Posts

Showing posts from April, 2006

"விஜய்காந்தை நம்பமாட்டோமாக.. - ரவி

இது விஜய்காந்தை நம்புவோமாக அப்படின்னு சிட்டுகுருவி எழுதியதுக்கு பதில்...

விஜயகாந்தை நம்பலாம் சரி...அவரிடம் உள்ள விசிலடிச்சான் குஞ்சுகளை நம்பி எப்படி ஆட்சியை கொடுப்பது...

இது என்ன காஷ்மீர் தீவிரவாதிகளை பக்கம் பக்கமா லியாகத் அலிகான் வசனத்தையும் புள்ளி விவரங்களையும் பேசி கொல்லற விஷயமா ?? ( அதுவும் தமிழ் ல ஹி ஹி )

2011 ல வேனா விஜயகாந்தை நம்பலாம்... ( அப்ப தனுஷ் கட்சி ஆரம்பிக்கரேன் னு அடம் புடிப்பார்..சிம்பு, கலைஞர் என்னோட குரு அப்படின்னு அ(று)றிவிப்பார்..அஜீத் ஏதாவது ஒரு சாதி கட்சியோட தமிழக தலைவரா மல்லு கட்டுவார்..விஜய் ஸ்டாலின் மகன் உதய நிதிக்கு முடிசூட்ட பாக்கறாங்கன்னு தி.மு.க வில இருந்து விலகி அ.தி.மு.க வில சேருவார் ( சங்கீதா முகத்துல சுரத்தே இருக்காது ஹி ஹி )

அதனால இப்ப விட்டுடுவோம் அவர..

தமிழன் அவ்வளவு முட்டாளா தெரிகின்றானா குமுதத்துக்கு

குமுதம் இனைய இதழை படிக்க முயற்ச்சிக்கையில் உறுப்பினர்களுக்கு மட்டும் தான் என்று தெரிந்தது...

New Registration என்ற சுட்டியை தொட்டேன்..

அதில் முதல் கேள்வி Your e-mail id* -----------------

நியாயம் தான, இதுல என்ன உனக்கு ப்ரச்சனை னு கேக்கறீயளா ?

"Do not give kumudam.com " அப்படின்னு ஒரு வரி அதுக்கு கீழ இருக்கு..

ஏம்பா, மின்னஞ்சலுக்கும் இணைய முகவரிக்கும் வித்தியாசம் தெரியாதவனா தமிழன் ?

இத கேக்க யாருமே இல்லையா ? ( அதான் எழுதிட்டியே ரவி..தமிழ்மன தமிழர்கள் பூந்து விளையாடிடுவாங்க )

தயாநிதி அ.தி.மு.க வில் சேர்ந்தார்................

"திமுகவில் குடும்ப அரசியல்தான் நடக்கிறது!" - அதிமுகவில் இணைந்த தயாநிதி மாறன் பேச்சு.

திமுக தலைவர் கருணாநிதியின் பேரனும் மத்திய அமைச்சருமான தயாநிதி மாறன் திமுகவிலிருந்து விலகி இன்று முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். பிறகு நிருபர்களை சந்தித்த அவர் திமுகவில் குடும்ப ஆதாயங்களுக்கே முன்னுரிமை கொடுக்கபட்டு வருவதாக கூறினார். "கருணாநிதி தன் குடும்பத்தில் இருப்பவர்களுக்கே பதவியும் செல்வாக்கும் இருக்க வேண்டும் என்று செயல்படுகிறார். ஆனால் அவர் என்னை போன்று கட்சிக்கு உழைத்தவர்களை கண்டுகொள்வதில்லை. தக்க சமயத்தில் நண்பர் நடராசர் எனக்கு திமுகவில் இழைக்கபட்ட கொடுமைகளை தெளிவு படுத்தியதால், திமுகவிற்கும், சன் டிவிக்கும் பாடம் புகட்ட அதிமுகவில் இனைந்திருக்கிறேன். என் முடிவை வரவேற்று, புரட்சி தலைவி அவர்கள் 'மிடாஸ்' மதுபான தொழிற்சாலையில் எனக்கு ஒரு கணிசமான பங்கு தருவதாக கூறி கவுரவப்படுத்தியுள்ளார். ஜெயா டிவியில் தினமும் ஒரு மணி நேரமாவது என் முகத்தை காட்ட ஆவன செய்யப்படும் என்று அருமைச் சகோதரர் டிடிவி தினகரன் வாக்குறுதி அளித்துள்ளார். அதிமுகவில் சேர்ந்த பிறகுதான் நான…

திருடனுக்கு டீ போட்டு தரலாமா ?

இது எங்க அய்யன பத்தினது...( சில பேர் அப்பாங்கறாங்க)...இப்ப உள்ள புள்ளங்க டாடீ ங்குங்க..அதுல சில பேருக்கு பெரும..அதாவது பெருமைக்கு பேயோட்டுவாங்க...ப்ரச்சன அது இல்ல..எங்க அய்யன் ஒரு போலீஸ் அதிகாரி..சில ஆண்டுகளுக்கு (2002) முன்னால நான் பாண்டிச்சேரியில வேல பாத்துக்கிட்டு இருந்தப்போ அவர் கடலூர் ல இருந்தார். அதனால நானும் அவரும் ஒண்னா தங்க வேண்டி வந்தது...

சனி ஞாயிறு விடுமுறை..அப்போ நான் வீட்டுல அவரோட இருக்க வேண்டி வரும்..ரொம்ம கடுமையானவர் எல்லாம் கிடையாது..எதாவது கம்யூட்டர நோண்டறது, சமையல் பண்றது அப்படின்னு காமடி பண்ணிக்கிட்டு திரிவார்..

மேட்டருக்கு வர்ரேன்...

அவர பாக்க நிரய பேர் வருவாங்க..எல்லாருக்கும் டீ போடறது, ஸ்னாக்ஸ் தற்ரது எல்லாம் பண்னுவேன்..போலீஸ் காரங்க தவிர சில பார்ட்டிங்க வரும்..அழுக்கு வேட்டி, கிழிஞ்ச சட்டை, வாழ்க்கையில இவன் தலை வாரி இருக்கவே மாட்டான் அப்படின்னு சொல்லற மாதிரி ஒரு மண்டை..சத்தியமே பண்னலாம், இவன் கடந்த பத்து நாளா குளிச்சி இருக்க மாட்டான் அப்படின்னு...

இவங்க வந்தாலும் சோபாவுல உக்காருங்க, வாங்க வாங்க அப்படின்னு மரியாதை பறக்கும்...டேய்...சாருக்கு டீ போடு டா..ப்ரிட்ஜ் ல இர…

தோழி.காம் இல் கவிதா...

திரைப்படங்களில் பெண்கள் சித்தரிக்கப்படும் விதம் பற்றித் திரும்பத் திரும்ப எழுதுவது சலிப்பைத் தரும் விஷயமாகவே இருக்கிறது. ஆனால் நம் திரைப்பட இயக்குநர்கள் பெண்களை அசிங்கமாக சித்தரிப்பதை எந்த வித அலுப்பும் இல்லாமல் தொடர்ந்து தங்கள் படங்களில் செய்யும்போது அதை எதிர்த்துக் குறைந்தபட்சம் தொடர்ந்து கட்டுரைகளாவது எழுதுவது தார்மீகக் கடமையாகத் தோன்றுகிறது.
தமிழ்த் திரையுலகின் சமீபத்திய கண்டுபிடிப்பு என்ன தெரியுமா? பெண்களுக்கு அழகு இருந்தால் போதும். படிப்பு, பட்டமெல்லாம் தேவையில்லை. பரமசிவன் படத்தில் தனக்கு படிப்பு இல்லை என்று வருந்தும் கதாநாயகி லைலாவுக்கு கதாநாயகன் அஜீத் தரும் அறிவுரை இது: _"பட்டம் இல்லேன்னெல்லாம் எதுக்கு வருத்தப்படறீங்க? உங்க அழகே உங்களுக்கு போதும்._"

அஜீத்தின் அறிவுரை எதை நினைவுபடுத்துகிறது? அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பு எதற்கு என்ற அரதப் பழசான வாதத்தைத்தான். பல சிக்கல்கள், தடைகள் தாண்டி பெண்கள் இப்போதுதான் தங்கள் இருப்பை ஸ்திரப்படுத்திக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் நம் திரைப்படங்கள் பெண்களை மீண்டும் அடுப்படிக்குள் தள்ளும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றன. அ…

என்னோட பின்னூட்டம் ( பதிவ தேடிக்கிட்டு இருக்கேன்)

மிக அழுத்தமான பதிவு..எனக்கு தெரிஞ்சத சொல்லுவேன்..

மதலேன் மரியாள் ( இது தான் வீரமாமுனிவர் கொடுத்த பெயர் ) பல இடங்களில் வருகிற ஒரு பெயர்.

அவருக்கு ஒரு சகோதரியும் ஒரு சகோதரனும் உண்டு என்று காண்கிறோம்..

கிருஸ்து உயிர்த்து எழுந்ததாக சொல்லப்படும் நிகழ்ச்சியை இராயப்பர், மற்றும் அருளப்பர் ( கிருஸ்துவின் அன்புக்கு உரிய சீடர் என்று பைபிள் சொல்லும் நபர்) ஆகியவர்களுக்கு முதலில் அறிவித்தவர் மதலேன் மரியாள்..காரணம் மூண்றாம் நாள் சடங்குக்காக அதி காலையில் கல்லரையை அடைகிறார்..

இதற்க்கு முன்பு, ஒரு விருந்துக்கு முன்னதாக இயேசுவின் கால்களை விலை உயர்ந்த நறுமண தைலத்தால் கழுவி, தன் கூந்தலால் துடைக்கிறாள். இதனை இயேசுவை காட்டி கொடுத்ததாக சொல்லப்படும் யூதாஸ் ஸ்காரியேத்து கண்டிக்கிறார். யூதாஸ் சொல்லும் காரணம் அந்த பணத்தில் ஏழைகளுக்கு உதவி செய்யலாமே என்பதாகும்.ஆனால் இயேசு அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. ( ஆதாரம் : பைபிள்)

இயேசு மதலேன் மரியாளின் வீட்டில் மட்டும் தங்கியதாக குறிப்புகள் உண்டு...

மேலும் இயேசு எந்த பெண்னோடும் பேசும் வழக்கம் கொண்டவர் அல்லர்..ஒரு சம்பவம் பைபிளிள் இடம் பெறுகிறது..இயேசு ஒரு சமாரியப் பெண்ணுடன் பேசும் …

மாயவரத்தான் (ஹிந்தி எதிர்ப்பு) பதிவும் என்னோட பதிலும்..

பதிவு இங்கே...

http://mayavarathaan.blogspot.com/2006/04/2006-287.html

இந்த மாதிரி ஒரு தலைப்ப தானே இவ்வளவு நாள் எதிர் பார்த்தேன்...

இந்த திருக்குவள கிழவர ( கிழவர்தான ??) ரயில உட்டு நசுக்கி கொண்ணு இருந்தா நான் இப்படி கஷ்டபட வேண்டி இருந்து இருக்காது..

//ஒரு தலைமுறையையே ஹிந்தி படிக்க முடியல.//

இது கொப்புரான சத்தியமா உண்மை..மாயவரத்தாருக்கு எடுத்துக்காட்டு வேணுமா...என் பேர சொல்லுங்க...எவன் என்ன சப்ப கட்டு கட்டினாலும் நான் இருக்கேன்..

என்னால ஹிந்தி பேச முடியாது..என் வயசு கார தமிழர்கள் யாராலயும் பேச முடியாது..கொஞ்சம் வசதியான வீட்டு பசங்க அல்லது அய்யர் வீட்டு பசங்க அல்லது அரசு வேலைல இருந்தவங்க வீட்டு பசங்க ஹிந்தி படிச்சாங்க..ஆனா எல்லாரும் இல்ல..

படிச்சு முடிச்சு பெங்களூருக்கு வேல தேடி வந்தா, எல்லாருக்கும் ஹிந்தி தெரியுது...வேலயில சேந்து கொஞ்சம் உயர முயற்ச்சி எடுத்தா என்ன சுத்தி இருக்க எல்லாரும் ( மானேஜர் உள்பட) எல்லாரும் ஹிந்தி காரன் தான்...என்ன தான் திறமை இருந்தாலும் அவன் மொழி பேசுனாதான் மதிக்கறான்...

வெட்டி பய அனானி, பால்ராசு, அருன்மொழி இவங்களுக்கு சொல்லறது என்ன தெரியுமா ? மும்பை போங்க..தெலுங்கு தே…

ஒரு பொண்னு உங்கள மறுக்கும்போது..

10) உன்னை என் சகோதரன் போல நினைத்துக்கொண்டிருக்கிறேன். (நீ அசிங்கமாக இருக்கிறாய்)

9) நமக்குள் ஒரளவுக்கு வயசு வித்தியாசம் இருக்கிறது (நீ என் அப்பா மாதிரி இருக்கிறாய், அல்லது உனக்கு வழுக்கை விழுந்துவிட்டது)

8) உன் மேல் எனக்கு 'அதுமாதிரி ' கவர்ச்சி இல்லை (நீ மிகவும் அசிங்கமாக இருக்கிறாய்)

7) என் வாழ்க்கை தற்சமயம் மகா சிக்கலாக இருக்கிறது (எனக்கு நிறைய ஆண் நண்பர்கள் இருக்கிறார்கள்)

6) எனக்கு ஏற்கெனவே ஒரு ஆண் நண்பன் இருக்கிறான் (உன்னைப் பார்த்தால் என் வீட்டுப் பூனையும் குல்பி ஐஸ் ம் மேல்)

5) நான் வேலை செய்யும் இடத்திலேயே ஒரு ஆளை காதலிப்பதை விரும்புவதில்லை (நீ உலகத்திலேயே, அல்லது இந்த பேரண்டத்திலேயே ஒரே ஒரு ஆண்மகனாக இருந்தாலும் உன்னை காதலிக்க மாட்டேன், ஒரே கட்டிடத்தில் இருக்கிறோம் என்பதற்காக காதலித்துவிடுவேனா ?)

4) நீ காரணமில்லை, நான்தான் காரணம் ( நீதான் காரணம்)

3) இப்போதைக்கு என் வேலையில் முன்னேற உழைத்துக்கொண்டிருக்கிறேன் (மகா அலுப்படிக்கும் என் வேலையே உன்னை விட பரவாயில்லை)

2) நான் திருமனம் செய்து கொள்ளவேண்டாம் என்று முடிவு செய்திருக்கிறேன் (உன்னைப் போன்ற ஆட்கள் இருப்பதால்தான்) எல்லாவற்றிலும…

கொரங்கு லவ்வுது...

நானு ஒரு வேல விஷயமா தாய்லாந்து ல இருக்கேன்...இங்க ஓட்டல் ரூம்ல ஒரு படம் பாத்தேன்....king Kong...இந்த படத்த நான் பெங்களூர்ல இருக்கும் போதே பாக்கனும்னு நினச்சேன்...ஆனா முடியல....

இந்த படத்துல ஒரு பெரிய size குரங்கு ஒரு செவத்த புள்ள மேல ஆச பட்டுடுது..அந்த பொண்ண காப்பாத்த போயி வில்லன் க்ரூப் கிட்ட மாட்டிக்குது....

கடைசியில உயரமான பில்டிங் மேல ரொமான்டிக் லுக் உட்டுக்கினு பிராணன உடுது....

அடங் கொக்க மக்கா...கொரங்கு லவ்வு கூட பெய்லியர் ஆகிடுச்சே....எவனோ ஹாலிவுட் பாலா எடுத்திருப்பானோ ??

என்னை உருக்கும் தமிழ் பாடல்கள் !!!!

எல்லாருக்கும் பாட்டு கேக்க பிடிக்கும்....மென்மையான இசையை ரசிக்காதவங்க யாரிருக்கா ? எனக்கும் இசையை ரசிப்பது ரொம்ப விருப்பமான விஷயம் தான்...புதிய தமிழ் பாடல்கள் அவ்வளவாக என்னை கவர வில்லை என்றாலும் பழய தமிழ் பாடல்களை ரசிக்கும்போது ஏற்ப்படும் இன்பமே தனி தான்....

யாரோ சொன்னாங்களாம்....

"செவிக்குணவு இல்லதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்...." அப்படின்னு....

என்னோட சின்ன இதயம் நல்ல தமிழ் பாடல்களை கேட்கும்போது உருகும்....யார் இசை அமைத்தது, எந்த திரைப்படம், யார் பாடியது, யார் நடிதது எதுவும் எனக்கு தெரியாது...

வரிசைபடுத்தி சொல்ல முடியாது...எனக்கு என்ன ரசனை என்று எனக்கே தெரியாது...எந்த பாட்டு என்ன ராகம் - சுத்தமா தெரியாது...எனக்கு தெரிந்தது எல்லாம் ரசிக்க மட்டுமே.....

பொன்னை விரும்பும் பூமியிலே...என்னை விரும்பும் ஓர் உயிரே....என்ன அழகான வரிகள்.....

உன்னை கானாத கண்னும் கண்ணல்ல...உன்னை என்னாத நெஞ்சும் நெஞ்சல்ல......உயிரை உருக்கும் வரிகளன்ரோ.....

நேற்றுமுதல் நீ யாரோ நான் யாரோ...இன்று முதல் நீ வேறோ நான் வேறோ...காதலின் ஆரம்பத்தை வேறு யார் இதை விட அழகாக சொல்ல முடியும்.....

பாட்டு தலைவன் பாடினால் ப…

துரியோதனன் நட்பு கதை

கர்ணன் முன்பாக துரியன் மனைவி. இருவரும் சொக்கட்டான் ஆடுகிறார்கள். கர்ணனுக்கு கை ஓங்கி இருக்கிறது ஆட்டத்தில்... அந்த நேரம்... கர்ணனின் பின்னால் இருந்த பக்கமாய் துரியன் வருகிறான். அதைக் கண்ட பானுமதி எழ முயல... அதை அறியாத கர்ணன் அவள் ஆட்டத்தில் தோற்பதால் விலகுவதாய் நினைத்து... எங்கே போகிறாய் என்று அவளை இழுத்து உட்கார வைக்க முயல... அவன் கை அவள் இடையில் இருக்கும் மணி மேகலையில் பட்டு முத்து அறுந்து கூடம் எங்கும் சிதறுகிறது. அப்புறம் தான் பின்னால் வந்த நண்பனைக் கவனிக்கிறான்....


இப்போது இருவரின் நிலை பரிதாபம்... நிற்பவன் அரசன்... அடைக்கலம் தந்து வாழ்வித்தவன்... அவன் முன்னால் அவன் மனைவி மடி பிடித்து இழுத்து மேகலை அறுந்து போகுமாறு செய்தவனை மன்னிப்பானா என்று கர்ணனும், என்ன சொல்லுவானோ கணவன் என்ற அச்சத்தில் பானுமதியும் நிற்க...

துரியன் சொல்கிறான்... கர்ணா... எடுக்கவா கோர்க்கவா என்று.....

அதில் பொதிந்த அர்த்தம் தான் என்ன....


சிதறிய முத்துக்களை எடுக்க நிதானம் வேண்டும். கோபம் கொண்ட மனதில் நிதானம் வராது. எடுக்கும் போதே முத்து வழுக்கும், அதனால் கோபம் அதிகமாகும்... கோபத்தை வெகுவாக அடக்கி அதை எடுத்தப் பின்னால…

தமிழ் தொண்மையான மொழியா ? ஒர் ஆராய்ச்சி !!!

என்னுடய நன்பனொருவன் கேள்விக்கு பதில் கொடுக்கும் முகமாக இந்த பதிவு...முதல்ல எனக்கு தேவை ஆதாரம்...ஒலை சுவடி அல்லது கல்வெட்டு எதாவது...google ல தேடலாமா ? ஹி ஹி ஹி

போலி டோண்டு

சரி. தமிழ் இணைய உலகிற்க்கு வந்தாயிற்று...எத பத்தி எழுதறது ? தூய தமிழ் ல எழுதறதா இல்ல LOCAL தமிழ் ல எழுதறதா அப்படின்னு ஒரே குழப்பம். ஒரு வழியா என்ன தமிழ் தட்டச்சு செய்ய முடியுதோ அந்த தமிழ் ல எழுதறது அப்படின்னு முடிவு செய்தேன்.

சரி. இப்பொ என்ன எழுதறது ?? அப்படின்னு முடிவு செய்யனும். எதயாவது எழுதி டாக்டர் பட்டம் வாங்குர அளவுக்கு போகனும். அது தான் நம்ம லட்சியம்.

இணையத்துல இப்போ என்ன ரொம்ப பிரபலமான டாப்பிக்...???

வந்துடேன்யா !!! வந்துடேன்யா !!!

Image
நானும் ஒரு பதிவு ஆரம்பிக்க வேண்டிய கட்டயம் எதுவும் இப்போ இல்ல தான்....இருந்தாலும் நமக்கே நமக்காக ஒரு பதிவு இருந்தா நல்லா இருக்கும்னு தோனுச்சி...சொந்த வீடு மாதிரி. இந்த பதிவ படிக்கரவங்க எதாவது பிழை இருந்தா மன்னிக்க வேண்டுகிரேன்.