'கள்' உண்ணாமை வேண்டும் அப்படின்னு காந்தி சொன்னதா கேள்வி..ஆனா அவர் கிட்ட கள் பத்தி யாரோ கதை விட்டு இருக்கனும்...கள் ரொம்ம போதை..உடம்புக்கு கெட்டது...அப்படின்னு எல்லாம்...ஆனா உண்மை என்னன்னா...கள், பச்ச புள்ள மாதிரி..அட ஆமாங்க...உண்மைதான்...
என் கல்லூரி இருந்த இடம் ஒரு கிராமம்..அங்க மிஞ்சி போனா கிடைக்கறது இந்த கள்ளு தான்...காலையில கள் இறக்கற இடம் போனா, நல்லா கொத்தும் கொலையுமா இருக்க பானைய இறக்கி, அதுல மப்புல மெதந்துக்கிட்டு இருக்க பெரிய சைஸ் வண்டுகளை எல்லாம் தூக்கி போட்டுட்டு, ப்ளாஸ்டிக் மக்குல அல்லது பெரிய சைசு பானையில ( நமக்கே நமக்கு) கொடுப்பாங்க...
பத்து ரூபா ஒரு மக்கு ( ஜக்குன்னும் சொல்லலாம்)..
அங்கனயே கிடைக்குற சின்ன சைஸ் மிக்சர் பாக்கெட்டுகளையும், ஒரு அரை பாக்கட்டு கோல்டு பில்டர் சிகரட்டும் வாங்கிக்கிட்டு ஓரமா ஒதுங்கிட வேண்டியது தான்...அப்படியே ரவுண்டு கட்டி உக்காந்துக்கிட்டு உள்ளார இறக்க வேண்டியது தான்..கொஞ்சம் புளிப்பா...ஜில்லுனு உள்ளார இறங்கும்...
மேட்டர் என்னான்னா...இந்த கள்ளு எல்லாம் ஒரே பானையில கொட்டப்படும்...அதுல இருந்து சில பல மக்குகளை வாங்கி நம்ம ஒரு பானையில ஊத்திக்கிட…
Comments
Is there any special reason?
Anyway all the best!!
தலைப்பு இந்த வலைப்பூவுக்கே ஆகிவிட்டதா !
சோகம் !
மற்ற வலைப்பு எதில் தொடர இருக்கிறீர்கள் ?
ஏன்???
அன்புடன்
(பரிசு பெற்ற)
லக்கிலுக்
மறுபரிசீலனை பண்ணுங்கள்
நீங்கள் ஒரு நிறுவனதை விட்டு போவதென்றால் அது சாதாரண விஷ்யம்
ஒரு அமைப்பை விட்டு விலகுவது என்றால் அது சாதாரணமான் விஷ்யமல்ல!
ஒரு குடும்பததி வீட்டுப் போவதென்றால் அது கொடுமையான விஷயம்!
நீங்கள் எதைவிட்டுப் போகின்றீர்கள் என்று உணர்ந்துதான் இந்த முடிவை எடுத்தீர்களா - சொல்லுங்கள் ரவி!
வேலைவாய்ப்புப் பதிவு தொடரும் என்று சொல்லி நழுவாதீர்கள்
இந்த மூடு விழா - நியாமானதுதானா?
அன்புடன்
SP.VR.சுப்பையா
விடாது கருப்பு தற்கொலைப்படை
சிங்கப்பூர்.
நட்சத்திர வாரத்தின் இறுதி இடுகை என்றமட்டில் மூடுவிழாவை வைத்துக்கொள்ளுங்கள், தயவு செய்து இப்பதிவை நிறுத்தாதீர்கள்.
தோன்றலின் தோன்றாமை நன்று.
இப்பிடி கலாய்ச்சவரு நம்ம மயிலபூர் மாமு வள்ளுவரு.
மறைதலின் மறைக நட்சத்திரமாய் அஃதலின்
நட்சத்திரமாய் மின்னாதலே நன்று.
இப்பிடி கலாய்க்கறது நம்ம கோலாலம்பூர் கோபாலு.
அனானிகளை சுனாமியாய் அடித்து சென்ற பொன்மன செம்மலே...
எரிகல்லாய் வீழாமல் நட்சத்திரமாய் திவ்யாவை டாவடித்த டாபரே...
உன்னுடைய முடிவை மறுபரிசீலனை செய்யவும்
எந்த முடிவு எடுத்தாலும் அது உங்களுக்கு நல்ல முடிவாக எடுத்திருப்பீர்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. எதோ பெரிய திட்டம் இருக்கும் போலத் தெரிகிறது. உங்கள் எண்ணம் போல வண்ணம் அமையட்டும். என்னுடைய வாழ்த்துகள்.
????
சும்மா தானே சொன்னீர்கள்?
என்ன ஆச்சு??? முடிவை மறுபரீசிலனை செய்ய வேண்டுகிறேன்
ஆனா, நடக்கறது நல்லா நடக்கட்டும். வேலைவாய்ப்பு செய்திகள் என்று ஒருத்தர் உபயோகமா போட்டுக்கிட்டிருக்கார். ஒருவேளே அதை நீங்க படிச்சு நல்ல வேலை கிடைச்சு இந்த உபயோகமத்த குப்பய தூக்கி கடாசிட்டீங்களோ, ரவி.
make sure that you dont come back in any other form except job postings...that's really good..ask ur 'kola saamis' also to leave....:)
நீ நிசமாலுமே நண்பன்தாங்யா,
ஆமா, அதுயார்ரு கோலாசாமிங்க. கொஞ்சம் சொல்லிபோடுங்க...
make sure that you dont come back in any other form except job postings...that's really good..ask ur 'kola saamis' also to leave....:)"
Ravi,atleast for this u should comeback to thamizmanam.
ARUN
எதனால் இந்த முடிவெடுத்தீர்கள் என தெரியவில்லை.
கண்டிப்பாக உங்களை அன்றாடம் வாசிக்கும் என்போன்றவர்களுக்கு இது இழப்புதான்.
வரும் காலங்களில் எடுத்த காரியத்தில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
-விழிப்பு
ஆனால், வேலை வாய்ப்பு வலைத்தளத்தை நிறுத்தாது தொடரவும். நல்ல செயல் அது.
நட்புக்காக
வினையூக்கி
திரு. ரவி முடிவு - தமிழ்மண வாசகர்களுக்கு இழப்பு!
இது மாதிரி பதிவை இன்னும் கானோம்..
சொன்னா கேட்டுக்க தல..
வேணாம் போவாத..
சொல்லிட்டேன்
வலைப்பதிவை இயக்குவதும் இல்லாததும் உங்கள் நேரத்தையும் விருப்பத்தையும் சார்ந்தது. இருப்பினும் தொடர்ந்தால் மகிழ்வோம்.
எழுத ஆரம்பித்தது எப்படி உங்கள் விருப்பமோ அவ்வாறே தொடர்வதும் அல்லது நிறுத்துவதும் உங்கள் விருப்பம்.
ஏன் எழுத ஆரம்பித்தீர் என நான் கேட்டதில்லை அதைப்போலவே நீங்கள் ஏன் எழுதுவதை நிறுத்துகிறீர்கள் என கேட்கப் போவதில்லை.
என்னைப் பொறுத்தவரை
"வந்துடேன்யா !!! வந்துடேன்யா !!!"
"மூடுவிழா அறிவிப்பு !!!!"
இப்படி ஏதும் இல்லாமல், விரும்பும் போது பதியலாம் விரும்பாத போது வேறு வேலையை பார்க்கலாம்.
சாரி,
என்ன கொடும செந்தழல் ரவி இது, . . . ?
உங்களுக்கு நலன் பயக்கும் என்பதில் :)
என(ங்களு)க்கு இழப்பு என்பதில் :(((
பிரச்சினைன்னா கொஞ்ச காலம் விட்டுட்டு திரும்ப வாங்க. பதிவுக்கு மூடுவிழா நடத்துவது அநியாயம். ஒப்த்துக்கவே முடியாது.
எழுத்து என்பது வரம். அனைவருக்கும் வந்துவிடுவதில்லை. அப்படிக் கிடைத்த வரத்தைத் தூக்கி எறிவது அழகல்ல.
தமிழ்மணத்தில் இருக்க இயலவில்லை என்றால் குமரன் செய்தது போல திரட்டப்படுவதிலிருந்து விலகி இருக்கலாம். பதிவையே நிறுத்துவது சரியான முடிவாக எனக்குப் படவில்லை.
வேலைவாய்ப்பு மலர் போன்ற அருமையான பணியைச் செய்து வருகிறீர்கள். அதோடு உங்களது இந்தப் பதிவையும் தொடருங்கள்.
ஆக்குவது கடினம். அழிப்பது எளிது. அழிக்காதீர்கள்.
இது ஒரு வேண்டுகோள்.
குறும்பு இல்லை 'குசும்பு'
ஆமாங்க அப்படித்தான் தமிழ்மணத்தில் குறிச்சொல் கொடுத்திருக்கிறார்!:-)))
Is there any special reason?
Anyway all the best!!
மனக்கசப்பானால் வருத்தமே!!!வேலைப் பழுவானால்; என்ன ? செய்வது!
நல்லாச் சாதியுங்கள்!!
யோகன் பாரிஸ்
சில நாட்களுக்கு பின்னர் உங்கள் பதிவில் புதிதாக என்ன போட்டுள்ளீர்கள் என்று பார்க்க வந்தேன்.அதிர்ச்சியாக உள்ளது!
வருத்தமாகவும் உள்ளது. இந்த முடிவில் உங்களுக்கேனும் பயன் இருந்தால் அதற்காக மகிழ்வேன்.
//வேலைவாய்ப்பு மலர் தொடர்ந்து இயங்கும் என்பதை தெரிவிக்க மறந்துட்டேன் //
அப்பாடா..
2. விழித்திரு = தூங்கியோ சோர்ந்தோ போய்விடாதே!
3. பசித்திரு = அடுத்தவர் பசியின்/ வலியைப் போக்க மற்றும் புரிந்துகொள்ள!
அற்புதமான தலைப்பு.. தொடரவும்... யாருக்காகவும் ...ஏன் உங்களுக்காகவும் கூட... மூடவேண்டாம். கருத்து மோதல்களைப் பெரிதாகஎடுத்துக்கொள்ள வேண்டாம். நான் கூட பார்ப்பனீயத்தை அசராமல்எதிர்ப்பவன் தான் அனால் அவர்களில் தான்எனக்கு அதிக நண்பர்கள் இருக்கிறார்கள். மனிதாபிமானம் தான் தலையாயது. சுயமரியாதை கூட அதைத்தான் சொல்கிறது! மூடுதல் யார்க்கும் (ரவிக்கும்!) எளியவாம் தொடர்தலே அரிது! தொடருங்கள்!! வாழ்த்துக்கள்!