளுக்கும், திபெத்திய அகதிகளுக்கும் இந்திய நடுவன் அரசு செய்யும் சலுகைகளைப் பற்றியும், கொடுக்கும் சிறப்புகளைப் பற்றியும் எங்களுடைய குமுறல்களை மானமுள்ள தமிழர்கள் மத்தியில் ஒரு ஒப்பாய்வு செய்து வெளியிடுகிறோம். (மண்டபம் முகாமில் உள்ள ஊழியர்களின் கடுமையான நடவடிக்கை காரணமாக புகைப்படம் கூட எடுக்க முடியவில்லை. காரணம் புகைப்படத்தில் உள்ள வீடுகளையோ, முகங்களையோ கண்டுபிடித்து அவர்களை மனரீதியாகவோ மற்றும் உடல் ரீதியாகவோ துன்புறுத்துகின்றனர் காவல் துறையினர். எனவே நாங்கள் புகைப்படம் எடுக்க வில்லை). எனவே, நாங்கள் மற்ற முகாம்களில் உள்ள அவலங்களையும், திபெத்திய முகாமில் உள்ள நிலையினையும், புகைப்படங்களையும் ஆதாரமாக வைக்கின்றோம்.

திபெத்திய அகதிகள்

அகதிகள் எண்ணிக்கை

 ஒரு முகாம் (22 பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது.

 5,232 அகதிகள் உள்ளனர்.

வாழ்விடம்

 தாங்கள் விரும்பியது போல் வீடுகளைக் கட்டிக் கொள்ளுவதற்கு அனுமதி (அனைத்தும் மாடி வீடுகள் மற்றும் அவர்களின் கலாச்சாரப்படி கட்டப்பட்ட ஓட்டு வீடுகள்).

சுகாதார வசதி

 தனியாக ஒவ்வொரு பகுதிக்கும் திபெத்தியர்களுக்கு தரமான, நவீன வசதிகளுடன் தனி மருத்துவமனை (5 மருத்துவர்கள், 15 செவியர்களுடன் இயக்கப்படுகிறது)

 அவர்கள் தாங்களே வடிவமைத்துக் கொண்ட கழிப்பறை, குளியலறை

கலாச்சாரம்

 ஆனால் திபெத்திய அகதிகளுக்கோ தங்கள் புத்தமத கலாச்சாரத்தின்படி தங்கள் வாழ்க்கை முறையை அமைத்துக் கொள்ளவும், உடைகள் அணியவும், வீடுகளைக் கட்டிக் கொள்ளவும், தங்கள் மொழியை பாதுகாத்துக் கொள்ளவும், அவர்களுக்கு முழு சுதந்திரம் இருக்கின்றது. (நாங்கள் அங்கு சென்று பார்த்த போது அது குட்டி திபெத் போல் தெரிந்தது)

மத சுதந்திரம்

 தனியாக நவீனமுறையில் வடிவமைக்கப்பட்ட புத்த கோயில் மற்றும் தலாய்லாமா கோயில்கள் (சுமார் பரப்பளவு 1 ஏக்கர் நிலத்தில்)

 தனியாக சுமார் ஐம்பது மாணவர் படிக்கக்கூடிய மதப்பள்ளி ஒன்றும்,

 அதே போல் மதக் கல்லூரி ஒன்றும்,

 தனித்தனியான மாணவர் விடுதிகள் உள்பட

கல்வி

 சகல வசதிகளுடன் CBSC பாடத் திட்டத்தில் - தில்லி அரசாங்கத்தின் அனுமதி பெற்ற. திபெத்திய அகதிக் குழந்தைகளுக்கு மட்டுமான பள்ளி கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது. இது பத்தாம் வகுப்பு வரை மட்டும்.

 பின் 11, 12 படிக்க அரசே உதவி செய்து சிம்லா அனுப்பி வைக்கிறது. (அனைத்து செலவுகளையும் ஏற்று)

 மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகள் படிக்க முறையே 3, 5 இடங்கள் ஒதுக்கப்படுகிறது. (அரசு செலவுடன்)

 திபெத்தியர்கள் தங்கள் உயர்கல்வியை தொடர கர்நாடகத்தில் எங்கு வேண்டுமானாலும் படிக்கலாம் அகதிகள் என்ற முத்திரையுடன்.

விவசாய நிலம்

 மொத்தமாக இருக்கக்கூடிய மக்கள் தொகையில் 5232 பேர்களுக்கு பண்படுத்தப்பட்ட, நீர் வசதியுடன் விவசாயம் செய்யத்தக்க 3,500 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது.

தகவல் தொடர்பு

 தனியாக இணையவசதி இலவசமாக வழங்கப் படுகிறது.

 22 பகுதிகளுக்கும் தனித்தனியாக செல்போன் டவர்கள் உள்ள தொலைபேசி வசதிகள்.

வங்கி

 மொத்தம் நான்கு வகையான வங்கிகள்

 சிண்டிகேட் வங்கி

 ஸ்டேட் பேங்க் ஆப் மைசூர்

 கூட்டுறவு வங்கி

 வெளிநாட்டு பணம் பெற்றுக் கொள்ள Western Union Money Transfer

தொழில் மற்றும் வேலைவாய்ப்புகள்

 சுயமாக பால்பண்ணை வைக்க, பொருட்கள் உற்பத்தி பண்ணை, கடை வைத்துக் கொள்ள அரசே வட்டி மற்றும் நிபந்தனை இல்லாமல் கடன் வழங்குகிறது.

 அவர்கள் உற்பத்தி செய்த பொருட்களை வெளியில் சென்று விற்கவும், கடையில் சென்று விற்கவும் அனுமதிக்கப்படுகிறது.

 இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தும் முகமாக (பணிமனை) ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது.

பண உதவி மற்றும் பொருளுதவி

 குடும்பத்திற்கு மாதம் 5000 ரூபாய்க்கும் மேல் வழங்கப்படுகிறது.

ஆய்வு

 திபெத்திய அகதிகளுக்கு தனி அலுவலகம் அமைக்கப்பட்டு அதற்காக அமைக்கப்பட்ட அதிகாரி மாதமொருமுறை மைய அரசுக்கு அறிக்கை அனுப்புகிறார். மற்றபடி முழு சுதந்திரமாக உள்ளனர்.

திபெத்திய அகதிகளுக்கு உள்ள மற்ற சிறப்பியல்புகள்

 இளைஞர்களுக்கு தனியாக அமைக்கப்பட்ட Youth Congress

 மக்கள் ஒன்றாக கூடுவதற்கு Multipurpose Hall.

 அவர்கள் நாட்டில் இருந்து வருபவர்களை தங்கவைக்க அரசு ஓய்வு விடுதி

 அவர்கள் விரும்பும் இடத்தில் மதவழிபாட்டுத் தலங்கள்.

 வெளியில் சென்று தொழில் தொடங்க வசதி.

 கர்நாடக மக்களுடன் இயல்பாக கலந்து கொள்ள அனுமதி. (ஆனால் ஈழ அகதிகள் அனுமதிக்கப்படுவதில்லை) ஆகியவை ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளது.

திபெத் அகதிகள் முகாம் படங்கள்

*********

ஈழத்தமிழ் அகதிகள்

அகதிகள் எண்ணிக்கை

 மொத்தம் 103 முகாம்கள் உள்ளன.

 ஏழத்தாழ 75,000க்கும் மேல உள்ளனர்.

 (தினந்தோறும் தங்கள் உடைமைகளை இழந்து உயிரை மட்டும் கொண்டு நூற்றுக்கணக்கான பேர் வந்து கொண்டு இருக்கின்றனர்).

வாழ்விடம்

 அரசாங்கங்கள் கட்டிக் கொடுக்கும் குடிசைகள் மற்றும் ஈழ அகதிகள் தாங்களாக கட்டிக் கொள்ளும் குடிசைகள்.

 90% வீடுகளில் மின்சாரமே இல்லை.

 பெரும்பாலும் மேற்கூரை சரியாக இல்லாத வீடுகள் அதிகமாக உள்ளன.

சுகாதார வசதி

 அருகில் உள்ள பொது மருத்துவமனைகளில் உடல் நலம் பாதிக்கப்படும் பொழுது, முகாம் பாதுகாவலர் அனுமதி பெற்று பார்த்துக் கொள்ளலாம்.

 பாதி முகாம்களில் கழிப்பிட வசதி இல்லை. ஒரு சில முகாம்களில் இடிந்து போய் பராமரிப்பு அற்று நாய்களும், பன்றிகளும் (மனிதன் போக தகுதியற்ற) மலம் கழிக்கக்கூடிய கழிப்பறை, எதற்கும் மேற்கூரை கிடையாது. திறந்த வெளி கழிப்பிடம்.

 பெண்கள் குளிப்பதற்கு நான்கு பக்கமும் ஓலைகளால் வேயப்பட்ட குளியலறை.

கலாச்சாரம்

 அனைத்து உரிமைகளும் ஈழத்தமிழர்களுக்கு மறுக்கப்படுகிறது. பொதுவாக ஈழத்தில் உள்ள பெண்கள் குட்டைப் பாவாடை அணிவது வழக்கம். அதனை இங்குள்ள காவல் துறையினர் மற்றும் ஊழியர்கள் நீங்கள் ஆபாசத்தை தூண்டுகின்றீர்கள் என்ற பாலியல் ரீதியாக தொந்தரவு செய்கின்றனர்.

மத சுதந்திரம்

 மனித உரிமையே இல்லாத இடத்தில் மத சுதந்திரம் எதிர்பார்த்தது எங்கள் அறியாமையே.

கல்வி

 அந்தந்த பகுதிகளில் உள்ள அரசுப் பள்ளிகளில் ஈழக் குழந்தைகள் 1 முதல் +2 வகுப்பு வரை சேர்த்துக் கொள்ளப்படுகிறார்கள். (ஆனால் மண்டபம் பள்ளியில் நேரடியாக +1 மற்றும் +2 வகுப்புகளில் மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுவது இல்லை. அதற்கு பள்ளி நிர்வாகம் சொல்லும் காரணம் என்னவெனில் +2 வகுப்பு தேர்வு முடிவுகள் பாதிக்கப்படும் என அச்சம் கொள்வதாக சொல்கிறது. மண்டபம் பள்ளியின் தற்போதைய நிலை என்னவெனில் மொத்தம் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 129 மேல்நிலைப் பள்ளிகளில் தர நிலையில் 128வது இடத்தில் உள்ளது.

 ஒருசில ஈழ முகாம்களில் 1 முதல் 5 வரையான வகுப்புகள் உள்ள பள்ளிகள் உள்ளன. அங்கு ஆசிரியர்களாக அகதிகளால் நியமிக்கப்பட்ட அகதிகள் முகாம்களில் உள்ள படித்த அதிகபட்சமாக இரண்டு ஆசிரியர்கள் உள்ளனர்.

 பள்ளிக் கட்டிடம் பெரும்பாலும் பாழடைந்து ஓட்டை உடைசலாகத் தான் உள்ளது.

 உயர்கல்வியில் 2003 வரை இருந்த இட ஒதுக்கீடு நீக்கப்பட்டதால். உயர்கல்வி முழுமையாக மறுக்கப்பட்டுள்ளது (வசதி உள்ளவர்கள் தனியார் கல்லூரிகளில் படிக்க அனுமதியுண்டாம். நம் நாட்டின் தனியார் கல்லூரிகளின் கல்விக் கட்டணம் எவ்வளவு என்று நமக்கே தெரியும்)

விவசாய நிலம்

 குடியிருக்க இடம் கொடுக்காத நாட்டில் விவசாய நிலம் கேட்பது நம் முட்டாள்தனம் தான்.

தகவல் தொடர்பு

 நாட்டுப் பிரச்சனைகள் பேசினால் தீவிரவாதி என்று முத்திரை குத்தி சிறப்பு முகாம்களுக்கு அனுப்பப்படும் சூழ்நிலையில் மற்ற முகாம்களில் இருக்கும் உறவினர்களுடன் தொடர்பு கொள்ள STD Booth-களையும், 1 ரூபாய் நாணயப் பெட்டியையும் பயன்படுத்துகின்றனர். அனால் இதற்கு முகாம் காப்பாளரின் அனுமதி வேண்டும்.

வங்கி

 சாப்பாட்டிற்கு வழியில்லாதவர்களுக்கு வங்கியைப் பற்றி பேச அருகதை இல்லை.

தொழில் மற்றும் வேலை வாய்ப்புகள்

 மண்டபம் முகாமில் மூன்று நாள் மட்டும் வெளியே சென்று கூலி வேலை பார்க்க அனுமதி.

 மற்ற முகாம்களில் அருகிலுள்ள ஊர்களில் சென்று வண்ணமடித்தல், கல்லுடைத்தல், விவசாயத்தில் கூலி வேலை செய்ய அனுமதிக்கப்படுகின்றனர்.

 கடுமையான நிபந்தனையுடன்.

பண உதவி மற்றும் பொருளுதவி

 குடும்பத் தலைவருக்கு ரூ. 72, பெண்ணுக்கு ரூ.50 மற்ற உறுப்பினருக்கு ரூ.45 சிறு குழந்தைகளுக்கு ரூ.12.50. 15 நாளுக்கு ஒருமுறை வழக்கப்படுகின்றது.

ஆய்வு

  மண்டபம் முகாம்களில் அறிவிக்கப்படாத தினம்தோறும் ஆய்வும் மற்ற முகாம்களில் மூன்று நாட்களுக்கு ஒருமுறை ஆய்வு நடைபெறுகிறது.

 ஆய்வின் போது தங்கள் சொந்த மண்ணைப் பற்றி (ஈழம்) பேசினால் தீவிரவாதி என்ற முத்திரை குத்தப்பட்டு செங்கல்பட்டு சிறப்பு முகாமுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.

 தன் நாட்டை விட்டு இங்கு வரும் அகதிகளிடம் மூன்று நாட்கள் மண்டபம் முகாமில் உள்ள தனி சிறையில் அடைக்கப்பட்டு அவர்கள் ஆயுதப் பயிற்சி பெற்றுக் கொள்கிறார்களா என்ற சந்தேகத்துடன் அவ்வாறு சோதனை செய்யும் போது சற்று வாட்டசாட்டமான இளைஞர்கள் கோபப்பட்டால் அவர்களை உடனேயே செங்கல்பட்டு சிறப்பு முகாமிற்கு அனுப்பி வைக்கின்றனர்.

ஈழ அகதிகள் முகாம் படங்கள்

**********

கோரிக்கைகள்

 முதல் மைய அரசு திபெத்திய அகதிகளை நாட்டுப் பிரச்சனையாகவும், ஈழத் தமிழர்களையும் இனப்பிரச்சனையாகவும் பார்த்து வேறுபடுத்துவதை நிறுத்த வேண்டும்.

 இந்திய அரசியலமைப்புச் சட்ட உறுப்பு - 14, உறுப்பு - 21 வலியுறுத்தும் சாதாரண வாழ்வுரிமையானது இந்த தமிழ் அகதிகளுக்கு கொடுக்கப்பட வேண்டும்.

 ஈழத் தமிழ் அகதிகளுக்கு திபெத்தியர்கள் போல் வாழ்வினைக் கொடுக்க முடியவில்லையென்றாலும், அடிப்படை வாழ்வாதாரமாவது வழங்கப்பட வேண்டும்.

 ஈழத் தமிழ் அகதிகளுக்குத் தேவையான உணவு, உடை இருப்பிடம், சுகாதாரம் ஆகியவற்றிற்கு மைய அரசு உத்தரவாதம் அளிக்க வேண்டும்.

 ஈழத் தமிழ் அகதிகளுக்கு சுய தொழில் தொடங்க வாய்ப்பு ஏற்படுத்த வேண்டும்.

 2003 ஆம் அண்டு உயர்நீதி மன்றங்கள் அளித்த ஈழத் தமிழர்களுக்கான உயர்கல்வி இடஒதுக்கீடு பெறுவதற்கான தடையினை நீக்கி, மீண்டும் அவர்கள் உயர்கல்வி பெறும் வகையில் சட்டம் கொண்டுவர வேண்டும்.

 அவர்கள் கலாச்சாரத்திலும், உடையிலும் இங்குள்ள காவல்துறையினர் தலையிடுவதை நிறுத்த வேண்டும்.

செங்கல்பட்டு சிறப்பு முகாம் பற்றியும் அங்கு என்ன நடக்கிறது என்று தகவல் வெளியிட வேண்டும்.

 முகாமுக்கு வரும் அகதிகளிடம் பணம் பெற்றுக் கொண்டு வீடுகள் ஒதுக்குவதையும், கெட்ட வார்த்தையால் திட்டுவதையும், பெண்களை பாலியல் ரீதியாக சொந்தரவு செய்வதையும் முகாமில் உள்ள அதிகாரிகள் வாடிக்கையாக கொண்டுள்ளனர். அத்தகைய அதிகாரிகளை கண்டுபிடித்து உடனடியாக பணிநீக்கம் செய்யப்பட வேண்டும்.

 ஈழத்தில் இருந்து தமிழகத்திற்கு வரும் தமிழர்கள் படகு கவிழ்ந்து பலியாவதையும், இலங்கை இராணுவத்தால் பிடிபட்டால் தீவிரவாதி என்று முத்திரை குத்தப்படுவதையும், வரும் படகுக்கு ரூ.10,000, ரூ.20,000 என்று வசூல் செய்வதையும் தடுத்து நிறுத்தும் வகையில் இந்திய நடுவன் அரசு இலங்கையில் உள்ள அகதிகளை பாதுகாப்பாக தமிழகத்திற்கு கூட்டி வருதல் வேண்டும்.

 காவல்துறை ஆய்வின் போது அதிகாரிகள் தமிழ் அகதிகள் கொண்டு வரும் பொருட்களை அபகரிப்பதை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.

 ஈழ அகதிகள் ஒன்றாக சேர்ந்து ஒரே இடத்தில் வாழ்வதற்கு உரிமை அளிக்கப்பட வேண்டும்.

இந்திய அரசு ஒரு கண்ணில் வெண்ணெயும், ஒரு கண்ணில் சுண்ணாம்பையும் வைத்து பார்ப்பதை விட்டுவிட்டு திபெத்திய அகதிகளைப் போல் தமிழர்களை பார்க்கவில்லையென்றாலும், குறைந்தபட்சம் அகதிகளாக வரும் தமிழர்களை மனிதர்களாகவாவது பாவித்து, வாழ்வுரிமையை பாதிக்காத அளவு வாழ்வதற்கான உத்தரவாததினை அளிக்க வேண்டும்.

இப்படிக்கு, ஆய்வுக்குழு, கோவை அரசு சட்டக்கல்லூரி மாணவர்கள்...

இந்திய இறையாண்மை, இறுதிப்போர், So Called அகதிகள் !!!

இத்தாலி காவடிதூக்கி ஒருவரின் அறிக்கை வந்துள்ளது...காமெடியானது...செல்வி ஜெயலலிதாவின் ஈழ ஆதரவு முழக்கம் இந்திய இறையாண்மைக்கு எதிரானதாம்...

இவ்வளவு காலம் இலங்கை என்பது ஒரு வெளிநாடு, அதன் பிரச்சினையில் தலையிடமாட்டோம் என்று வாங்கிய காசுக்கு மேலேயே கூவியவர்கள் இவர்கள்...

ஈழப்பிரச்சினையை பற்றி பேசினால் அது எப்படி இறையாண்மையை பாதிக்கும் என்று புரியவில்லை எனக்கு...இலங்கை இந்தியாவின் மாநிலமா அல்லது ங்கோத்தாபய சகோதரர்கள் அதன் முதல்வர்களும் அமைச்சர்களுமா ??

*****************

இறுதிப்போருக்கு சிங்கள வெறியர்கள் தயாராவதாக தெரிகிறது...ஆரியப்பேய்களும், மலையாள தேங்காய் எண்ணை வெண்ணைகளும் ஆவலோடு எதிர்பார்ப்பது அது..ஐநாவில் விவாதம் தொடங்கும்போது தமிழர் பிணங்களில் புழு பூத்திருக்கவேண்டும், அதுதான் இத்தாலி ஏஜெண்ட் கட்டளை போலும்...

ஆயிரக்கணக்கில் கொன்று குவித்திட இன்று இரவே நேரம் பார்த்துவிட்டார்கள் போல தெரிகிறது...உணவு இறங்கவில்லை...

போராட்டத்தை முன்னெடுத்திருப்பவர்கள் உயிர்ப்போடு இருப்பது மிக முக்கியம்...இல்லையென்றார் தமிழ் ஈழ கோரிக்கையும், தமிழர்களின் சுய நிர்ணய உரிமையும் அடியோடு நசுக்கப்படும்...

அதனால் எப்படியாவது தம்பி தப்பி வெளியேறவேண்டும் என்பது தான் தனது அவா என்று சொல்கிறார் என்னுடன் பணியாற்றும் நன்பர்...

*******************

ஏற்கனவே ஆண்டாண்டு காலமாக நடந்துவரும் இந்த போரினால் பாதிக்கப்பட்டு, தற்போது தமிழகத்தின் பல்வேறு இடங்களில் தங்கியுள்ள 'அகதி' முகாம்கள் பற்றி மீள் பார்வை பார்க்கவேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்..

இதுவே சரியான தருணம்...

ஆறு மணிக்கு மேல் வெளியே செல்லக்கூடாது, வெளியில் இருந்து யாரும் வந்து சந்திக்க கூடாது என்பது போன்ற பல கெடுபிடிகள், லஞ்சம், பாலியல் தொந்தரவுகள், சரியான கழிப்பிட, இருப்பிட வசதியின்மை, மிக குறைந்த அரசு உதவி பணம் என்று பல கொடுமைகளை அவர்கள் சந்திக்கிறார்கள்..

யாராவது இதனை விரிவாக பதிவு செய்து, மெயின் லைன் மீடியாவுக்கு கொண்டுசென்றால் பரவாயில்லை..

*******************

Sunday, April 26, 2009

தனி ஈழமே தீர்வு : புரட்சித்தலைவி வீர முழக்கம்...!!!இன்றைக்கு புரட்சித்தலைவி ஜெயலலிதா அவர்கள், ஈழத்தமிழருக்கு தனி ஈழமே ஒரே தீர்வு என்றும் அ.இ.அ.தி.மு.க தனி ஈழம் அமைய பாடுபடும் என்றும் முழங்கியிருக்கிறார்...

*********

கலைஞர் கருணாநிதி அவர்களே இதை எதிர்பார்த்திருக்க மாட்டார். எத்தை தின்றால் பித்தம் தெளியும் என்ற நிலையில் 'கடைசி நேர' பந்த் ஒன்றை நடாத்திவிட்டு, அது வாக்குகளாக விழுமா ஆப்புகளாக விழுமா என்று கணக்கு பார்த்துக்கொண்டிருக்கையில் புரட்சித்தலைவியின் இந்த அறிவி(ஆ)ப்பு வந்து விழுந்துள்ளது...

*********

காங்கிரஸ் கூட்டணியை வீழ்த்தவேண்டுமாயின் அதற்கு அ.தி.மு.க கூட்டணிக்கு வாக்களிப்பதே ஒரே வழி என்ற நிலையில் (விஜயகாந்தின் மீது முழு நம்பிக்கை வராத சூழ்நிலையில்), அம்மா ஆட்சியை திரும்ப கொண்டுவந்தால் மீண்டும் பொடா வாடா தடா என்று எதையாவது கையில் எடுப்பாரோ என்று கொஞ்சம் தயங்கிய உணர்வாளர்கள், இனி தயங்கமாட்டார்கள் என்றே நினைக்கிறேன்..

*********

தனிப்பட்ட முறையில் திருமா, ஆர்.எஸ்.பாரதி, மாறன் போன்றவர்கள் வெற்றிபெறவேண்டும் என்று நினைத்தாலும், என்னைப்பொறுத்தவரை, 40 தொகுதிகளையும் அ.இ.அ.தி.மு.க கூட்டணிக்கே சிந்தாமல் சிதறாமல் தருவேதே சாலச்சிறந்தது...அப்போது தான், இத்தாலி அடிமைகளை ஓட ஓட விரட்டமுடியும்...

*********

இளங்கோவன், மனிசங்கர அய்யர், சிதம்பரம், தங்கபாலு போன்றவர்கள் வரலாறு காணாதவகையில் தோற்கவேண்டும். இவர்களின் தோல்வி, காங்கிரசு துரோகிகளுக்கு ஒரு பாடமாக அமையவேண்டும்...

*********

சமீபத்தில் வன்னியில் இருந்து வெளியான அறிக்கை ஒன்றில் புலிகள் அண்ணா திராவிட முன்னேற்றக்கழக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. அண்ணன் வைகோவையும் கூட்டணி தொகுதி பங்கீடு பிரச்சினைகளை பொறுத்துப்போகுமாறு களத்திலிருந்தே தகவல் வந்ததாம்..

*********

அம்மாவின் இந்த மனமாற்றம் தேர்தல் ஸ்டண்ட் என்று எகிறி குதிக்க ஒரு கூட்டம் காத்துக்கொண்டிருக்கும்...ஆனால் தமிழகத்தின் மிகப்பெரிய கட்சியின் இந்த முடிவு, கண்டிப்பாக ஒரு திருப்புமுனையாகும்...மீண்டும் அம்மா ஆட்சி மலரும்போது, புலிகளுக்கு சென்னையில் ஆபீஸ் போடக்கூட அனுமதி கிடைக்கக்கூடும்...யார் கண்டா ?

*********

வலையுலகில் பதிவர் பொடி டப்பா, உடன் திருப்பு, இங்கிலீஸ் பூவியா போன்றவர்கள் திமுக கூட்டணிக்கு வாக்கப்பட்டவர்கள். அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று தெரியவில்லை...ஆனால் பதிவர் லக்கிலுக் அவர்கள் ராயப்பேட்டை அலுவலகம் சென்று அ.இ.அ.தி.மு.க உறுப்பினர் அட்டை பெறுவது என்றால் அதற்கு நான் உதவ தயார்..

*********

வாக்களிப்பீர் அ.இ.அ.தி.மு.க கூட்டணிக்கே...!!!!

!!!!!!!!!!

!!!!!!!!!!

Saturday, April 25, 2009

கடைசி பக்கம்...25 ஏப்ரல் 2009

ஈழப்பிரச்சினையில் என்ன ஆகும் என்று நினைத்து நினைத்து, வேறு எதுவும் செய்யத்தோன்றவில்லை...எப்போதும் ஒரு குழப்பமான மன நிலை....மலையாள துரோகிகளின் துரோகம், காங்கிரசு கட்சியின் துரோகம், இத்தாலி அம்மையின் கொலைவெறி, பதவி ஆசையில் நயவஞ்சகம்...அதே பதவி ஆசையில் நாடகம்...

ஆனால் அவன் வீரன்...தமிழன்....அவன் போரஸ் அல்ல...ஹெர்க்குலிஸ்...பொறுத்திருந்து பார்ப்போம்.....

முத்துக்குமார் ஏற்றிவைத்த நெருப்பு புலம்பெயர் நாடுக்களில் கொழுந்துவிட்டு எரிகிறது...அந்த தலைவன் இதனை எதிர்ப்பார்த்துத்தான் காத்திருந்தான் என்று நினைக்கிறேன்..

****************

கார்க்கி பெங்களூர்ல ப்ளீச்சிங் பவுடர பார்த்தாராமே ? யோவ் உண்மைய சொல்லு, அது பெங்களூர் அருண் தானே ?

****************

ஈழப்பிரச்சினையில் மக்களை திசைதிருப்பும் செய்திகளை தொடர்ந்து வெளியிட்டு வரும் தினமலர் அலுவலகம் மேல யாராவது கொத்து குண்டுகளை வீசினால் பரவாயில்லை...

****************

அண்ணன் சர்க்கரை, சரத்பாபு நிச்சிய வெற்றி, கலக்கல் அலசல் என்று எழுதிய ஸ்பெல்லிங் மிஸ்டேக் பதிவு பார்த்து நொந்தேன்...

அதை ஓட்டி லக்கி, அதிஷா, மற்றும் வெட்டிப்பயல் எழுதியிருந்தார்கள். கவிதா ஆதரவு தெரிவித்திருந்தார்.

ஆனால் சர்க்கரை அண்ணன் அதிஷாவுக்கு போட்ட பின்னூட்டங்களில் கொண்டையை மறைக்க முடியாமல் போனது ஏனோ ?

*****************

அண்ணன் உண்மைத்தமிழனின் புனிதப்போர் குறும்படத்தை மீண்டும் பார்த்தேன். ஆறு மாதத்துக்கு ஒருமுறை பேதி ஆனால் வயிற்றுக்கு நல்லதாமே ?

*****************

தமிழ்வெளி அலெக்ஸா ரேட்டிங்கில் ஒரு லட்சம் தளங்களுக்குள் வந்துவிட்டதே ? நிர்வாகத்தினருக்கு வாழ்த்துக்கள்...தமிழ்ஷ் இதை எல்லாம் எப்பவோ கடந்துடுச்சு...இருந்தாலும் தமிழின் முன்னணி திரட்டியாக உருவெடுத்துள்ள தமிழ்ஷ்க்கும் இந்த நேரத்தில் வாழ்த்துக்கள்..

******************

தலையில் கொஞ்சம் குறைவாக முடியுள்ள, கோவையை சேர்ந்த, தொழில் அதிபர் ஒருவர், காங்கிரசு கட்சிக்காக தேர்தல் வேலை செய்கிறார். காங்கிரசு கட்சி தமிழகத்தின் எல்லா தொகுதிகளிலும் தோற்க எல்லாம் வல்ல மகர நெடுங்குழைகாதன் அருள்புரிவாராக....

*****************

தமிழ்மணத்தில் தேர்தல், சினிமா என்று ஓரங்கட்டிவிட்டார்கள், அதனால் பல பதிவுகள் முகப்புக்கே வராமல் போனது என்று நினைக்கிறேன். அதனால் கொஞ்சம் அல்ல, ரொம்பவே டல் அடித்தது முகப்பு. இப்போது மறுபடி ரிவோக் செய்துவிட்டார்கள் என்று நினைக்கிறேன்......இன்னும் தமிழ்மண கதை போட்டியில் ஜெயிச்சதுக்கு பரிசை அனுப்பவே இல்லை...உடனே அனுப்பவும்...ஆமாம் சொல்லிப்புட்டேன்..

*****************

அடிக்கடி மலையாளிகள் கொழும்பு செல்வதை அடுத்து, தேங்காய் எண்ணை சமையல் கிடைக்காமல் அவதிப்படுவதை தடுக்க இந்திய அரசு சார்பில் நாயர் சாயா கடை மற்று டிப்பன் செண்டர் கொழும்பில் திறக்கப்படுகிறதாம்...

****************

சைல்ட் அப்யூஸ் பற்றிய அவேர்னஸ் வர கிழக்கு பதிப்பகம் உதவியுடனும் டாக்டர் எஸ்கே, டாக்டர் புருணோ ஆகியவர்களின் முயற்சியாலும் நடைபெறும் டாக்டர் ருத்ரன், டாக்டர் ஷாலினி வாசகர்களை சந்திக்கும் நிகழ்ச்சி ஒரு டாப் நாட்ச். வாழ்த்துக்கள்.

*****************

இலங்கையில் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள பொதுமக்களை வெளியே விடாமல் காவல் காக்கின்றார்கள் சிங்கள காடையர்கள். ஏன் ? பொது மக்களை பட்டியில் மாடு ஆடு போல் அடைத்து அவர்களின் மனோ பலத்தை சிதைத்து, ஒரு தலைமுறையை மந்தைகளாக உருவாக்க முயல்கிறார்களா ? இதனை வட இந்திய மீடியாக்கள் காட்டவே மாட்டார்களே ? ஆரியப்பேய்கள், கண்டி காலே சுற்றுலாவின் இனிமை இன்னும் மனதினை விட்டு அகலவில்லையோ ?

******************

தமிழ்ஷ் ஒட்டளிக்கவும்...தமிழ்மண கருவிப்பட்டை கோளாறு...

*******************

Friday, April 17, 2009

திருமா நீ வெறுமா


இனி அந்த காங்கிரஸ் கட்சியோடு ஒருநாளும் கூட்டணியில்லை என்று உண்ணாவிரத மேடையில் நீ முழங்கியபோது...

அட...இவனல்லவா என் தலைவன்...என்று இதயத்தில் உன்னை வைத்தேன்...

ஆனால் இன்றைக்கு...

மிஸ்டர் தங்கபாலு, ஐயாம் Sorry...

காங்கிரசோடு என்றைக்கும் எனக்கு மோதல் இல்லை..

மூப்பனார்தான் என்னை அரசியலுக்கு அழைத்துவந்தார்...

காங்கிரசு உதவியோடு மூன்றரை லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறுவேன்...

என்றெல்லாம் சொல்கிறாயே ?

நீயும் சராசரி அரசியல்வாதிகளில் ஒருவன் தானோ ??

ஆகட்டும்...

ரத்தம் தோய்ந்த அந்த "கை" உன்னை எவ்வளவு தூரம் கூட்டிச்சென்றாலும் பரவாயில்லை...

இனி அரசியல் ஸ்டேட்மெண்டுகள் விடுவதை நிறுத்திக்கொள்..!!!

Tuesday, April 14, 2009

மூன்றாம் ஆண்டில் தமிழ்வெளி

தமிழ்வெளி மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. புதிய லே-அவுட் அருமை.

நீங்களே பாருங்களேன்..

வாழ்த்துக்கள் !!!!!!

Monday, April 13, 2009

அபிஅப்பா, உடன்பிறப்பு மற்றும் தமிழ் ஓவியாவின் பதிலடிக்கு பதிலடி//மூத்த வலைவதிவரும் இயக்க முன்னோடியுமான தோழர் ஒருவர் சொன்னார். முதலில் ஆதரவாக பின்னூட்டம் இடுவார் அப்புறம் கொச்சைப்படுத்தி பின்னூட்டம் இடுவார். அவரிடம் எச்சரிக்கையாக இருங்கள் என்று சொன்னார்.///முதலில் தமிழ் ஓவியா அவர்களின் அல்லது So Called மூத்த வலைப்பதிவரின் அவதூறான செய்தியை என்னை இத்தனை காலம் அறிந்த அபி அப்பா, உடன்பிறப்பு போன்றவர்கள் ஏற்றுக்கொள்கிறார்களா இல்லையா என்று தெரியவேண்டும்.

//ஓரளவு ஜெயலலிதாவை விட சரியாகவே கலைஞர் செயல்படுகிறார் //

இன்னாபா இது ஓரளவு ? அந்தம்மா அஞ்சு மார்க்கு இவர் பதினைஞ்சு மார்க்கா ? என்ன காமெடி இது ?

ஓரளவு சரியா செயல்பட்டு கொஞ்சமா பிரேக்கில் கால் வைத்தால் வண்டி ஆக்ஸிடெண்ட் ஆகாம ஓரளவு மோதுமா ? ஓரளவு உயிர் போகுமா ?

காங்கிரஸ் கட்சி தமிழினத்துக்கு துரோகம் இழைத்துள்ளதா இல்லையா ? ஆம் அல்லது இல்லை என்று அபி அப்பாவும் உடன்பிறப்புவும் சொல்வார்களா ??

ஜெயலலிதாவுக்கு இல்லையப்பா. நான் விஜயகாந்துக்கு ஆதரவு தரேன். அதை பற்றியா பேச்சு இங்கே ?? ஜெயலலிதா பற்றி எந்த பேச்சும் என்னுடைய பதிவில் இல்லாதபோது சுப தமிழ்ச்செல்வன் கதையை இழுத்து வந்து திசைத்திருப்பல் எதையும் செய்யவேண்டாம். வெறும் கவிதை வெற்று காகிதம்.

கண்மூடித்தனமான வீரமணி கலைஞர் பக்தியைத்தானே இங்கே கேள்வி கேட்கிறோம் ??

கலைஞரின் முரட்டு வலையுலக பக்தர் மடிப்பாக்கம் மாபியாவே கம்முனு கீது...
இலங்கைக்கு அனுப்பிய டாங்கியை தமிழ்நாட்டை நைட்லேயே க்ராஸ் பண்ணி கேரளா போயிரு அப்படீன்னாராம் ஒரு மேனன் டெல்லியில. ஆனா பாருங்க கூட்ஸ் வண்டி ட்ரைவர் குடிச்சுட்டு ஓட்டினதால வண்டி காலையில பெரியாரு பொறந்த ஈரோட்டுல நிக்கிது. அதுல குண்டை போட்டு ரொப்பி அடிச்சுத்தானேய்யா இன்னைக்கு இத்தனை உசுரு போச்சு ?காங்கிரசு ராணுவ மந்திரி ஏக்கே ஆந்தோனிக்கு தெரியாம இலங்கைக்கு ஆயுதங்கள் அனுப்பினாங்களா ?சிவசங்கர மேனனுக்கு தெரியாம தாம்பரத்துக்கு விமானப்படை வீரர்கள் பயிற்சிக்கு வந்தாங்களா ?நாராயணனுக்கு தெரியாம பஞ்சாப் ரெஜிமெண்ட் இலங்கையில சண்டைக்கு நிக்குதா ?இதை எதையும் தட்டிக்கேட்காமல் "தாயே, பிச்சை போடு" என்று வயதை கூட கருதாமல் தன்மானத்தமிழர் கலைஞர் 'கொடுத்த காசுக்கு மேல' கூவுவதை எந்த உணர்வாளரால் சகித்துக்கொள்ளமுடியும் ?

வேட்பாளர் பட்டியலை தூக்கிக்கொண்டு டெல்லிக்கு காவடி எடுக்கும் காங்கிரசின் பதிமூனே சொச்சம் கோஷ்டிகளை விட இத்தாலி அண்ணைக்கு விசுவாசமாக இருப்பது தி.மு.கவும் தி.கவும் தான் என்பதுபோல அல்லவா இருக்கிறது வீரமணியாரின் பேச்சு ?

அங்கே தினமும் கொத்து குண்டுகளை வீசி கொத்துக்கொத்தாக மக்கள் மடியும் வேளையில் மன்மோகன்சிங் கண்மணி, அன்போட, கலைஞர், நான், எழுதும், கடிதம், இல்ல கடுதாசின்னு வெச்சுக்கோ, இல்ல எது வேனா வெச்சுக்கோ என்று கடிதம் எழுதிக்கொண்டிருப்பதன் மூலம் கலைஞர் என்ன சாதித்துவிட்டார் ?

காங்கிரசை வீழ்த்துவதன் மூலம் மட்டுமே இந்த பிரச்சினையில் காங்கிரசுக்கு பாடம் புகட்டமுடியும் என்று மொத்த உணர்வாளர்கள் கூட்டமும் நம்புகிறது...

நீங்கள் ஒரு அமைப்பில் அசோசியேட் ஆகியிருக்கிறீர்கள் என்பதாலேயே அந்த அமைப்பின் அத்தனை கொளுகைகளையும் அப்படியே ஏற்றுக்கொள்ளவேண்டியதல்ல...

ஒரு நிமிடம் யோசித்து பார்த்து முடிவுசெய்யுங்கள்.

Sunday, April 12, 2009

என்னைவிட பாப்பா ரொம்ப ரசிக்குது இந்த பாட்டை...http://www.youtube.com/watch?v=lPT_3PEjnsE

என்னைவிட பாப்பா ரொம்ப ரசிக்குது இந்த பாட்டை...நீங்களும் கேளுங்க / பாருங்க..

தமிழ் ஓவியா, போதும் நிறுத்துங்கள்


தமிழ் ஓவியா அவர்கள், விடுதலையில் இருந்து கட் அண்டு பேஸ்டு செய்கிறார். வாசகர் பரிந்துரையில் எப்படியோ இமெயில் பார்வெர்டு செய்து இடம் பிடிக்கிறார். அதை எல்லாம் நாம் கண்டுகொள்ளப்போவதில்லை என்றாலும் இவர் கிழிந்த டவுசருடன் கிடக்கும் தி.மு.க - காங்கிரஸ் கூட்டணிக்கு வக்காலத்து வாங்க முயல்வதை தான் தாங்கமுடியவில்லை.

காங்கிரஸ் கட்சியும் திராவிட முன்னேற்றகழகமும் கலைஞரும் தமிழர்களுக்கு தூரோகம் இழைத்துவிட்டது வெள்ளிடை மலை. அட்லீஸ்ட் இந்த கட் பேஸ்டுகளை இவர் நிறுத்தினால் கொஞ்சம் நிம்மதியாக இருக்கலாம்.

எந்த அடிப்படையில் இவர் கன்வின்ஸ் ஆகி தி.க + தி.மு.க + காங்கிரஸை ஆதரிக்கிறார் என்று சொன்னால் தேவலை.

பெரியாரின் புத்தகங்களை இன்னும் நாட்டுடைமை ஆக்காத தி.க கம்பேனி மக்களை ரொட்டி திங்க சொல்வதுடன், எதாவது ஒரு திராவிட கட்சிக்கு மங்கி போல தாவி தாவி சேவை செய்துவருகிறது. பேசாமல் பெரியார் திராவிட கழகத்தில் சேர்ந்து மணியண்ணன் சொன்னது ஏதாவது கட் பேஸ்டு செய்யுங்கள், உணர்வாளர்களாவது உம்மை மதிப்பார்கள்...

Wednesday, April 08, 2009

தட்ஸ்தமிழில் நான் : பொருளாதார பெருமந்தம்: சமாளிப்பது எப்படி?


2000ம் ஆண்டு. இப்போது உள்ளது போல அந்த வருடமும் தகவல் தொழில் நுட்ப துறையினருக்கு ஒரு கடினமான ஆண்டு தான்.

ஒய் டூ கே பிரச்சினை தகவல் தொழில்நுட்பத் துறையை அடித்து துவைத்து காயப்போட்டு அயர்ன் செய்திருந்தது.

எனக்குத் தெரிந்த சென்னையை ஒரு எம்.பி.பி.எஸ் படித்த மருத்துவர் ஜாவாவை அப்டெக்கில் பழகிவிட்டு டாலர் கனவுடன் அமெரிக்கா சென்றது இதற்கு முந்தைய ஆண்டு. அவர் உட்பட என்னுடைய நன்பர்கள் பலர் அமெரிக்கா ரிட்டர்ன்களானார்கள்.

மருத்துவர் மறுபடியும் ஸ்டெத்தை எடுத்தார். வேறு தெழில் தெரியாதவர்கள், உப்புமண்டி வைக்கலாமா, உறைந்த தயிரை பாக்கெட்டில் அடைத்து விற்கலாமா என்று யோசிக்க ஆரம்பித்திருந்த நேரம்...

அந்த ஆண்டு படித்து முடித்து வேலையில் சேரும் கனவுடன் நிறுவனங்களின் கதவை தட்டினால் வாட்ச்மேனை தாண்டி உள்ளே போக முடியவில்லை.

காஸ்ட் கட்டிங், லே ஆப் என்ற புதிய வார்த்தைகளுக்கான அர்த்தங்களை டிக்சனரியில் தேட ஆரம்பித்திருந்தார்கள் சென்னையை சேர்ந்த தகவல் தொழில்நுட்பவியலாளர்கள்...

நான் அப்போது அம்பத்தூரில் இருந்து திருவாண்மியூர் வரை 47D யில் அலைந்து பல கம்பெனிகளுக்கு என்னுடைய ரெஸ்யூமை பிட் நோட்டீஸ் போல விநியோகித்தும் பலனில்லை.

ஒரு கம்பெனி வரும் ரெஸ்யூம்களை பழைய பேப்பர் கடையில் போட்டு டீ செலவை பார்த்துக் கொள்ளும்படி வாட்ச்மேனை சொல்லிவிட்டது. அதனால் அந்த வாட்ச்மேன் மட்டும் ரெஸ்யூம் கொடுத்தால் அன்போடு வாங்குவார். மற்றவர்கள் பற்றி சொல்லவும் வேண்டுமா..

அந்த சூழ்நிலையை இப்போது உள்ள உலகளாவிய பொருளாதார பெருமந்த சூழ்நிலையினை அப்படியே பொருத்திப்பார்க்கலாம்.

படித்து முடித்துவிட்டு வேலை தேடி வெறுத்துப்போன ஒரு சூழலில்...அமைதி தேடி ஒருமுறை திருவண்ணாமலை ரமணாஷ்ரம் சென்றிருந்தேன்...

மாலை நேரம். ரம்மியமான அந்த சூழலில் ஒரு சிறிய படிக்கட்டில் அமர்ந்திருந்தேன். பக்கத்தில் காவி உடை அணிந்த ஒரு பெரியவர் அமர்ந்திருந்தார்.

வாட்டமான என்னுடைய முகத்தை கண்டு "என்ன தம்பி கவலை" என்று விசாரித்தார்.

என்ன இது திடீரென்று ஒருவர் வந்து நம்மிடம் பேசுகிறாரே, அதுவும் அதிரடியாக நமக்கு உள்ள கவலையை கேட்கிறாரே என்று கொஞ்சம் கூச்சப்பட்டேன்.

அப்புறம் அவர் அழுத்தி கேட்கவும்...பதில் எதுவும் சொல்லாமல் அமர்ந்திருந்தேன்.

அப்புறம் அவர் பேச்சை மாற்றி, "என்ன பண்றீங்க" என்றார்...

"சும்மாத்தான் இருக்கேன்" என்றேன்...

"சும்மா இருக்கேன்னு சொல்லாதீங்க தம்பி...வேலை தேடிக்கிட்டிருக்கேன்...அல்லது தொழில் செய்ய முயற்சி பண்ணிக்கிட்டிருக்கேன்...அல்லது படிச்சுக்கிட்டிருக்கேன்...என்று சொல்லுங்க..."

உங்களை போன்ற இளைஞர்களின் வாயில் இருந்து "சும்மா இருக்கேன்" என்ற வார்த்தை வரக்கூடாது தம்பி...என்றார்...

சுர்ர்ர்ர்ர்ர்...என்று கோபம் வந்து, விருட்டென அங்கிருந்து எழுந்து வந்துவிட்டேன்.

திரும்ப ஊருக்கு வரும்போது அவர் சொன்னது மனதை விட்டு அகலாமல் சுற்றிச்சுற்றி வந்தது.

அதனால் எழுந்த சுய தேடலில் விளைவாக ஒரு சிறிய நிறுவனத்தில் சம்பளம் இல்லாமல் பணியில் சேர்ந்து, அதன் பிறகு சில நல்லவர்களின் உதவியால் வேறு நல்ல வேலைக்கு மாறி, என்னுடைய சொந்தக்கதை இப்போது வேண்டாம்...

இருந்தாலும் கிட்டத்தட்ட ஒரு ஆண்டில் நிலைமை சீரடைந்து, நிறுவனங்கள் மீண்டும் அழைக்க ஆரம்பித்தன, உலக பொருளாதாரமும் உயர ஆரம்பித்தது.

எனக்கு தெரிந்தவரை, இப்போது அதுபோன்றதொரு நிலைதான் இருக்கிறது என்பேன்.

படித்து முடித்தவர்கள், இளம்பொறியாளர்களுக்கு நிறுவனங்களில் இருந்து அழைப்பு வரவில்லை..

ஏற்கனவே வேலைக்கான உத்தரவை கொடுத்த நிறுவனங்களில் இருந்துகூட பணி வாய்ப்பை பெற்றவர்களை அழைக்கவில்லை.

நிறுவனங்கள் இரண்டு மாத சம்பளத்தை கொடுத்து, வேறு வேலை தேடிக்கொள்ளுங்கள் என்கிறார்கள்.

ஆக, நிலைமை அவ்வளவு சுகமாயில்லை என்று எல்லோருக்கும் தெரிகிறது.

சரி, இந்த நேரத்தில் என்ன செய்ய வேண்டும்? எப்படி இந்த பெரு மந்தத்தை எதிர்கொள்வது? என்ன வகையான தயார்ப்படுத்துதல்களை செய்ய வேண்டும்?

1. ஒரு குறிப்பிட்ட துறையில் இருப்பவர்கள், வேறு துறையில் உள்ள நுட்பங்களை பழகவேண்டும். வெப்சைட் டிசைனிங் துறையில் பணியில் இருந்தவர்கள், இருப்பவர்கள், பைத்தான், பெர்ல், சிஜிஐ போன்றவற்றை பழக வேண்டும். மேனுவல் டெஸ்டிங் துறையா? ஆட்டோமேஷன், சில்க் டெஸ்ட், க்யூடிபி, ரேஷனல் ரோபோ போன்றவற்றை பழக வேண்டும்.

2. சி, ஜாவா? இன்ஸ்டால்ஷீல்ட், யூஎமெல், ஆக்சுவேட், க்ரிஸ்டல் ரிப்போட், பிஸினஸ் ஆப்ஜெக்ட், காக்னோஸ் என்று கரிக்குலத்தை பெரிதாக்குங்க..

3. டேட்டாபேஸ்? டேட்டா மாடலிங், மற்ற ரிப்போட்டிங் டூல்ஸ், எம்.எஸ் ப்ராஜக்ட்ஸ், ஓஓஏடி என்று பழகுங்கள்.

4. டெலகாம் டொமைன்? வீலேன், வைமேக்ஸ், டிசிபி ஐபி, யூஎஸ்பி, ஏடி கமேண்ட்ஸ் என்று விரிவடைந்து கொள்ளுங்கள். கூகிள் அன்ட்ராய்ட், ஜே2எம்.இ எஸ்டிக்கே, ஆப்பிள் எஸ்டிக்கே, சிம்பியன் எஸ்டிக்கே என்று உங்கள் ரெஸ்யூமை கலர்புல்லாக்குங்க...

5. டெக்ட்ரீ போன்ற இணைய தளங்களில் இருந்து இன்றைய நாளைய தொழில்நுட்ப விடயங்களை அறிந்துகொள்ளுங்கள்..

6. குறைந்தது இரண்டு அல்லது மூன்று மணிநேரம்- பயனுள்ள விஷயங்களை- மறுபடி சொல்கிறேன் - பயனுள்ள விஷயங்களை பார்ப்பதில் மட்டும் இணையத்தை செலவிடுங்கள்...

இளம்பொறியாளர்கள், மற்றும் வேலை தேடுபவர்கள், நிறுவனங்களை மட்டும் நம்பியிராமல் மைக்ரோ லெவல் ப்ராஜக்ட்ஸ் தரும் இணைய தளங்களில் ப்ராஜக்ட் எடுக்கலாம்.

கெட் எ ப்ரீலேன்ஸர், ப்ராஜக்ட்ஸ்பார்கையர், ஓடெஸ்க் போன்ற தளங்களில் இருந்து இந்த ப்ராஜக்ட்ஸ் எடுக்கலாம்.

இங்கே ஒரு முக்கிய விஷயத்தை சொல்லவேண்டும். இந்த தளங்களில் வெப் டிசைனிங், லோகோ டிசைன் போன்ற சிறிய ப்ராஜக்ட் எடுக்க புகுந்தீர்கள் என்றால் அவ்வளவு எளிதல்ல. ஏன் என்றால் ஏற்கனவே இந்த தளங்களில் உறுப்பினர்களாக உள்ளவர்கள், மிகுந்த அனுபவத்துடன் ப்ராஜக்டுகளை தட்டிச் செல்வார்கள்.

நீங்கள் இங்கே ப்ராஜக்ட்ஸ் எடுக்கவேண்டும் என்றால் உண்மையில் சரக்கு இருந்தால் தான் முடியும். அதுவும் நீங்கள் மொபைல் அப்ளிக்கேஷன் அல்லது ஆப்பிள் ஐபோனுக்கான டெவலப்மெண்ட் அல்லது கூகிள் எஸ்டிக்கேவான ஆண்ராயிடு பழகியிருந்தீர்கள் என்றால் போட்டி குறைவு..

எளிதாக உங்களது திறமையால் ப்ராஜக்ட்டுகளை தட்டிவிடலாம். மேலும் இந்த தளங்களில் பணம் ஏதும் செலுத்தாமலேயே நீங்கள் பிராஜக்ட் எடுக்கலாம்..

ஒரு சில நல்ல சாம்பிள்கள், அப்ளிக்கேஷன்கள் டெவலப் செய்திருந்தீர்கள் என்றால் அதனை காட்டி உங்கள் திறமையை நிரூபிக்கலாம்..

இருக்கும் வாய்ப்புகளை எப்படி பயன்படுத்துவது என்பதை அறிந்து வெற்றி பெறுங்கள்...

அன்பான உறவுகளே...எந்த நிலையிலும் மனம் தளரவிடாமல் உறுதியோடு போராடினால் வெற்றி உங்களுக்குத்தான்...

பல ஆண்டுகளுக்கு முன் அமரர் சுஜாதா அவர்கள் ஜாவா, லினக்ஸ் பழகுங்கள் என்று ஒரு வெகுஜன வார இதழில் எழுதி அது பல இளைஞர்களுக்கு வெளிநாட்டு வேலை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தது...

இன்றைக்கு இந்த பொருளாதார பெருமந்த சூழ்நிலையில் புதிய விஷயங்களை தொலைநோக்கு பார்வையுடன் செய்வதால் மட்டுமே நம்மால் இதில் இருந்து மீண்டு வரமுடியும்...

அம்மாவுடன் ரசத்தில் உப்பில்லை என்பதற்கு சண்டை, டி.வி சீரியலை மாற்றி கிரிக்கெட் வைப்பதற்கும் போட்டி, அப்பாவிடம் ஊர் சுற்ற பைக் பெட்ரோலுக்கு தகறாறு என்பதை எல்லாம் மறந்துவிட்டு, இளையோர்களே, உங்கள் பார்வையை அகலமாக்கவேண்டிய நேரம் வந்துவிட்டது...

ஆங்கில அறிவை விரிவாக்குங்கள். ஜிம்பாப்வே அதிபர் ராபர்ட் முகாபே என்று ஏன் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதை விட்டுவிட்டு, என்ன என்ன தகவல்களை தெரிந்து கொள்ள முடியுமோ அத்தனையும் உங்கள் விரல் நுனியில் கொண்டு வாருங்கள்..

இன்றைக்கு தொழில்நுட்ப உலகம் கணிப்பொறியை சுருக்கி கை அகலத்தில் கொண்டுவர முயல்கிறது. அதனால் தொலைதொடர்பு சம்பந்தமான, அலைபேசி சம்பந்தமான துறைகள், அலைபேசிக்கான விளையாட்டு, அலைபேசிக்கான மென்பொருட்கள் என்று எதையாவது தயாரியுங்கள். குழுவாக தோழர்கள் தோழிகள் இணைந்து இது போன்ற முயற்சிகளில் இறங்குங்கள்.

பொருளாதாரம் ஆறு மாதத்தில் அல்லது ஒரு ஆண்டில் சீரடையும்போது, நேர்முக தேர்வில் "கடந்த ஆண்டு என்ன செய்துகொண்டிருந்தீர்கள்" என்ற கேள்விக்கு " வேலை தேடிக் கொண்டிருந்தேன்" என்பதைவிட கூகிள் அல்லது சிம்பியான் அலைபேசிக்கான ஒரு மென்பொருளை/ விளையாட்டை ஒரு குழுவாக இணைந்து தயாரித்துக் கொண்டிருந்தேன் என்று சொல்வது எவ்வளவு அற்புதமானதாக இருக்கும்?.

கட்டுரையில் பயன்படுத்திய டெக்னிக்கல் விஷயங்கள் தளங்களுக்கான கீ வேர்டுகளை ஆங்கிலத்தில் கீழே தருகிறேன். நீங்களே கூகிள் 'ஆண்டவரிடம்' கேட்டு பார்த்துக் கொள்ளுங்கள்...

தொழில்நுட்ப சமாச்சாரங்கள்:
1. Google Android
2. Apple SDK
3. Symbion SDK - carbide C++
4. J2ME SDK
5. Python / Perl
6. Ubundu Linux

பணிகள் பெற இணைய தளங்கள்:
1. www.getafreelancer.com
2. www.odesk.com
3. www.projects4hire.com
4. www.elance.com

தொழில்நுட்ப பொது அறிவு தளங்கள்:
1. www.techtree.com
2. http://news.cnet.com/
3. http://www.geeknewscentral.com/

வாழ்த்துக்கள்...

தட்ஸ்தமிழில் வந்தது. அதன் சுட்டி