Posts

Showing posts from May, 2007

கொரியாவின் வரலாறு மற்றும் கொரிய மொழி கத்துக்கலாம் வாரீயளா ?

Image
கொரிய மொழி, கொரிய நாடு பற்றி இந்த கட்டுரையில் கொஞ்சம் பார்க்கலாம்.
அளவில் நமது இலங்கையை அல்லது இந்திய மேற்கு வங்காளத்தை ஒத்த கொரிய நாடு, இப்போது வட கொரியா மற்றும் தென் கொரியா என்று இரு பிரிவாக பிரிந்து கிடக்கிறது...அது பற்றி பார்க்குமுன் கொஞ்சம் கொரிய தீபகற்பத்தின் வரலாற்றை சற்றி பின்னோக்கி பார்த்தால் கி.மு 2333 ஆம் ஆண்டில் இருந்து தகவல்கள் காண கிடைக்கின்றன...ஜியோசன் (Gojoseon) டைனாஸ்டி - அரசாங்கம் இந்த ஆண்டுவாக்கில் உருவாகி கி.மு மூன்றாம் நூற்றாண்டு வரை தொடர்ந்தது என்று சொல்கிறார்கள்...பிறகு நம்ம ஊர் சேர சோழ பாண்டியர் மாதிரி மூன்று பிரிவாக பிரிந்தனவாம்...

அவை முறையே க்யோகிர்யோ, சில்லா மற்றும் பாக்ஜே...(Goguryeo, Silla, and Baekje)..வழக்கம் போல இந்த மூன்று ப்ரதேசங்களுக்கிடையில் போர்கள், கலாச்சார உறவுகள், அரசியல், வாணிகம் என்று எல்லாம் உண்டு...இந்த குறிப்பிட்ட காலகட்டத்தில் கொரிய நாகரீகம் சீனாவுக்கும் ஜப்பானுக்கு இடையில் காலாச்சார தூதுவனாகவும், ஜப்பானின் ஆரம்ப கலாச்சாரங்களும் நாகரீகங்களும் உருவாகவும் காரணமாக இருந்தது...(கொரியாவுக்கும் ஜப்பானுக்கும் இடையே 200 கிலோமீட்டர் நீள கடல் - அவ்ளோத…

கோவை வலைப்பதிவர் சந்திப்பு - தழலின் பார்வையில்

வலைப்பதிவர் சந்திப்புக்கு நான் சென்று சேர்ந்தபோது கிட்டத்தட்ட சந்திப்பு முழுமையாக ஆரம்பமாகியிருந்தது...அதனால் நான் பார்த்தவை கேட்டவை மட்டும் இந்த பதிவில்...

* பாமரன் அவர்கள் ஆறுமுகம் ஐயாவை எடுத்த பேட்டி பட்டாசு போல் வெடித்தது...தனக்கே உரிய குசும்புடன் பாமரன் பட்டையை கிளப்பினார்...லேட்டாக போய் மிஸ் பண்ணிவிட்டோமே என்று ஏங்க வைத்தது நான் பார்த்த ரெஸ்ட் ஆப் த இண்டர்வியூ...

* கேட்பரீஸ் பெர்க்ஸ் மற்றும் க்ரீம் பிஸ்கட்டுகள் சுற்றி வந்தன...அருமையானதொரு 'சாயா'வும் காலைச்சந்திப்பில் வழங்கப்பட்டது...

* பாலபாரதி ஆளுக்கொரு ஸ்க்ரிப்ளிங் நோட்டும் பேனாவும் கொடுத்தார்...மிகவும் உபயோகமாக இருந்தது...நான் அதில் நோட் செய்தது நிறைய...ஆனால் கூட்டம் முடிந்து வரும்போது மிஸ்பண்ணிவிட்டேன்...

* ஆறுமுகம் ஐயா கூறிய ஒரு கருந்து பலருக்கு உடன்பாடில்லை...அதாவது பாமரன் அவர்களுடைய கேள்வியான " கடந்த இருபதாண்டுகளில் சிறந்த இசையமைப்பாளராக யாரை கருதுகிறீர்கள்" என்ற கேள்விக்கு ஐயா "வித்யாசாகர்" என்றார்...பாமரன் சளைக்காமல் ஏன் ஏன் ஏன் என்று துளைத்தார்...ஐயாவின் பதில் என்னவென்றால் வித்யாசாகர்தான் இசையை …

சோத்துக்கு பிச்சையெடுக்கும் ஆ.வி

ஆ.வி என்றால் என்ன பத்திரிக்கை என்று உங்களுக்கு தெரியும்...குமுதத்துக்கு போட்டியாக தமிழக்கத்தில் வெளிவரும் ஒரு இதழ்...

சமீபத்தில் மதுரையில் பத்திரிக்கை சுகந்திரம் கொளுத்தப்பட்டது அனைவருக்கு தெரியும்...அதில் மூன்று அப்பாவி உயிர்கள் பறிபோனதும் அறிவோம்...

ஜனநாயகத்தின் தூண்களில் ஒன்றாக கருதப்படும் பத்திரிக்கையை - அதன் ஊழியர்களை ரவுடியிஸமும் பாஸிஸ வெறியும் தீ நாக்குகளை கொண்டு விழுங்கிக்கொண்டது...

ஆனால் அந்த காயம் புரையோடிப்போகவும் இல்லை, வழியும் ரத்தம் நிற்கவுமில்லை...அதற்கு முன் ஆ.வி போன்றதொரு பத்திரிக்கை, "அழகிரி வீட்டில் தயாநிதி" என்று பத்திரிக்கையின் முன்பக்கத்தில் போட்டு விற்பனைக்கு கொண்டுவருகிறது...

இது மு.க.அழகிரி அவர்களின் மகன் துரை தயாநிதியை பற்றியது...சிறு குழந்தை கூட சொல்லிவிடும் இது பத்திரிக்கையை விற்பனை செய்வதற்கான ஒரு ஸ்டண்ட் என்று...

அல்லது குங்குமத்தின் வளர்ச்சியை கண்டு வரும் வயிற்றெரிச்சலினால் வந்த விளைவு, குனிந்திருக்கும்போது கொஞ்சம் குட்டிக்கொள்வோமே, இனியெப்போது குட்டப்போகிறோம் என்ற சாடிச மனப்பிறழ்வு என்று கூட கொள்ளலாம்...!!!

த்த்த்தூத்தேரி...இதெல்லாம் ஒரு பொழப்பு...இ…

இலங்கை தமிழர்களுக்கு ஏன் டெங்ஷன் ?

கடத்தப்பட்டிருந்த மீனவர்கள் திரும்பிவிட்டார்கள்...சிலர் அது புலிகளின் செயல் என்று குற்றம் சாட்டுகிறார்கள்...சிலர் அதை மறுக்கிறார்கள்...ஆனால் ஓவர் டென்ஷன் ஆவது பல ஈழத்தவர்கள்...

புலிகள் கடத்தினால் என்ன, கடத்தாவிட்டால் என்ன...அவர்கள் திரும்ப வந்துவிட்டார்கள் தானே...ஏதோ ஒரு சின்னப்பையன் எங்களை கடத்தியது இலங்கை இராணுவம் என்று சொன்னால் சொல்லிவிட்டு போகட்டும்...

புலிகள் கூட அந்த சிறுவனின் கண்ணுக்கு இராணுவமாக தெரிந்திருக்கலாம்...அந்த சிறுவனுக்கு எது SLA / எது நேவி / எது புலிகள் என்று எல்லாம் தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை...யூனிபார்ம் அணிந்த யாரும் அவனுக்கு அரசாங்க இராணுவ வீரனாக தெரிந்திருக்கலாம்...

அதை பிடித்து ஏன் தொங்க வேண்டும் ? இராஜீவ் கொலையையே அம்னீஷியா துணைகொண்டு மறந்துகொண்டுவரும் இந்த காலகட்டத்தில் இந்த சிறுபிள்ளைத்தனமான கடத்தல் நாடகத்துக்கு இந்திய உளவு அமைப்பான 'ரா' துணைபோயிருக்கும் என்பதும், இது கூட்டு சதி என்பது, முதிர்வான சொற்களாயில்லை...

விட்டுத்தள்ளுங்க...!!!!!

கனடாவில் ஒரு இராமர் பாலம்

Image
இராமர் பாலம் பற்றிய பல சர்ச்சைகள் நடந்துகொண்டிருக்கும்போது, ஒரு பதிவில் படீரென உள்ளே நுழைந்த அனானி ஒருவர் சில லிங்குகளை அள்ளித்தெளித்துவிட்டு சென்றுவிட்டார்...

கனடாவுக்கருகில் நாற்பது கிலோமீட்டர் நீளத்தில் - சுமார் ஒன்று புள்ளி ஐந்து கிலோமீட்டர் அகலத்தில் உள்ள இந்த துண்டை லட்சுமண பாலம் என்று அழைக்கலாமா என்று கேட்டு இருந்தார்...
எனக்கு என்னமோ டவுட்டா இருக்கு...இங்கே எதுவும் இராமர் எண்ட்ரி ஆகி இருப்பாரோ - நாலு குரங்கோட ? கடல்ல எல்லா இடத்திலயும் இந்த இராமர் ஒவ்வொரு பாலத்தை கட்டியிருப்பாரு போலிருக்கே...தோண்டத்தோண்ட இப்படி வந்துக்கிட்டே இருந்தா, இராமர் ஏகபத்தினி விரதம் இருந்தாரா இல்லை ஏகப்பட்ட....வேனாம் விடுங்க...