Posts

Showing posts from May, 2006

குருவி சுடுவது எப்படி ? வேட்டைதான்...

Image
அட படத்தில இருப்பது நான்தான்...சும்மா பில்டப்புக்காக எடுத்தத்து...இதன் பெயர் நாட்டு துப்பாக்கி ( Mussle loading Gun). நம்ம ஊர்ல ஜெர்மன் நாடோடிகள் (அட நரிக்குறவர்கள் தான் - எங்க அய்யாவோட கண்டுபிடிப்பு இது) வைத்திருக்கும் ரகம்....

லோடு செய்யவேண்டும் என்றால், முதலில் கொஞ்சம் கருப்பு மருந்து ( கந்தகம் + அடுப்பு கரி வைத்து, தண்ணீர் சேர்த்து மைய அரைக்கப்பட்டது - பிறகு காயவைக்க வேண்டும்), போடவேண்டும்...பிறகு சிறிய தேங்காய்பஞ்சு வைத்து கிடிக்க வேண்டும்..அதனை கிடிக்க சிறிய கம்பி ( ஸ்லாக் கம்பி என்று அழைக்கப்படும்) துப்பாக்கியிலேயே அட்டச்மென்ட் ஆக இருக்கும்..

பிறகு, ரவை சிறிதளவு போட்டு சிறிய தேங்காய்பஞ்சு வைத்து கிடிக்க வேண்டும்...உப்புமா செய்ய பயன்படுத்தும் ரவை இல்லைங்க்க..பால்ரஸ்...சிறிய குண்டுகள்..சில ஆண்டுகளுக்கு முன்பு ஈயம் பயன்படுத்தப்பட்டது...ஈயத்தினை காய்ச்சி தண்ணீரில் ஊற்றினால் சிறிய ஈய குண்டுகள் கிடைக்கும்..இப்போது, சைக்கிள் மொத்த விற்ப்பனை கடைகளில் 100 கிராம் 200 கிராம் என்று வாங்கலாம்...அதாவது DEFECTIVE பால்ரஸ்..

இப்போது துப்பாக்கியை தரையில் நன்றாக தட்டி, மருந்து குதிரை பகுதியில் உள்ள …

பா.ராகவனின் நிலமெல்லாம் ரத்தம்..முழுமையாக

என் மனதுக்கு பிடித்த எழுத்தாளர்களில் ஒருவர் இந்த பா.ரா. முதல் முதலில் தமிழினை இனையத்தில் காணச்செய்தவர் ( என்னை பொறுத்தமட்டில்). தினம் ஒரு கவிதை யாஹூ குழுமத்தில் வாசிக்கும் பழக்கமுடையவன் நான்..அங்கு தரமாக எழுதுவார்.

பா.ராகவன்

அவர் எழுதி, குமுதத்தில் வெளிவந்தது இந்த நிலமெல்லாம் ரத்தம்...அராபத் மறைவிலிருந்து ஆரம்பிக்கிறது...

நிலமெல்லாம் ரத்தம்

அவர் பெயர் வைத்து கூகுளில் தமிழில் தேடியபோது, யாரோ ஒரு நன்பர் ( புரொபைல் வேலைசெய்யவில்லை) முழுமையாக தொகுத்து இருப்பது தெரியவந்தது...கீழே உள்ள சுட்டியை தொடவும்.

நிலமெல்லாம் ரத்தம்..முழுமையாக

வாசித்து இன்பம் பெறுக...

அன்புடன்,
செந்தழல் ரவி

கொரியா நினைவுகள்..

Image
நான் குப்பை கொட்டுவது எல்.ஜி என்று பலருக்கு தெரிந்திருக்கும்..அதனால் கொரியா பற்றி எழுதவேண்டும் என்ற ஆசை...

கொரியர்களை பற்றி சில தகவல்களை சொல்லவேண்டும்...

மேற்க்காணும் படத்தில் இருப்பவர் தோழி ஜங் லீ. பக்கத்தில் இளிப்பது நான்தான் என்று சொல்லவும் வேண்டுமா...

30 சதவீதம் புத்த மதத்தினை சார்ந்துள்ளார்கள்..40 சதவீதம் கிறித்தவம்..மீதி உள்ள 30 சதவீதம் எந்த மதத்தினையும் சாராதவர்கள். நாத்திகர்கள் என்று சொல்லலாம்...

தோழி கூறுகிறார்..அவரது தாயார் அவ்வப்போது சர்ச்சுக்கு செல்வாராம்..இவர் போவதில்லை...(அதாவது கடைசி முப்பதில் இருக்கிறார்..)தலைநகர் சியோல் ( சோல் - soul என்று ப்ரனவுன்ஸ் செய்கிறார்கள்) மேற்க்கத்திய நாகரீகத்தில் மிதக்கிறது..

கிட்டத்தட்ட அனைவரும் புகைப்பழக்கம் மற்றும் மதுப்பழக்கம் உள்ளவராக உள்ளனர்.
மேற்க்கானும் புகைப்படத்தில் உள்ள பாட்டில் சோஜு ( soju) கொரியாவில் உள்ள சுண்டக்கஞ்சி மது. 20 சதவீதம் ஆல்க்கஹால் உள்ளது...சூப்பரா கீதுபா..( தேவைப்படுபவர்கள் தனிமடலில் கேட்கலாம்...என்கிட்ட கொஞ்சம் இருக்கு ஹி ஹி)

போக்குவரத்துக்கு பைக் / கார் இரண்டும் பயன்படுத்துகிறார்கள்...

அபார்ட்மென்ட் வாழ்க்கைமுறை...சிறிய…

முட்டை - பருப்பு தொக்கு...சூப்பரா இருக்குபா...

Image
பொதுவா பருப்பையும் முட்டையையும் ஒண்ணா சேர்க்கவே மாட்டோம். இந்த டிஷ் வித்தியாசமானது. இதை பாசிப்பருப்பு பயன்படுத்தியும் செய்யலாம்.

தேவையானப் பொருட்கள் :

1 கப் துவரம் பருப்பு
3 முட்டை
1 பெரிய வெங்காயம் பொடியாக நறுக்கியது
3 தக்காளி பொடியாக நறுக்கியது
3 காய்ந்த மிளகாய்
1 ஸ்பூன் மிளகாய்த்தூள்
2 டேபிள்ஸ்பூன் நெய்

சிறிது மஞ்சள் தூள்
சிறிது கடுகு
சிறிது சீரகம்
1 கப் தேங்காய்த்துருவல்
சிறிது பொடியாக நறுக்கிய கொத்தமல்லி
தேவையான உப்பு

செய்முறை :

* துவரம் பருப்பை போதுமான நீரில் வேக வைக்கவும். முக்கால்வாசி வெந்ததும் வெங்காயம், தக்காளி, உப்பு, மிளகாய்த்தூள், மஞ்சள் தூள் ஆகியவற்றைச் சேர்க்கவும்.

* எல்லாம் நன்கு குழைந்து வெந்ததும், முட்டைகளை உடைத்து அதில் ஊற்றவும்.

* சிறிது நேரம் கொதித்ததும் நெய்யில் கடுகு, சீரகம், காய்ந்த மிளகாய், தாளித்துக்கொட்டி, தேங்காய்த்துருவல், கொத்தமல்லி சேர்த்து சிறிது நேரம் கொதிக்க விடவும்.

எம்.எஸ்.என் தமிழ் வலைப்பதிவு ஆரம்பித்து உள்ளனர்..

http://content.msn.co.in/Tamil/Cookery/Recipies/0605-23-2.htm

இங்கே பார்க்கவும்..

சட்டசபையில் பெண் சிங்கம் புகுந்தது !!!!

Image
ஆங்கிலத்தில் GUT's ( கட்ஸ்) என்று சொல்லுகிறார்கள்...தமிழில் தில் ( 'தில்' தமிழா...குன்றத்திலிருப்பவரை தான் கேட்கவேண்டும்) என்று சொல்லுவார்கள்..

முன்னாள் முதல்வரை தான் சொல்லுகிறேன்...

தனது கட்சி உறுப்பினர்கள் அனைவரும் சட்டசபையில் இருந்து நீக்கப்பட்டுவிட்ட நிலையில், தன்னந்தனியாக எதிர்க்கட்சியை எதிர்கொண்டார்...

இந்த தைரியம் முதல்வர் கலைஞருக்கு வரவில்லையே...அவர் எதிர்க்கட்சியில் இருந்தபோது..

ஜெயலலிதா சட்டசபையில் எடுத்து வைத்த வாதம்..

1. கூட்டுறவு வங்கியில் விவசாயிகள் வாங்கிய கடனை தள்ளுபடி செய்யும் முயற்ச்சியில் இருக்கும் அரசு( கிட்டத்தட்ட 7000 கோடி) , தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் அவர்கள் வாங்கிய கடனையும் செலுத்துமா..( காரணம் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் வட்டி விகிதம் குறைவு)

2. ஏற்க்கனவே கடனை திருப்பி செலுத்திய விவசாயிகளின் பணத்தினை அரசு திருப்பி தருமா ? ( Reimbose)

3. சிறு மற்றும் குறு விவசாயிகளின் கடனை மட்டும் அரசு திருப்பி செலுத்துமா, அல்லது அனைத்து விவசாயிகளின் கடனையும் திருப்பி செலுத்துமா ? ( இப்படி கேட்டதற்க்கு காரணம், 17 லட்சம் / 20 லட்சம் கடன் வாங்கிய விவசாயிகளிம் இருக்…

தாய்லாந்து பயணம் - கொஞ்சம் நினைவுகள்

Image
சமீபத்தில் (போன மாதம்)தாய்லாந்து நாட்டிற்க்கு போயிருந்தேன்...என்னுடைய மனதில் தாய்லாந்து பற்றி எண்ணியிருந்தது அடியோடு மாறியது...காரணம் சூப்பர் பாஸ்ட் ஹைவேக்களும் சாலையில் அதிவேகத்தில் பறக்கும் கார்களுமாக சிங்கப்பூரையும், மலேசியாவையும் நினைவுபடுத்தியது...நாடு 13 சதவீத வளர்ச்சி அடைந்து இருக்கிறது என்று போர்ப்ஸ் பத்திரிக்கையில் படித்தது எவ்வளவு உண்மை என்று தெரிந்தது..
விசா ஆன் அரைவல் திட்டத்தில் நான் சென்றேன்....இதற்க்கு உங்கள் பாஸ்போர்ட், இரண்டு புகைப்படம் (வெள்ளை பேக்ரவுண்டு), மற்றும் திரும்புவதற்க்கான ரிட்டன் டிக்கெட், மற்றும் 1000 தாய் பாட் ( கிட்டத்தட்ட 1500 ரூ) கொடுத்தால் 14 நாட்கள் விசா தருகிறார்கள் ஏர்போட்டில்..அதனால் சுற்றுலா பயணிகளின் சொர்க்கமாக விளங்குகிறது...

திரும்ப வரும்போது ஏர்ப்போட் டாக்ஸ் என்று ஒரு 500 பாட் ( 750 ரூ) வாங்குகிறார்கள்...சுத்தமான ஏர்போர்ட்..கொடுக்கலாம் என்று தோன்றுகிறது...

நான் தங்கி இருந்த நகரத்தின் பெயர் சோன்புரி..தாய்லாந்தில் இருந்து 50 முதல் 60 கிலோமீட்டர் தூரம் உள்ள சிறுநகரம்..அதனால் யாருக்கும் சுட்டு போட்டாலும் ஆங்கிலம் தெரியாது...நமக்கு தெரிந்த சைகை பாஷை…

தென்னாப்பிரிக்கா மற்றும் மொராக்கோ பயணம்

Image
அடுத்த வாரம் தென்னாப்பிரிக்கா ( ஜோகன்ஸ்பர்க்) மற்றும் மொராக்கோ ( காசாபிளாங்க்கா) ஆகிய நாடுகளில் உள்ள எ.ஜி அலுவலகங்களுக்கு வேலை விஷயமாக செல்கிறேன்...

உலகிலேயே அதிகபட்ச குற்ற சதவீதம் ( Crime Rate) உள்ள நகரம்ஜோகன்ஸ்பர்க்...மிக அதிகமாக வைரம் / தங்கம் கிடைக்கும் இடம் கூட என்று அறிந்தேன்...மற்ற மேற்கத்திய நகரங்களுக்கும் சிறிதும் குறைந்தது அல்ல என்பதினை கீழ்க்கானும் ஜோகன்ஸ்பர்க் படம் அறிவிக்கிறது..
ஜோகன்ஸ்பர்க் பற்றிய இணைய உரல் http://www.joburg.org.za/...

இங்கு மேயராக கறுப்பினத்தை சேர்ந்த அமோஸ் மசோண்டோ (Amos Masondo) இருக்கிறார்..

மற்ற விஷயங்களை நேரில் பார்த்து தான் எழுதவேனும்...

காசாபிளாங்கா ( casablanca ) என்று ஒரு ஷாப்பிங் மால் உண்டு பாண்டிச்சேரியில்..மொராக்கோவின் தன்னிகரற்ற தலைநகரம் என்று இனையத்தில் உள்ளது..மேற்கானும் படத்தில் இருப்பவர் மொராக்கோ இளம்பெண்...

அப்பாடா...ஏதோ மொக்க போட்டு ஒரு பதிவு அளவுக்கு மேட்டர் தேத்தியாச்சி..
:)
பொறவு பயண கட்டுரைன்னு எதாவது எழுதிட வேண்டியது தான்...

தனித்திரு விழித்திரு பசித்திரு

வலைப்பதிவர் பெயர்: செந்தழல் ரவி

வலைப்பூ பெயர் : தனித்திரு விழித்திரு பசித்திரு

வலைமனை முகவரி : http://tvpravi.blogspot.com

ஊர்: திருக்கோவிலூர்

நாடு: தமிழ்நாடு, இந்தியா

வலைப்பூ அறிமுகம் செய்தவர்: கூகுளாண்டவர்

முதல் பதிவு ஆரம்பித்த நாள்,வருடம் : ஏப்ரல் 17 2006

இது எத்தனையாவது பதிவு: 25

இப்பதிவின் வலைமனை முகவரி: http://tvpravi.blogspot.com/2006/05/blog-post_24.html

வலைப்பூ ஏன் ஆரம்பித்தீர்கள்: எல்லாருக்கும் இருக்கே, நமக்கே நமக்கு என்று ஒரு இடம்..சொந்த வீடு மாதிரி என்று என் முதல் பதிவில் கூறி உள்ளேன்

சந்தித்த அனுபவங்கள்: அரசியல், உள்குத்து, மற்றும் சாதி வெறி

பெற்ற நண்பர்கள்: பலப்பலர்

கற்றவை: அன்பும் அமைதியும் வேண்டும்..சாதியும் மதவெறியும் இல்லாத இனிய உலகம் வேண்டும்

எழுத்தில் கிடைத்த சுதந்திரம்: என்ன வேண்டுமானாலும் எழுதலாம்...இது நம் பதிவு என்ற உணர்வு..ஆனால் கொஞ்சமே கொஞ்சம் சமூக அக்கறை இருந்தால் சிறப்பு....பின்நவீனத்துவம், முன்நவீனத்துவம் என்ற போர்வையில் எது வேண்டுமானாலும் எழுதலாம் என்று நினைப்பவர்கள் நாளை அவர்களின் மகளோ மகனோ இதனை படிப்பார்கள் என்ற எண்ணம் சிறிதேனும் கொள்ள வேண்டும்..

இனி செய்ய நினைப்பவை…

ஒருமரத்து கள்ளு !!!!!

'கள்' உண்ணாமை வேண்டும் அப்படின்னு காந்தி சொன்னதா கேள்வி..ஆனா அவர் கிட்ட கள் பத்தி யாரோ கதை விட்டு இருக்கனும்...கள் ரொம்ம போதை..உடம்புக்கு கெட்டது...அப்படின்னு எல்லாம்...ஆனா உண்மை என்னன்னா...கள், பச்ச புள்ள மாதிரி..அட ஆமாங்க...உண்மைதான்...

என் கல்லூரி இருந்த இடம் ஒரு கிராமம்..அங்க மிஞ்சி போனா கிடைக்கறது இந்த கள்ளு தான்...காலையில கள் இறக்கற இடம் போனா, நல்லா கொத்தும் கொலையுமா இருக்க பானைய இறக்கி, அதுல மப்புல மெதந்துக்கிட்டு இருக்க பெரிய சைஸ் வண்டுகளை எல்லாம் தூக்கி போட்டுட்டு, ப்ளாஸ்டிக் மக்குல அல்லது பெரிய சைசு பானையில ( நமக்கே நமக்கு) கொடுப்பாங்க...

பத்து ரூபா ஒரு மக்கு ( ஜக்குன்னும் சொல்லலாம்)..

அங்கனயே கிடைக்குற சின்ன சைஸ் மிக்சர் பாக்கெட்டுகளையும், ஒரு அரை பாக்கட்டு கோல்டு பில்டர் சிகரட்டும் வாங்கிக்கிட்டு ஓரமா ஒதுங்கிட வேண்டியது தான்...அப்படியே ரவுண்டு கட்டி உக்காந்துக்கிட்டு உள்ளார இறக்க வேண்டியது தான்..கொஞ்சம் புளிப்பா...ஜில்லுனு உள்ளார இறங்கும்...


மேட்டர் என்னான்னா...இந்த கள்ளு எல்லாம் ஒரே பானையில கொட்டப்படும்...அதுல இருந்து சில பல மக்குகளை வாங்கி நம்ம ஒரு பானையில ஊத்திக்கிட…

விண்வெளிக்கு இந்தியாவிலிருந்து மனிதன்...!!!!!

Image
இந்தியாவிலிருந்து மனிதனை விண்வெளிக்கு அனுப்புவதற்க்கு முதல் நாள்...மன்மோகன் சிங் அமெரிக்க அதிபருக்கு தொலைபேசுகிறார்...

அய்யா பு(ஷ்)ஸ் அவர்களே...நாங்கள் முதல் முதலாக மனிதனை விண்வெளிக்கு அனுப்புகிறோம்..நீ தான் எல்லாத்துக்கும் (நான் பாத்ரூம் போவது உள்பட) உன்ன கேக்காம செய்ய கூடாதுன்னு சொல்லிட்டியே...அதான் போன் பன்னுரேன்...

புஸ் : சரி, எத்தன பேர அனுப்புறீங்க ?

மன்(ண்)மோகன்: நாங்க நூறு பேர அனுப்பறோம்..

புஸ்: சரி யார் யார அனுப்பறீங்க

மன்மோகன் : 25 - ஒ.பி.சி, 25 - எஸ்.சி, 20 - எஸ்.டி, 5 - ஊனமுற்றவங்க, 10 - விளையாட்டு வீரர்கள், 5 - காஷ்மீரிகள், 9 - சுகந்திர போராட்ட தியாகிகள், அப்புறம், அப்புறம்

புஸ் : அப்புறம் யாரு ?

மன்மோகன் : ஒரு விண்வெளி வீரர்..

:)

காசிக்கே போலியா..திருப்பதிக்கே லட்டா...

நேதாஜி பற்றி ஒரு பதிவு எழுதி இருந்தேன்...

காசி என்ற பெயரில் "அருமையான பதிவு" என்று பின்னூட்டம் வந்தது...

குமரன் சுட்டி காட்டினார், காசியின் பெயரில் வந்த பின்னூட்டம் அவருடையது அல்ல என்று..புரொபைல் மூலம் வலைதளம் சென்றால் ஆபாச சங்கதிகள் உள்ளன..

பின்னூட்டத்தில் எந்த ஆபாச சங்கதியும் இல்லை என்பதால் தான் அனுமதித்தேன்..

காசிக்கே போலியா..திருப்பதிக்கே லட்டா அப்படீங்கறமாதிரி....

இந்த போலிக்கு இதயமே கிடையாது....சேவை மணப்பான்மையில் செயல்பட்டுவரும் காசி இதனை பொருட்படுத்த மாட்டார் என்று நினைக்கிறேன்..

நேதாஜி விமான விபத்தில் உயிரிழந்தாரா ?

Image
நேற்று நாடாளுமன்றத்தில் முகர்ஜி கமிஷன் ( தேசிய ஜனநாயக கூட்டணி அரசால் 1999 ம் ஆண்டு அமைக்கப்பட்டது) அறிக்கையை தாக்கல் செய்த மத்திய இணை அமைச்சர் ரகுபதிக்கு கூட அந்த அறிக்கையில் சொல்லப்பட்ட தகவல்கள் ஆச்சர்யத்தினையும் அதிர்ச்சியையும் ஏற்ப்படுத்தி இருக்கும்...

நேதாஜி, விமான விபத்தில் உயிர் இழக்கவில்லை..அவர் தற்போது உயிருடன் இல்லை..இறந்துவிட்டார் என்றும் கூறப்பட்டு உள்ளது அந்த அறிக்கையில்...

அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள மேலும் சில தகவல்கள், ஜப்பானில் ரென்கோஜி கோயிலில் வைக்கப்பட்டுள்ள சாம்பல் நேதஜியுடையது அல்ல..

மேலும் நேதாஜி மரணம் தொடர்பாக ஜப்பான் அரசு அறிக்கை டோக்கியோவிலும் தைவான் தலைநகர் தைபேயிலும் வெளியானது..ஒரே நேரத்தில் ஜப்பான் அரசு முத்திரையுடன் பத்திரிகைகளுக்கு அனுப்பப்பட்ட இந்த தகவல் முரணான விஷயங்களை கொண்டு இருந்தது எப்படி என்று முகர்ஜி கமிஷன் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது...

இந்த விஷயங்களை எல்லாம் தூக்கி சாப்பிடும் ஒரு விஷயம், 1985 ஆண்டு உத்திரபிரதேச மாநிலம் பைசாபாத்தில் உயிரிழந்த பகவான்ஜி குன்னாபி பாபா தான் நேதாஜி என்று பல சாட்சிகள் தெரிவித்ததாக ஆணித்தரமாக தெரிவிக்கிறது...

உண்ம…

ஒரு கவிதை

Image

சிங்கபூரில் இருந்து ஒரு இந்தி ஆதரவு பதிவு - என் பதில்

ச்சே கருணாநிதி இந்தி படிக்காம விட்டதால நான் கேவலப்பட்டு போய்டேன் என்று நண்பர்கள் சிலர் புலம்புவது போல சாடமுயல்வது சிலபதிவுகளில் படிக்க நேர்ந்தது.

தமிழர்கள் அனைவரும் காஷ்மிர் முதல் கன்னியாக குமரி வரை நேசனல் பர்மிட் லாரி ஓட்டுவதற்காக தவம் செய்வது போலவும் இந்தி தெரியாததால் அத்தகைய வேலை வாய்ப்புகளை பெற்றோர் சிலர் அவமானப்படுபது போல சொல்ல விழைகிறார்கள். நம் தமிழ்னாட்டிருந்து பஞ்சம் பிழைக்க வட மானிலங்களுக்கு செல்வோர்கள் பலர் அடிப்படையில் இந்தி தெரியாதவர்கள். அவர்களுக்கு படிப்பு அறிவும் கூடக் குறைவே. அத்தகையோர் ஆறே மாதங்களில் நன்றாகவே இந்தியில் வெளுத்து வாங்குகிறார்கள்.

இந்த மெத்தப் படித்த மேதாவிகள் தாங்களுக்கு உள்வாங்கும் திறன் குறைவு என்று ஒப்புக் கொள்ளாமல், கருணாநிதியும், அண்ணாவும் குறுக்கே நின்றார்கள் என்று சொல்லுகிறார்கள். இன்று உலகமயம் பற்றி பேசுகிறோம், எல்லோரும் வேறு வேறு நாடுகளுக்கு சென்று பணியாற்றுகிறோம். வேலை நிமித்தமாக ஜெர்மன் சென்ற ஒருவர் அங்கு தடுமாறினால் தான் இந்தியனாக இருப்பதால்தான் இந்த தடுமாற்றம். அதுவும் இந்தியாவில் ஜெர்மன் சொல்லிக் கொடுக்கப்படவில்லை அதனால் தான் தனக்கு இந்த இழ…

விஜயகாந்த் பற்றி ஒரு செய்தி...

Image
விஜயகாந்த் பற்றி ஒரு செய்தி...பத்து ஆண்டுகளுக்கு முன் தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ரத்த தானம் செய்வதற்க்காக சென்று இருந்தேன்..

அப்போது அங்கு கிட்டத்தட்ட 200 படுக்கைகளில் விஜயகாந்த் கொடுத்ததாகவும், நன்றி என்றும் எழுதி இருந்தது...

சத்தம் இல்லாமல் செய்து இருந்ததை பார்த்து வியந்தேன்..

அதுவரை பலவாறாக விஜயகாந்த்தினை கிண்டல் செய்துகொண்டு இருந்த நான் அந்த வேலையை அத்தோடு நிறுத்திக்கொண்டேன்..

அதுக்கும் இந்த படத்துக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கிறீர்களா ? இந்த வார குமுதம் பாருங்க.. விளங்கும்...

கைத்தொலைபேசியை தொலைத்து இருக்கிறீர்களா ?

Image
கைத்தொலைபேசியை தொலைப்பது போன்ற கொடுமையான விஷயம் எதுவும் இல்லையோ என்று தோன்றியது..

தனி தீவாகி விட்டது போல ஒரு உணர்வு...யாரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை..யாரும் என்னை தொடர்பு கொள்ள முடிய வில்லை...அனைத்து தொலைபேசி எண்கள், க்ரெடிட் கார்டு மர்ம எண்கள், அனைத்தும் காற்றோடு போயிற்று...

இந்த பதிவின் மூலம், கைத்தொலைபேசியை தொலைப்பதை தவிர்ப்பது எப்படி, அதனை மற்றவர் பயன்படுத்தாமல் தடுப்பது எப்படி, IMEI எண் என்றால் என்ன, அதனை உபயோகப்படுத்தி எப்படி உங்கள் கைத்தொலைபேசியை மற்றவர் உபயோகிகாமல் தடுப்பது என்பது பற்றி எழுதுவேன்..

மேற்கண்ட படத்தில் - அழகு பெண்கள் அறிமுகப்படுத்துவது தான் நான் தொலைத்தது...

சம்பவம் நிகழ்ந்தது எப்படி என்றால், கடந்த சனிக்கிழமை அன்று, நன்பர்கள் சிலர் இணைந்து ஆடு தாண்டும் காவேரி ( இங்கே பெங்களூரில் அது "மேக்கே"..மேக்கே என்றால் ஆடு - கன்னடத்தில் ) என்ற இடத்துக்கு போகலாம் என்று முடிவானது...

ஒரு கார் மற்றும் இரண்டு பைக் தயாரானது..
நான் ஒரு நாள் ஆபீசுக்கு கட் அடித்து விட்டு ( வழக்கமாக விடுமுறைதான், ராஜ்குமார் கலவர விடுமுறையை ஈடுகட்ட சனி அலுவலகம், பலருக்கு) நன்பர் வீட்டில் மற்ற…

செல்லாத ஓட்டு போடும் கலைஞர்

Image
இந்த படத்தினை பாருங்கள்.

கலைஞர் தனது ஓட்டை பதிவு செய்கிறார். இதில் உனக்கு என்ன பிரச்சினை என்கிறீர்களா ? 4 முறை முதல்வராக இருந்தவர், 50 ஆண்டு அரசியல் அனுபவம் வாய்ந்தவர் என்று அடித்துகொள்பவர்கள் வெதும்பும் விதமாக அவர் செல்லாத ஓட்டை பதிவு செய்கிறார்.

சிவப்பு அம்பு குறியிடும் இடத்தில் தன் விரலை வைத்து அழுத்துவது தான் இந்த படம். ஆனால் அவர் தனது ஒட்டை பதிவு செய்யும் சாரதா வித்யாலயா மேல்நிலை பள்ளியில் இரண்டாவது சின்னம் உதய சூரியன். மூன்றாவது இடத்தில் இருந்தது தே.தி.மு.க முரசு சின்னம்.

இப்பொழுது புரிகிறதா ? இதன் பெயர் தான் செல்லாத ஓட்டு.....

தங்க மங்கையின் தங்க அறிவிப்பு

தலைப்பை கேட்டவுடனே, எதோ பி.டி.உஷா ஒலிம்பிக் அறிவிப்பு கொடுக்கிறார் என்று நினைக்க வேண்டாம்.

முதல்வரின் அறிவிப்பு. " திருமணம் ஆகும் ஏழை பொண்களுக்கு 1/2 பவுன் தங்க தாலி"

எதிர் அணி ஆடிப்போய் நிற்க்கிறது..

தி.மு.க. தரப்பில் இருந்து நான் எதிர் பார்க்கும் அடுத்த அறிவிப்பு.." திருமணம் ஆகும் ஏழை பொண்களுக்கு 1 பவுன் தங்க தாலி", காலுக்கு மெட்டி, இரண்டு ஜோடி கண்ணாடி வளையல் மற்றும் சமையலுக்கு சக்தி மசாலா பாக்கெட் இரண்டு ஆகியவை கிடைக்கும்.

ஆக மொத்தம் தமிழன் அனைத்து இலவச பொருளையும் வாங்கி வீட்டில் வைத்துவிட்டு நடு தெருவில் தான் நிற்க்கவேண்டும் போல இருக்கே ?