Posts

Showing posts from October, 2007

யாருய்யா அந்த பாப் மார்லி ?

பதிவுலகில் அனானிகள் அடிக்கடி கொட்டம் அடிக்கும்போது உபயோகப்படுத்தும் வார்த்தை பாப் மார்லி மற்றும் கஞ்சா...பாப் மார்லி பற்றி இந்த பதிவில் பார்த்துக்கோங்க...இந்த பரட்டை தலையன் தான் பாப் மார்லி..!!!

இலங்கையில் இருந்து வந்திருக்கும் தோழர் அறிவுமதி

கொஞ்சமேனும் டைமிங் !!!!!!!!!!!

நாத்தீகர்களும் ரசிக்கும் முருகன் பாடல்...!!!

யார் அந்த நாத்தீகர்கள் அப்படீன்னு கேட்காதீங்க...நான் தான் அது..!!!!!!!

எம்.ஐ.ஏ ன்னா என்னான்னு தெரியுமா ?

M.I.A வோட பாடல் பாருங்க...யாரு என்னன்னு குகிளிட்டு பார்த்தோ, யூட்யூபில் தேடியோ கண்டுக்கோங்க...!!!!

நானே கேள்வி - நானே பதில்...V 1.0

மனசுல என்ன தான் நினைச்சுக்கிட்டிருக்கே ?

ஏ நான் ஒன்னும் நினைக்கலையேப்பா...ஏன் இப்படி சூடான கேள்வி...நான் உண்டு என்னோட வேலை உண்டுன்னு ( அதான் மொக்கை போடுறது) போய்க்கிட்டிருக்கேன்...எதுவாருந்தாலும் சொல்லுங்கப்பா...பேசித்தீத்துக்கலாம்.....நான் கொஞ்சம் ஓப்பன் ஹார்ட்டு தான்...

தமிழச்சி பிரச்சினை பற்றி சொல்லேன்...

அவங்க பெரியாரிய கொள்கைகளை மட்டும் பரப்பிக்கிட்டிருந்தபோது கொரியாவில் கிளைக்கழகம் ஆரம்பிச்சேன்...அது மரமா வளர்றதுக்குள்ள பெண்ணீயம்,தலித்தியம், புலியெதிர்ப்பு அப்படீன்னு போய்ட்டாங்க...அவங்களுடைய பகுத்தறிவு பிரச்சாரங்களுக்கு எப்போதும் என் ஆதரவு...மற்ற விஷயங்களில் அப்படியே பொட்டீக்கடை கயட்டிக்கினமாதிரி நானும் கயட்டிக்கலாமுன்னு இருக்கேன்...ஆனாலும் தோழர்.தமிழச்சி நான் என்ன சொன்னாலும் வெளையாட்டாவே எடுத்துக்கிட்டு எங்கிட்ட கும்மியடிச்சுடறாங்க...எலிபண்ட் பாஸ்ல (Elephant Pass) எலிக்கென்ன வேலை...வர்ட்டா..

ஈழத்தமிழர்கள் மேல அப்படியென்ன அக்கறை, எவனுக்குமில்லாத அக்கறை ? ஈழப்பிரச்சினை பற்றி உனக்கென்ன தெரியும் ?

ஈழத்தமிழர்கள் மேல கொஞ்சம் பாசம் உண்டு...அது எப்படி உருவானது என்று சொல்லத்தெரியல...ஆனா டீப்…

இனிய ரமலான் வாழ்த்துக்கள்..!!!

Image
இஸ்லாமிய சகோதரர்களுக்கு - இனிய ரமலான் வாழ்த்துக்கள்...!!!அனைவரின் உள்ளங்களிலும் அன்பும் மகிழ்ச்சியும் சகோதரத்துவமும் பெருகட்டும்..!!!

பிற்சேர்க்கை: ஆசிப் மீரான் பதிவில் நான் போட்ட பின்னூட்டம் :

அண்ணாச்சி, நாங்க பதிவு போட்டோமே, அதை பார்க்கலையா ? அது உங்களுக்கும் தான்...

அதுல போயி ஒரு பின்னூட்ட இம்போஸிசன் செய்து தண்டனையை அனுபவிக்கவும்...

அப்புறம் என்னுடைய இனிய நினைவுப்பக்கத்தில் இருந்து...

ரம்ஜான் - என்றவுடன் எனக்கு நியாபகம் வருவது நோம்பு கஞ்சி...நாங்க குடும்பம் அப்போ வளவனூர்ல இருந்தோம்...

பக்கத்துல இஸ்லாமிய குடும்பம், அவங்க வீட்ல என்னோட / என்னோட அன்னனோட சைஸ்ல ரெண்டு பசங்க...ஜாகீர், ஜகாங்கீர் ( சமீபத்துல 1985 ல)...

நோம்பு கஞ்சி என்று ரம்ஜான் சமயத்தில் கொடுக்கப்படும்...அதை அந்த பசங்க தூக்குவாளியில போய் வாங்கி வருவாங்கள்...

நானும் ஒரு நாள் எங்கம்மாவுக்கு தெரியாமல் சொம்பை எடுத்துக்குட்டு அவனோட ஓடிட்டேன்...

அங்கே மசூதி வாசலில் அண்டா வைத்து கொடுத்துக்கொண்டிருந்தாங்க, என்னுடைய சொம்பையும் நிரப்பினாங்க...

சூடாக இருந்தாலும் எப்படியோ புடிச்சுக்கிட்டு வீட்டுக்கு வந்தேன்...

முதலில் எங்கம்மா கையால் கடுமையான சா…

தோழர் தமிழச்சி கைவைக்கும் இடம்

Image
எங்க ஊர்ல நான் ஒருமுறை தேன்கூடு அழிக்கப்போனப்போ...போர்வை கொண்டுபோக மறந்துட்டேன்...கொட்டித்தள்ளிருச்சு...தேனீ கொட்டினா ரொம்ப வலிக்கும்...பார்த்து புத்தியா பொழைச்சுக்கோ தாயி...!!! ( என்ன எதிர்வினை வரப்போவுதோ தேவகவுடா )

(நாத்திகனாகிய நான் எப்படி தேவுடா / ஆண்டவான்னு கூப்பிடுறது...அதான் தேவகவுடான்னேன்...)

நீங்களே ஒரு விருது...உங்களுக்கெதுக்கு விருது...

Image
திரு.எம்.எம்.எஸ்வி அவர்களுக்கு சரியான விருதுகள் கிடைக்கவில்லை என்ற ஆதங்கத்தை பதிவர்கள் வெளிப்படுத்திவருகிறார்கள்...

நீங்களே தமிழர்களுக்கு கிடைத்த மிகப்பெரிய விருது...உங்களுக்கு எதுக்குங்க விருது...!!!!!

இங்கே மதன் டவுசர் கிழிக்கப்படும் !!!!

தமிழர்கள் வரலாறு இல்லாத வெறும்பயல்கள் என்று உளறிக்கொட்டிய மதன் டவுசர் கடுமையாக கிழிக்கப்பட்ட இடம், வரலாறு.காம்.

திரு.டோண்டு ராகவன் அவர்கள், செந்தழல் ரவியும், வரவணையானும் எழுதப்போகும் தமிழர் வரலாற்றை காண ஆவலாயுள்ளதாக அவருடைய பதிவின் பின்னூட்டத்தில் தெரிவித்திருந்தார்..

வெத்துப்பயல், வெறும்பயலான நான், அவரிடம் சொன்னது என்னவென்றால், அய்யா, ஏற்கனவே தமிழர் வரலாற்றை பல்லாயிரக்கணக்கான அறிஞர்கள் ஆய்ந்தறிந்து எழுதியுள்ளார்கள், மதன் அவர்கள் அதை படித்தால் போதுமானது என்று தெரிவித்திருந்தேன்...

திரு.இரா கலைக்கோவன் அவர்களின் அருமையான கட்டுரை மதன் டவுசரை கிழித்ததோடல்லாமல் வரவணையான் பாணியில் "அம்மண குண்டி டும்மலக்கா" என்று கும்மியும் அடித்துள்ளது...

இந்த கட்டுரையை திரு.தீவு அவர்களின் பதிவில் படித்து, வியந்து, யாருடைய அனுமதியையும் கேட்காமல் என்னுடைய பதிவில் எடுத்தாளவேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகி ( அன்பர் திரு.கலைக்கோவன் அணுமதிக்க மாட்டாரா என்ன...) இங்கே பதிகிறேன்...

அலுவலகத்தில் படிக்க நேரம் இல்லாதவர்கள், படக்கென ப்ரிண்ட் பட்டனை அமுக்கி, ஒரு ப்ரிண்ட் அவுட் எடுத்துக்கொண்டு, வீட்டில் மல்லாக்க படுத்து…

பெயரிலி பதிவுகளுக்கு கோனார் நோட்ஸ்

இந்த பதிவை படித்து பெயரிலி பதிவுகளை நன்றாக புரிந்துகொள்ளுமாறு அன்பர்களை கேட்டுக்கொள்கிறேன்...பெயரிலி பதிவுக்கு நோட்ஸ் பார் டம்மீஸ் என்று தான் முதலில் தலைப்பு வைக்கலாமுன்னு பார்த்தேன்...ஆனா என் வாயால உங்களை எல்லாம் எப்படி டம்மீஸ்னு சொல்றது..

அலைஞன் : அலையாதவன்
குவியம் : குவிந்துகிடப்பது
அச்சிலசுக்குதி : அச்சில் ஏற்றக்கூடியது
எழுபடவில்லை : தெரியவில்லை
ஆயாசம் : பாயாசப்பதிவுகள் எழுதும்போது வருவது
ஒன்றறைத்துட்டு : சிறிய விடயம்
விளித்தெழுதியன் : சொல்லியது
ஒத்தியங்கமாட்டார் : சேர்ந்துகொள்ளமாட்டார்
மாற்றமைப்பு : வேறு அமைப்பு
சத்தியக்கடதாதி : சத்தியமா லட்டர் போடறது
ஈழத்தமிழுருவேறி : ஈழத்தமிழர்

எலியெதிர்ப்புக்க்காழ்ப்புத்தனத்துக்கும் : எலியை எதிர்க்கும் முறை
கொள்கைப்போராட்டத்தன்மைக்கும் : கொள்கையை வைத்து போராடுவது
குழந்தைப்பிள்ளைத்தன்மைக்குமிடையிலே : சிறுபிள்ளைத்தனம்

தட்டச்சிடுகின்றாரோ : டைப் பண்ணுகிறாரோ
காலத்துக்கொவ்வியதைத் : காலத்துக்கு தகுந்ததை
ஒவ்வாதிருப்பது : சேராதிருப்பது
மூடிக்கொண்டாவதிருக்கவேண்டும் : மூடிக்கினு இருக்கனும்
குருவிப்பதிவுகளை : லொட்டையான பதிவுகள்
நூற்கண்டுச்சிக்கற்றன்மையை : சிக்…

ஓபீஸில் வெட்டியாயிருக்கும்போது தமிழ்ப்படம் பார்க்க

ஆபாச கும்மிகள் குறித்து !!!

கும்மிப்பதிவர்கள் கவனத்துக்கு என்று தான் தலைப்பிடலாம் என்று நினைத்தேன்...விரைவான அட்டென்ஷனை உடனடியாக பெறவேண்டிய பதிவென்பதால் இப்படி தலைப்பிடவேண்டியதாயிற்று...

கும்மி என்றால் என்ற என்று அருஞ்சொற்பொருள் விளக்கம் கொடுக்கும் காலத்தை தமிழ் வலையுலகம் தாண்டிவிட்டதாகவே நினைக்கிறேன்....மீடியாக்கள் நோக்கும் பதிவர் பட்டறைகளில் கூட - லக்கி போன்றவர்கள் - கும்மிப்பதிவரென அறிமுகம் செய்துகொள்ளுமளவுக்கு 'கும்மி' புழக்கமான வார்த்தைதான்...!!!

மற்றபடி சுருக்கமாக சொல்லவேண்டுமானால் - அதர் ஆப்சன் / அனானி ஆப்சன் உபயோகப்படுத்தி பதிவில் சொல்லமுடியாத விடயங்களை பின்னூட்டங்களில் கொடுத்து, படிப்பவரை சில வினாடிகள் வயிறு குலுங்க, அலுவலகத்தில் தனித்து சிரிக்கவைத்து 'லூசு' பட்டம் பெற்றுத்தரவோ - நல்ல தரமான கும்மிப்பதிவரால் முடியும்...

சிலர் பதிவே கும்மிக்கென நடத்திச்செல்வதும் உண்டு...நன்பர் ஓசை செல்லா ஒரு உதாரணம்...அதை விடுங்க...நான் விஷயத்துக்கு வரேன்....

சமீபகாலமாக வலையுலகம் ஆரோக்கியமான நிலையில் இருப்பதாக படுகிறது...ஏன் அவருக்கு பின்னூட்டம் போட்டே ? - சாதியை எதிர்க்கும் எங்கள் இயக்கம் ( ஆமாம் பெரிய 'ச…
ஆபாச கும்மிகள் குறித்து !!!

கும்மிப்பதிவர்கள் கவனத்துக்கு என்று தான் தலைப்பிடலாம் என்று நினைத்தேன்...விரைவான அட்டென்ஷனை உடனடியாக பெறவேண்டிய பதிவென்பதால் இப்படி தலைப்பிடவேண்டியதாயிற்று...

கும்மி என்றால் என்ற என்று அருஞ்சொற்பொருள் விளக்கம் கொடுக்கும் காலத்தை தமிழ் வலையுலகம் தாண்டிவிட்டதாகவே நினைக்கிறேன்....மீடியாக்கள் நோக்கும் பதிவர் பட்டறைகளில் கூட - லக்கி போன்றவர்கள் - கும்மிப்பதிவரென அறிமுகம் செய்துகொள்ளுமளவுக்கு 'கும்மி' புழக்கமான வார்த்தைதான்...!!!

மற்றபடி சுருக்கமாக சொல்லவேண்டுமானால் - அதர் ஆப்சன் / அனானி ஆப்சன் உபயோகப்படுத்தி பதிவில் சொல்லமுடியாத விடயங்களை பின்னூட்டங்களில் கொடுத்து, படிப்பவரை சில வினாடிகள் வயிறு குலுங்க, அலுவலகத்தில் தனித்து சிரிக்கவைத்து 'லூசு' பட்டம் பெற்றுத்தரவோ - நல்ல தரமான கும்மிப்பதிவரால் முடியும்...

சிலர் பதிவே கும்மிக்கென நடத்திச்செல்வதும் உண்டு...நன்பர் ஓசை செல்லா ஒரு உதாரணம்...அதை விடுங்க...நான் விஷயத்துக்கு வரேன்....

சமீபகாலமாக வலையுலகம் ஆரோக்கியமான நிலையில் இருப்பதாக படுகிறது...ஏன் அவருக்கு பின்னூட்டம் போட்டே ? - சாதியை எதிர்க்கும் எங்கள் இ…

வடமொழி இராமாயணம்

இப்பொழுது உள்ள வடமொழி இராமாயணம் கி.மு .200 இல் தொகுக்கப் பட்டது.

சாதகக் கதைகளில் கூறப்பட்ட வகையில் வழங்கிய இராமாயணக் கதை பல
நூற்றாண்டுகளாக வளர்ச்சியடைந்து வந்தது. கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் இக்கதை தொடர்பான பாடல்கள் திரட்டப்பட்டன. திரட்டப்பட்ட பின்பும் இராமாயணம் வளர்ந்து கொண்டு செல்வது நின்று விடவில்லை. அது இன்றுவரையும் வளர்ந்துகொண்டே வருகின்றது.

"இன்றுவரையும் இராமாயணத்தின் பின் சேர்ப்பு அல்லது இடைச் செருகல் வளர்ந்து
வருகின்றன என்பதைப் பற்றிய ஆராய்ச்சி வெண்டியதில்லை. பேர்போன இராமாயண
உரையாசிரியரான காதக என்பவர் இடைச் செருகல் என்று குறிப்பிட்ட நீண்ட சருக்கம் மாத்திரமல்ல; அவர் காலத்திலில்லாத பல சருக்கங்களும் இன்றைய இராமாயணத்திற் காணப்படுகின்றன.

அன்றைய இராயணத்தின்படி இராமருக்குப் பல மனைவியர் இருந்தனர். காளிதாசரும் அவருக்குப் பின் வந்த புலவர்களும் அவருக்கு ஒரு மனைவி மாத்திரம் இருந்தார் எனக் கூறுகின்றனர். பரதனுக்கும் பல மனைவியர் இருந்தனர். அக்கால இராமாயணம் தசரதருக்கு 350 மனைவியர் இருந்தனர் என்று கூறுகிறது. தமது முறைமையான மனைவியரைத் தவிர தசரதன் , இராமன், பரதன் முதலானோர் பல மனைவியர் உடைய…

ஆயா, தாத்தா,காதல், திராட்சை,ஆனல் ஆப்ஸஸ் !!!!

பெருசா எதுவும் இந்த பதிவில் எழுதி கிழிக்கப்போவதில்லைன்னாலும், இதை பதிவு செய்யனும்னு ரொம்பநாள் ஆசை...ஏதோ பேட்ஸ்மேன் வரிசை மாதிரி போட்டிருந்தாலும் மிடில் ஆர்டர்லருந்து வரேன்....

என்னுடைய தாத்தா தஞ்சை மாவட்டத்தில் விட்டேத்தியாக கிராமத்துக்குயில்களை மைனர் செயினோடு சைட்டடித்திருந்த காலம் அது...சமீபத்தில் ஒரு எண்பது தொன்னூறு வருஷம் முன்னால இருக்கும்....எழுபத்தைந்து வருஷம் வாழ்ந்து அவர் போய் சேர்ந்து பத்து பதினைந்து வருஷம் ஆகுது...அந்த காலத்திலேயே லவ் மேரேஞ் செஞ்ச அவரோட கதையை சொல்லிடறேனே இந்த பதிவில்...

சொந்தமாக ஒரு பள்ளிக்கூடம் வைத்து நடத்திக்கிட்டும், அந்த காலத்திலேயே ஆங்கிலேய அரசுக்கு ஆதரவாக செயல்பட்டுக்கிட்டும் இருந்த என்னுடைய கொள்ளுத்தாத்தாவுக்கு சில நூறுவேலி (600 வேலி - எவ்ளோ ஏக்கர்னு தெரியல), நிலமும் இரண்டு பிள்ளைகளும் சில பொண்டாட்டிகளும் இருந்தாங்க...முதல் மனைவியின் மூத்த பிள்ளை என்னுடைய தாத்தா...

விட்டேத்தியா திரிஞ்சிக்கிட்டிருந்தவருக்கு சுகந்திர போராட்டம், காந்தி, சுதேசி இயக்கம், வெள்ளையனே வெளியேறு இயக்கம் என்று யாரோ அறிமுகப்படுத்த, சற்றே தீவிரமாக அதில் இறங்கினார்..ஆங்கிலேயர்களுக்கு ஆ…