தேடுங்க !

Wednesday, May 30, 2007

கொரியாவின் வரலாறு மற்றும் கொரிய மொழி கத்துக்கலாம் வாரீயளா ?கொரிய மொழி, கொரிய நாடு பற்றி இந்த கட்டுரையில் கொஞ்சம் பார்க்கலாம்.
அளவில் நமது இலங்கையை அல்லது இந்திய மேற்கு வங்காளத்தை ஒத்த கொரிய நாடு, இப்போது வட கொரியா மற்றும் தென் கொரியா என்று இரு பிரிவாக பிரிந்து கிடக்கிறது...அது பற்றி பார்க்குமுன் கொஞ்சம் கொரிய தீபகற்பத்தின் வரலாற்றை சற்றி பின்னோக்கி பார்த்தால் கி.மு 2333 ஆம் ஆண்டில் இருந்து தகவல்கள் காண கிடைக்கின்றன...ஜியோசன் (Gojoseon) டைனாஸ்டி - அரசாங்கம் இந்த ஆண்டுவாக்கில் உருவாகி கி.மு மூன்றாம் நூற்றாண்டு வரை தொடர்ந்தது என்று சொல்கிறார்கள்...பிறகு நம்ம ஊர் சேர சோழ பாண்டியர் மாதிரி மூன்று பிரிவாக பிரிந்தனவாம்...

அவை முறையே க்யோகிர்யோ, சில்லா மற்றும் பாக்ஜே...(Goguryeo, Silla, and Baekje)..வழக்கம் போல இந்த மூன்று ப்ரதேசங்களுக்கிடையில் போர்கள், கலாச்சார உறவுகள், அரசியல், வாணிகம் என்று எல்லாம் உண்டு...இந்த குறிப்பிட்ட காலகட்டத்தில் கொரிய நாகரீகம் சீனாவுக்கும் ஜப்பானுக்கு இடையில் காலாச்சார தூதுவனாகவும், ஜப்பானின் ஆரம்ப கலாச்சாரங்களும் நாகரீகங்களும் உருவாகவும் காரணமாக இருந்தது...(கொரியாவுக்கும் ஜப்பானுக்கும் இடையே 200 கிலோமீட்டர் நீள கடல் - அவ்ளோதாங்க)

சமகாலத்தில் கொரியர்களுக்கு ஜப்பானியர்களை பிடிக்கவே பிடிக்காது..சாமுராய் வீரர்களான ஜப்பானியர்களுக்கு பொழுது போகவில்லை என்றால் கிளம்பி வந்து கொரிய பெண்களை பிடித்து சென்றுவிடுவார்களாம். உலகப்போர் நடந்த காலத்தில் கூட கொரிய பெண்கள் பாதிக்கப்பட்டார்கள், அது தனி கதை..

நம் தமிழகத்தின் சேர சோழ பாண்டியர் போல இந்த மூன்று ராஜ்ஜியங்களுக்கும் போர்களும் அரசியலும் இருந்தன என்று ஏற்கனவே குறிப்பிட்டேன் அல்லவா...க்யோகிர்யோ மற்றும் பாக்ஜே பிரதேசங்கள் சீனாவுக்கு எதிரான போரில் கவனம் செலுத்தவும், சீன ஆக்கிரமிப்பை தடுக்கவும் தலைப்பட்ட காலத்தில் சில்லா ராஜாங்கம் கொரிய தீபகற்பத்தின் பெரும்பகுதியை வளைத்திருந்தது...கி.மு 676 ஆம் ஆண்டு வாக்கில் கொரிய தீபகற்பத்தை முழுமையான தனது கட்டுப்பாட்டில் கொண்டுவந்தது சில்லா ராஜ்ஜியம்....

அப்படியே சில நூற்றாண்டுகள் தாவி விடலாம் வாருங்கள்...கி.பி 1392 ஆம் ஆண்டு வாக்கில் இ-சாங்-கி (Yi Seong-gye) ஆல் எழுப்பப்பட்ட ராஜ்ஜியம் ஜோசன் சாம்ராஜ்ஜியம்..(Joseon Dynasty - கி.பி 1392ல் இருந்து 1910 ஆண்டு வரை ஆட்சி அதிகாரத்தில் இருந்த வம்சம் இது...

இந்த வம்சத்தில் ஆண்ட அறிவாற்றல் வாய்ந்த மன்னர் அரசர்.சேஜோங் (Sejong the Great - 1418-1450) கண்டறிந்த எழுதும் முறைதான் ஹங்குல் (Hangul)...அதுவரை வரிவடிவம் அற்ற கொரிய மொழி வரி வடிவம் பெற்றது இந்த காலம்தான்....சீன மொழியில் எழுதிக்கொண்டிருந்த கொரியர்கள் தங்கள் சொந்த வரிவடிவத்தை உருவாக்கியதை இன்றும் கொண்டாடுகிறார்கள்...இந்த காலகட்டத்தில் கொரியா கலாச்சாரத்திலும், பண்பாட்டிலும், அறிவியலிலும் நாலு கால் பாய்ச்சலில் முன்னேறி ஓடியது என்று தான் சொல்லவேண்டும்...பாருங்கள் இந்த எழுத்தின் மகிமையை....

கி.பி 1870க்கு போகலாம் வாருங்கள்...இந்த காலகட்டத்தில் கொரியாவை விட பல மடங்கு முன்னேற்றம் கண்டுவிட்ட ஜப்பான், கொரிய நாட்டின் மீது தனது மேலாதிக்கத்தை செலுத்த ஆரம்பித்திருந்தது...கொரிய அரசர் ஜப்பானிய ஏஜண்டுகளால் கொல்லப்பட்ட துன்பியல் சம்பவமும் 1895 ஆம் ஆண்டு நடந்தேறியது...

1945 ஆம் ஆண்டு இரண்டாம் உலகப்போரில் ஜப்பானுக்கு அணுகுண்டுகள் மூலம் விழுந்த மரண அடிக்கு பிறகு குரங்கு பிரித்த அப்பம் கதையாக கம்யூனிச சோவியத் ரஷ்யா, கொரியாவில் மேல் பகுதியை பிரித்து வட கொரியா என்றும், அமெரிக்காவின் ஏற்ப்பாட்டில் ஜனநாயக தென்கொரியாவும் உதயமானது....ஒரு ஆச்சர்யம், ஜப்பானிடமிருந்து விடுபட்ட கொரிய தனது முதல் விடுதலை நாளை ஆகஸ்ட் 15 ஆம் தேதி ருசித்தது...

இன்றைக்கு கொரியவின் நிலை பற்றி எல்லோருக்கும் தெரியும்...ஒரு புறம் இன்னும் ஏழ்மையில் தத்தளிக்கும் வட கொரியா...அணுகுண்டு தயாரிப்பேன் வெடிப்பேன் வடிப்பேன் என்று பூச்சாண்டி காட்டி அமெரிக்கா ப்ரீஸ் செய்திருந்த வங்கி கணக்குகள் எல்லாம் இப்போது தான் திறக்கப்பட்டன...தென் கொரியாவின் சப்பை மூக்கு நன்பர்களின் சாம்ஸங் / எல்.ஜி / ஹுண்டாய் என்று ப்ராண்டுகள் உலகமெங்கும் சக்கைப்போடு போடுகின்றன...

சரி இப்போ கொஞ்சம் ஹங் குக், அதாவது கொரிய மொழி பழகுவோமா...

யொ பொ செயோ ( Yo Bo Se Yo) - ஹல்லோ

அன்ன ஹசியோ ( an-na-ha-si-yo) - இது க்ரீட்டிங்...ஒரு வணக்கம் மாதிரி...உபயோகப்படுத்தலாம்...

சங்காமீ ஓதோகீ த்வே சிம் னி கா (Sang ha me o thokee Dwe SIM Ni Ka) - உங்க பேரு என்ன ?

ஜே இரும்ன் ரவி இம்னிதா ( Je Erum Un Ravi IM Ni DA) - என்னோட பேரு ரவி

மெசயோ ச்சுல் குன் யெசயோ ( Mesio Chul Gun Yesaio) - எப்ப அலுவலகம் வருவ ?

மொகசயோ ? (Mo Ga Sa Yo) - சாப்டீங்களா ?

அனியோ (Anio) - இல்லை (No)

நே / யோ ( Nee / Yoo ) - ஆமாம் ( Yes)

இ-ஹீ-ஹா-ஷெஷயோ-யோ ( E-He-Ha-Shessoeo-Yo) - ஏதாவது புரிஞ்சதா ? (Did you understand anything )

னீ சங்கம் யோ (Ne Sangam Yo ) - எனக்கு கொஞ்சம் புரிஞ்சது (I Understand a Little)

கம்ஸாமீதா ( Kam Sa Me Da ) - நன்றி (Thanks)

Monday, May 21, 2007

கோவை வலைப்பதிவர் சந்திப்பு - தழலின் பார்வையில்

வலைப்பதிவர் சந்திப்புக்கு நான் சென்று சேர்ந்தபோது கிட்டத்தட்ட சந்திப்பு முழுமையாக ஆரம்பமாகியிருந்தது...அதனால் நான் பார்த்தவை கேட்டவை மட்டும் இந்த பதிவில்...

* பாமரன் அவர்கள் ஆறுமுகம் ஐயாவை எடுத்த பேட்டி பட்டாசு போல் வெடித்தது...தனக்கே உரிய குசும்புடன் பாமரன் பட்டையை கிளப்பினார்...லேட்டாக போய் மிஸ் பண்ணிவிட்டோமே என்று ஏங்க வைத்தது நான் பார்த்த ரெஸ்ட் ஆப் த இண்டர்வியூ...

* கேட்பரீஸ் பெர்க்ஸ் மற்றும் க்ரீம் பிஸ்கட்டுகள் சுற்றி வந்தன...அருமையானதொரு 'சாயா'வும் காலைச்சந்திப்பில் வழங்கப்பட்டது...

* பாலபாரதி ஆளுக்கொரு ஸ்க்ரிப்ளிங் நோட்டும் பேனாவும் கொடுத்தார்...மிகவும் உபயோகமாக இருந்தது...நான் அதில் நோட் செய்தது நிறைய...ஆனால் கூட்டம் முடிந்து வரும்போது மிஸ்பண்ணிவிட்டேன்...

* ஆறுமுகம் ஐயா கூறிய ஒரு கருந்து பலருக்கு உடன்பாடில்லை...அதாவது பாமரன் அவர்களுடைய கேள்வியான " கடந்த இருபதாண்டுகளில் சிறந்த இசையமைப்பாளராக யாரை கருதுகிறீர்கள்" என்ற கேள்விக்கு ஐயா "வித்யாசாகர்" என்றார்...பாமரன் சளைக்காமல் ஏன் ஏன் ஏன் என்று துளைத்தார்...ஐயாவின் பதில் என்னவென்றால் வித்யாசாகர்தான் இசையை முறையாக படித்தவராம்.....அப்போ இசை ராசாங்கம் நடத்திய இளைய ராஜா என்றொரு கேள்வி எல்லோருக்கும் எழுந்தது...எனக்கும் எழுந்தது...சிலர் கேட்டே விட்டார்கள்...நான் கேட்கவில்லை...(கேட்பரீஸ் பெர்க்ஸ் தின்றுகொண்டிருந்தேன்...)

* பின்நவீனத்துவத்துக்கு இங்கிலீஷில் Post Mordenizam என்று அறிமுகப்படுத்தினார் பேரா.ரமணி...வீடியோ காமிராவின் லைட் ஏ.சி குளுமையையும் மீறி நெற்றி வியர்வையுடன் பேசவைத்தது அவரை.....அவரது பத்து பக்க கட்டுரை வாசிப்பில் எனக்கு புரிந்தது "கட்டற்றது பின் நவீனத்துவம்"...ஆக வரையறைகளுக்குள்ளே வருவது பின்னவீனத்துவம் இல்லை என்றார்...ஆக பின்னவீனத்துவத்தையே வரையறுக்க முடியாதென்றார்.....அருமையான கட்டுரை...அவரது கையாலே வலையுலக பின்னவீனத்துவ வாதியான சுகுணா திவாகருக்கு ஒரு பின்னவீனத்துவ நினைவுப்பரிசை வழங்கவைத்தது மிகவும் சிறப்பு...!!!

* இரண்டாவது அமர்வுக்கு பிறகு எல்லோருக்கு பக்கத்து சைவ ஹோட்டலில் சாப்பாடு...ஒன்னும் சொல்லிக்கற மாதிரி இல்லைன்னாலும், தயிர்சாதம் நல்லா இருந்தது...லிவிங் ஸ்மைலுடன் சேர்ந்து சாப்பிட்டேன்...ஆங்காங்கே டேபிள்களில் வலைப்பதிவாளர்கள் ஆக்ரமிக்க, ஹோட்டலில் டோட்டல் சவுண்டு சில பல டெஸிபல்கள் கூடியது....இங்கே கையில் டோக்கன் கொடுக்கப்பட்டது...அவை உணவாக மாறியது...

* சிலபல தனிப்பட்ட வேலைகளுக்காக ராஜாவனஜுடன் வெளியே சென்றுவிட்டு திரும்புகையில் சிரில் அலெக்ஸ் வீடியோ கான்பரன்ஸில் கதைத்துக்கொண்டிருந்தார்...

வேறு தனிப்பட்ட வேலைகள் இருந்ததால் அனைவரிடமும் சொல்லிவிட்டு அப்பீட் ஆகிவிட்டேன்...

குறிப்பிட்டு சொல்லும்படியான சில பாய்ண்ட்ஸ்..

* வாத்தியார் சுப்பைய்யா மிகவும் இளமையாக தெரிகிறார்...கணீர் குரலில் பேசினார்...என்னுடைய வலைப்பதிவின் மூலம் செய்யப்படும் சேவைக்காக பொன்னாடை போர்த்தி கவுரவித்தார்....மிகவும் கூச்சமாக இருந்தது...

* மா.சிவக்குமார் மிகுந்த உற்சாகத்துடனிருந்தார்...ரெண்டு பூஸ்ட் சாப்பிட்டதுபோல, ஆரம்பத்தில் இருந்த அதே உற்சாகத்துடன் கடைசிவரை இருந்தார்...

* வினையூக்கியை மேலும் மொக்கை சிறுகதைகள் எழுதுமாறு கேட்டுக்கொண்டேன்...கண்டிப்பாக படிக்கிறேன் என்றும் ஓட்டி கதைத்தேன்...ச்ச்ச்சும்ம்மா செல்லம்...நீ எழுது கண்ணு....

* சென்ஷி டெல்லியில் இருந்து மொக்கைக்காகவே வந்திருக்கிறார்...படு ஒல்லியாக நரம்படி நாராயணன் மாதிரி இருக்கிறார்...ஆட்டுக்கால் சூப்பு மற்றும் நெஞ்செலும்பை ஒரு மாதம் சாப்பிட்டால் தேறும் வாய்ப்பு உண்டு...!!!

* எழுத்தாளர் பாமரன் துள்ளலாகவும், குசும்புடனும் எல்லோருடனும் கதைத்து, அனைவர் மனதிலும் ஒட்டிக்கொண்டார்...எந்த பந்தாவும் இல்லாத, சமூக ப்ரக்ஜை உடைய இவர்போன்ற எழுத்தாளர்கள் வலையுலகில் நிறைய உலாத்தவேண்டும் என்று கேட்டுக்கொள்ள நினைத்து, கேட்காமலேயே விட்டுவிட்டேன்...

* ராஜாவனஜ் கோவைக்காரர் ஆதலால் வழக்கம்போல ஊர்ப்பெருமை மற்றும் ஊரை விட்டுக்கொடுக்காத தன்மையில் இருந்தார்...கோவையில் தன்னுடைய கால் படாத தெருவே இல்லை என்றார்....கொள்கைக்குன்று...!!

* பாலபாரதி ஏதாவது பேசுவார், காலை வாரலாம் என்று சுமார் இருபது பேர் காத்துக்கொண்டிருப்பது போல் தோன்றியது...(பா.க.ச)...சந்திப்பில் இருந்தது இருபது பேர் தெரியுமில்லையா..தொழில் நுட்ப அறிவில் நல்ல முன்றேற்றம்...ஸ்கைப், வெப் காமிங் சேட் மற்றும் நிகழ்ச்சியை ஆர்க்கனைஸ் செய்வது என்று பம்பரமாக சுழன்றார்...

* தி ஹிந்து நாளிதழின் ரிப்போர்ட்டர் சுபா செய்தி சேகரிக்க வந்திருந்தார்...ரிலையன்ஸ் ப்ரஷ் மற்றும் உழவர் சந்தை தொடர்பான விவாதம் நடந்தபோது பொறுக்கமாட்டாமல் ஆட்டையில் அவரும் கலந்துகொண்டார்...பிறகு ஸ்மைல் மற்றும் வாத்தியார், மற்றும் மா.சி, பாலா பெயர்களை நோட் செய்து தனக்கான குறிப்புகளை தயாரிக்க எல்லோரிடனும் ஒரு ரவுண்டு அளவளாவினார்...

* மோகந்தாஸ் கோவை வரை பைக்கில் வந்திருக்கிறார்...பொறாமையாக இருந்தது...தன்னுடைய போனை வைத்து நிகழ்ச்சியை படம்பிடித்தவாறே இருந்தார்...அவ்வப்போது கேள்விகளையும் வீசினார்...தலைமுடியைத்தான் எப்போ வெட்டப்போறாருன்னு தெரியல...

* லிவிங் ஸ்மைல் ஆச்சர்யம் தந்தார்...தெளிவாக பேசினார்...ஒரு எல்.ஜி செல்பேசி மதுரைக்கு ராம் மூலமாக அனுப்புகிறேன் என்று கமிட் செய்துகொண்டேன்...

* நாமக்கல் சிபி ஏமாற்றினார்...அனுசுயா வராமல் ஏமாற்றினார்...தமிழ் பயணி பயணத்தை வேறு திசையில் நடத்திவிட்டார் போலிருக்கு...இருந்தாலும் அனுசுயா மற்றும் தமிழ்பயணியை நானும் ராஜாவனஜும் சென்று அன்னபூர்னா ஹோட்டலில் கண்டுகொண்டு அவர்கள் ஸ்பான்ஸர் செய்த அருமையான காபியை உறிஞ்சிவிட்டு மீண்டும் வலைப்பதிவர் கூட்டம் நடக்குமிடம் வந்தோம்...

* நிகழ்ச்சி முடிந்து வாத்தியார் துள்ளலாக தன்னுடைய ஸ்கூட்டியிடம் சென்றார்...பாமரன், தியாகு, பாலா, ராஜாவனஜ் போன்றவர்கள் கதைத்துக்கொண்டிருக்க பாய் சொல்லி நான் விரைந்தேன்...

இங்கே இந்த அருமையான கூட்டத்தை ஏற்பாடு செய்து, நோட்டுப்புத்தகம் முதல் ஏசி ஹால் வரை, முற்றிலும் வீடியோ மற்றும் மீடியா கவரேஜ், டீ, காபி, மதிய உணவுக்கு டோக்கன் முதல், தங்கும் இடம் வரை தெளிவாக ஏற்பாடு செய்த ஒருவரால் இதில் கலந்துகொள்ள முடியாமல் உடல்நலன் குன்றிவிட்டது தான் வருத்தம்....!!! இப்போது பரவாயில்லையாம்...இருந்தாலும் அவரை பார்க்க முடியலையே....அவர்தான் ஓசை செல்லா...!!!

இவ்ளோதான் என்னோட வியூஸ்...!!!

சோத்துக்கு பிச்சையெடுக்கும் ஆ.வி

ஆ.வி என்றால் என்ன பத்திரிக்கை என்று உங்களுக்கு தெரியும்...குமுதத்துக்கு போட்டியாக தமிழக்கத்தில் வெளிவரும் ஒரு இதழ்...

சமீபத்தில் மதுரையில் பத்திரிக்கை சுகந்திரம் கொளுத்தப்பட்டது அனைவருக்கு தெரியும்...அதில் மூன்று அப்பாவி உயிர்கள் பறிபோனதும் அறிவோம்...

ஜனநாயகத்தின் தூண்களில் ஒன்றாக கருதப்படும் பத்திரிக்கையை - அதன் ஊழியர்களை ரவுடியிஸமும் பாஸிஸ வெறியும் தீ நாக்குகளை கொண்டு விழுங்கிக்கொண்டது...

ஆனால் அந்த காயம் புரையோடிப்போகவும் இல்லை, வழியும் ரத்தம் நிற்கவுமில்லை...அதற்கு முன் ஆ.வி போன்றதொரு பத்திரிக்கை, "அழகிரி வீட்டில் தயாநிதி" என்று பத்திரிக்கையின் முன்பக்கத்தில் போட்டு விற்பனைக்கு கொண்டுவருகிறது...

இது மு.க.அழகிரி அவர்களின் மகன் துரை தயாநிதியை பற்றியது...சிறு குழந்தை கூட சொல்லிவிடும் இது பத்திரிக்கையை விற்பனை செய்வதற்கான ஒரு ஸ்டண்ட் என்று...

அல்லது குங்குமத்தின் வளர்ச்சியை கண்டு வரும் வயிற்றெரிச்சலினால் வந்த விளைவு, குனிந்திருக்கும்போது கொஞ்சம் குட்டிக்கொள்வோமே, இனியெப்போது குட்டப்போகிறோம் என்ற சாடிச மனப்பிறழ்வு என்று கூட கொள்ளலாம்...!!!

த்த்த்தூத்தேரி...இதெல்லாம் ஒரு பொழப்பு...இதுக்கு பிச்சையெடுக்கலாம்...!!!

இலங்கை தமிழர்களுக்கு ஏன் டெங்ஷன் ?

கடத்தப்பட்டிருந்த மீனவர்கள் திரும்பிவிட்டார்கள்...சிலர் அது புலிகளின் செயல் என்று குற்றம் சாட்டுகிறார்கள்...சிலர் அதை மறுக்கிறார்கள்...ஆனால் ஓவர் டென்ஷன் ஆவது பல ஈழத்தவர்கள்...

புலிகள் கடத்தினால் என்ன, கடத்தாவிட்டால் என்ன...அவர்கள் திரும்ப வந்துவிட்டார்கள் தானே...ஏதோ ஒரு சின்னப்பையன் எங்களை கடத்தியது இலங்கை இராணுவம் என்று சொன்னால் சொல்லிவிட்டு போகட்டும்...

புலிகள் கூட அந்த சிறுவனின் கண்ணுக்கு இராணுவமாக தெரிந்திருக்கலாம்...அந்த சிறுவனுக்கு எது SLA / எது நேவி / எது புலிகள் என்று எல்லாம் தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை...யூனிபார்ம் அணிந்த யாரும் அவனுக்கு அரசாங்க இராணுவ வீரனாக தெரிந்திருக்கலாம்...

அதை பிடித்து ஏன் தொங்க வேண்டும் ? இராஜீவ் கொலையையே அம்னீஷியா துணைகொண்டு மறந்துகொண்டுவரும் இந்த காலகட்டத்தில் இந்த சிறுபிள்ளைத்தனமான கடத்தல் நாடகத்துக்கு இந்திய உளவு அமைப்பான 'ரா' துணைபோயிருக்கும் என்பதும், இது கூட்டு சதி என்பது, முதிர்வான சொற்களாயில்லை...

விட்டுத்தள்ளுங்க...!!!!!

கனடாவில் ஒரு இராமர் பாலம்

இராமர் பாலம் பற்றிய பல சர்ச்சைகள் நடந்துகொண்டிருக்கும்போது, ஒரு பதிவில் படீரென உள்ளே நுழைந்த அனானி ஒருவர் சில லிங்குகளை அள்ளித்தெளித்துவிட்டு சென்றுவிட்டார்...

கனடாவுக்கருகில் நாற்பது கிலோமீட்டர் நீளத்தில் - சுமார் ஒன்று புள்ளி ஐந்து கிலோமீட்டர் அகலத்தில் உள்ள இந்த துண்டை லட்சுமண பாலம் என்று அழைக்கலாமா என்று கேட்டு இருந்தார்...
எனக்கு என்னமோ டவுட்டா இருக்கு...இங்கே எதுவும் இராமர் எண்ட்ரி ஆகி இருப்பாரோ - நாலு குரங்கோட ? கடல்ல எல்லா இடத்திலயும் இந்த இராமர் ஒவ்வொரு பாலத்தை கட்டியிருப்பாரு போலிருக்கே...தோண்டத்தோண்ட இப்படி வந்துக்கிட்டே இருந்தா, இராமர் ஏகபத்தினி விரதம் இருந்தாரா இல்லை ஏகப்பட்ட....வேனாம் விடுங்க...