Wednesday, July 08, 2009

ஒளிவட்டம் சுமக்கும் வலைப்பதிவர்கள்



சமீபத்தில் ஒளிவட்டம் சுமக்கும் அரசு ஊழியர்கள் என்ற பதிவை பார்த்தேன்..

நீங்களோ நானோ, அல்லது எல்லோருமோ, ஒரு வகையில் அரசு ஊழியர்களால் பாதிக்கப்பட்டிருப்போம்...

இதற்கு அரசு ஊழியர்களின் பிள்ளைகள் கூட விதிவிலக்கல்ல...இந்தியாவில் வாழ்ந்துகொண்டு, வாழ்க்கையில் ஒரு முறை கூட லஞ்சம் கொடுக்காதவரை சல்லடை போட்டு தேடினாலும் கிடைக்கமாட்டார்.

இந்தியன் தாத்தா ஒரு விதிவிலக்கு. இருந்தாலும், அது ஒரு திரைப்படம் என்பது உங்களுக்கு தெரியும்.

இருந்தாலும் பிச்சைப்பாத்திரம் எழுதும் எதுவும் எனக்கு பிடிக்காது, இதுவும் எரிச்சலைத்தான் கொடுக்கும் என்ற மிகுந்த நம்பிக்கையில் திட்டி ஒரு பின்னூட்டம் போட்டுவிட்டு இடத்தை காலிசெய்துவிட்டேன்.

இருந்தாலும், ஒரு உண்மை உரைத்தது. அதனால் இந்த பதிவு.

சுயதொழில் செய்யும் ஒரு சில வலைப்பதிவர்களை தவிர, ஒரு பத்து சதவீதம் இருக்குமா ?, மீதி தொண்ணூறு சதவீதம் பேர், வலைப்பதிவுகளை அலுவலகத்தில் வைத்து பார்க்கிறீர்கள்.

ஒரு நிறுவனத்தில் கூலிக்கு நின்று, சம்பளம் பெறும் நாம், நிறுவனத்திற்கு உழைப்பதை விட்டுவிட்டு, சொந்த மின்னஞ்சலை திறந்து பார்ப்பது கூட குற்றம். இதுல வலைப்பதிவில் வேறு மொக்கை. என்னையும் சேர்த்துத்தான் சொல்கிறேன்.

நானும் திருடன். நீரும் திருடன். இதில் அவன் சரியில்லை, ஆட்டுக்குட்டி சரியில்லை என்று என்ன நொள்ளை நொட்டை ? முதலில் உன் முதுகில் உள்ள அழுக்கை சொறி. அதன் பின் அடுத்தவன் முதுகில் உள்ள அழுக்கை சொறியலாம். என்ன நான் சொல்றது ?

இந்த பதிவுக்கு அலுவலகத்தில் இருந்து பார்க்கும் யாரும் பின்னூட்டம் போடாதீங்க என்று சத்தியமாக நான் சொல்லமாட்டேன். ஹி ஹி...முடிஞ்சா ஓட்டு போடு, இல்லன்னா நெகட்டிவ் ஓட்டுபோடு...!!

6 comments:

ரவி said...

எப்படியோ, இன்னைக்கு பொழப்பு ஓடுனா சரி.

பழமைபேசி said...

தோலுரி தோழர் இரவி!

பழமைபேசி said...

//அதனால் இந்த பதிவு.//

இடுகை இடுகை இடுகை

vasu balaji said...

ஒப்பமுக்கியாச்சு. நீங்கள் அரசு ஊழியரா தெரியாது. ஆனாலும் கருத்து சரி. அதென்னங்க அரசு ஊழியர்னா மூஞ்சில துணிய சுத்தி அடிக்கிறது? அதுக்கொரு இடுகை விடுமுறை முடித்து வந்து போடப் பார்க்கிறேன்.

K.R.அதியமான் said...

ஒப்பீடு லாஜிக்கலா இல்ல ரவி. தனியார் நிறுவங்களில் பணி புரிந்து கொண்டு, இணையத்தை பார்க்க அனுமதி உண்டுதானே ? எப்படியோ, குறிப்பிட்ட நேரத்தில் வேலையை முடித்து கொடுக்க வேண்டும் நீங்க. அவ்வளவுதான். கஸ்டமர்கள் உங்க டேபிளுக்கு முன் காத்திக்கையில், சொந்த வேலையை பார்ப்பதுதான் தவறு / கொடுமை. அது உங்களுக்கு சாத்தியமில்லை.

முதலில் இந்திய லேபர் ஆக்ட் (தொழிலாளர் சட்டம்) சட்டத்தை மாற்ற வேண்டும். அமெரிக்கா போன்று. அதாவது வேலை விட்டு நீக்கவும், புதிதாக எந்த வேலைக்கும் யாரை வேண்டுமானாலும் கான்ட்ராக்ட் முறையில் வேலையில் அமர்த்தவும், நிறுவனங்களுக்கு பரிபூரண சுதந்திரம் அளிக்கபட வேண்டும். இந்திய மென் பொருள் துறையில் இது ஓரளவு உள்ளது. யாருக்கு வேண்டுமானாலும்
எப்போது வேண்டுமானாலும் வேலை போகும் என்ற பயம் இருப்பதால், லொல்லு பண்ணாமல் அனைவரும் ஒழுங்கா வேலை பார்க்க வாய்ப்பு அதிகம். ஆனால் அரசு
துறையில் ஒரு கடை நிலை ஊழியரிடம் கூட வேலை வாங்குவது மிக கடினம். கனரா
பாங்கில் எங்க நிறுவனத்திற்க்கு கணக்கு. அங்கு மேலாளரால் அங்கு வேலை பார்க்கும் ப்யூனிடிம் வேலை வாஙக முடியவில்லை. பாதி நேரம் வெளியே சென்று ரியல் எஸ்டேட் வேலை பார்க்கும் அந்த ப்யுன், யூனியனில் உள்ளார். ஒழுங்காக
வேலை செய்ய மாட்டார். (சில நேரங்களில், பழைய கால கொத்தடிமை / ஜமீந்தார்களின் ஆண்டான் /அடிமை அடக்குமுறை
அமைப்பில் தான் இவர்களை
பணியில் அமர்த்த வேண்டும் என்ற கொடூரமான வெறியை கிளப்புகிறது. ஆனால் தப்புதான்).

த‌மிழ‌க‌ மின்சார‌ வாரிய‌த்தில், எங்க‌ள் நிறுவ‌ன‌த்திற்க்கு புதிய‌ மின்
இணைப்பு ம‌ற்றும் இருக்கும் மின் உப‌யோக‌ அள‌வை அதிக‌ப‌டுத்த‌ ஒரு
முய‌ற்ச்சியில் இருக்கிறோம். "அவ‌ர்க‌ள்" கேட்ட்கும் ல‌ஞ்ச‌ம் ம‌ற்றும் எங்க‌ளை ந‌ட‌த்தும் வித‌ம் பற்றி ஒரு 100 ப‌க்க‌ம் எழுத‌ வேண்டும் என்ற‌ கொலை வெறி உள்ள‌து. இந்த‌ நேர‌த்தில்,
ந‌டைமுறை யதார்த்த‌ம் அறியாமல் பேசும் இட‌துசாரி அன்ப‌ர்க‌ளின் க‌ழுத்தை எம் க‌ர‌ங்க‌ளால் நெறிக்க‌ துடிக்கும் கொலை வெறி மிக‌ அதிக‌மாகிற‌து.
க‌ட‌வுளே, சாந்தி சாந்தி..


ஒரு தொழில்முனைவோனுக்கு அரசு எந்திரம் தரும் நெருக்கடிகளை அனுபவத்வருக்கு இன்னும் பல பரிமாணங்கள் புரியும்.

மேலும் பார்க்க :

http://nellikkani.blogspot.com/2008/07/blog-post.html
பொதுத் துறை நிறுவனங்கள் பற்றி..

butterfly Surya said...

அலுவலகத்திலிருந்து பின்னூட்டம் இடவில்லை.

வீட்டிலிருந்து தான் மணி இரவு 12:15

திருப்தியா தலை..

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால்

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால் டயபட்டீஸ் / நீரிழிவு / சர்க்கரை நோயை விரட்ட நியான்டர் செல்வனால் ஆரம்பிக்கப்பட்ட இந்த குழுமத்திற்கு ( https://www....