Friday, August 25, 2006

காமதேனு - உண்மையில் இருக்கா ?

என்ன இப்படி ஒரு தலைப்பு வைச்சிட்டேன் என்று பார்க்கிறீங்களா ? இருக்கு..

எங்கே இருக்கு ? நீ பார்த்தாயா என்று கேட்டால் - நான் பார்த்தேன் என்று தான் சொல்லவேண்டும்..

தொட்டு பார்த்தாயா ? எப்படி இருந்தது ? கேட்டது கிடைத்ததா என்று எல்லாம் கேள்விகளை அடுக்காமல், http://www.kamadenu.com/ பட்டுன்னு இந்த சுட்டியை திறங்கப்பா...

நல்ல பல தமிழ் புத்தகங்கள் - கொட்டிக்கிடக்கு இங்கே....

ஆன்லைனில் வாங்கும் வசதி உண்டு...

எங்களை வாங்க சொல்லிட்டு - நீ என்ன புத்தகம் வாங்கினே என்று கேட்பவர்களுக்கு...

புத்தக விமர்சனம் எழுதும்போது பாத்துக்கோங்க...ஹுக்கும்...

Tuesday, August 22, 2006

கார்ப்பரேட் அப்பிளிகேஷன் சப்போட் அனலிஸ்ட் பணிவாய்ப்பு

நிறுவனம் : எம்காபே (http://www.mcafee.com)
பணி : ஹெல்ப் டெஸ்க் சப்போர்ட் ( சொந்த நிறுவன ஊழியர்களுக்கு)

விரிவாக : உங்கள் நிறுவனத்தை சேர்ந்த ஊழியர்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணுதல். பணியார்களுக்கு தேவைப்படும் கல்வியை வழங்குவதற்க்கும் பாலமாக செயல்படவேண்டும்.குறைந்த பட்சம் இது போல ஒரு பணியில் ஒன்றிரண்டு ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் நன்று.ஆங்கிலத்தில் நன்றாக பேசவும் எழுதவும் வேண்டும். மைக்ரோசாப்ட் மென்பொருள்களில் பரிச்சயம் தேவை.

எங்கே அனுப்ப வேண்டும் : Srinivasa_Rao@McAfee.com

சப்ஜெக்ட் லைனில் என்ன போட வேண்டும் : JOB CODE : App_Support

கீழே இருப்பதை தமிழில் எழுதினா நல்லா இருக்காது...

Applications include but are not limited to Siebel eCommunications 7.X, Siebel Call Center and Ariba 8.x. Experience supporting Siebel 7 or higher (1 year) with previous experience within an IT help desk organization (1 to 2 yrs).

வேலைவாய்ப்பு செய்திகள் ( .Net)

நிறுவனம் : கேப்ஜெமினி (www.capgemini.com)
பணி : டாட் நெட் புரோகிராமர்.
அனுபவம் : 3 முதல் 6 ஆண்டுகள் வரை
சம்பளம் : இண்டஸ்டரியிலேயே அருமையா சம்பளம் கொடுக்கும் கம்பெனி இது

எங்கே அனுப்ப வேண்டும் : Jayasunder.krishmoorthy@capgemini.com (நம்ம பார்ட்னர் தான்)

என்ன தேவை :

* நல்ல ஆங்கில அறிவு
* நமது நன்பரை சமாளிக்கும் அளவு டெக்னிக்கல் அறிவு
* உழைக்கும் ஆட்டிட்டியுட்

என்ன வாய்ப்புகள்:

* அமேரிக்கா போலாமுங்க..இவங்களே ஸ்பான்சர் செய்யுறாங்க (H1B)
* சிறந்த சம்பளம் பெங்களூரில் வழங்கும் சில நிறுவனங்களில் இது ஒன்று
* கம்பெனியில் காப்பி சூப்பரா இருக்கும். நல்ல கேண்டீனும் உண்டு.

அன்புடன்,
செந்தழல் ரவி

Monday, August 21, 2006

இம்சை அனானி 25ஆம் பின்னூட்டகேசி

யோவ்...நிறுத்திக்கோய்யா...எல்லரும் எங்களை சந்தேகப்படுறாங்க...

நேத்து ராத்திரி பதினோரு மணிக்கு பதினைஞ்சு பின்னூட்டம் யாரு போடச்சொன்னது உன்னை ?

இப்போ என்னடான்னா - அ.ஆ.இ.ஈ பழகுற என் பதிவுல வந்து...

அது என்னாப்பா அப்படி பேரு வைக்கிற ?

ஷெரான் ஸ்டோன் எப்படிய்யா என் பதிவை படிக்க முடியும் ? பிரிட்னி ஸ்பியர்ஸ் எங்கே வந்தாங்க இங்கே ? அடிக்கடி நியூஸ் படிக்க ஷோபனா ரவி வேற...

ஒருத்தர் இன்னொருத்தரை உருப்புட மாட்டே என்பதும், இன்னொருத்தர், நீ சத்தியமா உருப்புட மாட்டே என்பதும், அதுக்கு பதிலாக, நான் உருப்புடலைன்னாலும் பரவாயில்லை - நீ உருப்படவே கூடாது என்பதும்....ஏன்ன்ன்ன்ன்ன்ன்???

நாங்க அனானி ஆப்சன் வெச்சிருக்கறது - பிலாகு அக்கவுண்ட் இல்லாதவங்களுக்குப்பா...

தமிழ்மணமே பேஸ்த் அடிச்சி ஆடிப்போயி கிடக்கு...நாமக்கல்லார் கூட தாயத்து தந்திட்டாரு...

வாங்க - வாங்க - அனானிகளே..உங்க கருத்துக்களை எடுத்து வைத்து - ஒரு செஞ்சுரிக்கு வழி செய்யுங்க...

Saturday, August 19, 2006

மீயூஸ் - இது நியாயமா....

விடாது கருப்புவின் "ரோசா வசந்தும்....." என்று ஆரம்பிக்கும் பதிவில் என் தோழியொருவர் தனது ஆதங்கத்தை வெளியிட்டுள்ளார்...அங்கே வேறு சில குழப்படிகளும் நடக்கின்றன...அதுபற்றி இங்கே பேச விரும்பவில்லை...

மியூஸ் பின்னூட்டம் கருப்பின் பதிவில் பின்னூட்டமாக எடுத்தாளப்பட்டுள்ளது..அதுதான் நமக்கும் எரிச்சலூட்டும் ஒரு கருத்து...மகேந்திரன் பெ. சொல்லுவது மாதிரி - கருத்தை மட்டும் எதிர்ப்பது தான் நம் வேலை...பதிவர் மீது எந்த தனிப்பட்ட கோபமும் கொள்ளக்கூடாது...

அதேபோல இந்த பதிவும் மியூஸ் என்ற தனிப்பட்ட நபர் மீது தொடுக்கப்படும் தாக்குதல் அல்ல...அவரது கருத்து ( தவறானதுங்க) மீது...என்னதான் அவர் அலுவலகத்தில் டாப் பர்மார்மராக இருந்தாலும் அவரது ஸரியில்லாத ஒரு கருத்தை எதிர்க்கவில்லை என்றால் நாம் சுரணை இல்லாதவர்களாகிவிடுவோம்...

இதற்க்கு டோண்டு ஆதரவு தெரிவித்து கருத்து தெரிவிக்கிறார்...என்ன கொடுமை சரவணன்..

இனி மேட்டர்...

மியூஸ் கக்கியது:

டோண்டு ஸார்,

இன்னொன்றும் கவனித்திருப்பீர்கள்.

இங்கனம் கடனையும், க்ரெடிட் கார்டையும் வாங்க தொ(ல்)லை பேசுவது பெண்களே. பெண்கள் மட்டுமே. இது ஒருவகை விபச்சாரம்தான்.

அதற்க்கு டோண்டு பதில் :

மனம் கனக்கும் கசப்பான உண்மை.
:-((

என்ன அநியாயம்...இது அடுக்குமா ? இது நியாயமா ? என் சில பல தோழர்கள் / தோழிகள் டெலிமார்க்கெட்டிங் நிறுவணங்களில் பணிபுரிகிறார்கள்....அவர்கள் வலைப்பதிவுகளை படித்தும் வருகிறார்கள்...

டெலிமார்க்கெட்டிங் - விபச்சாரம் என்றால்

மியூஸ் - சாப்ட்வேட் பணி - கூலிக்கு மாரடிப்பது
டோண்டுவின் மொழிபெயர்ப்பாளார் பணி - கூலிக்கு மாரடிப்பது

என்று சொல்லப்பட்டால் " கசப்பான உண்மை" என்று ஏற்றுக்கொள்வீரா ?

இதுபற்றி திரு எழுதிய பதிவு - கேட்பார் இன்றி - சீமாச்சுவால் திசை திருப்பப்பட்டது..கடந்தவார தமிழ்மண திருநங்கை - சாதாரன நங்கை - பீன்ஸ் ஆம்பளையா - பொம்பளையா போன்ற பிரச்சினைகளால் கண்டுகொள்ளாமல் விடப்பட்டது..

இது நியாயமா மியூஸ் - இது அடுக்குமா மியூஸ் - இது தகுமா மியூஸ்...

அன்புடன்,
செந்தழல் ரவி

அனானிகளுக்கு பின்குறிப்பு : இது பதிவரை பற்றியதல்ல - பதிவரின் கருத்தை பற்றியது...சாதி முத்திரை குத்தாதீர்..அவ்வாறான பின்னூட்டம் வெளியிடப்படாது...

Thursday, August 17, 2006

லிவிங் ஸ்மைலின் இரட்டை வேடம்

இப்படி ஒரு பதிவெழுத என்ன அவசியம் வந்தது என்று கேட்பவர்களுக்கு..

பாலபாரதியின் பதிவில் ஒரு பின்னூட்டம் இட்டு இருக்கிறார்...

///இந்தியர் என்பதில் பெருமை கொள்வோம் இணைந்தே இன்னும் பல சாதனை புரிவோம்...

an INDIAN///

அட அருமையான பின்னூட்டம் என்று நினைப்பவர்களுக்கு...

லிவிங் ஸ்மைல் அவர்களின் லேட்டஸ்ட் பதிவில் பாருங்கள்.. தேசியக்கொடியேத்திய திருநங்கை

//நாட்டுப்பற்று என்பது போன்ற உணர்ச்சிகள் எதுவும் எனக்கு துப்புரவாக கிடையாது; மேலும், இந்தியாவை நான் ஒரு சுதந்திர/குடியரசு நாடாக ஏற்றுக்கொள்வதும் கிடையாது., என்னைப் பொருத்தவரை இந்தியாவில் சுதந்திர தினம் கொண்டாடுவதே சற்று அதிகம் தான்..///

இவங்களுக்கு நாட்டுப்பற்று இல்லை என்பதற்க்காக என் தாய்நாட்டின் மீது புழுதியை வாரி தூற்றுவதை எப்படி மன்னிக்க முடியும் ?

இல்லை தேசபக்தியுள்ள எந்த ஆண்மகனால் / பெண்மகளால் மன்னிக்க முடியுமா ?

சகோதரியை உடனே அந்த வரிகளை நீக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்..

கோபத்துடன்,
செந்தழல் ரவி

Friday, August 04, 2006

நட்புக்கு நிறமில்லை...(இனமும் - மதமும் இல்லை)

எனக்கு நிறைய நண்பர்கள்..எங்க வீட்டில் இருப்பவர்களுக்கு கொஞ்சம் ஆச்சர்யம் தான்..காரணம் எங்க வீட்டில் இருக்கும் எங்க அண்ணாவைத்தேடி யாரும் வரமாட்டாங்க..ஆனால் எனக்கு வெவ்வேறு ஊர்களில் இருந்தெல்லாம் நண்பர்கள் வருவாங்க...லெட்டர் போடுவாங்க..போன் செய்வாங்க...

ஒருமுறை - என் 10 வயதில் நானும் என் அண்ணாவும் விடுமுறைக்காக பாட்டி வீட்டுக்கு வந்திட்டோம்..அப்போது குடும்பம் நெய்வேலியில் இருந்தது.. என்னுடைய குட்டி குட்டி பிரண்ட்ஸ் வந்து என்னை தேடி இருக்காங்க...என் அம்மா சொல்லி இருக்கார் - அதாவது அவங்க ஊருக்கு போயிட்டாங்க - காசு இல்லையாம் திரும்ப என்று..எவ்வளவு ஆகும் என்று அவங்க கேட்க - 100 ரூபாய் என்று சொல்லி வைத்திருக்காங்க... என் நன்பர்கள் - ஆளுக்கு ஒரு ஒரு ரூபாயாக சேர்த்து - ஒரு வாரத்தில் 100 ரூபாய் சேர்த்து - என் அம்மாவிடம் கொடுத்திருக்காங்க... அம்மாவுக்கோ - ஆச்சர்யமான ஆச்சர்யம்..இந்த சின்னதுக்கு மட்டும் எவ்வளவு பிரண்டுக என்று..

பிறகு வீட்டைவிட்டு வெகு தொலைவில் - வருடத்துக்கு ஒருமுறை முழு ஆண்டு விடுமுறைக்கு மட்டுமே - வீட்டிற்க்கு வரும் நிலை ஆனது - காரணம் நான் சேர்ந்த புனித வளனார் உள்விடுதி (boarding). அங்கு நேரத்துக்கு படிப்பு - நேரத்துக்கு சாப்பாடு - நேரத்துக்கு - தூக்கம் என்று ஆனபோது - கை கொடுத்தது வேறு யார் - நன்பர்கள் தான்.. எல்லாரும் வீட்டை பிரிந்து சோகத்தில் இருந்தபோது - சேர்ந்து விளையாடி - சேர்ந்து வார்டனிடம் அடிவாங்கி - சேர்ந்து அழுது - இணை பிரியாதவர்களாகிப்போனோம்..

பிற்ப்பாடு கல்லூரியில் - திருச்சியில் - புத்தனாம்பட்டி கல்லூரியில் சேர்ந்தபோது - எந்த விதமான பொழுதுபோக்கும் இல்லாத சின்ன கிராமத்தில் - நன்பர்களை தவிர வேறெதுவும் அறியாதவர்களானோம்...என்ன சாதி - என்ன மதம் - அறியோம் ஆனால் - மனம் ஒத்த அந்த நட்பு... வார்த்தைகளால் விவரிக்கயியலாதுங்க..சேர்ந்து சினிமாவுக்கு போய் - சேர்ந்து தம் அடித்து - சேர்ந்து தண்ணியடித்து என இங்கோ வேறு விதமான இணைகள் பிறகு வேலை தேடும் படலத்தில் - ரங்கனாதன் தெருவில் - எட்டுக்கு எட்டு அறையில் - சரியாக எட்டு பேர் வசித்தபோது - ஆந்திரா மெஸ்ஸில் - இரண்டு சாப்பாடு வாங்கி - ஆறுபேர் கிர்ந்துண்டபோது -இந்த நட்பு ஒரு புதிய பரிமாணத்தை அடைந்தது.. பிறகு அவர் அவர் ஒர் வேலையில் செட்டில் ஆனபிறகு - இமெயில் - போன் - சாட், வார இறுதிகளில் மீட், புத்தாண்டு கொண்டாட்டங்களில் கொஞ்சம் ஜாலி என்று இது ஒரு பரிமாணம்...

ஆனால்..

எனக்கு அவன் இருக்காண்டா...என் நன்பன் இருக்காண்டா...நான் எப்போ போனாலும் - என்னிடம் காசு இருந்தாலும் இல்லைன்னாலும் என்னை வெச்சு சோறு போடுவாண்டா என்று ஒரு எண்ணம் வருது பாருங்க...அது ஒரு விதமான தன்னிறைவுங்க.... பொருளாதாரத்துல இல்லை.. மன நிறைவாதாரத்துல...

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால்

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால் டயபட்டீஸ் / நீரிழிவு / சர்க்கரை நோயை விரட்ட நியான்டர் செல்வனால் ஆரம்பிக்கப்பட்ட இந்த குழுமத்திற்கு ( https://www....