தேடுங்க !

Friday, February 17, 2006

செல்லக்குட்டி கங்குலி...

கிரிக்கெட் ஆட்டக்காரர்களில் எனக்கு மிகவும் பிடித்தமான ஒருவர் நமது கங்குலி...இடையில் சிறிது தொய்வு ஏற்ப்பட்டாலும், கடுமையான போராட்டத்துக்கு பிறகு மீண்டும் அணியில் இடம்பிடித்துள்ள கங்குலியிடம் எனக்கு மிகவும் பிடித்த குணம் அவரது போராட்ட குணம்...

இந்த வங்கத்து சிங்கத்திடம் சிலருக்கு / ஏன் பலருக்கு பிடிக்காத குணம் அவரது பிடிவாதம்... க்ரெக் சேப்பலை மதிக்கவில்லை, ப்ராக்டீஸுக்கு வரவில்லை, டாஸ்போட வரவில்லை என்பதெல்லாம் சிறுபிள்ளைத்தனமான காரணங்கள் ஒருவரின் கிரிக்கெட் வாழ்வை அஸ்தமனம் செய்ய...அணியின் பர்பாமென்ஸ் சரியில்லை என்றால் சரி, ஒருவரின் தனிப்பட்ட பார்மை காரணம் காட்டி அவரை அணியில் இருந்தே தூக்குவது (நிரந்தரமாக) - மிகவும் வருந்தத்தக்கது...ஏன் டெண்டுல்கர் கிட்டத்தட்ட ஒரு வருடகாலம் பார்ம் அவுட் ஆக இல்லையா ? அவரை நிரந்தரமாக நீக்கினீங்களா நீங்க...ஏன் கங்குலிக்கு மட்டும் இந்த ஓரவஞ்சனை ? அணி சிறப்பாக தானே செயல்பட்டுவந்தது..(ஆங்காங்கே / அவ்வப்போது சில தோல்விகள் இருந்தாலும்...)

இந்தியாவின் சிறப்பான டெஸ்ட் கேப்டன் (உள்நாட்டிலும் / வெளிநாட்டிலும்) என்கிற சாதனை அவ்வளவு விரைவாக அடைந்துவிடக்கூடியதா ? உலகக்கோப்பை இறுதிவரை கொண்டுசென்றவராயிற்றே ? ஆஸ்திரேலியாவிடம் மட்டும் தான் தோல்வியடைந்தோம் கடந்த உலகக்கோப்பையில் நாம்...!!!

யாருய்யா இந்த சேப்பல் ? இந்தியாவின் தொடர் வெற்றிகளை பொறுக்க முடியாமல் ஆஸ்திரேலியாவில் தயாரிக்கப்பட்ட ஒரு லகுட பாண்டி....பிரித்தாளும் சூழ்ச்சி மூலம் இந்திய அணியில் குழப்பம் விளைவித்து, அதன் மூலம் குளிர்காய நினைத்த கூட்டத்தின் பிரதிநிதி..

அரசியலை கிரிக்கெட்டில் கலந்து கலவடையாக்கிட்டானுங்க...அணி ஜெயிச்சா எகிறி எகிறி குதிக்கறதும், தோத்துட்டா வீட்டாண்ட போய் சாணியடிக்கறது, என்ன கேவலமான காட்டுமிராட்டி கூட்டம் செய்யுற வேலை ?
ஒரு சில நேரம் பர்மார்மென்ஸ் சரியில்லை என்பதை நானும் ஒத்துக்கொள்கிறேன்...ஆனால் அதுக்காக இக்னோர் செய்வதும், கன்னாபின்னாவென தூற்றுவது ஓவர்...வலியில் அதிக வலி, மறக்கப்படும்போது....மின்னல் வேகத்தில் பவுண்டரிக்கு போகும் இந்த கவர் ஷாட்டை உலகத்தில் சிறப்பாக ஆடக்கூடிய வேற ஆள காட்டுங்க !!!தலையோட பர்மார்மென்ஸ் சரியில்லைன்னதும் எவ்வளவு நக்கல் அடிச்சானுங்க இந்த கூட்டம்...இப்போ வெஸ்ட் இண்டீஸ்கிட்ட 5-0 தோல்வி, சவுத் ஆப்ரிக்காவோட 4-0 தோல்வி...இப்போ எழுதுங்களேன் புக்கு...லேய் ட்ராவிடு...கங்குலி இருந்தவரைக்கும் ஐஸ் வெச்சு ஆயில் போட்டு (நீ போடுற பயங்கர கட்டைய கூட எங்க தலைவர் பொறுத்திக்கிட்டு உன்னை ஆட்டையில வெச்சிருந்தாரு) பிறகு சேப்பல் கூட சேந்துக்கிட்டு தலைக்கே ஆப்பு வெச்சிட்டியே....இப்போ எங்கே கொண்டுபோய் வெச்சுக்குவ மூஞ்சிய...நல்லா கிளப்புறாங்கப்பா பீதிய...

கங்குலி க்ரீஸை விட்டு இரண்டு ஸ்டெப் வந்து பந்தை தாளிக்கும் லாப்டட் ஷாட்டை ரசித்ததில்லை என்று நெஞ்சை தொட்டு சொல்லுமா இன்று கங்குலிக்கு எதிராக வரிந்து கட்டும் கூட்டம் ? பவுலர்களின் நெஞ்சில் கிலியை கிளப்பும் இந்த ஷாட்டை காண கண்கோடி வேண்டுமே !!!!
அதே லாப்டட் ஷாட்...இன்றைக்கு டெண்டுல்கர் லாப்டட் ஷாட்டையே செலக்டட் அம்னீஷியாவில் மறந்ததுபோல் காட்சியளிக்கிறார்....தொண்ணூறு பந்துக்கு 50 ரன் எடுத்துவிட்டு ஆட்டையை குளோஸ் செய்துகொண்டு கிளம்புகிறார்...அவுட் சைட் ஆப் ஸ்டம்ப் பந்தை அது ப்ராக்டீஸ் மேட்சில் யாருக்கோ போடப்படுவதுபோல ஒரு லுக்கு விடுகிறார்...

யாராவது சொல்லுங்கப்பா...எங்க தலை கங்குலி ஆட்டம் ஆரம்பிக்கலாமா ?

இந்த பதிவு கடந்த வாரம் எழுதிவைத்தது...கங்குலி நீண்ட போராட்டத்துக்கு பிறகு ஆட்டத்தில் இறங்கிவிட்டார்...இருந்தாலும் ஒரு பூஸ்டராக இந்த பதிவு...


செல்லக்குட்டி வந்து பொளந்து கட்டினதோட இல்லாமே மேன் ஆப் த சீரிஸ் விருதையும் தட்டிக்கிட்டு போயிருச்சு..அதனால இந்த மீள் பதிவு.