Posts

Showing posts from 2009

ஜில் ஜில்....சிறுகதை வித் முடிவு

Image
மாம்ஸ். சோஷா ஷ்ரட்டன் போறேன். சரக்கு போட..

இன்னைக்காவது நீ வரியா ?

இல்லைடா. இன்னைக்கு ஒரு சர்ஜரி இருக்கு. வீக் எண்ட் எப்பவும் கொஞ்சம் அவுட் பேஷண்ட்ஸ் அதிகம்டா.  உனக்கு தெரியாதா ?

ஓக்கே. நான் தனியா போறேன்...வைக்கிறேன்..

தனியா போ. ஆனா நான் போனவாரம் டெல்லி கான்ப்ரன்ஸ் போனப்போ அப்பார்ட்மெண்ட்டை பொண்ணுங்களை கூட்டிவந்து நாஸ்தி பண்ணியே ? அதை மட்டும் செய்யாதே..

ஹி ஹி. நீ ஊர்ல இருக்கும்போது நான் ரொம்ப்ப நல்லவண்டா..

டொக்...

இளம் மருத்துவர் அருணை பணி செய்ய விடாமல் தடுத்து அழைக்கும் விஷால் உயர அல்லது ஆந்திர சாக்லேட் நிற சுந்தர், ஹைதராபாத் ஒயின்ஷாப் ஓனர் ஒருவரின் மகன். இருவரும் இணையும் புள்ளி அவர்கள் ஹவுஸ் சர்ஜன் செய்யும் ராமச்சந்திரா மருத்துவமனை.சுந்தரைப்போல வகைதொகையின்றி புரளும் பணம் கிடையாது என்றாலும், அருணுடைய அப்பாவும் கொஞ்சம்கூட கஞ்சம் பிடிக்காத கோவையைச் சேர்ந்த  இண்டஸ்ட்ரியலிஸ்ட் தான். அண்ணா நகரின் உயர்தர அப்பார்ட்மெண்ட் ஒன்றில் இருவரும் அறை எடுத்து வாசம்..

சோழா ஷெரட்டன் மேப்ளவர் பார்.. கழுத்தில் தேவை இல்லாமல் சதைவளர்ந்த புள்ளிகள், ஆங்காங்கே டேபிள்களில் அமர்ந்து பொண்ணிற திரவத்தையும் விழுங்கிக்கொண்…

ஜில் ஜில்...சிறுகதை

Image
மாம்ஸ். சோஷா ஷ்ரட்டன் போறேன். சரக்கு போட..இன்னைக்காவது நீ  வரியா ?

இல்லைடா. இன்னைக்கு ஒரு சர்ஜரி இருக்கு. வீக் எண்ட் எப்பவும் கொஞ்சம் அவுட் பேஷண்ட்ஸ் அதிகம்டா.  உனக்கு தெரியாதா ?

ஓக்கே. நான் தனியா போறேன்...வைக்கிறேன்..

தனியா போ. ஆனா நான் போனவாரம் டெல்லி கான்ப்ரன்ஸ் போனப்போ அப்பார்ட்மெண்ட்டை பொண்ணுங்களை கூட்டிவந்து நாஸ்தி பண்ணியே ? அதை மட்டும் செய்யாதே..

ஹி ஹி. நீ ஊர்ல இருக்கும்போது நான் ரொம்ப்ப நல்லவண்டா..

டொக்...

இளம் மருத்துவர் அருணை பணி செய்ய விடாமல் தடுத்து அழைக்கும் விஷால் உயர or ஆந்திர சாக்லேட் நிற சுந்தர், ஹைதராபாத் ஒயின்ஷாப் ஓனர் ஒருவரின் மகன். இருவரும் இணையும் புள்ளி அவர்கள் ஹவுஸ் சர்ஜன் செய்யும் ராமச்சந்திரா மருத்துவமனை.சுந்தரைப்போல வகைதொகையின்றி புரளும் பணம் கிடையாது என்றாலும், அருணுடைய அப்பாவும் கொஞ்சம்போல கஞ்சம் பிடிக்கும் கோவையைச் சேர்ந்த  இண்டஸ்ட்ரியலிஸ்ட் தான். அண்ணா நகரின் உயர்தர அப்பார்ட்மெண்ட் ஒன்றில் இருவரும் அறை எடுத்து வாசம்..சோழா ஷெரட்டன் மேப்ளவர் பார்.. கழுத்தில் தேவை இல்லாமல் சதைவளர்ந்த புள்ளிகள், ஆங்காங்கே டேபிள்களில் அமர்ந்து பொண்ணிற திரவத்தையும் விழுங்கிக்க…

ராம்மோஹன் - கொஞ்சம் பெரிய குட்டிக்கதை

Image
சுதாகரை மூன்று நாட்களாக காணவில்லை.

நாங்களா ? ப்ரெண்ட்ஸ்...நான், ராம்மோஹன், சுதாகர் மூவரும். சுதாகரின் மொழியில் ஈயும் பீயூமாக. ஒற்றை வார்த்தையில் நட்புக்கு அர்த்தம் சொல்ல என்னால் முடியாது. நாங்கள் சந்தித்தது பணிக்காக சென்னை வந்து வாழ குறைந்த விலை கூரை தேடியபோது கிடைத்த ஒரு இட நெருக்கடி மேன்ஷனில் தான் என்றாலும், நாங்கள் ரொம்பவே ப்ரெண்ட்ஸ். இப்போது நாங்கள் மூவரும் சிட்டிக்கு வெளியே தனியாக வீடு பிடித்து தங்கிவிட்டாலும், எங்கள் ராசி மேன்ஷன் அறையை காலி செய்யாமல் வைத்திருக்கிறோம்..

ராம்மோஹன் மருத்துவப்படிப்பு முடித்து ஹவுஸ் சர்ஜன். அவனது ஹாபி, காட்டு விலங்குகள், காட்டுவாசிகள், அவர்களின் உணவுப்பழக்கங்கள். அடிக்கடி பழனி ஹில்ஸ், கொடைக்கானல், முதுமலைக்காடுகள், நீலகிரி, சங்கராபுரம் மலைப்பகுதிகளில் ட்ரெக் அடிப்பான். பயல் கொஞ்சநாட்களாக மூட் அவுட். விசாரிக்கவேண்டும்.

மற்றபடி இன்னொரு ப்ரெண்ட் சுதாகர்.இப்போதைக்கு வெட்டி. ஒரு அனாதை இல்லத்தில் வளந்தவன். அப்புறம் வளர்ந்த இடம் பிடிக்காமல் வெளியேறியவன் நாங்கள் தங்குமிடம் கொடுத்து அரவணைக்க எங்கள் நட்பானான்..விளம்பர படங்கள் எடுக்கிறேன் என்று கேமராவை தூக்கிக…

லிப்ட் மாமா - ஒரு பக்க கதை

Image
நான் ஸ்வேதா. ஒரு சாப்ட்வேர் கம்பெனியில் பணி. குடும்பம் சென்னையில். பெங்களூரில் தனி வீடு எடுத்து தங்கியிருக்கிறேன்..

அலுவலகம் முடிந்து என்னுடயை அப்பார்ட்மெண்ட் லிப்டில் நுழைய எத்தனித்தேன். எதிர்த்த அப்பார்ட்மெண்ட் ஜொள்ளு மாமா ஏற்கனவே லிப்டில் நிற்கிறார்.

எப்போதும் ஒரு ஜொள்ஸ் லுக் விட்டுத்தொலையும் கிழம்.

என்னம்மா,  ஆபீஸ் முடிஞ்சதா ?

(வேற என்ன நிலாவுக்கா போயிட்டு வறேன், கிழவா.....)

முடிஞ்சது..

சுருக்கமாக பதில் சொன்னேன்...

எந்த ப்ளோர் போறேம்மா..நீ ?

நான் என்னோட பிப்த் ப்ளோர் அப்பார்ட்மெண்ட்டுக்கு.

லிப்ட் பட்டனில் கை வைப்பதுபோல மேலே உரசுகிறது கிழம்.

ஹி ஹி. வீட்டுக்கு வரவாம்மா ? ஏதாவது ஹெல்ப் வேனும்னா சொல்லு..நான் தான் நெக்ஸ்ட் மந்த்லேர்ந்து ப்ளாட் செக்கரட்டரி தெரியுமோல்லியோ ?

எதுவும் தேவையில்லை..

கையை பிடித்துவிட்டான். ..

சார். என்ன பண்றீங்க ?

நீ ரொம்ப அழகாயிருக்கே...!!

இடியட். கையை எடுய்யா ?. வயசானவராச்சேன்னு பார்த்தா ?

உனக்கு ஓக்கேன்னா சொல்லு..வயசாச்சேன்னு பார்க்காதே. நான் ரெண்டை கட்டி மேய்ச்சவனாக்கும்...

நங்கென முட்டிக்கு கீழே ஒரு உதைவிட்டேன். நிலை குலைந்து விழுந்தான் கிழம். ஐந்தாவது ப…

வைரஸ் / குட்டிக்கதை

Image
மாம்ஸ். என்னோட பர்சனல் இமெயில்ல வைரஸ் தாக்கிருச்சு தெரியுமா ...காலையில் அலுவலகம் வந்தவுடன் மென்மையாக அரற்றினான் க்ருஷ்.

ஏன் என்ன ஆச்சு ? எப்படி ஆச்சு ? என்ன செய்யுது ? கேள்விமேல் கேள்விகளை அடுக்கினான் சுதாகர்..

என்னோட கடவுச்சொல்லை (பாஸ்வேர்ட்)தெரிஞ்சு வச்சுக்கிட்டு எனக்கு வரும் இமெயில் எல்லாத்தையும் படிச்சுடுது டா...

அப்புறம் ?

மொக்கையான இமெயிலை மட்டும் விட்டு வெச்சுட்டு மத்ததை டெலீட் பண்ணிடுது.

அட ?

என்னோட தங்கச்சி, அண்ணன் யார்க்கிட்ட இருந்தாவது இமெயில் வந்தா அதையும் டெலீட் பண்ணிடுது..

இங்கபார்ரா ??

யாராவது பணம் கடன் கேட்டு மெயிலோ சேட்டோ செய்தா அதை அப்படியே த்ராஸுக்கு அனுப்பிடுது...

அட...ஏன் இந்த கொலைவெறி ?

இதுக்கே அசந்துட்டா எப்படி...இதைக்கேளு...பழைய க்ளாஸ்மெட் ஒருத்தி அனுப்பின மின்னஞ்சலுக்கு ஏதோ திட்டி கூட பதில் அனுப்பியிருக்கு..

நிஜம்மாவா ? என்ன வைரஸ்டா அது ? யாருடா உருவாக்கியிருப்பா அதை ?

வேற யார் ? என்னோட மாமனார்தான்...

..

..

தாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே!

Image
மொழியாகி எங்கள் மூச்சாகி நாளை முடிசூடும் தமிழ்மீது உறுதி!
வழிகாட்டி எம்மை உருவாக்கும் தலைவன் வரலாறு மீதிலும் உறுதி!
விழிமூடி இங்கே துயில்கின்ற வேங்கை வீரர்கள் மீதிலும் உறுதி!
இழிவாக வாழோம்! தமிழீழப்போரில் இனிமேலும் ஓயோம் உறுதி!

தாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே!
தாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே!
இங்குகூவிடும் எங்களின் குரல்மொழி கேட்கிதா? குழியினுள் வாழ்பவரே!
இங்குகூவிடும் எங்களின் குரல்மொழி கேட்கிதா? குழியினுள் வாழ்பவரே!
தாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே!
உங்களைப் பெற்றவர் உங்களின் தோழிகள் உறவினர் வந்துள்ளோம்!
உங்களைப் பெற்றவர் உங்களின் தோழிகள் உறவினர் வந்துள்ளோம்!
அன்று செங்களம் மீதிலே உங்களோடாடிய தோழர்கள் வந்துள்ளோம்!
அன்று செங்களம் மீதிலே உங்களோடாடிய தோழர்கள் வந்துள்ளோம்!
எங்கே! எங்கே! ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள்!
எங்கே! எங்கே! ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள்!
ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள்!
ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள்!
தாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே!
வல்லமை தாருமென்றுங்களின் வாசலில் வந்த…

சிகரெட். இன்னொரு ஒரு பக்க கதை.

Image
என்னுடைய காதலியின் முறைப்பின் சூடு தாங்காமல் இரண்டடி பின்னேறினேன்.

டேய் ? ஏன்டா இப்படி பண்ண ? எங்கிட்ட செய்துகொடுத்த சத்தியம் என்னாச்சு ?

ஹோல்ட் ஆன். கூல். சொல்றேன்மா. சொல்றேன்...

நான் செய்தது என்ன என்று உங்களுக்கும் சொல்லிவிடுகிறேன். ஒரு ரெண்டு நிமிடம் முன்னால்.

அவள் அற்புதமான அழகி. எங்களைப்போலவே பார்க் பெஞ்சில். தனியாக. பாக்கெட்டில் இருந்து ஒரு சிகரெட் எடுத்து பற்றவைத்தாள்.

நான் தடாலென எழுந்தேன். பத்தே வினாடிகளில் அவளை சமீபித்தேன். அவளிடம்..

மேம். ஒரு சிகரெட் கிடைக்குமா ? என்றேன்.

அவள் பெரிதாக யோசித்ததாக தெரியவில்லை. பாக்கெட்டை நீட்டினாள். ஒன்றை உருவிக்கொண்டு, ஒரு தாங்யூ உதிர்த்துவிட்டு, அவளது ஸ்மைலியை பெற்றுக்கொண்டு என் இடத்துக்கு திரும்பினேன்..

இப்போ மறுபடி நிகழ்காலத்தில். முறைப்பு கொஞ்சமும் குறையாமல் மீண்டும் என்னவள் கடித்தாள்..

டேய் ? ஏன்டா இப்படி பண்ண ? எங்கிட்ட செய்துகொடுத்த சத்தியம் என்னாச்சு ?

நான் கொஞ்ச நாளா இதைத்தான்மா பண்றேன். யாராவது ஸ்மோக் பண்ணா அவங்கக்கிட்ட அப்ரோச் பண்ணி, ஒரு சிகரெட் கேட்பேன். அதை கொடுத்தால் வாங்கிக்கிட்டு வந்திடுவேன். நான் அதை ஸ்மோக் பண்ணமாட்டேன். உன…

ழ + சாட் லவ் இரண்டு ஒரு பக்க கதைகள்

Image
'ழ'

***************************************************


துறைத்தலைவர் சொன்னார்..கல்வி அமைச்சர் அவசரமாக கேட்டதால் அழைப்பிதழில் கூட என் பெயரை அச்சடிக்க அனுப்பிவிட்டாராம்.. ஒருமுறை கிள்ளிப்பார்த்துக்கொண்டேன். அரசின் உலக தமிழ் மாநாட்டில் பேச எனக்கு அனுமதியா ? நான் இரா.சிவராசு. வருமானத்துக்கு வழியில்லாத மாநிலக்கல்லூரி தமிழ்த்துறை பேராசிரியர்.

மனைவிக்கும் மகளுக்கும் தாளமுடியாத சந்தோஷம்..விடயத்தை கூறியதும்..மகள் இரண்டு அடிக்கு மேல் துள்ளினாள்...அப்பா..மூன் டிவியில லைவ்வா காட்டுவாங்க இல்லையா ?.

'நேரலை'ன்னு சொல்லு..ம்..கண்டிப்பாக காட்டுவாங்க...

தமிழின் தனிச்சிறப்பான 'ழ' என்று பெயரிட்டு இரவு பகலாக அமர்ந்து தமிழின் சிறப்பை கட்டுரையாக தயார் செய்தேன்.

அந்த நாளும் வந்தது. விழா மேடை. உலகத்தமிழர்களால் அரங்கு நிரம்பியிருக்க..எனக்கு ஒதுக்கப்பட்ட நேரத்துக்கு சில வினாடிகளுக்கு முன் விழா அமைப்பாளர் என்னை ஓரமாக தள்ளிக்கொண்டு போனார்.

அப்புறம் சிவராசு, கல்லூரி பணியெல்லாம் எப்படி இருக்கு ?

அய்யா, என்னுடைய நேரம் வந்துவிட்டது, நான் கட்டுரை வாசிக்க செல்லவேண்டும்.

அது வந்து...சிவராசு...அமைச…

இலங்கை இந்தியாவின் ஒரு பகுதி - ரஷ்ய அதிபர் திமித்ரி திடீர் அங்கீகாரம்

Image
டெல்லி பிப் 8 2025: இலங்கை இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்று ரஷ்ய அதிபர் டிமித்ரி விளாடிமிர் திடீரென அங்கீகாரம் அளித்துள்ளார்.

இந்தியாவில் விஜயம் செய்து வரும் புடின் டெல்லியில் இந்திய அதிபர் ராகுல் காந்தியை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி இலங்கை என்பதை நாங்கள் அங்கீகரிக்கிறோம். அதேசமயம், இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையிலான பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்வதற்கு விரைவில் பேச்சுவார்த்தைகள் தொடங்க வேண்டும் என்பதையும் ரஷ்யா விரும்புகிறது.

இந்தத் தலைமுறையின் மிகப் பெரிய பொருளாதார நெருக்கடியிலிருந்து ரஷ்யா மீளுவதற்கு இந்தியாவின் ஒத்துழைப்பும் உதவியுள்ளது என்றார்.

பின்னர் ராகுல்ஜி பேசுகையில், இந்தியாவின் இறையாண்மை குறித்த விவகாரங்களில் ரஷ்யா சிறப்பான நிலையை வெளிப்படுத்தியுள்ளது மகிழ்ச்சி தருகிறது. இதற்காக அதிபர் டிமித்ரியை நாங்கள் பாராட்டுகிறோம்.

ஒரே இந்தியா என்ற தத்துவத்தை ரஷ்ய அதிபர் வலியுறுத்துவதையே இலங்கை குறித்த அவரது கருத்து வெளிப்படுத்துகிறது என்றார்.

முன்னதாக சமீபத்தில் சரத் பொன்சேகா மாஸ்கோ வந்தபோது அவரை பார்க்க மறுத்து விட்டார் திமித்ரி என்…

Kreative Krayonz / வேளச்சேரியில் குழந்தைகளுக்கான டே கேர்

Image
வலைப்பதிவர் கவிதாவின் பார்வையில் நடைபெறப்போகும் இந்த வெஞ்ச்சர் இந்த மாதத்தில் இருந்து ஆரம்பிக்கப்போறாங்களாம்.

உங்கள் தோழர்கள் மற்றும் தோழிகளில் வேளச்சேரியில் வசிப்பவர்களுக்கு இந்த பதிவை அல்லது பதிவில் உள்ள இமேஜை (இமேஜ் பெரிதாக தெரிய அதன் மேல் க்ளிக் செய்யுங்கள்) பார்வேர்ட் செய்யுங்கள். முடிந்தால் நீங்களும் ஒரு பதிவு போட்டு ஆதரவு தெரிவியுங்களேன்.

லேடி காகா போக்கர் பேஸ் அவுட்டர் ஸ்பேஸ்

Image
லேடி காகாவின் போக்கர் பேஸ் ஆல்பத்தில் வரும் இந்த அவுட்டர் ஸ்பேஸ் பாட்டு குழந்தைகளை கொஞ்ச நேரம் ப்ரீஸ் ஆகவைக்கும். காரணம் அதில் உள்ள க்ரேஸி சவுண்ட் எபக்ட்ஸ்.

மற்றபடி கொஞ்சம் அடல்ட்ரியான போக்கர் பேஸ் பாட்டு கொஞ்சம் 24+. அதனால் சுட்டி மட்டும்.இட்டாலிடன் பேரண்ட்ஸுக்கு பிறந்த அமெரிக்கன் பொண்ணு இந்த லேடி காகா. இப்போ சூப்பர் ஹிட் ஆல்பம்ஸ் இவங்களோடது தான்.

இந்த ரெண்டு பாடலிலும் வரும் சில டேன்ஸ் ஸ்டெப்ஸ் அல்ட்டிமேட். ரொம்ப பிடிக்கும். என்னோட பேவரிட் லிஸ்ட்ல இவங்க வந்து ரொம்ப நாளாச்சு. நீங்களும் பாருங்க. ரொம்ப ரசிப்பீங்க.

புதிய தலைமுறை இணையதளம்

Image
இப்போது கலக்கிவரும் புதிய தலைமுறை இதழின் இண்டர்நெட்டு அட்ரஸை பார்த்தேன். அதான் ஒரு பதிவை போட்டுவிடுவோமே என்று.

http://puthiyathalaimurai.com/index.html

மாணவ பத்திரிக்கையாளர் திட்டம் இருக்கிறது. பகுதி நேர வேலை வாய்ப்பு பற்றிய தகவல்களுக்கு தொடர்புகொள்ள மின்னஞ்சல் முகவரி இருக்கிறது. இளம் பத்திரிக்கை. வலைப்பதிவர்களை கண்டிப்பாக ஊக்குவிக்க அவர்களின் படைப்புகளில் தரமானதை வெளியிடுமாறு கேட்டுக்கொள்கிறேன். தமிழில் டெக்னிக்கல் ரகமான படைப்புகளை நிறைய போடுங்கப்பா..

நீ யாருடா என்னை "ரேப்" செய்வது? நான் செய்கிறேன் உன்னை ரேப்...!

Image
ரேப்" தமிழில் கற்பை பறிப்பது அல்லது கற்பை அழிப்பது = கற்பழிப்பு!
(அப்படித்தானே!)

தமிழ் படங்களில் பெண்ணை துரத்தி துரத்தி "ரேப்" செய்ய முயலும் ஆண். இந்த பெண் பாவாடை, ஜாய்க்கெட்டுடன் காப்பாத்துங்க!! காப்பாத்துங்க!!
என்று கத்திக் கொண்டு இங்கும் அங்கும் ஓடிக் கொண்டிருக்கும். எல்லாம் முடிந்த பின் அந்த பெண் என்ன செய்யும்?

ஓ...வென்று ஒப்பாரி வைத்துக் கொண்டு பாவி! என் வாழ்க்கையை நாசம்பண்ணிட்டியே, நீ நல்லா இருப்பியான்னு கேக்கும். மார்டனாகவும், படித்த பெண்களாகவும் சித்தரிக்கப்படும் பெண்கள் கூட இந்த "ரேப்" மேட்டரில் இதே வசனம் தான் சொல்கிறார்கள். ஏன் இந்த அபத்தமான கேள்விகள்? ஒப்பாரிகள்?

சமூகம் பெண்கள் மீது திணித்திருக்கும் கலாச்சாரம், பண்பாடு, ஒழுக்கங்கள் அதற்கும் மேல் அவளின் பலவீனங்களை பலப்படுத்த விடாமல், நீ பெண் இப்படித்தான் இருக்க வேண்டும். இப்படித்தான் வாழ வேண்டும்மென்ற அடக்கு முறைகளை வைத்திருந்த காலம் மாறிவிட்டது...
மேலும் படிக்க

..
..

சிங்கிள் பார்ட்டி

Image
சிங்கிள் பார்ட்டி என்று ஒன்று உண்டு இங்கே. Single என்று கருதுபவர்கள் எல்லாம் Single ஆக வரவேண்டிய ஒன்று. குறைந்த அனுமதி கட்டணம் வசூலிக்கிறாங்க.
பேஷன் ஷோ, லோக்கல் ராக் பேண்ட் இசை. ஒரு டேன்ஸ் ப்ளோரும் உண்டு. இந்தியாவில் இந்தமாதிரி பார்ட்டி எதுவும் வைத்தால் தானே ? ம்ஹும். செய்யமாட்டாய்ங்களே !!!

வைரமோதிரம், மொபைல் போன், லேப்டாப் / UAE தமிழ்சங்கம்

Image
கலை அரங்கம் 2009 அப்படீங்கறது யூ.ஏ.இ தமிழ் சங்கம், யுனிடெக் லிமிடெட், வெஸ்டர்ன் யூனியன் மனி ட்ரான்ஸ்பர் ஆகியவை இணைந்து நடத்தும் குடும்ப விழா.

சுட்டி > http://www.uaetamilsangam.com/upcomingevent.asp

எங்கே :

13th November 2009, Friday, at Sheikh Rashid Auditorium. Indian High School,
Dubai (Opp. St. Mary’s Church-Karama) Gates open at 4.30pm & programme commences at 6.00pm


மெம்பர்களுக்கு மட்டும் (Charity Raffle Gift)

Mini Laptop Notebook, Diamond Ring, Mobile Phone…

Charity Raffle / எல்லோருக்கும் :

32" LCD TV, SD Card Video Camera, Digital Camera, Mobile Phone, Portable DVD Player and many more.

யார் யாரெல்லாம் வர்ராங்க:

Mr. D Napoleon Hon’able Minister of State for Social Justice and Empowerment, Govt. of India

His Excellency Mr. Venu Rajamony, Consul General of India

Mr. Syed M.Salahuddin, Managing Director ETA Ascon Star Group

Mr. Ashok Kumar, CEO, Indian High School, Dubai

Mr. K Kumar, Convenor - ICWC, Dubai-UAE.

என்ன ப்ரொக்ராம்:

Semi-Classical & Cinematic Dance performance by ch…

பெங்களூரு புத்தகக் கண்காட்சி - 2009

Image
பெங்களூரு புத்தகக் கண்காட்சி - 2009 நவம்பர் மாசம் நடைபெறுகிறதுங்க. கிழக்கு பதிப்பகத்தின் நியூஸ்லெட்டர் மூலம் தெரியவந்தது. இது வரை போகாதவங்க கண்டிப்பா போங்க. 2007 ல வடை பஜ்ஜி சூப்பர். 2008 ல சாண்டில்யன் புக்ஸ் ஒரு பண்டல் அள்ளினேன். அங்கே திருமாலை, ஜிராவை மீட் பண்ணியிருக்கேன். பத்ரி கூட வந்தார் என்று நினைக்கிறேன். விகடன் பதிப்பகம் வரும். உயிர்மை வரும். சுஜாதாவின் புக்ஸ் கிடைக்கும். கேள்பிரண்ட் இல்லாமல் காலையில் போனீங்க என்றால் மாலை வரை சுற்றலாம்.

இடம்:
PALACE GROUNDS
MEKHRI CIRCLE
RAMANAMAHARISHI ROAD
BANGALORE

நவம்பர் 6 முதல் 15 வரை.
அரங்கு எண்: 165, 166

பெங்களூரு புத்தகக் கண்காட்சியில் கலந்து கொள்கிறது கிழக்கு பதிப்பகம். கிழக்கு பதிப்பகத்தின் நூல்களை நீங்கள் அந்த அரங்குகளில் வாங்கலாம். தன்னம்பிக்கை, அரசியல், வரலாறு, அறிவியல், உடல்நலம், வாழ்க்கை வரலாறு, நாவல், சிறுகதை, நிதி, வணிகம், ஆன்மிகம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட நூல்களைப் பார்க்கவும் படிக்கவும் வாங்கவும் ஒரு வசதியை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது கிழக்கு பதிப்பகம்.

பல்வேறு சிறந்த புத்தகங்களுடன் பெங்களூரு புத்த…

இபே (ebay.in) மூலம் போலி பொருட்கள், உஷார் உஷார்

Image
இந்தியாவில் ஒரு மாதத்துக்கு 8 லட்சம் சீன அலைபேசிகள் நுழைகின்றன. ஐஎம்இஐ எண்கள் இல்லாத, எந்த சர்வதேச காப்பிரைட் சட்டங்களுக்கும் மென்பொருள் சட்டங்களுக்கும் பேடட்ண் விதிகளுக்கும் கட்டுப்படாத போன்கள் இவை. நோக்கியா போலவே இருக்கும். ஐபோன் போலவே இருக்கும். அதனால் அந்த நிறுவனத்தில் வியாபாரம் பாதிகப்படும்.

சீன மொபைல் போன்கள் இந்திய அரசால் தடை செய்யப்பட்டுவிட்டாலும், அந்த அரசு விதியை வழக்கம்போல ஓட்டை போட்டு இந்திய பொருளாதாரத்தை ரத்தம் போல உறிஞ்ச இந்திய எதிரிகள் தயாராகவே இருக்கிறார்கள்.(ஆப்பிள் நிறுவனத்தின் லாபம் அமெரிக்காவுக்குத்தானே போகிறது என்பார்கள் சிலர், அது வேறு கதை)

இந்த இபே (ebay.in) தளத்தின் மூலம் வழக்கம்போல போலி பொருட்கள் உள்ளே நுழைகின்றன. இந்திய அரசு விழித்துக்கொள்ளவேண்டும். இந்த பதிவை பார்க்கும் பத்திரிக்கையாளர்கள் தங்கள் பத்திரிக்கை மூலம் இதனை அம்பலப்படுத்தவேண்டும்.
இந்த சுட்டியில் பார்த்தீர்கள் என்றால் முப்பதாயிரம் மதிப்புள்ள ஐபோனை மூவாயிரத்து சொச்சத்துக்கு தருகிறார்கள். அதுவும் தில்லாக சீனா ஐபோன் என்று எழுதி விற்கிறார்கள்.


கொரியன் போன் என்று கடைகளில் விற்கப்படும் இந்த போன்கள் உண்மையில…

கட்டுப்பாட்டைக் கற்றுக்கொள், தம்பி ! !

Image
சுய முன்னேற்றம் - எம்.எஸ்.உதயமூர்த்தி


மலரும் ஒவ்வொரு புத்தாண்டிலும் நாம் ஒவ்வொருவரும் ஒரு உறுதி எடுத்துக் கொள்கிறோம். சில தீர்மானங்கள் செய்து கொள்கிறோம்.

“இந்த ஆண்டு சொந்தத் தொழிலைத் தொடங்கப் போகிறேன்.”
“இந்த ஆண்டு மேற்படிப்புக்காக வெளிநாடு செல்லப் போகிறேன்.”
“இந்த ஆண்டு எனது கனவு வீட்டைக் கட்டப்போகிறேன்.”
“இந்த ஆண்டு உலகம் புகழும் மகத்தான கதை ஒன்றை எழுதப் போகிறேன்.”
“இந்த ஆண்டு அளவோடு சாப்பிட்டு கொடி போல உடலை வைத்துக் கொள்ளப் போகிறேன்.”

இப்படி நாம் ஒவ்வொருவரும் ஒரு தீர்மானம் செய்கிறோம். நல்ல தீர்மானங்கள்! நல்ல நோக்கம்.

அடுத்த ஆண்டு தொடங்கும்போது பார்த்தோமானால் இதே தீர்மானங்களை மீண்டும் சொல்லிக் கொள்கிறோம்! அதாவது இந்த ஆண்டு முழுவதும் நாம் எடுத்துக்கொண்ட குறிக்கோளில் நாம் முன்னேறவில்லை. அதை அடைய நாம் எதையும் சாதிக்கவில்லை. ஆங்கிலத்திலே சொல்வார்கள். “மீண்டும் முதல் படியில்!” என்று. முதல் படிக்கே திரும்பத் திரும்ப வந்தோமானால் நாம் எப்படி முன்னேறுவது?

ஒரு அமைச்சர் மரம் நட வந்தார். மரம் நட்டார். தண்ணீர் ஊற்றினார். ஒரு சந்தேகம் வந்தது. "நான் நடும் மரத்தை பத்திரமாக பாதுகாத்து வளர்ப்பீர்கள் அல்ல…

போலிச்சாமி பகத் பஸ்பருக்கு கடிதம்

Image
வணக்கம் போலிச்சாமியார் பகத் பஸ்பர் அவர்களே. இரும்படிக்கும் இடத்தில் ஈக்கென்ன வேலை என்று கேட்கிறீகளா ? அதை நான் ஏன் கேட்கக்கூடாது சொல்லுங்கள்.

முதலில் நீங்கள் யார் ? அருட்தந்தை என்கிறார்கள். எப்போது எங்கே, யாரின் அருள் உங்களுக்கு கிடைத்தது ? உங்களை பார்த்தால் கிருத்தவ மி(வி)ஷநரிகள் நம் நாட்டில் விட்டுவிட்டுப்போன, இந்தியாவில் அபகரித்த நிலங்களில் பில்டிங்குகள் ப்ளேகிரவுண்டுகள் கட்டிக்கொண்டு, மிச்சத்தை எச்சத்தை தின்றுவிட்டு, ஒயினை குடித்துவிட்டு, சுருட்டை புகைத்துக்கொண்டு உடல் பெருத்து உட்கார்ந்திருக்கும் பிரிஸ்ட்டு சாமியார்கள் போல தெரியவில்லையே ?

ஆள் கொஞ்சம் வெடவெடவென்றுதானே இருக்கிறீர்கள் ? ஏன் பிரான்ஸில் இருந்து ஒயின் வருவதில்லையா ? இல்லை நீங்கள் தங்கியிருக்கும் இடத்தில் நல்ல சிக்கன் மட்டன் சமைக்க ஆட்கள் இல்லையா ?

அப்கோர்ஸ், நீங்கள் ஆர்.சி (ரோமன் கத்தோலிக்கு) சாமியாரா, பிராட்டஸ்டண்டு சாமியாரா, அல்லது இவாஞ்சலிக்கல் செவண்த் டே அல்லேலூயா கோஷ்டியா என்று தெரியவில்லை. ஏன்னா, ரோமன் கத்தோலிக்கு கோஷ்டி சாமியார்கள் கல்யாணம் செய்துகொள்வதில்லை (அதற்காக அவர்கள் வாலிப வயோதிக அன்பர்களே என்றழைக்கும் டாக…

அன்னா மரியா குமாரசாமி.....

Image
காலையில் அலுவலகம் வந்து மின்னஞ்சலை திறந்தவுடன், 'உடனே என்னுடய இடத்துக்கு வரமுடியுமா' என்று மின்னஞ்சல் அனுப்பியிருந்தான் க்ரிஷ்.

என்னடா அவசரம். அப்புறமா வரேன். மீட்டிங் இருக்கு. என்று பதில் அனுப்பினேன்.

ம்ஹும். அர்ஜெண்ட். உடனே வா.

அப்படி என்னடா அர்ஜெண்ட், என்றேன் அவன் இருக்கைக்கு அருகில் நின்றுகொண்டு.

அவன் கையில் இன்றைய செய்தித்தாள். அதில் தோராயமாக நடுப்பக்கம். பார். படி. என்றான்.

புதிய வரிவிதிப்பு முறைகள் பொதுமக்களை எவ்வாறு பாதிக்கின்றன என்பது போல ஒரு த்ராபையான தலைப்பு, ரெண்டு முழு பக்கங்களை விழுங்கியிருந்தார் எழுத்தாளர். அதில் நாலைந்து பொதுமக்களை பேட்டி கண்டு அவர்கள் கருத்தை பதிந்திருந்தார். அவர்களது படங்களும் வெளியாகியிருந்தன.

குழந்தையோடு நிற்கும் ஒரு பெண், பள்ளி செல்லும் ஒரு மாணவி, ரெண்டு முதியவர்கள் என்று வேறுபட்ட ஏஜ் க்ரூப்பில் அவர்கள் கருத்துக்களை தெரிவித்திருந்தார்கள்.

அதில அந்த பொண்ணு சொல்றத படி.

படத்தில் இருந்த இளம்பெண் அழகு. ஒல்லியான தேகம், நல்ல உயரம். வெண்ணிற ஆடை, தோளில் ஸ்டைலிஷான ஒரு கரிய நிற பேக். ஒற்றை வார்த்தையில் அழகு என்று சொல்லிவிட முடியாதபடிக்கு.

சூப்பரா இருக்கா இல்…

அவசர கல்வி உதவி கோரல்

இலங்கையில் நடைபெற்ற கோரமான உள்நாட்டு யுத்தம் காரணமாக மிக கடுமையாக பாதிக்கப்பட்டு தம் உறவுகளையும் , உடமைகளையும் இழந்து வாழ்வதற்கு எதுவுமற்ற நிலையில் இடம்பெயர்ந்தோருக்கான நலன்புரி நிலையங்களில் இருந்துவந்த வன்னி , முல்லைத்தீவு , கிளிநொச்சி மாவட்டடங்களை சேர்ந்த மாணவர்கள் மீண்டும் கல்வியை தொடர்வதற்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது .

எனினும் தற்போதைய நிலையில் மேற்படி மாணவர்கள் தமது கல்வியை தொடர்வதற்கான எந்த ஒரு அடிப்படை வசதிகளுமற்ற நிலையில் உள்ளனர் . மேற்படி மாணவர்களின் குடும்பங்கள் நீண்ட காலமாக நலன்புரி நிலையங்களிலேயே தொடர்ந்தும் இருந்து வருவதினால் இம்மாணவர்கள் தமது அன்றாட வாழ்வுக்கே ஏனையோரிடம் கையேந்தி வாழ்கின்றனர் . மாணவர்கள் தமது கல்வியை தொடர்வதற்கான ஊக்கம் இருந்தும் போதிய வசதி இல்லாத காரணத்தினால் மன அழுத்ததிற்கு உள்ளான நிலையில் உள்ளனர் .

மேலும் மேற்படி மாவட்டங்களில் இருந்து தென்பகுதிகளில் உள்ள பல்கலை கழகங்களுக்கு
தெரிவான மாணவர்களின் நிலை இன்னும் மோசமாக உள்ளது . இந்த மாணவர்கள் தமது கல்வியை தொடர மாதாந்தம் குறைந்த பட்சம் 10,000 ரூபா செலவாகிறது . எனினும் அவர்களின் பெற்றோர்கள் நலன்புரி நிலையங்களி…

செந்தழல் ரவிக்கு பன்றிக்காய்ச்சல்

Image
கவுஜை

எதிரித்தோழர் ஒருவர் ஒரு வரிக்கு ஒரு வார்த்தை என இயற்றிய கவிதை.

ஆஹா..
ஒரு
பன்றிக்கே
பன்றிக்காய்ச்சல். !!!!
ஆச்சர்யக்குறிஈஈ..

டயலாக்

இம்சை அரசன் படத்தில் புலிகேசி :

பன்றிக்கு நன்றி சொல்லி
குன்றின் மீது ஏறி நின்றால்
வென்றுவிடலாம் குலசேகரனை..!!

தற்காப்புநக்கல்H1N1 வைரஸ்மற்றபடி பதிவுக்கு வருவோம். தலைப்பில் கடைசி வார்த்தை விடுபட்டுள்ளது. "செந்தழல் ரவிக்கு பன்றிக்காய்ச்சல் வாக்ஸீன்". என்று இருக்கவேண்டும். வியாழக்கிழமை பண்ணிரண்டு மணியில் இருந்து இரண்டு மணிக்குள் மருத்துவமனைக்கு வந்து வாக்ஸினேஷன் பெற்றுக்கொள்ளும்படி என்னுடைய அரசு மருத்துவர் இன்று கடிதம் அனுப்பியுள்ளார்.

மொக்கையான நன்பர்கள், ஏமாந்த எதிரிகள் (ஒரு 30 செகண்டாவது ஜாலியா இருந்ததா இல்லையா), எல்லாரும் ஆதரவோ எதிர்ப்போ, ஒரு வாக்கை செலுத்தவும். ஜெயபாரதன் அவர்களின் பதிவுக்கான சுட்டி இடப்புறம் உண்டு. வாசிக்கவும். நன்றி.

வீக் எண்ட் ஆங்கில பாடல்கள்

ரசிக்கும் & ரசிக்கவைக்கும் சில பாடல்கள்..

லம்பாடா கவோமாமிஸ்டர் ப்ரெசிடெண்ட்சாட்டர்டே நைட்மெக்கரீனாலெஸ் கேச்சப் அசரஜேஹிப்ஸ் டோண்ட் லை (வீடியோவை எம்பிட் செய்ய முடியவில்லை)

http://www.youtube.com/watch?v=FLQgjEhH400

பாப் மார்லி

http://www.youtube.com/watch?v=tbPEFyAbwqE (வீடியோவை எம்பிட் செய்ய முடியவில்லை)

ஹேப்பி பீட் டேன்ஸ் மட்டும்
இன்னைய கணக்கு முடிஞ்சது. முடிஞ்சா ஓட்டு போடுங்க. இல்லைன்னா வேற எதாவது நல்ல பதிவுக்கு போடுங்க. ஜெயபாரதன் பதிவுக்கு லிங்க் இருக்கு பக்கத்தில, அதில் போய் நல்ல கண்டண்ட் படிச்சுக்கோங்க.)

கார்த்திக் அம்மா....

Image
2005 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தின் இறுதி பகுதி என்று நினைக்கிறேன். சரியாக நினைவில்லை. மறக்க முயன்று தோற்ற நிகழ்வு. சரியாக நினைவில்லை என்றால் சந்தோஷமே.

அப்போது ஒரு நாளைக்கு அரைபாக்கெட் கிங்ஸ் வாங்குவேன். ஆங். இப்போது விட்டாச்சு சிகரெட். ஒருவருடமாகிறது புகைத்து. மீண்டும் புகைக்க விருப்பமில்லை. மனைவிக்கு கொடுத்த உறுதிமொழி மூலம் இது சாத்தியமாயிற்று. ஏற்கனவே புகைப்பதை விட்டுவிட பல முறை எடுத்த முயற்சிகள் தோல்விகளில் முடிந்ததை தனியாக எழுதவேண்டும்.

எங்கே விட்டேன் ? புகை. ஆம். அலுவலகம் வந்து பார்த்தால் சிகரெட் தீர்ந்துவிட்டிருந்தது. நான் தங்கியிருந்த பேச்சுலர் வீட்டில் ஒரே புகைவண்டிகள். காலையில் காபிக்கு பிறகு ஒரு சிகரெட் தேடினால் பாக்கெட் காலி.

டெவலப்மெண்டில் இருக்கும் விஜய ஷங்கர் சிங் வில்ஸ். இருந்தாலும் பரவாயில்லையே என்று அவனை தேடினால் அவன் ஒரு மீட்டிங்கில். மஹிபால் புகைக்கமாட்டான். இருந்தாலும் எப்போது கூப்பிட்டாலும் கம்பெனி தருவான். அவன் சீட்டில் அவனை ஆளை காணவில்லை.

இந்த பதிவு கொஞ்சம் குழப்பமாயிருக்கலாம் உங்களுக்கு. அப்படியிருந்தால் நேரத்தை வீணடிக்காமல் வேறு உபயோகமானதை தேடி படிக்கவும். பெங்களூர்…