Posts

Showing posts from November, 2006

பொன்ஸ் அவர்களே... டம்ளர் என்பது எது..

Image

வேணாம் விட்ருங்க அந்த கிளியை

சமீபத்தில் ஒரு தோழர் தொலைபேசினார்...பணி வாய்ப்பு தேடும் முயற்சியில் சமீபத்தில் இறங்கி இருக்கிறார்...அவர் கூறி ஒரு விஷயம் இந்த பதிவுக்கு காரணமாக அமைந்தது..

சமீபத்தில் தான் கிளி ஜோசியம் பார்த்ததாகவும் அந்த கிளி ஜோசியர் தனக்கு இன்னும் ஒரு மாதத்தில் வேலை கிடைக்கும் என்றும் அது வெளிநாட்டு வேலையாக இருக்கும் என்றும் விரைவில் விமானத்தில் பறந்துவிடுவாய் என்று கூறியதாகவும் சொன்னார்...

எனக்கு தோன்றிய எண்ணங்கள் இவை, அதை வெளிப்படையாக சொல்லி அவனை கடுமையாக கலாய்த்தேன்..

* அடப்பாவி...கிளியே ஜோசியக்காரன் கொடுக்குற நெல்லுக்காக வெளிய வந்து சீட்டு எடுக்குது...அது எப்படிடா உன் வாழ்க்கையை தீர்மானிக்க முடியும்...கிளியோட வாழ்க்கையே அதன் கையில் இல்லையே, ரெக்கையை புடுங்கி கூண்டுல இல்ல அடைச்சிட்டானுங்க ?

* கிளி ஜோசியன் நீ கொடுக்குற அஞ்சு ரூபாய்க்காக உன்னிடம் கெஞ்சிக்கிட்டு நிக்குறான் தன்னோட வாழ்க்கையை கணிக்க முடியாம, அவன் பொழப்பு ஒடனுமுன்னு...அவன் எப்படிடா உன் வாழ்க்கை விவரத்தை கணிக்க முடியும் ?

இதில் அந்த கிளி ஐந்து ரூபாய் கொடுத்தால் வாங்கவில்லையாம், பத்துரூபாய் கொடுத்தால்தான் வாங்குவேன் என்று ஒத்தை (?!) காலில் நி…

எங்கே ? யார் ? கண்டுபிடித்தால் ஆயிரம் பொற்காசு

Image
படத்தை நன்றாக உற்றுப்பாருங்கள்...கவனம்..உங்களை ஏமாற்றும் தவறான வழிகாட்டுதல் இருக்கலாம்...இது என்னோட ஒன்னாப்பு போட்டோ...இதுல நான் எங்கே இருக்கேன் என்று கண்டுபிடித்தால் அவங்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் கிப்ட் இருக்கு....

இது தடாலடியாருக்கு போட்டி இல்லை....விளம்பர உத்தியும் இல்லை....சூடாகிக்கிட்டிருக்கும் தமிழ்மணத்தை கொஞ்சம் கூலாக்கலாமேன்னு தான்...அப்படியே அவங்க அவங்க ஸ்கேன் செய்து வைத்திருக்கும் போட்டோக்களை போட்டீங்கன்னா கொஞ்சம் குன்ஸாவா பொழுது ஓடும்..

போட்டோவை ஸ்கேன் செய்யாமல் வைத்திருக்கும் பதிவர்கள் உடனே ஸ்கேனிங் செண்டருக்கு விரையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்....

ஜால்ரா அடிப்பது எப்படி ?

Image
தென்னகத்து இசைக்கருவிகளில் ஜால்ராவுக்கு ஒரு நிச்சய இடம் உண்டுங்க..மற்ற இசைக்கருவிகளை போல் இல்லாமல் கைக்கு அடக்கமாக எங்கும் எடுத்துச்செல்லக்கூடிய, தேவைப்பட்டால் எப்போதும் கையிலோ அல்லது பையிலோ வைத்துக்கொள்ளக்கூடிய ஒரு உபகரணம்..இதை வாசிப்பத்தற்க்கு தனியாக எந்த பயிற்ச்சியும் தேவை இல்லை என்பது தனிச்சிறப்பு..மென்மையாக தட்டினாலும் சரி, வன்மையாக தட்டினாலும் சரி, "ஜங்" என்ற அழகான ஓசையுடன் தன்னை வெளிக்காட்டும்...

சில சமயங்களில் இசையுடன் சேராமல் இது அடிக்கப்படும்போது, நாராசமான ஓசையாக இருக்கும்..

செம்பினால் செய்யப்படும் இந்த வட்ட வடிவ இசைக்கருவி, ஒரு நூலால் அல்லது சிறிய கயிறால் ஒன்றோடொன்று பிரிந்துவிடாதவாறு பிணைக்கப்பட்டிருக்கும்...

இன்றைக்கு இசைக்கச்சேரிகளில் இந்த ஓசை இல்லாமல் பாடல் இல்லை என்ற அளவுக்கு மற்ற இசைக்கருவிகளோடு ஒன்றி இன்றியமையாத ஒன்றாகிவிட்டது...

( இந்த பதிவில் எந்த உள் குத்தும் இல்லை என்று டிஸ்கி போடும் அதே நேரம், தமிழ் வலையுலகிற்கு ஜால்ரா பற்றி அருமையான தகவலை பகிர்ந்தளிக்க முடிகிறது என்பது உள்ளத்தில் உவகையை கூட்டுகிறது )

பி.எஸ்.ஸி (2005/2006) நிறைவு : விப்ரோவில் வாய்ப்பு

Opportunities in Testing services - நாளை மறுதினம் கடைசி தேதியாக இருப்பதால் இங்கு பப்ளிஷ் செய்கிறேன்...

Walk in @ Kochi on Friday, 24th November, 2006

பணி : Test Engineer

தகுதி: Exposure to Software/Product Testing / Testing Life Cycle/Automation tools like WinRunner/QTP/ Defect tracking tools. Trained in Embedded Systems / Device drivers / RTOS will be desirable. Good communication skills is mandatory.

என்ன வேலை : The selected person will be taken as a Tester and would get an opportunity to work in the area of Manual and Automation Testing. Your roles and responsibilities will include Test Case Writing, Test Case Execution, Defect reporting, tracking and verification.

அனுபவம் : 0 to 1 Year

எங்கே பணி : Cochin (flexibility to relocate to Bangalore/Chennai/Hyderabad)

தகுதி : BCA/ BCM / BSc (CSc/ Maths/ Electronics /IT/Physics /Statistics) 2005 & 2006 pass outs.

கண்டிப்பாக தேவை : Must have had Mathematics as one of the subjects in XIIth /Predegree.

கல்வி காலம் : Should ha…

........./\.........என்னப்பா ஏதுப்பா......./\..........

************************************************************************************

இஞ்சாருங்கோ, இஞ்சாருங்கோ வாருங்கோ இங்கே....கொஞ்சம் வந்திட்டுப்போங்கோ...

அடாடா என்ன, கொஞ்ச நேரம் ரெலிபோனில் கதைக்கலாதோ ?

நம்மட மகன் எப்போதும் ரீவியை பாவிச்சிக்கிட்டு, ஊரு உலாத்திக்கிட்டிருக்கான்...என்னா ஏது எண்டு கேட்க கூடாதா ?

டேய் நிலவா, இங்கே வாடா...

என்னப்பா சொல்லுங்கோ?

என்னா ஏது...

என்னங்க, என்ன ஏதுன்னு கேட்க சொன்னா அதுக்காக இப்படியா ?

************************************************************************************

ஏண்ணா, சித்தே வாங்கோ இப்படி...

ஏண்டியம்மா காயத்ரி, சித்த நாழி டெலபோன் பேசிண்டிருக்கபடாதே நேக்கு...அபிஷ்டு...ஏண்டி...

நம்ம புள்ளையாண்டான் கிருபா எப்போ பார்த்தாலும் டீவியை ஈஷிண்டு தீட்டு புடிச்சவாளோட ஊரை ஷுத்திண்டு இருக்கு..சித்தே என்னா ஏதுன்னு கேக்கப்படாதோ...

நான் இப்பவே அந்த அபிஷ்டுவை கேட்குறேன்....எங்கே அங்க ப்ரகஸ்பதி ?

தோ இர்க்கேன் பா...தேடினேளா ?

ஆமா ஷகடை...உன்னே என் ஆத்துக்காரி என்னா ஏதுன்னு கேட்கச்சொன்னாள்...கேட்டுட்டன்..போருமாடீ....

ஏண்ணா...என்னா ஏதுன்னு கேட்கச்சொன்னா அதுக்கு இப்படியா...

***…

இனியெல்லாம் இலவசமே !!!

சமத்துவபுரத்தில் இலவசமாக கிடைத்த என்னுடைய வீட்டில் இலவசமாக கிடைக்கும் டி.வி சேனல்களில் ஒன்றை பார்த்துக்கொண்டே அமர்ந்திருந்தேன். இலவச அரிசிச்சோறை மனைவி பொங்கிப்போட்டாள்..சாப்பிட்டுவிட்டு சென்ற ஆண்டு பொங்கலுக்கு கொடுத்த இலவச வேட்டியை அப்படியே விரித்து, இலவச சேலையை தலைக்கு முட்டு கொடுத்து சாய்ந்தேன்..பக்கத்தில் 12 ஆம் வகுப்பு படிக்கும் மகனின் இலவச சைக்கிள்..குடும்பக்கட்டுப்பாடு இலவசம் என்று சொன்னபோதே செய்திருக்கலாம்..கொஞ்சம் அசட்டையாக இருந்ததில் நாலு பசங்க...சின்ன பெருமூச்சோடு அப்படியே உறங்கிப்போனேன்..

கொஞ்சநேரத்தில் தடதடவென யாரோ ஓடிவரும் சத்தம்..உலுக்கு உலுக்கென்று உலுக்கி எழுப்புறான் சின்ன மகன்...அப்பா அப்பா ஏந்திரு ஏந்திரு என்கிறான்..என்னடாவென எழுந்து பார்த்தால்...வா...வெளியே என்று கையை பிடிச்சு தெருவுக்கு இழுக்கிறான்...இருடா வர்ரேன் அப்படி என்னடா என்று சொல்லிக்கொண்டே வெளியே வந்தால்...வாசலில் புதிய டொயட்டோ இன்னோவா நிக்குது..டேய் யாருடைய வண்டி இது என்றால்...மூத்தவன் வண்டியை சுற்றி வந்து சொல்கிறான்..இது நம்ம வண்டிதாம்பா..நம்ம இலவச டீவியில் வந்த "காசுமேல" புரோகிராமில வந்த ஒரு கே…

ஸ்ஸ்ஸ்ஸ்...ப்ப்ப்பா...கண்ணைக்கட்டுதே !!

Image
சோம்பேறித்தனத்துக்கு ஏதாவது உச்சவரம்பு இருக்குதுங்களா ??

வலைப்பதிவாளர்களே..சந்திக்கலாமா பெங்களூரில் ?

அன்பு வலைப்பதிவு நன்பர்களுக்கு வணக்கம்...

பெங்களூர் பேலஸ் கிரவுண்ட்ஸ்ல புக் பேர் நடக்கப்போகுது...10 ஆம் தேதி ஆரம்பம் என்று ஷைலஜா சொல்றாங்க...ஜி.ராகவன் வரப்போறார்...தனிமடலில் தெரிவித்தார்...

சனி ஞாயிறு இரண்டு விடுமுறை நாட்களில், சனிக்கிழமை வைத்துக்கொள்ளலாம் என்று சொல்கிறார் ஷைலஜா..காரணம் ஞாயிறு கூட்டம் அதிகமா இருக்கும் என்கிறார்..

சென்ற ஆண்டு ஆஸ்திரேலியாவில் இருந்ததால் தவற விட்டுவிட்டேன்..ஆனால் அதற்க்கு முந்தைய ஆண்டு சென்று "பொன்னியின் செல்வன்" எல்லா தொகுதிகளையும் குறைந்தவிலைக்கு வாங்கினேன்..அப்போதே முழுவதும் படித்துவிட்டேன் என்றாலும், மீண்டும் வந்தியத்தேவன் வீரநாராயண ஏரி மதகுகளை எண்ணுவதை நேற்றில் இருந்து படிக்க ஆரம்பித்தேன்...

என்னோட டார்கெட், சாண்டில்யனின் "கடல்புறா"..அப்புறம் எங்க அம்மாவுக்கு மைக்ரோ அவன் குங்கிங், வேறு ஏதாவது சமையல் புத்தகம்..(பாப்கார்ன் செய்யுறேன்னு பிளாஸ்டிக் பாத்திரத்தை கருக்கிட்டாங்க..), பிறகு பாப்பாவுக்கு படிக்காமலேயே ஐ.ஏ.எஸ் ஆவது எப்படி, கல்லூரிக்கு கட் அடித்து வீட்டில் உறங்குவது எப்படி என்றெல்லாம் ஏதாவது புத்தகத்தை பிரசண்ட் செய்ய ஆசை..சொந்தக்க…