Posts

Showing posts from January, 2007

சென்னை !! பார்வையற்றவர்ளுக்கு எழுதுங்கள் !!!

பல பார்வையற்ற மாணவர்கள், பல்துறைகளில் சென்னை நுங்கம்பாக்கம் லயோலா கல்லூரியில் கல்வி பயில்கிறார்கள்...இது அவர்களின் இண்டர்னல் தேர்வுக்காலம்.....நீங்கள் எப்படி உதவலாம் ?? வழி இருக்கிறது...அவர்களின் தேர்வின்போது அவர்கள் அருகில் அமர்ந்து அவர்கள் வாயால் சொல்வதை எழுதி கொடுப்பதின் மூலம்...இது Scribe என்று ஆங்கிலத்தில் சொல்லப்படும்....பார்வையற்ற மாணவர்களின் கல்விக்கு உதவும் இந்த சேவை உண்மையில் மன நிறைவை கொடுக்கும் என்று சொன்னால் அது மிகையாகாது...

http://photos1.blogger.com/x/blogger/3075/2751/400/865699/Scribe.jpg

நீங்கள் எந்த நாள் செல்ல முடியும் என்பதை கூறினால் அதற்கு தகுந்த ஒரு ஸ்லாட்டை உங்களுக்கு ஒதுக்குவாங்க...ஸ்லாட்கள் பற்றிய விவரம் அறிய இங்கே அழுத்தவும்

இந்த பணியை முன்னின்று செய்யும் sadhana sundararajan அவகளுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்...நீங்கள் எந்த நாள் செல்லமுடியும் என்பதை sadhana.sundararajan@wipro.com
என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தினால் அவர் உங்களுக்கு சரியான தேதி, நேரம் மற்ற விவரங்களை தருவார்...

அப்படி விவரங்கள் இல்லை என்றாலும் இங்கே பார்த்து, தகுந்த நேரம் மற்றும் இடத்துக…

ஜப்பானில் தமிழும் பரதமும் !!!!

இவ்வளவு அழகாக படங்களுடன் கட்டுரை வடிக்க முடியுமா என்று என்னை ஆச்சர்யப்படவைத்த ச.கமலக்கண்ணனின் கட்டுரை...சாம்பிள் கொஞ்சம் கீழே...

"அணுகுண்டின் பாதிப்பு வெகுநாட்களுக்குத் தொடர்ந்தது. சடாக்கோவும் பள்ளிக் குழந்தைகளும் மனதை விட்டு அகல மறுத்தனர். ஒருவழியாக, ஜூலை கடைசி வாரத்தில் ஓஸகாவில் நடைபெற்ற தென்ஜிம் திருவிழா மனதுக்கு ஆறுதலளித்து, வேறு திசையில் கவனம் செலுத்த உதவியது. ஜப்பானில் திருவிழாக்களுக்குப் பஞ்சமே இல்லையென்றாலும், மிக விமரிசையாகக் கொண்டாடப்படுவது வருடத்துக்கு இரண்டோ மூன்றோதான். ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு திருவிழா. ஒவ்வொரு திருவிழாவுக்கும் ஒவ்வொரு புராணம். பள்ளியில் படிக்கும் காலத்தில், கோபிசெட்டிபாளையம் அருகே பாரியூர் என்ற ஊரில் கோலாகலமாக நடக்கும். சுற்றியிருக்கும் பதினெட்டு பட்டிகளிலிருந்தும் மக்கள் வந்து குவிவார்கள். பிறகு கல்லூரி, வேலை என்று வெளியூர் வாசத்தினால் பாரியூர் செல்வது குறைந்து விட்டது. இந்தத் தென்ஜிம் திருவிழா அதை நினைவூட்டியது.

டோக்கியோவில் காண்டா (Kanda), கியோட்டோவில் கியோன் (Gion) மற்றும் ஓஸகாவில் தென்ஜிம் ஆகிய மூன்று திருவிழாக்களும் ஒரே நேரத்தில் கொண்டாடப்படும்…

பாலபாரதிக்கு வாழ்த்து, ஹரிஹரனுக்கு நன்றி!

சிலபேர் சொல்லுவாங்க....கொஞ்சநாள் செய்யவும் செய்வாங்க...ஆனால் தொடர்ந்து கடைப்பிடிக்க முடியாது....சிலபேர் விட்டுட்டேன் அப்படீம்பாங்க...எத்தனையாவது முறைன்னு கேட்டா 28 ஆவது முறைன்னுவாங்க....சீனப்பிரதமருக்கு மூட்டுவலி, ஆயாவோட ஏழாவது டெத் டே, துக்கம் தொண்டையை அடக்குது அப்படீன்னு மறுபடியும் ஆரம்பிச்சுருவாங்க...

சிலபேர் யார் சொல்லியும் கேட்கமாட்டாங்க...அப்துல்கலாமே மின்னஞ்சல் அனுப்பினாலும் போய்யா வேலையை பாத்துக்கிட்டுன்னு சொல்லிருவாங்க...வீட்ல இருக்கிறவங்க, வீட்டுக்கு வரப்போறவங்க தேஞ்சுபோன ரிக்கார்ட் ப்ளேயர் தட்டுமாதிரி திரும்ப திரும்ப ஒலிபரப்பினாலும் ஒரு பயனும் இருக்காது..

அட புகைப்பழக்கத்தை தான் சொல்லுகிறேன்...ஆனால் பாருங்க, நம்ம நண்பர் ஹரிஹரன் சொல்லி நம்ம கவிஞர் பாலபாரதி புகைப்பழக்கத்தை விட்டு இன்னையோட அஞ்சாவது நாள் ஆகுது...விஷயம் தெரிய இங்கே கொலைவெறியோடு அமுக்குங்க..

புகைப்பழக்கத்தை விடுறதுக்கு முதல் படியே, அதை எல்லாருக்கும் சொல்லுறது தான்...பாலா அதை செஞ்சுட்டார்...தீவிர பா.க.ச உறுப்பினர்களான நம்மளோட கடமை என்ன தெரியுமா ? அவர் புகைப்பழக்கத்தை விட்டுட்டார் என்பதை அப்பப்போ நினைவுபடுத்திக்கிட்டே…

அய்யய்யோ அல்லேலூயா !!!!!

ஒரு பாபா பதிவுக்கு விளம்பரம் கொடுத்ததுக்கு பாவம் எல்லாரும் நெஞ்செரிச்சலாகிறாங்க...என்ன நீ கிறித்தவ / முஸ்லீம் மதத்தை பற்றி எழுதமாட்டியா என்று ? சில அரை லூசுகள் நல்ல பல பின்னூட்டமும் கொடுத்தாங்க...சந்தோஷம், மகிழ்ச்சி...பதிவு எழுதுற அளவுக்கு நேரம் கிடைக்கலைன்னாலும் நன்பர் ஹரிஹரன் வேலை மெனக்கெட்டு பதிவு போட்டிருக்கார்...அதை அப்படியே அடிக்கவேண்டியது தான் காப்பி....யாராவது இனிமே மிட்நைட்ல வர்ற சாமியார்கள் / அதிஷ்டக்கல் / நியூமராலஜி / நேமாலஜி (உலகிலேயே முதல்முறையாக கண்டறிந்த டாக்டர்.ராஜராஜன், ABC(ஜெர்மனி), EFG (லண்டன்) போன்றவைகளள பற்றியும் எழுதினால் அதையும் பதிவில் போடுவேன்) இனி ஓவர் டூ ஹரிஹரன்..

**********************************************************


செந்தழலார் ரெண்டு ரூபாய்க்கு பாபா மேஜிக் காட்டினார். இந்த மேஜிக்ல கிடைக்கிறது ஒரு பவுன் மோதிரம், வீபூதி, ரோசாப் பூ என மேக்ஸிமம் வேல்யூ மொத்தமே 10,000 ரூபாய்தான். அதுவும் உங்களுக்குக் கிடைப்பது வீபூதி, ரோசாப்பூ மட்டும்தான். துரைமுருகன், தயாநிதி ரேஞ்சில் இருந்தால் ஒருபவுன் மோதிரம். நாமெல்லாம் ஏழைபாழைங்க நமக்கு மோதிரம் மாதிரி மதிப்பான பொருள் கிட…

சாய்பாபா மேஜிக் ஷோ!! டிக்கெட் ரெண்டு ரூபாய்!!

மீண்டும் ஒரு விளம்பர பதிவு !!!! ஸ்பெல்லிங் மிஸ்டேக் எதுவும் இருந்தால் நான் பொறுப்பல்ல...( அட, இப்படி கூட டிஸ்கி போடலாமோ !!! ) வீடியோ லிங்க் இருந்தது, அதை இப்போது தான் சிந்தாநதி சொல்லி பார்த்து அப்டேட் செய்தேன். இப்போ வீடியோவும் இருக்கு...பாருங்கப்பு...

தெலுங்கு கங்கை திட்டத்திற்காக 200 கோடி வழங்கிய சாமியார் சாய்பாபாவுக்கு நடந்த பாராட்டு விழாவில் பேசிய மாநில பொதுப்பணித் துறை அமைச்சர் துரைமுருகன் "ஆன்மீக சக்தியால் மொதிரம் வரவழைத்து கொடுத்தார் பாபா" என்று பெருமிதம் கொண்டாராம். செய்தி வெளியிட்டிருக்கிறது 'தினமலர்'.

அதே கூட்டத்தில் (21.1.2007 காலை நிகழ்ச்சியில்) மத்திய அமைச்சர் மாண்புமிகு தயாநிதி மாறன் பேசும் போது, "அருள்மிகு பாபா முதலமைச்சர் வீட்டிற்கு வந்தபோது, எனக்கு மோதிரம் வரவழைத்துக் கொடுத்தார். அப்போது அவருக்கு மோதிரம் கொடுத்துவிட்டீர்கள், எனக்கும் ஒரு மோதிரம் தாருங்கள் என்று அமைச்சர் துரைமுருகன் கேட்டார். உடனே அவருக்கும் மோதிரம் வரவழைத்துக் கொடுத்தார். எங்களுக்குக் கொடுத்து விட்டீர்கள்; கலைஞருக்குக் கொடுங்கள் என்று (துரைமுருகன்) கேட்டபோது, அவருக்கு என் மனதையே த…

சுட்ட ரவி !!!!!! ஒரு உதவிக்காக விளம்பரம் !!!

பொன்ஸ் பதிவை அப்படியே சுட்டாச்சு...!!!! விழியன் அவர்களை பற்றி நன்பர் திருமால் மூலமாக கேள்விப்பட்டிருக்கேன்...அவரிடம் ஜே.ஜே சில குறிப்புகளை சுடலாம் என்றுகூட திட்டம்...சரி அதை விடுங்க...இப்போ ஓவர் டூ விளம்பரம்...

முத்தமிழ் குழுமம் பற்றி நண்பர்கள் பலருக்கும் தெரிந்திருக்கும். நண்பர் மஞ்சூர் ராசா, மற்றும் நம்பிக்கை குழுமத்தின் பாசிடிவ் ராமா, முதலியோர் இணைந்து நடத்தும் யுனித்தமிழ் கூகிள் குழுமம்.

பதிவெழுதத் தொடங்கிய ஒரு சில நாட்களிலேயே முத்தமிழ்க் குழுமத்தில் இணைய எனக்கும் அழைப்பு வந்தது. நண்பர் மஞ்சூர் ராசா புதுப் பதிவர்களை அவ்வப்போது பார்த்து இது போல் அழைப்பு அனுப்பி விடுகிறார். குழுமத்தில் சேர்ந்த புதிதில் அங்கே நடக்கும் விவாதங்களை வெறுமே படிப்பதோடு சரி. நமது ரசிகவ் ஞானியார், கீதா சாம்பசிவம், செல்வன், ஸ்ரீஷிவ், நாமக்கல்லார் எல்லாரும் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருந்த முத்தமிழ்க் குழுமத்தின் அமைதிப்படையிலேயே என்னுடைய முதல் மூன்று மாதம் கழிந்தது.

அப்புறம் நமது நண்பர் அசுரன் மற்றும் நண்பர் ராஜாவனஜ்ஜும் வந்து சேர்ந்த பின்னர் கொஞ்சம் விறுவிறுப்பான விவாதங்களுடன் பொறிபறந்து கொண்டிருந்தபோதும் முத்தம…

தூக்கமே டேபிள்மேலே...

Image
வகுப்பறையில் தூங்குவது எப்படீன்னு தலைப்பு வைக்கலாம் என்று தான் நினைத்தேன்...அப்போ அலுவலகத்தில் தூங்குறவங்களை எந்த கணக்கில் சேர்க்கிறது.....நான்கூட இப்போ தூங்கி எழுந்து தான் இந்த பதிவே எழுதறேன்....இந்த தலைப்பு வெச்சதுக்கு காரணம் ஆசையே அலைபோலே அப்படீன்னு ஒரு பாடல் சட்டென என்னோட கனவுல (ஆமா - பத்து நிமிஷம் முன்னாடி) வந்தது தான்...

அதுக்கு முன்னாடி வகுப்பறையில் நான் தூங்கறது ஒரு கனவுமாதிரி (!?) வந்து கொசுவர்த்தி சுத்துது...( அட இங்கேயும் தூக்கத்துக்கு தேவையான ஐட்டம் தானா)

நான் அப்படியே கடைசி பெஞ்சுல உக்காந்திருப்பேன்...அதிலேயும் மூலையா ( ஈசானி மூலை) ஒரு சீட் கிடைச்சா வாஸ்துபடி அந்த இடத்தை முதல் நாளே ஹோய் ஹோய் இது என்னோட எடம் என்று சவுண்டு கொடுத்து ரிசர்வ் செய்யுறது தொட்டில் பழக்கம்...அப்போத்தானே நிம்மதியா தூங்கமுடியும்...

பாருங்க, படிக்கிற நமக்கு இந்த ஊர் சுத்துறது, படிக்காம சினிமாவுக்கு போறது, சைட் அடிக்கறது எல்லாம் பிடிக்காது..ஐயம் குட் பாய்...ஆனா க்ளாஸ்ல தூங்குறதுக்கு தனியா ஒரு செமஸ்டர் வெச்சா அதுல யூனிவர்சிட்டி பர்ஸ்ட்டை எங்க கல்லூரிக்கு வாங்கிதந்திருப்பேன்...

அதுல பாருங்க...ஒரு கையை படக்க…

சாமி இருக்கா இல்லையா ? நீங்க ஓட்டு போடுங்க

எல்லோருக்கும் வணக்கம்...சாமி இருக்கா இல்லையா என்று ஒரு கேள்வியை கேட்பது கொஞ்சம் அதிகப்பிரசங்கித்தனம் என்றாலும், உண்மையை தெரிஞ்சுக்கனும்னா ஒரு சர்வே / ஒரு வாக்கெடுப்பு இப்படி வெச்சாத்தானே தெரியும்...

சிலபேர் கடவுளை நம்புறாங்க...ஆழமான நம்பிக்கையுடன் எல்லாமே அவன் செயல் என்று சொல்லுறாங்க...

சிலபேர் ஏதோ ஒரு சக்தி இருக்கு, ஆனால் நான் அவ்வளவு இண்ட்ரஸ்ட் காட்டுறதில்லை என்று சொல்லுறாங்க...

சிலபேர், தன்னுடைய சிந்தனை,பகுத்தறிவு சிந்தனை என்று சொல்லி கடவுள் மறுக்கிறாங்க...

சிலருக்கு, இப்படி ஒரு கேள்வி கேட்டாலே ப்ரீஸ் ஆகுற மனநிலை...

சர்வேசன் ஒரு வாக்கெடுப்பு போட்டிருக்கார்...இங்கே நீங்க அங்கே போய் உங்களோட வாக்கை பதிவு செய்தீங்கன்னா கொஞ்சம் தெளிவு பெறலாம்...

இந்து,தமிழ்,கிறித்தவம்,ஜடாயு,ஜல்லி,பகுத்தறிவு

ஜடாயு எழுதிய "உலகப்பொதுமறை பொங்கல் என்ற பதிவுக்கு" பகுத்தறிவு சுரேஷ் பதில் எழுதி இருக்கிறார். நானும் ஒரு பதிவு எழுதத்தான் போகிறேன். அதற்கு முன் பகுத்தறிவின் பதிவுக்கு இலவச விளம்பரம் தருகிறேன். ஓவர் டூ பகுத்தறிவு...

"தமிழ்நாட்டில் பொங்கல் பொங்கல் என்ற பெயரில்தான் கொண்டாடப்படுகிறது. எனக்குத் தெரிந்து பிராமணர்கள் மட்டும்தான் பொங்கலை மகர சங்கராந்தி என்று கூறுவது வழக்கம். எனக்கு ~20 வயது வரை பொங்கலுக்கு இப்படி ஒரு பெயர் இருப்பதே தெரியாது. "

மேலும் படிக்க

வீராசாமி - திரை விமர்சனம்

சிம்பு சினி ஆர்ட்ஸ், மற்றும் குறள் டி.வி பி.லிட் தயாரிப்பில் வெளிவந்திருக்கும் வீராசாமி திரைப்படத்தின் இணை தயாரிப்பு உஷா ராஜேந்தர்..

பெயரை விஜய டி.ராஜேந்தர் என்று மாற்றிக்கொண்டுவிட்டபிறகு வந்துள்ள முதல் திரைப்படம்....கதை,திரைக்கதை,வசனம்,பாடல்கள்,இசை,ஒளிப்பதிவு,டைரக்ஷன், ஹீரோயின் மேக்கப், லைட்டிங், புரொடக்சன் மானேஜர், யூனிட்டில் சமையல் ஆகிய பணிகளை ஏற்றுள்ளார் விஜய டி.ராஜேந்தர்..அதைவிட மிகவும் கொடிய பணியான ஹீரோ வேடமும் ஏற்று நடித்து பீதியை கிளப்பியுள்ளார் டி.ஆர்..

மும்தாஜ் இந்த படத்தின் ஹீரோயினாக நடித்துள்ளார்...படத்துக்கு டபுள் ஹீரோயின் என்று யாராவது சொன்னால் அது உண்மைதான்...மும்தாஜே டபுளாக காட்சியளிக்கிறார்...இவரது காஸ்ட்யூமுக்கு முன்பெல்லாம் அதிகம் செலவாகாது என்பது உண்மை...ஆனால் இந்த படத்தில் அடுப்பு மாதிரி உள்ள மும்தாஜ் இடுப்புக்கே இரண்டு மீட்டர் துணி செலவாகும் என்று சொன்னால் அது மிகையல்ல...கட்டிப்புடி கட்டிப்புடிடா என்று பாடியவர் இப்போது பாடினாலும் கட்டிப்புடிக்கலாம்தான், ஆனால் ஒருவரால் முடியாது...

விமர்சனத்துக்கு இவ்வளவு பில்டப் தேவையில்லைதான்...இருந்தாலும் வேறுவழி இல்லையே...படத்தின்…

வலைப்பதிவர் கதை விவாதம் !!!!

ஆ ஆ ஆ வாங்க வாங்க வாங்கப்பா...வாங்கம்மா....கதை விவாதம் நடக்குது வாங்க வாங்க என்று விஜய் டிவி லியோனி - இலவச பட்டிமன்றம் கல்யாண மண்டபத்தில் நடக்கிற மாதிரி வாசல்ல நின்னு ஒருத்தர் எல்லாரையும் உள்ளார கூப்பிட்டுக்கிட்டு இருக்கார்...அது யாருமில்லைங்ணா...செந்தழல் தான்...

முதலில் உள்ளே வருகிறார் பொன்ஸ்...எக்ஸ்கியூஸ் மீ, இங்கே யானைக்கெல்லாம் அனுமதி உண்டா, நான் கையோட ரெண்டு யானைக்குட்டியை கூட்டிவந்திருக்கேன்...சேர்த்துக்கோங்க ப்ளீஸ்...

அய்யோ தாயே...இது சின்ன கல்யாண மண்டபம்மா...இங்கே யானைக்குட்டிக்கெல்லாம் சேர் கிடையாது...நீங்க வேனா உள்ளே எண்ட்ரி கொடுத்துக்கோங்க...அதுக்கு முன்னால. கதை விவாதம் செய்ய வலைப்பதிவர் வந்துக்கிட்டிருக்காங்க...அவங்களை வாசல்ல நின்னு கொஞ்சம் ஸ்மைலோட வரவேற்பு கொடுங்க...

பொங்கல் தமிழர் திருநாள் அல்ல...வாலண்டைண்ஸ் டே தமிழர் திருநாள்....கர்நாடகத்தில் காந்தி ஜெயந்தியை கன்னடர் திருநாளாக கொண்டாடுகிறார்கள்..அமெரிக்கர் எல்லாம் இந்துக்களாக மாறவேண்டும்...இந்து மதம் முன்னூறு கோடி வருடங்களாக உள்ளது...ஆர்.எஸ்.எஸ் ஒரு சிறந்த புட்பால் டீம்...என்று ஒருவர் ஷாக் கொடுத்தபடி உள்ளே நுழைகிறார்...அட …

நன்றி நன்றி !!! மகாலட்சுமி கல்விக்கு உதவியாச்சுங்க !!!

முதலில் மகாலட்சுமி கல்விக்கு உதவிய அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்...மனது நிறைவாக உள்ளது...இதுபோன்ற பல உதவிகளை பின்னாளில் நான் ஆர்கனைஸ் செய்யவும், மற்ற பதிவர்கள் ஆர்கனைஸ் செய்யவும் இந்த முயற்சி (என்றென்றும் அன்புடன் பாலாவுக்கு அடுத்து) எடுத்துக்காட்டாக இருக்கும் என்பதில் ஐயம் சிறிதும் இல்லை எனக்கு...

இந்த முயற்சியை முன்னெடுத்து செல்ல உதவியவர்களுக்கு நான் நன்றி என்று சொன்னால் அது முறையாகவோ பொருத்தமாகவோ இருக்காது...வேறு ஏதாவது வார்த்தை இருக்கிறதா என்று அகராதியில் தேடித்தான் சொல்லவேண்டும்...அந்த அளவுக்கு சிறப்பாக உதவினார்கள்...

பண உதவி செய்ததோடு மட்டுமல்லாமல் ஆரோக்கியமான விவாதத்துக்கும், இந்த விஷயம் பலருக்கு தெரிவதற்கும் உதவியவர் பொன்ஸ்...அவர் பதிவில் கேள்வி எழுப்பி இருந்த பலருக்கு (எல்லேராம் உட்பட- என்ன காரணமோ தெரியவில்லை, இவர் என்னிடம் ஒன்றுமே கேட்கவில்லை) சிறப்பாக பதில் அளித்து நாங்கள் கையில் எடுத்திருப்பது உருப்படியான விஷயம் என்று புரியவைத்தார்...

அடுத்ததாக ஞானவெட்டியான் ஐயா அவர்கள்...இளைஞர் போல களப்பணி ஆற்றினார்...அந்த மாணவியின் சர்டிபிக்கேட் எல்லாம் வெரிபை …