Posts

Showing posts from September, 2008

குசும்பன் வாசகியின் அதிரடி பேட்டி !!!

வணக்கம் சகோதரி...முதல் முறையாக ஒரு வாசகி, தமிழ் வலைப்பதிவு உலகத்துக்கு அளிக்கும் செவ்வி இது..(பேட்டி / சரியான தமிழ் வார்த்தை செவ்விதான்)...

உங்களை பற்றி சொல்லுங்க, எப்படி தமிழ் வலைப்பதிவுகள் படிக்க ஆரம்பிச்சீங்க ?

பெங்களூரில் தகவல் தொழில்நுட்ப துறையில் பணியாற்றுகிறேன்...அலுவலகம் முடிந்து வீட்டு சென்றபின் கணவர் வரும் வரையில் தினமலர் போன்ற தளங்களை மேய்வது வழக்கம்...அதன் மூலமாக தமிழ்ஷ் பழக்கமானது...கடந்த மூன்று மாதங்களாக தமிழ்ஷ் மூலம் வலைப்பதிவுகளை படித்து வருகிறேன்...

எப்படிப்பட்ட பதிவுகள் படிக்கிறீங்க ? பிடித்த பதிவு எது ? எந்த எந்த பதிவுகளை எப்படி படிக்கிறீங்க ?

பொதுவாக சீரியசாக எழுதும் வலைப்பதிவுகளை கண்டால் தூர விலகி ஓடுவேன்...உங்களுடைய வீராசாமீ பதிவு பி.டி.எப் கோப்பாக வந்தபோது அட தமிழில் இப்படி கூட எழுதறாங்களா என்று ரசித்தேன்...அப்போது அது ஒரு வலைப்பதிவு என்று தெரியாது...ப்ராக்லி ஸ்பீக்கிங், நான் ரெகுலராக படிப்பது குசும்பன் வலைப்பதிவு தான்..ஆம்லேட் மூலமாக வயதை கண்டுபிடிப்பது எப்படி என்று அவர் ஒரு குசும்பு பதிவு போட்டிருந்தார்...அதில் இருந்து ரெகுலராக அந்த பதிவுகளை வாசிப்பேன்...

நான் தமிழ…

ஸ்பெஷல் பொரியல் 29.9.2008

லதானந்த் பதிவு போடவேண்டும் என்று ஜோசப் பால்ராஜ் வேண்டி விரும்பி கேட்டிருக்கிறார்...நானும் இந்த பகிரங்க பதிவின் மூலம் அதையே கேட்கிறேன்..

***********************************************

ஊரே சரோஜா படத்தை பாராட்டும்போது சpoஞ்doஜெய்yan அதை ஒரு அட்டு படம் என்று சொல்லியிருப்பது ஆச்சர்யம்...சரோஜா படத்துக்கு டிக்கெட் வாங்கிவிட்டு காதலில் விழுந்தேன் படத்துக்கு போய்விட்டாரோ ?

***********************************************

எல்லா பதிவுக்கும் சென்று - படிக்கிறாங்களோ இல்லையோ - me the first என்று பின்னூட்டம் போடும் சகோதரி ராப் இந்த பதிவுக்கு அப்படி போடமுடியாது என்று தெரிவித்துக்கொள்கிறேன்...

***********************************************

இணைய ரவுடி பொட்டீக்கடையார் இந்தியா விஜயம் செய்கிறார். அவரை பற்றி தெரியாதவர்கள் அவருடைய பதிவுக்கு சென்று உலக ஞானம் பெற்று அப்புறமாக அவரை கலாய்க்கவும்...

***********************************************

வெட்டிப்பயல் கிளு கிளு குளு குளு கதைப்போட்டி ஒன்றினை அறிவித்துள்ளார்...ஜெயிச்சா என்ன தருவார் என்று தெரியாமல் எப்படி கலந்துகொள்வது ? இந்தியா வரும்போது G1 போன் வாங்கி வந்து பரிச…

ஆதலினால் காதல் செய்தேன்.. பாகம் இரண்டு

பாகம் 1

முதலாம் ஆண்டு முடிந்து இரண்டாம் ஆண்டு தொடங்கியது....விடுதியில் இருந்த மாணவர்கள், விடுதியின் சட்ட திட்டங்கள் பிடிக்காமல் வெளியேறி தனியாக வீடு வாடகைக்கு எடுத்து தங்கும் முயற்ச்சியில்...

நான், கோவிந்து, கார்த்திக், மணி, மற்றும் இளமாறன் ஆகிய ஐந்து பேரும் ஒன்றாக தங்கிக்கொள்ளலாம் என்று பிரியப்பட்டோம்...

வீடு தேடும் பொறுப்பு என்னுடையது....

தெரிந்த டீக்கடைக்கு சென்றேன்...இளங்கோ அண்ணா தான் இதற்க்கு ஓனர்..எங்க க்ரூப் கிட்ட ரொம்ப பாசமா இருப்பார்..நாங்களும் அவர் வயது வித்தியாசம் பார்க்காமல் விளையாடுவோம்...

நான்: என்ன இளங்கோ அண்னே...ஒரு ஸ்ட்ராங் டீயப்போடுறது...

இளங்கோ: என்ன குமாரு...கொஞ்சம் பழைய பாக்கிய வைக்கிறது..

நான்: என்னன்னே...இப்படி கேட்டா எப்படி...

இளங்கோ : வேற எப்படி ராசா கேக்குறது..

நான்: அட இருங்கன்னே...இந்த மாசத்தில இருந்து தனியா வீடு பாத்து தங்க போறோம்...செலவு கம்மியா ஆகும்..பழைய பாக்கி எல்லாம் கொடுத்துடுறோம்...

அண்ணன் ஒரு முறைப்பு லுக்கு கொடுக்கிறார்...

மீண்டும் நான்..அண்னே...தம்முக்கு ஒரு ரெண்டு ரூபா தாங்கன்னே...

இளங்கோ அண்ணன்:ரொம்பத்தான் ஏத்தமாகிப்போச்சி டா உங்களுக்கு...(சட்டை பையிலிருந…

ஆதலினால் காதல் செய்தேன்..பாகம் ஒன்று

ரெண்டு வருசத்துக்கு முன்னால எழுதியது !!! கொஞ்சம் மொக்கையாத்தான் இருக்கும் !!! பொறுத்தருள்க !!!

நான் குமார்..என் காதல் கதையை உங்களுக்கு இப்போது சொல்லுகிறேன்...என் பள்ளிப் படிப்பு முடிந்தது...கல்லூரிக்கான தேடல் ஆரம்பமாயிற்று...என் மதிப்பெண் அவ்வளவு அதிகமில்லை...சராசரி தான்...இடம் கிடைத்தது திருச்சிக்கருகில் புத்தனாம்பட்டி நேரு நினைவு கல்லூரி...

கட்டுப்பாடுகள் நிறைந்த பள்ளிப் பருவத்தில் கல்லூரியைப் பற்றி பல கனவுகள் கண்டிருந்தேன்...அவை யாவும் நிறைவேறப்போகும் ஆவலில் நெஞ்சம் நிறைந்த படபடப்புடன் முதல் நாள் கல்லூரி விடுதியில்....

நண்பர் அறிமுகம் எல்லாம் முடிந்தது...பல ஊர்களில் இருந்து இந்த கல்லூரியை தேர்ந்தெடுத்து மாணவர்கள் வந்திருந்தார்கள்...

கல்லூரி வகுப்புகள் ஆரம்பமாயின...அனைத்து சுகந்திரங்களும் ஒருசேர கைகளில்...

நினைத்த நேரம் சினிமா...அவ்வப்போது வகுப்பு...பல சிறகுகள் முளைத்தது போல் இருந்தது...

எங்கள் கல்லூரியில் இருந்து விடுதி அரை கிலோமீட்டர் தூரம் அமைந்திருந்தது...நடந்துதான் செல்ல வேண்டும்...

கல்லூரிக்கு அருகில் ஒரு பள்ளியும் அமைந்திருந்தது....முற்றிலும் மாணவிகள் படிக்கக் கூடிய பள்ளி....

மாலை கல…

தமிழ்மணத்துக்கு சீரியசான வேண்டுகோள் !!!

அந்த திரட்டி, அப்படி இருக்கு...அதனால நீங்க இப்படி மாத்துங்க என்றெல்லாம் கருத்து கந்தசாமியாக விரும்பவில்லை...

இருந்தாலும் மற்ற திரட்டிகளின் நல்ல பண்புகளை நமது திரட்டியிலும் பொருத்தினால் கொஞ்சம் நல்லா இருக்குமே என்பது தான் என்னுடைய வேண்டுகோள்...

ஏற்கனவே பல காண்ட்ரவர்ஸிகள் சூடாக இடுகை பற்றி இருக்கிறது...(ஏன் நான் போடும் சில குப்பை இடுகைகளே சூடான இடுகைக்கு வந்து தொலைவது எப்படி இருக்கிறது ?)

நல்ல பதிவுகள் சூடான இடுகைக்கு செல்வதில்லை, காண்ட்ரவர்ஷியல் மற்றும் கவர்ச்சியான தலைப்பு உள்ள பதிவுகளே செல்கின்றன...

சில சமயம் வீக் எண்ட் ஜொள்ளு என்று பதிவு தலைப்பு வைத்து உள்ளே கே.பி.சுந்தராம்பாள் படம் போட்டால் கூட அது சூடான இடுகைக்கு வந்துவிடுகிறது...

மேட்டர் இது தான்...

சூடான இடுகையை எவ்வளவு பேர் பார்வையிடுகிறார்கள் என்பதை வைத்து காட்டுகிறீர்கள், வாசகர் பரிந்துரையை எவ்வளவு பேர் ஓட்டளிக்கிறார்கள் என்பதை வைத்து காட்டுகிறீர்கள்...

இந்த பண்புகளை ஏன் ஒருங்கமைக்க கூடாது ?

வாசகர்கள் ஓட்டளிக்கும்போது "வெற்றி" என்பது போல காட்டும் கை சின்னத்தை கருவி பட்டையில் இருந்து அமுக்குகிறார்கள், அதனால் அது வாசகர் பரிந்…

தமிழ் வலைப்பதிவர்களின் தனிப்பட்ட தொழில்கள் !!

நமது வலைப்பதிவர்களின் தனிப்பட்ட தொழில்கள் சம்பந்தமான பதிவு இது...உங்களுக்கு தேவை என்றால் தொடர்புகொள்ளுங்கள்....நான் ப்ளாகர், அதனால டிஸ்கவுண்ட் கொடுங்கள் என்றெல்லாம் டார்ச்சர் தரக்கூடாது ஆமாம்..

http://www.makkal-sattam.org/

மக்கள் சட்டம் என்ற பதிவை நடத்திவரும் சுந்தர்ராஜன், க்ரெடிட் கார்டு சம்பந்தமான பல்வேறு விடயங்களை டீல் செய்கிறார்...அவருடைய http://www.creditcardwatch.org/ என்ற தளத்தில் பாமரருக்கும் புரியும் வண்ணம் தமிழில் அற்புதமான விளக்கங்கள் தருகிறார்...க்ரிமினல் மற்றும் சிவில் சட்டத்துறை நிபுனர், உங்கள் சட்ட ரீதியான பிரச்சினைகளுக்கு நாடவும்...

http://www.eeravengayam.blogspot.com/

ஈரவெங்காயம் என்ற பெயரில் எழுதும் AKS ஒரு வியாபார காந்தம். கார்மெண்ட் இம்போர்ட் மற்றும் எக்ஸ்போர்ட் செய்கிறார்...நான் கூட எங்கள் அலுவலகத்தில் அனைவருக்கும் தேவைப்படும் கஸ்டமைஸுடு டி-ஷர்ட்ஸ் தயாரிக்க அவருடைய நிறுவனத்தை நாடலாம் என்று உள்ளேன்...இவர் இங்கே தயாரிக்கும் டிசர்ட் மற்றும் கார்மெண்ட்ஸ், வெளிநாடு சென்று அங்கே இருந்து ஏதோ ஒரு ப்ராண்ட் நேமுடன் மீண்டும் இந்தியா வரும் வாய்ப்பு கூட உண்டு. தரம் வாய்ந்த கார்ம…

ஆதலினால் காதல் செய்தேன் !!! இளமை தொடர்கதை !!!

Image
இரண்டாயிரத்து ஆறு நவம்பர் மாதம் படபடவென ஏழு பாகங்கள் எழுதி அப்படியே விட்டுவிட்டேன்...
மிகுந்த வாசிப்பனுபவம் உள்ள பி.கே.எஸ், பாஸ்டன் பாலா, குமரன், மதுமிதா, மங்கை அக்கா, ஷைலஜா அக்கா, மா.சிவக்குமார், முத்து தமிழினி எல்லாரும் ரசித்த தொடர் இந்த தொடர்...

தோழர் பொட்டீக்கடை, தோழர் ஜி.ரா, அருட்பெருங்கோ, கார்மேகராஜா அப்புறம் சந்தோஷ், அனிதா பவன்குமார் எல்லாரும் ரொம்ப உற்சாகப்படுத்தினாங்க...!!!

இவர்கள் பின்னூட்டம் போட்டு உற்சாகப்படுத்தும்போது அப்படியே வானத்தில் பறக்கிறமாதிரி இருக்கும்...ஆக்க்கக்கா, நாமளும் எளுத்தாளர் டோய் என்று நினைத்துக்கொண்டு படபடவென ஏழு பாகங்கள் போட்டாச்சு...

அப்புறம் பல்வேறு வேலைகள்...!! பல்வேறு பிரச்சினைகள்...!!! ஆரோக்கியமற்ற வலைச்சூழல் !!! இதெல்லாம் சேர்ந்து என்னோட கற்பனை குதிரையை கடிவாளம் போட்டு குத்த வெச்சு உக்கார வெச்சுருச்சு...

இப்போ வலையுலகில் இருக்கிற சூழல், எதையாவது உருப்புடியா எழுது என்று உசுப்புகிறது...ப்ராஜக்ட் மேனேஜர் கதை "வயலண்டுக்கா உந்தி" என்று நம்ம கொலுட்டி நன்பர் சொல்லிட்டார். அதனால் மென்மையான வெண்மையான கோல்கேட் பல்பொடி மாதிரியான பழைய கதையை தூசு தட்டி எ…

ஒரு ப்ராஜக்ட் மேனேஜரின் கதை (இறுதி பகுதி)

ஒருமுறை கொஞ்சம் சீரியஸான பொழுதில் அவருக்கும் என்னுடைய நன்பனுக்கு கடுமையான வாக்குவாதம்...குடி, கடவுள், பெண்கள், வறுமை என்று பல்வேறு திசைகளில் போனது..

சார், உங்களை நீங்க கொஞ்சம் மாத்திக்கிட்டா நல்லது...

என்ன மாத்திக்கனும் ?

உங்கக்கிட்ட இருக்க கெட்ட பழக்கங்கள் கொஞ்சம் மாத்திக்கிடுங்க சார், அப்புறம் ரொம்ப கஷ்டமாகிரும்...

என்ன கெட்ட பழக்கம் ? சொல்லுங்க அப்புறம் பார்க்கலாம்...

ஏய் விஜய், நீ சொல்றா...

விஜய் மெதுவாக ஆரம்பிச்சான்...சார் குடிக்கறது தப்பில்லையா ?

யார் சொன்னது தப்புன்னு ? ஏன் மேலை நாட்டுல சாப்பாட்டு டேபிள் மேலயே சரக்க வெச்சிருக்கான்...அப்பன் மவன் எல்லாரும் அடிக்கறான், அவன் கிட்ட போய் சொல்லுவியா ?

அங்க குடிக்கிறாங்கன்னா அது அவங்க க்ளைமேட்டுக்கு சூட் ஆகும் குடிக்கிறாங்க...இங்க எதுக்கு சார் குடிக்கிறோம் ? போதைக்கு தானே ?

ஏன் இங்க சரக்கே இல்லையா என்ன ? கற்காலத்துலயே சோம பாணம், சுறா பாணம் அப்படின்னு இருந்தது...

ஏன் ராமாயணம், மகாபாரத கதையில கூடத்தான் சரக்கு இருந்ததுக்கு ஆதாரம் இருக்கு...அப்போ என்ன இந்தியா க்ளைமேட் ஸ்விஸ்ஸர்லாந்து க்ளைமேட்டா இருந்ததா என்ன ?

சார், குடிக்கறது தப்பில்லை சார், அளவுக்க…

இரண்டாம் திருமணம் செய்பவர்களுக்கான பத்து டிப்ஸ்

1. உங்கள் முதல் திருமணத்தில் உள்ள பிரச்சினைகளை முதலில் முடியுங்கள் - பொருளாதார, சமூக, வாழுமிடத்தில் உள்ள தொல்லைகளில் இருந்து முதலில் வெளியே வாருங்கள்...நீங்கள் ஒரு புதிய உறவுக்கு தயார் என்பதை நீங்கள் உங்கள் மனதில் இருத்துங்கள்...

2. உங்கள் தவறுகளை உணருங்கள்...உங்கள் முதல் திருமண அனுபவத்தினை சீர் தூக்கிப்பாருங்கள்...உங்கள் பலம், பலவீனம் ஆகியவற்றை அசைபோடுங்கள்...பழைய தவறுகளை திரும்ப செய்துவிடாமல் இருக்க இது நிச்சயம் தேவையான ஒன்று...

3. உங்கள் புதிய உறவை முழுமையாக புரிந்துகொள்ள முயலுங்கள்...இந்த இரண்டாவது திருமணம் உங்களுடைய உயிரில்பாதியை பற்றி ஆழமாக தெரிந்துகொள்ள ஒரு வாய்ப்பு என்று நினையுங்கள்....உங்களுக்கு குழந்தை இருப்பின் அந்த குழந்தையை பற்றி, அந்த குழந்தையின் எதிர்காலம் பற்றி உங்கள் புதிய வாழ்க்கைத்துணையின் உள்ளக்கிடக்கை என்னவாக இருக்கிறது என்பதை ஆழமாக வெளிக்கொண்டுவாருங்கள்...

4. நீங்கள் நீங்களாக இருங்கள், திறந்த புத்தகமாயிருங்கள்...மென்மையாக பேசுங்கள்...உங்கள் பயங்கள், சந்தேகங்கள், நம்பிக்கைகள் போன்றவைகளை வெளிப்படையாக சொல்லுங்கள்...உங்கள் உள்ளக்கிடக்கைகள் மற்றும் ஒரு தோல்வியை தந்துவிடு…

மொதல்ல லக்கிலூக், அடுத்தது தமிழச்சி, எனக்கும் ஆசையாருக்கு...

லக்கிலூக் ஆன்லைன் என்று லக்கியார் புதுவீட்டுக்கு போனது சரி ஆனால் இன்று தமிழ்வெளியை நோக்கியபோது இன்னோரு உண்மை தெரிந்தது...

தோழர்.தமிழச்சி, புது வீட்டுக்கு சென்றுள்ளார். அதனை பதிவிட்டு தோழர்களுக்கு தெரியப்படுத்தியுள்ளார்...

அருமையான டெம்ப்ளேட்டில் இடது புறம் தமிழச்சியின் படங்கள் மாறி மாறி வருகிறதுபோல் செய்யப்பட்டுள்ளது...

நீங்களும் போய் பாருங்களேன்...!!!

நோ நோ பரிசல் அதிஷா Carகீ நோ, இங்க கும்மி வேண்டாம் குசும்பன், அபி அப்பா, நரசிம் சார். தமிழன் எங்கே, தீவார் எங்கே, பொட்டீக்கடையார் எங்கே, ராப் எங்கே, சின்னப்பையன் எங்கே ? எல்லோரும் இங்க கும்மாதீங்க, அடுத்து ஜீரீஜ் பதிவு போடப்போறேன்...

என்னுடைய தனிப்பட்ட வங்கி கணக்கு ஒரு கோடியை தாண்டியது

Image
இன்று ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி கணக்கை நோண்டிக்கொண்டிருந்தபோது சரி, இந்த கணக்கை துவங்கியதில் இருந்து எவ்வளவு ஆகி இருக்கிறது என்று பார்க்கலாம் என்று பார்த்தபோது வந்த வினை...

மொத்த ட்ரான்ஸாக்சன் ரூ ஒரு கோடியே நாற்பத்தைந்து ரூவாய் என்று தெரிகிறது...இதை ஏன் சொல்கிறேன் என்பது பின்னால்...

வேறு சில விஷயம் பார்க்கலாம் : ப்ராஜக்ட் மேனேஜரின் கதையின் இறுதி பாகம் இன்று ரெண்டொரு நாளில் வெளியாகும்...அடுத்த பாகம் எப்போ போடுவீங்க எப்போ போடுவீங்க என்று கேட்டுக்கொண்டேயிருந்த அனைத்து (???) ரசிகப்பெருமக்களுக்கு நன்றி நன்றி நன்றி !!! (அசத்த/கலக்க போவது யாருல இப்படித்தான் ஸ்டீரிடோ டைப்ல முடிக்கறானுங்க)

வடிவேலு உணர்ச்சி வசப்பட்டு விட்ட அறிக்கை நல்ல காமெடி, எவ்ளோ அடிச்சாலும் தாங்குறாண்டா, இவன் ரொம்ப நல்லவண்டா என்று நாளைக்கு கல்லு உடாமே இருந்தா சரி...

சின்னப்பையன் சமையல் குறிப்பு மொக்கை போட்டுட்டார், நல்லாருக்கு (நான் படிச்சது தலைப்ப மட்டும்தான்) , எனக்கு மிகவும் பிடித்த பொட்டொகிராபர் மிஸ்டர் மோகந்தாஸ் இன்னும் கொஞ்சம் படங்கள் போட்டிருக்கார்.

நரசிம் சார் ஏதோ கவிதை ட்ரை பண்ணியிருக்கார், பாருங்களேன்...!!

ரொம்ப நாளைக்கு அப்புற…

தனம் : ஓசியில் கூட போயிராதீங்கடே (A)

Image
ஏற்கனவே உயிர் படத்தில் புருசனின் தம்ம்ம்பியை லவ்வி ஏதோ புரச்சி ஏற்படுத்திவிட்டதாக நினைத்துக்கொண்டிருக்கும் நடிகை சங்கீதா "தனம்" படத்தில் ஐட்டமாக நடித்து அதை விட பெரிய புரச்சி ஏற்படுத்தியிருக்கிறார்...

இவரை "புரச்சி தீ" என்றோ "தீப்பொறி திருமகள்" என்றோ பட்டம் கொடுத்து அழைத்தோமானால் இன்னும் சிறப்பாகவே இருக்கும்...நேத்து வந்த பயக எல்லாம் புரச்சி, தளபதி, இளைய, புதிய என்ற வார்த்தைகளை முன்னாலும் பின்னாலும் நடுவாலும் கோர்த்து ஒரு பட்டத்தை உருவாக்கிவிடும்போது சங்கீதாவுக்கு பட்டம் தருவது என்ன பெரிய விஷயம் ?

படத்தின் ஆரம்பத்தில் மனோபாலாவும் இன்னோரு நடிகரும் தனம் (சங்கீதா) பற்றி ஐதராபாத் ஏரியாவில் பொட்டிக்கடை, ஜூஸ் கடை, பூக்கடை என்று விசாரிக்கிறார்கள்...

யாரும் தனம் பற்றி தகவல் சொல்ல முன்வரவில்லை...

தனம் பற்றி சொல்ல - பக்கோடா காதரோ போண்டா மணியோ, ஜூஸ் கடை வைத்துள்ளார், தன்னுடைய உடன் பிறவாத சகோதரி பற்றி, தனம் நடந்து வந்தா எப்படி இருக்கும் தெரியுமா...தனம் உக்காந்தா எப்படி இருக்கும் தெரியுமா ? என்று ஓவர் பில்டப் கொடுக்க...

கட் செய்தால் ஸ்லோமோஷனில் ஒயிலாக நடப்பதாக நினைத்துக்கொ…

ஒரு ப்ராஜக்ட் மேனேஜரின் கதை - பாகம் ஆறு

ஒரு ப்ராஜக்ட் மேனேஜரின் கதை - பாகம் ஒன்று
ஒரு ப்ராஜக்ட் மேனேஜரின் கதை - பாகம் இரண்டு
ஒரு ப்ராஜக்ட் மேனேஜரின் கதை - பாகம் மூன்று
ஒரு ப்ராஜக்ட் மேனேஜரின் கதை - பாகம் நான்கு
ஒரு ப்ராஜக்ட் மேனேஜரின் கதை - பாகம் அய்ந்து

இரண்டு வருடங்கள் கழித்து ஒரு நாள் ஒரு தொலைபேசி அழைப்பு...லைனில் பழைய மேனேஜர்...என்னடா இந்தாள் விஷம் குடிச்சான் செத்து போனான் என்று கேள்விப்பட்டால் இன்றைக்கு தொலைபேசியில் அழைக்கிறானே என்று ஆச்சர்யம்...

யாரை இனிமேல் பார்க்கவே கூடாது என்று நினைத்தேனோ அவரிடம் இருந்தே போன், ஒரு எம்.என்.ஸி பெயரை சொல்லி அதில் உயர்ந்த பதவியில் இருப்பதாகவும், தனியாக வாழ்வதாகவும் சொன்னார்...என்னிடம் பேசும்போது புல் மப்பு, என்னுடைய டீட்டெயில்ஸ் வேறு ஒரு பழைய எம்ப்ளாயி மூலம் கிடைத்ததாகவும், இந்த ஊரில் அவருக்கு தெரிந்தது நான் மட்டும் தான் என்றும் சொன்னார்...

நானே வந்து பார்க்கிறேன் சார் என்றேன், ஹாலிவுட் ஹீரோக்கள் பேய் இருக்கிறது என்று தெரிந்தும் கதவை போய் திறந்து பார்ப்பது மாதிரி என்றும் சொல்லலாம், இவரால் வேறு யாராவது டேமேஜ் ஆகாமல் காக்கும் எண்ணமும் ஒரு பக்கம், அவருடைய குடும்பத்தினர் பற்றி தெரிந்துகொள்ளும் ஆவ…

ஒரு ப்ராஜக்ட் மேனேஜரின் கதை - பாகம் ஐந்து

ஒரு ப்ராஜக்ட் மேனேஜரின் கதை - பாகம் ஒன்று
ஒரு ப்ராஜக்ட் மேனேஜரின் கதை - பாகம் இரண்டு
ஒரு ப்ராஜக்ட் மேனேஜரின் கதை - பாகம் மூன்று
ஒரு ப்ராஜக்ட் மேனேஜரின் கதை - பாகம் நான்கு


அவர் மனைவிக்கும் அவருக்கும் இடையில் ஏதோ பிரச்சினை...புகைபிடிக்கும் நேரங்களில் எல்லாம் யாரிடமாவது சத்தமாக இதை பற்றி விவாதித்துக்கொண்டிருப்பார்...

பிறந்த பெண் குழந்தைக்கு பெயர் வைப்பதில் ஆரம்பித்த கருத்து வேறுபாடு, முழுக்க குடித்துவிட்டு வீட்டுக்கு செல்வது, வீட்டிலேயே வைத்து குடிப்பது, புகை பிடித்து குழந்தை முகத்தில் விடுவது என்று போனதாக சொல்லப்பட்டது...

அவரே இதை சொல்வார்...நானே டைவர்ஸுக்கு போனாத்தான் ஜீவனாம்ஸம் எல்லாம் கொடுக்கனும், அவளையே போகவெச்சிடேன்னு வெய்யு, ஒன்னும் கொடுக்கத்தேவையில்ல தெரியுமா...நாங்கள்ளாம் கோடம்பாக்கம்...எத்தனை பிரச்சினைகளை பார்த்தவங்க...

அவர் வீட்டில் பெரியவர்கள் முன்னிலையில் ஒரு முறை பஞ்சாயத்து நடந்தது, அந்த பஞ்சாயத்தில் பேசிக்கொண்டிருந்தபோதே கை நீட்டி முன்னாள் விமானப்படையின் அதிகாரியான மாமனாரை கை நீட்டி அடித்துவிட்டார், அவர்கள் தரப்பில் மகளின் வாழ்க்கை பாழாகிவிடக்கூடாதே என்பதற்காக அதையும் பொறுத்து, அ…

ஒரு ப்ராஜக்ட் மேனேஜரின் கதை / நான்கு பாகங்கள்

ஒரு ப்ராஜக்ட் மேனேஜரின் கதை !!!!

இது தான் கதையோட தலைப்பு...ஆனா பதிவின் தலைப்பாக இதை தர விரும்பவில்லை...ஏன் என்றால் இதில் எழுதப்போகும் சில விடயங்கள் வாசகர்களுக்கு அதிர்ச்சி ஏற்ப்படுத்தலாம்...கலாச்சார அதிர்ச்சியாகவும் இருக்கலாம்...

அப்படிப்பட்ட வாசகர்கள் நீங்கள் என்றால் - நீங்கள் கம்ளெயிண்ட் பண்ணும்படி இருக்கவேண்டாமே என்பதால் இதனை சொல்லிவிடுதல் நலம்...

இந்த ப்ராஜக்ட் மேனேஜர் கதை உங்கள் வாழ்க்கையையோ, நீங்கள் பார்த்த நபர்களையோ ரிசம்பிள் செய்தால் அதற்கு நான் பொறுப்பல்ல...!!!

ஆரம்ப டிஸ்கிக்காக மட்டும் இந்த பதிவு...

ஒரு ப்ராஜக்ட் மேனேஜரின் கதை (1)பாகம் ஒன்று

ஒரு ப்ராஜக்ட் மேனேஜரின் கதை (2)பாகம் இரண்டு

ஒரு ப்ராஜக்ட் மேனேஜரின் கதை (2)பாகம் மூன்று

ஒரு ப்ராஜக்ட் மேனேஜரின் கதை (2)பாகம் நான்கு

இதுவரை படிக்காதவர்களுக்காக : இந்த மீள்பதிவு

ஒரு ப்ராஜக்ட் மேனேஜரின் கதை (4)

ஒரு ப்ராஜக்ட் மேனேஜரின் கதை (1)பாகம் ஒன்று

ஒரு ப்ராஜக்ட் மேனேஜரின் கதை (2)பாகம் இரண்டு

ஒரு ப்ராஜக்ட் மேனேஜரின் கதை (2)பாகம் மூன்று

யாஹூ குழுமத்தில் விஜய்க்கு பரிச்சயமான பெண் அவள். கேம்பஸ் இண்டர்வியூ எட்டிப்பார்க்காத ஏதோ ஒரு எஞ்சினீயரிங் கல்லூரியில் படித்துவந்தாள், மின்வாரிய ஊழியர் தந்தை...

மூன்று பெண்களில் மூத்தவள், குடும்பம் கொஞ்சம் கஷ்டமான நிலையில் இருந்தது, படிப்பை முடித்தவுடன் விஜயை ஏதாவது வேலைக்கு உதவுமாறு கேட்டிருந்தாள்...ரெஸ்யூமையும் எனக்கும் விஜய்க்கும் அனுப்பியிருந்தாள்...

எல்லாரையும் ஆக்ரமிக்கும் காதல் பிரச்சினை அவள் மனதையும் மையம் கொண்டு இருந்தது, அவள் காதலன் சொந்த அத்தை மகன், ஐ.டி.ஐ முடித்துவிட்டு அம்பத்தூரில் ஏதோ ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்துவந்தான், அட்லீஸ் நாம் நல்ல வேலைக்கு போய், காதலுக்கு குடும்பம் பச்சைக்கொடி அசைக்கும்படி செய்யலாம் என்று அசைக்கமுடியாத நம்பிக்கை அவளுக்கு...இதெல்லாம் பின்னால் விஜய் சொல்லி தெரிந்துகொண்டேன்...

எங்க ரெண்டுபேருக்கும் ஒரே எக்ஸ்டென்ஷன் போன், அடிக்கடி அந்த அலுவலக எக்ஸ்டென்ஷன் போனுக்கும் அழைத்து, விஜயை எப்படி இருக்கேப்பா என்று கேட்பாள்...நானும் அவ…

ஒரு ப்ராஜக்ட் மேனேஜரின் கதை (3)

ஒரு ப்ராஜக்ட் மேனேஜரின் கதை (1)பாகம் ஒன்று

ஒரு ப்ராஜக்ட் மேனேஜரின் கதை (2)பாகம் இரண்டு

2004 வாக்கில் எல்லாம் சென்னையில் நார்த் இண்டியன் பெனிட்ரேஷன் அவ்வளவாக இல்லை...இப்போது எல்லாம் தூவினாற்போல ஆங்காங்கே நார்த் இண்டியன் முகங்கள் தெரிகின்றன இல்லையா...எல்லாம் உபயம் ஐ.டி கம்பெனிகள் என்று நினைக்கிறேன்...

அப்போது எங்கள் அலுவலகத்தில் புனே பக்கம் படித்து வளந்த மமதி சேர்ந்திருந்தாள்...என்.ஐ.ஐ.டி முடித்த கையோடு இங்கே பணியாற்ற வந்தவளின் தாயார் ஏதோ வெளிநாட்டு தூதரகத்தில் பணியிலிருந்தார்...

ஐந்தரை அடி உயர நீலக்கண் அழகியான அவள் தாயார் புனேவை சேர்ந்தவர், தந்தையார் ஏதோ மத்திய தரைக்கடல் நாட்டவர். இயல்பான அழகி, இறுக்கமான உடையணிவாள், எங்கள் அலுவலகமே அவளை தேவதைபோல் பார்த்தது...

ஒரு வார்த்தை பேசமாட்டோமா என்று வாச்மேன் ப்யூன் உட்பட எல்லோரும் ஏங்கும் வேளையில் அவளை எங்கள் இருநபர் குழுவில் ட்ரெயினீயாக நியமித்தார் எங்கள் மேனெஜர்.

வாரம் ஒரு முறை ஏனோ தானோவென்று எங்கள் ப்ராஜக்டை பற்றி கேட்கும் அவர் - அதுவும் நாங்களாக போய் சொல்லவேண்டும், இரண்டு நாளைக்கொருமுறை எங்கள் இருப்பிடத்துக்கே வந்து க்ளையண்ட் என்ன சொல்கிறான், ஆன்ச…

ஒரு ப்ராஜக்ட் மேனேஜரின் கதை (2)

ஒரு ப்ராஜக்ட் மேனேஜரின் கதை (1)பாகம் ஒன்று

வாழ்க்கை வழக்கம்போல்தான் போய்க்கொண்டிருந்தது...கோடிங் செய்தல்...டெலிவரி செய்தல்...க்ளையண்டுடன் சேட்டிங் செய்தல்...அவன் சொல்லும் டப்பா பிரச்சினைகளை மென்பொருள் சரிசெய்தல் இப்படி...

எங்க மேனேஜர் வழமையான ஆக்டிவிட்டீஸ் எல்லாம் செய்துகொண்டிருந்தார்...வாரம் ஒரு முறை எங்களோட குட்டி டீமையும் அழைத்து ஸ்டேட்டஸ் கேட்பார்..நானும் விஜயும் ஏதோ அப்டேட் செய்துவிட்டு வருவோம்...அப்டேட் செய்வது என்பதை விட, கொஞ்ச நேரம் எங்களோட மேனேஜரோட ஜாலியா பேசிட்டு வருவோம்...

ஐஸ் ப்ரேக்கிங் அப்படீன்னு சொல்லுவாங்க...அது எம்ளாயீஸுக்கும் மேனேஜருக்கும் இடையில் நடக்க ஒரு சான்ஸ் கிடைத்தது...ஜாவா டீமில் சிரீதர் என்று ஒரு பழம் இருந்தான்...அவனுக்கு பர்த் டே...அதை தன்னோட வீட்ல கொண்டாடலாம் என்று மேனேஜர் சொல்லியிருக்கிறார்...அது அப்படியே பரபரன்னு சாட், இமெயில், எக்ஸ்டென்ஷன் போன் என்று ஆபீஸ் முழுக்க பரவுது...

எப்படியாவது இந்த பார்ட்டியில நாமளும் கலந்துக்கனும் என்று நானும் விஜயும் கொலைவெறியோட இருந்தோம்...காரணம் இந்த வாய்ப்பை பயன்படுத்தி, அவரிடம் பேசி ஜாவா டீமுக்கு ஷிப்ட் ஆகுறது தான் எங்களோட டார…

ஒரு ப்ராஜக்ட் மேனேஜரின் கதை (1)

அது 2004 ஆம் ஆண்டு மத்தியில் ஏதோ ஒரு நாள் மாலை நேரம்....நான் வேலைபார்த்துக்கொண்டிருந்த நிறுவனம் அமெரிக்க நிறுவனங்களின் மென்பொருட்களை சென்னையில் இருந்து உருவாக்கிக்கொண்டிருந்தது...

ஒரு சிறிய ப்ராஜக்ட், அதற்கு இரண்டே பேர் கொண்ட ஒரு டீம். நானும் அதில் ஒரு அங்கம். என் வேலைகளையும் சேர்த்து என் நன்பன் விஜய் பார்த்துவிடுவான். நான் வெப் உலகம் அது இது என்று ஏதாவது நெட்டில் மேய்ந்துகொண்டிருப்பேன்...

எங்கள் நிறுவனத்தில் அமெரிக்க ப்ராஜக்டுகளை செய்ய உள்ள பத்து பதினைந்து டீம்களில் எங்களுடையது தான் மிகவும் சிறியது...எங்கள் ஆன்சைட் கோ.ஆர்டினேட்டர் எங்களை அவ்வளவாக கண்டுகொள்ளமாட்டார். நாங்கள் உருவாக்கிக்கொண்டிருந்தது பாம், பாக்கெட் பி.சி போன்றவற்றுக்கான அப்ளிகேஷன்கள்...

பழைய மேனெஜர் ரிசைன் செய்து இரண்டு மாதங்களாகியும் எந்த புதிய மேனேஜரும் அமர்த்தப்படவில்லை...நாங்களே க்ளையண்ட் உடன் பேசுதல், டெலிவரி என்று அனைத்தையும் பார்த்துக்கொள்வோம்...

எங்களுக்கு ஒரு புதிய மேனேஜர் வந்துள்ளதாக மின்னஞ்சல் வந்திருந்தது...அவரே ஒவ்வொரு ப்ராஜட் டீம் உடனும் சென்று அறிமுகம் செய்துகொண்டுவந்தார். எங்கள் சிறிய டீமையும் அவருக்கு அறிம…

18 வயதுக்கு மேற்ப்பட்டவர்களுக்கு மட்டும்...

ஒரு ப்ராஜக்ட் மேனேஜரின் கதை !!!!

இது தான் கதையோட தலைப்பு...ஆனா பதிவின் தலைப்பாக இதை தர விரும்பவில்லை...ஏன் என்றால் இதில் எழுதப்போகும் சில விடயங்கள் வாசகர்களுக்கு அதிர்ச்சி ஏற்ப்படுத்தலாம்...கலாச்சார அதிர்ச்சியாகவும் இருக்கலாம்...

அப்படிப்பட்ட வாசகர்கள் நீங்கள் என்றால் - நீங்கள் கம்ளெயிண்ட் பண்ணும்படி இருக்கவேண்டாமே என்பதால் இதனை சொல்லிவிடுதல் நலம்...

இந்த ப்ராஜக்ட் மேனேஜர் கதை உங்கள் வாழ்க்கையையோ, நீங்கள் பார்த்த நபர்களையோ ரிசம்பிள் செய்தால் அதற்கு நான் பொறுப்பல்ல...!!!

ஆரம்ப டிஸ்கிக்காக மட்டும் இந்த பதிவு...

ஒரு ப்ராஜக்ட் மேனேஜரின் கதை (1)பாகம் ஒன்று

ஒரு ப்ராஜக்ட் மேனேஜரின் கதை (2)பாகம் இரண்டு

ஒரு ப்ராஜக்ட் மேனேஜரின் கதை (2)பாகம் மூன்று

ஒரு ப்ராஜக்ட் மேனேஜரின் கதை (2)பாகம் நான்கு

இதுவரை படிக்காதவர்களுக்காக : இந்த மீள்பதிவு

கோவை பதிவர் சந்திப்பு படங்கள். பெயரிலி மன்னிக்கவும்.

Image
சமீபத்தில் 2008ல் கோவை சென்றபோது...சும்மா சொல்லக்கூடாது...உடலை உறுத்தாதாத மெல்லிய வெய்யில்...மாலையில் மென்மையான க்ளைமேட்...பதிவர் மங்கை எப்போதும் சொல்வார்...எங்களோட கோவை மாதிரி வராது என்று...

என்னடா கோவைக்காரர்களோட ஊர்ப்பாசம் கொஞ்சம் ஓவராகவே இருக்கே என்று நினைப்பேன்...இப்போதுதான் தெரிகிறது கோவைவாசிகளால் ஏன் அவங்களோட ஊரை விட்டுக்கொடுக்க முடியவில்லை என்று...

அதிஷா செல்லாவின் அலுவலகத்தில் இருந்து சனிக்கிழமை அழைத்தார்...மருதமலையில் வலைப்பதிவர்களுக்கு காதுகுத்துவதாக...ச்சே..தங்கச்சி புள்ளைகளுக்கு காதுகுத்துவதாக...

செல்லா வழக்கம்போது மச்சினிச்சியை பார்க்க பழனி போய்விட்டதால் செல்லாவின் கார் கிடைக்காது...காலையில் பரிசலை அழைத்தபோது ராம் நகரில் இருந்து கிளம்புவதாக சொன்னார்...நான் வடவள்ளியில் இருப்பதாக சொல்லியபோது...அய்யோ பார்ட்னர் அங்கயே நில்லுங்க என்றார்...

ஒரு பெட்டிக்கடையில் உட்கார்ந்தேன்...ஏழு ரூபாய் பீடிக்கட்டுக்கு ஆறுரூபாய் கொடுத்து வேறு ப்ராண்ட் கேட்டுக்கொண்டிருந்தவரிடம்...ஏங்க...விலைவாசியெல்லாம் எப்படிங்க இருக்கு...என்றேன்...விலைவாசி எல்லாம் ரொம்ப குறைந்துவிட்டதாகவும், அரிசி கிலோ ரூ நூறுக்க…

கோவையில் வலைப்பதிவர் சந்திப்பு வைக்கலாமா ?

நான் ஒரு ரெண்டு நாள் கோவைப்பகுதியில் முகாம் அடிக்க இருக்கிறேன்...!!!

அப்படியே ஓசை செல்லா, வாத்தியார் சுப்பைய்யா போன்ற பிரபல பதிவர்களையும் அவர்களது கோவைவாழ் ஸ்டூடன்ஸையும் சந்தித்து மொக்கை போடலாம் என்று திட்டம்...

வாத்தியார் சுப்பைய்யாவுக்கு பெங்களூரில் இருந்து ஒரு ஸ்பெஷல் கிப்ட் கொடுத்து அவரை கூல் செய்யவும் திட்டம்..!!!

ஞாயிறு மாலை அண்ணா பார்க் பக்கமாக ஒரு சிறிய சந்திப்பு ஏற்பாடு செய்தால் நன்றாகவே இருக்கும்...

பொதுவாக ஓசை செல்லாவின் எண்ணுக்கு அழைத்தீர்கள் என்றால் நான் எங்கே இருக்கிறேன் என்று தெரிந்துபோகும்...

அங்கே நான் கிடைக்கவில்லை என்றால்

எனது சகோதரர் ரஞ்சித் 9345903889 அல்லது எனது ரோமிங் எண் 99025 84054 ஆகியவற்றில் இருப்பேன்...

எந்த பர்சனல அஜெண்டாவும் (எனக்கு) இல்லை என்பதால் லதானந்த் சார் எங்கே என்று தேடும் திட்டமும் உள்ளது, மற்ற மேட்டர் பிறகு பேசிக்கலாம்...

இப்போதைக்கு இதை படிக்கும் கோவை நன்பர்கள், கோவை வலைப்பதிவர் சந்திப்பு பற்றி திங்க் பண்ணி (ரூம் போட்டு யோசிச்சு) பதிவு போடுங்களேன்..

இராமராஜன் ஆடுகளை காணவில்லை (LIVE REPORT)

ஜெயா டீவியில் இப்போது ஓடிக்கொண்டிருக்கும் "கிராமத்து மின்னல்" என்ற படத்தில் ராமராஜன் ரேவதியின் ஆடுகளை மீட்க தண்ணீரில் இறங்குகிறார். அந்த சைக்கிள் கேப்பில் ராமராஜன் மேய்த்துக்கொண்டிருந்த ஆடுகளை காணவில்லை..

ஊர்க்காரர்கள் அவரை பிடித்து மரத்தில் கட்டுகிறார்கள்...(நாளைக்கு பஞ்சாயத்து கூடுன பிறகு நாட்டாமை வந்து தீர்ப்பு சொல்லுவாராம்)ஆனால் ஆக்சுவலி அந்த ஆடுகள் வந்து மே.மே என்று கத்துவதை ரேவதி கேட்டு, ராமராஜனை "அவுத்து உடச்சொல்லி" கேட்டுக்கொண்டிருக்கிறார்...

தலைகூட சீவாம கிராமத்து உடையில் நிற்கும் விகல்பமில்லாத ராமராஜன் படங்களை இன்றைக்கும் ரசிக்கமுடிகிறது...இந்த வீடியோவில் ராமராஜன் பாடல் ஒன்றை ரீமிக்ஸ் செய்துள்ளதை கண்டிப்பாக ரசிக்கலாம்...

இந்த வார செருப்பு / சாணி கரைசல் :

டேய் லைவ் ரிப்போர்ட் போடுறதுக்கு கொஞ்சமாவது காமன்ஸென்ஸ் வேனாம் ? அத்தனை பேர் சொல்லியும் பதிவை அப்படியே வெச்சிருக்கும் பாரிஸ் திவாவுக்கு இந்தவார சாணிக்கரைசல்.

அடுத்தது யாரை திட்டுறேன் என்று தெரியவேண்டும் என்றால் மேலே பீட்ப்ளிட்ஸ் சப்ஸ்க்ரைப் பட்டனில் உங்கள் ஈமெயில் ஐடி கொடுத்து பதிந்துகொள்ளுங்கள்....

SSLC ? தேசிய மர அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் கல்வியுடன் பணி...

Image
உங்கள்ள எத்தனை பேருக்கு இப்படி ஒரு மத்திய அரசு நிறுவனம் இருக்குன்னு தெரியாது...பாரஸ்ட் ஆப்பீஸர் லதானந் சாருக்கு ஒருவேளை தெரிந்திருக்கலாம்...

http://iwst.icfre.gov.in/

இந்த இணைய தளத்தை ஒருமுறை பார்வையிடுங்களேன்...

இங்கே என்ன மேட்டர் என்கிறீர்களா ?

1938 ல் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிறுவனம் இப்போது இத்தாலி நாட்டு வணிக நிறுவனங்களின் குழுமத்துடன் இணைந்து இப்போது பெங்களூர் மல்லேசுவரத்தில் பத்து ஹெக்டேர் அளவுள்ள பெரிய இடத்தி செயல்பட்டு வருகிறது...

முதலில் இந்த பொதுத்துறை நிறுவனம் என்ன வகையான ஆராய்ச்சிகளை செய்கிறது என்று பார்க்கலாம்..

எளிமையாக சொல்லப்போனால் சந்தன மரத்தில் இருந்து எண்ணையை பிழிந்து எடுக்கும் முறை, பல்வேறு மரவகைகளை ஏற்றுமத்திக்கு முன்பான ப்ராஸஸிங் ( ஒரு ரோஸ் உட் மரத்தை வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யனும்னா இந்த நிறுவனத்தில் இருந்து சான்றிதழ் பெறனும்)

மேலும் பல்வகை சோப்புகள், அழகுசாதன பொருட்களில் பயன்படும் சிண்ட்ரெல்லா ஆயில், லெமன் க்ராஸ் ஆயில் போன்றவற்றை எப்படி பிரித்து எடுத்து, பதப்படுத்துவது போன்ற பல விடயங்களை சொல்லித்தருகிறார்கள்...

பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருப்பவர்கள் மற்றும் புத…

ஷகீலாவும், நமீதாவும் பின்னே ஞானும்.லக்கியும்,வரவணையானும்

Image
ஷகீலாவும்நமீதாவும்பின்னே வரவணையான், லக்கிலூக் , ரவியும்.

இடம்: உண்மைத்தமிழனின் சொந்த ஊர்..
தேதி : தெரியல..
பதிவோட நோக்கம் : கும்மி

ஸ்டார்ட் த மீஜிக்

ஹைய்யா...உயிர்மை புக்கு இங்க வாங்கலாமே !!!

உயிர்மை புத்தகங்களை இணையத்தில் வாங்கும் வசதியை ஏற்படுத்தி இருக்கிறாங்க...

இங்க சொடுக்கி பார்வையிடலாம் : www.uyirmmai.com

நன்றி Humanபுத்திரன்.

வால்பையனை வைத்து அதிரடி போட்டி - பரிசு

வலையுலகில் காமெடியில கலக்கிய / கலக்கிக்கிட்டு இருக்கிற மக்கள்ல எனக்கு தெரிஞ்ச பட்டாசுகள் லக்கிலுக், இளவஞ்சி, கைப்புள்ள, வெட்டிப்பயல், கொங்கு ராசான்னு ஒரு செட்டு இருக்குது...

இன்னைக்கும் மனசு சரியில்லைன்னா இவங்க பழைய பதிவு ஏதாவது படிச்சா மனசு லேசாகிடும்...

ஆனா புதுசா வந்திருக்குற கும்மி கோஷ்டிகள் வால்பையன், பரிசல், அதிஷா, ஜிம்ஷா, சின்னப்பையன், ராப் என்று இவர்களின் அட்டூழியம் அளவுக்கு மீறுது...சில சமயம் படிச்சு சிரிச்சு அலுவலகத்துல அடுத்தவங்க பைத்தியம்னு நினைக்கிற மாதிரி...

அதிரடியா ஒரு சின்ன போட்டி வெச்சு இந்த கும்மி கோஷ்டிகளின் உண்மையான திறமைகளை பரிசீலிக்க...

இதோ ஒரு போட்டி...தாம் தூம் படத்தில் அங்கங்கே ரஷ்ய வார்த்தைகள் பேசப்படுகின்றன, ஒரு மன்னும் புரியல...ஆனால் நான் கேள்விப்பட்டவரை ரஷ்ய மொழி தெரிந்த ஒரே ஒருவர் வலையுலகில், அது வால்பையன்...

வால்பையனுக்கு தெரிந்த ரஷ்ய வார்த்தை ஒன்றை பின்னூட்டத்தில் சொல்பவர்களுக்கு பாலபாரதியின் அவன் அவள் அது புத்தகம் பரிசாக கொரியரில் அனுப்பிவைக்கப்படும்...

பின்னூட்ட மட்டுறுத்தல் இல்லாததால் கும்மி கோஷ்டிகள் காத்திருக்கத்தேவையில்லை, அடிச்சு பட்டையை கிளப்பவும்..…