Posts

Showing posts from February, 2007

ஒரு செஸ் ஆர்வலரின் அருமையானதொரு பதிவு

கொயந்தயா இருக்கச்சே நான் நன்னா செஸ் வெளாடுவேன்...

நம்ம ராமநாதன் கண்ணன் ஒரு கலக்கலான செஸ் ஆர்வலர்...அவரோட எனர்ஜியையும் செஸ் நாலேஜையும் பாக்கும்போது பொறாமையா கீது...

பதிவில் இருந்து சில வரிகள்:

"இன்னிக்கு ரவுண்ட்டின் ஷாக் டோப்பலோவ் தோத்து போனதுதான், இவான்சுக் கொஞ்சம் offbeat மூவ்ஸ்லாம் விளையாடி ஒரு பொசிஷனல் அட்வாண்ட்டேஜ் கொண்டு வந்துண்டார். 22. h4 க்கு அப்புறம், Black எவ்வளவு restricted-டா இருக்கு பாருங்க, கீழ படத்துல."

மேலும் படிக்க இங்க கொலைவெறியோடு அமுக்குங்க..

அசிங்கப்படுத்திட்டீங்களே...

இதுக்கு மேல நான் என்ன சொல்றது...இந்த லிங்கை பாருங்க...வீடீயோவோட பேச்சையே கேட்டுடுங்க..

தினமலரில் அருட்பெருங்கோ !!!!!

Image
ஒவ்வொரு கவிதையிலும் ஒரு குட்டி இன்ப அதிர்ச்சி தரும் அருட்பெருங்கோவின் பதிவையும் சில குட்டி சர்ப்ரைஸ் கவிதைகளையும் வெளியிட்டு தினமலர் இன்று மலர்ந்திருக்கிறது...

எங்கே போய் நிப்பானோ இந்த பய...பின்னால பெரிய கவிஞர் ஆகிருவாம்..(இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்திதான் உடம்பு ரணகளமா கிடக்கு..)

சிலருக்கு திறமை வளர்த்துக்கொண்டால் வளரும்...ஆனால் கவிதையும் கற்பனையும் பை பர்த் வரும்போல..இதை அருட்பெருங்கோவின் காதலர் தின கவிதை நறுக்குகளில் பார்க்கலாம்...இவருடைய (மரியாத மரியாத) முதல் கவிதை புத்தகம் என் கையில் தவழும் நாள் என்னாளோ !!! அது ஒரு பொண்நாளாம்...!!! (நியும் இப்பல்லாம்...)

இன்றைய இளைஞர்களை பார்த்து உலகம் வியக்கும் நிலை இருக்கு இல்லையா...அதுல ஒரு பீஸ் தான் இந்த அருட்பெருங்கோ என்னும் சிவ சாம்ராஜ்...!!! கவிதை சாம்ராஜ்யம் படைக்க வாழ்த்துக்கள்....

இங்கே பின்னூட்டமிட்டும் வாழ்த்தலாம்...இல்லைன்னா டேரக்டா அவர் வலைப்பதிவுக்கே போய் ஒரு செல்லக்குட்டு வைக்கலாம்..(பெட்டர்)...இல்லைன்னா வாழ்த்தி ஒரு மடல் கூட அனுப்பலாம்...(arutperungo@arutperungo.com).......

வாழ்த்துக்கள் இன்னோருமுறை...!!!!

நைல் நதி நீரை வாங்கித்தருவார்களா உலக ஜல்லிகள்

உலகம் உலகம் என்று இல்லாத ஒரு வடையாளத்தை உருவாக்கி இந்தியாவுக்கென இருந்த இந்தியன் என்ற அடையாளத்தை தொலைத்து நின்றதன் முழு பலனையும் இந்தியன் இன்று அனுபவிக்கிறான். நம்மை சுற்றி உள்ள 'உலக' நாடுகளான பாக்கிஸ்தான், வரீசிஸ்தான், ஆப்கானிஸ்தான், தமிழ் ஈழம், இலங்கை, பர்மா, சிங்கை, வங்காளதேசம் (மற்றும் கோபால் பல்பொடி விற்கும் அனைத்து நாடுகளும்), நமக்கு அல்வாவை கிண்டித்தர, நாம் ஜெய்ஹிந்த் என்று முழங்கிக்கொண்டு வாயில் அரை ஆழாக்கு சைஸ் வாழை பழத்தை வைத்து சப்பிக்கொண்டிருக்கிறோம்...

உலக அளவில் இந்தியனுக்கென்று ஒரு கட்சியாவது இருக்கிறதா தெரியவில்லை...அமெரிக்க ரிபப்ளிக் பார்ட்டிக்கு கழுதையா, யானையா சின்னம் என்றே தெரியவில்லை...பெனாசிர் புட்டோ லண்டனில் தஞ்சமடைந்துள்ள நிலையில், கலீதா ஜீயா எப்போது ஊர்வலம் நடத்தினாலும் குண்டு வெடிக்கிறது.....இலங்கை நிலவரம் சொல்லவே தேவை இல்லை...அகில உலக இந்தியன் கட்சி என்று இல்லாதாதன் பலனை நாம் இப்போது அனுபவிக்கிறோம்..அவ்வளவு ஏன், இண்டிப்ளாக்ஸ் விருதென்று சொல்லும் இவர்கள் உலக அளவிலான வலைப்பதிவுகளை நடத்து போட்டி நடத்தாதான் மூலம், தங்களை "உலக இந்தியன்" என்று சொ…

பெண்ணியமும் பெருங்காய டப்பாவும் !!!

Image
அந்த நேரக்கொடுமையை ஏன் கேக்குறீங்க....ரெண்டு வாரம் முந்தி ஒரு போன் அழைப்பு...

தல, வணக்கம்...

வாவ், சொல்லுங்க...

நம்ம $$$$$ அக்கா கிட்டயிருந்து போன் வந்துச்சு..

அதை ஏன் எங்கிட்ட சொல்றீங்க தலைவா...

எதோ ஆபாச மடல் வந்துச்சாம் அவுங்களுக்கு...

அடப்பாவி...நான் 'நாத்திகமேன்னு' கெடக்கேன்...என்னை சந்தேகப்படுறீயளா ?

சின்னக்காகிட்ட இருந்து ஒரு மடல் கூட வந்துச்சு...

அதுக்கு...

நீங்க எங்கேயிருக்கீங்க...

வேற எங்க, ஆபீஸ்லதான்..ஏன் கேக்குறீங்க...

எந்த ப்ரவுஸர் யூஸ் செய்யுறீங்க...

ஏன், இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் தான்...

அதுக்கில்லை, ஆனியன் புரவுஸர்னு ஒன்னு ஐ.பி தெரியாமே மடல் அனுப்பலாமாமே, அதுபற்றியதான சிந்தனை உனக்கிருக்கா ?

யோவ் போதும்...எதையாவது பார்த்து பயந்துட்டியா ? யராவது ஏடாகூடமா மடல் அனுப்பித் தொலைஞ்சாங்களா ? இல்லை அரை லூசுங்க எழுதின பதிவெதாவது படிச்சு கடனேன்னு ஒரு பின்னூட்டம் போட்டுத்தொலைஞ்சியா ?

அப்படியெல்லாம் இல்லை தல...ஏற்கனவே உன்னை வேறமாதிரி அடையாளப்படுத்திட்டாங்க...இதுக்குமேல..

என்ன நாண்டுக்கிட்டு சாகனுமா ?

என்ன தல இப்படி எல்லாம் பேசுற...நீ உருப்புடனும்னுதான்...

நான் உருப்புடியாத்தானிக்கேன்.."பார…

URGENT....கல்வெட்டு படிக்கலாம் வாங்க....+ ஊர்ப்பெருமை

Image
உங்க ஊரு கோயிலுக்கு போறீங்க...சுவத்துல ஏதோ கிறுக்கியிருக்கு...அது கல்வெட்டு, பழந்தமிழ் எழுத்துன்னு தெரியும்...ஆனால் அது உங்களுக்கு புரியாது....என்னான்னு பார்க்கலாம்னு நினைச்சாலும் அதை படிக்க தெரியாது...

அட இப்படி வெச்சுக்கோங்க...ஒரு பழைய ஓலைச்சுவடியோ இல்லை கல்வெட்டோ உங்க கைல கிடைக்குது...அதுல என்ன மேட்டர் இருக்குன்னு தெரிஞ்சுக்க ஆர்வம் இருக்கும் இல்லையா உங்களுக்கு...அப்படி ஆர்வம் இருந்தா மட்டும் போதும்...இந்த பதிவை அப்படியே யூஸ் பண்ணி படிக்கலாம் நீங்க...நாங்கல்லாம் அப்படித்தான் எங்கூரு கோவில்ல நேரத்தை செலவிடுவோம்...(சைட் அடிக்கிற விஷயத்தை இதுல இழுக்காதீங்க..)

நாங்க உபயோகப்படுத்தின விவரம் அப்படியே ஒரு இணைய தளத்தில் இருந்தது..அப்படியே கடிச்சு இங்கே பதிவிடுறேன்...பழந்தமிழ் எழுத்துக்களை பார்த்தா இனிமே கொலைவெறியோட படிங்க...விக்கி பசங்க, எதாவது தப்பிருந்தா சொல்லுங்க...

எண்கள் / உயிர் / மெய் எழுத்துக்கள் நூற்றாண்டுகளில் எப்படி மருவி வந்ததுன்னு இங்கே படமா கொடுத்திருக்கேன், பாருங்க...எங்க ஊர் திருக்கோவிலூர்ல உலகலந்த பெருமாள் கோவில்ல கடையெழு வள்ளல்களில் ஒருத்தர் 'காரி'யை பற்றி பல விஷயங்கள்…

தலைப்பு வைங்கோ !!! தலைப்பு வைங்கோண்ணா !!!

கலாய்க்கறதுக்காகத்தான் இந்த பதிவுன்னாலும், சில பல பழைய அருமையான பதிவுகளுக்கு அப்படியே ஒரு லிங்கை கொடுத்துட்டா, மக்கள்ஸ் ஜாலியாவாங்க...!!!

ஆனாலும் இந்த தலைப்பு வைக்கறதுல ஒவ்வொருத்தருக்கும் ஒரு தனி ஸ்டைலே இருக்குங்க...எத்தனை வருஷம் ஆனாலும் அது மாறாது போல இருக்கு...இனி, ஓவர் டூ தலைப்புகள் மற்றும் பதிவின் முதல் ரெண்டு வரிகள்..(காப்பிரைட் பிரச்சினை வராதுன்னு நினைக்கிறேன்...)

******************************************
மெலட்டூர் இரா நடராஜன்

எனது 395 ஆவது சிறுகதை (!!)

கோவையில் இருந்து வந்த கோலங்கல் 2010 மார்ச் 19 குங்குமம். " ஸார் டிக்கெட் ப்ளீஸ், என்றார் ரயில் கண்டக்டர். அப்படியே பாக்கெட்டை தடவிப்பார்த்தேன்..........

********************************************
விடாது கருப்பு

அமெரிக்காவில் பார்ப்பணர்கள் அட்டகாசம்

கைபர் போலன் கணவாய் வழியாக ஆடுமாடு மேய்த்தபடி வந்த பார்ப்ஸ்களால் இந்தியாவில் தான் வருணாசிரம கொள்கை பரப்பப்பட்டதென்றால் இப்போது அமெரிக்காவிலும் அவர்கள் வருணாசிரமத்தை தாங்கி பிடிக்கிறார்கள் என்று தெரிகிறது, அய்யாவின் சீடனான நான் இதுகுறித்து......

********************************************…

அன்பின் சாகரன் !!!! அமைதியில் உறங்குங்கள் !!!

அன்பின் சாகரன், சென்ற வலைப்பதிவு கூட்டத்துக்கு நீங்கள் வந்தீர்களாமே ? என்னால் வர இயலவில்லை...வந்திருந்தால் உங்களை கண்டு பேசியிருப்பேனோ ?

ஒரு வலைத்திரட்டியை முகம் காட்டாமல் நடத்திவந்தீரே ? எத்தனை சோதனைக்களுக்கும் இடையே வெற்றிகரமாக செயல்படுத்திவந்தீரே !!!

இருபத்தொன்பது அகவையில் இன்னுயிரை நீத்துவிட்டீர் என்ற தகவல் அறிந்து நான் சொல்லொன்னா துயரடைத்தேன்...!!!

உம்மை இழந்து வாடும் உமது குடும்பத்தார் மனம் இந்த இழப்பிலிருந்து எப்படி மீளும் என்பதற்கு பதிலில்லையே என்னிடம் !!!!!

குடும்பத்திற்கு தகுதியாவைகளை செய்துவைத்திருப்பீர் என்று நம்புகிறேன், அப்படி இல்லை என்றாலும் நாங்கள் கண்டிப்பாக உதவுவோம் சாகரன்..

நீங்கள் அமைதியில் உறங்குங்கள்...!!!!!

சென்னை வலைப்பதிவர் சந்திப்பு துளிகள்

வணக்கம் எல்லோருக்கும்...

வெற்றிகரமாக நடந்து முடிந்த சென்னை வலைப்பதிவர் சந்திப்பு பற்றிய பதிவு இது...உடனே பதிவிடலாம் என்று நினைத்தபோது பணிச்சுமை காரணமாக முடியவில்லை...இப்போது தான் சிறிது நேரம் கிடைக்கிறது...

இப்படி எழுத ஆசைதான்...ஆனால் வழக்கமாக எழுதறமாதிரியே எழுதி தொலைக்கலாம்...இதுல என்ன பார்மாலிட்டி வேண்டிக்கிடக்கு ?

பெங்களூரில் நான் சென்ற "என்னோட" விமானம், பனிப்பொழிவு காரணமா 4 மணி நேரம் தாமதமா மதியம் மூன்று மணிக்கு தான் சென்னைக்கு போய் சேர்ந்தது...பசி வயத்தை கிள்ளியது...பிரதர் ப்ளாட் இருக்கும் வேளச்சேரிக்கு போய் சேர மணி மூணு முப்பது...அப்படியே விஜயநகர் பக்கத்தில் இருக்க ரத்னா கேப் போனா, அங்கே இட்லி தோசை மட்டும் தான் இருக்கு என்றார் சர்வர்...

சரி ரெண்டு முறை சாம்பார் இட்லியும், ஒரு தோசையையும் உள்ளே தள்ளிவிட்டு அண்ணன் வீட்டில் படுத்து ஒரு குட்டி தூக்கம் போடுவதற்குள் வலைப்பூ சுனாமியிடம் இருந்து ( அதான் லக்கிலூக்) ஒரு குறுஞ்செய்தி...இன்னா வரியா வர்லியா ? என்று...அப்படியே கவிஞர் பாலபாரதிக்கு ஒரு போனை போட்டேன்...'ந்தா கிளம்பிக்கிட்டே இருக்கேன் தல' என்றார்..

அப்படியே எழுந்து ஒர…

நாமக்கல் சிபியை காணவில்லை !!!

வருத்தப்படாத சிங்கங்களில் ஒன்றான நாமக்கல் சிபி, பெங்களூர் விஜயம் ( இது என்ன போலி டாக்டர் விளம்பரம் மாதிரி இருக்குன்னு நினைக்காதீங்க)...என்னைக்கு...அட இன்னைக்கு காலையில் வந்துவிட்டார்...

என்னையும்,முத்து தமிழினியையும் காலையில் சந்தித்துவிட்டு, முத்து தமிழினி வீட்டில் சற்று இளைப்பாறி, ஜீ.ராவையும், அருட்பெருங்கோவையும் சந்திக்கிறேன் என்று எலக்ட்ரானிக் சிட்டி பக்கம் காலை பத்து மணிக்கு கிளம்பியவரை காணவில்லை...!!!

மதியம் சாப்பாடு ஏற்பாடு செய்திருந்தேன் நான்...குறைவான நேரமே உள்ளதால் ஜீராவையும் அருட்பெருங்கோவையும் பார்த்துவிட்டு அப்படியே லஞ்சை முடித்துவிடுகிறேன் என்று கூறியதால் ப்ளான் மாற்றமாகியது...

மொபைல் ச்விட்ச் ஆப் ஆகி உள்ளது...அய்யா எங்கே அய்யா நீர்...மொபைலை எவனாவது சுட்டுவிட்டானா ? எங்கள் அலைபேசி நம்பர் தெரியாமல் முழிக்கிறீரா ? இல்லை ஏதாவது கோயில் குளம் என்று சுற்றி பார்க்க கிளம்பிவிட்டீரா ?

ஜீ.ரா / அருள் உங்களுக்காக வெயிட்டிங்...நான் / முத்து தமிழினி திங்கிங்...

எங்கள் எண்கள்.. : ரவி - 98805 97061 , ஜீ.ராகவன் ( 9448373727)

:)))))))))))))

இந்தியா கெலிச்சுருச்சுப்போய்...!!!!

அட, இந்தியா சீரிஸை ஜெயிச்சுருச்சு...ராபின் உத்தப்பா ஒரு அதிரடி துவக்கத்தை கொடுக்க ( 17 பந்துக்கு 28 ரன்), அதுல ரெண்டு சிக்ஸர் மூனு போரு, கங்குலி வழக்கமான கவர்ட்ரவ்களுமாக, சாத்து சாத்துன்னு சாத்தி ஒரு அறுபத்தி எட்டு ரன்னை 82 பந்தில் சேகரிக்க ( அதுல ஒரு சிக்ஸ் மற்றும் எட்டு 4),பிறகு இறங்கின நாயக்கர் மஹால் கல்தூண் ராகுல் திராவிட் (78 ரன்) (இவரு த்ராவிடரா இல்லையா, பெங்களூர் இந்திரா நகர்ல தான் வீடு), சச்சின் சிங்கம்போல (உள்நாட்ல/அட வெளிநாட்லயும் தான் :))) ) கிளம்பி விளசுனாருய்யா...தோனிக்கு போட்டியா மடக்கிப்போட்டு அடிச்ச சிக்ஸரை காண கண் மில்லியன் வேண்டும்...

சும்மா கிழி கிழின்னு கிழிச்சுட்டாருல்ல...76 பந்துக்கு செஞ்சுரி...இது நாப்பத்தி ஓராவது செஞ்சுரி...பத்து 4, மற்றும் ஒரு சிக்ஸர்...அட கடைசியில் இறங்குன நம்ம விளம்பர ஹீரோ தோனி சும்மாவா...இருவது பந்துக்கு நாப்பது ரன்...அடிச்சு தூள் செஞ்சுட்டாருல்ல...எவனாவது இளிச்சவாயன் மாட்டினா விடமாட்டானுங்களே...போன் போட்டு அடிப்பானுங்க...ஆமாம், மூனு சிக்ஸ் ஒரு போர்..ஓரே ஜூபிலேஷன்...சீரிஸ் ஜெலிச்ச மகிழ்ச்சியில் த்ராவிட் துள்றாரு...

மேன் ஆப் த சீரிஸ் விருது ந…

03/பிப்ரவரி/2007 - சென்னை வலைப்பதிவர் சந்திப்பு...!!!

எல்லாருக்கும் வணக்கம்...!!!!!

சென்னையில் பல முறை வலைப்பதிவர் சந்திப்பு நடந்தது கடந்த ஆண்டில்...அப்போதெல்லாம் கலந்துகொள்ளவேண்டும் என்று பல முயற்சி எடுத்தும் முடியலை...ஆனால் இந்த ஆண்டு அதிரடியா ஒரு சந்திப்பு நடக்கப்போகுது...இதில் கலந்துகொண்டு, கொலசாமிகளுக்கு நேரடி படையல் போடலாமே என்று ஒரு ஆசை...

இந்த வலைப்பதிவர் சந்திப்பும் ஒரு உருப்படியான வலைப்பதிவர் சந்திப்பாக இருக்கும் என்று எதிர்பார்ப்பாகாதீர், இது ஒரு ஜாலி சந்திப்பு......!!!!!

அவரை கூப்பிடுவோம், இவரை கூப்பிடுவோம் என்றெல்லாம் இல்லாமல் எல்லோரையும் முழு மனதோடு அழைக்கும் அன்பு மடல் தான் இந்த பதிவு...

சனிக்கிழமை மாலை ஐந்து மணிக்கு நடேசன் பார்க்கில் ( பனகல் பார்க் இல்லைங்க, சென்ற முறை ஒரு குட்டி கலாட்டா நடந்ததாம்) சந்திக்கலாம் என்பது தான் திட்டம்...

சந்திப்பில் போண்டா வழங்கப்படுமா, வடை வழங்கப்படுமா, என்று எல்லாம் "வாங்க பேசிக்கலாம் ப்ரண்ஸ்..."

மறக்காம வந்திருங்க...இதுவரை பாலபாரதி / முத்து / வரவணை செந்தில் / மிதக்கும் வெளி / லக்கி / நான் ஆட்டத்துல இருக்கோம்...சென்னையில் இருக்கவங்க, ஆட்டோ அனுப்பறவங்க, இல்லை ஆட்டோவில் வர்றவங்க எல்லாரும…