தேடுங்க !

Wednesday, December 31, 2008

இது நியாபகம் இருந்திருந்தா ராமராஜனை அடிச்சிருப்பீங்களா?ரத்தத்தின் ரத்தம் அ.இ.அ.தி.மு.கவின் முன்னாள் எம்.பி, பிரபல நடிகர், அன்பு அண்ணன் டாக்டர் ராமராஜன் தாக்கப்பட்டார்...!!!அவர் கையில் இருந்த பணம் 40 ஆயிரம், செயின், வாட்சு, மோதிரம், மொபைல் போன் ஆகியவற்றையும் பிடுங்கிக்கொண்டு திராவிட திம்மிகள் காரையும் உடைத்திருக்கிறார்கள்...

இதை வன்மையாக கண்டிக்கிறேன்...அந்த மொபைல் போன் யாரிடம் இருக்கிறது என்று நெட்வொர்க் மூலம் கண்டறிந்து, யாராயிருந்தாலும் தகுந்த தண்டனை வழங்கவேண்டும்...

மைனாரிட்டி தி.மு.க அரசு போன்ற பேய்களின் ராஜ்ஜியத்தில் பிணம் தின்னும் சாத்திரங்கள், சட்டங்கள்...!!!

மதுரை திருமங்கலத்துக்கு துணை ராணுவப்படையை வரவழைக்கவேண்டும்...

அ.இ.அ.தி.மு.கவினர் மீது போடப்பட்டுள்ள அனைத்து வழக்குகளும் வாபஸ் பெறப்படவேண்டும்...

காவல் துறைனருக்கு எச்சரிக்கை...அடுத்து வரும் அம்மா ஆட்சியில், இப்போது தவறு செய்யும் அனைத்து காவல்துறையினரும் தேடிப்பிடித்து கைது செய்யப்படுவார்கள்...

வாழ்க அண்ணா நாமம்...வாழ்க புரட்சித்தலைவி நாமம்...வாழ்க அண்ணா நாமம்...வெற்றிவேல்...வீரவேல்...!!!

Tuesday, December 30, 2008

நன்றி தமிழ்ஷ் !!!!!!!!!

என்னுடைய இந்த பதிவில் தமிழ்ஷ் சுட்டி அளிக்கும் பக்கத்தை கொஞ்சம் எளிமைப்படுத்துதல் செய்யவேண்டும் என்று கேட்டிருந்தேன்...

அந்த வேண்டுகோளை ஏற்று உடனடியாக நான் கேட்டிருந்த மாற்றத்தை செயல்படுத்தியிருக்கிறார்கள் இணைய தள நிர்வாகம்...

நன்றி !!!!

மேலும் ஒரு சிறிய வேண்டுகோள் அல்லது ஆலோசனை என்ன என்றால், கூகிள் வழி விளம்பரத்துக்காக இணைய தள முதல் பக்கத்தில் ஒரு சிறிய இடத்தை ஒதுக்கலாமே ?

அதில் வரும் தொகையை கொண்டு வாசகர்களின் ஆர்வத்தை தூண்டும் வகையில் போட்டிகள் அல்லது தமிழ் சமூகத்திற்கு ஏதாவது பயன் அளிக்கும் உதவிகள் செய்யலாமே ?ஏன் கொஞ்சம் புத்தகங்கள் வாங்கி ஏதாவது ஒரு கிராம நூலகத்துக்கோ அல்லது உதவும் கரங்கள் / சிவானந்த குருகுலம் போன்ற அமைப்புகளுக்கு தரலாமே ?

இந்த வேண்டுகோளை நான் மற்ற திரட்டிகள், இணைய தளங்களுக்கும் அவ்வப்போது எழுதுவதுண்டு...

கூகிள் நிறுவனத்தின் அறிவுறுத்தல்கள் படி, கூகிள் வழி விளம்பரம் செய்பவர்கள் அதில் உள்ள சுட்டிகளை க்ளிக் செய்யுமாறு வாசகர்களை கேட்கக்கூடாது...!!! இது கூகிள் ஆட்சென்ஸ் விதியாகும்...

படிக்கும் வாசகர்கள் கூகிள் வழி விளம்பரங்களை தாங்களாகவே க்ளிக் செய்யட்டும்...அல்லது இது போன்ற பதிவுகளை படித்து, கூகிள் வழி விளம்பரங்களால் திரட்டிகள் நல்ல செயல்களை செய்கின்றன, போடுடா ரெண்டு க்ளிக்கு என்று அடிக்கடி க்ளிக்கினாலே போதும்...

காதை கிட்ட கொண்டாங்க, நான் உருவாக்கிய ரெண்டு மொக்கை ஆங்கில ப்ளாக் மூலமாக இரண்டு நாட்களில் 20 டாலர் வந்துள்ளது...(இது பற்றி விரிவான தொடர் ஒன்று எழுதலாம் என்று உள்ளேன்)..

அவ்வளவு தான் நான் எழுத நினைத்தது...மீண்டும் ஒருமுறை "நன்றி"...

இஸ்ரேலின் வான் தாக்குதலுக்கு இந்தியா கண்டனம்

இஸ்ரேலின் வான் தாக்குதலுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. ராணுவத் தாக்குதலின் மூலம் எந்தப் பிரச்சினைக்கும் தீர்வு காண முடியாது. இஸ்ரேல் தனது விமானத் தாக்குதலை நிறுத்த வேண்டும் என இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

காஸா: காஸா நகர் மீது இஸ்ரேல் போர் வி்மானங்கள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. இன்று நடந்த தாக்குதலில் 10 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர்.

ஹமாஸ் அமைப்பின் அலுவலகங்களையும், பிற இலக்குகளையும் குறி வைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த நான்கு நாட்களாக போர் விமானங்கள் தாக்குதல் நடத்தி வருவதால் காஸா நகரமே சின்னாபின்னமாகியுள்ளது.

கடந்த பல வருடங்களில் நடந்துள்ள மிக மோசமான தாக்குதலாக இது கருதப்படுகிறது.

புதிய தாக்குதலில், காஸா இஸ்லாமிய பல்கலைக்கழகத்திற்குச் சொந்தமான ஐந்து கட்டடங்களை இஸ்ரேல் விமானப்படையினர் குறி வைத்துத் தாக்கி தகர்த்தனர்.

இதுகுறித்து காஸா நகர ஆம்புலன்ஸ் சேவைப் பிரிவு தலைவர் முவையா ஹஸனீன் கூறுகையில், பல பாதுகாப்பாளர்கள், பொதுமக்கள் இந்தத் தாக்குதலில் உயிரிழந்துள்ளனர்.

ஹமாஸ் அமைப்புக்குச் சொந்தமான ஒரு விளையாட்டு மையம், இரண்டு பயிற்சி முகாம்கள் இந்தத் தாக்குதலில் அழிக்கப்பட்டு விட்டன என்றார்.

இதுவரை நடந்த தாக்குதல்களில் 345 பேர் உயிரிழந்துள்ளனர். 800க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என காஸா நகர நிர்வாகம் தெரிவித்துள்ளது. இறந்தவர்களில் 62 பேர் அப்பாவி பொதுமக்கள் என ஐ.நா. தகவல் ஒன்று கூறுகிறது.

காஸாவுக்கும், இஸ்ரேலின் அஸ்தாத் என்ற நகருக்கும் இடையிலான எல்லைப் பகுதியில் ஹமாஸ் அமைப்பினர் நேற்று நடத்திய ஏவுகணைத் தாக்குதலி்ல ஒரு இஸ்ரேல் வீரர் கொல்லப்பட்டார். இதையடுத்தே தனது தாக்குதலை மீண்டும் தொடர்ந்துள்ளது இஸ்ரேல்.ராணுவம் இறங்குகிறது:

மேலும், இதுவரை வான் ரீதியாக தாக்குதல் நடத்தி வந்த இஸ்ரேல், அடுத்து ராணுவத்தை உள்ளே அனுப்பி தாக்குதல் நடத்தவும் தீர்மானித்துள்ளது. இதனால் காஸா நகரம் மேலும் மோசமான நிலையை சந்திக்கும் என அஞ்சப்படுகிறது.

இன்று நடந்த தாக்குதலில், ஹமாஸ் அமைப்பின் முக்கிய தலைவர் ஒருவரது இல்லமும் குறி வைக்கப்பட்டது. ஆனால் அப்போது அவர் அங்கு இல்லை என்பதால் உயிர் தப்பினார்.

இஸ்லாமிய தீவிரவாத அமைப்பான ஹமாஸ், கடந்த 2007ம் ஆண்டு காஸா பகுதியை தனது கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டது. பாலஸ்தீன அதிபர் முகம்மது அப்பாஸுக்கு விசுவாசமான பாதா படைகளை விரட்டியடித்தது.

அது முதல், இஸ்ரேலிய படைகள் மீது அவ்வப்போது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது ஹமாஸ். இதையடுத்து பதிலடியாக இஸ்ரேலும் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வந்தது. இந்த நிலையில் கடந்த நான்கு நாட்களாக கடும் தாக்குதலை மேற்கொண்டுள்ளது இஸ்ரேல்.

நான்கு நாட்களாக நடந்து வரும் சண்டையில் இஸ்ரேல் தரப்பில் நான்கு பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்தியா கண்டனம்

இஸ்ரேலின் வான் தாக்குதலுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. ராணுவத் தாக்குதலின் மூலம் எந்தப் பிரச்சினைக்கும் தீர்வு காண முடியாது. இஸ்ரேல் தனது விமானத் தாக்குதலை நிறுத்த வேண்டும் என இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

Monday, December 29, 2008

மடகாஸ்கர் 2 : வயிற்றை பதம் பார்க்கும்மடகாஸ்கர் பாகம் ஒன்றை பார்க்காதவர்கள் அதனை முதலில் பார்த்துவிடுவது நல்லது...எதையும் நான் சொல்லப்போவதில்லை...மனம் விட்டு சிரிக்கலாம், உங்கள் வயிற்று வலிக்கு பெண்குயின்கள் பொறுப்பாகமாட்டா...ஒரு சின்ன ட்ரெயிலர் மட்டும் போடுகிறேன் பாருங்கள்...இந்த ட்ரெயிலரில் வரும் பென்குயின் பேசும் வசனம் மட்டுமே படத்தை பார்க்க தூண்டும் என்று நினைக்கிறேன்...

கானாபிரபா விமர்சனத்தை எழுதிட்டதால மேல படிக்க நீங்க அங்கன போங்க..!!!

பீச்ல மீன் பிடிச்சிருக்கீங்களா ?பீச்சில் மீன் பிடிப்பது அடியேனின் முக்கியமான பொழுதுபோக்கு..தமிழக மீனவர்கள் கூட இந்த கலையை கற்றுக்கொண்டால், இலங்கை ராணுவத்தின் துப்பாக்கிச்சூட்டில் இருந்து தப்பிக்கலாம். இலங்கை ராணுவத்தினர் முன் இந்திய ராணுவத்தினர் கூட கையை தூக்கி சரணடைவதாக ஒரு தகவல் பரவிக்கிடக்கிறது..யானை படுத்தால் குதிரை கூட குத்தாட்டம் போடுமாம். சரி அதை விடுங்கள்.

கடல் உளுவை மற்றும் அற்புதமான கெளுத்தி மீன்கள், கொஞ்சம் நடுத்தர வகை மீன்கள் கிடைக்கும்..புளிச்சகாய் அல்லது நல்ல பழம் புளியை போட்டு மீன் குழம்பு வைத்தால் ச்ச்சும்மா தூக்கும்...

மீன் பிடி தூண்டில் என்பது பொதுவாக ஒரு நீளமான கம்பி அல்லது குச்சில் ஒரு நல்ல மெல்லிய ஆனால் எளிதில் அறுக்கமுடியாத நைலான் இழை, அதன் முனையில் ஒரு தூண்டில் முள், மீன் மாட்டிவிட்டதை பார்க்க தண்ணீரில் மிதக்கும் ஒரு தக்கையை தூண்டில் முள் இணைக்கப்பட்டுள்ள முனைக்கும் கயிறு கம்பியில் கட்டப்பட்டுள்ள முனைக்கும் நடுவில் கட்டவேண்டும்...

பொதுவாக ஆற்று நீர், கிணற்று நீர், ஏரி நீர் என்று சொல்லப்படும் நன்னீர்ல் தூண்டில் போடும்போது, மீன் மாட்டினால் தக்கை முழ்கும், அதை பார்த்து தூண்டிலை மேலே இழுத்தால் போதும்.தக்கையின் மெல்லிய அசைவு கூட ஏரியிலோ கிணற்றிலோ தூண்டில் போட்டு மீன் பிடிக்கும்போது தெரியும். ஆனால் பீச்சில் இந்த முறையில் மீன் பிடிக்க முடியாது.

பீச்சில் மீன் பிடிக்கவும் தேவை ஒரு தூண்டில்..இதற்கு தூண்டில் குச்சு, தக்கை எல்லாம் இருக்கவேண்டும் என்று அவசியமில்லை..நீளமான மெல்லிய ஆனால் உறுதியான நைலான் வயரில் இணைக்கப்பட்ட ஒரு துண்டில் முள்..தூண்டில் முள்ளுக்கு ஒரு மீட்டர் நீளம் விட்டு ஏதாவது நெட் அல்லது சிறிய இரும்பு துண்டை கட்டவேண்டும்.

நல்ல நீளமான கயிறு இருப்பதால் நன்கு தூக்கி வீசும்போது, இரும்பு துண்டு தரையில் விழுந்து, தூண்டில் முள் அலையின் காரணமாக மேலே எழும்பும்.அடுத்தது மீனுக்கான உணவு...பொதுவாக நிலப்பகுதிகளில் , கிணற்றில் , ஆற்றில் மீன் பிடிக்க மண் புழுவை தோண்டி எடுத்து பயன்படுத்துவோம்..அதனை தூண்டில் முள்ளில் சொருகி அதனை தண்ணீரில் போடுவோம்..கொஞ்சம் கொச கொசவென்று இருக்கும் மண் புழுவை பாதியாக கிள்ளி, அதன் உடல் பாகத்தினுள் தூண்டில் முள்ளை, முள் வெளியே தெரியாவண்ணம் சொருகி பயன்படுத்துவோம்.இது ஒரு தனி கலை.

கடல் சார்ந்த பகுதிகளில் மண் புழுவை கண்டுபிடிப்பது கடினம்...அதனால் மட்டிக்கல்..அல்லது மட்டி...அல்லது சிப்பி என்று அழைக்கப்படும் ஒன்றை உடைத்து அதன் உள்ளே இருக்கும் உயிரினத்தை தூண்டில் முள்ளில் மாட்டுவோம்..

இன்னோரு தகவலையும் சொல்லவேண்டும், வெளிநாடுகளில் உபயோகப்படுத்தும் தூண்டில் முள், ஒருவகையான சிறிய ப்ளாஸ்டிக் மீன்களை இணைத்திருப்பார்கள். அதாவது பல வண்ணங்களில் கிடைக்கும் இந்த ப்ளாஸ்டிக் மீன்களை இரையாக பயன்படுத்தலாம். மீண்டும் மீண்டும் பயன்படுத்தலாம், மட்டிக்கல்லையோ, மண்புழுவையோ தேடவேண்டிய அவசியமிருக்காது.இந்த படத்தில் மட்டி ஒன்றை காட்டியுள்ளேன்...பொதுவாக பீச்சில் இது போன்று நிறைய நீங்கள் பார்த்திருக்கலாம்..இதனை எடுத்து ஒரு கல்லில் வைத்து உடைத்தால் - அதாவது ப்ரெஷ்ஷாக இருப்பதை எடுத்து உடைக்கவேண்டும்..

ஏற்கனவே பாஸில் ஆனதை எடுத்தால் உள்ளே ஏதும் இராது..நத்தை போன்றது தான் இது, கொஞ்சம் அலை அடித்துக்கொண்டிருக்கும் இடத்தில் சென்று தமிழ்நாட்டு ஹீரோயின் மாதிரி காலால் கோலம்போட்டால் தட்டுப்படும்..

இதனை உடைத்தால் உள்ளே ஒரு சிறிய சதைப்பகுதி போன்ற ஒன்று கிடைக்கும்...அதனை அப்படியே தூண்டில் முள்ளில் மாட்டவேண்டும்..ப்ளாஸ்டிக் இரையை விட இந்த மட்டிக்கல் இன்னும் அழகாகவும், வாசனையாகவும் இருப்பதால் எளிதில் மீன் சிக்கும்.

முன்பே சொல்லியபடி தூண்டில் கயிறு மிக நீளமாக இருக்கவேண்டியது அவசியம், அதன் முனையில் ஒரு சிறிய வெயிட், இரும்பு குண்டு அல்லது சிறிய நெட், கட்டினால் சுழற்றி தூக்கி வீசுவதற்கு எளிதாக இருக்கும்.

இரையை மாட்டி, அக்கம் பக்கம் பார்த்து, தூண்டிலின் நுனியை கையில் இரண்டு சுற்று சுற்றி, தலைக்கு மேலே வெயிட்டை விர் விர் விர் என்று சுற்றி கடலை நோக்கி வீசவேண்டும்...

வீசும்போது எவ்வளவு தூரம் கடலுக்குள் போகமுடியுமோ அவ்வளவு தூரம் செல்வது நல்லது...அலை உள்வாங்கியிருக்கும் நேரத்தில் முட்டிக்கால் அளவு தண்ணீரில் நின்று வீசினால் நமது தூண்டிலின் நீளத்தை பொறுத்து அரை கிலோ மீன்கள் நடமாடும் இடம் வரை வீசமுடியும்..

இனி முக்கிய கட்டம்...

இரையை மாட்டியாச்சு, தூண்டிலை வீசியாச்சு...அப்படியே தேமே என்று நின்றிருந்தால் மீன் மாட்டாது.மேலும் மிகவும் சென்சிட்டிவ் ஆக கைகளை வைத்துக்கொள்ளவேண்டும், அலை வந்துகொண்டேயிருப்பதால் சரியாக கணிக்கவில்லை என்றால் மீன் மாட்டியதும் தெரியாது, மீன் இரையை தின்றுவிட்டு போவதும் தெரியாது...

மெல்ல இடது வலது இழுத்து, வீசிய இரும்பு குண்டின் எடை கூடியிருக்கிறதா, மீன் சிக்கியுள்ளதா என்று பார்த்துக்கொண்டேயிருக்கவேண்டும்.

மீன் மாட்டியிருப்பது போல தெரிந்தால் படுவேகமாக இழுக்கக்கூடாது...ஏன் என்றால் வேகமாக இழுத்தால் அழுத்தமான் முட்களை உடலுக்கு வெளியே கொண்டுள்ள கெளுத்தி போன்ற மீன்கள், தரையில் சிக்கி அறுந்துபோகும். அல்லது கொஞ்சம் எடை அதிகமான மீன்கள் நைலான் கயிறை அறுத்துவிட்டு சென்றுவிடுவதும் உண்டு.

மென்மையாக அதே சமயம் உறுதியாக இழுக்கவேண்டும், அந்த கலையை முழுமையாக கற்க எனக்கு ஒரு ஆண்டு பிடித்தது...இந்த கலை தெரியவில்லை என்றால் பெரிய மீன்கள் மாட்டினாலும் அவை நீரோடு போய்விடும்...இதுவரை சொன்னதை வைத்து நீங்கள் முயன்றால் அல்லது உங்கள் தூண்டில் முள் நல்ல உறுதியானதாக பெரியதாக இருந்தால் நல்ல பெரிய மீன்கள் கிடைப்பதற்கு அருமையான வாய்ப்பு,நீங்கள் இன்னும் கொஞ்சம் பழகிவிட்டால் மேலும் சிறப்பாக செய்யலாம்..

சரி அடுத்தது என்ன ? நல்லதாக நாலு மீனை தேற்றியபிறகு ? புளிச்சகாயை போட்டு குழம்பு வைக்கவேண்டியது தானே ?

அது என்ன புளிச்சகாய் மீன் குழம்பு என்று கேட்கிறீங்களா ?எங்களை மாதிரி கடல்சார் ஆசாமிகள் புளியை போட்டு மீன் குழம்பு வைத்தால் ரசிக்கமாட்டோம்...எங்கள் தமிழக தேவனாம்பட்டினம் ஏரியாவில் - அட ஆழிப்பேரலை வந்து மொத்தமாக கொண்டுபோனதே மக்களை அந்த ஏரியாதானுங்க, புளிச்சகாய் என்று ஒன்று உண்டு...

கட்டிங் ஆசாமிகள், கஞ்சா குடிக்கிகள் என்று அனைவரும் ரசிப்பது இந்த புளிச்சகாய் மற்றும் அதில் செய்யப்பட்ட மீன்குழம்பு...என்னைப்போல நல்லவர்களும் ரசித்து சாப்பிடும் இந்த புளிச்சகாய் எப்படி இருக்கும் ? பச்சையாக கொஞ்சம் கோவக்காய் போல இருக்கும்...

குழம்பில் நாலு உருண்டை புளி தரும் புளிப்பை அந்த காய் ரெண்டு போட்டால் தரும்..ஒரு தனிப்பட்ட சுவையை மீன் குழம்புக்கு தருவது புளிச்சக்காய்.இதை தனி ஒரு கட்டுரையாகவே எழுதும் அளவுக்கு ரசனையான விஷயம், இருந்தாலும் இந்த பதிவில் இவ்வளவு புளிச்சகாய் புராணம் போதும்.

கொசுறு டிப்ஸ் : மீன்களிலேயே சுவையுடைய மீன் எது ? தேங்காய் பாறை என்று ஒரு மீன் உண்டு...நான் சாப்பிட்ட மீன்களிலேயே சுவையுடையது இந்த தேங்காய்பாறை மீன் மட்டும்தான்...மீன் பிடிக்கும்போது இது அகப்பட்டால் விற்பனைக்கான மீன்களில் இருந்து மீனவர்கள் தனியாக எடுத்துவைத்துவிடும் அளவுக்கு இதன் சுவை இருக்கும். தமிழகம் பக்கம் வந்தால் மீன் கடைகளில் விசாரித்துப்பாருங்கள்.

Sunday, December 28, 2008

வேளான்மைக்கு ஒரு இணையதளம்

பிரபல பதிவர் ஓசை செல்லா செய்யும் சத்தம் இல்லாத ஒரு வேலை செய்திருக்கிறார்...இணைய இணைப்பு உள்ள விவசாயிகளை (இளா அல்ல) ஒருங்கிணைக்க வேளாண்மை டாட் காம் என்ற தளத்தை அமைத்துள்ளார்...

இப்போதைக்கு நம்ம கோவை விவசாயி வின்சென்ட் அவர்களின் பதிவுகள் இருக்கின்றன...

என்னைப்போன்ற வருங்கால விவசாயிகள் இதனைப்படித்து கொஞ்சம் மேட்டர் தேற்றிக்கொள்ளலாம்...இந்த சுட்டியை சுட்டி பார்க்கவும்..
பி.கு : தோப்பைய்யாவை தோட்டக்காரராக வைத்தால் கபீஷ் வாலை பிடிக்கலாம்...!!!

தமிழ்ஷ்க்கு ஒரு வேண்டுகோள்

ஒரு வலைப்பதிவை அல்லது சுட்டியை கொண்டுவந்து தமிழிஷில் சமர்ப்பிக்கும்போது முதலில் ப்ரிவியூ செய்துவிட்டு அதன் பிறகு சப்மிட் பட்டன் தரவேண்டியதாக உள்ளது...

இதனால் இரண்டு முறை க்ளிக் செய்யவேண்டியதாக உள்ளது, எங்களின் நேரமும் விரயமாகிறது...

மேலும் பல்வேறு வேலிடேஷன்களை ஏற்கனவே நீங்கள் வைத்துவிட்டதால் (கேட்டகிரியினை தேர்வு செய்யாமல் ப்ரிவியூ செய்யமுடியாது, தலைப்பை உள்ளீடு செய்யாமலும் ப்ரிவியூ செய்யமுடியாது போன்றவை) இந்த இடத்தில் ஒரு சப்மிட் பட்டனையும் வைத்துவிடுங்களேன்..

இதனால் நேரமும் மிச்சமாகும், அதிக சுட்டிகளை தரும் ஆர்வமும் வரும்..

உங்களுக்கு சொல்லிக்கிட்டு வேற இருக்கனுமா ? ஓட்ட குத்துங்க மக்கா !!!

கொசுறு டிப்ஸ் : மொக்கையான லிங்குகளை "Bury" என்ற பட்டனை அழுத்தி கொல்ல தயங்காதீர்கள்...

*****
****
***
**
*

முத்துக்கமலம் இணைய இதழ் ( தேனி மாவட்டம்)

முத்துக்கமலம் இணைய இதழ் விளம்பரத்தை நீண்ட நாளைக்கு பிறகு ஓப்பன் செய்த ஹாட்மெயில் கணக்கின் ஜங்க் போல்டரில் பார்த்தேன்..

பஸ்டாண்டு ஆவின் பாலகத்தின் விளம்பரம் கூட இருக்கிறது...தொலைபேசி எண்ணுடன்...

இதுபோன்ற இணைய தளங்கள் ஒவ்வொரு ஊருக்கும் வரவேண்டும், தொலை தொடர்பு / இணைய வசதி / அதன் மீதான ஆர்வம் / விழிப்புணர்ச்சி கிராமங்களையும் எட்டவேண்டும் என்பது என்னுடைய நீண்ட நாளைய ஆசை..

http://www.muthukamalam.com/homepage.htm

இங்கே க்ளிக்கி பார்வையிடலாம்...

Saturday, December 27, 2008

தமிழச்சி : இரத்த படலம் : க்கூ க்ளக்ஸ் க்ளான்...

இரத்த படலம் என்ற கதை தொடராக எஸ்.விஜயனின் லயன் காமிக்ஸில் வந்தபோது மிகவும் ரசித்து படித்தோம்...

அதில் ஜேசன் ப்ளையின் தந்தையார் மரணத்துக்கு காரணமான அமைப்பு இந்த கு க்ளக்ஸ் க்ளான்..

கிரீன் பீல்டில் இதை தானே சென்று பார்வை இழந்த பெரியர் ஹட்டாவேயின் டைரி மூலம் அறிந்துகொள்வார் ஜேசன் ப்ளை அல்லது 13.

அப்புறம் மங்கூஸ் அவரை கொல்லவருவதும் அவர் அங்கிருந்து கருப்பழகி மேஜர் ஜோன்ஸுடன் சேர்ந்து தப்பிப்பதும்...!!!

இன்னும் பசுமரத்தாணி போல மனதில் பதிந்துகொண்டுவிட்ட ஒரு விஷயம்...

இன்றைக்கு அய்ரோப்பா பெரியார் விழிப்புணர்வு கழக தோழர்.தமிழச்சி இந்த க்கூ க்ளக்ஸ் க்ளான் பற்றி எழுதியதை படித்தவுடன் பழைய நினைவுகள் பீறிட்டு கிளம்ப...

பெட்டியில் வைத்திருந்த இரத்த படலத்தில் ஏதோ ஒரு புத்தகத்தை எடுத்து படிக்க ஆரம்பிக்குமுன் ஒரு ஷார்ட் பதிவு...

சின்னக்குட்டி தேடிய பதிவுல இருந்த பதிவு !!!

ஒருவர் தொலைத்துவிட்டு தேடுகிறார் என்றால் அது எக்ஸ்பன்ஸிவாக தான் இருக்கும்...

பதிவர் சின்னக்குட்டியர் http://kundumani.blogspot.com/2008/12/blog-post_26.html இந்த பதிவை லிங்க் ஆக கொடுத்து ஒரு பதிவிட்டு அதை காலையில் இருந்து தேடியிருக்க்கிறார்...

நீங்கள் ஏன் என்ன ஏது என்று சின்னக்குட்டியரை கேட்பதை விட்டு இந்த சுட்டியை க்ளிக் செய்து அந்த பதிவுக்கே செல்லவும்...ஆனால் சின்னக்குட்டியர் ஆதரவா எதிர்ப்பா என்று ஒன்றும் தெரிந்துகொள்ள இயலவில்லை...

அங்கே ஏதோ பிரச்சினை நடக்குது போல...இந்த பதிவுடனும் செந்தழல் ரவி படம் இலவசம்...சில ஆண்டுகளுக்கு முன்னால் நான் எவ்வளவு மொக்கையாக இருந்திருக்கிறேன் என்பதை தாய்லாந்து குஜிலியோடு எடுத்த படம் உணர்த்தும்...

படம் (C) செந்தழல் ரவி ப்ளாகிங் கொம்பேனி...

திருத்திக்கொள்ளுங்கள் அறிவகம்...!!!

"முதலில் சாதிய இட ஓதுக்கீட்டை ஓழியுங்கள். சாதியும் ஓழியும்." என்று பதிவிட்டுள்ள அறிவகத்தின் மொத்த பதிவை பாருங்கள்...

ஒரு ஹை க்ளாஸ் படித்த மாதவ நிலை இப்படித்தான்...

1. பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு வேண்டும் என்று புலம்புவது
2. க்ரீமீ லேயரை நீக்கவேண்டும் என்று உளறுவது.
3. இந்தி மட்டும் படித்திருந்தால் இந்த நேரம் உத்திர பிரதேச ஆட்சியை பிடித்திருந்திருப்பேன், மும்பையில் அம்பானியாகியிருப்பேன் என்று நொந்துகொள்வது...

இந்த பதிவில் பலர் அவரை கன்வின்ஸ் செய்ய முயற்சி செய்துள்ளார்கள், தமிழ் ஓவிய பக்கம் பக்கமாக தரவுகளை கொடுத்துள்ளார்...

ஆனால் டாக்டர் புருனோ ஒரே ஒரு கேள்வி தான் கேட்டுள்ளார்...மொக்கச்சாமி வடிவேலு மின்னலை பார்த்து சொல்லும் பாணியில் "சாச்சுப்புட்டாடா மச்சான்" என்பது போல் உள்ளது...!!

இருந்தாலும் "தமிழ் ஈழத்துக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைக்க உலக தமிழர்கள் ஒன்றுபட்டு குரல் கொடுப்போம். நம்மால் முடியாவிட்டால் வேறு யாரல் முடியும்?" என்று முகப்பில் அவர் எழுதி இருப்பதை மனதார பாராட்டுகிறேன்..!!!

ஏன் குளிர் நாடுகளில் இப்படி ?????

ஏற்கனவே கோத்தன்பெர்க்கில் இருந்தபோதும் இப்படி ஆனது...இப்போது இந்த படம் மூன்று நாட்களுக்கு முன் பேருந்து நிலையத்தில் எடுக்கப்பட்டது...மால்மோவில்...இதிலும் அப்படியே ஆகியிருக்கிறது...எப்படி ? குழம்பவேண்டாம்..கரிய நிற க்ளவுஸ் அணிந்து படம் எடுத்தால் அந்த படத்தில் க்ளவுஸ் ஏதோ பளபளப்பாக விழுகிறது...

என்னுடைய சோனி சைபர்ஷாட்டிலும் சரி....இந்த படம் எடுக்கப்பட்ட நிக்கான் கூல்பிஸ்க் செமி எஸ்.எல்.ஆரிலும் சரி...இந்த பிரச்சினை...

இது ஏதோ விளம்பர முயற்சி என்று நீங்கள் எண்ணிவிட வாய்ப்பிருக்கிறது என்பதால் கொஞ்சம் ப்ளர் அடித்த இந்த படத்தையே போடுகிறேன்...

டெக்னிக்கலாக விளக்கவும்...இதுபோன்ற விடயங்களை ஆவணப்படுத்துவது நன்று....அதுவும் தமிழில்...

என்னுடைய படத்தை பெரிதாக்க அதில் க்ளிக் செய்யவேண்டாம்...குழந்தைகள் அருகில் இருந்தால் அடுத்த இரண்டு வேளை சரியாக சாப்பிடாமல் போக வாய்ப்புண்டு :)) சம்பந்திக்கு ஓட்டுறதுக்கு நல்ல வாய்ப்பு !!! நடத்தவும்...!!!

Friday, December 26, 2008

ஜெர்மோ அக்கார்டி உருக் !!!!!!!!!!

மனிதனின் மிகச்சிறந்த கண்டுபிடிப்புகளின் முதன்மையானது என்று கூறப்படுவது சக்கரம்...சக்கரத்தினை மனிதன் கண்டறிந்த பிறகு சமூகம், கலாச்சாரம் நாலுகால் பாய்ச்சலில் சென்றது...சக்கரத்தை கண்டறிந்தவர்கள் மெசபடோமியர்கள்...இவர்கள் 5000 நூற்றாண்டுகளுக்கு முன் ஈரான் - ஐரோப்பிய பகுதிகளில் வாழ்ந்தவர்கள்..மெசபடோமியா என்றால் இரண்டு ஆறுகளுக்கு இடையில் என்று பொருள்..ஆச்சர்யமாக இருக்கிறது...இந்த அறையை வாடகைக்கு எடுத்து இன்றோடு பத்து நாட்கள் வரை என்னுடைய அறையில் இவ்வளவு பெரிய பூச்சாடியும் அதில் உண்மையிலேயே வளர்ந்துகொண்டிருக்கும் ஒரு பெரிய பெரிய இலைகளையுடைய செடியையும் கவனிக்காமலேயே இருந்திருக்கிறேன்...

இவ்வளவு பெரிய வீடு ஆயிரம் ரூபாய்க்கு...என்னுடைய பணி காரணமாக இந்த வீட்டை இரு வாரத்துக்கு மட்டும் வாடகைக்கு எடுத்திருக்கிறேன்...யார் ஹவுஸ் ஓனர், அவர் பெயர் என்ன, அவர் எங்கே இருக்கிறார் என்று எந்த விஷயமும் எனக்கு தெரியாது...ப்ரோக்கர் ஒருமுறைக்கு இருமுறை உறுதி செய்துகொண்டார்...நான் இரண்டு வாரங்களுக்கு அப்புறம் இடத்தை காலிசெய்துவிடுவேன் என்பதை...

அலுவலகம் முடிந்தால் வீடு, வீட்டில் உள்ள இந்த ஒரே அறை..படுக்கையில் உட்கார்ந்தபடி மடிக்கணினி...அதில் இணணயம்...வீட்டிலேயே மாடிக்கு ஹாலில் இருந்தே படிக்கட்டு, இதுவரை போய்கூட பார்க்கவில்லை...

இன்னொன்றையும் சொல்லியாகவேண்டும்...இவ்வளவு பெரிய ஹால் இருந்து இதுவரை நான் பார்த்ததில்லை...இதிலேயே நான்கு குடும்பங்கள் நடத்தலாம் போல அவ்வளவு பெரிய ஹால்...

**************************

சரி அப்படியே இன்றைக்கு இந்த வீட்டை கொஞ்சம் பார்த்துவிடலாம் என்று கொஞ்சம் சோம்பேறித்தனமாக எழுந்தேன்...அட இதென்ன, ஹால் ஓரத்தில் இவ்வளவு பெரிய பெட்டி...பெட்டி என்றால் இதுவரை நான் பார்த்திராத அளவில் இவ்வளவு பெரிய பெட்டி...சாவி துவாரம்..பெட்டிக்குள்ளே பூட்டு அமைப்பு...

***************************

இடதுபுற அறை பூட்டிருந்தது, அதில் ஹவுஸ் ஓனரின் பொருட்கள் எல்லாம் இருக்கின்றன என்று ப்ரோக்கர் சொல்லியிருந்தார்..நாகரீகம் இல்லையென்றாலும், ஆர்வம் காரணமாக சாவித்துவாரம் வழியாக எட்டிப்பார்த்தேன்..ஆச்சர்யத்தில் ஆ என்று வாயை பிளந்தேன்...அது கிட்டத்தட்ட ஒரு கெமிஸ்ட்ரி லேப் தோற்றத்தில் இருந்தது...என்னுடைய ஹால் தான் இந்த வீட்டில் பெரியது என்றால் அந்த ஹாலை விட இந்த கெமிஸ்ட்ரி லேப் ரூம் மிகவும் பெரியதாக தெரிந்தது...

*********************************

மீண்டும் பெட்டி....வருடம் 1702 என்று முகப்பில் பெரிய வெள்ளை எழுத்துக்களால் எழுதியிருந்தது..ஆயிரத்தி எழுநூறுன்னா ? ஒன்னு ரெண்டு மூனு..மூனு நூற்றாண்டுக்கு முந்தைய பெட்டியா ? கிட்டத்தட்ட முன்னூத்தி ஆறு வருஷம்...இதில் என்ன இருக்கும் என்ற ஆர்வம் நிமிடத்துக்கு நிமிடம் அதிகமானது...

நகர்த்திப்பார்த்தேன்...இம்மி அளவு கூட நகரவில்லை..இந்த பெட்டிய எப்படி மாடி வரை எடுத்துவந்தார்கள் ? அதுவும் இந்த சின்ன வாசல் கதவில் சத்தியமாக இந்த பெட்டி நுழையாது...இதே இடத்தில் வைத்து செய்தார்களா ?

சரி சாவி இல்லாமல் எப்படி திறக்கமுடியும்...என்று மீண்டும் படுக்கையில் போய் அமர்ந்தேன்...

*********************************

அதில் என்ன இருக்கும் என்று அடிக்கடி நினைத்துக்கொண்டேன்...முன்னூறு வருட பெட்டி...தங்கம் ? வைரம் ? பழைய பாக்தாத் போர்வைகள் ? பழைய அரசர் வாள் ? இல்லை பழைய டேப்ரிக்கார்டரும் சில தட்டுமுட்டு சாமான்களும் ?

அல்லது அரசாங்கத்துக்கு சொந்தமான பொருட்கள் ? அல்லது கட்ற்கொள்ளையின் போது கொள்ளையடித்தவை ?

தலைமுடியை பிய்த்துக்கொள்ளாத குறை !!!

***********************************

ஆங் அப்புறம் இன்னொன்று சொல்ல மறந்துவிட்டேன்...இந்த அறையில் நான்கு ஓவியங்கள் இருக்கின்றன...

கேன்வாஸில் தீட்டப்பட்டு பிறகு கண்ணாடி ப்ரேம் போட்டதுபோல் இருக்கிறது...ஆனால் ஒரு ஓவியம் மட்டும் ஏதோ பெண் பெட்டியை திறப்பது போல...மற்றவை அம்புக்குறி கேள்விக்குறி மாதிரி சில ஓவியங்கள்...

ஒரு நிமிஷம்...அம்புக்குறி ? எதாவது குறியீடா ? அட...இதை எப்படி மறந்தேன்...

முதல் படத்தில் உள்ள அம்புக்குறி வலதுபுறம் பார்த்த ஒரு அம்புக்குறி ->

இரண்டாவது ஒரு கேள்விக்குறி ?

மூன்றாவது ஒரு தரையை பார்த்ததுபோன்ற ஒரு அம்புக்குறி...நான்காவது ஒரு பெண் பெட்டியை திறப்பது போன்றது...

ஷிட்...!!! ஷிட்...!!!

இது எப்படி ஸ்ட்ரைக் ஆகாம போச்சு ? பெட்டிக்கு கீழே இருக்கலாம் சாவி...!!!!

ஓடிச்சென்று பெட்டிக்கடியில் கையை விட்டு துழாவினேன்...

டேமிட் !!!! கிடைச்சுருச்சு...இவ்ளோ பெரிய சாவியா ? என்னுடைய முழங்கை நீளம்..!!! தாமதிக்காமல் விரைவாக சாவியை உள்ளீடு செய்தேன்...

*********************************

ஒரே நிமிடத்தில் என்னுடைய உற்சாகம் வடிந்துபோனது...திறக்க முடியவில்லை...என்னுடைய வலு அத்தனையும் கொடுத்து முயன்றேன்...ம்ஹும்...அசைந்து கொடுக்கவில்லை அந்த பூட்டு...

ஸ்வெட்டரை கழற்றினேன்...அதன் மூலம் சாவியை பிடித்தேன்...முழு வலுவையும் கொடுத்து சுழற்றினேன்...

க்ளப் !!! க்ரக் !!!! விர்ர்...

திறந்துவிட்டது...!!!

கொஞ்சம் என்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டு, கொஞ்சம்கூட வடிந்துபோகாத உற்சாகத்துடன் மெல்ல திறந்தேன்...

பெட்டியில் நான் பார்த்த விஷயம்..

ஆச்சர்யத்தின் எல்லைக்கே சென்றேன்...

*************************************உள்ளே ஒரு ஆள் அமர்வது போல சேர்..இடது புறம் ஏதோதோ பொத்தான்கள்...மோட்டர் போன்றதொரு விஷயம் வலதுபுறம்...ஆயில் கேன் போன்றதொரு அமைப்பு...ஆக்ஸிலேட்டர் போன்றதொரு அமைப்பு...சிறிய சிறிய எல்-இ-டி லைட்டுகள்...

அப்புறம் கால்குலேட்டர் மாதிரி ஏதோ ஒன்று இருக்கையில் கைப்பிடியில்..ஸ்பீடாமீட்டர் மாதிரி அமைப்பு முன்னால்...த டைம் மெஷின் - ஹெச்.ஜி.வெல்ஸ் என்ற ஆங்கில நாவலின் பதிப்பு ஒன்று கோக்குமாக்காக கிடந்தது...பழைய கார் ஸ்டீரிங் வீல் ஒன்று உட்காரும் சீட்டில் இருந்தது...

இது என்ன கால இயந்திரமா ? இந்த வீட்டு ஓனர் என்ன மாதிரியான ஆள் ? டைம் மெஷினை உருவாக்குகிறேன் என்று கிறுக்கு பிடித்து அலைந்தவனா ? இந்த இருக்கையில் உட்காரலாமா ? ஆயிரம் ஆயிரம் எண்ணங்கள் மனதில்...

கால இயந்திரம் என்பது சாத்தியம் இல்லை...ஒரு பருப்பொருள் ஒரு காலத்தில் இருந்து இன்னோரு காலத்திற்கு செல்ல வாய்ப்பே இல்லை என்பது போன்ற விவாதங்களை ஸ்பீல்பெர்க்கின் டைம் ட்ராவல் ஹாலிவுட் படங்களை பார்த்து எனது நன்பர் குழாமுடன் செய்திருக்கிறேன்...

நான்கே நான்கு டைமென்ஷன்கள் தான் இந்த பூமியில்...எக்ஸ், ஒய் மற்றும் இஸட் ஆகிவை மற்றும் நான்காவதாக டைம்...என்று அறியப்பட்டுள்ளது...

எந்த இயந்திரமும் ஒரு காலத்தில் இருந்து மனிதனை அடுத்த காலத்துக்கு அழைத்துசெல்லமுடியாது..என்பது தான் உண்மை...டுபாக்கூர் ஹாலிவுட் காரய்ங்க எதாவது எடுப்பாய்ங்க...அதை ஆ என்று வாயை பிளந்து ரசித்துவிட்டு வேண்டுமானால் வரலாம் என்றெல்லாம் நாங்கள் பேசிக்கொண்டிருந்ததுண்டு...

சரி இதில் உட்கார்ந்துதான் பார்ப்போமே என்று அப்படியே உள்ளே வலதுகாலை வைத்து பின் இடது காலை உள்ளே வைத்து சேரில் அமர்ந்தேன்...

பெட்டி பட்டென மூடியது....சீட் பெட்ல்ட் ஒன்று தன்னிச்சையாக என் இடுப்பை இறுக்கியது...உள்ளே பல் வண்ண விளக்குகள் எரிந்தன...

நீங்கள் இனி காணப்போவது டைமென்ஷன் ஓ என்று முன்னால் இருந்த திரையில் ஆங்கிலத்தில் எழுத்துக்கள் மின்னின...

**************************************

இருக்கையின் கைப்பிடியில் இருந்த கால்குலேட்டர் வஸ்து திடீரென்று உயிர் பெற்றது...எதாவது டைப் செய்து தான் பார்க்கலாமே என்று 5 ஆம் எண்ணை அழுத்தினேன்...

"இப்போது நீங்கள் மெசபடோமியாவுக்கு செல்கிறீர்கள்"

என்று திரையில் எழுத்துக்கள் மின்னின...

என்னது மெசபடோமியாவா ? ஹி ஹி..எட்டாப்பு ஹிஸ்டிரி புக்கை எல்லாம் நியாபகப்படுத்தாதீங்கடே...எதாவது சினிமாவுக்கு டம்மி பீஸ் செய்திருப்பானோ ? ஆர்ட் டைரக்டரா இந்த ஆளு ? எல்.இ.டி டிஸ்ப்ளே எல்லாம் பக்காவா செய்திருக்கான்...மெசபடோமியாவாம் ஹா ஹா...

மெசபடோமியா என்றால் இரண்டு ஆறுகளுக்கு நடுவில் உள்ள நகரம்

மெசபடோமியா என்றால் இரண்டு ஆறுகளுக்கு நடுவில் உள்ள நகரம்

மெசபடோமியா என்றால் இரண்டு ஆறுகளுக்கு நடுவில் உள்ள நகரம்

என்று உருப்போட்டு படித்தது நியாபகம் வந்தது...

லைட்டாக சிரித்துக்கொண்டே இருக்கையில் பெட்டி லைட்டாக இடப்புறத்தில் இருந்து வலப்புறம் நகர்வது போல தோன்றியது...

கொஞ்சம் கொஞ்சமாக நகர்வு அதிகரித்து சுழலத்தொடங்கியது......

ஊ ஊ ஊ ஊ என்று ஜெயண்ட் வீலில் பயணிப்பவன் போல வாயை பிளந்து நான் கத்தத்தொடங்கியபோது...மூர்ச்சையானேன்..

எவ்வளவு நேரம் சுழன்றது என்றும் நினைவில்லை...நான் கத்தி கத்தி ஓய்ந்துபோய் மயக்கம் வந்து உறங்கத்தொடங்கினேன்...

சுய நினைவு வந்தபோது சுழற்சி நின்றிருந்தது...

மெல்ல பெட்டியின் தலையை உயர்த்தினேன்...

நூற்றுக்கணக்கான ஈட்டிகள் கண்ணுக்கு வெகு அருகில் !!!!

சூழ்ந்து நின்றவர்கள் மெல்ல பெட்டியின் மூடியை முழுவதும் அகற்றினார்கள்...

என்னை பிடித்து வெளியே இழுத்தார்கள்...

டேய் என்னடா இது அவ்வைசண்முகி கமல் மீனா ஆஸ்ட்ரேலியா சாங்ல வர்ர காட்டுவாசி ட்ரெஸ் எல்லாம் போட்டுக்கிட்டு எத்தனை பேருடா ?

கிட்டத்தட்ட ஆயிரம் பேர்...

எல்லோர் கையிலும் ஈட்டிகள்...

அத்துனை முனைகளும் என்னையே குறி பார்த்தபடி...

ஈராக்கியர்கள் - குர்திஷ் மக்களை போல சிவந்து, மூக்கு பெரியதாக...

அய்யய்யோ, டைம் மெஷின் வேலை செய்திருச்சா ? இப்படி ஆப்பு வெக்குறமாதிரியாடா வேலை செய்யனும் ? கொடுமை கொடுமைன்னு கோயிலுக்கு போனா அங்க ரெண்டு கொடுமை ஜிங்கு ஜிங்குன்னு ஆடுச்சாம் அப்படீங்கறமாதிரி...

எக்ஸ்கியூஸ் மீ...சாரி...அது வந்து...நான்...நான்....தமிழ்நாட்டுலருந்து...டைம் மெஷின் பெட்டி...

ஓ இவனுங்க ஹிந்தி பேசுவானுங்களா ? அரே முஜே மாப் கீஜியே...மே பெட்டி சே ஜா ரஹாஹூன்...

தரதரவென்று இழுத்துப்போகிறார்கள்...பெட்டியை பத்து பேர் சேர்ந்து தூக்கிவருகிறார்கள்...

கும்பலின் தலைவன் மாதிரி இருந்தவன் சொல்கிறான்...


"அனு அசுர் குரா உது...பாபிலோன் ஷமாஷ் நிதுனா..."


பெரிய கோட்டை ஒன்று பார்வைக்கு கிடைக்கிறது...ஏராளமான ஆண்களும் பெண்களும் நிற்கிறார்கள்...ஏதோ வெளி கிரகத்து உயிரினமும் அதோட வாகனமும் வந்தமாதிரி ஏதோ கத்திக்கொண்டு என்னை இழுத்துக்கொண்டு போகிறார்கள்...

பெண்கள் அற்புதமான அழகிகள்...ரத்த பூமியிலும் இந்த கிளுகிளுப்பு போகமாட்டேங்குது பாரு என்று என்னை நானே கடிந்துகொள்கிறேன்...

எக்ஸ்கியூஸ் மீ...ஹல்லோ...நான் எதுவும் பண்ணமாட்டேன், கட்டை அவுத்து உடுங்கடா...ரொம்ப இறுக்குதுடா...ப்ளீஸ்...


ஜெர்மோ அக்கார்டி உருக்...
ஜெர்மோ அக்கார்டி உருக்...


என்னை மண்டபத்தின் மையத்தில் நிற்கவைத்துவிட்டு அந்த மாபெரும் பிரமிடு போன்ற மண்டபம் அதிர எல்லோரும் கத்துகிறார்கள்...

ஜெர்மோ அக்கார்டி உருக்...
ஜெர்மோ அக்கார்டி உருக்...


திடீரென இரண்டு பேர் வந்து சாம்பிராணி - நெருப்பை வைத்து புகை புகையாக எழுப்புகிறார்கள்...

நீண்ட வஸ்திரத்தை அணிந்த ஒருவன் - அய்யோ - ஏழடி இருப்பான் போலிருக்கு, தலையில் பெரும் கிரீடத்துடனும் கையில் இரும்பாலான ஏதோ ஒரு ஆயுதத்துடனும்...எல்லா முனைகளும் கூரான கிளாடியேட்டர் படத்தில் பார்த்தமாதிரி ஒரு ஆயுதம்...

இன்னைக்கு நம்ம கதை முடிஞ்சது...என்று நினைத்துக்கொண்டிருந்தபோது அவன் கூட்டத்தை நோக்கி கையை உயர்த்தினான்...

உருக்கியோ...உருக்கியோ...!!!

ஊசி விழுந்தால் கூட கேட்கும் அளவில் சைலன்ஸ்...!!!!

என்னை கூர்மையாக பார்த்தான்...

டேய் சண்டை போடற உடம்பில்லைடா இது....எக்ஸ்கியூஸ் மீ மிஸ்டர் ராஜா ஆப் மெசபடோமியா ? நான் வந்து இங்க வந்தது எதுக்குன்னா...நான் நான் மிஸ்டேக்கா அஞ்சாம் நம்பர அழுத்தி...

அவன் அருகில் நின்றிருந்த ஒரு பெரியவர் அவனிடம் வந்து ஏதோ சொன்னார்...

என் கட்டுகளை அவிழ்த்துவிடச்சொல்லி கட்டளையிட்டான்...

தேங்யூ பெரியவரே என்று அவரை பார்த்து சொன்னேன்...பெரியவர் விழுங்கிவிடுவது போல முறைத்தார்...

இறுக்கமான கட்டுகள் தளர்ந்தததும் நான் மெல்ல திரும்பி பார்த்தது என்னுடைய சோ கால்டு டைம் மெஷின் பெட்டியை...

கிட்டத்தட்ட ஒரு மீட்டர் தூரத்தில் அமைதியாக அமர்ந்திருந்தது...வீரர்களில் முக்கால்வாசிப்பேர் பிரமிடின் வெளியே நின்றுவிட்டார்கள்...

அரசன் பின்னால் பத்துபேர், மற்றவர்கள் அனைவரும் பத்துமீட்டர் தொலைவில்...

அப்படியே போய் ஜம்ப் பண்ணி பெட்டிக்குள்ள உட்கார்ந்து கதவை சாத்தி எதாவது நம்பர் அழுத்தினால் போதாதா...

வாசலை நோக்கி கையை உயர்த்தினேன்...குரலை உயர்த்தினேன்...

இங்க பாருங்க ராஜா...நான் இங்க உங்ககூட சண்டை போட வரலை...தெரியாத்தனமா இந்த பெட்டியில...

அவர்கள் கவனம் சில வினாடி திசைமாறியது...

அசுர வேகத்தில் பாய்ந்தேன்...

சடார் என பெட்டியை திறந்து உள்ளே இறங்கி சேரில் அமர்ந்து பெட்டியை மூட எத்தனித்தேன்...

அரசன் "ஹெதாலிக் ஹெர்மோ ஹசூனா ஹலாட்" என்று பயங்கரமாக கூவியபடி கையில் இருந்த ஆயுதத்தை வீசினான்...

அப்படியே பெட்டியை ம்ம்ஹும் என்னுடைய கழுத்தை நோக்கி அசுர வேகத்தில் வந்தது அந்த ஆயுதம்...

காலுக்கடியில் எடுத்து வைத்திருந்த ஸ்டீரிங் வீலை எடுத்து தடுத்தேன்...ஸ்டீரிங் வீல் பெட்டிக்கு வெளியே விழுந்தது...ஆயுதத்தின் ஒரு முனை என்னுடைய கட்டை விரலை பதம் பார்த்து அப்படியே கட்டை விரல் பிய்ந்து பெட்டிக்கு வெளியே விழுந்தது...பெட்டி மூடியது....விளக்குகள் எரிந்தன...

"திரும்ப வந்த இடத்துக்கே செல்க" என்று ஒரு பொத்தான் ஒளிர்ந்தது...

ஒரெ அமுக்கு அமுக்கினேன்...பிய்ந்த கட்டை விரலில் இருந்து ரத்தம் பீய்ச்சி அடித்தது...பெட்டி சுழல ஆரம்பித்தது...அப்படியே மயங்கினேன்...

****************************

அஞ்சலீ அஞ்சலீ புஷ்பாஞ்சலீ....!!!

மொபைல் ரிங் டோன் தூக்கத்தில் இருந்து எழுப்பியது.....

வணக்கம் ரவி...புத்தாண்டு வாழ்த்துக்கள்...நலமா இருக்கிறீயளே....

என்று ஈழ தமிழ் நன்பர்...ச்சே என்ன ஒரு கனவு ?

**************************

நலமாயிருக்கிறன் நன்பரே...உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்...

என்ன ரவி பேச்சு சரியில்லை ? உறங்கமோ ? தொந்தரவு தந்துவிட்டேனோ ? அழகான இலங்கை தமிழில் தொந்தரவை கூட அழகாக செய்வார்கள் நமது நன்பர்கள்..

ஹி ஹி அதெல்லாம் ஒன்றுமில்லை...அட்லீஸ்ட் நீங்களாவது தொலைபேசியில் அழைத்து வாழ்த்து சொல்கிறீர்களே ?

சரி நீங்க உறங்குங்கோ, பிறகு பேசுறன் என்று தொடர்பை துண்டிக்கிறார் நன்பர்...

சரி வணக்கம்...!!! என்றபடி தொலைபேசியினை துண்டிக்கும் எண்ட் பட்டனை அழுத்த முயலும்போது முடியவில்லை...

ஹும்...ஹும்...என்ன ஏன் அழுத்த முடியவில்லை ? கையை பார்க்கிறேன்...

என்னுடைய கட்டைவிரலை காணவில்லை !!!!!!!

*******************************
*****************************
****************************
**************************

Wednesday, December 24, 2008

வாழ்க வீரத்தளபதி ஜே.கே.ரித்திஷ்...!!!! வ.வா சங்கம் ஒழிக..ஏன் இப்படி ஒரு பதிவு என்கிறீர்களா ? இது காலத்தின் கட்டாயம்...!!!!

அந்த குழந்தை முகத்தை பாருங்கடே !!! அந்த பரந்த நெஞ்சை பாருங்கடே !!! அந்த ஸ்டைலை பாருங்கடே !!! அந்த வாக்கை பாருங்கடே !!! அந்த டாக்கை கேளுங்கடே !!!!இன்னுமா வருத்தப்படாத வாலிபர் சங்கம் அது இதுன்னு டைமை வேஸ் பண்ணுவீங்க ? வெறும் காமெடியனுக்கு போய் சங்கம் அது இதுன்னு ?பாருங்கடா...எங்க தல ஒரு ஹீரோடா...(என்ன தலன்ன அது அசீத்து மட்டும்தானா ? எங்க தல ரஜினி கமலுக்கே சவால் உட்டவருடா...அஜித் ஒரு சுண்டக்கா)...அந்த துப்பாக்கிய புடிச்சிருக்க ஸ்டைலை பாருங்கடே...அமெரிக்க சி.ஐ.ஏக்கிட்ட ப்ராக்டீஸ் எடுத்த ஜேமுசு பாண்டு புடிப்பானா அப்படி துப்பாக்கிய ? ஒரு ஸ்டில்ல காட்டுங்க...எதோ நேரா புடிச்சு சுடுவான்..இப்படி தில்லா துப்பாக்கியை சைடு வாட்டத்துல வெச்சுக்கினு நீக்க முடியுமாடே ?சின்னி ஜெயந்து ஒரு காமெடியன்...அவனை சரிக்கு சமமா உக்கார வெச்சுருக்கார் பாருடா எங்க தல..என்ன தான் மூஞ்சு க்வாட்டர் அடிச்ச குரங்கு மாதிரி இருந்தாலும் சின்னி ஜெயந்த விட எங்க தல அழகுடா...போட்டோவ பாத்து நீயே தெரிஞ்சுக்கடா..எங்க தல புகழ் பாடுடா...இந்த படத்த பாருங்கடே !!! என்ன குழப்பமா இருக்கா ? சிம்பு நயந்தாராவுக்கும் எங்க தலைக்கும் என்ன சம்பந்தம்னு ? அட இந்த போட்டோவை எடுத்ததே எங்க சிங்கம் ஜே கே ரித்திஷ்தாண்டா....( சனியன் கூகிள் சர்ச்சு இப்படி ஏன் குழப்புது )ஆடுங்கடா தலய சுத்தி, இவன் அய்யனாரு பட்டாக்கத்தி !!! கூலிங் க்ளாஸ் எல்லாம் ஆந்திரா ஹீரோஸ் தான் போடுவாங்களாம்...என்ன அந்த ஸ்டைலு அவனுங்களுக்கு எழுதி கொடுத்தாச்சா ? இந்த ஒரே ஸ்டில்லுல எல்லாத்தையும் ஒடைச்சு போட்டுட்டாருடா எங்க தல...எவண்டா அவன்...என் தலைய பார்த்து கரடின்னு சொன்னது ? ஒரு ஷேவிங்கு ரெண்டாயிரம் செலவு பண்றம்டா...உண்மையான கரடி படம் போட்டிருக்கேன்...பார்த்துக்கோங்க...கடைசியா எங்க தலையோட கொசுறு படம் இந்தாங்க...எங்க தலையை கிண்டல் செய்யும் நான் ஆதவன், மற்றும் வ.வா சங்கத்து ஆளுக்க எல்லாம் பின்னங்கால் முன்னால் இருக்கவன் பிடறியில் அடிக்க ஓடுங்க..!!! இதுக்கு மேலயும் எங்க தலையை கிண்டல் அடிப்பீங்க ?

சங்கத்துக்கு ஒரு வேண்டுகோள் : சங்கத்தின் சுவீடன் கிளை கொள்கை பரப்பு செயலாளர் பதவியை சத்தம் போடாமல் எனக்கு வழங்கவேண்டும்...கொஞ்சம் அசந்தால் வினையூக்கி அந்த பட்டத்தை பறிக்கும் வாய்ப்பு உண்டு...தாமிரா வேற ரெக்கமண்டு பண்ணியிருகார்..எனக்கு ராப்பை தெரியும்..எனக்கு கார்க்கியை தெரியும்...எதாவது பார்த்து செய்யுங்கடே..

இந்த பதிவு ஏன் சூடாகல !!!

நசரேயனின் இந்த பதிவை சூடாக்க என்னால் ஆன முயற்சி எல்லாம் எடுத்தேன்...என்ன என்ன முயற்சி என்பதை எல்லாம் விளக்கவேண்டிய தேவை இருக்காது என்று நினைக்கிறேன்...

ஆனால் பாருங்க...அந்த பதிவு சூடாகித்தொலையமாட்டேங்குது !!!

http://yesuvadian.blogspot.com/2008/12/500.html

ஒரு வேளை இந்த பதிவையும் 'அந்த' லிஸ்ட்ல சேர்த்திருந்தா ப்ளீஸ்...எடுத்து உட்டுடுங்கடே !!!

நன்றி நன்றி நன்றி !!!

Tuesday, December 23, 2008

மாயாவதி அக்கா பெட்டி கொண்டாந்தாங்களா ?

மாயாவதி அக்கா பெட்டி கொண்டாந்தாங்களா ?

சென்னை: உத்தரப் பிரதேசத்தில் ஆட்சியைப் பிடித்தது போல தமிழகத்திலும் பகுஜன் சமாஜ் கட்சி ஆட்சியைப் பிடிக்கும் என உ.பி. முதல்வரும், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவருமான மாயாவதி தெரிவித்தார்.

தெற்கில் தனது கவனத்தைத் திருப்பியுள்ள மாயாவதி நேற்று மாலை சென்னையில், நடந்த சகோதரத்துவ மாநாட்டில் கலந்து கொண்டு பேசினார்.

புனித ஜார்ஜ் பள்ளி மைதானத்தில் நடந்த இந்த கூட்டத்திற்கு, 5000 பேர் வருவார்கள் என பகுஜன் சமாஜ் கட்சி எதிர்பார்த்தது. ஆனால் அந்த அளவுக்கு கூட்டம் கூடவில்லை.

இருப்பினும் பகுஜன் சமாஜ் கட்சியினர் உற்சாகமான நிலையில் காணப்பட்டனர். மாயாவதி ஆளுயர மாலை அணிவிக்கப்பட்டது. கட்சியின் மாநில தலைவர் செல்வத்தின் மகள் அட்சயப் பிரியா, கட்சியின் குழந்தைகள் நல நிதிக்கு ரூ. 10 லட்சம் நன்கொடை அளித்தார்.

கூட்டத்தில் மாயாவதி பேசுகையில், பகுஜன் சமாஜ் கட்சி எந்த குறிப்பிட்ட சமுதாயத்திற்கும் சொந்தமானதல்ல. இது அனைத்து சமுதாயத்திற்குமான கட்சி. அனைவருக்கும் பொதுவான கட்சி. அனைவரிடத்திலும் சகோதரத்துவம் மேலோங்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் கட்சி.

உயர் ஜாதியினருக்கு நாங்கள் எதிரானவர்கள் அல்ல. உயர் ஜாதியினரும் தேவை. அவர்களின் ஆதரவும் இருந்தால்தான் அனைத்திலும் வெற்றி கிடைக்கும்.

உயர் ஜாதியில் உள்ள ஏழைகளுக்கும் இட ஒதுக்கீடு தேவை என்று மத்திய அரசுக்கு கடிதம் எழுதினேன். ஆனால் மத்திய அரசு இதுவரை பதில் அனுப்பவில்லை.

கடந்த 60 ஆண்டுகளாக காங்கிரஸும், பாஜகவும்தான் நாட்டை ஆண்டுள்ளன. ஆனால் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த அவை ஒன்றும் செய்யவில்லை. அதனால்தான் அடித்தட்டு மக்கள் இன்னும் அதே நிலையில் இருக்கிறார்கள். அனைத்து தரப்பு மக்களுக்கும் சமத்துவம் ஏற்பட வேண்டும் என பகுஜன் சமாஜ் விரும்புகிறது. இந்த எண்ணம் கொண்ட கட்சியால் மட்டுமே சமத்துவ நிலை ஏற்படும் என்பதை தமிழக மக்கள் உணர வேண்டும்.

இந்த நிலை நாடு முழுவதும் ஏற்பட வேண்டுமானால் மத்தியில் பகுஜன் சமாஜ் கட்சியின் ஆட்சி இருக்க வேண்டும். அதிகாரம் கிடைத்தால்தான் சமூக அவலங்கள விரட்டியடிக்க முடியும்.

தமிழகத்தில் அனைத்து சமூகத்தினரையும் ஒன்று சேர்க்க பகுஜன் சமாஜ் கட்சியினர் முயல வேண்டும். அனைவரிடத்திலும் சென்று நமக்கு ஆதரவு கேளுங்கள். இதற்கு மற்ற கட்சிகளிடமிருந்து எதிர்ப்புகள் வரலாம். அதையும் மீறி உங்களால் சாதிக்க முடியும். உத்தரப் பிரதேசத்தைப் போல தமிழகத்திலும் நாம் ஆட்சியைப் பிடிப்போம் என்றார் மாயாவதி.

மாயாவதியின் பேச்சில் முக்கிய அறிவிப்புகள், திட்டங்கள் எதுவும் இடம் பெறாதது தொண்டர்களை சோர்வடையச் செய்தது. மேலும், திமுக, அதிமுக குறித்தும் அவர் எதுவும் பேசவில்லை. பொதுவான முறையிலேயே அவர் பேசி விட்டுச் சென்றார். தமிழ்நாட்டுக்கென தனித் திட்டம் எதையும் அவர் அறிவிக்காததால் கட்சியினர் ஏமாற்றமடைந்தனர்.

முன்னாள் கமிஷனர் காளிமுத்து

நிகழ்ச்சியின்போது சென்னை மாநகர முன்னாள் காவல்துறை ஆணையர் காளிமுத்து, முன்னாள் அதிமுக எம்.பி. ஸ்ரீதர் ஆகியோர் பகுஜன் சமாஜ் கட்சியில் இணைந்தனர்.

நன்றி தட்ஸ்தமிழ்...

என்னோட கமெண்ட் : அதான் பதிவோட தலைப்பு :)

விஜயகோந்தை சாட்டையால் அடித்த பஹரைன் சுரேஷ்ஆனந்த விகடனில் தி.மு.க / அ.தி.மு.க ரெண்டு கட்சிக்காரங்களும் அயோக்கியர்கள் என்பது போல பேசிய விஜியகோந்துவை பகரைனில் இருந்து சுரேஷ் என்ற வாசகர் டவுசர் கிழித்துள்ளார்...

ஓவர் டு சுரேஷ்...

சுரேஷ்,பக்ரைனிலிருந்து, இக்கரையிலிருந்து அக்கரைக்கு தண்ணியிலே நீந்தி கொண்டிருப்பவனுக்கு நிச்சயம் தன்னம்பிக்கை இருக்க வேண்டும்.

ஆனால் இங்கே இந்த "மப்பு" தலைவர் வெளிப்படுத்தும் பேச்சு "நான் நீந்தவே தேவையில்லை சும்மா மூழ்கினாலே போதும் இந்த மனித தெய்வங்கள் (இவருக்கு வாக்கப்பளிப்பவர்கள் மட்டுமாம்) என்னை கரையேற்றி விடுவார்கள்" என்று ஆகம்பாவ பேச்சு பேசுகிறார்.

இவர் மற்றவர்களை கொள்ளைக்காரர்கள் என்றும் ஊழல்வாதிகள் என்றும் சொல்வதை சரி என்று வைத்து கொள்வோம்.

அதே வேளையில் இவர் தன்னை உத்தமன் என்றும் தன்னுடன் இருக்கும் "முன்னாள் கொள்ளைக்காரர்களுக்கு" நான் புனிதநீர் தெளித்து அவர்களை சுத்தமாக்கி விட்டேன் என்றும் சொல்வதற்கு முன் சில உண்மைகளையும் இவர் வெளியிட வேண்டும்.

இவர் தான் மட்டுமே நேர்மையானவர் தன் கட்சி மட்டுமே புனிதமான கட்சி என்பதாலேயே சில கேள்விகளை வைக்கிறேன்.

1) மு.க & ஜெ இருவருமே கொள்ளையர்கள் என்று சொல்கிறிர்கள். ஆனால் இதே மு.க_வின் காலடியில் நீங்கள் கிடந்ததும் அவரை தன்னுடைய தலைவர் என்று நீங்கள் அறிவித்து அவருடைய தலைமையிலேயே திருமணம் கட்டி கொண்டதும் அனைவரும் அறிந்ததே.

அப்போது உங்களை கருப்பு எம்.ஜி.ஆர் என்று உங்களை சொல்லி கொள்ளாதது ஏன்?

ஒருவேளை அப்போதிருந்த மு.க_ வேறு இப்போதிருக்கும் மு.க_தான் ஊழல்வாதி என்று உங்கள் பதில் வருமாயின், மக்களாகிய நாங்கள் உங்களை மட்டும் எப்படி நம்ப முடியும்?

இப்போதிருக்கும் வி.காந்த் நாளை வேறு வி.காந்த் ஆக மாற மாட்டார் என்பதற்கு என்ன உத்திரவாதம்?

என்னுடைய அடுத்த கேள்வியும் இதை சம்பந்தப்படுத்திதான்.

2) நீங்கள் சொல்வது போல் நீங்களொருவரே நேர்மையானவர் என்றால் நீங்கள் இதுவரை நடித்த படங்களுக்கு வாங்கிய உண்மையான சம்பளத்தை கருப்பு பணத்தில் வாங்கியதே இல்லையா?

நீங்கள் வாங்கிய சம்பளம் அனைத்திற்க்கும் முறையான வருமான வரி செலுத்தியதுண்டா?

அதுப்பற்றிய தெளிவான அறிக்கையை தகுந்த சான்றிதழ்களுடன் வெளியிட்டு உங்களை நேர்மையானவரால காட்டலாமே அது உங்களால் முடியுமா?

3) கட்சி தொடங்கப்பட்டவுடன் இருந்த உங்களுடைய சொத்துக்களின் விபரங்களை மக்கள் பார்வைக்கு வைக்கமுடியுமா?

அதே போல் உங்கள் குடும்பத்தார் மற்றும் உங்கள் கட்சியினரின் சொத்து விபரங்களை வெளியிட முடியுமா?


4) தனிமனித ஒழுக்கம் என்பது ஒரு குடும்பத்தின் தலைவனுக்கே அவசியம் என்கிற போது ஒரு கட்சியின் தலைவருக்கு அது மிகமிக அவசியமாகி விடுகிறது அவ்வகையில் உங்களை பற்றி எழுப்பப்படும் "ஒழுக்க" கேள்விகளுக்கான உண்மையான பதிலை வெளிப்படையாக தரமுடியுமா?

5)மக்களின் வாழ்க்கையை சீர்குலைக்கும் மது, சூதாட்டம் போன்ற முக்கிய பிரசினைகளில் உங்களின் முடிவு என்ன? அவை ஒழிக்கப்பட வேண்டும் என்பது உங்கள் பதிலாயின் ஏன் உங்களின் "லீ கிளப்" என்ற ஹோட்டலில் இன்னும் இந்த வியாபாரத்தை செய்து வருகிறீர்கள் என்பதை சொல்லுங்கள்?

6) அக்பருக்கு பின் அவர் வாரிசு என்ற மொகலாய வாரிசு அரசியலை நீங்கள் எதிர்க்கிறீர்கள் என்றால் ஏன் இப்போதே உங்கள் மொத்த குடும்பமும் கட்சியை குத்தகைக்கு எடுத்துள்ளது என்பதை சொல்வீர்களா?

7) தொடக்ககாலத்தில் மற்றவர்கள் நடத்திய மாநாடுகளையும் ஆர்பாட்டங்களையும் வீண் ஆடம்பர செலவுகள் என்றும் மக்களுக்கு பிரசினையை ஏற்படுத்தும் விஷயங்கள் என்றும் விமர்சித்த நீங்கள் இப்போது அதே போல் மாநாடுகளையும் ஆர்பாட்டங்களையும் ஏன் செய்கிறீர்கள்?

8) "புரட்சி" "அதிரடி" என்றெல்லாம் முழங்கும் நீங்கள் ஏன் உங்கள் வேட்பாளரை மற்ற கட்சிகளை போல் அந்த பகுதியிலுள்ள பெருன்பான்மை சாதியினரின் ஒட்டின் அடிப்படையிலேயே தேர்தெடுக்கிறிர்கள்?

தைரியமிருந்தால் வேற்று சாதியினரை தேர்ந்தெடுத்து நிற்க வைப்பீர்களா?

9) ஈழத்தமிழர்களுக்கு தனி ஈழம் கிட்டும் வரை பிறந்தநாள் கொண்டாட மாட்டேன் என்ற நீங்கள் இப்போது மாறியது ஏன்?

தனியீழம் கிட்டி விட்டதா?

ஈழத்தமிழர் பிரசினையை பற்றிய தெளிவான பதிலை இப்போதெல்லாம் தருவதில்லையே அது ஏன்?

இப்போது வறுமை ஒழிப்பு தினமென அறிவித்து பிறந்தநாளை கொண்டாடுவதை எப்போது நிறுத்துவீர்கள்? வறுமையை எப்போது ஒழிப்பீர்கள்? எப்படி ஒழிப்பீர்கள்?

10) கல்வி பற்றிய உங்கள் சிந்தனை என்ன? உங்கள் பொறியியல் கல்லூரியில் வெறும் கல்வி கட்டணம் மட்டும் தான் வாங்கிகீறீர்களா?

11) "நான் ஆட்சிக்கு வந்தால் மின்சார பிரசினையை ஒழிப்பேன் அதற்கான மந்திர கோல் என்னிடம் உள்ளது" அதை இப்போது வெளியில் சொன்னால் மற்றவர்கள் செய்து பேர் வாங்கி விடுவார்கள் என்று சொல்லும் மோடி மஸ்தான் பேச்சுக்களை விட்டுவிட்டு, நாட்டின் முன்னேற்றத்திற்காக கல்வி,அடிப்படை கட்டுமானம்,நிதி,விவசாயம்,தொழில் போன்றவற்றில் உங்கள் திட்டங்கள் என்ன என்பதை மக்கள் பார்வைக்கு வைக்கலாமே?

12) மகளிரை முன்னிலைப்படுத்த வேண்டும் என்பதை உங்கள் மனைவியை முன்னிலைப்படுத்தவே என்கிற விமர்சனம் இருக்கிறது அது உண்மையில்லை எனில் உங்கள் கட்சி வேட்பாளர் பட்டியலில் 234 தொகுதிகளில் 76 பெண் வேட்பாளர்களை உங்களால் அறிவிக்க முடியுமா?

மேலே கேட்கப்பட்டுள்ள கேள்விகள் மிகமிக சிலதான். இன்னும் பல கேள்விகள் உண்டு. அதற்கான பதில்கள் உங்களிடம் இருந்து வர வாய்ப்பில்லை இருக்கிற கொள்ளியிலே எந்த கொள்ளி நல்ல கொள்ளி என்கிற நிலையில்தான் மக்கள் உங்கள் கட்சிக்கு ஆதரவு தருகிறார்கள்..

ஆனால் அதற்காக உங்களை மட்டுமே "உத்தமன்" "புனிதன்" நேர்மையானவன்" என்றெல்லாம் சொல்லி கொண்டு அலைவீர்களாயின், அதற்கு முன் மேலே கேட்கப்பட்டவைகளுக்கு "தெளிவான" பதில் தர முடியுமா?

உண்பதற்க்கு காகிதம் கிட்ட வேண்டுமென்றால் இன்றைக்கு கழுதை கூட நாட்டை முன்னேற்ற பாடுபடுவேன் என்று சத்தியம் செய்யும் அதற்காகவெல்லாம் ஒட்டளிப்பது என்றாகி விட்டால் நம் நிலை கழுதையை போல் பொதி சுமக்கும் நிலைக்கே தள்ளப்படுவோம்.

**************************

ஹேட்ஸ் ஆப் சுரேஷ்...!!!! ஆனால் இன்றைய நிலையில் அரசியல் அனாதைகளுக்கு அடைக்கலம் தரும் ஒரே கம்பெனி விஜியகோந்து கம்பெனி மட்டுமே !!! குடிகார கருப்பு எம்ஜியாரை நோக்கி நல்ல கேள்விகள்...

இன்னோரு கொசுறு : மலையாள நடிகர் மோகன்லாலுக்கு இந்திய ராணுவம் சிறப்பு லெப்டினெண்ட் ஜெனரல் என்ற பதவியை வழங்கி கவுரவித்திருக்கிறதாம்...காரணம் அவர் ரெண்டு மூனு ராணுவ படங்களில் நடித்து ராணுவத்தின் சிறப்பை பொது மக்களுக்கு தெரிவித்தாராம்..

டேய் உங்களுக்கெல்லாம் கண்ணு என்ன பொடனியிலயா இருக்கு ? எங்க விஜயகோந்து இதுவரைக்கு தமிழ்ல பேசி திருத்தின தீவிரவாதிங்க எண்ணிக்கை மூவாயிரத்து முன்னூத்து பதினைஞ்சு, அதுல ஆம்பளை தீவிரவாதிங்க ரெண்டாயிரத்து நாப்பத்தஞ்சு...ச்சே...

முட்டிக்கால் வரைக்கும் தண்ணி இருக்க அந்த வழக்கமான டன்னல்ல இதுவரைக்கும் நானூத்து சொச்ச தீவிரவாதிங்களை சொழட்டி சொழட்டி அடிச்சாரேடா எங்க கேப்டன்...

என்ன வடிவேலுக்கிட்ட தான் கொஞ்சம் டவுசர் கழண்டுபோச்சு...

மீனவனா இருந்தப்ப கூட காஷ்மீருக்கு ரஞ்சிதா கூட போயி மன்சூர் அலிகானை முறியடிச்சாரேடே...இவருக்கு ஒரு பதவி குடுங்கடே !!!!

Monday, December 22, 2008

களப்பிரன்எங்கோ ஒரு புரவி கனைக்கும் சப்தம் !!!

வடக்குத்தெருவில் வெளித்திண்ணையில் அமர்ந்திருந்த இரு ஸ்ரீவைஷ்ணவர்கள் பேசிக்கொள்வதை நீங்களும்தான் கேளுங்களேன்...

இந்த களப்பிரன் நரசிம்மனின் ஆட்சிக்கு என்றுதான் ஒரு முடிவு வருமோ ? நமது ஆச்சாரியாரை ஊரறிய வெட்டி வீழ்த்தினானே ? ஸ்ரீவைஷ்ணவம் என்று பேச்சை எடுத்தாலே மூச்சை நிறுத்திவிடுகிறானே...

மெதுவாக பேசும் அய்யா...நாடெங்கும் அவனது ஒற்றர்கள் நிறைந்திருக்கும் காலமிது...

அவன் காதுக்கும் நாம் அவனைப்பற்றி பேசுவது சென்றால் நமது தலைகள் தரையில் உருளும் என்பதை நினைவில் கொள்ளும்...

அட இந்த நேரத்தில் அவனைப்போலவே அவனது ஒற்றர்களும் சம்போகத்திலும் மதுபோதையிலும் சுகித்திருப்பார்கள்..

கண்ணிப்பெண்கள் நிம்மதியாக தெருவில் கூட தண்ணீர் எடுக்க நடமாட முடிவதில்லை அய்யா, அந்த ரங்கநாதன் என்றைக்குத்தான் நமது குரலுக்கு செவி சாய்ப்பானோ தெரியவில்லை...


************

அடுத்தநாள் அதிகாலை சூரியன் சோம்பலாக விழித்தெழும் நேரம்...மூன்று புரவிகள் அந்த வீட்டின் வாசலில் வந்து நிற்கின்றன..

அதிகாரக்குரல் ஒன்று பூமி அதிர எழுகிறது..

ஏய் யாரங்கே !!! வெளியே வா...

இந்த வீட்டில் நேற்று இருந்த இரண்டு ஸ்ரீவைஷ்ணவர்கள் எங்கே ? மன்னரை பற்றியா புறம் பேசுகிறீர்கள் ? உங்களுக்கு சரியான பாடம் புகட்டவே இங்கு வந்துள்ளோம்...

முதிர்ந்த பெண் ஒருவர் வெளியே ஓடி வருகிறார்.

"அய்யா அவர்கள் என்னுடைய பிள்ளைகள் தாம் அவர்களை விட்டுவிடுங்கள்..."

எங்கே அந்த பேடிகள் ? அவர்கள் வீட்டில் இருந்துகொண்டு பெண்ணை அனுப்புகிறார்களா ?

வெளியே வந்த இருவரும் கூனிக்குறுகி நிற்கிறார்கள்...

அய்யா மன்னித்துவிடுங்கள், அரசரிடம் எங்களை அழைத்துப்போங்கள்...நாங்கள் அவரிடம் விளக்கம் சொல்கிறோம்...

மெல்ல முதல் புரவியில் இருந்த வீரன் வாளை உருவுகிறான்...

உங்களை மன்னிக்கும் அதிகாரம் பெற்ற அரசனே வாளை உருவிவிட்டான் ஆஹ்ஹா ஹா என்று அதிகார மமதையில் சிரித்தபடி தான் அணிந்திருந்த முகமூடியை விலக்குகிறான் நரசிம்மன்...

எளியோருக்கு சிம்ம சொப்பனமாக இருக்கும் அவன் வாள் அந்த இரு ஸ்ரீவைஷ்ணவர்களின் உயிரை குடிக்கிறது...தலைகள் தரையில் உருளுகின்றன...

என்ன கந்தா, உன்னுடைய ஒற்றுத்தகவல் இன்றைக்கு என் வாளுக்கு தீனி போட்டுவிட்டது, நாளைக்கும் நல்ல தகவலோடு வா...ஹா ஹா !!!

மன்னர் மன்னா...தங்கள் சித்தம் என் பாக்கியம்...!!!!

******************

புரவிகள் திரும்புகின்றன...

அதிகாலை நேரத்தின் அமைதியை குலைத்துக்கொண்டு மெல்ல வடக்கு வீதியில் நடைபோடுகிறான் நரசிம்மன்...தண்ணீர் குடத்தை தலையில் வைத்தபடி காலையில் எழுந்த கதிரவனை மாலையில் மறைத்து எழும் முழு நிலவை ஒத்த முகத்துடையாள், பிரம்மனே நமது படைப்பில் இப்படி ஒரு நிறைமதியா என்று வியந்து போகவைக்கும் அதரங்களை உடைய பொன்னி எதிரில் வருகிறாள்...

அவள் மனதிலோ கிழக்கு வீதியில் வசிக்கும் மாறன் இன்றைக்கும் புரவியில் அலுவல் பணிக்காக காலை நேரத்தில் செல்வானா ? அவன் தோள்களில் சாயும் நாள் எந்நாளோ என்று எண்ணங்கள் ஊஞ்சலாடுகின்றன...

வழியில் மூன்று புரவிகள் அவளை கடந்துபோகின்றன...அவள் காந்த விழிகளை ஏறெடுத்து ஆர்வமாக பார்க்கிறாள்...

ஹும் மாறன் இன்றைக்கு எதிரில் வரவில்லை...ஆனால் யார் இவர்கள் இந்த நேரத்தில் இவர்களை பார்த்ததில்லையே என்று எண்ணமிட்டவடியே பாதையை விட்டு ஒதுங்கி நிற்கிறாள்...

அவளை கடந்துபோகும் புரவிகளில் இருந்து இரு விழிகள் அவளை விழுங்கிவிடுவது போல் பார்க்கின்றன...

கந்தனை நோக்கி திரும்புகிறான் நரசிம்மன்...

கந்தா...உன்னை நான் தண்டிக்கப்போகிறேன்...

மன்னா !!!!

அரண்மனையில் இருந்து கூப்பிடு தூரத்தில் இருக்கும் இந்த பேரழகியை என் அந்தப்புரத்துக்கு இன்னும் கொண்டுவராத உன்னை தண்டிக்கத்தான் வேண்டும்...பரவாயில்லை...இன்று இவளை என் மஞ்சத்தில் கிடத்துவது உன் பணி..

ஆகட்டும் மன்னா...

சரி இப்போது சொல்...யார் இவள்...

கடந்த ஆண்டு உங்களுக்கு சரியான தாது புஷ்டி லேகியம் தயாரிக்காமல் தன்னுடைய உயிரை உங்கள் வாளின் முனையில் தொலைத்த வைத்தியன் ஒருவனின் மகள் மன்னா இவள்...

சென்ற ஆண்டு தான் பூப்பெய்தினாள்...அதற்குள் அபார வளர்ச்சி...அற்புதமான அழகியாகிவிட்டாள் மன்னா...இப்போது தன்னுடைய பாட்டியுடன் வசித்து வருகிறாள்...

போதும் போதும்...அதிகம் பேச்சு வேண்டாம்...அவளை முதலில் சென்று தூக்கி வந்து அந்தப்புரத்து தாதிகளை கொண்டு அலங்கரிக்கச்சொல்...அழகை ஆராதிக்க தாமதம் காட்டுவதில்லை நான்...ஹா ஹா ஹா, வெடிச்சிரிப்புடன் புரவியை செலுத்தினான் நரசிம்மன்....

*************************

பளார் என்ற அறை விழுகிறது !!! அறைந்தவள் தாதி.

ஏண்டி, அலங்காரம் செஞ்சுக்கிடுன்னா மறுக்கிறே ? திமிரா ? அரசனின் படுக்கையில் உன்னுடைய திமிர் எல்லாம் அடங்கிவிடும்...

மேலும் இரண்டு பெண்டிர் அவளது கைகளை பிடித்துக்கொள்ள அவள் விருப்பம் இன்றி வைரங்கள் பதித்த வளையல்கள் அவளது மெல்லிய கரங்களில் நுழைகின்றன...

ம்ம்ம் முடிந்தது...இழுத்துச்செல்லுங்கள் இவளை மன்னரின் படுக்கைக்கு...இவளோடு இணைந்து இந்த ஆண்டிலேயே பதினேழு ராணிகள்...ஹும்...என்று கனைத்தபடி ஆணை இருகிறாள் தாதி..

*************************

மன்னா, அழைத்துவந்துவிட்டோம்...

வெளியில் இருந்து குரலை உயர்த்துகிறான் மாயன்...

மாயா, உள்ளே அனுப்பிவிடு, நீ வெளியிலேயே காத்திரு...சென்ற வாரம் ஒத்துழைக்காத ஒருத்தியின் பிணத்தை அப்புறப்படுத்திய சம்பவத்தை சொன்னாய் அல்லவா இவளிடம்...

உள்ளே தள்ளப்படுகிறாள் பொன்னி...

ஆஹா என்ன ஒரு அழகு...இவ்வளவு காலம் உன்னைப்பாராமலே இருந்துவிட்டேனே...அழகி...உன்னை செதுக்கிய உன் தந்தையை நான் கொன்றதால் அச்சம் வேண்டாம்...

நான் அழகை ஆராதிப்பவன்...ஒத்துழைப்பு கொடுத்தால் நீ அந்தப்புரத்தில் அரசியாகலாம்...என்ன சொல்கிறாய்...

கள்வெறியுடனும் காம வெறியுடனும் இரையை கொள்ளும் ஓநாய் போல நெருங்குகிறான் நரசிம்மன்...

பொன்னி முதல் முறையாக தன் மெல்லிய உதடுகளை திறந்து பேசினாள்..

மன்னர் மன்னா...நான் உங்கள் எதிரில் நடனம் ஆட விரும்புகிறேன்...!!!

***********************

ஆஹா ஆஹா...அற்புதம்...ஏய் மாயா....நமது புதிய அரசியாரை பார்...இவர் தான் இனி மஹாராணி...மற்றவர்களை எல்லாம் அந்தப்புரத்தில் இருந்து துரத்திவிடு...

ஆகட்டும் மன்னா...

அப்புறம், கூப்பிடு அந்த நட்டுவாங்கம் வாசிப்பவளை...உன் புதிய ராணியார் நடனம் ஆடப்போகிறாள்...ஹா ஹா !!!

மன்னா...

சொல் எண் கண்ணே !!!

என்னுடைய இல்லத்தில் நான் வளர்த்துவரும் கொய்யாப்பழங்களை உங்களுக்கு சமர்ப்பணம் செய்ய விரும்புகிறேன்...அவை அற்புதமான சுவையுடையவை...

யாரங்கே...வந்தேன் மன்னர் மன்னா...

வடக்கு வீதியில் இருக்கும் இவள் வீட்டில் சென்று கொய்யாப்பழங்களை பறித்துவா !!!

நட்டுவாங்கத்தை வைத்துக்கொண்டு ஏன் அங்கே நிற்கிறாய்...வந்து இசை...இவள் ஆடட்டும்...என் மஞ்சத்தை அலங்கரிக்க முதல் முறை வந்த எந்த பெண்ணிற்கும் இல்லாத பண்பு இவளிடம் உண்டு...அலறி துடிக்கும் மற்றவர்கள் எங்கே, என்னை ஆடி மகிழ்விக்க விரும்பும் இவள் எங்கே ஹா ஹா ஹா...

மென்மையாக பாதங்களை எடுத்துவைத்து பொன்னி ஆட ஆரம்பிக்கிறாள்...

அற்புதமான அதரங்களை அசைத்து தேவ கன்னிகையை போல ஆட ஆரம்பிக்கிறாள்...

சின்னக்குரலில் பாடலும் அவளிடமிருந்து எழும்புகிறது...

காத்திருந்தேன் என் அன்பே
வருவாயா
உயிர் தருவாயா


மன்னா...பழங்கள் வந்துவிட்டன...

அப்படி வைத்துவிட்டுப்போ...

சுற்றி சுழன்று ஆடியபடி அந்த பழங்களில் ஒன்றை எடுக்கிறாள் பொன்னி...

ஏய் நட்டுவாங்கம், வெளியே போ...போதும் என்னவள் ஆடியது...எனது பித்தத்தை தலைக்கேற வைத்துவிட்டாள்...

வளைக்கிறது அவனது முரட்டுக்கரம் அவளது மெல்லிய இடையை !!! பருந்து ஒரு கோழிக்குஞ்சை அழுத்துவதுபோல...

********************************

மன்னா, இந்தாருங்கள் இந்த பழத்தை ஒருமுறை சுவையுங்கள்...

உன் இதழ்களை தா, அதில் அமுதம் பருகிவிட்டு இந்த கனியை சுவைக்கிறேன்...

சினுங்குகிறாள் பொன்னி...

சுவையுங்கள் மன்னா...

சரி உன் சித்தப்படி...

அவளை இரண்டு கண்களால் பருகியபடி கடிக்கின்றான் கொய்யாப்பழத்தை...

********************************

கண்கள் பூக்கின்றன...தலை கிறுகிறுக்கிறது...

ஏய் என்ன பழம் இது...

இடையில் இருந்து தளர்ந்த அவன் கைகளை விலக்கியபடி சற்று தொலைவு சென்று பின் திரும்பி அவனை பார்வையால் எரிக்கிறாள் பொன்னி...உனக்காகவே தயாரிக்கப்பட்ட பழம்...வேரில் ராஜ நாக சர்ப்பத்தின் விஷத்தை துளித்துளியாக விட்டு என் தந்தையார் தயாரித்த பழம்..உன் கொடுங்கோல் ஆட்சிக்கு முடிவு கட்ட எண்ணியிருந்த அவரை உன் வாள் பதம் பார்த்தது....

நரசிம்மனின் உடலில் நீலம் பாரிக்கிறது, வாயில் வெண்ணிற நுரை...

"அய்யோ மன்னருக்கு என்னவோ ஆகிவிட்டது மாயன் அண்ணே வந்து பாருங்களேன்..."

இதோ வந்துவிட்டேன் அரசி !!!! தலை குனிந்தபடி மாயனும், புதிய காவல் தலைவன் மாறனும் உள்ளே நுழைகிறார்கள்...!!!

*****************************************

அய்யோ சொக்கா சொக்கா எனக்கே பரிசு

எட்டாம் வகுப்பு படிக்கும்போது ( புனித வளனார் மஞ்சக்குப்பம் கடலூர் பள்ளியில் ) ஒரு உள்விடுதி ஆண்டுவிழாவுக்கு ஒரு கதைப்போட்டி வெச்சாங்க...

அதில் இரண்டாம் பரிசு...ஒரு டார்ச் லைட் கொடுத்தாங்க...

கதையோட பேரு "ஏமாந்த எள்ளுருண்டை". தலைப்பு என்னோட கற்பனைதான், ஆனா எங்கியோ படிச்ச ஒரு - சாமியார் எள்ளுருண்டைக்காக தடியால் நையப்புடைக்கப்படும் கதையை - என்னோட பாணியில அடிச்சுவிட்டேன்...

அதுல ஆரம்பிச்சது இந்த கதை எழுதுற கொலைவெறி...

சிறில் அலெக்ஸ் அறிவியல் புனைக்கதை போட்டி வெச்சப்போ ஒரு மொக்கை கதையை எழுதி அனுப்பியபோது அவரை சாட்டில் பிடித்தேன்...

நான் : சார் கதை எப்படி இருக்கு ?
சிறில் : த்தூ ரொம்ப கேவலமா இருக்கு..
நான் : ஹி ஹி..

அந்த கதைக்கான சுட்டி கடிகாரம் ( அறிவியல் புனைக்கதை - சிறில் அலெக்ஸ் போட்டிக்கு )

கடைசியில் ஒரு கொடுமை என்ன என்றால் அறிவியல் புனைவுக்கு சம்பந்தம் இல்லாத ஒரு கதையை முதல் பரிசுக்கு - ஜெயமோகனே தேர்ந்தெடுத்துள்ளார்...சிறில் அலெக்ஸ் ஏன் இதை ஜெயமோகன் சாருக்கு அனுப்பினார் ? அவர் உண்மையில் அந்த கதையை படித்தாரா இல்லையா ? என்பது போன்ற கேள்விகள் இருந்தாலும், ஜெயமோகன் சார் தேர்ந்தெடுத்த கதை ஒரு மொக்கையோ மொக்கை...!!!

கம்மிங் பேக் டு த பாய்ண்ட் !!

மாதங்கி மட்டும் வந்து ஒரே ஒரு கமெண்டை போட்டு நல்லாருக்குன்னாங்க...( ஒரு வேளை அவங்களோட மொக்கைப்பதிவுக்கு நான் எதாவது பின்னூட்டம் போட்டிருப்பேன்...மொய் வெக்க வந்திருக்கலாம் ஹி ஹி )

என்னுடை முந்தைய பதிவு, ஆழி பதிப்பகத்துக்கான ஒரு அறிவியல் புனைக்கதை...அதனை படித்துவிட்டு நல்லாருக்கு என்று சொன்ன அனைவருக்கும் நன்றி...

அப்போது தான் சென்ஷி கேட்கிறார், சிறில் அலெக்ஸ் அறிவுறுத்துகிறார்...நானும் பதிப்பகத்தின் அறிவுறுத்தல்களில் பார்க்கிறேன்...

கதையை அவர்களின் மின்னஞ்சலுக்கு பிடிஎப் கோப்பாகவோ அல்லது ஆர்.டி.எப் கோப்பாகவோ அனுப்பவேண்டுமாம்...( இதுக்கு யாராவது உதவி செய்ங்களேன்)

வலைப்பதிவில் வெளியிடக்கூடாதாம்...ஜனவரி 15 முடிவு தெரியுமாம்...

இதில் ஒரு மேட்டர் என்னவென்றால் முதல் பரிசு கெலிக்க முடியாது போனாலும் ஐரோப்பிய கண்டத்துக்கு சிறப்பு பரிசுக்கான போட்டி மிகவும் குறைவு...வேற யாரு, நம்ம ஜெனி'வினையூக்கி தான்...

அதனால் பதிவை நீக்கிவிட்டேன் ( ட்ராப்ட்ல வெச்சிருக்கேன்)....

படித்துவிட்டு பாராட்டிய அனைவருக்கும் நன்றிகள் பல !!!!!!!!

ஒரு கொலை ராகம்...!!!


மணடல பொறியியல் கல்லூரி மிண்ணனுவியல் துறை - 1992-1994


மண்டல பொறியில் கல்லூரியில் என்னுடைய பேட்ச் மாணவர்களில் நல்ல "மண்டை" யார் என்றால் எல்லோரும் கை காட்டுவது மணிவண்ணனாகத்தான் இருக்கும்...அவன் என்னுடைய அறை நண்பன் என்பதில் எனக்கு இன்றைக்கும் பெருமைதான்..

மண்டை என்றவுடன் மூலையில் உட்கார்ந்து பெரிய பெரிய புத்தகங்களை எப்போதும் மனப்பாடம் செய்துகொண்டிருக்கும் ஒரு "பழம்" உங்கள் சிந்தனையில் வந்து உட்கார்ந்தால்...சாரி...நீங்கள் தவறு செய்கிறீர்கள்...

எங்களோடு சேர்ந்து ஹாட் அடிப்பான்...கிங்ஸ் அடிப்பான்...வாந்தி எடுப்பான்...சைட் அடிப்பான்..லெட்டர் கொடுப்பான்..ஆனால் பாழாப்போன தேர்வுகள் வந்தால் அன்றைக்கு இரவு மட்டும் சல்லீசாக கிடைக்கும் வில்ஸ் ஸ்மால் ரெண்டு பாக்கெட் - பத்து சிகரெட் மூன்று ரூபாய் - வாங்கிக்கொண்டு மாடியில் உள்ள தனியறையில் ஒரு நிமிடம் கூட உறங்காமல் படிப்பான்..

எங்கள் கல்லுரியில் முதல்வர் ஒரு திட்டத்தை அறிமுகம் செய்திருந்தார். அதாவது முதல் ஆண்டு சேரும்போது ரூபாய் ஐந்தாயிரம் கேப்பிடேஷன் பீஸ் ஆக பெறப்படும். நான்கு ஆண்டுகளும் எந்த பாடத்திலும் சொம்பு வாங்காமல் - அதாவது அரியர்ஸ் வைக்காமல் இருந்தால் - அந்த ஐந்தாயிரம் ரூபாய் திருப்பி தரப்படும். பத்தாயிரமாக.

எங்கள் செட்டிலேயே அந்த தொகையை வாங்கிய ஒரே ஒரு ஆள் மணி. எல்லா பாடத்திலும் 75 மதிப்பெண்களுக்கு மேல். இறுதிவரை..

என்ன ஒரு மணிப்புராணமாக இருக்கிறதே என்று பார்க்கிறீர்களா ? ஆமாம். கல்லூரி முதல் ஆண்டில் முதல் நாள் பாடசாலையில் என்னுடைய பக்கத்தில் வந்து அமர்ந்தவன் மணி. தலை கொஞ்சம் கோக்குமாக்காக - எண்ணையோ ஷாம்போ எதுவும் மாதக்கணக்கில் பார்க்காமல் இருந்த - லைட்டாக செம்பட்டையான - தலை. சற்றே கரகரப்பான ஆனால் கணீரென்ற குரல்.

அதிகம் பேசவில்லை. கொஞ்சம் தொந்தரவு செய்து விசாரித்ததில் அவனுடைய தந்தையார் அமெரிக்காவில் பணிபுரிந்தவர். இவன் அங்கேயே படித்துள்ளான். அம்மா இல்லை இவனுக்கு..இவன் ஏதோ விபத்தில் சிக்கியுள்ளான். இவனுடைய தந்தையார் அங்கேயே சிறிதுகாலம் வைத்தியம் பார்த்துள்ளார்.

பிறகு தன்னுடைய பணியில் இருந்து நிரந்தர விடுப்பு பெற்று கொடைக்கானலில் வைத்து இரண்டு வருடம் இவனை பராமரித்துள்ளார்..பிறகு அவரும் நோய்வாய்ப்பட்டுள்ளார். அவர் அங்கேயே இருக்க, இவனை யார் யாரையோ பிடித்து எங்கள் கல்லூரியில் சேர்த்துள்ளார். என்ன ஹாஸ்டல் தான் வசதி சரியில்லை என்று அடிக்கடி புலம்புவான்...


******XXXX******

எங்கள் டி.ஈ பாடத்துக்கு செந்தில் என்று ஒருவர் வந்தார். ரொம்ப எளிமையாக புரியும்படி நடத்துவார். அவர் இன்னோரு லெக்சரரோடு ஊட்டி பக்கம் போன கதையை பற்றி நான் சொல்லப்போவதில்லை. இது மணி பற்றி..

ஒரு முறை டிஜிட்டல் எலக்ட்ரானிக்ஸில் கேட்ஸ் - இணைப்புகள் - என்ற யூனிட்டை செந்தில் சார் நடத்திக்கொண்டிருந்தார்..வழக்கம்போல எனக்கு எதுவும் புரியவில்லை, கடனே என்று அவர் பலகையில் எழுதியதை எல்லாம் என்னுடைய நோட்டுப்புத்தகத்தில் எழுதிக்கொண்டிருந்தேன்..

மணி மென்மையாக எழுந்தான்.

சார், இந்த கேட்ஸ்ல கொஞ்சம் தப்பு இருக்கு..இப்படி இருந்தா இந்த கேட்ஸ் அமைத்து செய்யப்படும் எந்த சர்க்கியூட்டும் தோல்வி அடையும் சார்...என்றான்..

எனக்கு திக்கென்னு இருந்தது...ஏன் இவனுக்கு இந்த வேண்டாத வேலை என்று நான் நினைத்தபடி அவனை பார்த்தேன்...

செந்தில் சார் கொஞ்சம் ஷேக்கியாக அவனை பார்த்தார்...

சந்தேகம் எந்த நேரத்தில் எத்தனை முறை கேட்டாலும் லாடு லபக்குதாஸ் போல சொல்லிக்கொடுக்கும் ஆசாமி அவர்..

சார், இந்த கேட்ல சர்க்கியூட் போட்டா 11100001111000 என்ற மதிப்பீட்டை உள்ளீடு செய்தால் அந்த சர்க்கியூட்டே க்ராஷ் ஆகும் சார் என்றான்...

அதற்கு பெரிய ஒரு விளக்கமும் கொடுத்தான், ஆனால் அதுவும் எனக்கு புரியாமல் போனதால் இங்கே எழுத இயலவில்லை...

ஆனால் கடைசியாக செந்தில் சார் நான் இது பற்றி படித்துவிட்டு வருகிறேன் என்று அந்த வகுப்பை அத்தோடு நிறுத்திவிட்டு போய்விட்டார்...

அவன் கேட்ட அந்த சந்தேகம் பற்றி எங்கள் படிப்பு முடியும் வரை ஓய்வு நேரங்களில் லைபரிகளில் தேடிக்கொண்டிருந்தாராம்...

******XXXX******

இளமாறனும் அவனும் ரொம்ப தோஸ்த்துங்க...ஒரே காரணம் இளமாறனும் அதிகம் பேசும் டைப் இல்லை...அமைதியாக நிற்பான்...கிரிக்கெட்டில் மட்டும் காட்டான்...பவுலர் போடும் பந்து மாட்டிவிட்டால் ஆஸ்திரேலியாவிலோ அண்டார்ட்டிகாவிலோ போய் விழும் வகையில் சுத்துவான்...

இந்த டோமரும் மணியும் சேர்ந்து புதிதாக பக்கத்து தெருவில் குடிவந்திருக்கும் புஷ்கில் என்ற பிகரை சைட் அடிக்க போனார்கள்...

புஷ்கில் என்பது நான் வைத்த பெயர். அவளது உண்மையான பெயர் வானதி...ஒருமுறை ரேடியோவில் புஷ்கில் படா ஏப்பியாரு ஹே என்ற இந்திப்பாட்டு ஓடும்போது அவர் சாலையை கடந்துபோனாள்...

அதில் இருந்து அவளுக்கு புஷ்கில் என்று பெயர் வைத்தேன்...அது இப்ப எதுக்கு...

இளமாறனும் மணியும் சைட் அடிக்க போனானுங்களா...

திரும்பி வந்தபோது ஆர்வமாக கேட்டேன்...ஏண்டா - புஷ்கில பார்த்தீங்களா ? எப்படி இருக்கா என்றேன்...

அந்த பொண்ணை பார்க்க முடியல, ஆனா அவங்கம்மா வெளிய நின்னுக்கிட்டிருந்தாங்க...ரெண்டு பேரும் அவங்களை சைட் அடிச்சுட்டு வந்துட்டோம், சும்மா செம கட்டைடா என்றான்...

நான் ஒரு விறகு கட்டையை எடுத்து மணியை நோக்கி வீசினேன்...


******XXXX******

புகைப்பதில் இவனுக்கு நிகர் இவனே தான்...ஒரு முறை ஒரு போட்டி வைத்தோம்...

ஒரு பாக்கெட்டில் இருக்கும் அத்தனை சிகரெட்டையும் - ஒன்றன் பின் ஒன்றாக புகைத்து தள்ளமுடியுமா என்று...

டாபர், நான் வாங்கி கொடுத்த கிங்ஸ் பாக்கெட்டை ஒன்றை கூட மிச்சம் வைக்காமல் புகைத்து தள்ளியது...

டேய் மணி நீ மனுசனா இல்ல மிருகமாடா என்றேன்...

நாதாரி, எனக்கு ஒரு சிகரெட் கூட மீதி வைக்காத கோபம் எனக்கு...

******XXXX******

கோட்டாத்தூர் ரகு என்று ஒரு பெரிய ரவுடி...எங்கள் கல்லுரியில் படித்த லஷ்மி என்ற பெண்ணை லவ்விக்கொண்டிருந்தான்..

கல்லூரி பெண்களுக்கு ரவுடியை தானே லவ் பண்ண பிடிக்கும்...தமிழ் சினிமா எழுதிய விதியாச்சே...

லஷ்மியின் தங்கை சங்கீதா என்னுடைய வகுப்பில் இருந்தாள்...

மணி அவளை லுக்கு விடுவதை பொழப்பாக வைத்திருந்தான்...

மூன்று வாரத்துக்கு முன்பு அவள் அனிந்திருந்த மஞ்சள் நிற சுரிதாருக்கு என்ன நிறத்தில் துப்பட்டா அணிந்திருந்தாள் என்று அப்படியே நியாபகமாக சொல்வான்...

சங்கீதாவுக்கு அவன் கொடுத்த ஒரு லவ் லெட்டரை அவள் ரவுடி ரகுவிடம் சமர்ப்பித்துவிட்டாள்..

ரகு நேராக எங்கள் விடுதி அறையை தேடி வந்துவிட்டான்...

அப்போது நானும் மணியும் இளங்கோ அண்ணன் டீ கடைக்கு போயிருந்தோம்...

திரும்பி வரும் வழி கிட்டத்தட்ட ஒரு காடு..ஒரு பக்கம் காம்பவுண்டு சுவர் மறு பக்கம் வயல் வெளி. நாங்கள் டீ கடைக்கு போயிருக்கிறோம் என்று தெரிந்துகொண்டு, நாங்கள் வரும் வழிக்கு எதிர் திசையில் கைகளில் ஹாக்கி ஸ்டிக் போன்ற வஸ்துக்களுடன் ரகு வந்துகொண்டிருந்தான்..

மணி சங்கீதாவுக்கு லெட்டர் கொடுத்தது தெரியும், ஆனால் அவள் அதை ரகுவிடம் கொடுத்து தொலைவாள் என்று நான் சத்தியமாக நினைக்கவில்லை...

எதிரில் வேகவேகமாக மூன்று பேர் வருவது மட்டும் தெரிகிறது, ஆனால் அவர்கள் எங்களை தேடித்தான் வருகிறார்கள் என்று தெரியாது...

கல்லூரி வாசலில் அடிக்கடி பார்த்த ரகுவின் முகம் மட்டும் எனக்கு அடையாளம் தெரிகிறது, ஆனால் அவனுடன் வரும் தடியன்கள் முகம் தெரியவில்லை...

டேய் உன்னோட பங்காளி வராம்பாரு....என்றேன் மணியிடம்..

மணி நிகழ்வை சற்றே யூகித்திருக்கவேண்டும்...

டேய் நீ இளங்கோ அண்ணன் கடைக்கு போடா நான் பேசிட்டு வரேன் என்றான்...

உள்ளூர உதறலோடு, டேய் அவனுங்க கிட்ட வெச்சுக்காதடா என்று நான் திரும்பி நடந்தேன், கிட்டத்தட்ட ஓடினேன்...

திருப்பத்தில் திரும்பும்போது மணியை அவர்கள் மூவரும் சூழ்ந்திருப்பது தெரிந்தது...

வேகமாக போய் இளங்கோ அண்ணனையாவது கூட்டிவரலாம் என்று கடைக்கு ஓடி, விஷயத்தை சொல்லி அண்ணன் - ஒரு ரெண்டு பேர் - கடையில் டீ குடிக்க வந்தவர்கள் - கூட்டிக்கொண்டு திருப்ப வரும்போது மணி மட்டும் திரும்ப வந்துகொண்டிருந்தான்...

டேய் மணி..இவன் கொடுத்த பில்டப்பை பார்த்தால் ரகு உன்னை போட்டிருப்பான்னு நாங்க கிளம்பி வறோம், என்னடா ஆச்சு...

நான் அவனுங்களை தட்டிட்டேன் என்று மென்மையாக சிரிக்கிறான்...

நான் நம்பவே இல்லை...

ரகு கால் உடைந்து மூன்று மாதம் ஹாஸ்பிட்டலில் இருந்த விஷயம் லேட்டாக தான் எனக்கு தெரிந்தது, மற்ற இருவரில் ஒருவனை ஒருமுறை நிரந்தர ஊனத்தோடு துறையூர் சங்கீதா பஸ்ஸில் பார்த்தேன்...

என்னைப்பார்த்ததும் சற்றே பீதியுடன் முகத்தை அவன் திருப்பிக்கொண்டது இன்றுவரை ஏன் என்று புரியவில்லை...

******XXXX******

ஒருமுறை மணி இரண்டு அல்லது மூன்று இருக்கும்...

தூக்கம் பிடிக்காமல் அல்லது திவ்யாவை பற்றி நினைத்துக்கொண்டு அல்லது தம் போட மொட்டை மாடிக்கு போகிறேன்...

அங்கே நான் கண்ட காட்சி...

மணிவண்ணன் மேல் சட்டை இல்லாமல் வெறும் தரையில் படுத்துக்கொண்டு வானத்தை பார்த்துக்கொண்டிருக்கிறான்...

டேய் டோமரு ஏண்டா இந்த வேலை ? ஏன் வெறும் உடம்போட இப்படி படுத்திருக்க ? குளிரல ? என்றேன்...

இல்லடா...எல்லா விதமான புற சூழ்நிலைகளையும் பழகிக்கொள்வது சால சிறந்தது அப்படீன்னு அப்பா சொல்லியிருக்கார்டா என்று தூய தமிழில் ஏதோ உளறுகிறான்...

போடாங் ங்கொன்னியா...என்று அவனை கீழே இழுத்துவந்தேன்...

******XXXX******

கவிதை என்ற போர்வையில் அவன் எங்களை படுத்தும் கொடுமைகள் இருக்கிறதே ? அப்பப்பா...

ஆனால் அவன் நோட்டு போட்டு எழுதும் கவிதை கன்றாவிதான் அறையில் இருந்த கார்த்தி கோயிந்து இளமாறன் உட்பட யாருக்கும் புரியாது...

வார்த்தைகளை கோர்த்து கோர்த்து புதிய வார்த்தைகளை உருவாக்குவான், அது எங்களுக்கு புரியாமல் நாங்கள் ஓட்டித்தள்ளினால் இதெல்லாம் உங்களுக்கு எங்க புரியப்போவுது என்பான்..

இணைப்புகள் சாத்தியமானதால் இருப்பும் சாத்தியமானது
புள்ளிகள் ஒன்றினைந்தால் புரிபடும் சூத்திரங்கள்
பருவங்கள் காலங்கள் கடந்து நீ நடைபோடு
இரும்புகள் இழைவுகள் இணைத்து நீ உருவாக்கு

என்பது போல எழுதி குவிப்பான்...

போடா டோமரு என்று நாங்கள் புறந்தள்ளிவிடுவோம்...கவிதைகள் புரியாமல் போவது மட்டுமே காரணம்...

ஆனால் இதே போன்றதொரு கவிதையை அவன் கல்லூரி ஆண்டுவிழாவில் வாசித்தபோது எல்லோரும் தட்டோ தட்டென்று கையை தட்டினார்கள்...

நாங்க மைக் சரியில்லாததால் யாருக்கும் எதுவும் கேட்கவில்லை அதனால் கை தட்டிவிட்டார்கள் என்று பேசிக்கொண்டோம்...

******XXXX******

மாதம் ஒருமுறை கொடைக்கானல் போய் மூன்று அல்லது நான்கு நாட்கள் இருப்பான்....செல்போன் சார்ஜ் ஏற்றியது போல புத்துணர்ச்சியோடு திரும்புவான்...கையில் பைசா புரளும்...அக்கவுண்டுகளை எல்லாம் செட்டில் செய்யும் நேரமது, ஹி ஹி எங்களது அக்கவுண்டுகளையும் சேர்த்துத்தான்..

******XXXX******

என் எஸ் எஸ் கொடைக்கானல் சென்பகனூர் ட்ரிப் அறிவித்திருந்தார்கள்...மணி அந்த நேரத்தில் கொடைக்கானல் போயிருந்தான்..மேலும் அவன் வீடு சென்பகனூருக்கு அருகில் என்பதை அவனுக்கு வந்த ஒரு பார்சல் மூலம் நான் ஏற்கனவே தெரிந்துவைத்திருந்தேன்...

******XXXX******

சென்பகனூர் போய் இறங்கியவுடன் குளிர் உடலை ஊசி போல் குத்தியது...

குபேரன், ஆத்தூர் விஜய் இருவரும் சரக்கு எங்க கிடக்கும் தம்மு எங்கே கிடைக்கும் என்று போய்விட்டார்கள்..

நான் தனித்து விடப்பட்டேன்...மணி இங்கே தானே இருப்பான் அவனை தேடி போகலாம் என்று முடிவு செய்தேன்...அவனுக்கு வந்திருந்த ப்ரம் அட்ரஸ்படி சென்பகனூர் போஸ்ட் ஆபீஸ் அருகில் வீடு என்று தெரிந்தது...வலதுபுறம் சென்ற மண் பாதையில் இறங்கி நடந்தேன்...

******XXXX******

தொலைவில் ஒருவர் சைக்கிளை தள்ளிக்கொண்டு வருவது தெரிந்தது...அட...போஸ்ட்மேனே தான்...காக்கி யூனிபார்மும் அழுக்கடைந்த எழுத்தாளர் ஜோல்னா பையும்...

சார்...இங்கே தனசேகரன் அப்படீன்னு சொல்லிட்டு அமெரிக்காவில் இருந்து வந்தவர் சார்...அவர் பையன் கூட திருச்சியில காலேஜ்ல படிக்கிறான் சார்...

கொடைக்கானல் செண்பகனூர் - திரு தனசேகரன் விடு 

ஓ அவரா...அப்படியே நேரா போய் இடது புறம் இருக்க மேட்டுப்பாதையில ஏறுங்க...வெள்ளை பெயிண்ட் அடிச்ச பெரிய பங்களா...என்றார்...

எளிதாக கண்டுபிடித்து, கொஞ்சம் சிரமப்பட்டு மூச்சுவாங்க மேட்டில் ஏறி துருபிடித்து போயிருந்த கேட்டை மெல்ல தள்ளி திறந்து உள்ளே போனேன்...

கதவும் திறந்துதான் இருந்தது...மெல்ல திறந்து உள்ளே போனேன்...ஒரு சின்ன சர்ப்ரைஸ் கொடுக்கலாமே என்பது தான் என்னுடைய எண்ணம்...

******XXXX******

முதல் அறை லேசாக திறந்திருந்தது...ஹும் ஹும் என்று ஏதோ வித்தியாசமானதொரு சத்தமும் வந்துகொண்டிருந்தது...

மென்மையாக அந்த கதைவை திறந்து பார்த்தேன்...

அதிர்ச்சியில் என்னுடைய இதயம் ஒரு நிமிடம் உறைந்தது...

மணி...மணி...தன்னுடைய கழுத்தை 360 டிகிரி கோணத்தில் திருப்பி நாற்காலியில் அமர்ந்திருக்கிறான்..

அவன் உடலெங்கும் வயர்கள் - ஏதேதோ கணிப்பொறிகளுடன் இணைக்கப்பட்டு...

அவன் வயிறு இதயம் இருக்கும் பகுதிகளில் நியான் எழுத்துக்கள் X25 என்று மின்னுகின்றது...

என் கையில் இருந்த ஷோல்டர் பேக் தானாக பொத் என்று கீழே விழுகிறது...

மணியின் சிவந்த கண்கள் திறக்கின்றன...

ரவியா வா வா...கொஞ்சம் சார்ஜ் இறங்கியிருந்தது, அதனால தான் ஊருக்கு வந்து சார்ஜ் போட்டுக்கிட்டிருக்கேன்...

என்னை பார்த்தா பயமா இருக்கா ? என்றான்...

ப ப ப பயம் ஒ ஒ என்று திக்கினேன்...

ஹா ஹா ஹா என்று அந்த அறையே அதிரும்படி சிரிக்கிறான்...

அமெரிக்க ராணுவ ரோபாட்டிக்ஸ் துறையில் வேலை செய்த என்னோட அப்பா நான் விபத்தில் சிக்கி என்னுடையய சிறு மூளை சேதம் அடைந்தவுடன் என்னுடைய சிறு மூளைக்கு பதிலாக அவருடைய கண்டுபிடிப்பை பொருத்தினார்...

மேலும் பல்வேறு உடல் பாகங்களையும் அவரே தயாரித்து பொருத்தினார்...தொடர்ந்து இருபத்தைந்து நாட்கள் இயங்கக்கூடிய வகையில் அவை இருக்கும்...

என்னுடைய மூளையின் பல பாகங்கள் இன்னும் இயங்ககூடிய நிலையில் இருப்பதால் நான் பாதி மனிதன், பாதி இயந்திரன்..எனக்கு மனித உணர்ச்சிகளும் உண்டு...

எனக்கு நட்பு உணர்ச்சி உண்டு...அதனால் தான் உன்னிடம் எல்லாம் சொல்கிறேன்...அதே சமயம் எனக்கு கோபமும் உண்டு...என்னுடைய ரகசியங்கள் தெரிந்த யாரையும் உயிரோடு விடக்கூடாது என்றும், அமெரிக்க ரோபாட்டிக்ஸ் துறையில் இருந்து திருடிய பல உபகரணங்களோடு தப்பி வந்த என்னுடைய தந்தையாரை தேடி அவர்கள் இங்கே வந்துவிட வாய்ப்பு இருக்கிறது என்று அப்பா சொல்வார்...

அதனால்...

என்னை மன்னித்துவிடு நன்பனே...வெளியே போயிருக்கும் என்னுடைய அப்பா வருவதற்குள் உன்னை மென்மையாக கொன்றாகவேண்டும்...அவனுடைய கை நீண்டது, அதில் புதிதாக ஒரு ரிவால்வர் மலர்ந்திருந்தது...என்னுடைய நெற்றி பொட்டை நோக்கி அந்த ரிவால்வரை உயர்த்தினான்...

ஆனால்...

தொடர்ந்து கரகரப்பான குரலில் பேசினான் மணி...

கவலைப்படாதே என் நண்பனே...அன்புத்தோழனே !! உன்னையும் என்னைப்போல ஒரு இயந்திரனாக மாற்றிவிடும் நுட்பம் எனக்கு தெரியும்...இனி நாம் ஒருவர் அல்ல நன்பா...நாம் இருவர்...இந்த உலகத்தை இயந்திரத் தொழில் நுட்பத்தால் ஆளலாம் வா...வா எந்திரா வா !!

துப்பார்க்கு துப்பாய துப்பாக்கி துவும் குண்டு ஹா ஹா ஹா !!!

சுட்டான் X25 அல்லது மணி...

********
*******
******
*****
****
***
**
*

பி.கு : இந்த விஷயங்களை டைப் செய்யாமல் நேரடியாக என் சிறு மூளை மூலமாக வலையில் ஏற்றிக்கொண்டிருக்கிறேன் !!

Friday, December 19, 2008

அறிவியல் கதை போட்டி : முதல் பரிசு 20 ஆயிரம்

சுஜாதா நினைவு கதைப்போட்டியாம்...முதல் பரிசு 20 ஆயிரமாம்...இரண்டாம் பரிசு பத்தாயிரமாம்...மற்ற நாடுகளில் உள்ளவர்களுக்கு சிறப்பு பரிசு 5 ஆயிரமாம்..

இதுல ஒரு மேட்டர் என்னன்னா, சுவீடன்ல இப்ப நானும் வினையூக்கியும் தான் இருக்கோம்...முதல் பரிசுக்கு போட்டிபோடலைன்னானும் சிறப்பு பரிசுக்கு போட்டி போட்டே தீருவேன் வினையூக்கியோட...!!!

லக்கி அதிஷா நர்சிம் பரிசல் கார்க்கி சஞ்ஜெய் குசும்பா டாக்டர் வாத்தியார் அனைவரும் கற்பனை எருமையை ச்சே குதிரையை தட்டி கும்முனு ஒரு கதையை எழுதுங்கப்பா !!!!

ஏற்கனவே சிரில் அலெக்ஸ் போட்ட அறிவியல் கதையை உல்டா செஞ்சு போடக்கூடாது..(அதோட முடிவு என்ன ஆச்சுன்னு கொஞ்சம் யாராவது சுட்டி கொடுங்களேன் ப்ளீஸ் )

*************************
மேல்விவரம் இங்கே !!!
*************************

ஒரு சமூகத்தின் முன்னேற்றத்தையும் அறிவியல் வேட்கையையும் வெளிப்படுத்தும் வகையிலான அறிவியல் புனைகதைகள் நவீன இலக்கியத்தின் முக்கிய அம்சங்களில் ஒன்று. அந்த வகையில் உலகத் தரம் வாய்ந்த பல அறிவியல் புனைகதைகளை மறைந்த எழுத்தாளர் சுஜாதா தமிழில் எழுதியிருக்கிறார். அவரது தாக்கத்தில் இன்று பலரும் தொடர்ந்து அறிவியல் புனைகதைகளை எழுதிவருகிறார்கள்.

தமிழில் அறிவியல் புனைகதை இலக்கியத்தின் முன்னோடியான எழுத்தாளர் சுஜாதா அவர்களின் முதல் ஆண்டு நினைவையொட்டி, அவரது நினைவைப் போற்றும் விதமாக நினைவுப் புனைவு 2009 என்ற பெயரில் அமரர் சுஜாதா நினைவு அறிவியல் புனைகதைப் போட்டி ஒன்றைத் நடத்தி, தமிழில் அறிவியல் புனைகதை மரபை தொடர்ந்து வளர்த்தெடுக்க எழுத்தாளர் சுஜாதாவின் குடும்பத்தினரின் எழுத்தாளர் சுஜாதா அறக்கட்டளையும் சென்னையிலிருந்து இயங்கும் ஆழி பதிப்பகமும் இணைந்து முடிவு செய்துள்ளன.

உலகெங்கும் உள்ள தமிழ் எழுத்தாளர்கள் இந்த போட்டியில் கலந்துகொள்ளலாம். இந்த போட்டியில் தேர்வு செய்யும் கதைகளுக்கு சுஜாதா குடும்பத்தினர் சார்பில், அமரர் சுஜாதா டிரஸ்ட் சார்பில், 2009ம் ஆண்டின் சிறந்த அறிவியல் புனைகதை எழுத்தாளர் என்ற சிறப்பு விருது வழங்கப்பட உள்ளது.

முதல் பரிசாக ரூ.20,000 ரொக்கமும் இரண்டாம் பரிசாக ரூ.10,000 ரொக்கமும் அளிக்கப்படும். சிறப்புப் பரிசுகளாக ரூ.5000 இந்தியா, இலங்கை, வட அமெரிக்கா, ஐரோப்பா, ஆசியா-பசிபிக், பிற நாடுகள் என தலா ஒவ்வொரு பிரதேசத்துக்கும் ஒன்று என அளிக்கப்படும்.

இவற்றுடன் அனுப்பப்படும் கதைகளில் இருந்து சிறந்தவை தேர்ந்தெடுக்கப்பட்டு, ஆழி பதிப்பகத்தின் மூலமாக ஒரு புத்தகமாகத் தொகுத்து வெளியிடப்பட உள்ளன.

அமரர் சுஜாதாவின் புதல்வரும் சுஜாதா அறக்கட்டளையைச் சார்ந்தவருமான திரு. கேசவா ரங்கராஜன் இந்தப் போட்டியின் முக்கியத்துவம் குறித்து பேசுகையில், “படைப்புத்திறன் மிக்க இளம் தமிழ் எழுத்தாளர்களை இனம்கண்டு அடையாளப்படுத்துவதில் அப்பாவுக்கு எப்போதுமே மிகுந்த ஆர்வம் உண்டு. அப்படிப்பட்டவர்களின் திறமையை வளர்த்துவிடுவதற்கான வாய்ப்புகளை அவர் உருவாக்கித் தருவார். அவர்களின் திறமை எண்ணற்ற வாசகர்களை சென்றடைவதற்கு வசதியாக வெளிவருவதற்கான உதவிகளை அப்பா செய்வார்.” என்று சொன்னார்.

மேலும் அவர் குறிப்பிடுகையில், “இந்தப் போட்டியும் அதையேதான் செய்கிறது. அவரது தலைசிறந்த பணியை தொடர்ச்சியாக மேற்கொள்ள முடியும் என்று நம்பிக்கைப் பிறக்கிறது. நீங்கள் உங்கள் கற்பனைத்திறனைக் கட்டவிழ்த்துவிடுங்கள் எனக் கேட்டுக்கொள்கிறேன். இந்த முயற்சியில் எங்களோடு இணைந்து நில்லுங்கள் என்றும் வரவேற்கிறேன்” என்றார்.

“அறிவியல் தமிழ் எழுத்துகள், அறிவியல் புனைகதைகள் மூலம் லட்சக்கணக்கான தமிழர்களுக்கு புது யுகத்தை அறிமுகப்படுத்தி வைத்தவர் அமரர் சுஜாதா. அவரது நினைவாக அவரது குடும்பத்தினருடன் இணைந்து ஒரு அறிவியல் புனைகதைப் போட்டியை நடத்துவதற்கும் அவற்றை நூலாகத் தொகுத்து வெளியிடுவதற்கும் எங்களுக்கு அமைந்திருக்கும் வாய்ப்பை எண்ணி மகிழ்ச்சி அடைகிறோம். இளம் தமிழ் எழுத்தாளர்கள் நூற்றுக்கணக்கில் இதில் கலந்து கொள்வார்கள் என நம்புகிறோம்" என்று ஆழி பதிப்பகத்தின் பதிப்பாளர் திரு. செ. ச. செந்தில்நாதன் கூறினார்.

இந்த போட்டியின் ஒருங்கிணைப்பாளரும் பத்திரிகையாளருமான சந்திரன். "எழுத்தாளர் சுஜாதவுடன் 6 ஆண்டுகளுக்கும் மேல் பணியாற்றியவன், அவருடன் நெருங்கி பழக வாய்ப்பு பெற்ற சிலரில் ஒருவன் என்ற வகையில் - தமிழில் அறிவியல் புனைக்கதைகள் என்பது குறித்து எழுத்தாளர் சுஜாதா கொண்டிருந்த கருத்தும், கற்பனையுமே ஒரு அறிவியல் புதினம் என்பது என் கருத்து. ஏற்கனவே இது போன்ற அறிவியல் புனை கதை போட்டிகள் தொடர்பான கருத்தாடல்களின் போது நான் அவருடன் விவாதித்திருக்கிறேன்.” என்று கூறினார்.

தமிழ்கூறு நல்லுலகத்தின் பிணைப்புகளில் ஒன்றாகத் திகழ்ந்த அமரர் சுஜாதாவினி நினைவாக நடத்தப்படும் இந்த போட்டி அவரை நினைவுகூர்வதற்கான சரியானதொரு வழிமுறையாகவும் என்று எழுத்தாளர் சுஜாதா அறக்கட்டளையும் ஆழி பதிப்பகமும் கருதுகிறது.

மேலதிக விவரங்களுக்கு
ஆழி பதிப்பகம்
12, முதல் பிரதான சாலை
யுனைட்டட் இந்தியா காலனி
கோடம்பாக்கம்
சென்னை 600024
தொலைபேசி: 1-44-4358 7585
செல்பேசி: 91-99401 47473
மின்னஞ்சல்: sujatha.scifi@gmail.com
வலையகம்: www.aazhipublishers.com/sujatha.html

****
***
**
*

Wednesday, December 17, 2008

அனைத்து துறைகளிலும் தமிழகம் முதலிடம் !!!!!

டேட்டா க்வெஸ்ட் என்பது இந்தியாவில் தொழிலதிபர்களாலும் பத்திரிகையாளர்களாலும் விரும்பி படிக்கக்கூடிய நம்பகத்தன்மை வாய்ந்த பத்திரிக்கை ( இந்தியா டுடேவோ அல்லது ஹிண்டுவோ அல்ல!!! )

அவர்களுடைய சர்வேக்கள் மிகவும் பிரசித்திபெற்றது...நம்பகத்தன்மை வாய்ந்தது..(தினமலர் போல அமவுண்டு கொடுத்தால் ஆதரவாக எழுதும் பத்திரிக்கையாளர்கள் அங்கே இல்லாதது ஒரு காரணம்)..

அவர்களின் சமீபத்திய ஆய்வு முடிவுகளை பாருங்கள்...தொழில் தொடங்க வாய்ப்பான இடங்கள், அரசு துறையின் இயக்கம் எப்படி உள்ளது, இணையம் அரசு துறைகளில் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது, காவல் துறை எப்படி உள்ளது, அரசு வரிகள் மற்றும் மானியங்கள் பற்றிய தகவல்கள் என வகைப்படுத்தி இருக்கிறார்கள்...

துறைகள் எப்படி செயல்படுகின்றன :

மார்க் ஷீட்டுல ரேங்க் என்ன :இந்த சிறப்பான நிர்வாகத்தை தரும் முதல்-அமைச்சருக்கு என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்...!!!!!

******
****
***
**
*

யார் யார் என்ன பதிவு போட்டிருக்காங்க ?

video

கஷ்டகாலம்...!!!

புதிய முயற்சி !!! குரல் மற்றும் வீடியோ பதிவு

video

வேர்ட் வெரிப்பிக்கேஷனை நீக்குவதெப்படி என்று புதிய பதிவர்களுக்கு விளக்கும் வீடியோ பதிவு..

ஆங்காங்கே குரல் தடைபடுகிறது, இருந்தாலும் இதுபோல அனைத்து பிரச்சினைகளையும் (ஜிலேபி உட்பட) குரல் பதிவுகளாக இட்டுவிட்டால் பல டெக்கினிக்கல் மேட்டர்கள் சால்வாகும்...

உங்கள் கருத்துக்களை தெரியப்படுத்துங்களேன்...!!!

பி.கு : குசும்பா, ஹேப்பி பர்த்துடே டு யூ. மெனி மோர் மொக்கை ரிட்டன்ஸ் ஆப் த டே..!!

Tuesday, December 16, 2008

தமிழ்மணம் நிர்வாகம் கவனத்துக்கு !!!!

நட்சத்திர தேர்வு பற்றியது இந்த பதிவு...!!!

நட்சத்திர தேர்வில் அந்த அந்த நேரத்தில் கலக்கும் பதிவர்கள் பற்றி கருத்தில் எடுத்து அவர்களுக்கு நட்சத்திர அந்தஸ்து தரவேண்டும்...

இவங்களுக்கு எல்லாம் நட்சத்திரம் அந்தஸ்து கொடுத்தால் தமிழ்மணம் களைகட்டும்...!!!

அதிஷா
பரிசல்
கார்க்கி
குடுகுடுப்பை
நர்சிம்
வினவு
பழமைபேசி
புதுகை அப்துல்லா
ராப்
நசரேயன்
தாமிரா
கேபிள் ஷங்கர்
வெண்பூ
வால்பையன்
சந்திப்பு
தமிழ் ஓவியா
புதுகை தென்றல்
கபீஷ் (என்னோட சம்மந்தி)
ஆயில்யன்
உருப்படாதது அனிமா
ஆட்காட்டி

அவ்ளோ தான் என்னோட லிஸ்ட்டு...இவர்கள் எல்லாம் எனக்கு விருப்பமான பதிவர்கள் மட்டும் அல்ல...எல்லோருக்கும் விருப்பமான பதிவர்கள்...

இதில் ஏற்கனவே நட்சத்திரம் ஆனவர்கள் இருந்தாலோ அல்லது இவர்கள் ஏற்கனவே உங்களது லிஸ்ட்டில் இருந்தாலோ கண்டுகொள்ளவேண்டாம்...

அப்புறம் சில பதிவர்கள் "பலான" என்று தலைப்பிட்டு தமிழ்மணத்தை கலீஜ் ஆக்க முயல்கிறார்கள் பாருங்கள்...

சத்தம் இல்லாத யுத்தம் வேண்டும், அவர்களை சத்தம் இல்லாமல் நீக்க வேண்டும்...

இவ்ளோ சொல்றியே மச்சி நீ என்ன ஒழுங்குன்னு கேட்காதீர்கள், நான் இருப்பது டெஸ்டிங் துறையில், அடுத்தவங்க மிஸ்டேக்கு தான் எனக்கு தெரியும்...

நான் தப்பே செய்திருந்தாலும் கடைசீவரை அது ரைட்டுன்னு வாதாடுவேன் அக்காங் !!!

*****
****
***
**
*

Monday, December 15, 2008

திருமங்கலம் தொகுதியில் அஞ்சா நெஞ்சன் அழகிரி ???ஒரு சட்டமன்ற உறுப்பினர் எதிர்பாராதவிதமாக மறைந்துபோனால் அந்த கட்சியை சேர்ந்தவர்களே அந்த தொகுதியில் போட்டியிடுவது தான் முறை...தர்மம்...

ஆனால் இந்த முறை மதுரை திருமங்கலம் தொகுதியில் என்ன நடக்கிறது என்று நான் நீட்டி முழக்கிக்கொண்டிருக்கவேண்டிய அவசியம் இல்லை...

அ.தி.மு.க வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை...(அல்லது தேவர் என்று முடியும் பெயர்)
தே.மு.தி.க சார்பில் ஏதோ ஒரு நாயுடு காரு போட்டியிடப்போகிறார்...
சமத்துவ மக்கள் கட்சி சார்பில் ராதிகாவே போட்டியிட வாய்ப்புண்டு...
லட்சிய தி.மு.க சார்பில் டி.ஆர், பிரசாரம் செய்ய போகிறாராம் லிட்டில் ஜூப்பர் ஸ்டார்.

ஏன் திராவிட முன்னேற்றக்கழகம் சார்பில் அண்ணன் அஞ்சா நெஞ்சன் அழகிரியே போட்டியிடக்கூடாது ?

கருப்பு எம்ஜியார் சொல்கிறார், எம்ஜியாருக்கு திண்டுக்கல் தொகுதிபோல எனக்கு திருமங்கலம் என்று..நல்ல அடுப்புக்கரியாக அரைத்து அவர் முகத்தில் பூசவேண்டும்...

சித்தியும், செல்வியும், அரசியும் அப்படியே அடுப்படியில் இருந்து ஓட்டாக சமைத்து யாராவது வாயில் வைப்பார்கள் என்று சிங்கப்பூரில் இருந்து காசு வாங்கி நாடார் கம்பேனி நடத்தும் சித்தப்பா நினைக்கிறார். நாட்டாமை நல்ல படம். அதுல டேய் தகப்பா ஜோக் சூப்பர். ஆனால் மக்கள் நாட்டாமை படத்தை மறந்திருப்பார்களே ?

லெச்சிய தி.மு.க கம்பேனியில் என்ன லச்சியம் இருக்கு என்று தெரியவில்லை...ஆனால் சமீபமாக நன்றாக பேசுகிறார் டி.ஆர். பெண்களை போனில் கூப்பிட்டு மிரட்டும் சுளுக்கு விழுந்த விரல் லிட்டில் சூப்பர் ஸ்டார் - அவன் அவனுக்கு ஒரு ஆசை. இதுக்கு இப்படி - திருமங்கலத்தில் பிரச்சாரம் வேறு செய்யப்போகிறார்.

சேதுராம பாண்டியன், வாண்டையார்கள் என்று அ.தி.மு.க கம்பேனி சிறப்பாக உள்ளது, அதில் புதிதாக சேர்ந்துள்ள காம்ரேடுகள் மம்மி ஒருமுறை அத்துவானியை சொன்னது போல - செலக்டிவ் அம்னீஷியாவில் திளைக்கிறார்கள்...கேரளாவில் கதக்களியும், வெஸ்ட்டு பெங்காலில் குச்சுப்புடி டேன்ஸும் இங்கே தமிழகத்தில் குத்தாட்டமும் போட எப்படித்தான் காம்ரேடுகள் பழகினார்களோ தெரியவில்லை...

பாரதீய சனதா கட்சிக்கு மதுரை திருமங்கலத்தில் இருக்கும் இரண்டு உறுப்பினர்களும் சொந்த வேலையாக வெளியூர் செல்வதால் பெரிய ஆபத்து ஒன்றும் இல்லை அப்போது...

காங்கிரசு கட்சியை பற்றி சொல்ல ஒன்றும் இல்லை...திருமங்கலத்தில் எந்த கோஷ்டி என்று தெரியாததால் அப்படியே லூஸ்ல விடுகிறேன்...

எஸ்.ஏ சந்திரசேகர் சொல்லி திடீர் என டாக்டர் விஜய் தேர்தலில் நிற்காமல் இருந்தால், என் நினைவுக்கு வந்தவரை எந்த எந்த முனைகளில் போட்டி என்று தெரிவித்துவிட்டேன்...

இவற்றை எல்லாம் சுனாமி வந்தது போல அடித்து தூள் கிளப்பக்கூடிய ஒரே சக்தி பதிவின் தலைப்பில் உள்ளது...சன் டிவியும் தேவை இல்லை, கலைஞர் டிவியும் தேவை இல்லை...

வந்து நின்றாலே சும்மா அதிரும் !!!

ஆகவே இந்த பதிவில் நான் சொல்ல விரும்புவது, கலைஞர் அவர்கள் தி.மு.க திருமங்கலம் கோப்பையை கைப்பற்றவேண்டும் என்று நினைத்தால், ரீபோக் ஷூ மற்றும் ஸ்போர்ட்ஸ் டவுசர் போட்டு அனுப்பவேண்டியது திரு.மு.க அழகிரியை மட்டும்தான்...

என்ன ஒன்று, தேர்தல் நேரத்தில் அய்யோ அராஜகம், ஏழாவது வார்டில் ஓட்டுப்பெட்டியை காணவில்லை, ஐந்தாவது வார்டில் அரசு ஊழியரே மின் ஓட்டு இயந்திரத்தின் சுவிட்சை ஆப் செய்துவிட்டார் என்பது போன்ற பிரச்சினைகளை ஜெயா டிவியில் ரபி பெர்னாடும், தேர்தல் முடிந்தபிறகு அ.தி.மு.க வக்கீலின் பிராதும் ( அழகிரி வெற்றிபெற்றது செல்லாது என்று அறிவிக்கவேண்டும்) நமது கண்களுக்கு காண கிடைக்கும்...!!!

பத்த வெச்சுட்டயே பரட்ட !!!!!!!

********
*******
*****
***
**
*

Sunday, December 14, 2008

மிளகாய் பாதம் !!! எத்தனை பேருக்கு பிடிக்கும்னு தெரியல..

Chilli Feet - இதை மிளகாய் பாதம்னு மொழிபெயர்த்திருக்கேன் :) கேட்கும்போது ஒரு உற்சாகம் தொற்றிக்கொள்ளும்...!!!

Carrapicho இது தான் பாடல் பெயர்...தேடும்போது இந்த பெயரை வைத்து தேடலாம்...எல்லோருக்கும் பிடிக்குமா என்று தெரியவில்லை...!!!

பிடிதிருந்தால் சொல்லுங்க இன்னும் நிறைய போடுகிறேன்.....

Saturday, December 13, 2008

இதான்டா போலீஸ் !!!!!!!!!

ஹைதாபாத்: இரு கல்லூரி மாணவிகள் மீது ஆசிட் வீசி அவர்களது வாழ்வைக் கெடுத்த 3 வாலிபர்களை ஆந்திர போலீசார் சுட்டுக் கொன்றுவிட்டனர்.

வாரங்கல் மாவட்டத்தில் உள்ள ககதிய இன்ட்டியூட் ஆப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி கல்லூரியில் பயிலும் ஸ்வப்னிகா, பிரனீதா ஆகியோர் தங்களது டூ வீலரில் கல்லூரியிலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.

அவர்களை பைக்கில் வந்த கல்லூரி மாணவர்களான சஞ்சய், ஹரிகிருஷ்ணா, ஸ்ரீனிவாச ராவ் ஆகியோர் வழிமறித்து ஆசிட் ஊற்றிவிட்டுத் தப்பினர்.

இதி்ல் இரு மாணவிகளின் முகம், உடல் வெந்துபோனது. இருவருமே மிகவும் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக 3 மாணவர்களையும் ஆந்திர போலீசார் கைது செய்தனர். இதையடுத்து மூவரையும் சம்பவம் நடந்த இடத்துக்கு நேற்றிரவு விசாரணைக்காக கொண்டு சென்றனர்.

எந்த இடத்தில் வைத்து ஆசிட் ஊற்றினார்களோ அதே இடத்தில் வைத்து மூவரையும் போலீசார் சுட்டுக் கொன்றனர். மூவரும் போலீசாரை தாக்கிவிட்டு தப்பியோட முயன்றதால் சுட்டிக் கொல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

மாணவிகள் மீது ஆசிட் வீசப்பட்டது குறித்து ஆந்திர முதல்வர் ராஜசேகர் ரெட்டி மிகுந்த அதிர்ச்சி தெரிவி்த்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந் நிலையில் இந்த எண்கெளன்டர் நடந்துள்ளது.

இதில் ஸ்ரீனிவாச ராவ் ஸ்வப்னிகாவை ஒருதலையாக காதலித்து வந்துள்ளான். ஆனால், கார்த்திக் என்ற மாணவனை காதலித்து வந்த ஸ்பனிகா, ராவின் காதலை ஏற்க மறுத்துள்ளார்.

இதையடுத்து உன் மீது ஆசிட் வீசுவேன் என ஸ்வப்னிகாவிடம் ராவ் மிரட்டியுள்ளான். இது குறித்து ஸ்வப்னிகாவின் தந்தை தேவேந்தர் வாரங்கல் போலீசில் புகார் செய்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த ராவும் அவனது நண்பர்களும் தேவேந்தரின் மோட்டார் சைக்கிளை தீ வைத்து எரித்துள்ளனர். இது தொடர்பான வழக்கில் ஸ்ரீனிவாச ராவ் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்தான்.

இதையடுத்து தனது சகோதரன் சிவப்பிரசாத ராவ், தனது நண்பர்களான ஹரிகிருஷ்ணா, சஞ்சய் ஆகியோருடன் கூடிப் பேசி ஸ்வப்னிகாவின் முகத்தில் ஆசிட் வீச வாரங்கலில் உள்ள ஒரு கடையில் `சல்பியூரிக்' ஆசிட்டை வாங்கியுள்ளான்.

பின்னர் ராவ், சஞ்சய், ஹரி மூவரும் மாமனூர் என்ற இடத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு பைக்கை திருடிக் கொண்டு ஸ்வப்னிகா படிக்கும் கல்லூரிக்கு வந்துள்ளனர்.

தனது தோழி பிரனீதாவுடன் இரு சக்கர வாகனத்தில் வெளியே வந்த ஸ்வப்னிகாவை சிறிது தூரத்தில் வழிமறித்து ஆசிட்டை ஊற்றிவிட்டுத் தப்பினர்.இதில் பிரனீதா ஹெல்மட் அணிந்திருந்ததால் முகம் தப்பியது. ஆனால், உடல் வெந்தது. ஸ்வ்னிகாவின் முகமும் உடலும் வெந்து போனது. இருவரும் அலறியபடியே மயங்கி கீழே விழுந்துள்ளனர்.

அவர்களை பொதுமக்கள் மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். ஸ்வப்னிகாவின் உடல் 60 சதவீத அளவுக்கு வெந்து போய் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்தச் சம்பவத்தால் அதிர்ந்து போன முதல்வர் ராஜசேகர ரெட்டி மாணவர்களை உடனடியாகப் பிடிக்க உத்தரவிட்டார். போலீசார் 4 தனிப்படைகள் அமைத்து சிவபிரசாத் ராவ் உள்பட 4 மாணவர்களையும் கைது செய்தனர்.

இந் நிலையில் தான் போலீசாரின் குண்டுக்கு 4 பேரும் காலியாகியுள்ளனர். சிவபிரசாத ராவ் ஆசிட் ஊற்றியதில் நேரடியாக ஈடுபடவில்லை. இதனால் அவனை போலீசார் சுடவில்லை என்று தெரிகிறது.......

இதுதாண்டா போலீஸ் !!!!!!!

***********
***********
நன்றி - தட்ஸ்தமிழ் !
***********
***********