Posts

Showing posts from July, 2008

இளமை விகடன் தளம் பல்லிளிக்குதே !!!!

நைனா !!!

தளம் என்னவோ பட்டாஸா தான் கீது...ஆனா கரீயர் கைடன்ஸ் பேஜ் க்ளிக் பண்ணா எரர் அடிக்குது...

http://youthful.vikatan.com/ ( சேமிச்சுக்கறேன் தளத்த)

அப்புறம் தபா தபா லாகின் பன்னச்சொல்ல சொல்ல கயுத்த அறுக்குதுபா !!!! கொஞ்சம் டெக்னிக்கல் டீம் டிக்கியில கொஞ்சம் முள்ள கட்டுங்கப்பா !!!

(அந்த தளத்துக்கு போய் வந்ததுல இருந்தே இப்படித்தான் பேச வருது அக்காங்க்க்க் !!!

சுகுணா திவாகர் - அ.மார்க்ஸ் - எக்ஸ்குளூசிவ் படம்

Image
சுகுணா திவாகர் திருமணத்தின் போது, பேராசிரியர்.அ.மார்க்ஸ் முன்னிலையில் திருமண உறுதிமொழி எடுத்தபோடு எடுத்த படம்...

SSL பற்றி அறிந்தவர்கள் யாராவது இருக்கீங்களா ?

இப்போது புடுங்கிக்கொண்டிருக்கும் ஆன்சைட் ஆணி SSL பற்றியதாகும்..பல்வேறு வகை சர்ட்டிபிக்கேட்டுகள் உருவாக்குவது,

அவற்றை சுயமாக கையொப்பமிடுவது (Self Signing the Certificates) மற்றும் பல்வேறு வகை எரர் மெஜேஜுகளை சர்வர் தரப்பில் இருந்து நாமே உருவாக்கி அளிப்பது ( Bad Certificates, Illegal Certificates, Client Error) போன்றவற்றை...

Client Hello, Server Hello, Key Exchange, Chipers ஆகியவற்றுக்கு முன்னும் பின்னும் வரவைப்பது...

மற்றும் வகைவகையாக SSL தளங்கள் மாறும்போது, நமது Session ID மாறிக்கொண்டேயிருக்கிறதா என்பதை பார்க்கவேண்டும்...

மேலும் Forced Alerts ( Warning & Fatel) ஆகியவற்றை SSL3/TLS போன்றவற்றை பாவிக்கும்போது தரவேண்டும், அதை கணக்கீடு செய்தல் வேண்டும்...

நான் இப்போது பாவிப்பது OpenSSL மற்றும் Apache / IIS ஆகியவற்றை கொண்டும், கிளையண்ட் கொடுத்த ஒரு சிறிய சர்வெர் அப்ளிக்கேஷன் மூலமாகவும்...

ஒப்பன் எஸ்.எஸ்.எல் s_server & s_client ஏதோ அவுட் புட் வீசுகிறது, முழுமையாக புரிந்துகொள்ள இயலவில்லை...

ஈத்தரியல் உபயோகப்படுத்தி பார்த்தேன், அதில் Forced Alerts காண்பிப்பதில்லை...Client Hello மற்றும் server …

பெருமூச்சு + பீஜியோ 207 - வண்டின்னா இது வண்டி...

Image
சமீபத்தில் ஒரு விமான நிலையத்தில் நான் மிகவும் விரும்பும் பீஜியோவின் புதிய மாடல் CC 207 நிறுத்தியிருந்தார்கள்...அதை வாங்கி ஓட்டத்தான் முடியாது...ஒரு படமாவது எடுத்துக்குவமே என்று எடுத்தது....!!! ஹும்...(பெருமூச்சு)

கடிகாரம்...(அறிவியல் சிறுகதை போட்டிக்கு)

அதிகாலை நேரம்...

நான் என்னுடைய மெகா-சைஸ் படுக்கையில்....

உறங்கிக்கொண்டிருக்கிறேன்...

அலாரம்...

முதல்முறை அடித்தது...

கண்கள் சொக்கிக்கொண்டு வந்தது...

நேற்றிரவு நேரத்துக்கு படுக்கைக்கு வராததன் விணை...

மீண்டும் அடித்தது...

போர்வையை சற்று நன்றாக இழுத்து போர்த்திக்கொண்டேன்...

மீண்டும் அடித்தது...

ஆனால் இந்த முறை அலாரமாக இல்லை...

தன்னுடைய ரோபோ கால் ஒன்றை படுக்கைக்கு அருகே ஊன்றி, ஒரு காலை படுக்கையின் மேல் ஊன்றி, ஒரு கரத்தால் என் தலை முடியை பிடித்து தூக்கி...

கன்னத்தில் "பொடேர்" என அடித்தது...ஆம்...கடிகாரம் என் கன்னத்தில் தான் அடித்தது....

சன்னமான குரலில் சொன்னது...

மிஸ்டர் "2454ரவி10X"...செவ்வாய் கிரகத்துக்கான உங்கள் பயணம் இன்னும் எட்டு நிமிடத்தில் ஆரம்பிக்கப்படப்போகிறது...அழிந்துபோன பழைய கல்பாக்கம் நகர் அருகே உங்கள் கலம் காத்திருக்கும் செய்து வந்துள்ளது...வெளியில் சென்று ஏர் காரில் ஏறுங்கள்...!!

மணி பார்த்தேன்...திருவள்ளுவர் ஆண்டு 3039 காலை ஆறு...
பி.கு: திருவள்ளுவர் ஆண்டு என்பது, கிரகோரியன் காலெண்டர் (ஆங்கில காலண்டர்) உடன் 31 ஆண்டுகள் கூட்டினால் வருவது..(அரசு அலுவலகங்களில் திருவள்ளுவர்…

அன்புக்குரிய வாத்தியார், அண்ணன் உண்மைத்தமிழன், கூடுதுறை எல்லோருக்கும் ஒரே பதிவில்

சோதிடம், ஜாதகம், கடவுள் நம்பிக்கை, கோவில், அய்யர், வருணாசிரமம், மனுதர்மம், உண்டியல், தேங்காய்மூடி, பகுத்தறிவு, சொரணை, தமிழன், இராவணன், அலைபேசி, ஆட்டுக்குட்டி.

அவல், ஆர்யா, அட்டு, ஆறு, அறுவை, வகுப்பு, வெட்டி, கொட்டி, பட்டி, ஆடு, அய்யோ, முட்டாள், மங்குனி, மடையன், மஸ்காரா, தம்பி, தவுடு, வடகலை, வறுத்தமுந்திரி, பார்ப்பனர், குரங்கு, அமீபா, பால்வெளி மண்டலம், நட்சத்திரம், பீனிக்ஸ், விண்கலம், செவ்வாய், சனி.

உருப்படாதவன், அபிஷ்டு, சனியன், சகடை, சண்டாளன், சூத்திரன், செட்டியார், நாயுடு, கம்மாவார், ஆச்சி, போச்சு, மூச்சு.

முருகன், பழனி, ஆண்டி, சந்தனம், திண்ணை, திண்டுக்கல், சமுத்திரம், பாரதிராஜா, ஊ.வே.திரிப்புசாமி அய்யர், குடந்தை ஜெஸ்டின் கோபால்சாமி, கோத்தகிரி, பார்வை நீதிபதி, பார்ப்பார்.

வளர், திகழ், புகழ், ஏழரை, எட்டறை, ஒம்போதறை, ஓடிப்போனவன், பத்துமணி, நெத்தியடி, ஜல்லியடி.

ஜட்டி, குட்டி, புட்டி, முட்டி, ஒட்டி, வெட்டி, சட்டி, பட்டி, மட்டி, செட்டி, தீபாவளி ஜாட்டி.

திருமணம், கல்யாணம், மணம், அணு, அண்டம், கரும்புள்ளி, நாடகம், கண்ணதாசன், கருமை, புட்டி, புதுவை, வியர்வை.

கடைசியாக...

சோதிடம், ஜாதகம், பரிகாரம், க…

தமிழ் வலைப்பதிவு for டம்மீஸ் !!!

முதலில் நீங்கள் பழைய வலைப்பதிவரா, அல்லது புதிய வலைப்பதிவரா என்பதை கண்டுபிடித்துவிட்டு எப்படி வலைப்பதிவு செய்வது என்பதை பார்க்கலாம்...

அ மற்றும் ஆ என்றால் என்ன என்பதை கடைசியில் பார்க்கலாம்...

செக்-பாய்ண்ட் - 1

தமிழ்மணத்தை துவக்கியது காசி என்று நீங்கள் நினைத்தால் நீங்கள் (அ) வலைப்பதிவர்..

தமிழ்மணத்தை துவக்கியது டோண்டு ராகவன் என்று நீங்கள் நினைத்தால் நீங்கள் (ஆ) வலைப்பதிவர்...

செக்-பாய்ண்ட் - 2

தமிழ்மணம் அமெரிக்காவில் இருந்து நடத்தப்படுவது என்று நீங்கள் நினைத்தால் நீங்கள் (அ) வலைப்பதிவர்...

தமிழ்மணம் ஆப்ரிக்காவில் இருந்து நடத்தப்படுவது என்று நீங்கள் நினைத்தால் நீங்கள் (ஆ) வலைப்பதிவர்..

செக்-பாய்ண்ட் - 3

லக்கிலூக் முப்பத்து மூன்று வயதுக்காரர், ஓல்டு மங்கை ராவாக...அடிப்பவர்...மற்றும் கல்யாணமானவர் என்று நீங்கள் நினைத்தால் என்று நீங்கள் நினைத்தால் நீங்கள் (அ) வலைப்பதிவர்..

லக்கிலூக் கல்யாணம் ஆகாத கன்னிப்பையன், செவன் அப் குடித்தாலே மப்பு ஏறக்கூடியவர் என்று நீங்கள் நினைத்தால் நீங்கள் (ஆ) வலைப்பதிவர்..

செக்-பாய்ண்ட் - 4

பார்ப்பணீயம், மீபொருண்மை, பெண்-ஈயம், பின்நவீனத்துவம், பொதுவெளி, வர்க்கபோராட்டம், போன்ற …

நான் கொரியாவில் நேஷனல் பார்ட்டியைத்தான் ஆதரிக்கிறேன்...

ஜப்பான் பற்றியும் ஜிங்கிலி கட்சி பற்றியும் பதிவு போட்டு படுத்தியாகிவிட்டது. இப்போது கொரியா முறை ("யாரையும் விடமாட்டியா நீயி" என்று காண்டு கஜேந்திரன் கத்துகிறான்).

அப்பதிவில் உள்ளதுபோல் இங்கேயும் என்னை சப்பை மூக்கு கொரியனாகவே கருதிக்கொண்டு எழுதுகிறேன் (பச்சையாக சாப்பிட்ட மீன் பற்றி சொல்லமாட்டேன்..அது நிறைய பேருக்கு உவ்வே ஏற்படுத்திவிடும்)..

கொரியாவில் கிராண்ட் நேஷனல் பார்ட்டி மற்றும் யுனைட்டட் நியூ டெமாக்கிரட்டிக் பார்ட்டி ஆகியவை இருந்தாலும் கிரியேட்டிவ் கொரியா பார்ட்டி என்று ஒரு பாட்டி...ச்ச்சே பார்ட்டி உண்டு...அந்த கட்டியின்...ச்சே கட்சியின் மூன் கூக் கியூன் தவிர மீதிப்பேர் முப்பது ஓட்டுக்கு கம்மியாகத்தான் வாங்கியுள்ளார்கள்...அதனால் அதுகுறித்து இப்போது பேசவேண்டாம்...(எப்போது பேசினால் என்ன ? புரியவா போவுது ?)

நான் ஜப்பான் விடயத்தில் கூறியதுபோல கிராண்ட் நேஷனல் பார்ட்டி ஆச்சி...ச்சே ஆட்சி காலத்தில் கொரியா பல பெருமைகளை அடைந்தது...மனதுக்கு வருபவர்கள் பிம்பிலிக்கா பிலாப்பி, மற்றும் மாமா பிஸ்கோத்து...இல்லை இல்லை...லீ இன் ஜீ மற்றும் ஹக் ஹுக் ஹெக் ஜங்...

லீ இஞ்சி பற்றி இப்போது கூறுவேன்.…

ஓசை செல்லாவுக்கு ஒரு சவால் !!!!

Image
ஓஷோ சீடர் ஓசை செல்லா அவர்களே !!!காமம் கலக்காத ஒரு காமக்கதை எழுதி அதை சூடான இடுகையில வரவையுங்க பார்ப்போம்...!!!!

நல்லா பார்த்து எஞ்சாய் பண்ணுங்க...

மேக்கரீனா ரீமிக்ஸ் இது...நல்லா கீது...

குத்துனா இப்பிடி குத்துனும்...

சில்லி பீட் !!!

லவ் லெட்டர்...!!!!

கல்லூரி முடிந்து வீட்டுக்கு வந்தபின் வேறு பெரிய வேலை ஒன்றும் இருக்காது...நாங்கள் நான்கு பேச்சுலர்ஸ் ஒரு வீடு எடுத்து தங்கியிருக்கோம்...

நான், மணி, கோயிந்தன் மற்றும் இளா நாலுபேரும் ரூம்மெட்ஸ்..

திருச்சியில இப்பல்லாம் ரெண்டாயிரத்துக்கு பேச்சுலர்ஸ் வீடு கிடைக்கறது ரொம்ப கஷ்டமாயிருது...

மாம்பழச்சாலை ஏரியாவுல ஒரு சிங்கிங் பெட்ரூம்...

வீட்டுக்கு பக்கத்துல கேள்ர்ஸ் ஹைஸ்கூல்...

நம்ம மணி ஒரு 'காதலன்'...எங்க ரூம்லயே லவ், அது இதுன்னு போனது அவன் மட்டும்தான்...லவ் லெட்டர்லாம் வரும் அவனுக்கு...காலேஜ் கட்டடிச்சுட்டு வந்து கேர்ல்ஸ் ஸ்கூல் பக்கம் அலைஞ்சுக்கிட்டிருபான்...

நாங்க மாரீஸ்ல படம்பார்க்க போனா, எவளோ ஒருத்திக்கு ட்யூசன் முடியும், பார்க்க போவனும்னு போவான்...

இந்த லவ் மேட்டர் எல்லாம் அதிகம் எங்கக்கிட்ட ஷேர் பண்ணமாட்டான்னு வைங்களேன்...

நான் தான் அப்பப்ப சொல்லிக்கிட்டிருப்பேன்...இந்த லவ் அது இது எல்லாம் வேண்டாம், ஏதாவது பிரச்சினை வரும்டா என்று...

நாங்க மூனுபேரும் வெத்துவேட்டுங்க...எதும் செட்டாகலன்னு வைங்களேன்...

ஆங்...எதுல விட்டேன்...காலேஜ்ல இருந்து வந்தபிறகு நாங்க அப்படியே வீட்டுக்கு பக்கத்துல ப்ளாஸ…

ஹிராநந்தானி இட்லி

என்ன ? நேத்து நைட்டு சாம்பாரா ?

சாப்பாட்டு தட்டை தடாரென வீசி எறிந்தவுடன் அதிர்ந்து போனாள் அம்மா...

அதிகம் அலம்பல் எல்லாம் பண்ணாத நான் இப்போதெல்லாம் யாரையும் மதிப்பதில்லை...தகவல் தொழில்நுட்பத்துறையில் ஆறு இலக்க சம்பளம் வாங்கும் எனக்கு யாரை மதிக்கவேண்டிய அவசியம்...

என்னுடைய ப்ராஜக்ட் மேனேஜரும், அப்ரைசலும், ப்ராஜக்ட்டும் தான் முக்கியம் எனக்கு...

என்னுடைய நடவடிக்கையில் ஏற்பட்ட மாற்றங்களை அம்மா, அப்பா உட்பட எல்லோரும் சகித்துக்கொண்டுதானிருக்கிறார்கள்...

வேற வழி...

ஆனால் இப்போதெல்லாம் அதிகம் கோபம் வருகிறது எனக்கு...ஹும்...

ஏண்டா சாப்பாட்டு தட்டை வீசுற...பிடிக்கலைன்னா வெச்சிடலாமில்ல...

என்னது...பிடிக்கலைன்னா வெச்சுடறதா ? என்ன பண்ணிவெச்சிருக்க நீ ?

இட்லி தாண்டா...இவ்ளோநாளா சாப்பிட்டுக்கிட்டு தானே இருக்கே...தெரியாதா...

இட்லி சரி...ஏன் நேத்து நைட்டு சாம்பாரை ஏன் சூடு பண்ணி வெக்குற ? ஏன் புதுசா செய்யவேண்டியது தானே ?

நேத்து நைட்டு உனக்காக பண்ணது தாண்டா...நீ லேட்டா வந்தெ...ஆபீஸ்ல பிசா சாப்பிட்டேன்னு சொன்னே...அப்படியே நின்னுபோச்சு...

நானும் அப்பாவும் இதை தாண்டா சாப்பிட்டோம்...நல்லாத்தானே இருக்கு...

நல்லா இருக்கு…

ஏங்க, அவன் என்னை மொறைக்கிறான்..!!!

அலுவலகம் விட்டு வந்தவுடன் வீடு இரண்டுபடுவது போல கத்தினாள்...

ஏய்...ஏன் இந்த கொலைவெறி ? என்ன ஆச்சு ?

அவன்...அவன்...பல்லை நறநறவென கடிக்கிறாள்...

என்னாச்சு சொல்லும்மா...

அவன் என்னை மொறைக்கிறான்...

யாரு ?

எதிர்த்த அப்பார்ட்மெண்ட் வாச்மேன்...

ஹெஹ்ஹே...

ஏங்க...நீங்க என்ன லூசா ? இவ்ளோ சீரியசான விஷயத்தை சொல்லிக்கிட்டிருக்கேன்...

என்னம்மா இது...உன்னை கல்யாணம் பண்ணப்பவே தெரியாதா ? இப்பதான் கண்டுபிடிச்சமாதிரி சொல்ற...

ஏங்க...உங்க மொக்கை காமெடியை நிறுத்துங்க...மொதல்ல விஷயத்துக்கு வாங்க...

இதுல என்னம்மா பெரிய சீரியஸ்...மொதல்ல ஒரு கேள்விக்கு பதில் சொல்லு...அவன் யாரு ?

முகத்தை சிடுசிடுவென வைத்தபடி...எதையுமே புரிஞ்சுக்கமாட்டியாடா என்றதுபோன்ற ஒரு பார்வையுடன்...

ஏன் உங்களுக்கு தெரியாதா ?

சும்மா சொல்லேன்...

எதிர்த்த வீட்டு வாச்மேன்...

அப்புறம் ? மொறைக்காம என்ன செய்வான்...கேட்ல நின்னுக்கிட்டு மொறைக்கறதுக்கு தான் அவனுக்கு சம்பளம் தறாங்க...ஹி ஹி...

ஏங்க, இப்படி லூசுமாதிரி பேசுறதை என்னைக்கு தான் நிறுத்தப்போறீங்களோ ? அவன் போறவறவங்களை பார்த்து மொறைக்கறதை நான் சொல்லலை...இந்த புதுவீட்டுக்கு குடிவந்த ஒரு வாரமா நான் எப்ப வெளிய வந…