Thursday, September 28, 2006

பதிவில் படத்தை இணைக்க அதிரடி வழி

நான் வலைபதிவில் அடிக்கடி காணும் வசனம், படங்களை வலையேற்ற முடியவில்லை என்பதுதான்....

பிலாகரிலேயே படத்தை வலையேற்றும் "ADD Image" என்ற பொத்தான் ஏதோ பெயருக்குத்தான் இருக்கிறது என்றும், படத்தை வலையேற்ற உதவுவதில்லை என்றும் ஒரு நன்பர் குறைப்பட்டுக்கொண்டார்..

பிக்காசாவுடன் கூட்டணி சேர்ந்து பிலாகர் படத்தை ஏற்றும் ஒரு மென்பொருளை வழங்குகிறது, ஆனால் அது பயன்படுத்த எளிமையாக இல்லை..

படங்களை வலையேற்ற முயற்ச்சி செய்துகொண்டிருந்த போது ஒரு சிறிய யோசனை, நமது குறுக்கு புத்தி வேலை செய்தது..

அட...சூப்பர்...பிரச்சினை செய்யும் பிலாகரை இப்படி கூட ஏமாற்றலாமா என்று தோன்றியது..

அந்த வழிமுறையை படங்களோடு (!?) சொல்லிக்கொடுக்கிறேன்..

முதலில் உங்கள் வலையேற்றவேண்டிய படத்தை டெஸ்க்டாப்பில் வைத்துக்கொள்ளுங்கள்...கீழே பாருங்கள், எனது விக்கிபீடியா பற்றிய பதிவில் இடம் பெற்ற விக்கி என்ற படம் உள்ளது..




















இப்போது உங்கள் பதிவில் உள்ள உருவாக்கு (Create) என்ற பொத்தானை அழுத்தி, புதிய பதிவிற்க்கான சன்னல் வந்தவுடன் அதில் உங்கள் பதிவை உள்ளீடு செய்யுங்கள் ( டைப்படிங்கப்பா)..

பிறகு எங்கே உங்களுக்கு படம் வரவேண்டுமோ அங்கே கர்சர் பூனைக்குட்டியை வைத்து (Mouse Pointer) "Add Image" என்ற பட்டனை கிளிக் செய்யுங்க..

பிறகு இமேஜை இணைக்கும் சன்னல் வரும். அதில் உங்களுக்கு தேவையான லேயவுட், படம் இடமா வலமா, பெரியதா சிறியதா என்று தேர்வு செய்து, இமேஜை செலக்ட் செய்து அப்லோட் இமேஜ் என்ற பொத்தானை அழுத்தவும்.

அவ்வளவுதான்.

இது முடிந்தபின், "Your Image has been Added" என்ற சன்னல் வரும்.."

"Close" என்றால் மூடிக்கொள்ளும் இந்த சன்னல்...

பலருக்கும் பிரச்சினை என்ன என்றால், இதன் பிறகு நமது "Compose Window" வில் பார்த்தால் ஒரு மண்ணும் இருக்காது...

வேறென்ன செய்ய, படங்களை வலையேற்றுவதில் பிரச்சினை என்று ஒரு வரியை பதிவில் சேர்த்துவிட்டு அப்பீட் ஆகிவிடுவீர்...

அப்படியே நில்லுங்க...நீங்க உங்க படங்களை வலையேற்றலாம்....அட ஏற்க்கனவே ஏற்றிவிட்டீர்கள்...எப்படி என்று கேட்கிறீர்களா ?

நீங்கள் "Upload Image" என்ற பொத்தானை அழுத்தியதும் உங்கள் படம் சர்வருக்கு சென்றுவிடுகிறது...

பிறகு "Close Window" என்ற பொத்தானை அழுத்தியதும் ஒரு HTML லிங்க் ( வலையேற்றப்பட்ட உங்கள் படத்தின் லிங்க்) உங்கள் கம்போஸ் விண்டோவில் வந்து விழ வேண்டும்..

ஆனால் இந்த கடைசி ஸ்டெப் மட்டுமே பலருக்கும் பிரச்சினை ஆகிறது.

உங்கள் படம் ஏற்க்கனவே சர்வருக்கு சென்று விட்டதால் நீங்களே இந்த கடைசி ஸ்டெப்பை செய்தால் தீர்ந்தது பிரச்சினை...

<ஏ ஹச் ரெப்="http://photos1.blogger.com/blogger/3075/2751/1600/உங்கள் படம் பெயர்.jpg">

எ ஹச் ரெப் = இதற்க்கு பதில் a href. முதல்வரியில்
எ = இதற்க்கு பதில் a

இதை உங்கள் பதிவில் இப்போது போடுங்கள்..பிறகு உங்கள் படத்தின் பெயரை சரியாக அந்த மூன்று வரிகளில் ( மொத்தம் இரண்டு இடங்களில் வருகிறது) கொடுத்து, பதிவை பிரிவியூ பாருங்கள்..

பப்ளிஷ் செய்யுங்கள்...

இதே முறையில் எல்லா படங்களையும் ஏற்றுங்கள்...

அம்புட்டுதேன் மக்களே....

விக்கிபீடியாவில் வாக்கெடுப்பு....

கலைக்களஞ்சியம் விக்கிபீடியாவில், தமிழ் மொழிக்கான இரண்டு தளங்களை உருவாக்குவதற்க்கான வாக்கெடுப்பு நடைபெறுகிறது...

உங்கள் வாக்கையும் பதிவு செய்து விடுங்களேன்...விக்கிபீடியா பற்றி அறியாதவர்கள் இருக்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன்..

இது ஒரு திறந்த மூலம் உடைய தகவல் களஞ்சியம். நீங்களே வரலாறை பதிவு செய்யலாம். நீங்களே திருத்தலாம். ஏற்க்கனவே பதியப்பட்டவைகளில் எழுத்துப்பிழை கண்டால் அதை கூட திருத்தலாம். இதனால் தான், இது உலகின் மிகப்பெரிய கலைக்களஞ்ச்சியமாக ( அட என்சைக்ளோபீடியாங்க) உருவாகி இருக்கிறது...மொத்தம் 137 மொழிகளில் ஆலமரம் போல் கிளைவிரித்து இணையத்தில் இதுபோல் ஒரு சேவையை யாரும் தரமுடியாது என்று சொல்வது போல பரந்துபட்ட தகவல் களஞ்சியமாக விளங்கிவருகிறது....

விக்கிபீடியா இப்போது தமிழ் செய்தித்தளம் (தமிழ் நியூஸ்) மற்றும் தமிழ் மூலம் (சோர்ஸ்), ஆகிய இணை சிறு தளங்களை தொடங்க வாக்கெடுப்பை நடத்துகிறது.

அவர்கள் தளத்தில் கீழ்க்கண்டவாறு கண்டுள்ளது...

விக்கிமீடியா திட்டங்களான wikisource மற்றும் wikinews ஆகியவற்றை தமிழில் தொடங்குவதற்கான வாக்கெடுப்புகள் நடைபெற்று வருகின்றன. ஆர்வமுடைய பயனர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்புகள் வழியாக சென்று வாக்களிப்பது, இப்பணிகளை விரைந்து செயல்படுத்துவதற்கு மிகவும் அவசியமாகும். கணிசமான பயனர்களின் வாக்குகள் கிட்டும் வரை இத்தமிழ்ப் பதிப்புகளைத் தொடங்க இயலாது என்பதால், ஒவ்வொரு வாக்கும் பொன்னானதாகும் !

தமிழ் விக்கி மூலம் தளத்தை தொடங்குவதற்கான வாக்கெடுப்பு இங்கு நடக்கிறது.
தமிழ் விக்கி செய்திகள் தளத்தை தொடங்குவதற்கான வாக்கெடுப்பு இங்கு நடைபெறுகிறது.

மேற்கண்ட தளங்களில் பயனர் கணக்குகள் உருவாக்கும் போது, உங்கள் தமிழ் விக்கிபீடியா பயனர் பக்கங்களுக்கான இணைப்புகளைத் தாருங்கள்.

உங்கள் வாக்கை பதிவு செய்ய நீங்கள் செய்யவேண்டியது மிக எளிது..



இங்கே சென்று நீங்கள் பக்க மூலத்தை திறந்து, உங்கள் பெயரையும் இணைத்துவிடுதல் மட்டுமே நீங்கள் செய்யவேண்டியது...

தமிழுக்கு தோள்கொடுங்கள்....இந்த பதிவு உங்கள் கண்ணில் பட்டால் ஒரு வாக்களியுங்கள்..

Thursday, September 21, 2006

நெசப்பாக்கம் குவாட்டர் கோயிந்தனின் கீதை

அய்ய எதுக்கு அயுவுற நீனு...
இன்னாத்த நீ உட்டுட்ட ?
எத நீ கொனாந்த, அத நீ உடறதுக்கு ?
இன்னாத்த நீ கிரியேட் ஆக்கி உட்டுட்ட அது வீணாபோவுறதுக்கு பா..
எத்த நீ எட்த்துக்கினியோ அத்த இங்க இருந்துதான் தூக்கின்போன..
இன்னாத்தா நீ குட்த்தியோ அது இங்கதானபா குடுத்த..
இன்னிக்கு உண்ணாண்ட கீறத நாளைக்கி வேற ஒரத்தன் கொத்திக்கினி போவான்..
பொறவு அத்தயே இன்னொருத்தன் கொத்திக்கினு போவான்.....

Wednesday, September 20, 2006

மராத்தான் புகைப்படங்கள்....

மராத்தான் போட்டியில் தோழி சுட்ட படங்களில் நம்மை கவர்ந்தது இவை...



ஒரு குட்டி ரன்னர்..



ஓடுவதற்க்கு கால் தேவையா என்று கேட்பதுபோல, தன்னம்பிக்கையோடு வந்த இவர், வெற்றிக்கு ஊனம் ஒரு தடையில்லை என்று நிரூபித்தார்...நெஞ்சை தொட்டது..



இவரையும் பாருங்கள்...இவரது கையை குலுக்க சென்றேன்...அந்த கையில் தான் எத்தனை உறுதி...கையில் மட்டுமா ? மனதில் கூடத்தான்..



நாங்களும் ஓடி நிறைவு செய்தோம் என்பதை நிரூபிக்க இதைவிட்டா வேறு வழி ?



நமது நன்பர் குருஸ் என்கிற ராமநாதன் ஓடிக்கடக்கும் காட்சி...



இந்த படம் எடுக்கும் நேரம் பார்த்தா கேமரா நம் கையில் வரவேண்டும்...ஒரே வயித்தெரிச்சல் போங்க..




இந்த படங்களை எடுத்த தோழி இவர்தான்..

இந்த படங்களை வலையேற்றும்போது, படங்களை வலையேற்ற முடியாமல் தவிப்பவர்களுக்கு ஒரு தீர்வு கிடைத்துவிட்டது...

விரைவில் தனிப்பதிவாக இடுகிறேன்..

Tuesday, September 19, 2006

பெங்களூர் மராத்தான்...

பெங்களூரில் மராத்தான் ரேஸ் வைச்சாங்க..நானும் கலந்துக்கிட்டேன்...(கலந்துக்கிட்டா தான் எல்.ஜி வழங்கும் டீ.சர்ட் கிடைக்கும் அப்படீன்னு சொன்னாங்க..:))) பொறவு எல்லாரும் ஓடி முடிச்சு வரும்போது அப்படியே ஜாயிண்ட் ஆகி வெற்றிக்கோட்டை தொட்டேன்..எல்லாரும் கைத்தட்னாங்கப்பா...வெற்றிக்கோட்டை கடக்கும் புகைப்படம் இப்போது இல்லை. அதனால் சில படங்களை மட்டும் வலையேற்றுகிறேன்..



சமூகத்தில் ஊழலை ஒழிக்கிறேன் அப்படீன்னு கிளம்பி இருக்கிற லோக் பரித்ரான் கட்சி காரவுகளும் வந்து கலந்துக்கிட்டாங்க..

நானும் அவங்க கொடிய வாங்கி கொஞ்ச நேரம் கோஷம் போட்டேன்..(கன்னடத்துல :)) - சும்மா ஒரு ஜாலி தான்...

அப்புறம் ஒரே பரபரப்பு...நம்ம கீர்த்தி ரெட்டி - அதான் தேவதை படத்துல நடிச்சாங்களே, அவங்க ஆஜர். அப்படியே பக்கத்துல போயி ஒரு ஆட்டோ கிராப்பை வாங்கிக்கிட்டு...



அடுத்ததா ஒரு குரூப் போட்டோவுக்கு போஸ் கொடுத்துவிட்டு...இந்த போட்டோவில் என் பதிவுக்கு அடிக்க வந்து பிறகு கானாம போகும் சுமாவும் இருக்கிறார்...எங்கே கண்டுபுடிங்க..



மீதியை அப்புறம் சொல்றேனுங்க..

பிலாகர் பிரச்சினையால் படங்களை ஏற்ற முடியவில்லை...விரைவில் வலையேற்றம் செய்கிறேன்.

Monday, September 18, 2006

சிஸ்டம் அட்மின் யாராவது இருக்காங்களா ?

நமக்கு தெரிந்த பிலாகர் ஒருவரின் நிறுவனத்தில் சிஸ்டம் அட்மின் ஒருத்தர் தேவையாம்..ஆனால் XML , PL SQL தெரியனுமாம்..

அதாவது கோடிங்குக்கு மாற விரும்பும் சிஸ்டம் அட்மின் யாராவது இருந்தா சொல்லுங்க..

எனக்கு தெரிஞ்சு நல்ல சம்பளம் தருவாங்க என்று நினைக்கிறேன்..

என் இமெயில் முகவரிக்கு தொடர்பு கொண்டீர்கள் என்றீர்கள் என்றால் மேலதிக தகவல் தருகிறேன்..

ஆன்லைன் ஐ.ஐ.டி....

ஆன்லைன் ஐ.ஐ.டி....

அட ஆமாங்க..ஐஐடி தன்னுடைய தரமான கல்வியை ஆன்லைன் மூலம் வழங்க தீர்மானித்து, அரசாங்க அனுமதியோடு ஒரு இணைய முகவரியில் செயல்படுகிறது...

ஐஐடியின் பல ஆண்டு அனுபவம் வாய்ந்த ஆசிறியர்கள் தரமாக தயாரித்தளித்த பாடத்திட்டங்களை தன்னகத்தே கொண்டுள்ளது இந்த இணைய முகவரி..

முதலில் ரெஜிஸ்டர் செய்ய வேண்டும்..பிறகு நீங்கள் விரும்பும் பாடத்திட்டங்களை தரவிறக்கம் செய்வதோ அல்லது இணையத்தில் படிக்கவோ செய்யலாம்..

இப்போது ட்ரையல் பீரியடாக இருக்கிறது, ஆனாலும் இப்போதே ரெஜிஸ்டர் செய்தால் உபயோகமாக இருக்கும்..

முதலில் http://nptel.iitm.ac.in என்ற இணைய முகவரிக்கு செல்லுங்கள்..

பாடங்கள் ( courses) என்ற இடத்தில் அழுத்தவும்..

ஒரு புதிய பயனாளராக உங்களை பதிவு செய்து கொள்ளவும்...

இப்போது நீங்கள் அனைத்து பாடத்திட்டங்களையும் / பாடங்களையும் பார்க்கலாம்..

( இங்கே அனானி / அதர் ஆப்சன் கிடையாது என்று தெரிவித்துக்கொள்கிறேன்..)

Friday, September 08, 2006

தேவையா பாரதி கண்ட புதுமைப்பெண் நமக்கு?

சமீபத்தில் லக்கியின் பதிவில் அவர் பாரதி கண்ட புதுமைப்பெண் என்று யாரையோ புகழ்வதை பார்க்க நேர்ந்தது..

உண்மையில் பாரதி கண்ட புதுமைப்பெண் யார் ? அவருக்கு என்ன குணநலன்கள் இருக்கும் என்ற கேள்வியும் எழுந்தது..

காதுவரை வாய் இருந்தால் பாரதி கண்ட புதுமைப்பெண்ணா ? அடுத்தவரை தரம் தாழ்த்திப்பேச கற்றுக்கொண்டால் பாரதி கண்ட புதுமைப்பெண்ணா ? சுடுநீர் மட்டும் சமைக்க தெரிந்தவர் பாரதி கண்ட புதுமைப்பெண்ணா ? கண்டவனுடன் கண்ட நேரத்தில் ஊர் சுற்றுபவள் பாரதி கண்ட புதுமைப்பெண்ணா ? கதை / கவிதை எழுதத்தெரிந்தால் புதுமைப்பெண்ணா ? பீன்ஸுக்கும் கொத்தவரங்காய்க்கும் வித்தியாசம் தெரியாதவள் பாரதி கண்ட புதுமைப்பெண்ணா ? அமெரிக்கா சென்று வந்தவள் புதுமைப்பெண்ணா ? ஐ.டி கம்பெனியில் வேலை செய்தால் புதுமைப்பெண்ணா ?

எனக்கு தெரிந்து புதுமைப்பெண்களை திருமணம் செய்த ஆண்கள் செருப்படி தான் வாங்கி இருக்கிறார்கள்....

இந்த நேரத்தில் நமது தோழியின் குண நலன்களை நினைவில் இருந்து அகற்ற முடியவில்லை..

இவர் ஒரு மென்பொருள் நிறுவனத்தில் பணி புரிபவர்..

இவர் குணநலன்களை இப்படி பட்டியல் போட முடியும்.

1. இவருக்கு சமையல் என்றால் என்பதே தெரியாது. டீ போட வேண்டுமென்றால் காப்பித்தூள் தேவை என்று எண்ணுபவர்.

2. விடுமுறை நாட்களில் 12 மணிக்கு எழுந்து உண்டு மீண்டும் உறங்குவார்.

3. டி.வி பார்க்க ஆரம்பித்தால் நிமிடத்துக்கு 10 சேனல் மாற்றுவார்

4. இந்தி சேனல் மட்டும்தான் பார்ப்பார். இந்தி தெரியாதவர்கள் டரியல் ஆகவேண்டும்.

5. இவரது அலுவலக தொலைபேசி 7 மணி நேரம் பிஸியாக இருக்கும். ( 8 மணி நேர வேலையில் 1 மணி நேர உணவு விடுமுறை ) - இத்தனைக்கும் செல்பேசி கிடையாது இவரிடம்..

இவர் புதுமைப்பெண்ணா ? இவரை மணப்பவர் எப்படி டரியல் ஆகவேண்டும் ?

தேவையா இந்த புதுமைப்பெண் நமக்கு ?

ஆணாதிக்கம் / ஆணாதிக்கம் என்று வெளியே புலம்பும் பெண்கள் - தாங்கள் முதலில் தனிமனித ஒழுங்குகளை பின்பற்றுகிறோமா என்று சிந்தித்து பார்க்க வேண்டும். பிறகு முதலை கண்ணீர் வடிக்கலாம்..

நான் அனைத்து பெண்களையும் சொல்லவில்லை...ஒரு சிலரைத்தான் சாடுகிறேன்....இந்த சூடுபட்ட பூணைகள் தங்களை திருத்திக்கொள்ளவில்லை என்றால் - திருத்தப்படுவார்கள்...

Wednesday, September 06, 2006

கேப்ஜெமினியில் பலதரப்பட்ட பணிவாய்ப்புகள்

கீழ்க்கண்ட ஏதாவது ஒன்றில் தகுதி இருந்தால் விண்ணப்பிக்கலாம்...


Java J2ee ( JSP / EJB / Servlets / Struts & Unix )
Java with Cold fusion / Webmethods / Oblix Netpoint / LDAP
.NET ( VB.Net / ASP.Net with SQL )
VB Oracle Crystal Reports
Siebel CRM ( Siebel 7.0.5.2 to 7.5.3.8, VB, Perl, Oracle, PLSQL,HTML )
Oracle PL/SQL ( Forms & Reports )
Lotus Notes Administrators
Configuration Managers – Clear Case, Dimension Tools PVCS.
Oracle Database Administrators
MQ Series Administrators
Tivoli Storage Managers
Citrix Administrators
Sun Solaris Administrators
DB2 Database Administrators
Unix Shell scripting
C, C++ with Unix Developers
SQA ( Software Quality Advisors )
Mainframe – Production Schedulers
Data warehousing Tools – Teradata, Business Objects
Lotus Notes Domino Developers ( R5/ R6 )


குறைந்தது மூன்றாண்டுகள் அனுபவம் விரும்பத்தக்கது..

எங்கே அனுப்பவேண்டும் : jayasundar.krishnamoorthy@capgemini.com ( நம்ம நன்பர் தானுங்கோவ்வ்வ்வ்வ்)

சம்பளம் : இன்னைய தேதியில சிறந்த சம்பளம் தரும் நிறுவனங்களில் இது ஒன்றுங்க...

முதலிலேயே ஒரு பதிவில் சொன்ன மாதிரி - அருமையான கேண்டீன்...சூப்பர் சாப்பாடு வேற...

வாழ்த்துக்கள்....

கேப்ஜெமினியில் பலவகை பணிவாய்ப்புகள்

கீழ்க்கண்ட ஏதாவது ஒன்றில் தகுதி இருந்தால் விண்ணப்பிக்கலாம்...


Java J2ee ( JSP / EJB / Servlets / Struts & Unix )
Java with Cold fusion / Webmethods / Oblix Netpoint / LDAP
.NET ( VB.Net / ASP.Net with SQL )
VB Oracle Crystal Reports
Siebel CRM ( Siebel 7.0.5.2 to 7.5.3.8, VB, Perl, Oracle, PLSQL,HTML )
Oracle PL/SQL ( Forms & Reports )
Lotus Notes Administrators
Configuration Managers – Clear Case, Dimension Tools PVCS.
Oracle Database Administrators
MQ Series Administrators
Tivoli Storage Managers
Citrix Administrators
Sun Solaris Administrators
DB2 Database Administrators
Unix Shell scripting
C, C++ with Unix Developers
SQA ( Software Quality Advisors )
Mainframe – Production Schedulers
Data warehousing Tools – Teradata, Business Objects
Lotus Notes Domino Developers ( R5/ R6 )


குறைந்தது மூன்றாண்டுகள் அனுபவம் விரும்பத்தக்கது..

எங்கே அனுப்பவேண்டும் : jayasundar.krishnamoorthy@capgemini.com ( நம்ம நன்பர் தானுங்கோவ்வ்வ்வ்வ்)

சம்பளம் : இன்னைய தேதியில சிறந்த சம்பளம் தரும் நிறுவனங்களில் இது ஒன்றுங்க...

முதலிலேயே ஒரு பதிவில் சொன்ன மாதிரி - அருமையான கேண்டீன்...சூப்பர் சாப்பாடு வேற...

வாழ்த்துக்கள்....

ஜி யின் போட்டியில் வென்ற லக்கி லூக்குக்கு வாழ்த்து

ஜி அவர்கள், நாலு கண்ணு இரண்டு வாய் என்று ஒரு படத்தை போட்டு கமெண்ட் எழுதுங்க என்று சொல்லி இருந்தார்...

சும்மா கும்ம்ம்ம்முனு பின்னூட்டங்கள் தாவி வர ஆரம்பிச்சது..இருக்காதா பின்ன, ஜில்லுன்னு ஒரு காதலுக்கு டிக்கெட்டு என்று வேறு சொல்லிவிட்டார்...

நான் கூட ஒரு கமெண்டு அடிச்சேன்...

ஆனால் லக்கி லூக் ஒரு மூன்று கமெண்ட் போட்டர் என்று நினைக்கிறேன்..

அதில் வென்றது கிர்ர்ர்ர்ருனு ஒரு காதல்...

மொக்கை பதிவுகள் மட்டும் அல்ல, சுர்ர்ர்ருனு ஒரு கமெண்டும் அடித்த லக்கியாரை வாழ்த்தி ஒரு பதிவு..

அப்பாடா...ஒரு பதிவு போட்டாச்சு...அனானிகள், மற்றும் தற்கொலைப்படையினர் ஓடி வாங்க..

நெஸ் டெக்னாலஜியில் வேலை வாய்ப்பு

வேலை வாய்ப்பு விவரங்களை அனுப்பிய மியூஸ் அவர்களுக்கு நன்றி.

பணி வாய்ப்பு : Team Lead / Senior Software Engineer
தகுதி : கணிப்பொறியில் இளங்கலை பட்டம் ( கணினி பாடம் விரும்பத்தக்கது )
அனுபவம் : 5 முதல் 7 ஆண்டுகள்
தேவையான அறிவு : J2EE - JSP Servlets, XML Web Services, WebLogic, Oracle, Some XHTML, SOAP
கூடுதல் தகுதி : J2ME, WAP, Mobile experience. excellent trouble shooting skill, superior judgement, leadership skill

பணி வாய்ப்பு : Software Engineer/Senior Software Engineer
தகுதி : கணிப்பொறியில் இளங்கலை பட்டம் ( கணினி பாடம் விரும்பத்தக்கது )
அனுபவம் : 2 முதல் 6 ஆண்டுகள்
தேவையான அறிவு : J2EE - JSP Servlets, XML

பணி வாய்ப்பு : Software Engineer/Senior Software Engineer
தகுதி : கணிப்பொறியில் இளங்கலை பட்டம் ( கணினி பாடம் விரும்பத்தக்கது )
அனுபவம் : 2 முதல் 5 ஆண்டுகள்
தேவையான அறிவு : Oracle forms/D2K/Sql

பணி வாய்ப்பு : Software Engineer/Senior Software Engineer
தகுதி : கணிப்பொறியில் இளங்கலை பட்டம் ( கணினி பாடம் விரும்பத்தக்கது )
அனுபவம் : 3 முதல் 5 ஆண்டுகள்
தேவையான அறிவு : Java/J2EE/Velocity/Hibernate

பணி வாய்ப்பு : Software Engineer/Senior Software Engineer
தகுதி : கணிப்பொறியில் இளங்கலை பட்டம் ( கணினி பாடம் விரும்பத்தக்கது )
அனுபவம் : 2 முதல் 5 ஆண்டுகள்
தேவையான அறிவு : Windows, PC, XML, FTP, any scripting experience

பணி வாய்ப்பு : Software Engineer/Senior Software Engineer
தகுதி : கணிப்பொறியில் இளங்கலை பட்டம் ( கணினி பாடம் விரும்பத்தக்கது )
அனுபவம் : 2 முதல் 5 ஆண்டுகள்
தேவையான அறிவு : J2ee/JSP/Servelets/XML

எங்கே அனுப்ப வேண்டும் : geetha.raman@in.ness.com
ஒரு சி.சி போட்டுருங்க இங்க : ananda.ganesh@in.ness.com

நிறுவனம் : நெஸ் டெக்னாலஜி, பெங்களூர்
சம்பளம் : அதெல்லாம் நல்லா குடுப்பாங்க...

மற்ற நன்பர்கள் வேலை வாய்ப்பு விவரங்களை முடிந்தால் இதேபோல் வெளியிடுங்களேன்....உங்களால முடியலன்னா எனக்கு பார்வேர்டு செய்யுங்கப்பா...நான் பிரசுரம் செய்யுறேன்...

டேய், நீ தீவிரவாதியாடா ?

டேய், நீ தீவிரவாதியாடா ?

இல்லையே....

தமிழர் விடுதலைப்படை, தமிழ்நாடு மீட்சிப்படை இதில எதாவது சேர்ந்துட்டியா ?

சத்தியமா கிடையாது....

ஏண்டா இப்படி செய்யுற ?

சும்மா தான்...டைம் பாஸ்...

அடப்பாவி...லூசாட நீ..

அப்படியெல்லாம் எதுவும் இல்லை...

அப்புறம் ஏண்டா இப்படி செய்யுற ?

நிறைய பேர் இருக்காங்க...

ஓ..அப்ப நிறைய லூசுங்க இருக்கீங்கன்னு சொல்லு..

அப்படி எல்லாம் சொல்லாதே...நாங்க லூசுங்க கிடையாது...

பிறகு வேற என்னடா...எப்போலேருந்து இப்படி...

சும்மா..ஒரு ஆறு மாசமா....

ஓ..ஆறு மாசமா இப்படி இருக்கியா..அப்ப ஆறு மாசம் முத்திருச்சுன்னு சொல்லு...

என்ன முத்திருச்சி..நான் ஒன்னும் பைத்தியம் இல்லை...

எங்கே இருந்துடா கிளம்பி வந்திருக்கீங்க...வெட்டிப்பயல்,ஜொள்ளுப்பாண்டி,கப்பி பய,பினாத்தல் சுரேஷ்,கால்கரி சிவா, இவங்கள்ளாம் யாருடா...தீவிரவாதிங்க தானே...

இல்லை, அவங்க எல்லாம் உடன்பதிவர்கள்..வலைப்பதிவர்கள்..

வலைப்பதிவா ? அது என்னாடா மீன் புடிக்க யூஸ் பன்னுறதா ?

இல்லை..தமிழ் பிடிக்க..மேற்க்கொண்டு பேசுனே, இது பற்றி பதிவு போட்டுடுவேன்..

என்னாது பதிவு போடப்போறியா..ஊறுகா போடுறமாதிரி சொல்லுற ? அப்படீன்னா என்னாடா?

பதிவுன்னா...ஊறுகா மாதிரியா ?

இல்லை, என் பதிவில் தான் பலர் ஊறுகாய்..

என்னடா மறுபடி உளற ஆரம்பிச்சிட்ட..

இல்லை, சும்மா ஒரு உள்குத்து வைச்சி பேசினேன்..

என்னது உள்குத்தா ? அது என்னடா, அது...

அதெல்லாம் சொல்லமுடியாது...என்னிடம் சண்டை போட்டு சொந்த செலவில் சூனியம் வச்சிக்காத..

என்னது..டேய் எங்கே இருந்துடா புடிக்கிற...சென்னைக்கு கிளம்பி வாடா, எனக்கு தெரிஞ்ச யுனானி டாக்டர் இருக்கார்...பார்க்கலாம்..

எனக்கு அனானிதான் பிடிக்கும், யுனானி பிடிக்காது...

டேய், உனக்கு ரொம்ப முத்திப்போச்சு..நானே அடுத்த வாரம் கிளம்பி வர்ரேன்..

விளக்கம்: கடந்த வாரம் சென்னை வலைப்பதிவர் சந்திப்பு முடிந்த மறுநாள், ஒரு பிரபல வலைப்பதிவர், தனது இரண்டு வலைப்பதிவு நண்பர்களுடன் என் சகோதரரை சந்தித்தார். பிரபல வலைப்பதிவர் என் சகோதரருடன் பேச ஆரம்பிக்குமுன், சக பதிவர் இருவரும் தங்களுக்குள் படு வேகமாக விவாதிக்க ஆரம்பித்தனர்..இதை கேட்ட என் சகோதரர் என்னை தொலைபேசியில் அழைத்து பேசிய பேச்சைத்தான் மேலே பார்க்கிறீர்..

Friday, September 01, 2006

தமிழ்மணத்தை படித்து விமானத்தை தவறவிட்டவர்

யாருடா அது என்று ஒரு கேள்வி நீங்க கேட்பதற்க்குள் நானே சொல்லிவிடுகிறேன்..

ஏற்க்கனவே தொலைபேசியில் பேசிய ஒரு சிலருக்கு சொல்லிவிட்டேன்...

இருந்தாலும் ஒரு பதிவாக போட்டு வைத்தால் பின்னால் மீள் பதிவு, மீன் பதிவு என்று ஜல்லியடிக்கலாமே...( "சமீபத்தில்" 1870 - வீர பாண்டிய கட்டபொம்மு காலையில் வாக்கிங் போகையில் என்று எல்லாம்) - சரி விடுங்க மேட்டருக்கு வந்திடுறேன்..

எட்டுமணிக்கு மும்பை விமானம்..கையில் டிக்கெட் ஆறு மணிக்கெல்லாம் கொடுக்கப்பட்டது..சரி அப்படியே லக்கி லூக் பதிவு, முத்து தமிழினி பதிவு, கோவி.கண்ணன் காலங்கள், கிழுமத்தூரில் இருந்து கிளம்பிய புகை வண்டி ஏன் நடுவழியில் நிக்கிது, வடுவூர் குமார் எப்படி வூடு கட்டினார், சங்கம் கவிதைப்போட்டி, பார்ப்பணீய முற்போக்குவாத பின் நவீனத்துவ பெண்னிய பதிவுகளை படிச்சிக்கிட்டே, அங்கே அங்கே பின்னூட்டங்களை வாரி தெளிச்சிக்கிட்டே...

மணி பார்த்தா - எட்டு...

கணினியை தூக்கிக்கிட்டு கிளம்பி ஓடினா, கிங் பிசர் வண்டி கிளம்பிருச்சிய்யா, கிளம்பிருச்சிய்யா...

பொறவு வேற வண்டி இருக்கான்னு விசாரிச்சா, ராவைக்கு எதுவும் வேற வண்டி இருக்கான்னு பார்த்தா, ஆத்தீ...அது தான் கடைசி வண்டியாம்...

அப்புறமென்ன, பிரண்டு வீட்டுல போய் படுத்து ஏந்திரிச்சி, காலைக்கு மொத வண்டியை புடிச்சி மும்பைக்கு ஓடினேன்...

அனானி கோபகுமார்...

லக்கியின் சென்னை நினைவுகள் பதிவில் படித்து கொல் என்று சிரிக்கவைத்த அனானியின் விளையாட்டு...கீழே....நீங்களும் சிரியுங்க..

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$


என் பெயர் கோபக்குமார்.

என் மனைவி பெயர் லச்சுமி.

மொத்தத்தில் என் மனைவியின் பெயர் லச்சுமி கோபக்குமார்.

பெயரை பார்த்து பயந்துடாதீங்க, எனக்கு சுத்தமா கோபமே வராது.

சமீப காலமா ஒரு செய்தி பார்த்திருப்பீங்களே, கேரள அமைச்சர் என் பொண்டாட்டியிடம் விமானத்தில் சில்மிஷம் செய்தார் என்று..

எனக்கென்னமோ எம்பொண்டாட்டி தேவை இல்லாம குழப்பிட்டான்னு தோனுது.

விமானம் மேலே ஏறும் 1 முதல் 2 நிமிடத்தில் விளக்கு அனைத்தவுடன் பின்னால் இருந்து சில்மிஷம் செய்தாராம் அமைச்சர்.

அவன் அவன் பெல்ட்டை மாட்டிக்கினு வயித்துல புளியை கரைச்சிக்கினு குந்திக்கினிருக்கும்போது எப்படிய்யா சில்மிஷம் செய்யமுடியும் ?

ஒரு வேளை இப்படி நடந்திருக்குமோ ? என் பொண்டாட்டி சீட் பெல்ட் போடாததை கவனிச்ச அமைச்சர் அதை போட முயற்ச்சி செய்திருப்பாரோ ?

அதை என் பிராட்டி தவறா புரிஞ்சி, பேடிக்கண்டு ( பயந்து ) - சத்தம்போட்டிருப்பாளோ ?

இதுல காமெடி என்னன்னா, என் பொண்டாட்டிக்கு அவர் அமைச்சர் என்பதே தெரியாதாம்..ஆமாம்..என் பொண்டாட்டிக்கு அப்துல் கலாமையும் தெரியாது, அச்சுதானந்தனையும் தெரியாது.

அதுகொண்டு நிங்களுக்கு டவுட் உண்டெங்கில் எனிக்கி போன் செய்து வெரிபை செய்துக்கலாம்.

இவட வல்லிய பிரச்சினையாயிட்டு உண்டு எனிக்கி..

ஈ இஸ்ஸியூ வல்லிய டென்சனாயிட்டு உண்டு..

வர்ட்ட்டா...

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
http://madippakkam.blogspot.com/2006/08/blog-post_31.html
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால்

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால் டயபட்டீஸ் / நீரிழிவு / சர்க்கரை நோயை விரட்ட நியான்டர் செல்வனால் ஆரம்பிக்கப்பட்ட இந்த குழுமத்திற்கு ( https://www....