அய்யய்யோ அய்யோ அய்யய்யய்யோ

போனவருடம் நடந்த நிகழ்ச்சிங்க...

போஸ்ட் பெய்டில் இருந்த என்னோட மொபைலை பிரி பெய்டாக மாற்றினேன்...ஏர் டெல் (Airtel) கம்பேனி கார்டு போட்டேன்...காரணம் நம்ம ஈட்டி வாய் கொஞ்சம் ஓவரா பேசிக்கிட்டே இருக்கறதால - பாதி சம்பளம் போனுக்கே போறது பொறுக்காம இந்த முடிவு எடுத்தேன்...

அதுலயும் ஒரே வாரத்துல பேலன்ஸ் தீந்து போச்சு...

சரின்னு ஒரு 250 RS ரீசார்ஜ் கூப்பன் வாங்கினேன்..

ரீசார்ஜ் செய்து முடிஞ்ச பிறகு பேலன்ஸ் செக் செய்தேன்...

உங்கள் கையிருப்பு 178 ரூபாய் ஐம்பது காசு அப்படீன்னு சொன்னது...

டென்சனான டென்ஷன்...

உடனே கஸ்டமர் கேருக்கு கால் போட்டேன்...

வாய்ஸ் மெனுவுல போயிக்கிட்டு இருந்தபோது கால் கட்டாகிருச்சி...

சர்ர்ர்ருனு இரண்டு ரூபாய் காணாமே போனதா மெசேஜ் வந்தது....

கோபம் இன்னும் அதிகமாச்சு...

என்னடா இது பகல் கொள்ளையா இருக்கு...250 ரூவா ரீசார்ஜ் கூப்பனுக்கு 178.50 தான் பேலன்ஸ், அதுலயும் இல்லாம கஸ்டமர் கேருக்கு போன் செய்தா 2 ரூவாய வழிச்சிக்கறானுங்க...இன்னைக்கு உண்டு இல்லைன்னு பண்ணிரனும் என்று மீண்டும் கஸ்டமர் கேருக்கு ரீ டயல் செய்தேன்..

ஆங்..ரிங் போகுது ரிங் போகுது...

ஒரு வழியா ஒரு பெண் போனை எடுக்கறாங்க...

கய்யா முய்யா என்று சத்தம் போடுகிறேன் ஒரு இரண்டு நிமிடம்...

என்னா கம்பேனி நடத்துறீங்க...ஒரே பகல் கொள்ளையா இருக்கே...அநியாயம்..அய்யய்யோ அய்யோ அய்யய்யய்யோ ( யப்பா..தலைப்பு உள்ளே வந்திடுச்சி) - 250 ரூவா ரீசார்ஜுக்கு 178.50 ஆ, அத்தோட கஸ்டமர் கேருக்கு போன் செய்தா 2 ரூவாயா ? இது என்ன கஸ்டமர் கேரா இல்லை கஷ்டமர் கேரா ? என்று....

சார் ஒரு நிமிடம்...250 ரூபாய்க்கு 178 எடுக்கறதில்லை - 225 ரூபாய் கொடுக்கிறோமே ? அதுவும் இல்லாம கஸ்டமர் கேருக்கு போன் செய்தா காசு போகாதுங்க...என்றார்...

இல்லை...நான் சொல்வது தான் சரி...என்று மேலும் சில நிமிடம் ஏர்டெல் கம்பெனி முதலாளி - ஷேர் ஹோல்டர் - மானேஜர் என்று அர்ச்சனை செய்தேன்...

சரி சார் - உங்க மொபைல் நம்பரை சொல்லுங்க..

நான் சொன்னேன்...

அவர் ஒரு உண்மையை சொன்னார்...

அவர் என்னை திட்ட ஆரம்பிப்பதற்க்குள் - போனை கட் செய்து எஸ்கேப் ஆனேன்...எங்கே மறுபடி திட்டுவதற்க்கு கூப்பிடுவாங்களோ என்று சுவிட்ச் ஆப் செய்துவிட்டேன்...

அப்படி என்ன உண்மை என்கிறீங்களா...

என் போன் நம்பரை சொன்னேன்...98805 என்று ஆரம்பித்து முழுவதும் சொல்லுவதற்க்குள்...

சார் - இது ஏர்டெல் நம்பர்...நீங்க போன் செய்திருப்பது ஹட்ச் (HUTCH) ஆபீஸ்...ஏர் டெல்லுக்கு 121 போடனும், ஹட்சுக்கு 111 போடனும்...பின்னே - ஹட்சுக்கு ஏர்டெல் மொபைலில் இருந்து போன் செய்தா 2 ரூபாய் போகத்தான் செய்யும்...

அய்யய்யோ அய்யோ அய்யய்யய்யோ

Comments

தமிழ்மணம் தெரியவில்லை எனக்கு - யாராவது பிங் செய்யுங்கப்பா...
mmmm
analum 250 ku 178 tappudane
வாங்க அனிதா...

டேக்ஸ் எல்லாம் போட்டு அப்படி உருவிக்கிட்டிருந்தானுங்க...

இப்போதான் போட்டி காரணமா - குறைச்சிருக்காங்க...
//இது ஏர்டெல் நம்பர்...நீங்க போன் செய்திருப்பது ஹட்ச்//

சிரிப்பு தாங்க முடியல பக்கத்து கேபின்லயிருந்து என் ப்ரெண்ட் எட்டி பாக்கற அளவு சிரிச்சிட்டேன். :)))))
ரவி
வேடிக்கைதான் போங்க.
அய்யய்யோ அய்யோ அய்யய்யய்யோ :)))
நல்ல வேளையா ஹட்சுக்கு போன் பன்னீங்க எதாவது கட்சிக்கு போன் பன்னீருந்தா என்ன ஆயிருக்கும்?
:)) good comedy of errors
கட்சிக்க்கா ??

ஹா ஹா...

மகேந்திரன் - இந்த பதிவிலும் அரசியல் பேச வாய்ப்பு ஏற்ப்படுத்தி குடுத்திட்டீங்க
அனு - நாங்க நொந்து நூடுல்ஸ் ஆகுறது உங்களுக்கு காமெடி கொடுக்குது பாருங்க

:))
Desperado said…
//அவர் என்னை திட்ட ஆரம்பிப்பதற்க்குள் - போனை கட் செய்து எஸ்கேப் ஆனேன்//
இது சரி

//...எங்கே மறுபடி திட்டுவதற்க்கு கூப்பிடுவாங்களோ என்று சுவிட்ச் ஆப் செய்துவிட்டேன்...//
ஆனா இது கொஞ்சம் ஓவர்.ஆனாலும் நீங்க ரொம்ப வெவரம் தான்.

:-))))))))))))))))
முதலில் பச்சைபாவாடையிடம் ஒரு பளார், பின் பாட்டியால் உங்கள் வீட்டுப் பெரியவர்களிடன் பளார், இப்பொழுது நம்பர் மாத்தி அடித்து, மாத்து வாங்கப் பார்த்தீர்கள்,
சிம்பதி ஏதும் கிரியேட்பன்னுகின்றீர்களா,(நான் சும்மா தமாசுக்கு தான் சொன்னேன்,சிம்பதி பற்றி பேசி சிலர் வாங்கிக் கட்டுறது பத்தாதா..,)

அய்யய்யோ அய்யோ அய்யய்யய்யோ
ஒரே டமாசு தான் போங்கள்,அன்புடன்...
சரவணன்.
உன் லந்துக்கு அளவே இல்லையாடா ?
சுமா said…
இது உங்களுக்கே கொஞ்சம் ஓவரா தெரியல ?
johan -paris said…
ரவி!
இதை வாசிசுக்கொண்டு போகும் போது; இப்பிடிதான் முடியுமெனு ஏதோ நினைச்சேன். ஏனெனா? நம்ம ரவி ரொம்ப சிமாட்!
வர வர ஒங்க இம்சை அதிகம்
யோகன் பாரிஸ்
நல்ல வேளை ரவி... மலேசியாவில் இருந்த நினைவில் 'மைசெல்' லுக்கு போன் செய்யாதவரை
Mayooresan said…
அடப்பாவமே!
இப்பிடி ஆகணுமா?????
என்றாலும் பரவாயில்ல கடசியில இரண்டு ரூபா கணக்கு தெரிஞ்சுதில்ல....
செல்போனை பயன்படுத்துவதே இல்லை. செல்போன், கிரிடிட் கார்டு போன்றவை கையில் வந்த பின்னர் பயன்பாடு அதிகரிக்கும்.பில் ஏறும். எனவே அறவே தவிர்த்து விடுங்கள். இல்லாவிட்டால் என்னை போல கட்டுபாட்டுடன் இருங்கள்.
Udhayakumar said…
அய்யோ அய்யோ.... ஊரெல்லாம் நம்மளை மாதிரித்தான் இருக்காங்க. ஆனாலும் யாரும் வெளிய சொல்லரதில்லை... இனி நான் தைரியமா நடமாடலாம்.
சின்னதா ஒரு பின்னூட்ட கயமை செய்து - உதயகுமாருக்கு ஒரு நன்றியை தெரிவிச்சிக்கிறென்..
//அவர் என்னை திட்ட ஆரம்பிப்பதற்க்குள் - போனை கட் செய்து எஸ்கேப் ஆனேன்...எங்கே மறுபடி திட்டுவதற்க்கு கூப்பிடுவாங்களோ என்று சுவிட்ச் ஆப் செய்துவிட்டேன்...//

ஹி...ஹி...
:))
அநியாயம் அநியாயம். இந்த அநியாயத்த கேட்க யாரும் இல்லய்யா.

ரவி, உன்ன கண்டிக்க ஆள் இல்ல. அதான் நீ இம்புட்டு ஆட்டம் போடுற.
111 க்கு ஏங்க போன் போட்டீங்க?

100 க்கு போன் போடறது தானே? ;)
துபாய்வாசி...போலீஸ் ஸ்டேஷனில் இருக்கும் எங்க சித்தப்பாவுக்கு போன் போடனும்னா - நான் மொபைலில் இருந்து 100 தான் போடுவேன்...

பில் இல்லாமலேயே பேசுவேன்..ஹி ஹி
வாங்க நாகை நிவா...சீ..சிவா...:))
ரசித்து சிரிக்கவைத்த பதிவு
Udhayakumar said…
This comment has been removed by a blog administrator.
நல்ல காமேடி

கற்பனையா?
tbr.joseph said…
அது சரி, எதுக்கு போஸ்ட் பேய்ட்லருந்து ப்ரீபேய்டுக்கு மாத்தனீங்க?

அதுல லாபம் ஏதாச்சும் இருக்கா என்ன?

தெரியாமத்தான் கேக்கேன்:-)

செலவை குறைக்கன்னு மட்டும் சொல்லிறாதீங்க.. ஏன்னா நீங்க ஐ.டி. ஆளாச்சே..
ஏங்க ரவி உடான்ஸ் விட்டாலும் சரியா விட வேணாமா, ஏர் டெல் இணைப்பில் இருந்து அதன் 3 இலக்க செர்வீஸ் எண்களைத்தான் அழைக்கமுடியும் , ஹட்ச்சின் செர்வீஸ் எண்ணான மற்ற 3 இலக்க எண்ணை அழைக்க முடியாதே!

ஒரே நெட்வொர்க்கில் தான் அது போன்ற 3 இலக்க எண்கள் வேலை செய்யும், மாற்று நெட்வொர்க் எனில் 10 இலக்க எண்ணை தான் பயன்படுத்த முடியும்!(உங்க ஊரில் எல்லாம் வித்தியாசம் தான் போங்க)
Ramaswamy said…
இது ஏர்டெல் நம்பர்...நீங்க போன் செய்திருப்பது ஹட்ச்


111 123 போன்ற நம்பர்கள் அந்த service provider களுக்கு மட்டுமே செல்லக்கூடியது.
airtel போனில் இருந்து 111 dial செய்து hutch customer care கனெக்ட் செய்ய முடியுமா என்று தெரியவில்லை.