Thursday, October 05, 2006

காந்தியை கொன்றது யார் ? ஏன் ?

காந்தி பிறந்த அன்று டிஸ்கவரியில் ஒரு டாக்குமெண்டரி ஒளிபரப்பினார்கள்..அதில் இருந்து எனக்கு தெரியவந்த விஷயம் இது...பலரை கேட்டேன், ஆனால் அவர்களுக்கு இது புதிய செய்தியாகத்தான் இருந்தது...

காந்தி உண்ணாவிரதம் இருந்தார்..அந்த சமயத்தில் காலை பிரார்த்தனையின்போது இந்து மகாசபையை சேர்ந்த நாதுராம் வினாயக கோட்சேவால் கொல்லப்பட்டார்...

அவர் ஏன் உன்ணாவிரதம் இருந்தார் என்பது நிறைய பேருக்கு தெரியாத விஷயமாக உள்ளது..

இந்திய பாக்கிஸ்தான் பிரிவினைக்கு பிறகு இந்திய - பிரிட்டன் கூட்டு கருவூலத்தில் இருந்த 550 மில்லியன் டாலர் தொகையை பாக்கிஸ்தானுக்கு சரிபங்கு அளிக்கவேண்டும்...இதுதான் அவரது உண்ணாவிரதத்தின் நோக்கம்..

உத்தரவிட்டவர் வீர் சாவர்க்கர்...

முதலில் முயற்ச்சி செய்தவர் இந்து மகாசபையை சேர்ந்த கோபால் கோட்சே ( நாதுராம் வினாயக கோட்சேயின் சகோதரர்).

அவர் துப்பாக்கியோடு சென்று நின்றிருந்த சன்னல் உயரமாக இருந்ததால் சுட முடியவில்லை. திரும்பிவிட்டார்...

பிறகு குழுவில் இருந்த வேறொருவர் முயற்ச்சி செய்து அது தோல்வியில் முடிந்தது...

அடுத்த நாள் இந்து மகாசபையை சேர்ந்த நாராயண் ஆப்தேயின் திட்டப்படி, நாதுராம் வினாயக கோட்சே, காந்தியின் முன் மண்டியிட்டு வணங்கி, துப்பாக்கியை முழக்கினார்...

மகாத்மா எனும் விடிவெள்ளி மறைந்தது.....

37 comments:

லக்கிலுக் said...

இது ஊருக்கே தெரிஞ்சது தானே?

இதைத் தான் சில கும்மிங்க தேச சேவைன்னு சொல்லிக்கிட்டு திரியறாங்க....

ரவி said...

///இது ஊருக்கே தெரிஞ்சது தானே?///

எனக்கு இந்த வாரம் தான் தெரியும்..மேலும் நான் விசாரித்தவரை நிறைய பேருக்கு தெரியல்லை..

Unknown said...

//இந்திய பாக்கிஸ்தான் பிரிவினைக்கு பிறகு இந்திய - பிரிட்டன் கூட்டு கருவூலத்தில் இருந்த 550 மில்லியன் டாலர் தொகையை பாக்கிஸ்தானுக்கு சரிபங்கு அளிக்கவேண்டும்...இதுதான் அவரது உண்ணாவிரதத்தின் நோக்கம்..//

இந்த தகவல் எனக்கு புதுசுங்க. நன்றி.

தேச பிதாவின் இந்த கருத்துக்கு எதிர்மறையானக் கருத்துக்கள் தான் நிறைய இருந்திருக்கும் அல்லவா?

Anonymous said...

நான் இல்ல.

அனுசுயா said...

Hey intha news correct than Itha pathy vilakama Freedom at midnightnkra bookla theliva eluthi irukku. Neraya vishayam therinchukklam.

dondu(#11168674346665545885) said...

மகாத்மா காந்தி கொலையை பற்றி மேலும் அறிய "Freedom at midnight by Harry Collins & Dominique Lapierre" என்னும் புத்தகம் படிக்கவும். ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சு ஆகிய இரண்டு மொழி பதிப்புகளும் மூலமாகக் கருதப்படுகின்றன. மீதி எல்லா மொழிகளிலும் மொழிபெயர்ப்புதான்.

இது எப்படி என்று நீங்கள் ஊகிக்க முடியுமா?

இது பற்றி நான் இரண்டு பதிவுகளும் போட்டுள்ளேன், பின்னூட்டங்களுடன் பார்க்கவும்: http://dondu.blogspot.com/2006/01/blog-post_15.html
http://dondu.blogspot.com/2006/01/2.html

அன்புடன்,
டோண்டு ராகவன்

ஜடாயு said...

ரவி, நீங்கள் படித்தது ரொம்ப மேலோட்டமான தகவல்கள். இன்னும் கொஞ்சம் ஆழ்ந்து படிக்கவும். மகாத்மா காந்தி கொலையின் பின்னணியில் மாலன் "ஜனகணமன" என்று ஒரு அற்புதமான குறுநாவல் எழுதியிருக்கிறார். முடிந்தால் அதைப் படிக்கவும்.

மகாத்மாவின் கொலையாளிகள் யாராயிருந்தாலும் அவர்கள் கண்டிக்கத் தக்கவர்களே. But, சாவர்க்கரையும், ஆர்.எஸ்.எஸ்.ஐயும் இந்த வழக்கை தீர விசாரித்து தண்டனையளித்த நீதிமன்றம் absolve செய்து விட்டது. இந்து மகா சபையைக் குற்றவாளியாக்கி சிறுகாலம் தடை செய்தது.. அதன்பிறகு அந்தக் கட்சி அழிந்தே போனது.

இதை வைத்து இந்துத்துவம் என்கிற மாபெரும் அரசியல், சமூக, கலாசார சக்தியையே குற்றம் சாட்டிவருவது நியாயமல்ல. மக்கள் அதை உணர்ந்திருக்கிறார்கள். சர்வோதயா இயக்கங்களின் பல தலைவர்கள் (மதிப்பிற்குரிய திருமதி சுஷீலா தேஷ்பாண்டே உட்பட) ஆர்.எஸ்.எஸ். உடன் இணைந்து பணியாற்றி, அதைப் பாராட்டியிருப்பதே அதற்குச் சான்று. ஆர்.எஸ்.எஸ்.ஐ இப்படி சித்தரித்த பல ஆட்கள்,அமைப்புக்களை (குறிப்பாக அரசு சார்ந்தவை. இதில் தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனமும் அடங்கும்) கோர்ட்டுக்கு இழுத்துச் சென்று சங்கம் வழக்கில் வென்றுள்ளது.

அருண்மொழி said...

//எனக்கு இந்த வாரம் தான் தெரியும்..மேலும் நான் விசாரித்தவரை நிறைய பேருக்கு தெரியல்லை..//

ரவி, காமெடியா நிறைய பதிவு போடுகின்றீர்கள். அதற்கென இப்படியா?

மோகன்தாஸ் கொடுக்க சொன்னது 55 கோடி ரூபாய் என்று நினைக்கின்றேன்.

வடுவூர் குமார் said...

நானும் கேள்விப்பட்டதில்லை.

Anonymous said...

வருணாஸ்ரமத்தை காந்தி ஆதரிச்சப்ப இவங்களுக்கு இனிச்சாரு...முஸ்லீமும் நம்ம சகோதரன் தானன்னு அவரு சொன்ன உடனே போட்டு தள்ளியாச்சு..

Muse (# 01429798200730556938) said...

Views from Godse are available at:

http://www.esnips.com/web/mihirtronics-personalities

வஜ்ரா said...

//
உத்தரவிட்டவர் வீர் சாவர்க்கர்...
//

இதை கோர்ட் நம்பவில்லை. நீங்கள் தான் இதை என்னெக்கு காந்தி கொல்லப் பட்டாரோ அன்றிலிருந்து சொல்லிக் கொண்டு இருக்கிறீர்கள்...
திரும்பத் திரும்பச் சொல்வதனால் ஏதாவது உண்மை என்றாகிவிடுமா...

நானும் அம்பது வருஷமா, மேற்குல சூரியன் உதிக்குது, இந்து மஹா சபை தான் அதை மாத்தி வெச்சிருச்சுன்னு சொல்றேன்... நம்புவீங்களா?

senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்) said...

//இந்திய பாக்கிஸ்தான் பிரிவினைக்கு பிறகு இந்திய - பிரிட்டன் கூட்டு கருவூலத்தில் இருந்த 550 மில்லியன் டாலர் தொகையை பாக்கிஸ்தானுக்கு சரிபங்கு அளிக்கவேண்டும்...இதுதான் அவரது உண்ணாவிரதத்தின் நோக்கம்..//

இது எந்த அளவு உண்மை?

அதாவது பலருக்கு காந்தியம் மற்றும் காந்தியின் வழிகள் பிடிக்காது ஆகவே அவரைப் பற்றி பொதுவாக கன்னா பின்னா என்று conspiracy theory உண்டு. ஆகவே இது உங்களுக்கு reliable source இருந்து கிடைத்ததா என்று தெரிந்து கொள்ள ஆசை.

ரவி said...

////தேச பிதாவின் இந்த கருத்துக்கு எதிர்மறையானக் கருத்துக்கள் தான் நிறைய இருந்திருக்கும் அல்லவா? ///

தேவ், பட்டேலே எதிர்த்ததாக சொல்கிறார் ஒரு மூத்த பதிவர்.

ரவி said...

///
கோழிய கொன்னவன் said...
நான் இல்ல.
////

நீங்க கொன்னது வெறும் கோழிதானே...

ரவி said...

///Hey intha news correct than Itha pathy vilakama Freedom at midnightnkra bookla theliva eluthi irukku. Neraya vishayam therinchukklam. ///

அனு, தகவலுக்கு நன்றி..

வஜ்ரா said...

//
ு conspiracy theory
//

குமரன், 550 மில்லியன் தொகையை கொடுக்கச் சொன்னது உண்மை. அதற்காக காந்திஅடிகள் உண்ணாவிரதம் இருந்ததும் உண்மை. இதெல்லாம் conspiracy theory அல்ல. கோட்ஸெ தான் கொன்றான், அதற்கு அவன் அண்ணன் உடந்தை.

காந்தி கொலைக்கு RSS தான் காரணம் என்பது தான் முழுமையான conspiracy theory. ஜடாயு சொல்வது போல், இப்படி எழுதிய பத்திரிக்கை, புத்தகங்களை கோர்டுக்கு இழுத்து சங்கம் வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ரவி said...

////மகாத்மாவின் கொலையாளிகள் யாராயிருந்தாலும் அவர்கள் கண்டிக்கத் தக்கவர்களே. But, சாவர்க்கரையும், ஆர்.எஸ்.எஸ்.ஐயும் இந்த வழக்கை தீர விசாரித்து தண்டனையளித்த நீதிமன்றம் absolve செய்து விட்டது.//

கோட்சேவின் சகோதரர் கோபால் கோட்சே நடுங்கும் கரங்களுடன் அளித்த வாக்குமூலம் (மிக சமீபத்தில் படமாக்கப்பட்டது), கோட்சேவும் சாவர்க்கரும் நிற்கும் குரூப் போட்டோ, ஆகியவை 1-10-2006 அன்று 'ஆஸ்திரேலியா' டிவி சேனலில் டாகுமெண்டரியாக ஒளிபரப்பட்டது...

//இந்து மகா சபையைக் குற்றவாளியாக்கி சிறுகாலம் தடை செய்தது.. அதன்பிறகு அந்தக் கட்சி அழிந்தே போனது. ////

இன்றும் டெல்லியில் இயங்குகிறது இந்த கட்சி...இதன் தலைவரின் பேட்டியும் இதே டாக்குமெண்டரியில் ஒளிபரப்பானது..

ரவி said...

///மோகன்தாஸ் கொடுக்க சொன்னது 55 கோடி ரூபாய் என்று நினைக்கின்றேன். ///

நீங்கள் இப்படி விளிக்கும்போதே தெரிகிறது...

இதை நான் டாக்குமெண்டரியில் பார்த்து தெரிந்துகொண்ட தகவல்..எவ்வளவு என்று தெரிந்தவர்கள் சொன்னால் நன்றாக இருக்கும்....

ரவி said...

///நானும் அம்பது வருஷமா, மேற்குல சூரியன் உதிக்குது, இந்து மஹா சபை தான் அதை மாத்தி வெச்சிருச்சுன்னு சொல்றேன்... நம்புவீங்களா? ///

நம்ப மாட்டேன்....

ஆனால் கோட்சேயும், வீர் சாவர்கரும் நிற்கும் குரூப் போட்டோ மாதிரி / அல்லது / கோபால் கோட்சே வாக்குமூலத்தில் சொன்னமாதிரி ( நாங்க ஏழு பேர் சேர்ந்து கூட்டம் போட்டோம், அதுக்கு விமானத்தில் வந்து கலந்துகொண்டவர்கள் ஆப்தேயும் / கோட்சேவும், வீர் சாவர்க்கர் பணம் கொடுத்தார் ) இந்த மாதிரி செய்திகள் கிடைத்தால் நம்பினாலும் நம்புவேன்..

அருண்மொழி said...

//இதை கோர்ட் நம்பவில்லை. நீங்கள் தான் இதை என்னெக்கு காந்தி கொல்லப் பட்டாரோ அன்றிலிருந்து சொல்லிக் கொண்டு இருக்கிறீர்கள்...
திரும்பத் திரும்பச் சொல்வதனால் ஏதாவது உண்மை என்றாகிவிடுமா...//

Savarkar was arrested on suspicion of having inspired and planned Gandhi's murder, and accordingly indicted. Witnesses during the trial testified that Savarkar had blessed Nathuram Godse before he shot Gandhi, with the words "Yashasvi howun yaa" (Marathi: Come back with success). Both Godse and Savarkar belonged to the Chitpawan Brahmin community. Even before the trial, Sardar Vallabhbhai Patel had, in a letter to Jawaharlal Nehru, clearly stated that Savarkar had masterminded the murder. In the court, approvers had testified to the intimate relationship between Savarkar and the Godse brothers, but there was no corroborative evidence to nail down Savarkar's assertion that he had had merely formal relationships with them. . Godse claimed full responsibility for planning and carrying out the attack, in absence of an independent corroboration of the prosecution witness Digambar Ramchandra Badge's evidence implicating Savarkar directly, the court exonerated him citing insufficient evidence.[1]

Lingering doubts about this version of events led the government of India to appoint the Kapur Commission in the mid-1960s. The Kapur commission was fortunate in having access to testimonies of Savarkar's aides ( including his bodyguard, secretary and so on) and important Hindu Mahasabha functionaries who were not available to the earlier court. The weight of this evidence led Justice Kapur to reverse the conclusions of the court trial and state unambiguously that "all these facts taken together were destructive of any theory other than the conspiracy to murder by Savarkar and his group".

நன்றி wikipedia

ரவி said...

//
குமரன், 550 மில்லியன் தொகையை கொடுக்கச் சொன்னது உண்மை. அதற்காக காந்திஅடிகள் உண்ணாவிரதம் இருந்ததும் உண்மை. இதெல்லாம் conspiracy theory அல்ல. கோட்ஸெ தான் கொன்றான், அதற்கு அவன் அண்ணன் உடந்தை.
///

இவ்ளோதான் நான் சொல்லவந்தது...

ரவி said...

///நன்றி wikipedia ///

ஏங்க, விக்கிபீடியாவில் இருப்பது நாமே எழுதுவதுங்கோ...

நான் நாளைக்கே, காந்தியை சுட்டது கோட்சே இல்லை, கோட்சே முகமூடி அணிந்த வீர் சாவர்க்கர் தான் என்று விக்கி பீடியா திரட்டி சுட்டி தரமுடியும்..

ரவி said...

///
அதாவது பலருக்கு காந்தியம் மற்றும் காந்தியின் வழிகள் பிடிக்காது ஆகவே அவரைப் பற்றி பொதுவாக கன்னா பின்னா என்று conspiracy theory உண்டு. ஆகவே இது உங்களுக்கு reliable source இருந்து கிடைத்ததா என்று தெரிந்து கொள்ள ஆசை.
///

பெங்களூரில் ஆஸ்திரேலியா ஒன் என்று ஒரு சேனல் வருகிறது இல்லையா, அதில் வந்த ஒரு விரிவான டாக்குமெண்டரி...

ரவி said...

அருண், கோர்ட்டில் இருப்பது எல்லாம் புனித பிம்பங்கள் அல்ல.

ஜடாயு said...

// கோட்சேவும் சாவர்க்கரும் நிற்கும் குரூப் போட்டோ, ஆகியவை 1-10-2006 அன்று 'ஆஸ்திரேலியா' டிவி சேனலில் டாகுமெண்டரியாக ஒளிபரப்பட்டது...//

கோட்சேக்கும், சாவர்க்கருக்கும் தொடர்பு இருந்தது என்பதை அவர்கள் இருவருமே மறுக்கவில்லை. இதை மட்டும் வைத்தே நாம் சாவர்க்கரைக் குற்றவாளியாக்கி விட முடியாது அல்லவா?

கோட்சே காங்கிரசிலும் இருந்திருக்கிறான், இந்து மகாசபையிலும் இருந்திருக்கிறான். காந்தியைப் பெரிய தலைவர் என்று எண்ணிப் போற்றியும் இருக்கிறான். அவரை ஏன் கொன்றேன் என்று அளித்த வாக்குமூலத்தில் இதை எல்லாமும் சொல்லியிருக்கிறான். இந்தச் சதியில் சம்பந்தப் பட்டவர்கள் பெயர்களையும் கூறியிருக்கிறான்.

வேண்டுமென்றே சாவர்க்கரை விடுவிப்பதற்காக அவர் பெயரை அவன் சொல்லாமல் விட்டிருப்பான் என்ற தியரிக்கு ஆதாரம் எதுவும் இல்லை.

// இன்றும் டெல்லியில் இயங்குகிறது இந்த கட்சி...இதன் தலைவரின் பேட்டியும் இதே டாக்குமெண்டரியில் ஒளிபரப்பானது..//

"அனேகமாக அழிந்தே போனது" என்று சொல்ல வந்தேன். பெயரளவில் இருக்கலாம். விளக்கியதற்கு நன்றி.

Anonymous said...

//நான் நாளைக்கே, காந்தியை சுட்டது கோட்சே இல்லை, கோட்சே முகமூடி அணிந்த வீர் சாவர்க்கர் தான் என்று விக்கி பீடியா திரட்டி சுட்டி தரமுடியும்.. //

சவால் விடுகிறேன். உங்களால் முடியாது.

உலகம் முழுவதும் உள்ள விக்கிபீடியர்கள் எந்நேரமும் அவதானித்தபடியே இருக்கிறார்கள். நீங்கள் தகவலை பிழையாக மாற்றினால் அது உடனேயே சரிசெய்யப்படும்.

Anonymous said...

//நானும் அம்பது வருஷமா, மேற்குல சூரியன் உதிக்குது //
//காந்தி கொலைக்கு RSS தான் காரணம் என்பது தான் முழுமையான conspiracy theory.//

ம.ம அப்டின்னு ஒரு RSS காவடி தூக்கி போர்க்களம், எதிரிகள் ரேஞ்சுக்கு ஏதோ தியாகி போல கோட்சே என்கிற RSS கொடியவனப் பத்தி சிலாகித்திருந்தாரே,

கேக்குறவன் கேனயனா இருந்தா...????

வஜ்ரா said...

அன்னானி நிர்:. X,

//
.ம அப்டின்னு ஒரு RSS காவடி தூக்கி போர்க்களம், எதிரிகள் ரேஞ்சுக்கு ஏதோ தியாகி போல கோட்சே என்கிற RSS கொடியவனப் பத்தி சிலாகித்திருந்தாரே,

கேக்குறவன் கேனயனா இருந்தா...????
//

இங்கே கோட்சேக்கு கொடி தூக்கவில்லை அன்பரே, கோட்ஸே கொடியவனே. அதில் எந்த மாற்றமும் இல்லை. மலர் மன்னனும் அதைத்தான் சொன்னார்.

காந்தியின் கருத்துக்கு எதிர் கருத்து உள்ளவர்கள் என்றுமே இருந்திருக்கிறார்கள். இன்றும் இருக்கிறார்கள். தைரியமாக எதிர்கொள்ள திராணியில்லாமல் கோட்ஸே காந்தியைக் கொன்றான்.

அதனாலேயே, காந்தி பாகிஸ்தானுக்கு 55 கோடி கொடுக்கச் சொன்னது நல்ல காரியமாகிவிடாது என்பதையும் நீர் உணரவேண்டும். வல்லபாய் படேல் இதற்கு பலத்த எதிர்ப்பு தெரிவித்தவர்களில் ஒருவர், மேலும் அந்த வேளையில் பாக் கஷ்மீரில் தன் ஆக்கிரமிப்பு துவக்கிய காலம் என்பதையும் மறக்கக் கூடாது.

கோட்ஸே, இந்து மஹாசபை முதல் காங்கிரஸ் கட்சி உருப்பினரும் ஆவான். ஆகயால் காங்கிரஸ் கட்சியும் உடந்தை என்று சொல்ல முடியுமா?

ரியோ said...
This comment has been removed by a blog administrator.
ரியோ said...

இந்திய பாகிஸ்தான் பிரிவினையின்போது அரசிடம் இருந்த கஜானா பணம் 400கோடி ரூபாய். அதில் பாகிஸ்தானிற்கு கொடுக்க ஒப்புக்கொண்டது 75கோடி ரூபாய். அதில் 20கோடி ரூபாயை உட்னடியாக கொடுத்து விட்டனர். மீதி 55கோடியை கொடுக்காமல் இழுத்தடித்தார் நேரு. ஏனென்றால் அப்போது காஷ்மீர் யுத்தம் தொடங்கியிருந்தது. அப்போது அந்த பணத்தை கொடுத்தால் யுத்தத்திற்கு பயன்படுத்துவார்கள் என்று நேரு எண்ணினார். ஆனால் உலக நாடுகளின் நெருக்குதலினாலும், காந்தி 1947 ஜனவர் 15ல் மேற்கொண்ட உண்ணாவிரதத்தினாலும் அந்த பணம் பாகிஸ்தானிடமே கொடுக்கப்பட்டது.

இவை ஸ்டோரிஆப் பாகிஸ்தான் என்ற பாகிஸ்தானிய இணையத்தில் சொல்லப்பட்டவை. இதை படித்துப்பாருங்கள். பல பிரச்சனைகளின் அவர்களின் நிலை பற்றி அறியலாம்.

www.storyofpakistan.com

Anonymous said...

அய்யோ நானில்லை நானில்லை

சந்திரமௌளீஸ்வரன் தமிழ்ப் பக்கம் said...

கிழக்கு பதிப்பக வெளியீடான திரு. மாலன் அவர்களின் படைப்பான ஜனகணமன நாவலுக்கு எனது விமர்சனத்தினை எனது வலைப்பூவில் பதிந்துள்ளேன்

அதன் சுட்டி

http://mowlee.blogspot.com/2009/02/blog-post_14.html

மேலும் என்னால் நிர்வகிக்கப்படும் தமிழ் வாசகன் என்ற கூகிள் க்ரூப்பிலும் இந்த விமர்சனத்தினை பிடிஎஃப் கோப்பாக இணைத்துள்ளேன்

இந்த கூகிள் க்ருப் தமிழ் மற்றும் ஆங்கில நூல் அறிமுகத்திற்கெனவே உள்ளதென்ற தகவலை தங்களின் கனிவு நிறைந்த கவனத்திற்கு கொண்டு வர விழைகிறேன்

அதன் சுட்டி

http://groups.google.co.in/group/tamilvasagan/browse_thread/thread/5f38af4150eabccf#

Adirai Iqbal said...

கோட்சே காந்தியை கொன்றது எதோ பாக்கிஸ்தானுக்கு பணம் கொடுக்கக்கூடாது என்பதற்காக அல்ல . அது முஸ்லிம்களுக்கு எதிரான மிகப்பெரும் சதி . அவன் தன கையில் இஸ்மாயில் என்று பசைகுத்திகொடும் கத்னா செய்துக்கொண்டும் காந்திய கொன்றது எதற்க்காக . அதன் மூலம் மிகப்பெரும் கலவரத்தை ஏற்படுத்தி முஸ்லிம்களை அழிக்கத்தான் . இந்த முறையைத்தான் ஆர் எஸ் எஸ் இன் இந்தரேஷ்குமார் அசீமானந்தா பிரங்க்ன்யா தாக்கூர் போன்றோர் பின்பற்றி வருகிறார்கள் . அது மட்டுமல்ல kotcheyukkum ஆர் எஸ் கோட்சுவுக்கும் சம்பந்தமே இல்லை என்று சொல்வது முட்டாள்தனமானது . கோட்சே வின் உறவினர்களால் நடத்தப்படும் அபினவ் பாரத் இயக்கம் ஆர் எஸ் எஸ்ஸின் ஒரு பிரிவாகத்தான் செயல்படுகிறது . இது கோட்சேயின் வழிமுறையான கொலையை செய்துவிட்டு அதை முஸ்லிகளின் மீது போடும் அதே பாணியைத்தான் பின்பற்றுகின்றன . இவர்கள்தான் மாளிகான் , அஜ்மீர் சம்யுக்தா குண்டுவெடிப்புகளின் சொந்தகாரர்கள்

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால்

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால் டயபட்டீஸ் / நீரிழிவு / சர்க்கரை நோயை விரட்ட நியான்டர் செல்வனால் ஆரம்பிக்கப்பட்ட இந்த குழுமத்திற்கு ( https://www....