தேடுங்க !

Thursday, January 31, 2008

??????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????



Tuesday, January 29, 2008

தனித்த தமிழச்சி !!!!!!!!!!!!!!!!

கத்தரிக்காய் விற்றால் கூட தமிழச்சி பெயரை சொல்லி ஆரம்பித்தால் அமோகமாக ஓடும் காலம் இது...(யக்கோவ்...கத்ரீக்கா...வெண்டே கா...முருங்கே கா...)...அதனால் குசும்பன், ஆசிப் அண்ணாச்சி வரிசையில் நானும் இணைந்து இப்பாலிக்கா ஒரு கவுஜய காப்பி அட்ச்சிக்கினேன்...!!!தனித்த தமிழச்சி

மரணங்கள் சகஜமாகிப்
போன பூமியில்
போர் உமிழ்ந்த்
எச்சங்கள்
தமிழ் பேசிய
'முண்டங்கள்'!
பிராயங்கள்
பேதமில்லாமல்,
பாலினங்கள்
வித்தியாசமில்லாமல்...
குண்டு வீச்சில்
சமத்துவம்!

கூட்டிப் பெருக்கிய
குப்பைகளாய்
சேர்த்தெரித்த
பிணக்கும்பல்களின்
நாற்றங்களையும் மீறி
என் சுவாசக்
குழிகளுக்குள்
மூச்சு
உயிரென்ற ஒன்றுக்கான
சாட்சியாய்
இயங்க விருப்பமில்லாத
ஆயுள் சுமையுடன்
தனியாக விடப்பட்ட
அனாதையான நான்,
பார்த்துக்
கொண்டிருக்கின்றேன்...
சொந்த மயானமான
வீட்டின் பின்வளவில்
என் குடும்பத்தை
எரித்த சாம்பல்
மேட்டினருகில்,
எனக்கென்று
மிச்சமாய்
எதுவுமில்லாமல்...

வரையறுத்த வாழ்கை
நியதிகளில்
பங்கு கொள்ள
நாதியற்ற
நிகழ்தகவுகளான
பொழுதுகளோடு
நிரந்தரமான
போராட்டங்கள்,
பிரிவுகள், மரணங்கள்
பழகிவிட்ட ஆயுள்..
அதனால்
அழுவதற்கு
தோன்றவில்லை.
சடுதியில் மரணம்
தின்ற உறவுகளால்
உறைந்து போன இதயம்,
அதிர்ந்து போன
உணர்வுகளுடன்...
உயிர் மட்டும்
துடிப்புடன்
உட்கொண்ட
சராசரி ஈழத்துத்
தமிழச்சியாய்
நானும்
அகதியாய்...அனாதையாய்...

இன்னும் எத்தனை
காலம்
வேதனை விழுங்கும்
வாழ்கையை ஜீரணிப்பது?
மண்டையோட்டினுள்
வெள்ளைப் பிண்டம்
இரத்தத்தில் இரசாயன
மாற்றமுருவாக்க
நரம்புகள் சுட்ட
கணத்தாக்கங்களில்
வன்மம் வரிந்து
வரிந்து
என்னுள் கிளர்ந்து
கொழுந்தான அசுரம்...
ஆங்காரமாய்,
அழுவதற்கு
அவமானப்பட்டது
சுயம்...!

எதிர்காலமாய்
இலக்கற்ற பாதை
எதிரில் இருளில்
நீண்டு
கிடக்கின்றது..
எங்கே போய்
நிற்கும்?
விடை பயணப்பட்டால்
மட்டுமே இனி...!

எனக்கான பாதையில்
என் குடும்பம்
எரித்த சாம்பல்
மேட்டை
அடையாள முதல் மைல்
கல்லாக வைக்கிறேன்...
இனி மேல்
எனக்கு பதுங்கு
குழிகள் தேவையில்லை...
பாதுகாப்பதற்கு
எதுவுமில்லாத போது!
பாய வேண்டிய
காரணங்களை
ரணங்களாக
சேகரித்துவிட்டேன்..
வாழ்கையின் அடுத்த
கட்டம் புனுக்கு
எட்டவாய்..

முறிந்து போன
கூண்டுக்கம்பிகளை
கடந்து நடக்கலாம்
இனி..
மீள வந்தால்...
சரித்திரத்தின் ஒரு
அங்கமாவது
என் கையிலிருக்குமே..?
அல்லது
சரித்திரத்தில் ஒரு
துளியாகி போவேன்...!!

-சுவாதி (mswathi1025@yahoo.com)

http://thatstamil.oneindia.in/art-culture/poems/2008/a-poem-by-swathi-220108.html

இரண்டு மூன்று நாட்களாக தமிழ்மணத்தை திறந்தாலே மணம் வீசுவதற்கு பதில் ஒரே கப்பு வாசம்...ஊர்நாட்டில் நவீன கழிப்பிடங்களில் படம் வரைந்து பாகம் குறிக்கப்படும் வார்த்தைகள் சர்வ சாதாரனமாக எஞ்சாய் பண்ணி படிக்கப்படுகின்றன..

பின்னவீனத்துவ கவிஞர்களால் பக்கம் பக்கமாக எழுதப்பட்டபோது மூடிக்கொண்டு இருந்தவர்களுக்கு, தமிழச்சி கிழிக்கும்போது மட்டும் ஏறிக்கொண்டு வந்து - தப்பு தப்பு, செல்லாது செல்லாது என்பது பாசிசம்...

அய்யனாரும் சுகுனா திவாகரும் எழுதும்போது அதை பின்னூட்டம் இட்டு திட்டவேண்டியது தானே ? அப்போ எங்கே போச்சு இந்த நாகரீக சிந்தனை, "கனியிருப்ப காய் கவர்ந்தற்று" திருக்குறள் மயிறு மண்ணாங்கட்டியெல்லாம் ?

பெருசா வந்துட்டாங்க.. (எப்பீடீடீடீ !!!)

கழகம் சாகும்வரை கூட்டம்போடும்...செத்தபிறகு - இரங்கல் கூட்டம் போடும்...

பெங்களூர் கிளைக்கழகம்..
லேக் ஏரியா...அல்சூர்...

அன்புமணி - விஜயகாந்த் - செந்தழலின் எரிச்சல்கள் ...!!!!!!!!!!!!!!

இரண்டு விஷயங்கள்...ஒன்றுக்கொண்று தொடர்பில்லாதவைதான்...ஆனால் சமுதாய நோக்கோடு சொல்லப்பட்டவை...அவற்றில் எது டாப் என்று நீங்கள் தான் சொல்லவேண்டும்...

முதலில் கேப்டன்...நேற்று ஒரு பொதுக்கூட்டத்தில் பேசும்போது, தே.மு.தி.கவை சேர்ந்த இளைஞர்கள் வரதட்சணை வாங்காமல் திருமணம் செய்யவேண்டும் என்று அழைத்திருக்கிறார்...

இன்றைக்கு தமிழகத்தில் வரதட்சிணை பிரச்சினையால் குடும்ப உறவுகள் பாதிக்கப்பட்டு நிர்கதியான பெண்களின் எண்ணிக்கை பல்லாயிரக்கணக்கு...100த்து பத்துபேர் இந்த அழைப்பை ஏற்று வரதட்சிணை பெறுவதிலோ / கொடுப்பதிலோ மனமாற்றத்தை கொண்டுவந்தால் அதனால் பயனடையப்போவதென்னவோ உழைக்கும் மற்றும் நடுத்தரவர்க்கத்தினர்தான்...

இதுபோன்றதொரு அறைகூவலை கலைஞரோ, அம்மையாரோ, வை.கோவோ, டாக்டரோ, வாசனோ, நல்லக்கண்ணுவோ, வரதராஜனோ, கிருட்டினசாமியோ, திருமாவோ இதுவரை விட்டதாக எனக்கு நினைவில்லை...

கேப்டனை இந்த விஷயத்தில் நெஞ்சாரப்பாராட்டுகிறேன்...!!! மக்கள் பிரச்சினையை மனதார உணர்ந்த ஒரு பாமரனின் பேச்சுத்தான் இது...இதில் அரசியல் இல்லை...மக்கள் நலன் தான் இருக்கிறது...என்பது என்னுடைய தெரிவு...

அடுத்ததாக டாக்டர் அன்புமணி...

பாலிவுட் உச்ச நட்சத்திரங்களை பெயர் விட்டு அழைத்து, அவர்கள் திரையில் புகைப்பதை நிறுத்தவேண்டும் என்று கோரிக்கை விடுத்திருக்கிறார்...அய்ம்பது சதவீதத்துக்கு மேற்பட்ட பிள்ளைகள் பாலிவுட் திரை உலகத்தினரால் புகைப்பிடிக்கும் பழக்கத்துக்கு ஆளாகிறார்கள் என்று அவரது புள்ளிவிவரம் சொல்கிறது...

தமிழகத்தில் ரஜினி மற்றும் விஜய் ஆகியவர்களை ஏற்கனவே திரையில் புகைப்பதை நிறுத்துமாறு அழைப்புவிடுத்து, அவர்களும் அதை ஏற்றுக்கொண்டார்கள் என்பதில் மகிழ்ச்சியே...

ஐ.டி.சி நிறுவனத்தினையே இழுத்து மூடவேண்டியது தானே என்று கேட்கும் அப்பாவிகளுக்கு - இது மிகப்பெரிய தொழில்...இதனை ஒரேயடியாக நிறுத்தினால் பல்லாயிரக்கணக்கானோர் வேலை இழப்பதுடன் அரசுக்கும் வருவாய் புஸ் போகும்...

ஆனால் மனமாற்றத்தின் மூலமே புகைப்பழக்கத்தினை நிறுத்தமுடியும்....புதிதாக புகைப்பவர்களை தடுக்கவேண்டும்...புகைப்பழக்கத்தினால் ஏற்படும் தீமைகளை மக்களுக்கு வெளிப்படையான பிரச்சாரத்தின் மூலம் விளக்கவேண்டும்.....

ஹேட்ஸ் ஆப் அன்புமணி...!!!

கொறுசு எரிச்சல்கள்...

தமிழச்சி மேட்டர்: தமிழச்சிக்கு பின்னூட்டம் போடமுடியாத நிலையில் இருக்கிறேன்...அலுவலகத்தில் ஜிமெயில் அக்ஸஸ் தடைசெய்யப்பட்டுள்ளது...அவரது தனிமடலுக்கு அனுப்பிய மெயிலுக்கு பதிலைக்கானோம்...ஒருவேளை பிஸியா சண்டைபோட்டுக்கொண்டுள்ளார்களோ ? சும்மா இருந்த அவர்களை சீண்டி வம்பு 'வள'க்கும் 'அய்'ந்தாம்படைகளை பெரியார் விழிப்புணர்வு இயக்கத்தின் பெங்களூர் கிளை வன்மையாக கண்டிக்கிறது...

கள்ளச்சாராய மேட்டர் : தெருவுக்கு தெரு டாஸ்மார்க் கடைகளை திறந்துவைத்துள்ள அரசு, கள் இறக்க இன்னும் அனுமதிக்காதது எரிச்சல்...புதுவையைப்போல் சாராயக்கடை மற்றும் கள்ளுக்கடைகளை தெருவுக்கு தெரு திறந்துவிட்டுவிடுங்கள்...குடிப்பவன் என்றைக்கும் குடித்துக்கொண்டுதானிருப்பான்...அவனை எப்படி தடுக்கமுடியும்...இன்றைக்கு கள்ளச்சாராயம் இல்லாத ஊர் எது தமிழகத்தில் ? டாக்டர் கலைஞர் இதை கண்டும் காணாமல் இருப்பது ஏனோ ? பத்து ரூபாய் இருப்பவன் பட்டை அடிக்கவும், அய்ம்பது ரூபாய் இருப்பவன் கட்டிங் வாங்கவும் போய்க்கொண்டுதானே இருக்கிறான்...அட்லீஸ் கள்ளு இறக்க அனுமதி கொடுத்து பனைத்தொழிலில் இருப்பவர்கள் மூன்றுவேளை நன்றாக சாப்பிடவையுங்களேன் மிஸ்டர் கலைஞர்...

லாட்டரி மேட்டர் : முன்பெல்லாம் பஸ்டாண்டு மற்றும் பொது இடங்களில் கழுத்தில் பெரிய அட்டை ஒன்றை மாட்டிக்கொண்டு பலமாநில லாட்டரிகளை விற்பவர்களை பார்த்திருப்பீர்கள்...அம்மையாரது அரசு ஒரு உத்தரவின் மூலம் லாட்டரியை ஒழித்துவிட்டது என்னவோ வாஸ்தவம் தான்...ஆனால் அதனால் சொற்ப வருமானம் பெற்றுவந்த பல்லாயிரக்கணக்கானவர்கள் சோத்துக்கு சிங்கி அடித்தார்கள்.....சில பண முதலைகள் லாட்டரி தொழிலால் உருவானதென்னவோ உண்மைதான்...ஆனால் இந்த தொழிலை முறைப்படுத்துவதை விட்டுவிட்டு ஒரேயடியாக இந்த தொழிலுக்கே ஆப்பு அடித்தது என்ன நியாயம் ? இன்றைக்கு அமெரிக்காவில் அய்ரோப்பாவில் ஆப்ரிக்காவில் லாட்டரி இருக்கிறது...பக்கத்து மாநிலங்களால கருநாடகம், கேரளாவில் இருக்கிறது.....தமிழகத்தில் லாட்டரியை தடைசெய்துவிட்டதன் பலனாக குடியானவர்கள் எல்லாரும் மூன்று வேளை பிரியாணி சாப்பிடுகிறார்களா என்ன ? அதே கஞ்சி, சாம்பார், துவையலோடு ஊறுகாய்தானே ? மக்கள்ஸ்...நீங்களே சொல்லுங்க....!!!

குற்றப்பரம்பரை மேட்டர் : இன்னும் சாதி சான்றிதழ் வழங்கப்படாமல் அடிக்கடி கலெக்டர் அலுவலகம் முன்பு நாற்பது அய்ம்பது பேர் போராடுவதும், அது நாளிதழ்களில் செய்தியாவதும், பின்பு போராடியவர்கள் மப்ஸல் பஸ் பிடித்து ஊர்போய் சேருவதும் மாதத்தில் நான்கு முறை நடக்கிறது...சில சமயம் போராட்டக்காரர்களை மூன்று ஏட்டையாக்களும் ஒரு எஸ்.ஐயும் சேர்ந்து வளைத்து கைது செய்து, வேனில் ஏற்றி, அருகாமை கல்யாண மண்டபத்தில் மூன்று நான்கு மணிநேரம் உட்காரவைத்து பிறகு அனுப்பிவிடுவார்கள்...(கல்யாண மண்டபத்துக்கு முடிச்சு அவிழ்ப்பார்களா என்பது யாருக்கும் தெரியாது)...இதெல்லாம் என்ன ? வெள்ளைக்காரன் காரத்தில் குற்றப்பரம்பரை என்று நரிக்குறவர், அருந்ததியர் போன்றவர்களை - மேலும் சில சாதியினரை சேர்த்து, எந்த பிரச்சினையானாலும் அவர்களை கைதுசெய்து உள்ளே தள்ளும்படி ஒரு வாய்ப்பாக வைத்தான்...ஒரு சில சாதியினர் போராடி - அவர்களுக்கு உள்ள இன்ப்ளூயன்ஸ் - அரசு இயந்திரம் - ஓட்டு எண்ணிக்கை ஆகியவற்றை வைத்து இந்த பிரச்சினையில் இருந்து வெளியேறிவிட்டார்கள்...இன்னும் நரிக்குறவர்கள் போன்றவர்கள் - இந்த காரணத்துக்காக சாதி சான்றிதழ் வழங்கப்படாமல் - பள்ளியில் சென்று படிக்க வாய்ப்பில்லாமல் - உள்நாட்டிலேயே அகதிகளாக வாழ்கின்றனர்...அவர்களை எங்கே அரசு கவனிக்கப்போகுது ? இப்தார் விருந்துல குல்லாய் கவிழ்த்துக்கொண்டு கஞ்சி குடிக்க அவர்கள் என்ன பத்து சதவீத ஓட்டா வைத்துள்ளார்கள்...ஹும்...!!!

பாமரன் மேட்டர்: லீனா மணிமேகலையை குமுதத்தில் சூப்பராக கலாய்த்துள்ளார்...அந்த மேடம் என்ன பதில் சொல்கிறாரோ அதையும் குமுதத்தில் போடத்தான் போகிறான்..இதனால் குமுதத்தில் சர்க்குலேஷன் மொத்தமாக பத்து புத்தகம் அதிகரித்தால் சந்தோஷமே...!!!

Thursday, January 24, 2008

வள்ளுவர் மேட்டர் - சூப்பர் !!!!!!!!

வள்ளுவர் ஓர் இந்துவாக நிச்சயம் இருக்க முடியாது.

வள்ளுவர் இந்துவா? பல தமிழர்கள் இந்து மதம் நமது மதம் என்ற அறியாமையில் மூழ்கிக் கிடக்கின்றார்கள்.

தமிழ் நூலான திருக்குறளை இந்து மத நூலாக எண்ணத் துணிகின்றனர். இந்து மதத்தின் மிக முக்கிய நூலான பகவத் கீதை கொலை செய்வதையும் நியாயப்படுத்துகிறது.-நரபலிக்கும் நியாயம் கற்பிக்கிறது.

--இளங்கோ (இலண்டன்)


காலஞ் சென்ற கவியரசர் கண்ணதாசன் அவர்கள், தனது அர்த்தமுள்ள இந்துமதம் இரண்டாம் பகுதியில் வள்ளுவர் ஓர் இந்து என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதியுள்ளார். இறுதியில் தமிழரான வள்ளுவர் ஓர் இந்து; இந்துவான வள்ளுவர் ஒரு தமிழரே என்று அந்தக் கட்டுரையை முடிக்கின்றார்.

கவியரசர் கண்ணதாசனைப் போன்று பல தமிழர்கள் இந்து மதம் நமது மதம் என்ற அறியாமையில் மூழ்கிக் கிடக்கின்றார்கள்.மூழ்கிக் கிடப்பதோடு மட்டுமல்லாது, மதச்சார்பற்ற நமது பெருந்தமிழ்ப் புலவர் வள்ளுவரை இந்துவாக நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள். அத்துடன் ஈடு இணையற்ற தமிழ் நூலான திருக்குறளை இந்து மத நூலாக எண்ணத் துணிகின்றனர்.

இவ்வாறு திருவள்ளுவரை இந்துவாகவும், திருக்குறளை இந்துத்துவம் சார்ந்ததாகவும் பலர் நினைப்பதற்கு பார்ப்பனரான பரிமேலழகர் எழுதிய திருக்குறளுக்கான விளக்க உரையும் ஒரு முக்கிய காரணமாகும்.

குறள்களுக்கு தவறான பார்ப்பனிய விளக்கம் கொடுத்து திருக்குறளின் அர்த்தத்தை பரிமேலழகர் திரித்து விட்டார் என்பதுதான் உண்மை.

ஆனால் நமது வள்ளுவப் பெருந்தகையோ இந்து மதத்தையும், அதனை இயக்கும் கருவியான பார்ப்பனியத்தையும், இந்து மதத்தின் ஆணிவேராக விளங்கும் வருணாசிரம தர்மத்தையும், மற்றும் இந்து மதத்தின் மூடப் பழக்க வழக்கங்களையும் தனது குறட்பாக்கள் வழியாக சாட்டையடி கொடுப்பதுபோல் கடுமையாகச் சாடுகிறார்.

பிறப்பினால் ஏற்றத் தாழ்வுகளைக் கற்பிக்கும் வருணாசிரம தர்மம். குறிப்பாக பகவத்கீதையும் மனுதர்மமும் பிரம்மாவின் முகத்திலிருந்து பிறந்தவன் பிராமணன் என்றும் மனிதப் பிறவிகளில் அவனே உயர்ந்தவன் என்றும் பெண்களும் சூத்திரர்களும் தாழ்ந்தவர்கள் என்றும் உரைக்கிறது. (மனுதர்மம் அத்தியாம் 1 சூத்திரம் 31 - பகவத் கீதை அத்தியாயம் 9 சுலோகம் 32)

நமது வள்ளுவரோ இதைக் கடுமையாக மறுத்து,

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமையான். (குறள் 972)


ஆரியர்களின் மனுதர்மம் புலால் உண்பதை அனுமதிக்கிறது. பசுக்களை யாகத்தில் வெட்டிப் பலியிடவேண்டும் என்றும் யாகத்தில் படைக்கப்பட்ட பசுவின் இறைச்சியை உண்பது தெய்வீகச் செயல் என்றும் உரைக்கிறது. (மனுதர்மம் அத்தியாயம் 5 சூத்திரம் 27 30 35 39).

இந்து மதத்தின் மிக முக்கிய நூலான பகவத் கீதை கொலை செய்வதையும் நியாயப்படுத்துகிறது.

இதற்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு காந்தியடிகளைக் கொலை செய்த குற்றத்திற்காக பார்ப்பனரான நாதுராம் கோட்சேயைக் கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்தியபோது, அவர் கீதை காட்டும் இந்து தர்மப்படி காந்தியைக் கொலை செய்தது நியாயமே என்று கூறினார்.

இந்து மதம் நரபலிக்கும் நியாயம் கற்பிக்கிறது.மகாபாரதத்தில் குருட்சேத்திரப் போர் தொடங்குவதற்கு முன் பாண்டவர்களை வெற்றி பெறச் செய்வதற்காக அருச்சுனனின் புதல்வர்களில் ஒருவனான அரவானை கண்ணன் நரபலியிட்டதாக குறிப்பிடப்பட்டிருக்கிறது.

பொதுவாக அன்றைய காலத்தில் பார்ப்பனர்களுடைய தோற்றம் தமிழர்களிடமிருந்து முற்றிலும் மாறுபட்டிருந்தது. தலைமுடியை முன்புறம் நன்றாக மழித்து பின்புறம் தலைமுடியை நீட்டி குதிரை வால் போன்று வளர்த்திருப்பார்கள். இத்தகைய பார்ப்பனர்களை வள்ளுவர் இவ்வாறு கடிந்து கொள்கிறார்.

மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்
பழித்த தொழித்து விடின் (குறள் 280)


உயரிய எண்ணம் கொண்ட வள்ளுவர் தேவர், பார்ப்பான் போன்ற சொற்களின் வழியாக ஆரியக் கருத்துகளை எதிர்க்கவும் மறுக்கவும் துணிந்திருக்கிறார் என்றால் சமத்துவத்திற்கும் சமூக நீதிக்கும் எதிரான ஆரியர்களுடைய வேதங்களும் புராண இதிகாசங்களும் வள்ளுவருக்கு ஒருவித சினத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும்.

இந்துப் புராண இதிகாசங்களிலும் துதி பாடல்களிலும் கடவுளர்களின் அற்புதங்கள் கதை கட்டிவிடப்பட்டுள்ளன. மகாபாரதமும் தன் பங்கிற்கு பாண்டவர்களின் வெற்றிக்கு அருச்சுனன், பீமன், அபிமன்யு போன்றவர்களின் வீரத்தை முக்கிய காரணமாகக் காட்டாமல் கண்ணனின் அருளையே முக்கியமாகக் காட்டுகிறது.

தனி மனிதனுடைய வீரமும் முயற்சியும் பின்னுக்குத் தள்ளப்பட்டு கடவுள் தன்மைகள் முக்கியப் படுத்தப்பட்டிருக்கும். வள்ளுவரின் திருக்குறளோ இதற்கு நேர் எதிரான கருத்தைக் கூறுகிறது.

தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும் (குறள் 619)


இந்து மதம் உடலை வருத்தி உழைக்காமல் பிறரிடமிருந்து யாசகம் பெற்று வயிறு வளர்க்க உதவும் புரோகிதத் தொழிலையே சிறந்த தொழிலாகக் கூறுகிறது.

திருக்குறளோ நெற்றி வியர்வை நிலத்தில் சிந்த ஏர் பூட்டி உழும் உழவர்களின் தொழிலையே சிறந்த தொழிலாகக் கூறுவதுடன் உலக மக்கள் உழவுத் தொழிலை நம்பித்தான் வாழ்கிறார்கள் என்கிறது.

இதோ அந்தக் குறள்

சுழன்றும் ஏர்ப் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை (குறள் 1031)


தமிழரின் மறையான திருக்குறள் நெடுகிலும் இந்துத்துவ எதிர்ப்புக் கருத்துகள் நிறைந்து காணப்படுகின்றன. எனவே வள்ளுவர் ஓர் இந்துவாக நிச்சயம் இருக்க முடியாது.

இளங்கோ (இலண்டன்)

மூலம் : சிந்திக்க உண்மைகள் : http://idhuthanunmai.blogspot.com/2008/01/blog-post_23.html

Tuesday, January 22, 2008

பாமரன் விவகாரம் : லீனாமணிமேகலைக்கொரு கேள்வி...லீனாமணிமேகலைக்கொரு கேள்வி...

ஐய்யய்யோ எனக்கு ரெண்டு விஷயங்கள் புரியலீங்கோ.

முதலில், கல்லூரிக்குக் கவுன் போட்டுக் கொண்டு போனது யாருங்கோ?
ரெண்டாவது, ஆணுக்கும் பெண்ணுக்கும் இப்பவே வித்தியாசம் தெரியலீங்கோ, உடம்பிலேயும் சரி, உடையிலேயும் சரி, இன்னும் பெரியார் சொன்ன மாதிரி செய்தால், குழந்தைகள் குழம்பிப் போய்விடும் சாமிகளா.

அடுத்த சந்தேகம், லீனா மணிமேகலை, பாமரனைக் குற்றம் சொல்லுகிறார் என்பது சரி. ஆனால், அவரி பெரியார் உள்ளே செல்லாததையும் தவறு என்று சொல்கிறாரா? அல்லது பெரியார் உடைகள் ஒன்றாக இருக்க வேண்டும் என்று சொன்னதை எதிர்க்கிறாரா? ஏன் கேட்கிறேனென்றால், பெரியாரின் "புதிய உடை"க் கொள்கையை ஆதரித்தால், இவரும் ஆண் மாதிரி அல்லவா இருக்க வேண்டும்? அம்மணி, இந்த உலகத்தில், எல்லா ஜீவராசிகளிலும் ஆணினம் தான் இயற்கையிலேயே அழகு. ஆண் மயில், சிங்கம், சேவல் என்று எல்லாமும் ஆணினத்தில் தான் அழகு. பெண்கள் நீங்கள் பெரியாரைப் பின்பற்றுகிறேன் என்று இருப்பதையும் கெடுத்துக் கொள்ளாதீர்கள். மேலும், பெரியாரை இவ்வளவு தலைகீழாகக் கரைத்துக் குடித்திருக்கும் நீங்கள், அவரின் கொள்கைப்படி முடியைக் கத்தரித்துக் கொள்ளாதது ஏன்? ஒரு வேளை, பெரியாரின் கொள்கைகளை நீங்கள் "வெளியிலுருந்து" ஆதரிக்கிறீர்களோ?

ஒரிஜினல் மேட்டர்

அங்கே கலக்கல் பின்னூட்டத்தினை போட்டவர்: சாணக்யன்

ஈயம் பித்தாளைகள் உடனே கிளம்பவேண்டாம்...இது சாணக்கியனது கருத்து மட்டுமே...

குறுக்கு விசாரணை:

மேடம் அந்த கல்லூரிக்கு அணிந்து சென்றது ஸ்லீவ்லெஸ் சுரிதாராமே ?

- like the post ?? Let me know by clicking down.

Wednesday, January 16, 2008

ஜெயலலிதா வீட்டில் மோடி தின்ற 45 வகை சாப்பாடு லிஸ்ட்

சமீபத்தில் முன்னாள் முதல்வர் செல்வி.ஜெயலலிதா வீட்டில் நடந்த ஒரு விருந்தில் திரு.மோடி அவர்கள் 45 வகையான சைவ - அசைவ உணவுடன் விருந்து சாப்பிட்டதாக செய்தி வெளியானது...

தெரிந்த நன்பர்கள் மூலம் என்ன என்ன அயிட்டங்கள் அங்கே கிடைத்தன ( நான் தோழியை சொல்லவில்லை) என்பதை கீழே எழுதியுள்ளேன்...

சூப்

1.தக்காளி சூப் ( பெங்களூர் தக்காளி)
2.ஆட்டுக்கால் + நெஞ்செலும்பு சூப் (ஆட்டின் பூர்வீகம் - No Info)
3.நண்டு சூப் ( நண்டு from கராச்சி, பாக்கிஸ்தான்)
4.நாட்டுக்கோழி சூப் ( கோழி from ஆண்டிப்பட்டி)
5.இனிப்பு சோள கிளியர் சூப் (ஸ்வீட் கார்ண்)

ஸ்டார்ட்டர்ஸ்

1. பிரான்ஸ் உருளைக்கிழங்கு பிரை ( பிரான்ஸில் இருந்து வரவழைக்கப்பட்டது)
2. வஞ்சிரம் பிங்கர் பிரை ( மீன் from கடலூர், உபயம் மாவட்ட செயலாளர் சொரத்தூர் ராஜேந்திரன்)
3.கோபி மஞ்சூரியன் ட்ரை (வறுத்த காலிபிளவர்) - பெங்களூரில் இருந்து
4. கோழி 75 (நாமக்கல் கோழி)
5. மட்டன் போன்லஸ் ஸ்மாஸ் பீஸ் பிரை (நெய்யில் பொரிக்கப்பட்டது)

மெயின் கோர்ஸ் நெம்பர் 1

1. மட்டர் பனீர் பிரை + க்ரேவி
2. கத்தரிக்காய் கூட்டு
3. அரைக்கீரை சுண்டல்
4. வாழைத்தண்டு கறி
5. தக்காளிக் கூட்டு
6. புடலங்காய் கூட்டு
7. உருளைக்கிழங்கு பொரியல்
8. பாசிப்பருப்பு கூட்டு
9. பயத்தம் பருப்பு தால் பொரியல்
10. மிக்ஸுடு கர்ரீஸ் கூட்டு (பல காய்கறிகள் சேர்ந்த கூட்டு)

மெயின் கோர்ஸ் நெம்பர் 2

1. கேரளா ரைஸ்
2. தஞ்சாவூர் பொன்னி ஓயிட் ரைஸ்
3. ஹைதராபாத் பாஸ்மதி ரைஸ்
4. செஞ்சி பொன்னி ( குறுவை) ரைஸ்
5. செட்டிநாட்டு பொன்னி (ஐ.ஆர் 35) ரைஸ்

மெயின் கோர்ஸ் நெம்பர் 3

1. ஹைதராபாத் சிக்கன் பிரியாணி ( செப் ப்ரம் ஹைதராபாத்)
2. நாட்டுக்கோழி பிரியானி ( செட்டினாட்டு சமையல்காரர்)
3. ஹைதராபாத் மட்டன் பிரியானி ( செப் ப்ரம் ஹைதராபாத்)
4. தலப்பாகட்டு பிரியாணி ( மட்டனா / சிக்கனா - தகவல் இல்லை)
5. ஆம்பூர் பிரியாணி ( மட்டன்)
6. ஆம்பூர் பிரியாணி ( சிக்கன்)
7. வாணியம்பாடி சிக்கன் பிரியாணி ( மட்டன் பிரியாணி இல்லை)
8. செட்டினாட்டு மீன் பிரியாணி
9. கடலூர் பிராண் பிரியாணி ( சிங்கி எறா (Male Breed) பிரியாணி)
10. தூத்துக்குடி சுறா பிரியாணி (மேல் விவரம் இல்லை)

மெயின் கோர்ஸ் நெம்பர் 4 மற்றும் எண்ட் ஆப் த புட்

1. நண்டு ரசம் ( எக்ஸ்போர்ட் குவாலிட்டி மெட்ராஸ் நண்டு)
2. வல்லாரை கீரைக்குழம்பு
3. கொங்குநாட்டு மட்டன் குழம்பு (கோயம்புத்தூர் ஸ்டைலாம், சரியான விவரம் தெரியவில்லை)
4. சித்தூர் புளிக்காய்ச்சல்
5. புளிச்சக்கீரை மோர்க்குழம்பு
6. செட்டினாட்டு வஞ்சிர மீன் குழம்பு
7. சுறா புட்டு
8. நீர் மோர்
9. சுட்ட அப்பளம்
10. கும்பகோணம் வெற்றிலை பீடா.

அம்புட்டுதேன்...என்ன பசிக்குதா உங்களுக்கு...ஆங்...இன்னோன்னு சொல்ல மறந்துட்டனே...

இதை எல்லாம் சாப்பிட்டு முடிச்சவுடனே, ரெட் கலர்ல ஒரு டம்ளர்ல ஊத்தி ஒரு மடக்கு குடிச்சாராம்...ப்ளட் மாதிரி இருந்ததாம்...ஏதோ ஒரு இன்னொஸண்ட் சோலோட ப்ளட்...3000 பேர்ல ஒருத்தனோடதா இருக்காது...இது தனியாத்தான் இருக்கும்...என்ன 45 அயிட்டத்தை வெச்சுட்டு எலையில கடைசியில 'அதை' வெக்குறேன்னு பாக்குறீங்களா ? இந்த நாதாரிக்கு விருந்து ஒரு கேடு...ஹும்...

திண்ணையில் ஜெயமோகனின் வேண்டுகோள்....

திண்ணையில் ஜெயமோகனின் வேண்டுகோள்....

திண்ணையில் ஜெயமோகன் உலகத்தமிழர்களுக்கு வேண்டுகோள் விடுத்திருக்கிறார்...அது என்னன்னா இது தானுங்கோ...

இங்கன அமுத்துங்க

///// மலேசியாவில், சிங்கப்பூரில், கனடாவில், அமெரிக்காவில், தமிழகத்தில் என உலகமெங்கும் உள்ள தமிழிலக்கிய வாசகர்களில் சிலருடைய மனசாட்சியையேனும் இச்சொற்கள் சென்று தொடும் என நான் நம்புகிறேன். அவர்களில் சிலராவது இதற்கு ஏதாவது செய்யவேண்டும். மீண்டும் புது அமைப்புகளை உருவாக்குவதன்றி இதற்கு வேறு வழியும் இல்லை. /////

அதாவது புதுசா ஒரு அமைப்பை ஏற்படுத்து, ஜோல்னா பை மூனுநாள் தாடிவாலாக்களுக்கு விருது ( அமவுண்டு) தரவேணுமாம்...

நாட்ல எவ்ளோ பிரச்சினைகள் இருக்க, இவர் என்ன இதுவரை அறிமுகம் இல்லாத நபர்களுக்கு விருது கிடைக்கலியேன்னு இவ்ளோ கஷ்டப்பட்டு நொந்து நூடுல்ஸ் ஆகி எழுதறாரே அப்படின்னு தான் ஒரு சாமானியன் ( லைக் மீ) நினைப்பான்...

இவருக்கு பொறாமைப்பா...அதான் அந்த விருதுக்குழுவுல இருக்கறவங்களை கலாய்க்கிறாரு...ஆமாம்...இவருக்கு கிடைக்கலை...(அப்படியா?)...அதனால அவங்களை அக்யூஸ் பண்றது மூலமா அவங்களோட கிரெடிட்டபிலிட்டியை கேள்விக்குறியாக்கி, கேலிக்குரியதாக்கி, மண்டையில ஒன்னுமில்லாதவனுங்கன்னு திட்டிவெக்குறார்...அப்படீங்கறார் ஒரு மூன்றாம் தர வாசகர்...(லைக் மீ)

பொதுவா எழுத்தை விட்டா வேறு வேலை இல்லைன்றவங்க கம்மிதான்...பேங்க் எம்ப்ளாயீஸ், உருப்புடியா வேற வேலை செய்யத்தெரியாத சோம்பேறிங்க தான் எழுதறேன் எழுதறேன்னு திரிஞ்சிக்கிட்டிருப்பாங்க...அல்ட்டிமேட் கோல் சினிமாவுல எண்ட்ரி ஆகுறதோ, இல்லை ஏதாவது வெகுஜனப்பத்திரிக்கை எடிட்டோரியல்ல போய் குந்திக்கினு குப்பை கொட்டுறதோத்தான் இருக்கும்ங்கறாரு ஒரு வாசிப்புன்னா என்னான்னு தெரியாத மொக்கை வாசகர்..(லைக் மீ)

இயல்புவாதம்,தஸ்தாவொஸ்கி, சே, பாப் மார்லி, தாஸ் காப்பிடஸ், சிட்னி ஷெல்டர், சூழலியல் அபத்தவாதம், அங்கதக் கவிதைகள், ரஸ்புத்தீன், காப்கா, ஆல்பெர் காம்யூ, செம்மலர், ஜோசம் டிஜுகாஸ்வெல்லி, இவர்களை/இவைகளை பற்றியெல்லாம் மேலிருந்து கீழாக படித்து, லைட்டாக ஒற்றைத்தலைவலியுடன் பீச்சு மணலில் புகையுடனும், சரக்குடனும் சிற்றிலக்கிய அரசியல்கள் விவாதிக்கும் சிலபலருக்கு வேலை வெட்டி என்று இருக்கிறதா என்று சந்தேகம் கொள்ளும் வேளையில், சாகித்திய அக்கதமி கொடுக்கும் பிரைஸ் மணியை வைத்து மூன்று செண்டு நிலம் ப்ளான்செய்துகொண்டு எழுத உட்காரும் இலக்கிய கூட்டத்தின் பர்ஸண்டேஜ், திடீர் மழையால் வெள்ளம் அடித்து அறுக்கவேண்டிய நெற்பயிர் தலைவரை தண்ணீர் நின்று அழுகிறதே, வெள்ள நிவாரணம் கிடைக்குமா, அறுத்து அடித்தாலும் மூட்டைக்கு முன்னூறாவது கிடைக்குமா என்று நினைக்கும் பர்ஸண்டேஜை விட கம்மியா அதிகமா என்று மண்டை குழம்பி இரண்டு சைடும் தலைவலிக்கு ஆளாகும் மூன்றாம் தர குமுதம் வாசகர் ( லைக் மீ)...

பின் தொடரும் நிழலின் குரல் படிச்சிருக்கியா ? ஜே.ஜே சில குறிப்புகள் ? சுந்தர ராமசாமியோடது ஏதாவது ? ம்ம்ஹும்...அப்ப என்ன தான் நீ வாசிச்சிருக்க ? புத்தரின் ஜாதகக்கதைகள், ம்ம்ம்ம் அப்புறம் பொன்னியின் செல்வன்...அடச்சே...நீ யெல்ல்லாம் வாழுறதே வேஸ்ட்...நாஞ்சில்நாடன், வண்ணநிலவன், மனுஷ்ய புத்திரன் இவங்கள்ளாம் யாருன்னு தெரியாத நீ, இன்னும் ஒருவாரத்துக்கு சாப்பிடாதே...என்ன கொடுமை பிரதர் இது...நீங்க சொல்ற இலக்கியவாதிகளை தெரிஞ்சுக்கிட்டு நான் என்ன செய்யப்போறேன்...கொக்கோ கோலா கம்பெனிக்காரன் இந்திய மக்களை முட்டாளாக்குறான்னு தெரியும்...இது சமூகம்...அப்புறம் என்னுடைய இந்த வருஷ அப்ரைசல் எத்தனை பர்சண்டேஜுன்னு தெரிஞ்சா போறாதா ? என்று கேட்கும் தேர்ட் ரேட் வாசகன் ( லைக் மீ)

உலகத்தமிழர்கள் எல்லாம் சேர்ந்து காசு போட்டு, ஒரு பெரிய விருது உருவாக்கி, அதுக்கு இயல், புயல், உலகத்தமிழர் அக்கடமி அப்படீன்னு ஒரு பேரு வெச்சு, வருஷா வருஷம் பயங்கர அல்டிமேட்டா ஒரு விழா எடுத்து, அதுக்கு சீ.எம் எல்லாம் கூப்பிட்டு, சாகித்திய அக்கதமிக்காரனுங்க மூக்கை உடைச்சு, அவனுங்க ரிஜெக்ட் பண்ண ஆளுங்களுக்கெல்லாம் ஒரு டபுள் பெட்ரூம் ப்ளாட் வாங்குற அளவுக்கு பொற்கிழியோட விருது கொடுக்கனும்..அடப்பாவி மக்கா...தமிழ் நாட்டுல அகதியா நிக்குற ஈழத்தமிழன் கக்கூஸ் கூட இல்லாம கஸ்டப்படுறானே...அதை கவனிக்க ஒரு கமிட்டி போடுறதுன்னு ஒரு எண்ணமாவது வந்துச்சா ? அதெல்லாம் முடியாது...கலை....எழுத்துக்கலை....இலக்கியம்...நவீன இலக்கியம்...சூழலியல்...எழுத்து முன்னோடிகள்...இதுதான் முக்கியம்....

அடப்பாவீ...தமிழ் நாட்டுல மக்கள் கஞ்சித்தொட்டி, எலிக்கறிப்பஞ்சம் இல்லாம மூனு வேளை சாப்பிடுறதென்னமோ நிஜம்தான்...ஆனா நடுத்தர மக்கள் அன்னாந்துபார்க்கும் அளவில் விலைவாசி உயர்வு, ஒருபுறம் வாங்கும் சக்தி அதிகரிக்கும் கூட்டம், மறுபுறம் நகரத்தை விட்டு விலகி ஓடவேண்டிய நிலையில் ஒரு பெருங்கூட்டம்...தொழிற்புரட்சி...சுயலாப அரசியல்...இந்த கொடுமையை எல்லாம் எழுத்தில வடிக்காதீங்க...காதல் கவிதைகள் எழுதி பேனாவுக்கு சுயமைதுனம் செய்துவிடும் சிற்றிலக்கியத்துக்கு விருது உருவாக்கி, அதை அமவுண்டோட கொடுத்து, உள்ளூர சந்தோஷப்படுங்க...இதுக்கு உலகத்தமிழர்கள் அறைகூவல்...கோழி கூவினா சூப்பாவது வைக்கலாம்...இந்த அறைகூவலை ப்ரிண்ட் அவுட் எடுத்தா குப்பைத்தொட்டியில் தான் போடலாம்...

பி.கு:

பெரியாளுங்களை திட்டினா பெரியாளாகலாமுன்னு நெனைப்பா தம்BI

விஷ்னுபுரம் இன்னும் படிக்கலை...அப்படி படிச்சி அவரோட ரசிகனாயிருந்தா அபத்தங்களுக்கு மவுனப்பார்வையாளனா கடந்திருப்பேனோ ? விஷ்னுபுரத்தை ஒருத்தன்கிட்ட இரவல் கேட்டிருக்கேன்...இந்த வீக்கெண்ட் கிடைக்குதா பார்க்கலாம்...

Tuesday, January 15, 2008

பாருங்க...சிரிங்க...உங்க வயித்து வலிக்கு நான் பொறுப்பில்லை...!!!சப்டைட்டிலை வேகமா பாலோ செய்யுங்க...ரெண்டு மூனு முறை பார்த்து சிரிப்பீங்க, பிறகு ரெண்டு பேருக்காவது பார்வர்ட் அடிப்பீங்க...

என்சாய் மாடி !!!

Monday, January 14, 2008

சோதிடம் : உண்மையா - பொய்யா ?

பொதுவாக என்னுடைய பார்வையில் சோதிடம், ஜாதகம் ஆகியவை மூட நம்பிக்கைகளில் ஒன்றாக தெரிவதால், இதில் எந்தவித இண்ட்ரஸ்டும் காட்டுவதில்லை...சமயம் கிடைக்கும்போதெல்லாம் ஜோதிடம் பார்ப்பவர்களையும் ( லாங் நாமம் மிஸ்டர். கோழியூர் கோயிந்தன், காழியூர் நாராயணன், சிவல்புரி சிங்காரம்) அதை நம்புபவர்களையும் நக்கல் விட்டு வந்திருக்கிறேன்...

பால்வெளி மண்டலத்தில் சிறு துகளான பூமியைப்போல் ஆயிரக்கணக்கான, லட்சக்கணக்கான கிரகங்களின் இருப்பை கண்டறிந்துள்ள விஞ்ஞானத்தின் முன்னால், கண்ணுக்கு தெரிந்த வெறும் ஒன்பது கிரகங்களின் நகர்வை மையமாக வைத்து பிழைப்பு நடத்தி கஞ்சி குடிக்கும் அவர்கள் மீது எனக்கு கோபத்தினை விட பரிதாபமே மேலோங்கும்...

கையில் ஒரு கிளிக்கூண்டை வைத்துக்கொண்டு, அய்ந்து ரூபாய்க்காக மொட்டை வெயிலில் நாயாக அலையும் கிளி ஜோசியக்காரனும், அவன் கொடுக்கும் அரை நெல்லுக்காக அவன் பழக்கியபடி சீட்டை எடுத்துப்போடும் சிறகில்லாத கிளியும் என்னுடைய பரிதாப லிஸ்ட் ஜீவன்களே...

அதேபோல் வெற்றிலைப்பாக்குக்கும், ரேஷன் அரிசிக்கும் காசு தேற்ற பீச்சில் உட்கார்ந்திருக்கும் குறிசொல்லும் லேடீஸ், அதிகாலையில் சேவல் விழிக்குமுன் பழந்துணிக்கும், கால்படி அரிசிக்கும் வாசலில் வந்து நம் தூக்கத்தை கலைக்கும் குடுகுடுப்பைக்காரனும் பெரிய மல்ட்டிநேஷனல் பிஸினஸ் ஒன்றும் நடத்தவில்லைதான்...

சமீபத்தில் கையில் கிடைத்த சோதிட புத்தகங்கள் சிலவற்றை பார்த்தபோது, அவை உண்மையா பொய்யா என்பதை விட, அந்த பொய்களில் சில உண்மைகள் இருப்பதை சற்றே உணர்ந்தேன்...

சோதிடத்தை நம்பும் மக்களின் மனதில் (நம்பாதவர்கள் படிக்கவே போறதில்லை) தன்னம்பிக்கையையும், அற்ப நிம்மதியையும் ஏற்படுத்தவும், பிரச்சினைகளில் மூழ்கி இருப்பவர்களின் நெஞ்சத்தில் நம்பிக்கை கீற்றை விதைக்கவும் கண்டிப்பாக இது பயன்படும் என்றே தோன்றுகிறது...

உதாரணத்துக்கு சில ராசிக்காரர்களின் பலன்கள் பாருங்கள்:

மேஷம் : தன்னம்பிக்கையும் சுயகவுரவமும் உடைய நீங்கள் உறவினர்கள் வரவால் நிம்மதி அடைவீர்கள்..பணக்கஷ்டம் தீர வழி பிறக்கும்...வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும் வழி உருவாகும்...

கடகம் : பொறுமைசாலியான நீங்கள் தைரியமாக உங்கள் பிரச்சினைகளை எதிர்கொள்வீர்கள்...அரசு வேலை பார்ப்பவர்களுக்கு உத்தியோக உயர்வு கிடைக்கும்...வீடு, நிலம் வாங்கும் வாய்ப்பு உருவாகும்..குழந்தைப்பேறு ஏற்படும்...

இவ்வாறு - நம்பிக்கையை விதைக்கும்படி போட்டிருக்கிறார்கள்...

இந்த சோதிடத்தை நம்பி சிலபேர் ஏமாளிகளானாலும், மக்களின் மூட நம்பிக்கையை பயன்படுத்தில் சில குடும்பங்கள் சாப்பிடுகின்றன என்றே வைத்துக்கொள்ளலாம்.....சோதிட தொழில் செய்து சொற்ப வருமானம் பெறும் சோதிடர்கள் தான் அதிகம் தமிழகத்தில்...சோதிட தொழில் நடத்தி முதலமைச்சர் பதவியை யாரும் பிடித்துவிடப்போவதில்லை...அதனால் பாவம் பொழைச்சு போறாங்க என்று தான் தோன்றுகிறது எனக்கு...!!! உங்களுக்கு ??

கர்நாடக சட்டசபைத்தேர்தல் : பா.ஜ.க வெற்றி முகம்

நடந்துமுடிந்த கர்நாடக சட்டசபைத்தேர்தலில் பாரதீய ஜனதா கட்சி அதிகபட்ச தொகுதிகளில் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறது...அந்த கட்சியின் எடியூரப்பா (ஆங்கிலத்தில் நேமாலஜிப்படி எட்டியூரப்பா ( yettiyurappa) ) முதல்-அமைச்சராக பொறுப்பேற்றார்..தேர்தலுக்கு முன்னால் கட்சியில் சேர்ந்த எம்.பி பிரகார் போலீஸ் மந்திரியாக மீண்டும் பதவியேற்றார்.....

ஏஏஏஏஏஏஏஏ நிறுத்துப்பா...இன்னும் எலக்சனே நடக்கல...அதுக்குள்ள நீரு ரிசல்ட்ட சொல்றீரா...அப்படீங்கறீங்களா...அட டருஜாவாதீங்க...அதுதான் நடக்கப்போவுது இங்கன...

அனுதாப அலை அலை அப்படீம்பாங்களே...அது அடிங்குதுங்க இப்ப பி.ஜே.பிக்கு...மதச்சார்பற்ற ஜனதா தளத்தால் தாங்கள் ஏமாற்றப்பட்டதாக தெருவுக்கு தெரு பிரச்சாரம் செய்துவருகின்றனர் பாரதீய ஜனதா கட்சியினர்...

அதுவும் இல்லாமல் ஜெயிக்குற குதிரையில் பந்தயம் கட்டும் அரசியல் வியாதிக்கூட்டம், கொத்துக்கொத்தாக கல்லா கட்டிக்கொண்டிருந்த கட்சியை விட்டு, பாரதீய ஜனதாவின் பக்கம் தாவிக்கொண்டிருக்கின்றனர்...

நான் இருக்கும் அல்சூர் லேக் ஏரியா கவுன்சிலர் - தமிழர், இதுநாள் வரை காங்கிரஸில் இருந்தார்...ஸ்போர்ட்ஸ் பைக் விவகாரங்களில் அவருக்கும் எனக்கு கொடுக்கல் வாங்கல் உண்டு...நேற்று தடாலடியாக காங்கிரஸில் இருந்து பி.ஜே.பிக்கு ஜம்ப் அடித்தார்...

அய்யா ஏன் அய்யா இந்த மங்கி ஜம்ப் என்றதற்கு, அடப்போ ரவி, எம்.எல்.ஏவே ஜம்பிட்டார்...நான் என்ன பிஸ்கோத்து என்கிறார்...

மேலும் குஜராத் மற்றும் இமாசல பிரதேச தேர்தல்களில் வெற்றியை ருசி பார்த்துள்ள பாரதீய ஜனதாவினர், சில பல பெட்டிகளை இறக்கிவிட்டுள்ளதாக தெரிகிறது...

நம்ம ஏரியா கவுன்சிலருக்கு வந்த அமவுண்டில் ஒரு ட்ரிப்பிள் பெட்ரூம் ப்ளாட் ஹாட் கேக் சர்ஜாப்பூர் ஏரியாவில் ஹாட் கேஷுக்கு வாங்கப்போறாராம்...(அமவுண்ட் எல்லாம் நான் சொல்லமாட்டேன் ஆமாம்...)

காங்கிரஸ் செய்வதறியாமல் விழித்து நிற்கிறது...ஏற்கனவே உள்ள கோஷ்டிகள் தனியே கிடக்க, கவர்னராக போன எஸ்.எம்.கிருஷ்னா, நானும் வருவேன் ஆட்டத்தை கலைப்பேன் ரீதியில் பேசி வருகிறார்...சோனியா சொன்னால் களத்தில் இறங்குவேன்...மன்மோகன் சிங் சொன்னால் மீண்டும் குதிப்பேன்...வீட்டம்மா சொன்னால் காருக்கு பெட்ரோல் போடுவேன் என்று தினம் ஒரு அறிக்கை கொடுத்துவருகிறார்...

மதசார்பற்ற ஜனதா - கவுடா கோஷ்டிகள் நொந்து நூடுல்ஸ் ஆகிவிட்டன...பேசாம கவர்மெண்ட பாரதீய ஜனதாவுக்கே கொடுத்து இன்னும் இருவது மாசம் கல்லா கட்டியிருக்கலாம் என்ற நிலைக்கு வந்துவிட்டார் தேவே.கவுடா...குமாரசாமி கடும் டெண்ஷனில் இருக்கிறார் தந்தை மீது...முத்தாய்ப்பாக, தேவ கவுடா, தன்னுடைய அரசியல் வாழ்க்கை வரலாற்றை எழுதப்போகிறேன் என்று சொல்வது, கிட்டத்தட்ட ஜனதா தளம் அஸ்தமணம் ரேஞ்சுக்கு வந்துவிட்டது தெரிகிறது...குமாரசாமி நல்லவர்...இந்த அலைக்கு எதிர்த்து பத்து பதினைஞ்சு எம்.எல்.ஏ தேத்துவது கஷ்டம் என்று அவருக்கு தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்...

கட்டங்கடைசியாக காங்கிரஸ் எடுத்துள்ள அஸ்திரம், வாக்காளர் சேர்ப்பில் குளறுபடி என்று நெற்றியில் நீண்ட நாமம் போட்ட (கிச்சா ?? )தேர்தல் கமிஷனரை வைத்து ஆங்கிலத்தில் பேட்டி கொடுக்க வைத்தது தான்...மேலும் உங்கள் பெயரில் போலி வாக்காளர் இருந்தால் அதற்கு பொறுப்பாளி நீங்கள் தான், உங்களுக்கு தான் ஜெயில் தண்டணை என்றெல்லாம் பயமுறுத்திக்கொண்டிருக்கிறார்கள்...

எனக்கென்னமோ பார'தீ'ய ஜனதா சுனாமிபோல் சுழன்று வந்துகொண்டிருக்கிறது...அதில் தாக்குப்பிடிக்க கவுடாவின் / மல்லிகார்ஜுன கார்கேயின் / தரம்சிங்கின் / குமாரசாமியின் / குமார பங்காரப்பாவின் / சீத்தாரம்மையாவின் அரசியல்கள் எடுபடாது என்று தான் தோன்றுகிறது...

A - ஆதாம் ஏவாள் மேட்டர்...என்ன கேவலமான மதம் இந்த கிறிஸ்தவ மதம் ?

(A)ஆதாம் ஏவாள் மேட்டர்...என்ன கேவலமான மதம் இந்த கிறிஸ்தவ மதம் ?

சொந்த சிந்தனை இல்லை...நன்பர் ஒருவர் கேட்ட கேள்விதான்...அட !!! போடவைத்த மேட்டர்...எப்படி எல்லாம் யோசிக்கறாங்கப்பா என்று நினைத்தேன்...

மேட்டருக்கு வருவோம்...கிறிஸ்தவ மத தத்துவப்படி, கடவுள் ஈடன் தோட்டத்தில் ஆதாம், ஏவாளை படைத்தார்...

நியூடா ஜாலியா திரிஞ்சிக்கிட்டிருந்தாங்க சிலகாலம்...

அப்புறம் ஏவாள் சாத்தானின் சொல்லைக்கேட்டு ஆப்பிள் பழத்தை தானும் தின்று, நம்ம ஆதாமுக்கும் கொடுக்க, வந்ததே வெட்கம்...

ஆமா, ஆடையின்றி இருக்கிறோம் என்ற உணர்வே அதுக்கப்புறம் தான் வந்ததாம்..

அப்புறம் அவர்கள் இருவரும் கடவுளை பார்க்க பயந்து வெட்கப்பட்டு மரத்தின் பின்னால ஒளிஞ்சுக்கிட்டாங்களாம்...

முக்கியமான கட்டம் அடுத்தது தான்....(வந்துட்டான்யா முக்கியத்துக்கு)

ஆதாம் ஏவாளுக்கு ரெண்டு புள்ளைங்க...ஒன்னு காயின்...இன்னொன்னு ஆபேல்...

இதுல காயின் பொறாமையில ஆபேலை கொண்ணுடறான்...

அப்பாலிக்கா காயின் காட்ல மேட்ல திரியறான்..

ஆனா ஆதாம் ஏவாள் மேலும் மேலும் ஓர்க் அவுட் செய்து, நிறைய புள்ளைகளை பெக்குறாங்க...

அட மேட்டர் வந்தாச்சு வந்தாச்சுங்க...

ஏன்யா...ஆதாம் ஏவாளுக்கு பொறந்தது எல்லாமே சகோதர சகோதரிகள் தானே...அதுக்கப்புறம் எப்படி வம்சம் விருத்தியாச்சு ? கடவுள் ஆதாம் ஏவாளை படைச்சதை எழுதி வெக்க ஒருத்தன் இருந்தா மாதிரி மத்தவங்களை படைச்சதை ஏன் எழுதல ? அப்ப படைக்கவே இல்லையா ? படைக்கலைன்னா பிரதர்ஸ் அண்டு சிஸ்டர்ஸுக்குள்ள எப்படி 'அது'...ச்ச்சீ...நினைக்கவே கேவலமா இருக்கே...என்ன கேவல மதமுங்க இந்த மதம்...

Friday, January 04, 2008

செந்தழல் சென்னை விஜயம் !!!!!!!!!!!!

சென்னை விஜயம் !!!!!!!!

அன்பு இணைய நட்புகளுக்கு !!!!!!!!

நாளைக்கு சென்னையில் புத்தக கண்காட்சிக்கு வரவேண்டும் என்ற கொலைவெறியில் - அதிகாலை பெங்களூரில் இருந்து கிளம்பி மதியத்துக்குள் சென்னையை அடைய திட்டம் போட்டுள்ளேன்....

வழக்கம் போல் தங்கும் ஹோட்டலில் ஜாகை...

போண்டா இல்லாத பதிவர் சந்திப்புகள் கூட நடத்தலாம் என்று அவா !!!

இதுவரை சந்திக்காத சில மொக்கை பதிவர்கள் இப்போது தங்களது ஜாகையை சென்னைக்கு மாற்றிக்கொண்டிருப்பதால், அவர்களை சந்திக்கலாம் என்று நினைக்கிறேன்......

மற்றபடி, பீச்சுக்கும், புத்தக கண்காட்சிக்கும் போவதை தவிர எனக்கும் வேறு வேலை ஒன்றும் சென்னையில் இருப்பதாக தெரியவில்லை...

இதுக்கெல்லாம் ஒரு போஸ்ட்டா, நீ என்ன அப்துல் கலாமா என்று கடுப்பாகும் தோழர்கள் என்னுடைய புதிய தொலைபேசி எண்ணுக்கு அழைத்து திட்டலாம்...

எண் : 99160 84054

வர்ட்ட்டா நன்பர்களே !!!!!!!!!!!!!

பி.கே.கே: (பின்னால் கேட்கப்படும் கேள்விகள்)

1.பொட்டீக்கடை இன்று இரவு அவுஸ்திரேலியா ரீச். ஏன் எனக்கு போன் அடிக்கல ? பேலன்ஸ் இல்லையா ?

2.ஓசை செல்லா நாளைக்கு சென்னையில் இருப்பாரா ? கேள்வி...

3.வரவனை திண்டுக்கல்லில் இருக்கிறார்...கொடைக்கானல் வா என்று கட்டளை இட்டபோதும் நிறைவேற்ற முடியல...என் மேல அவருக்கு கடுப்பா வெடிப்பா ?

4.மிதக்கும்வெளி ஒருநாள் ஏதோ ஈழத்தவர் வீட்ல காரமா ஏதோ சாப்பிட்டாராமே ? அங்கே என்னை கூட்டிக்கினு போவாரா ?

5.பாலபாரதி புத்தக கண்காட்சியில் வாலண்டியராக கிழக்கு ஸ்டாலில் மழைக்கு குடை பிடிப்பாரா ?

6.பிரின்ஸ் சமா நான் சொன்னது போல் சினிமாவில் நடிக்க வாய்ப்புண்டா ?

7.ஆழியூரான் கொரியன் மொபைல் கேட்டாரே ? என்னுடன் பர்மாபஜார் வரை வர அவர் தயாரா?

8.தலைகீழ்விகிதங்கள் எழுதும் வவ்வால் சென்னையில் தான் கீறாரா ?

9.என்றென்னும் அன்புடன் பாலா வீட்டுக்கு சென்றால் இட்லிவடை கிடைக்குமா?

10.நகஓக அப்படீன்னா என்னா ? மக இக மாதிரியா ? ஏன் எல்லா போஸ்ட்லயும் அது இருக்கு ?

11.மகளிர் சுய உதவிக்குழு செய்யும் பொருட்கள் எல்லாம் சென்னையில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளதா ? வாங்க முடியுமா ?

12.மழை நின்றதா ? குடை எடுத்துவர வேண்டுமா ?

13.புத்தக கண்காட்சி நடக்கும் ஸ்டால் உள்ள வாங்கினால் எத்தனை பேருக்கு டிக்கெட் கொடுக்கப்படும் ? எமர்ஜன்ஸிக்கு தீயணைப்பு வண்டிக்கு சொல்லியாச்சா ?

14.கிழக்கு ஸ்டால்ல வாலண்டியரா புத்தகம் விற்க துணைபுரியலாமா?

15.முடியல என்னும் தமிழ் வார்த்தைக்கு வேற வார்த்தை ஏதாவது இருக்கா?