Posts

Showing posts from July, 2007

கிரெடிட் கார்டு வைத்திருக்கீங்களா ?

நீங்கள் கிரெடிட் கார்டு உபயோகப்படுத்துபவரா ? அப்போ நீங்கள் கட்டாயம் படிக்கவேண்டிய பதிவு இது...மூன்று நான்கு வருடம் முன்பு ஒருமுறை நான் அவுஸ்திரேலியா போகும் முன் ஒரு ஐந்தாயிரம் ரூபாய்க்கு கிரெடிட் கார்டு மூலம் குருவி ரொட்டியோ குச்சு முட்டாயோ வாங்கினேன்....

பல கார்டுகள் இருப்பதால் அந்த கார்டை மறந்தும் போனேன்...ஆறுமாதம் கழித்து திரும்பி வந்தபோது ஐந்தாயிரம் குட்டி போட்டு பதினைந்தாயிரமாக இருந்தது...கட்ட மாட்டேன் என்று சொன்னதற்கு இரண்டே நாளில் வக்கீல் நோட்டீஸை எனக்கும் என்னுடைய அலுவலகத்துக்கும் அனுப்பிவிட்டார்கள்...ஹெச்.ஆர் மேனேஜர் தமிழர், மேலும் எனக்கு மிகவும் நெருங்கியவர் என்பதால் நேரடியாக விஷயம் என்னுடைய பார்வைக்கே வந்தது...மேலும் என்னுடைய பிஸினஸ் யூன்ட் ஹெட்டுக்கு நான் செல்லப்பிள்ளை என்பதால் இது குறித்து நடந்த ஹை-லெவல் மீட்டிங் நீர்த்துப்போனது...

அந்த நாளில் எனக்கு வலைப்பதிவுகள் அறிமுகமாயிருக்கவில்லை...அதிலும் இப்போது மக்கள்-சட்டம் என்ற பெயரில் சட்டங்களையும் சட்டம் சம்பந்தமான விஷயங்களையும் புட்டு புட்டு வைக்கும் வலைப்பதிவுகளும் எனக்கு தெரிந்திருக்கவில்லை...!!!

இந்த லிங்க் கிளிக்கி மக்கள் ச…

தமிழ்ச்சியிடம் இருந்து தப்பிக்க ஓசை செல்லாவுக்கு 7 யோசனைகள்

சமீபத்தில் வலையுலகில் ஒரு பிரச்சினை கிளம்பியுள்ளது...ஹைய்யா ஜாலி ஜாலி...பிரச்சினை இல்லை என்றாலோ, பின்னவீனத்துவ கவிதை படிக்கவில்லை என்றாலோ பயங்கர போரடிக்குது...பல பதிவர்கள் இதை சொல்லி ஆதங்கப்பட்டார்கள்...அதனால் பின்னவீனத்துவமாக எழுதத்தெரிந்தவர்கள், அடிக்கடி ஒரு கவிதை போடவேண்டும் என்று பணிவுடன் வேண்டுகோள் விடுக்கிறேன்...பொட்டீக்கடை, வரவணை, மிதக்கும் வெளி, அய்யனார், பாவெல் கவனிக்க...

கம்மிங் பேக் டு த பாயிண்ட்...

தமிழச்சியின் ஆதங்க பதிவொன்று ( கும்மி பதிவுகளுக்கே அதிக கவனம் கிடைக்கிறது) இரண்டு நாளைக்கு முன்னால் வந்தது...அதனை கடுமையாக எதிர்த்த செல்லா, வாருங்கள், நீங்களும் வந்து கும்மி அடிக்கும் ஜோதியில் ஐக்கியமாகுங்கள் என்று அழைப்பு விடுத்து பதிவிட்டார்..இதே கருத்தை சொன்ன மாலனை கூட இப்படித்தான்(!!) கும்மியதாக தெரிவித்தார்..( நான் கூடத்தான் எம்.ஜி.ஆருக்கு டாட்டா காட்டுனேன்...அதை விடுங்க)...

ஆனால் தமிழச்சி இன்றைய பதிவில் செல்லாவை குமுறி இருக்கிறார்...அதை படித்ததும் இப்படி ஒரு பதிவிட்டு தமிழச்சியின் உக்கிர பார்வையில் இருந்து தப்ப செல்லாவுக்கு ஐடியா கொடுக்கலாமே என்று தோன்றியது...

இதோ ஐடியாஸ்...

1.…

ஊரை ஏமாற்றும் சரவணா ஸ்டோர்ஸ் - தி.நகர் ( வேறெங்கும் கிளைகள் இல்லை)

சமீபத்தில் நன்பர் ஒருவர் சாம்சங் பென் ட்ரவ் (Pen Drive) ஒன்றை தி.நகர் சரவணா ஸ்டோர்ஸ் கடையில் வாங்கி இருக்கிறார்...வீட்டுக்கு வந்து பிரித்து உபயோகப்படுத்த முயன்றதில் ஓட்டை...ஒன்றும் சரியாக வேலை செய்யவில்லை...

சாம்சங் கஸ்டமர் கேர் நிறுவனத்தின் தொலைபேசி எண்ணை இணையத்தில் இருந்து எடுத்து, பிரச்சினையை பற்றி விளக்கியபோது, சாம்ஸங் நிறுவனத்தார், அப்படி ஒரு பென் ட்ரைவை தாங்கள் தயாரிப்பதே இல்லை என்று கூறிவிட்டனர்....

அதிர்ந்து போன நன்பர், மீண்டும் சரவணா ஸ்டோர் நிறுவனத்தை தொடர்புகொண்டபோது, இந்த கஸ்டமர் கேர் நம்பருக்கு போடுங்க என்று ஒரு எண்ணை கொடுத்துள்ளனர் சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனத்தார்...

இந்த எண்ணை தொடர்புகொண்ட போது ( இது எலக்ட்ரானிக் பொருட்கள், கடத்தல் பொருட்கள், போலி பொருட்கள் கிடைக்கும் சென்னை ரிச்சி ஸ்ட்ரீட்டில் உள்ள ஒரு எண்) வழ வழா கொழ கொழா என்று பதில் கொடுத்துள்ளார்கள்...

அரைகுறையாக வேலை செய்த பென் ட்ரைவ் இன்னும் இரண்டு முறை உபயோகித்த பிறகு சுத்தமாக படுத்துவிட்டது...

சரவணா ஸ்டோர் நிறுவனத்தை மீண்டும் தொடர்புகொண்ட போது, வாங்கினது வாங்கினது தான், உன்னால ஆனதை பார்த்துக்கோ என்று பதில் வருகிறதாம்...

சமீ…

யார் மனசுல யாரு...தமிழ்மண பதிவர் மனசுல யாரு

கண்மணி அக்காவோட இந்த பதிவோட தலைப்பை (மட்டும்) பார்த்ததும், தமிழ்மண பதிவர்களை கண்டுபிடிக்கும் ஆட்டம் விளையாடலாம் என்று ஒரு எண்ணம்...

இப்போ ஆரம்பிக்கலாமா...போட்டி நடுவர்களாக மூனு தலையாட்டி பொம்மை இங்க வேனாமே...( லூசுப்பயலுக... எதுக்கெடுத்தாலும் எஸ் எஸ் எஸ் னு மூனுபேரும் சொல்லுவானுங்க)

இப்போ போட்டி என்ன அ(ஆ)ப்படின்னா, நான் உங்க எதுர்த்தாப்புல இருக்கேன்...நீங்க தமிழ்மண புதிய பதிவர்...(புதுசா வந்திருக்கிற பிரமிட் சாய்மீரான்னு வெச்சுக்கலாம்) நீங்க தமிழ்மணத்தை வெறுமனே ஒரு லுக்கு விட்டு, ஏதாவது ஒரு பதிவரை மனசுல நெனைச்சுக்கறீங்க...நான் அதை இருபத்தோரு கேள்வியில கண்டுபிடிக்கப்போறேன்...

ரெடி ஸ்டார்ட் மியூஜிக்...தொண்டைய கனைத்துக்கொண்டு, ஒரு பில்டப்புக்காக மலையாளம் கலந்த தமிழில் "ஆர் மனசுல ஆரு பிரமிட் சாய்மீரா உங்கள் மனஷில ஆரு" என்று ஆரம்பிக்கிறேன்...

செந்தழல் : உங்கள் மனதில் இருக்கும் நபர் ஆணா?
பிரமிட் சாய்மீரா: ஆம்

செந்தழல்: அவர் அதர் அனானி ஆப்சன் ஓப்பன் செய்திருக்கிறாரா ?
பிரமிட் சாய்மீரா: ஆம்

செந்தழல்: அவர் ஆசிய கண்டத்து பதிவரா ?
பிரமிட் சாய்மீரா: ஆம்

செந்தழல்:அவருடைய எந்த பதிவுக்காவது நூறுக்கு…

எச்சுஸ்மி செல்லக்குட்டி..நீ ஊசி போடுவியாடி என் வெல்லக்கட்டி...

Image
இனிமே நம்ம சில்பா செட்டி (செட்டியார் ஆண்ட சாதியா ஆடின சாதியா தெரியலை - ஆங் இவுங்க செட்டியார்தானே) டாக்டர்.சில்பா செட்டி என்று அழைக்கப்படுவார்...

அதான் செல்லமா செல்லம் ஊசி எல்லாம் போடுமான்னு கேட்டு தெரிஞ்சுக்கறதுக்காக இந்த பதிவு...பேசாம நாமக்கல் சிபி இனிமே நயந்தாராவை உட்டுட்டு சில்பா பின்னால சுத்தலாம்..ஆமா பின்ன எங்காளு டாக்டர் இல்ல...

கடகடகடகடகடகடகடகட !!!!

முந்தா நாள் ஜப்பானில் நில நடுக்கம் வந்தப்போ என்னுடைய அறை ஒரு மூன்று நிமிடம் கடகடவென ஆடுச்சு...நான் இருப்பதோ எட்டாவது மாடி...எங்கே நமக்கு ஆப்பு வெச்சுட்டதோ இயற்கை என்று நினைத்த்துக்கொண்டிருந்தபோதே ஆட்டம் நின்றுவிட்டது...

காலையில் நியூஸ் பார்க்க்கும்போதுதான் தெரிந்தது ஜப்பானில் 6.8 ரிக்டர் அளவுக்கு நிலநடுக்கம் ஏற்பட்டிருப்பது..வாயை பிளந்துட்டேன்...ஹுவேசாவுல (ஆபீஸ்) போய் சொன்னதுக்கு நாளைக்கு நைட்டு இந்த மாதிரி ஆனா ரூமுக்கு வெளிய ஓடியாந்திரு என்று என்னுடைய புஜாங் நிம் ( மேனேஜர்) சொன்னாரு...

இன்றைக்கு மாலையில் இருந்தே விட்டுவிட்டு அறைக்கட்டில் நன்றாகவே ஆடுகிறது...நில நடுக்கம் வந்த இடம் என்னுடைய ஊரில் இருந்து சுமார் 400 கிலோமீட்டர் தான்...அதனால் ஒரு வேளை இங்க ஹிப்ட் ஆகிட்டதோன்னு நினைக்கத்தோனுது...

சரி இதைப்பத்தி ஒரு பதிவை போட்டுடலாம் என்று அமர்ந்தால் ஜுராசிக் பார்க்ல க்ளாஸ் தண்ணி ஆடுமே அந்த மாதிரி லட்டா ஆட்டம் ஆரம்பிக்குது...

பாருங்க கட்டில் கூட லைட்டா ஆடுது...அது எப்படி தெரியுமா ஆடுது...கடகடகடகட....(எக்ஸ்கியூஸ் மீ...வெளிய ஓடுறதுக்கு முன்னால கொஞ்சம் திரட்டியில பிங் பண்ணிட்டு போயிடறனே...) கடகடகட…

அந்துமணிய எத்தால அடிக்கலாம் ??

Image
கே : ப்ளஸ் டூ படித்து முடித்தபின், என்ஜினியரிங் படிப் பது நல்லதா? மருத்துவம் படிப் பது சிறந்ததா?

ப: இரண்டாலுமே பயன் இல்லை... பணம் வேஸ்ட்... டைம் வேஸ்ட்... கடைசியில் வாழ்க்கை வேஸ்ட்! +2 முடித்த கையோடு ஏதாவது ஒரு கைத்தொழிலைக் கற்று, சொந்தக் காலில் நிற்க முயலுவது இனி புத்திசாலித்தனம்!
-- தினமலர் அந்துமணி

இந்த பதிலில் உள்ள அபத்தம் என்ன என்பது வலைப்பதிவு நன்பர்களுக்கே புரியும்...

இதுபோல பிற்போக்காக எழுதி உள்ள அந்துமணிய எத்தால அடிக்கலாம் ??

இந்த பதிவு நான் 2006 மே அன்று எழுதியது...இப்போது இன்னொரு கேவல செயலில் ஈடுபட்டு செருப்படி படுவதால் இதனை மீண்டும் வெளியிடுகிறேன்...

திரிகோணமலை பள்ளி மாணவர்களுக்கு உதவலாம் வாருங்கள்

மகாலட்சுமி என்ற மாணவிக்கு உதவிகேட்டு எல்லோரிடமும் கைஏந்தியபோது பொன்ஸ் தன்னுடைய பதிவில் பாரதியின் வரிகளை இப்படி எழுதி இருந்தாங்க...

ஆலயம் பல்லாயிரம் செய்தல்
அன்னயாவினும் புண்ணியம் கோடி
ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்

அப்படீன்னு...

சமயத்துக்கு தக்கமாதிரி அந்த வரிகள் பலரோட இதயத்தை தொட்டு, இன்றைக்கு ஒரு மாணவி தன்னுடைய கல்வியை முடிக்கவும் நிச்சயமான வேலைவாய்ப்புக்கும் தமிழ் வலைப்பதிவர்கள் தோள் கொடுத்தாங்க...

உதவி செய்ததோட இல்லாம உஷா அக்கா எழுதி இருந்த வரி என்னவென்றால்...

ஊர் கூடி தேர் இழுப்போம் வாருங்கள் என்று...!!!!

இப்போது இன்னொரு வாய்ப்பு...தமிழன் பசியோடிருந்தால் தான் துடிப்பான் சக தமிழன்...தமிழன் கல்விகற்க வாய்ப்பில்லாமல் இருந்தால் நெஞ்சுருகுவான் சக தமிழன்...இல்லையா...தன் கண்ணெதிரே எதிர்ப்படும் எந்தவொரு உதவி செய்யும் வாய்ப்பையும் மறுக்க மாட்டான் இந்த தமிழன்...அதனால் தான் வந்தாரை வாழவைக்கும் தமிழகம் என்று சொன்னாங்க...

இலங்கை திரிகோணமலையில் உள்ள ஒரு பள்ளியில் இருந்து உதவிகேட்டு வந்துள்ள இந்த செய்தி, பாடசாலை பிள்ளைகளுக்கு உணவும் கல்வியும் அளிக்கக்கூடியதொரு வாய்ப்பு...

பத்தாம் வகுப்பை சேர்ந்த நாற்பத…

இணையத்தில் சைக்கோக்களின் ஆதிக்கம்

அட ஆமாங்க...இது புது மேட்டர்...நம்ம லக்கி லூக்கே சொல்லி இருக்கார் பாருங்க...இதை கொலைவெறியோடு அமுக்கி பார்த்து தெரிஞ்சுக்கங்க..

பெங்களூர் வலைப்பதிவர் சந்திப்பு - தழலின் பார்வையில்...

வெள்ளிக்கிழமை நைட்டு ஸ்டார் மூவிஸ் பலான படம் கண்ணுமுழிச்சு பார்த்த எபெக்டோ அல்லது மிட்நைட் மசாலா பார்த்த எபெக்ட்டோ சரியாக நியாபகம் இல்லை....படுக்கையில் பக்கத்தில் கிடந்த அலைபேசி டண்டடக்கு டண்ண்டக்கு டண்டக்கு டண்ண்ட்டாக்கு என்று சூரியன் படத்தில் கவுண்டமணி சொன்ன ஸ்டார்ட் மீயூசிக் ரிங்டோனில் அலறியது...

பதறி துடித்து எழுந்து மணி பார்த்தால் காலை மணி ஆறு முப்பது...எவண்டா இவன் இந்த மிட்நைட்ல நமக்கு போன் பன்றவன் என்று கொலைவெறியோடு ப்ளிப் டைப் மொபைலை பிரித்து காதுக்கு கொடுத்தால் எதிர் முனையில் வலையுலக பெண் ஈய விரோதி (எங்களுக்கும் காலம் வரும் காலம் வந்தால் நேரம் வரும் லாலலலா லாலல்லா) மோகன்தாஸ் லைனில்...

யோவ்....ஆசிப் அண்ணாச்சி எங்க வீட்ல இருக்காரு...எப்போ வரீங்க என்று எதிர்முனையில் அலறுகிறார்....நீங்க பேசிக்கிட்டிருங்க, இந்தா வந்துடுறேன் என்று சமாளித்து போனை வைத்துவிட்டு மறுபடியும் போர்வைக்குள் புகுந்து தூக்கத்தை கண்டினூ செய்யலாமுன்னு பார்த்தா...ம்ஹும்...பொட்டுத்தூக்கம் வரமாட்டேங்குது....போகன்தாஸை மனதுக்குள் சபித்துக்கொண்டே இப்படியும் அப்படியுமாக புரண்டு படுத்துக்கொண்டிருந்தபோது மணி ஏழரை...

சமீபகா…

செந்தழல் ரவி - சுற்றுப்பயண அறிவிப்பு...

வணக்கம் மக்கள்ஸ்....ஒரு பொன்மொழியோடு ஆரம்பிக்கிறேன்...

"எல்லோர் கையிலும் ஏன் ஆணி வைத்தாய் இறைவா"

இப்போ என் கையில் இருக்குற ஆணி கொஞ்சம் பெருசா, ஆணின்னே கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு (கிட்டத்தட்ட ஆப்பு சைஸ்ல) இருக்கு...என்ன செய்ய புலி வாலை புடிச்சுட்டமே...

சேலம் சிவராஜ் சித்த வைத்தியரோட சுற்றுப்பயண அறிவிப்பு மாதிரி இல்லைன்னாலும் ( ஓசூர் பாகாலூர் ரோடு ஈஸ்வரி லாட்ஜ்ல அவரை மீட் பண்ணி சிட்டுக்குருவி லேகியம் வாங்கிய வலைத்தமிழர் ஒருவர் இருக்கிறார் என்கிறது காதோரம் சிறகடிக்கும் ஒரு பறவை) ஏதோ நம்மால முடிஞ்ச ஒரு சுற்றுப்பயணத்தை செய்யலாமுன்னு இருக்கேன்...

நாம போற வழியில சுத்தியலோடு ஆணி புடுங்கிக்கொண்டிருக்கும் வலைத்தமிழர்கள் இருந்தால் அவர்களை சந்தித்து மொக்கை போட ஆவல்...

பெங்களூரில் இருந்து 15 ஆம் தேதி காலை கிளம்பி தாய்லாந்து...(ஈஸ்வரி லாட்ஜ் (அல்ல), பாங்காங்...)...இரண்டு நாள் டேரா...பிறகு அங்கிருந்து தாய்வான்...(தைபே)...அங்கேயும் இரண்டு நாள்...பிறகு அங்கிருந்து கொரியா...(கஸாந் தாங், சியோல்)....அங்கன ஒரு வாரம் ஆணி புடுங்கிய பிறகு, சிங்கப்பூரிலோ அல்லது மலேசியாவிலோ அல்லது இந்தோனேசியாவிலோ…

பா.க.ச மற்றும் பாலா & ஜெயா டி.வி நேர்முகம் நிகழ்ச்சி..

பாலாவே அல்லது பா.க.ச உறுப்பினர்களோ தகவல் தெரிவிக்காத நிலையில், ஜெயா டி.வியில் இருந்து வந்த ஒரு செய்தி வயிற்றில் புளியை கரைத்தது...

அது என்னவென்றால் பா.க.ச தலைமைப்பொறுப்பில் இருக்கும் பாலபாரதி, நேர்முகம் கேள்வி-பதில் நிகழ்ச்சியில் நேரடியாக நேயர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்கப்போகிறார் என்பது தான்...

அலுவலகத்திலோ தலைக்கு மேலே ஆணி..ச்சே..வேலை...இருந்தாலும் பா.க.ச பெங்களூர் கிளை ஒக்கே ஒக்க தலைவரான நான் இந்த ஆட்டத்தில் கலந்துகொள்ளவில்லை என்றால் அது வரலாற்றுப்பிழையாகிவிடுமே என்று கிலி கிளம்ப, அலுவலகத்தில் உடன்பணிபுரிபவர்களிடம் பார்த்துக்கொள்ள சொல்லிவிட்டு பாதி நாள் கட்டடித்தேன்...

12:00 மணிக்கு சரியாக எழுந்து பார்க்கவேண்டும் என்று அலாரம் வைத்துவிட்டு (பகல் பண்ணிரண்டு மணிக்குத்தான்)...படக் என விழித்து பார்த்த போது மணி பண்ணிரண்டு நாற்பத்தைந்து...

அய்யோடா என்று டி.வீயை உசுப்பினால் திடுக்கென தூக்கி வாரிப்போட்டது...எதிர்த்தாமாதிரி பாலா லைட்டாக முடிவளர்ந்த மொட்டைத்தலையோடு அட்டகாசமாக சிரித்தபடி கோவையிலிருந்து கேள்வி கேட்ட பிரதீபாவுடன் மொக்கை போட்டுக்கொண்டிருந்தார்...

அடக்கொடுமையே என்று பார்த்து…

பெங்களூர் வலைப்பதிவர் சந்திப்பு : வாரீயளா லால்பாக்கு ?

http://raamcm.blogspot.com/2007/06/blog-post_8052.html

சமீப காலங்களாக வலைபதிவர் சந்திப்பு பல்வேறு பகுதிகளில் நடைப்பெற்று கொண்டு இருப்பது வரவேற்கதக்கதே.

அந்த வகையில் பெங்களூரூலும் வலைபதிவர் சந்திப்பை வரும் ஜீலை மாதம் 14ம் தேதி சனிக்கிழமை லால்பார்க்'லில் நடத்தலாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. இது வெறும் சந்திப்பாக மட்டும் இல்லாமல் சற்றே
மாறுப்பட்ட முறையில் இல்லாதவர்களுக்கு உதவும் ஒரு நிகழ்ச்சியாகவும் போட்டோகிராபி பற்றிய சிறிய அறிமுகங்களுடன் நடத்தலாம் என்று உத்தேசிக்கப்பட்டுள்ளது.

அன்று தினம் காலையில் சந்திப்பு'க்கு பிறகு பெங்களூரூலில் இருக்கும் ஏதாவது ஆதரவற்றோர் இல்லத்துக்கு சென்று நம்மால் இயன்ற உதவிகளை செய்து வரலாம். வாய்ப்புக்கள் சரியாக அமையும் பட்சத்தில் அவ்வில்லத்திலே நமது
மதிய உணவு வேளையை அவர்களுடன் சேர்த்து கழிக்கலாம். இதற்கு உங்களின் மேலான கருத்துக்களும் மற்றும் ஆலோசனைகள உங்களுக்கு தெரிந்த இல்லத்தை பற்றிய விபரங்கள் இருந்தாலும் அளிக்கலாம்.

மேலும் புகைப்பட கலை பற்றிய சிறிய அறிமுகத்தை நண்பர் நச்.செல்லா, மற்றும் வெண்பா வாத்தி ஜீவ்ஸ் அளிக்க உள்ளனர்.


இடம்:- பெங்களூரூ லால்பார்…

தமிழ்மணம் உறங்குகிறதா ?

அதிகமாகஎழுதப்போவதில்லைநான்இந்தஇடுகையில்....சிலஅநாகரீகபதிவுகள்பற்றிதொடந்துமடல்அனுப்பியும்தமிழ்மணம்நிர்வாகம்கண்டும்காணாமலும்இருக்கிறதே ? தமிழ்மணஅட்மின்மடல்எவ்வளவுநாட்களுக்குஒருமுறைபடிக்கப்படுகிறதுஎன்றுதெரியவில்லை...மடல்அனுப்பியும்பதில்இல்லாததால்இந்தபதிவு...நிர்வாகிகள்மன்னிக்கவும்... ######################################### THIS EMAIL MESSAGE IS FOR THE SOLE USE OF THE INTENDED RECIPIENT(S) AND MAY CONTAIN CONFIDENTIAL AND PRIVILEGED INFORMATION. ANY UNAUTHORIZED REVIEW, USE, DISCLOSURE OR DISTRIBUTION IS PROHIBITED.BEFORE OPENING ANY ATTACHMENTS PLEASE CHECK FOR VIRUSES AND DEFECTS.IF YOU ARE NOT THE INTENDED RECIPIENT, PLEASE NOTIFY US IMMEDIATELY BY REPLY E-MAIL AND DELETE THE ORIGINAL MESSAGE. #########################################

கிரகலட்சுமியின் முதல் கல்யாணம் - பிரஷாந்தின் கூடுதல் ஆதாரம்

Image
தனது மனைவி கிரகலட்சுமிக்கும், வேணுகோபால் பிரசாத்துக்கும் இடையே நடந்த முதல் திருமணம் தொடர்பான மேலும் பல ஆதாரங்களை காவல் துறையிடம் நடிகர் பிரஷாந்த் ஒப்படைத்துள்ளார். நடிகர் பிரஷாந்த்-கிரகலட்சுமி விவகாரம் நாளுக்கு நாள், கிரகலட்சுமிக்குப் பாதகமாகிக் கொண்டே போகிறது.

கிரகலட்சுமியின் முதல் திருமணம் குறித்த முதல் தகவலை பிரஷாந்த் வெளியிட்டபோது அனைவரும் அதிர்ந்தனர். அத்தோடு நில்லாமல் கிரகலட்சுமியின் முதல் கணவர் பெயர் வேணுபிரசாத், அவர் கேரளாவைச் சேர்ந்தவர், இருவரும் காதலித்து பதிவு திருமணம் செய்து கொண்டனர் என்று பிரஷாந்த் புகார்களை அடுக்கினார்.

ஆனால் இது பொய்யான தகவல், எனக்கும் பிரசாத்துக்கும் கல்யாணம் நடக்கவில்லை. பிரசாத்தின் சகோதரி எனக்குத் தோழி. அவரிடம் எனது பட்டப் படிப்புச் சான்றிதழை அளித்திருந்தேன். அதில் உள்ள கையெழுத்தைத் திருடி, தனக்கு கல்யாணமானதாக போலியான வாக்குமூலம் கொடுத்துள்ளார் பிரசாத் என்று கிரகலட்சுமி போலீஸில் தெரிவித்தார்.

ஆனால் கிரகலட்சுமிக்கும், பிரசாத்துக்கும் இடையே கல்யாணம் நடந்ததற்கு பல சாட்சியங்கள் தன்னிடம் இ…

கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்...

யாரையாவது நாய் கடிச்சிருச்சி அப்படீன்னு கேள்விப்பட்டா...உடனே என்னுடைய வாயிலிருந்து வரும் வார்த்தை..."ஹெ !!...என்னைய இதுவரைக்கும் நாய் கடிச்சதே இல்ல தெரியுமா"...!! என்பதுவேயாகும்...அதில் ஒருவகையான பெருமிதமும் கொப்பளிக்கும்...

வந்துருச்சில்ல அதுக்கு ஒரு ஆப்பு...

கருநாடக எப்பிடமிக் டிஸீஸ் மருத்துவமனை ஊசியில கொண்டுபோய் முடிச்சிருச்சில்ல இந்த முறை...

கேளுங்க என் கதையை....

வழக்கமா வெளிய சுத்தனும்னா அலுவலகம் முடிந்தவுடன் காரை கொண்டுபோய் வீட்ல பார்க் செய்துட்டு யமஹாவை ஒரு குத்து குத்துவது வழக்கம்...பெங்களூரு ட்ராபிக் பயம் தான் காரணம்...உங்களுக்கு தெரியாதா பெங்களூருவில் நடக்குறவங்களுக்கு கூட ட்ராபிக் ஜாம் ஆகும் என்று...

அன்னைக்கும் அதே மாதிரி தான்...ஆப்பு தெருவில காத்திருக்குன்னு தெரியாம வண்டியை எடுத்துட்டேன்...

சல்லுபுல்லுன்னு டொம்ளூர் ( ஒரு ஏரியா) பக்கமா போயிக்கிட்டிருந்தப்ப பின்னால உட்கார்ந்திருந்த ஆளு வெச்சது தான் இந்த ஆப்பு....இப்படி திரும்பு இப்படி திரும்பு என்று சொல்ல, நான் வண்டியை வளைக்க ரோட்டில் நின்றிருந்த இந்த "வள்" எங்க இருந்து தான் வந்ததோ தெரியல, லபக்குன்னு பாய…

அ.தி.மு.க - பா.ம.க இணையுமா ?

வேலூர்: திமுக கூட்டணியிலிருந்து விலகி அதிமுக கூட்டணியில் இணையும் எண்ணம் பாமகவுக்கு இல்லை என்று அக்கட்சித் தலைவர் ஜி.கே.மணி கூறியுள்ளார்.

திமுக, பாமக இடையிலான உரசல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் நேற்று திண்டிவனம் அருகே தைலாபுரத்தில் உள்ள தனது வீட்டில் செய்தியாளர்களிடம் டாக்டர் ராமதாஸ் பேசுகையில், சட்டசபைத் தேர்தலோடு, திமுகவுடனான கூட்டணி முடிந்து விட்டது. இப்போது பாமக எதிர்க்கட்சி, திமுக ஆளுங்கட்சி என்று கூறினார். இது திமுக, பாமக வட்டாரத்தில் பலவித எதிர்பார்ப்புகளையும், சலசலப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், வேலூரில் பாமக பொதுக்குழுக் கூட்டம் நடந்தது. இதில் ஜி.கே.மணி கலந்து கொண்டார். அவரிடம் செய்தியாளர்கள் திமுக கூட்டணியிலிருந்து பாமக விலகுமா, அதிமுக கூட்டணியில் இணையுமா என்று கேட்டனர். அதற்கு மணி, திமுக அரசை ஆதரிக்கிற முதல் கட்சியாக பாமக இருக்கும். இதில் எந்த மாற்றமும் இல்லை. அதிமுக கூட்டணியில் பாமக கண்டிப்பாக இணையாது. முடிந்து விட்ட விஷயத்தைப் பெரிதாக்க விரும்பவில்லை என்றார்.

டாஸ்மாக் மது விற்பனை நேரம் குறைக்கப்பட்டது குறித்த கேள்விக்கு, இன்னும் குறைக்க …

முஷாரப் விமானம் சுடப்பட்டது

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் அதிபர் பெர்வேஸ் முஷாரப் சென்ற விமானம் சுடப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவரைக் கொல்ல நடந்த முயற்சி இது என்று கருதப்படுகிறது.

பாகிஸ்தான் தென் மேற்கில் உள்ள துர்பாத் என்ற நகரில் வெள்ள பாதிப்பை பார்வையிட இன்று முஷாரப் சென்றார். இதற்காக ராவல்பிண்டியில் உள்ள ராணுவ தளத்திலிருந்து அவர் விமானம் மூலம் துர்பாத் கிளம்பினார்.

அப்போது முஷாரப் விமானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. இருப்பினும் அதில் விமானத்திற்கு எந்த சேதமும் ஏற்படவில்லை. முஷாரப்புக்கும் ஒன்றும் ஆகவில்லை. அவரது விமானம் துர்பாத் நகரில் பத்திரமாக தரையிறங்கியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ராணுவ தளத்திற்கு அருகே உள்ள 2 மாடிக் கட்டடத்தின் உச்சியில் நீண்ட இரண்டு துப்பாக்கிகள் பொருத்தப்பட்டிருந்ததைப் பார்த்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவன செய்தியாளரும் கூறியுள்ளார்.

துப்பாக்கியால் சுட்டது போக ஒரு ராக்கெட்டும், முஷாரப் விமானம் மீது வீசப்பட்டதாக கூறப்படுகிறது.

சம்பந்தப்பட்ட 2 மாடிக் கட்டடத்திற்கு அருகே வசிக்கும் அர்ஷத் மஹமூத் என்பவரும், துப்பாக்கியால் சுடும் சப்தம் கேட்டதாக கூறியுள்ளார். அந்தக் …

விடாது செருப்பு !!

விடாது செருப்பு....!!!!எனக்கு தெரிஞ்ச மன்னார்குடி ஆசாரியிடம் ஒரு ஸ்டூல் செய்யுமாறு ஒரு மரக்கட்டையை கொடுத்தேன்...ஆனால் அந்த அரைலூசோ மூன்றே காலில் ஒரு ஸ்டூலை செய்து கொண்டுவர, எங்கேடா நாலாவது கால் என்றேன்...அவன் சொன்னான்...வரும்போது ஒரு தாத்தா கால் ஊன்ற வழியில்லாமல் தள்ளாடிக்கொண்டிருந்தார்...அவரிடம் கொடுத்துவிட்டேன்...என்றான்...அடப்பாவி...அப்போ நீ இந்த ஸ்டூலை எப்படியடா நிற்க வைப்பாய் என்றேன்...அவன் சொன்னான் என் மனைவி கூறியபடி, இந்த ஸ்டூலை மூன்று காலில் செய்திருக்கேன்...இன்றையில் இருந்து இதன் பெயர் முக்காலி என்றான்...அட...இவன் கூட இன்னவேட் செய்கிறானே என்று வியந்தபடி...எனக்கு வந்த பின்னூட்டம் ஒன்றை அப்படியே வெளியிடலாம் என்று தான்...அனானி: இப்படி எழுதுகிறார்..."உண்மைதான் ரவி அவனுக்கு கொஞ்சம் கூட உடம்ப்பில்

சொரனையே இருக்காது போலிருக்கிறது, 'அது' திருட்டுத்தனமாக

உங்கள் பெயரில் போட்ட பின்னூட்டத்திற்க்கு அது நீங்கள் தான் என்று

கருதி நான் ஒரு பின்னூட்டம்

போட்டிருந்தேன், அதன் கடுமைக்கு வருந்துகிறேன்.அந்த மன நோயாளி நிச்சயமாக பெரியாருக்கு கெட்ட பெயரை தான்

ஏற்படுத்துவான்,அவன் பேசுவது நாத்தி…

ஜென் கதையும் மலேசியா மனநோயாளியும்

ஜப்பானில் இருந்த ஒரு கிராமத்தில் வசித்து வந்த மக்கள் பக்கத்து நகரில் வாள்வீச்சில் புகழ் பெற்றிருந்த ஸென் ஆசிரியர் ஒருவரை தங்களுடையக் கிராமத்தினைக் கொள்ளையிட்டு வரும் ஒன்பது கொள்ளைக் கூட்டத் திருடர்களிடமிருந்து காப்பதற்காக அழைத்து வந்தனர்.கிராமத்திற்கு வந்த ஸென் ஆசிரியர் அங்கிருந்த உணவகம் ஒன்றிற்கு சென்று சாப்பிடுவதற்காக தனக்கு ஒரு கிண்ணத்தில் அரிசி சாதத்தினை எடுத்து வரச் சொன்னார். தன்னுடைய இருக்கையில் அமர்ந்தவர் இடையிலிருந்த வாளை உருவி தனக்கு எதிரில் வைத்து விட்டு கிண்ணத்தில் வந்த சோற்றினை வெட்டும் குச்சியால் (சாப்ஸ்டிக்) சாப்பிட ஆரம்பித்தார்.சீனர்களும், ஜப்பானியர்களும் வெட்டும் குச்சியினை உபயோகித்து தங்களுடைய உணவினை சாப்பிடுவது வழக்கம். நீங்கள் சீன/ஜப்பானிய உணவகங்களுக்கு சென்றால் நான்குகிளை முள்கரண்டியினைத் (ஃபோர்க்) தருவதற்கு பதிலாக வெட்டும் குச்சியைத் தருவார்கள். அதனை உபயோகித்து சீன/ஜப்பானிய மக்கள் மிக எளிதாக சாப்பிடுவது ஆச்சரியமாக இருக்கும். நானும் பல முறை உபயோகித்து சாப்பிட முயற்சித்திருக்கிறேன். ஆனால் அதனை உபயோகித்து நாம் இரண்டு முறை சாப்பிடுவதற்குள் நம்முடன் வந்திருந்த சீன நண்ப…

சிலநாளைக்கு : பின்னூட்டம் போடுவதில்லை

நன்பர்களே...இன்னும்சிலநாளைக்குநான்பின்னூட்டம்எதையும்போடுவதில்லை...உங்களுக்குவரும்பின்னூட்டங்களை - அதுநான்போட்டதுதானாஎன்றுஉறுதிப்படுத்திக்கொண்டேவெளியிடுங்கள்....அன்புடன்ரவி ######################################### THIS EMAIL MESSAGE IS FOR THE SOLE USE OF THE INTENDED RECIPIENT(S) AND MAY CONTAIN CONFIDENTIAL AND PRIVILEGED INFORMATION. ANY UNAUTHORIZED REVIEW, USE, DISCLOSURE OR DISTRIBUTION IS PROHIBITED.BEFORE OPENING ANY ATTACHMENTS PLEASE CHECK FOR VIRUSES AND DEFECTS.IF YOU ARE NOT THE INTENDED RECIPIENT, PLEASE NOTIFY US IMMEDIATELY BY REPLY E-MAIL AND DELETE THE ORIGINAL MESSAGE. #########################################