Saturday, November 29, 2008

மும்பாய் தாக்குதல் இந்தியாவுக்கு சரியான பாடம்: மகிழ்ச்சியில் சிங்கள ஊடகம்

மும்பாய் தாக்குதல் இந்தியாவுக்கு சரியான பாடம்: மகிழ்ச்சியில் சிங்கள ஊடகம்
[சனிக்கிழமை, 29 நவம்பர் 2008, 05:32 மு.ப ஈழம்] [க.திருக்குமார்] புதினம் செய்தி


இந்தியாவின் வர்த்தக நகரமான மும்பாய் மீது கடந்த வியாழக்கிழமை தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பெருமளவிலான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர், ஆனால், அத்தாக்குதல் குறித்து சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் இருந்து வெளிவரும் "டெய்லி மிரர்" நாளேடு தனது பாதுகாப்பு பத்தியில் தனது மகிழ்ச்சியை மறைமுகமாக வெளியிட்டுள்ளது.
இது தொடர்பில் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

விடுதலைப் புலிகள் இலங்கை இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கு இந்தியாவின் தலையீட்டை கோரி வருகின்றனர். இது தொடர்பில் தமிழக முதல்வர் கருணாநிதி இந்தியப் பிரதமரை சந்திப்பதற்கு திட்டமிட்டுள்ளார்.

ஆனால், இந்திய மத்திய அரசு இலங்கையில் தலையிடுவதனை விடுத்து முதலில் அங்கு போராட்டங்களில் ஈடுபட்டு வரும் 170-க்கும் அதிகமான ஆயுதக்குழுக்களுடன் போராடுவது தான் சிறந்தது.

தற்போது மும்பாயில் உள்ள தாஜ்மகால் மற்றும் ஒபரோய் ஆடம்பர விடுதிகள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பெருமளவான பொதுமக்கள் கொல்லப்பட்டதும், காயமடைந்ததும் இந்தியாவுக்கு சரியான பாடம் என தனது உள்ளக்கிடக்கையை கொட்டியுள்ளது.

சிறிலங்கா பாகிஸ்தானின் தீவிர விசுவாசி. அது எப்போதும் இந்திய அரசுக்கு விசுவாசமாக நடந்து கொண்ட வரலாறு கிடையாது. பங்களாதேசத்தின் மீதான போரின் போதும் அது பாகிஸ்தானுக்கே தனது ஆதரவை வழங்கி வந்தது.

எனவே, மும்பாய் தாக்குதலின் பின்னனியில் பாகிஸ்தான் இருப்பதாக இந்திய அரசு குற்றம் சுமத்தி வருகையில் பாகிஸ்தானின் தீவிர விசுவாசிகளான சிங்கள மக்களின் பத்திரிகை ஒன்று மகிழ்ச்சி தெரிவிப்பது வியப்புக்குரியது அல்ல என இது தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போது தமிழ் ஆய்வாளர் ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார்.

***செய்தி நிறைவு***

...இதே போல் இந்தியாவில் இருந்து வெளிவரும் சிங்கள ஊடகமான தி ஹிண்டு பற்றியும் ஏதேனும் செய்தி வெளியிடுங்களேன் புதினம்...

Wednesday, November 26, 2008

இது என்ன !!!



இது என்ன ? கிசுகிசு பாணியில் இருக்கா ? விவசாயியக்கேளுங்கப்பா !!!!!

Monday, November 24, 2008

புலிகள் ஆயுதங்களை கீழே போட்டால் என்ன ஆகும் ?



தமிழரங்கம் இணைய தளத்தில் இந்த கேள்வியையும் அதற்கான பதில்களையும் பார்த்தேன்...

அங்கே ஒரு பின்னூட்டமும் போட்டுவிட்டு வந்தேன்...

தமிழ்மணம் கூட மொக்கை போட ஆரம்பித்துவிட்ட இந்த காலத்தில், என்னுடைய மொக்கை திறமையை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டாமா ?

இந்தா பிடியுங்கள் பதில் !!!

புலிகள் ஆயுதங்களை கீழே போட்டால் வேறு ஒன்றும் ஆகாது...அவை கீழே விழுந்துவிடும் :)))

அதுதானே நியூட்டன் விதி ?

அப்புறம் எடுத்து மண்ணு கல்லு ஆகியற்றை எண்ணை போட்டு துடைக்கவேண்டியது தான்...

Saturday, November 22, 2008

சாய்பாபா !!!!!!!!!

<<< நாளை பாபா பிறந்தநாள், அதனால் இந்த மீள் பதிவு >>>

சாய் பாபா செய்துவரும் சேவைகளை பற்றியதான பதிவு இது....அவர் சத்திய நாராயண ராஜுவாக நவம்பர் 1926ல் பிறந்ததையோ, ஆந்திர புக்கபட்டினத்தில் எட்டாவது அகவையில் கல்விகற்றதையோ எழுத வரவில்லை...அதை சாய் டிவோட்டிகள் எழுதுவார்கள்...



பிரதமர்கள், ஜனாதிபதிகள், வெளிநாட்டு பிரமுகர்கள் வந்து சந்திக்கிறார்கள், மாதம் 800 கோடி நிதி வந்து குவிகிறது, அதை எப்படி செலவழிக்கிறார், என்றெல்லாம் கேட்டால் இந்த பதிவு அதை முழுதும் விளக்க வரவில்லை...

இந்த பதிவு அவரது சேவைகள் பற்றி, குறிப்பாக அவரது மகத்தான மருத்துவ சேவைகள் பற்றியதானது....எளியவருக்கு சேவை, அனைத்து உயிர்களிடத்தான அன்பு என்பதை போதிக்கிறார்...அதில் எளியவருக்கு சேவை என்பதை செயலில் காட்டுமுகத்தான் நாடெங்கும் அவர் அமைத்து இருக்கும் பல மருத்துவமனைகளில் ஒன்றை பற்றியதான பதிவு இது..




பாபாவின் பத்தாயிரம் ஆசிரமங்கள் மற்றும் சேரிட்டபுள் ட்ரஸ்ட்கள் நூற்றி அறுபத்தி ஆறு நாடுகளில் அமைந்துள்ளது எவ்வளவு உண்மையோ, அவற்றில், பெங்களூர் ஒயிட் பீல்டில் அமைந்துள்ள மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை மிக ப்ரம்மாண்டமானது என்றால் அது மிகையான சொல்லாக இருக்க முடியாது...ஏக்கர் கணக்கில் கண்முன்னே விரிந்து கிடக்கும் அந்த மருத்துவமனைகளில் லட்சக்கணக்கானவர்கள் இது வரை பயன்பெற்றும், இனி பயன்பெறவும் போகிறார்கள் என்பதை எண்ணும்போது மனது நிறைகிறது...

இந்த மருத்துவமனையில்

* இதயநோய்களுக்கான தனிப்பிரிவு
* சிறுநீரகம் சம்பந்தம்மான நோய்களுக்கான தனிப்பிரிவு
* நரம்பியலுக்கான தனிப்பிரிவு
* பொது மருத்துவத்துக்கான தனிப்பிரிவு

என பாங்குற அமைந்துள்ளது...

தனிப்பிரிவு என்றால் வெறும் சிறியதொரு பிரிவை கற்பனை செய்யவேண்டாம்...ஏக்கர் கணக்கில் இருக்கும் தனி மருத்துவமனை. ஒவ்வொரு பிரிவிலும் நூற்றுக்கணக்கான பண்பான ஊழியர்கள்..உலகத்தரம் வாய்ந்த மருத்துவர்கள்...சாய் டிவோட்டிகள் பலர்...டிவோட்டியல்லாதோர் சிலர்..பணத்தை கொட்டிக்கொடுக்கப்பட்ட உலகப்புகழ்பெற்ற மருத்துவர்கள்...

வருடம்தோறும் ஆயிரக்கணக்கான அறுவை சிகிச்சைகள் பைசா செலவில்லாமல் செய்யப்படுகின்றன....நரம்பியல் துறையில் கீ ஹோல் ஆப்பரேஷன்கள், பொது மருத்துவ துறையில் டெஸ்ட் ட்யூப் பேபிக்கள், இதய அறுவை சிகிச்சை துறையில் ட்ரான்ஸ்ப்ளாண்ட்டேஷன்கள் என்று நாட்டில் / உலகில் மருத்துவ துறையில் உள்ள அத்துனை அட்வாண்ட்ஸ் டெக்னாலஜிகளையும், அந்த துறையில் உலகப்புகழ் பெற்ற மருத்துவர்களை கொண்டு இந்தியாவில் எங்கோ கிராமத்தில் வசிக்கும் சாயி பாபா கதவை தட்டும் ஒரு ஏழைகளுக்கு இலவசமாக செய்யப்படுகின்றன..

இவை எல்லாவற்றையும் விட மிக மிக முக்கியமான விடயம், இங்கே எந்தவொரு அறுவை சிகிச்சைக்கும் / ஸ்கேன் போன்ற டெஸ்டுகளுக்கும் "சல்லி பைசா கிடையாது"...

ஆம்...முற்றிலும் இலவச மருத்துவமனை...தலையை சொறியும் வார்டு பாய் கிடையாது....லஞ்சம் கேட்கும் அரசாங்க மருத்துவர் கிடையாது....காய்ந்து போன ப்ரட் கிடையாது...உலகத்தரம் வாய்ந்த அறுவை சிகிச்சை நிபுணர்களையும், மருத்துவர்களையும் சர்வ சாதாரன பாமரன் சந்தித்து பைசா செலவில்லாமல் ஆலோசனையும், சிகிச்சைகளையும், படுக்கை வசதிகளையும், உணவு உடைகளையும் பெறுவது என்ன சாதாரண விடயமா ? சொல்லுங்கள்...

தரம் ? தரத்துக்கென்ன குறைச்சல் ?

பாபாவின் ஆசிரமம் அமைந்துள்ள ப்ரஷாந்தி நிலையத்தில் அமைந்துள்ள ஷிரீ சத்திய சாய் இன்ஸ்ட்டியூட் ஆப் ஹையர் லேர்னிங் (மருத்துவ உயர் படிப்புக்கானது), தேசிய அளவிலான தரக்கட்டுப்பாட்டு தேர்வில் ஏ++ சான்றிதழ் பெற்றுள்ளது...இதற்கு மேல் தரத்தை பற்றி சொல்ல வேண்டுமா ? இங்கேயும் கல்வி முற்றிலும் இலவசம் என்பதை நான் சொல்லித்தான் நீங்கள் அறிந்துகொள்ள வேண்டுமா ?

அவர்மீதான விமர்சனங்களை முன்வைக்கும் ஒருவர் எப்படி அவரது நற்செயல்கள் பற்றி எழுதமுடியும் என்றெல்லாம் கேட்காதீர்கள்...அதெல்லாம் நாங்களும் எழுதுவோம்..நல்ல விடயம் எங்கே நடந்தால் என்ன, உண்மையை ஏற்றுக்கொள்ள வேண்டியது தான்...



தனி தெலுங்கானாவுக்கு பாபா சப்போர்ட் செய்யவில்லை என்று கேட்டார் ஒரு தெலுங்கு நன்பர்....இது சிறுபிள்ளைத்தனமா இருக்கு...இதற்கு அவர் என்ன செய்வார்...என்றேன்..அவரால் முடிந்த நற்செயல்களை செய்யட்டும் அவர்...எங்களால் முடிந்தவரை அவற்றை கொஞ்சம் வெளிச்சம் போட்டு காட்டுவோம்...இந்த வெளிச்சம் அவருக்கல்ல, எங்கள் மனதுக்கு..

இந்த பதிவை என் தலையில் நறுக் என்று குட்டி எழுத வைத்த டாக்டர். ஹெக்டே அவர்களுக்கு நன்றி...எஸ்.கே அய்யாவின் கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்..

<<< நாளை பாபா பிறந்தநாள், அதனால் இந்த மீள் பதிவு >>>

<<< சாய் டிவோட்டிகள் + ஓட்டும், நாத்திகர்கள் - ஓட்டும் குத்தவும்...>>>

Wednesday, November 19, 2008

ஹொக்கேனக்கல் : கலைஞர் அரசு தூங்கவேண்டாம்...!!!!



ஹொக்கேனக்கல் அருவியில் நான் குளித்தது ஒரே முறை...குற்றாலம் கூட ஒரிரு முறை சென்றிருக்கிறேன்...

அருவி என்றால் ரொம்ப உயரத்திலிருந்து விழுவது தான் என்பது என்னுடைய மூளையில் பதிவான ஒன்று...

ஹொக்கேனக்கல் கொஞ்சம் சிறப்பானது...

சட்டென தோளுக்கு சற்று மேலே தட தடவென விழும் நீரில் உடலின் உள்ள அத்துனை வலிகளும் பறந்துபோகக்கூடும்...

மீன் வாங்கி கொடுத்து சமைக்க சொல்லிவிட்டு போயிருதீர்கள் என்றால் குளியல் முடிந்தவுடன் அற்புதமாக ஒரு வெட்டு வெட்டலாம்...

விஷயத்துக்கு வருகிறேன்...



கருநாடக நீர்ப்பாசனத்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை சமீபத்தில் டெல்லியில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகளை சந்தித்துவிட்டு அளித்த பேட்டி மிக முக்கியமானது...

முதலில் குறைவான அளவு நீரே எடுக்கப்படும் என்று சொல்லியிருந்த தமிழக அரசு, இப்போது 2.5 டி.எம்.சி அளவு நீரை எடுக்கப்போவதாக சொல்கிறது...

இதை எதிர்த்து இரண்டு விஷயங்களை செய்யப்போவதாக அவர் கூறுகிறார்..

1. உச்சநீதிமன்றத்தில் ஹொக்கேனக்கல் திட்டத்தை கைவிடுமாறு தமிழக அரசுக்கு வலியுறுத்த வழக்கு..

2. ஜப்பானுக்கு கருநாடக அரசு சார்பான குழு ஒன்றினை அனுப்பி, அங்கே இந்த திட்டத்துக்கு நிதியளிக்கும் துறையினரை சந்தித்து, தங்கள் எதிர்ப்பை சொல்லி, தமிழக அரசுக்கு வழங்கவிருக்கும் நிதியை தடுக்கும் திட்டம்...

கருநாடக அரசு இந்த விடயத்தில் உச்சநீதிமன்றத்தினை அணுகுவது, கீழ்க்கண்ட காரணங்களுக்காக இருக்கலாம்...

முடிந்தவரை இந்த திட்டத்தினை கிடப்பில் போடவைப்பது...அதன் மூலம் ஜப்பான் நிதித்துறையையும் நிதியை கொடுக்காமல் தடுப்பது...

டெல்லி சென்று மத்திய நீர்பாசனத்துறை அதிகாரிகளையும் இந்த திட்டத்துக்கு எதிர்ப்பாளர்களாக ஆக்குவதற்கு தன்னாலான முயற்சிகளை கருநாடக அரசு ஏற்கனவே ஆரம்பித்து, அதில் வெற்றியும் பெற்றுவிட்டதாக கருதுகிறேன்...

இப்போது தமிழக அரசு செய்யவேண்டியது என்ன என்பதை காணும் முன், சில விடயங்களை சொல்லவேண்டும்...

அரசியலில் பழம் தின்று கொட்டை போட்டு, அந்த கொட்டையை மரமாக்கி, அதில் வரும் பழத்தையும் தின்று கொட்டை போடும் கலைஞர் அவர்களின் அரசியல் அனுபவத்துக்கு முன் ஹொக்கேனக்கல் திட்டம் ஒரு ஜுஜுபி என்று தான் நான் நினைக்கிறேன்...

கலைஞர் அவர்கள் சமீபகாலமாக எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகளுக்கிடையில் இந்த பிரச்சினையை மறந்துவிட்டாரா அல்லது வேறு மறைமுக அழுத்தங்களின் காரணமாக இந்த பிரச்சினையை கிடப்பில் போட்டுவிட்டாரா தெரியவில்லை...

இலங்கை பிரச்சினையில் இருந்து சட்டக்கல்லூரி மாணவர் பிரச்சினை வரை கலைஞர் சிறப்பாகவே கையாளுகிறார் என்று எண்ணுகிறேன்...

மின்வெட்டு பிரச்சினையில் தமிழக அரசு தோல்வி அடைந்தது போல பிரச்சாரம் செய்யப்பட்டாலும், உண்மையில் முந்தைய ஜெயலலிதா அரசில் மின் துறை பொறியாளர்கள் நன்கு உண்டு உறங்கியது தான் இந்த மின்வெட்டுக்கு காரணம்...

இந்த மின் வெட்டுப்பிரச்சினை, தமிழகத்தில் மட்டுமல்ல, கேரளத்திலும், ஆந்திராவிலும், ஏன் கருநாடகத்திலும் இருக்கிறது...

மெட்ரோபாலிட்டன் சிட்டி, இந்தியாவின் சிலிக்கான் முள் வேலி என்றெல்லாம் அழைக்கப்படும் பெங்களூரின் இதயப்பகுதியான எம்.ஜி ரோடு, இந்திரா நகர், கோரமங்களா ஆகிய பகுதிகளில் கூட ஒரு நாளைக்கு நான்கு மணி நேரம் மின் வெட்டு இருப்பது, இந்த பிரச்சினை ஒரு பொதுப்பிரச்சினை என்பதை தெளிவாக சொல்கிறது...

மாறிவரும் சமூகச்சூழலில் கன்ஸ்யூமர் எலக்ட்ரானிக்ஸ் பூம் காரணமாக வீட்டு உபயோக மின் சாதனங்கள் அதிக அளவில் பொதுமக்களால் வாங்கப்பட்டது, அவற்றின் விலை குறைப்பு, பொதுமக்களின் வாங்கும் சக்தி அதிகரிப்பு, இண்ப்ரா ஸ்ட்ரக்சர் க்ரோத் காரணமாக புதிய மின் இணைப்புகள் என்று பல காரணிகளை அலசி ஆராய்ந்து, மின் தேவைகளை கணிக்காமல் போனது அரசியல்வாதிகள் அல்ல, பொறியியல் படித்து அரசு ஊழியர்களாக வேலை பார்த்து சம்பளம், கிம்பளம் வாங்கும் அதிகாரிகளே...

லெட்ஸ் கோ பேக் !!!

கலைஞர் இந்த பிரச்சினையை சற்று ஆற விட வேண்டும் என்று தான், கருநாடகத்தில் தேர்தல் முடிந்தபிறகு இந்த பிரச்சினையை பேசி தீர்ப்போம் என்றார்...

ஆனால் பல்வேறு சூழல்களினால் இன்னும் இந்த விடயத்தை கையில் எடுக்கவில்லை...அல்லது வசதியாக மறந்துவிட்டார்...அல்லது திரு.நாகநாதனின் ஹொக்கேனக்கல் சம்பந்தமான டைரிக்குறிப்புகள் தொலைந்துபோய்விட்டன...

மானேஜ்மெண்ட் / மேலாண்மை என்பது திருக்குவளைக்காரருக்கு தண்ணீர் பட்ட பாடு என்பதை சோ.ராமசாமியே ஒத்துக்கொள்வார்...அவருக்கென்ன சொல்லியா தரவேண்டும் ?



மற்றவர்கள் ஓயாமல் சொல்லிக்கொண்டிருப்பது போல ஹொக்கேனக்கல் திட்டத்தை நிறைவேற்றாத மைனாரிட்டி தி.மு.க அரசு உடனே பதவி விலகவேண்டும் என்று நான் முழங்கவில்லை...

ஸ்டாலின் போட்ட மேம்பாலங்களில் பயணம் செய்துகொண்டே நாளொரு போராட்டமும், பொழுதொரு அறிக்கையுமாக அரசியல் நடத்திக்கொண்டிருக்கும் செல்வி ஜெயலலிதாவை பற்றி கண்டுகொள்ளாமல் கலைஞர் அவர்கள் உண்மையான மக்கள் பிரச்சினைகளில் கவனம் செலுத்தவேண்டும் என்பதே எனது அவா...

விஜயகாந்த்...பெரிய இரு கட்சிகளில் பிசினஸ் செய்ய ஒரு கிளைச்செயலாளர் பதவி கூட வாங்கமுடியாத இளைஞர்களின் பெருங்கூட்டதை பின்னால் வைத்துள்ளார், சிவந்த கண்களுடன் ஏதாவது ஒரு பேட்டி கொடுத்து கலைஞர் அவர்களை சீண்டுகிறார்...இவரை கண்டுகொள்ளாமல் கலைஞர் அவர்கள் மற்ற விடயங்களை கையில் எடுத்து செயல்படவேண்டும்....

கலைஞர் அவர்கள் உடனடியாக செய்யவேண்டியது இதுதான்...

1. உச்ச நீதிமன்றத்தை தமிழக அரசு சார்பில் அணுகி, இந்த திட்ட அறிக்கையை சமர்ப்பித்து, "நோ அப்ஜெக்சன், கேரி ஆன்" என்ற சர்ட்டிபிக்கேட்டை வாங்கவேண்டும்...

2. ஜப்பான் அரசு திட்டக்குழுவை தொடர்புகொண்டு, இந்த பிரச்சினையின் உண்மை நிலையை விளக்கவேண்டும்...

3. மத்திய அரசு நீர்ப்பாசன துறை அதிகாரிகளை உடனே தொடர்புகொண்டு அவர்களுக்கு பிரச்சினையை முழுமையாக விளக்கி, அவர்களை "என்ன விலை கொடுத்தாவது" தமிழக அரசின் பால் திருப்பவேண்டும்...

அவ்வளவு தான்...

இதை படிக்கும் நீங்கள் தமிழ்மணத்துக்காரர் எனில் பின்னூட்டம் போடவும் அல்லது ஒரு மகுட ஓட்டை குத்தவும்...

தமிழ்ஷ் என்றால் ஒரு ஓட்டை குத்தவும்...

தமிழ்வெளிக்காரர் என்றால் பின்னூட்டம் போடவும்...



கலைஞர் அவர்களின் நேர்முக உதவியாளர் திரு.நாகநாதன் என்றால் இதை ஒரு ப்ரிண்ட் எடுத்து கலைஞர் அவர்களிடம் காட்டவும்...:))))))))))))

:))

நன்றி !!!!

Tuesday, November 18, 2008

தமிழ் பதிவர் லோஷன் கைது !!!



இலங்கையில் ஊடகத்துறையை சேர்ந்த திரு லோஷன் அவர்கள், வெற்றி எப்.எம் மேலாளராக / இயக்குனராக இருக்கிறார்...

அவர் சிரீலங்கா அரசாங்கத்தால் சனிக்கிழமை அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார்...

வெற்றி எப்.எம்மின் மற்றொரு நிர்வாகியான சஞ்ஜெய்யும் கைது செய்யப்பட்டுள்ளார்...

பயங்கரவாதிகளுடன் தொடர்புவைத்திருந்தார் என்று அவரை கைது செய்யப்பட்டபோது அளிப்பட்ட குற்றச்சாட்டு சீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது...

கைது செய்யப்பட்டவர் இப்போது எங்கே இருக்கிறார் என்ற தகவல் கூட அவருடைய குடும்பத்தாருக்கு தெரிவிக்கப்படவில்லை...

இது ஜனநாயகமா ? இது தான் ஊடகவியலாளர்களை நடத்தும் முறையா ?

பயங்கரவாதிகளோடு தொடர்புள்ளவர் எப்.எம் நடத்திக்கொண்டு, வீட்டில் வாழ்ந்துகொண்டு இருந்தார் என்று கூறுவதை ஏற்றுக்கொள்ளமுடியாது...



ஊடகவியலாளர் என்ற அடிப்படையில் அவருக்கு எந்த இயக்கத்தினரையும் தொடர்புகொள்ளவோ, சந்திக்கவோ கூட உரிமை உள்ளது....

அவர் எங்கே அடைத்து வைக்கப்பட்டுள்ளார் என்று கூட அறிவிக்காமல் இருக்கும் சிரீலங்கா அரசு தான் பயங்கரவாத செயலில் ஈடுபட்டுள்ளத்து...

ஊடகவியளார்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கவேண்டிய அரசு, பத்திரிக்கை சுகந்திரத்தை காக்கவேண்டிய அரசு, இப்படி செயல்படுவது முறையல்ல...

உடனே சர்வதேச அளவிலான அழுத்தங்கள் தந்து, லோஷன் அவர்களை காக்க நடவடிக்கை எடுக்க சர்வதேச சமுதாயம் தன்னால் ஆன முயற்சிகளை எடுக்கவேண்டும்...

பத்திரிக்கை சுகந்திரம் காக்கப்படவேண்டும்...

மனித உரிமைகள் காக்கப்படவேண்டும்...

பேச்சுரிமை, எழுத்துரிமை ஆகியவை நிலைநாட்டப்படவேண்டும்...

அவரது உயிருக்கு எந்த விதமான ஆபத்தும் ஏற்பட்டிருக்காது என்று நம்புகிறேன், அவர் நல்லபடியாக திரும்ப வரவேண்டும் !!!

சீரீலங்கா அரசாங்கத்துக்கு என்னுடைய கண்டனங்களை இந்த பதிவு மூலமாக தெரிவித்துக்கொள்கிறேன்...

வலைப்பதிவு உலகில் இருக்கும் ஊடகவியளாலர்கள் இந்த நிகழ்வை தமிழக முதல்வரின் பார்வைக்கு உடனே கொண்டுசெல்லவேண்டும் என்று தெரிவித்துக்கொள்கிறேன்...!!!

Friday, November 14, 2008

அழிவு கொள்ளை தீமை கழகம்...அ.கொ.தீ.க..

எங்கள் அழிவு கொள்ளை தீமை கழகத்தின் தலைவர், எங்கள் குழுவை பற்றி விளக்கி ஒரு பதிவிட்டுள்ளார்...இங்கே க்ளிக்

உடனே நீங்கள் அங்கே சென்று மேல் விவரம் தெரிந்துகொள்ளுங்கள்...

**** குறிப்பு : இந்த பதிவு காமிக்ஸ் ஆர்வலர்களுக்கு மட்டும் ****

இட்லிவடையில் புளித்தவடை..

இதனால் சகலமானவருக்கும் அறிவிப்பது என்னவென்றால்...

இன்று இட்லிவடையில் வேகாத இட்லியும் புளித்த சட்டினியும், காய்ந்துபோன ஊத்த (ஓட்டை) வடையும் இருப்பதால், இன்னும் இரண்டு நாளைக்கு கடைபக்கம் வராமல் தெரித்து ஓடும்படி கேட்டுக்கொள்கிறோம்...

அப்படி தெரியாத்தனமா வந்து சாப்பிட்டு - புடிங்கி அடித்தது என்றால் அதற்க்கு கடைமுதலாளி எந்தவகையிலும் பொறுப்பாகமாட்டார்...

காரணம் இது ஒரு சோ(மாறி) கடையில் இருந்து இரவல் வாங்கிய ஊசிய மாவு ஆகும்..

ந(ரன்)றி..

*** இந்த பதிவே ஒரு புளித்த வடைதான்...எழுதப்பட்டது 2006 மத்தியில்... **** ஆனால் இன்னும் ஆதிக்க சக்திகளின் கைக்கூலித்தனம், ரிசர்வேஷன், கோட்டா போன்றவற்றினை நோக்கி வயித்தெரிச்சலை காட்டுவது போன்றவற்றை இத்துப்போன இட்லிவடை செய்துகொண்டுதான் இருக்கிறது பாருங்கள் ***

Thursday, November 13, 2008

வேர்ட் டாக்குமெண்டை (.doc) பிடிஎப் (.pdf) கோப்பாக இலவசமாக மாற்றுதல் !!

பொதுவாக நீங்கள் உபயோகப்படுத்தும் வேர்ட் டாக்குமெண்ட் (.doc) என்ற பைல் எக்ஸ்டென்ஸனுடன் இருக்கும்...

வேர்ட் டாக்குமெண்ட் ஒரு எழுதி (எடிட்டர்) தான்...

நீங்கள் அனுப்பிய வேர்ட் டாக்குமெண்ட்டை எளிதாக திறந்து அதில் மாற்றங்கள் செய்துவிடலாம்...

அதனால் தான் அடோப் நிறுவனம் பி.டி.எப் என்ற வகையாக பைல்களை உருவாக்கியது...

.pdf என்ற பைல் எக்ஸ்டென்ஷனுடன் இருக்கும் இந்த வகையான கோப்புகளை எளிதில் மாற்றம் செய்ய இயலாது...

இதனால் உங்கள் தகவல்களை பாதுகாப்பாக பரிமாற்றம் செய்யலாம்...நம்பிக்கையோடு இருக்கலாம்...

https://www.pdfonline.com/convert_pdf.asp என்ற தளத்தில் மிக எளிமையாக உங்களது எம்.எஸ் வேர்டு பைல்களை பிடிஎப் கோப்புகளாக மாற்றும் வசதியை தருகிறார்கள்...

உங்கள் தேவை இணையம் மட்டுமே...மேலும் அதிகபட்சமாக 2 எம்.பி அளவுள்ள கோப்புகளை மாற்றலாம்...



படத்தின் மீது க்ளிக்கினால் பெரியதாக தெரியும்...

மொத்தம் இந்த இணைய தளத்தில் நாலே ஸ்டெப்பு...

1.மாற்றப்படவேண்டிய கோப்பு எங்கே இருக்கிறது் என்பதை பிரவுஸ் பட்டனை தொட்டு கணிப்பொறிக்கு காட்டவேண்டும்..

2.எந்த பெயரில் உங்கள் கோப்பு இருக்கவேண்டும் என்பதை சொல்லவேண்டும்

3.உங்கள் மின்னஞ்சல் முகவரி கொடுக்கவேண்டும்...

4.கண்வர்ட் டு பிடிஎப் என்ற பட்டனை அழுத்தவேண்டும்...

அவ்ளோதாங்க...

இரண்டு நிமிடத்தில் நீங்கள் கொடுத்துள்ள மின்னஞ்சலுக்கு உங்கள் பி.டி.எப் கோப்பு வந்து சேரும்...

Wednesday, November 12, 2008

தேசியம் பேசும் சஞ்ஜெய் : இந்த கேள்விக்கு பதில் சொல் !!!


முதலில் இந்த கேள்வியை நல்லதந்தியாரினை நோக்கித்தான் வீசலாம் என்று இருந்தேன்..நல்ல தந்தியின் ஐடெண்டிட்டி பற்றி எனக்கு முழுமையாக தெரியாததால் வேறு யார் தேசியம் பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்று யோசித்தபோது..

அட நம்ம மாம்ஸ் சஞ்ஜெய்..அக்மார்க் காங்கிரஸ்க்காரர்...அவர் தற்போது தேசிய ஜல்லிகள் அடித்துவருவதால் அவரை கேட்பது தான் சரியாக இருக்கும் என்ற முடிவுக்கு வந்தேன்...

காங்கிரஸ் என்றவுடன் எனக்கு நினைவுக்கு வருவது என்னுடைய தந்தையார் தான்...பல தேர்தல்களில் என்னுடைய தாயாரை காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்குமாறு சொல்லியவர், தானும் அவ்வண்ணமே வாக்களித்து வருபவர்...

அவர் சொன்னதால் மட்டும் அல்லாமல், என்னுடைய மனதுக்கு மூப்பனாருக்கு நியாயம் தேவை என்று எண்ணியதால், ரசினிகோந்து (நன்றி அதிஷா) வாய்ஸ் கொடுத்ததால் அல்லது மூப்பனாருக்கு அநீதி இழைக்கப்பட்டதாக அறிவூட்டப்பட்டதால் ஒரு முறை தமிழ் மாநில காங்கிரசுக்கு வாக்களித்துள்ளேன்...

சஞ்ஜெய்க்கு வைக்கப்படும் கேள்வி !!

முந்தா நேற்றைக்கு நாளிதழ்களை ஆக்ரமித்துள்ள ஒரு செய்தி, தமிழக மீனவர்கள் சிங்கள கடற்படையினரால் அடித்து உதைக்கப்பட்டு, நிர்வாணப்படுத்தப்பட்டு அவமானப்படுத்தப்பட்டுள்ளனர்...

மீனவர்களின் வலைகளை அறுத்து சிங்கள கடற்படையினர் கடலில் எறிந்துள்ளனர்...

மீனவர்கள் சிங்கள படையினரின் காலில் விழுந்து உயிரை காப்பாற்றிக்கொண்டுள்ளனர்..

இந்தியா இதனை ஏன் கண்டிக்கவில்லை ? தமிழர்கள் இந்திய குடிமக்கள் இல்லையா ?

கிட்டத்தட்ட 450 மீனவர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட பிறகும் ஏன் இந்திய மைய அரசு அதன் குடி மக்களை காக்கவில்லை ?

அணுகுண்டு வெடித்து சந்திரனுக்கு ராக்கெட் விட்டால் மட்டும் போதுமா ? குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டாமா ?

ப.சிதம்பரம் மற்றும் மன்மோஹன் சிங் ஆகிய இரண்டு பொருளாதார மேதைகள் இருந்தும் ஏன் இந்திய நாட்டின் செலவு வரவை விட அதிகமாக உள்ளது ? நான்கரை ஆண்டுகளில் எப்போதும் இல்லாத அளவில் பணவீக்கம் ?

பதில் சொல்லுங்கள் சஞ்ஜெய் !!!!!

Monday, November 10, 2008

சோ - சசி - ஜெ - சூ.சுவாமி -இந்து ராம் ரகசிய மீட்டிங்



ஏலகிரி மலை டமுக்கு டிப்பா எஸ்டேட்டில் சூடான தேநீரை பருகியபடி பெரிய பெரிய சோபாக்களை ஆக்ரமித்திருக்கிறார்கள்...

ஜெ: இன்னும் எத்தனை நாளைக்குத்தான் அறிக்கை விட்டுக்கிட்டு இருக்கிறதுன்னு தெரியல...சசி, நாளைக்கு என்ன அறிக்கை ?

சசி : ஆமாக்கா...எப்ப ஆட்சியை கலைக்கறது எப்ப நாம கோட்டைக்கு போறதுன்னு தெரியலைக்கா...கும்மிடிப்பூண்டி தாசில்தார் அலுவலகத்துல நாளைக்கு மீசை முனியாண்டி தலைமையில மின் வெட்டை கண்டித்து மறியல்...

சோ : நான் என்ன சொல்ல வர்ரேன்னா...

இந்து ராம் : அதான் வந்துட்டேளே...சொல்லுங்கோ...

சு.சுவாமி : நான் மொதல்ல சொல்றேன்னா...

சோ : டேய் நாந்தான் சொல்வேன்...

இந்து ராம் : சரி அவாளே சொல்லட்டும் விடுங்கோன்னா..

சோ : சரி சொல்லுங்கோ சுவாமிஜி

சு.சுவாமி : இப்ப குடிச்சிண்டிருக்கேளே டீ, இது மாதிரி ஒரு டீ.பார்ட்டியை நடத்தித்தான் தான் ஒபாமாவையே ஆட்சியில ஒக்கார வெச்சேன் தெரியுமோ ?

ஜெ : சார் என்ன சொல்றீங்க ?

சு.சுவாமி : ஆமா...ஹார்வர்ட்ல என்கிட்ட டியூஷன் படிச்சவன் தான் இவன்..அதுல நான் பாவம் பார்த்து பாஸ் போடலைன்னா இவன் பாஸாகியிருக்கவே மாட்டான்...சி.ஐ.ஏவில இருந்து நன்றி சொல்லி எனக்கு அவா லெட்டர் போட்டா.

சோ : நீ உடான்ஸ் உலகநாதனாச்சே...எங்கே அந்த லெட்டர் ? காட்டு பார்ப்போம் ?

சசி : அதானே, அந்த லெட்டரை காட்டுங்க பார்ப்போம் ?

சு.சுவாமி : அது...அது வந்து...ப்ளைட்ல ஒரு கொழந்தை ஆயி போயிருச்சு...அது தொடைக்க கொடுத்துட்டேன்...

இந்து ராம் : சார், நீங்க சூப்பரா புளுகுறீங்க...பேசாம என்னோட ஜர்னல்ல ஆர்ட்டிக்கிள் எழுத வந்துருங்க...

சோ : என்னுடைய துக்ளக் புக்குலயும் எழுதுங்க சார் !!!

ஜெ : ஷட்டப் ஆல் ஆப் யூ !!! நான் கொஞ்சம் தூங்கிட்டதால நீங்க எல்லோரும் கண்டமேனிக்கு பேசிட்டீங்களே ? நான் தான் பேசுவேன் !!!

சசி : அட ஆமாக்கா...!!! நாங்கூட இந்த சொட்டத்தலையனை பார்த்த்துக்கிட்டே நேரத்தை ஒட்டிட்டேன்...

<<< மூவரும் தங்கள் தலைகளை தடவிக்கொள்கிறார்கள் >>>

ஜெ : சரி...இப்ப அறிக்கைகளுக்கு ஐடியா கொடுங்க...ஸ்டீரியோ டைப் அறிக்கை விட்டு விட்டு போரடிக்குது...

சசி : ஆமாக்கா...கவுந்தப்பாடியில கரண்ட புடுங்குனதுக்கு ஆர்ப்பாட்டம், முருங்கப்பட்டி சுகாதார நிலையத்துல அனாசின் மாத்திரை இல்லாததுக்கு போராட்டம் அப்படீன்னு ஒரே மாதிரி போராட்டம் நடத்தி பயங்கரமா போரடிக்கறதா ஓ.பி வெளிய இருந்து கூப்பாடு போட்டாருக்கா...

ஜெ : சரி நீங்க மூனு தீவட்டி தடியனுங்க எதுக்கு இங்கே ஒக்காந்திருக்கீங்க ? ஐடியா கொடுங்க..

சு.சுவாமி : ஐடியா தானே ? இப்ப பாருங்கோ...ஒசாமா பின்லேடன் ஆயிரம் விளக்கு மசூதியில ஒளிஞ்சிண்டிருக்கான்ன்னு ஒபாமாவுக்கு லட்சக்கணக்குல தந்தி கொடுங்க...

சசி : ஏங்க்கா...இங்க இருந்து தந்தி கொடுத்தா அது அமெரிக்காவுக்கு எப்படிக்கா போகும் ? ப்ளைட்லயா ?

ஜெ : உன்னோட அறிவுல நண்டு கடிக்க...கொஞ்சம் சும்மா இருடி...மிஸ்டர் சோ...நீங்க சொல்லுங்க...

சோ : அதாவது நான் என்ன சொல்ல வரேன்னா...எங்கிட்ட கோனந்தபங்கரின்னு ஒருந்தர் இருக்கார். அவரை வெச்சு சுரபாகரன் சேப்பாக்ல தான் பங்கர் அமைச்சு தங்கியிருக்கான்னு துக்ளக்ல ஒரு ஆர்ட்டிக்கிள் எழுத வெக்குறேன்...நீங்க அதை சாக்கா வெச்சு சேப்பாக்ல போராட்டம் நடத்துங்க...அப்படியே மாஸ் அள்ளிரும்..

ஜெ : ச்சே..சகிக்கலை...மிஸ்டர் இந்து ராம் ? ஏன் உம்முனு இஞ்சி தின்ன கொரங்கு மாதிரி இருக்கீங்க ? பாரத் ரத்னா பட்டம் வேனுமா ? நான் ப்ரைம் மினிஸ்டர் ஆனவுடனே வாங்கி தரேன்...இப்ப ஐடியா சொல்லுங்க...

இந்து ராம் : பட்டம் எல்லாம் நானே வாங்கிக்கறேன்...என்னோட பொண்ணோட டிகிரியையே வாங்கீனவன் நான்...இப்ப ஐடியா சொல்றேன் கேளுங்க...பேசாம கொழும்பு போங்க...அங்கே ஏதாவது ஒரு புத்த விகார் முன்னால நின்னு சாமி கும்புடற மாதிரி ஒரு போஸ் கொடுங்க...அப்படியே ராஜபக்சேவை சந்தியுங்க...அப்புறம் இங்கே வந்து ராஜபக்சே சேலையை புடிச்சு இழுத்துட்டான்னு கண்ணீர் பேட்டி கொடுங்க...இலங்கை தமிழர், இந்திய தமிழர், மலையக தமிழர், இடம் பெயர்ந்த தமிழர் எல்லார்கிட்டயும் அப்ளாஸ் அள்ளிடலாம்...நீங்க தான் அடுத்த பி.எம்...

ஜெ: டேய் எனக்கு கொலைவெறி வர்ரதுக்குள்ள ஓடிப்போயிரு...

சு.சுவாமி : இப்பதான் சந்திரலேகா எஸ்.எம்.எஸ் பண்ணியிருக்கா...நிலாவுல சந்திரயான்ல இருந்து போற ராக்கெட்ட புலிகள் ஹேக் பண்ணியிருக்கா...அவாளோட கம்மியூனிக்கேஷனுக்கு அதை யூஸ் பண்றா..இதை வெச்சு இந்திய பிரதமர் மேல இண்டர்நேஷனல் கோர்ட்ல கேஸ் போடுவேன்...

ஜெ : டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்...

<<<மூவரும் எஸ்கேப்>>>

சசி : அக்கா இவனுங்களை எல்லாம் தொரத்திரலாம்க்கா...என்னோட வீட்டுக்காரர் நடராஜன கூப்பிடலாமாக்கா ?

ஜெ : ஏய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்

<<<சசியும் எஸ்கேப்>>>

ஜெ தனியாக சிந்திக்கிறார்...

என்ன அறிக்கை விடலாம்...

ஈழ தமிழர்களை ஆதரிச்சு - விட்டாச்சு
புலிகளை எதிர்த்து - விட்டாச்சு
கரண்டு கட்டை எதிர்த்து - விட்டாச்சு

விட்டாச்சு
விட்டாச்சு
விட்டாச்சு
ஆயிரம்
ரெண்டாயிரம்
நாலாயிரம்
பிம்பிலிக்கா பிலாப்பி...
மாமா பிஸ்கோத்து...

<<< தலைமுடியை பிய்த்துக்கொள்கிறார் >>>

Saturday, November 08, 2008

டோண்டு ராகவன் : செந்தழலின் பார்வையில்....

நான் வலைப்பதிவுலகிற்கு 2006 பிப்ரவரி வாக்கில் வந்தபோது வலையுலகை உருட்டி பிரட்டிக்கொண்டிருந்த பிரச்சினை இப்போது இல்லை...

டோண்டுவை பெங்களூர் வலைப்பதிவில் சந்தித்ததில் இருந்து அவரது பதிவுகளை / மொக்கைகளை தொடர்ந்து படித்துவருகிறேன்...

டோண்டு பதிவில் பின்னூட்டம் இட்டுவிட்டு அதன் பலனை நானும் லக்கிலூக்கும் நன்றாகவே அனுபவித்துள்ளோம்...

கோவி.கண்ணன், மகேந்திரன், குழலி, செல்லா, ஜயராமன் உட்பட பலருக்கும் ஏதோ ஒரு வகையில் "மனக்கஷ்டம்" அல்லது "சைக்கோத்தனம்" அல்லது "அடுத்தவர் மீது காழ்ப்புணர்ச்சி" அல்லது "அடுத்தவர் துன்பத்தில் இன்பம் காண்பது" அல்லது "நல்லவர் போல் நடித்து இன்பம் காண்பது" என்று பல உணர்ச்சிகளை கொடுத்த பிரச்சினை எல்லாம் இப்போது இல்லை...

வைஸ் வர்ஸாவாக இல்லாமல் போய்விட்டது, யாருக்கு என்ன உணர்ச்சி என்பதை நீங்களே பொருத்திக்கொள்ளுங்கள்...



படம் : திரு டோண்டு ராகவன் அவர்கள்...!!! (டோண்டுவின் படம் கிடைக்கவில்லை, அதனால் ஜெயகாந்தன் படத்தை போட்டிருக்கிறேன் )

டோண்டு ஒரு மசோக்கிஸ்ட் என்றார் குழலி...(அப்போது தான் அப்படி ஒரு வார்த்தை இருப்பதே எனக்கு தெரியும்...அதன் அர்த்தம் இன்றுவரை புரியவில்லை)..டோண்டுவே !!! தமிழ் வலைப்பதிவுலகை விட்டு வெளியேறு !!! என்று நானே பதிவிட்டுள்ளேன்...அது தவறு என்று அப்போதே உணர்ந்தேன்..ஆனான் அதற்காக இந்த இடத்தில் மன்னிப்பு கோருகிறேன்...

தனிப்பட்ட வாழ்வை விடுங்கள்...இந்த மூன்று ஆண்டுகளில நட்பு, கோபம், உணர்வு, பாசம், கண்ணீர், வேகம் என்று பல உணர்ச்சிகளும், அறிவியல்,அரசியல் போன்ற அறிவும் இந்த வலையுலகம் மூலமாகவும் வந்து சேர்ந்துள்ளன...

ஜஸ்ட் லைக் தட் கடந்துபோகவேண்டிய பதிவுலகம், என்னை இவ்வளவு தூரம் ஆக்ரமித்தது என்றால் அதற்கு டோண்டு ராகவன் பதிவில் போட்ட ஒரு சிங்கிள் பின்னூட்டமும் காரணம்...

பதிவுலகம் என்னை மெருகேற்றியிருக்கிறது. நிறைய பொறுமை, உலகை பற்றிய அறிவு, என்னுடைய சொந்த எழுத்து திறமை, நிறைய நன்பர்கள், ஆளுமை திறமை போன்றவை இந்த பதிவுலகம் எனக்கு கொடுத்த கொடைகள்...

அதனால் டோண்டு ராகவனுக்கு என்னுடைய ஸ்பெஷல் நன்றிகள்...

இந்த பதிவு டோண்டு ராகவனை பற்றியது என்று திடீர் என்று நினைவுக்கு வந்து தொலைக்கிறது...

டோண்டு ராகவன் பற்றி சின்னதாக ஒரு பின்னூட்டம் போட்டு முடித்துவிடமுடியாது என்பதால் தான் இந்த தனிப்பதிவு...

அவருடைய என்னை புரட்டிப்போட்ட அந்த ஞாயிற்றுக்கிழமை , முரட்டு வைத்தியம் (சீரிஸ் பதிவுகள், முரட்டு வைத்தியம் என்ற லேபிளின் கீழ் பார்க்கவும்) போன்ற பதிவுகளை எப்போது மனக்கஷ்டம் ஏற்பட்டு உடைந்து போனாலும் படிப்பேன்...

தன்னை உணர்ந்தவனின் சுய பரிசோதனைகள் அவை...

ஆராதிக்கப்படவேண்டியவை...

கண்ணீரின் உப்பு வாயில் நனைக்க நனைக்க மீண்டும் மீண்டும் படிக்கப்படவேண்டியவை...

என்னைப்பொறுத்தவரை இதுவரை எந்த எழுத்தாளராளும் எழுதப்படாதவை...

பொக்கிஷமாக பாதுகாக்கப்படவேண்டியவை...

இளவஞ்சி எழுதியிருப்பார்...தனித்துவமானவன்...உங்களைப்போலவே...
என்று...

டோண்டுவின் சில தனிப்பட்ட (யுனீக்) குணங்கள் பற்றி சொல்லியே ஆகவேண்டும்...நீங்கள் தனித்துவமானவர் என்று எண்ணினால் இதுபோன்ற உங்களின் குணங்களை நீங்கள் பட்டியலிட முடிகிறதா என்று பாருங்கள்...

1. அசாத்திய பொறுமை : இதற்கு எடுத்துக்காட்டுகள் சொல்லவேண்டுமா என்ன ?

2. போராட்ட குணம் : தான் சரி / தவறு என்று நம்புவதை இறுதிவரை விடாமல் போராடும் குணம்...தன்னுடைய போலியோடு அவர் போராடியதை சொல்லலாம்...

3. போராட்ட குணம் : தான் சரி / தவறு என்று நம்புவதை இறுதிவரை விடாமல் போராடும் குணம்...சல்மா அயூப் விவகாரத்தை சொல்லலாம்...சல்மா என்பவர் ஒரு குறிப்பிட்ட நபர் என்று ஆதாரங்களோடு விளக்கியும் இன்னும் தன்னுடைய நிலையில் இருந்து மாறவில்லை...ஒரு வேளை ஏதாவது ஒரு ஞாயிற்றுக்கிழமை மாறலாம்...

4. நேர்மை..ஒரு வெள்ளிக்கிழமை கேள்வி எதுவும் வரவில்லை, அதனால் பதிவு போடவில்லை என்று சொல்லும் நேர்மை எத்தனைபேரிடம் இருக்கிறது ?

5. நெஞ்சுரம் : சகல தொழில்நுட்பங்களிலும் வித்தகரான அவருடைய போலியிடம் போராட அவரிடம் நெஞ்சுரத்தை தவிற வேறென்ன இருந்தது ? நாட்டாமையில் இருந்து ஹாரி பாட்டர் வரை கிளம்பி வந்தார்களே ?

மேலும் அவருடைய முரட்டு வைத்தியம் பதிவில் தொழிற்சங்கத்தை சேர்தவர்கள் பஸ்ஸில் ஏறவிடாமல் தடுத்தபோது அவர் செய்தது இது !!!

நான் என்ன செய்தேன் தெரியுமா? "நீ யாரடா ஜாட்டான் என்னை பஸ்ஸில் வர வேண்டாம் என்பது, நான் கூறுகிறேன் உன் பஸ் எனக்கு வேண்டாம்" என்று ஒரு சைக்கிள் வாங்கி அதில் வேலைக்குச் செல்ல ஆரம்பித்தேன். வீட்டிலிருந்து அலுவலகம் 20 கிலோமீட்டர். போக ஒரு மணி நேரம் வர ஒரு மணி நேரம் என்று 40 கிலோமீட்டர் பயணம் தினசரி. அப்போது எனக்கு வயது 42. ஆனால் சைக்கிளை கண்மண் தெரியா வேகத்தில் ஓட்டிச் செல்வேன். காற்றின் எதிர்த் திசையில் மனிக்கு 20 கி.மீ. வேகம், நேர்த் திசையில் 30 கி.மீ. வரை வேகம். திசம்பர், ஜனவரி மாதங்களில் அலுவலகம் அடைந்ததும் ஸ்வெட்டரைக் கழற்றி சட்டை வியர்வையால் உடம்பில் ஒட்டிக் கொள்ள நின்றவன் நான் ஒருவனாகத்தான் இருப்பேன். பகல் நேர வெப்ப அளவு 15 டிக்ரி செல்சியஸ் போல இருக்கும்.

சில நாட்கள் கழிந்தன. ஒரு நாள் தலைமை அலுவலகத்துப் பொது மேலாளர் P.G. Zalani என்னை நேஷனல் ஹைவேயில் வியர்வையுடன் சைக்கிள் செலுத்தி வருவதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். என்னைக் கூப்பிட்டு விசாரிக்க நான் அவரிடம் யூனியன்காரர்கள் செய்ததைக் கூற, உடனே அவர் அவர்களைத் தன் அறைக்கு வரவழைத்துக் கேட்டிருக்கிறார். அவர்களோ தாங்கள் ராகவனைக் குறித்துப் பேசவில்லை அவர் எப்போது வேண்டுமானாலும் பஸ்ஸில் வரலாம் என்றுக் கூறினர்.

இருந்தாலும் நான் ஒத்துக் கொள்ளவில்லை. "இதை ஒரு உடற்பயிற்சியாகச் செய்துக் கொள்கிறேன், நன்றி" என்றுக் கூறி விட்டேன்.


6. விடா முயற்சி : அவரே சொல்கிறார் பாருங்கள்...

ஊர் சுற்றியக் காலங்களில் நிறைய சினிமா பார்த்திருக்கிறேன் என்று தோன்றியது. ஒரு வெறுப்பில் இனிமேல் கோர்ஸ் முடியும் வரை திரைப் படம் பார்க்காமல் இருக்க வேண்டும் எனத் தீர்மானித்தேன். என்னால் முடியாது என்று என் நண்பர்கள் என்னை வெறுப்பேற்ற என் வெறி அதிகமாயிற்று. 1969 ஜூலை வரை ஒரு படமும் பார்க்காமல் இருந்தேன். கோர்ஸ் முடிந்தப் பிறகுதான் படம் பார்த்தேன். ("பார் மகளே பார்")

என் அப்பாவே என்னிடம் அம்மாதிரியெல்லாம் சபதம் செய்ய அவசியமில்லை என்று கூறினாலும் நான் பிடிவாதமாக இதை சாதித்தேன். எது எப்படியானாலும் இது எனக்கு ஒரு வித நிறைவை அளித்தது. பிற்காலத்தில் பல விஷயங்களுக்குப் போராடியிருந்தாலும் என்னுடைய இந்த முதல் போராட்டம் என் மனதில் இப்போதும் நிலைத்து நிற்கிறது. "உன்னால் முடியும் தம்பி" என்று கூறுகிறது.


7. நியாபக திறன்...தொடர்ச்சியாக பல சம்பவங்களை ஏதோ நேற்று நடந்தது போல நினைவில் வைத்திருப்பது...

மச்சினிச்சி கல்யாண வீடியோயில் இருந்து பள்ளிக்கூடத்தில் வாத்தியார் நடத்திய பாடம் வரை இன்றுவரை நியாபகம் வைத்து சொல்வது...

வாழ்க்கையின் மீது தெளிந்த பார்வை உடையவர்களாலேயே இப்படி நியாபகம் வைத்திருக்கமுடியும்...

8. இளமை : இன்றும் இளைஞராகவே திரிவது, தன்னுடைய துனைவியாரை அவ்வப்போது இழுத்து அவர் மீது உள்ள அன்பை அடிக்கடி வெளிப்படுத்துவது...

எக்ஸ்கியூஸ்மீ ரவி.. ஒரு கிங்ஸ் கிடைக்குமா என்று பியர் அடித்து லெக் பீஸை கடித்துக்கொண்டே தி.நகர் பாரில் அவர் கேட்டதை நான் வெளியே சொல்லியிருக்கிறேனா என்ன ?

கடைசீயாக...

என்மேல் கிளப்பப்பட்ட பல அவதூறுகளுக்கு எல்லாம் நான் அவரிடம் சென்று விளக்கம் அளிக்கும் முன்பே உண்மையை அறிந்துகொண்ட கூரிய அறிவு...!!!

யாராவது அவதூறு கிளப்பினால், அதனால் டோண்டு சார் என்ன நினைத்துக்கொள்வாரோ என்று கவலை கொள்ளத்தேவையில்லை...காரணம் அவர் நம்மை நம்புகிறார் என்ற உணர்வே தெம்பைத்தரும் தெரியுமா ?

கருத்து ரீதியாக எனக்கும் அவருக்கும் பல வேறுபாடுகள் இருந்தாலும் நிபந்தனை அற்ற எதிர்பார்ப்புகள் அற்ற நட்பை தொடர்ந்து பாராட்டிவருவது...

ஏன் தொடர்ந்து காண்டு கஜேந்திரன் பதிவை எழுதி போதை ஏற்றிவரும் லக்கிலூக் தான் அவரது ஜெயா டிவி பேட்டியை பல இன்னல்களுக்கிடையே சி.டியில் காப்பி செய்து அவரை தேடி சென்று கொடுத்தவர்...

தீவிர திராவிட சிந்தனை உள்ளவரான லக்கியிடம் அவருக்கு நட்பு என்ற செய்தி, அவர் நட்பு பார்க்க மற்ற வடகலையார்கள் செய்வது போல தோள் சட்டையை தொட்டு பார்ப்பவர் அல்ல என்ற செய்தியை சொல்கிறதல்லவா ? ( என்ன வரவணையான் என்றால் தான் அவருக்கு கொஞ்சம் ஆகாது கிகிகி - டோண்டு சார் அடித்த கிங்ஸுக்கு வரவணை பில்லு போட்டது தான் காரணம் கிகிகி)



நானும் வரவணையானும் (இருவரும் மப்பில்)



படத்தை எடுத்தவர் ஓசை செல்லா !!!! லக்கிலூக் எதிர் பக்கத்தில் தண்ணியடிப்பதால் அவர் இந்த படத்தில் இல்லை...

அவ்வளது தான் டோண்டு சார் புராணம்...

இந்த பதிவு யாருக்கு கோபம் தரும், யாருக்கு நிறைவு தரும் என்பதை பற்றிய கவலை எனக்கில்லை...

எனக்கு நிறைவாக இருக்கிறது...!!!

Friday, November 07, 2008

அமெரிக்காவின் டவுசரை கிழித்த சுல்தான் அண்ணன்...

அன்புள்ள வலைப்பதிவு மகா ஜனங்களே !!! (இதுக்கொன்னும் கொறைச்சல் இல்ல...)

அமெரிக்காவின் டவுசரை கிழிக்கும் சுல்தான் அண்ணனின் பதிவை பற்றி முன்பே எழுதவேண்டும் என்று நினைத்து மறந்துவிட்டேன்...

ஒரு காலத்தில் அமெரிக்கா என்னுடைய கனவு தேசம்...!!! அழகான வெள்ளைப்பெண்கள், சரக்கு, லாஸ் வேகாஸ், பமீலா ஆண்டர்சன் என்று பல கனவுகளை ஆக்ரமித்த ஒரு விஷயம் அமெரிக்கா...

வாழ்க்கையில் ஒரு முறையாவது அங்கே காலடி எடுத்து வைத்துவிடவேண்டும்...விமான நிலையத்தில் இறங்கும்போது மண்டியிட்டு அந்த மண்ணை முத்தமிடவேண்டும் என்றெல்லாம் நினைத்திருந்தவன் தான் நானும்...

ஆகாயத்தில் பறக்கும் விமானத்தை அண்ணாந்து பார்த்த்து, அதை பற்றிய பகல் கனவு கண்டு வண்டியில் இருந்து கீழே விழுந்தவன் தான் நானும்...

ஆனால் இப்போது கொஞ்சம் புரிதல் வந்திருக்கிறது...

மலேசியாவில் ஒரு முறை கக்கூஸீல் நோக்கியா மொபைலை தொலைத்துவிட்டு விமானம் புறப்படும் வேளை சண்டையிட்டு, விமானத்தில் இருந்து இறங்கி, அந்த கக்கூஸை கழுவி துடைத்துக்கொண்டிருந்த தமிழரிடம்

"இங்கே மொபைல் ஏதும் பார்த்தீங்களா"

"இல்லையே, நான் எல்லா டாய்லெட்டையும் கழுவிட்டேனே" என்ற மைக்ரோரியலிஸ (இது பற்றி பிறகு விளக்குகிறேன், என்னோட கண்டுபிடிப்பு இது)பதிலையும் பெற்று, விமானத்தில் ஏறிய அனுபவங்களும் கிடைத்துவிட்டது...

ஆனால் இப்போது 2000 வாக்கில் இருந்து அமெரிக்க கண்மூடித்தன மோகம் இல்லை...வளவளவென்று எதுவும் பேச விரும்பவில்லை, அண்ணனின் பதிவுக்கு போலாம் வாங்க...

அண்ணன் இரண்டு பதிவுகளாக எழுதியிருக்கிறார்...

முதல் வாய் பொங்கலை சட்னியோடு உள்ளே தள்ளும்போது நறுக்கென்று மிளகு மாட்டினால் போல இருக்கும் பதிவு நெம்பர் 1

http://sultangulam.blogspot.com/2008/08/1.html

சூடான பிரியாணியை அள்ளி வாயில் திணிக்கும்போது ஏலக்காயோ, கிராம்போ வந்துவிழுந்து தூ தூ என்று துப்பவைக்குமே அதுபோல இருக்கும் பதிவு நெம்பர் 2

http://sultangulam.blogspot.com/2008/08/2.html

இந்த பதிவுக்கு பின்னூட்டம் எதுவும் போட்டு உங்கள் நேரத்தை வீணடிக்கவேண்டாம் நன்பர்களே...சுல்தான் அண்ணன் பதிவில் சந்திப்போம்...

Thursday, November 06, 2008

டுபாக்கூர்களை கண்டுபிடிப்பது எப்படி ?

எங்களது மொட்டை பாஸ் மாயவரத்தானால் கண்டறியப்பட்டு தமிழ் வலையுலகிற்கு அறிமுகம் செய்யப்பட்ட (இந்த தகவல் எவ்வளவு உண்மை என்று தெரியாது) ரீட் நோட்டிபை பற்றி ஹூரீட்மீ பற்றி...

சாதாரணமாக வலையுலகில் உடான்ஸு பேர்வழிகள், அமிஞ்சிக்கரையிலோ, அயனாவரத்திலோ ( கடந்த பதிவிலும் அயனாவரம்) உட்கார்ந்துகொண்டு, அமெரிக்காவில் சான் ஜோஸில் இருக்கிறேன், இந்தா ப்ளைட்டை பிடித்துவிட்டேன், இப்போது பிஸா திங்கிறேன் என்பது போல டுபாக்கூர் அடிப்பார்கள்..

சிலர் மின்னஞ்சலை மட்டும் வெளியே காட்டி, ஊரான் வீட்டு குழந்தை போட்டோ எதையாவது ப்ரொபைலில் போட்டுக்கொண்டு, கருத்துக்களை அள்ளித்தெளிப்பார்கள்...அதில் நேர்மையாக வாழ்வது எப்படி என்று கூட முப்பத்தைந்து பதிவு போடுவார்கள்...

இப்படிப்பட்டவர்கள் உண்மையில் எங்கே இருந்து வலைபதிகிறார் என்று கண்டறிய சில தளங்கள் உண்டு...

www.readnotify.com
www.whoreadme.com

இந்த தளங்களில் சென்று உறுப்பினராகி, அதன் மூலம் நீங்கள் அனுப்பும் மின்னஞ்சல் கக்கூஸ்காரனில் இருந்து காய்ந்தபுல்லு வரை எங்கே இருந்து உங்கள் மின்னஞ்சலை ஓப்பன் செய்கின்றார்கள் என்று கண்டறியலாம்...

ரீட் நோட்டிபையில் இருந்து உங்கள் மின்னஞ்சலிலேயே (உம்: ஜிமெயிலில் இருந்தால் ஜிமெயிலில் இருந்தே அனுப்பலாம்...அது பற்றிய மேலதிக தகவலை அந்த தளத்திலேயே பாருங்கள்)

ஹூரீட்மீ இன்னும் வசதி...நீங்கள் உங்கள் மின்னஞ்சலை திறக்காமலேயே அந்த தளத்தில் இருந்தே மின்னஞ்சல் அனுப்பலாம்...

உபயோகப்படுத்திப்பார்த்து ( எனக்கு அனுப்பாதீங்கடே !! ) பலனை அனுபவியுங்கள்..!!!

Wednesday, November 05, 2008

அதிபர் தேர்தல் அமெரிக்காவுக்குதானே ?



டேய் அமெரிக்காவுக்கு தானே தேர்தல் ?

என்னம்மோ அயனாவரம் பஞ்சாயத்து பிரெசிடெண்டு தேர்தல் மாதிரி, அவர் வீட்டு நாய்க்குட்டி வரைக்கும் அலசி துவைச்சு காயப்போடுறீங்க ?

ஆதிக்க சக்திகளுக்கு அடிவருடுதலை ஏதோ கலை மாதிரி செய்யுறீங்களேடா ?

போங்கடா போய் புள்ளகுட்டிவள படிக்கவைங்க...!!!

Tuesday, November 04, 2008

டேய்...கைய கால முறிச்சுடுவேன்...

தமிழக அரசு கைத்தறித்துறை சார்பாக எண்பதாயிரம் பாக்கேஜ்கள் (துணிகள்) இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு செல்கின்றன...

1. ஒரு வேட்டி
2. ஒரு சேலை
3. ஒரு கைலி
4. ஒரு நைட்டி
5. இரண்டு துண்டுகள்
6. மற்ற துணி வகைகள் நியாபகம் இல்லை

ஒவ்வொரு பேக்கேஜிலும் மொத்தம் எட்டு வகையான துணி வகைகள் இருக்கும்...இது போன்ற எண்பதாயிரம் பாக்கேஜுகள் இன்னும் இரண்டு நாளில் தயாராகிவிடும் என்று கைத்தறி துறை அமைச்சர் தெரிவித்தார்...

இவை அனைத்தும் தமிழ்மக்களுக்கு சென்று சேர முதல்வர் நடவடிக்கை எடுப்பார் என்று நம்புகிறேன்...

ஆனா இப்பவே சொல்லிக்கிறேன்...அவங்களுடைய கையில அது கரெக்ட்டா கிடைக்கனும்...

வடக்கு இலங்கையில் குழந்தகள் கிபிர் விமானத்து குண்டு வீச்சினால் பதுங்கு குழியில் ஒளிவது போல இலங்கை அதிபர் ராஜபக்சேவும் ஒளிந்துகொள்வதாக தகவல் கிடைக்கிறது...



இவர் ஒளிந்துகொள்ளும் நேரம் வேற யாராவது அந்த துணிகளை லவட்டிக்கப்போறானுங்க...

காய்ந்துகிடக்கும் சிங்கள காடையர்கள், பிள்ளையாள் கிள்ளையான் கருணா கிருணா தூக்கிக்கினு போயிடப்போறானுங்க ( கிழக்கிலங்கைக்கும் உதவிகள் தேவைதான், ஆனால் இப்போதைய நிலையில் வடக்கு பக்கம் இருக்கும் - உள் நாட்டிலேயே அகதிகளாக வாழும் மக்களுக்குதான் உதவிகள் உடனே தேவை, உங்களுக்கும் அனுப்புறோம் கொஞ்சம் பொறுங்க ஓகே...)

எவனாவது இந்த உதவிகளை எல்லாம் லவட்டனும்னு நெனைச்சீங்க, மவனே கைய கால முறிச்சுடுவேன்...!!!



இது வரை ஏழரை கோடி நிதி சேர்ந்திருக்கு என்று படித்தேன்...முதல்வர் அவர்களே...பீகார் வெள்ள நிவாரண நிதிக்கு 10 கோடி முதல்வர் நிவாரண நிதியில் இருந்து ஒதுக்கினீங்களே...

ஆனா தமிழர்கள் நிதிக்கு மட்டும் நாங்க பாக்கெட்டுல் இருந்து தரவேண்டி இருக்கே ? நீங்க முதல்வர் நிவாரண நிதியில் இருந்து ஒரு நூறு கோடி ஓதுங்குங்க அய்யா...

இதெல்லாமா நான் சொல்லனும் உங்களுக்கு ? :)))

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால்

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால் டயபட்டீஸ் / நீரிழிவு / சர்க்கரை நோயை விரட்ட நியான்டர் செல்வனால் ஆரம்பிக்கப்பட்ட இந்த குழுமத்திற்கு ( https://www....